காற்றுக்கென்ன வேலி – எட்டாம் அத்தியாயம்
உளுந்தூர்பேட்டை டோல் கேட்டில் போலீஸ் காரை மடக்கினர். பிடித்து விசாரித்ததாவுடன் கோமதியின் பெயரை சொன்னான். கோமதி சொல்லி தான் இதை செய்தேன் என்று கூறினான்.
போலீஸ் கோமதியை சந்தேகத்தின் பெயரில் அரெஸ்ட் செய்து லாக் அப்பில் அடைத்தனர். ரவி எவ்வளவோ சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை.
பின்னர் பிடிபட்டவனின் மொபைல் போன் கடந்த வார அழைப்புகளை தேடினர். அதில் ஜெயக்குமாரின் நம்பருடன் அடிக்கடி பேசி இருந்தது தெரிய வர அந்த கூட்டாளியை போலீஸ் ஸ்டைலில் நைய புடைத்து எடுத்ததில் உண்மையை உளறிவிட்டான். பின்னர் கோமதியின் பெயரை ஏன் சொன்னான் என கேட்டதற்கு பிடிபட்டால் அவ்வாறு சொல்ல சொல்லி ஜெயக்குமார் சொன்னதாக கூறினான்.
ஜெயக்குமாரை பிடித்து விசாரிக்க அவன் அவனுடைய அக்காவின் பிளானை சொல்ல அவன் அக்காவையும் போலீஸ் விசாரித்தனர்.
பின்னர் விமலா , ஜெயக்குமார் மற்றும் அவன் கூட்டாளி அனைவரையும் குழந்தை கடத்தல் கேஸில் புக் செய்து ஒரு வருடம் உள்ளே தள்ளினர்.
போலீஸ் கோமதியிடம் மன்னிப்பு கேட்டனர். கோமதி சொன்னால் உண்மை எப்படியும் வெளிவரும் என்று தெரியும். அதனால் பொறுமை காத்தேன் என்று சொன்னாள்.
குழந்தைகள் பத்திரமாக கோமதியின் கைகளில் ஒப்படைக்க பட்டனர்.
கோமதி அவர்களை மேனியோடு அணைத்து கட்டி தழுவி கண்ணீர் மல்க முத்தமிட்டாள்.
ரவி கோமதியின் தோளை ஆறுதலாய் தொட்டு தேற்றினான்.
“இனிமேல் குழந்தைகளை நம் கண்ணின் பார்வையிலேயே வைத்து இருக்க வேண்டும். உறவுகள் தானே என்று ஒரு நம்பிக்கையில் அவர்களை கொஞ்சம் தூரத்தில் பார்க்காமல் விளையாட விட்டது பெரும் தவறாகி போனது. இனி இந்த தவறை செய்யமாட்டேன்” என்றாள்.
“நானும் தான் உன்னுடன் இருந்தேன் ஒரு வகையில் நானும் காரணம். அதனால் நடந்ததை மறந்து ரிலாக்ஸ் ஆக இரு கோமதி.” என்றான்.
இருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. நினைத்து நினைத்து அழுதாள். அழுது அழுது உடம்பு சூடாய் கொடுத்தது.
சுரம் வந்து விட்டது.
மருத்துவரை அழைத்து காண்பித்தான். “ஷி ஈஸ் சைக்காலாஜிக்களி அபெக்டீட். தட்ஸ் ஒய் திஸ் பீவேர். இட் வில் பி ஆல்ரைட் சூன் ” என்றார்
சென்னை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கைகளுடன் இருந்தாள். ரவியும் அவளுடனேயே இருந்தான். அலுவலகம் செல்லவில்லை. இவள் மிகவும் மென்மையான மனம் படைத்தவளாக இருக்கிறாளே என்று இவள் மீது ஒரு வித பாச உணர்வு தோன்றியது இவனுக்கு. இவளை இந்த நிறுவனங்களை தலைமை ஏற்று நடத்தி கொண்டு இருக்கிறாள் என்று வியந்தான்.
குழந்தைகள் என்றவுடன் எப்படி இவளே இப்படி மாறிப்போனாள்.அது தான் ஒரு தாயின் உள்ளம். என்று நினைத்தான்.
அவள் கரங்களை ஆறுதலை பற்றி தடவி கொடுத்தான்.
அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள். இவனும் தூங்காமல் நம்மை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறானே என்று அவன் மீது இவளுக்கு ஒரு பரிவு ஏற்பட்டது.
அவன் இவளை பார்க்க இவள் அவனை பார்க்க இருவரும் கண்ணோடு கண் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தனர்.
பிறகு அவள் தலை குனிந்து அவன் கைகளில் தன் முகம் புதைத்தாள். “அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி இந்த முகம் வாடினால் நன்றாக இல்லை. இனி உன் பேச்சு கேட்க போவது இல்லை. ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.” என்றான்.
மைதிலி போட்டோவை முன்னால் வைத்து அவளிடம். ” மைதிலி நான் கோமதியை திருமணம் செய்து கொள்ள போகிறேன். ” என்று சொல்ல காற்றில் மைதிலி போட்டோ பறந்து கோமதியின் கைகளில் விழுந்தது.
கோமதி இதோ பார் ” மைதிலி நமக்கு சம்மதம் கொடுத்து விட்டதாகவே இந்த சகுனத்தை நான் உணர்கிறேன் என்றான். அங்கே ஒரு கௌளி (பல்லி)
சத்தமிட்டது.
“|நீயும் என்னை இனியும் ஏமாற்ற முடியாது நீ என்னை பார்த்த பார்வையில் எவ்வளவோ அர்த்தங்களை நான் உணர்ந்தேன். உன் ஒருத்தியை தான் நான் மைதிலிக்கு அப்புறம் கண்களால் , மனதால், எண்ணங்களால் நினைக்க முடிகிறது. எனக்குள் நீ பரிபூரணமாக நிறைந்து இருக்கிறாய் கோமதி. என்னை விட்டு விலகி செல்லாதே இனி மேலும்.” என்றான்
அவன் பேச பேச இவள் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
சரி நான் இனி உங்களுடையவள் . என்னை ஏற்று கொள்ளுங்கள். என்று அவள் தன் கைவிரல்களை அவன் கை விரல்களில் கோர்த்து கொண்டாள்.
அங்கே இரு உன்னதமான உள்ளங்கள் தங்கள் அன்பினை பரிமாரி கொண்டன. எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ தெரியவில்லை. அப்படியே உறங்கிவிட்டனர்.
காலை 6 மணிக்கு ரம்யா அங்கு வர இந்த கட்சியை காண அம்மாவும் பின்னால் நின்று இதை பார்க்க கவிதா என்ன என்று அங்கே உற்று நோக்கினாள்.
சத்தம் போடாமல் வெளிய வந்து விட்டார்கள். ரம்யா சொன்னாள் ” அம்மா வெகு விரைவில் இவர்கள் திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று.”
சிங்கப்பூரில் உள்ள ரவியின் மாமனாருக்கு இதை செல் போனில் சொல்ல அவரும் இதற்காக தானே நான் இன்னும் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
கவிதா அறை கதவை சாத்தி விட்டு வந்து விட்டாள். 8 மணிக்கு மேல் இருவரும் வெளியே வர ..
கவிதா கோமதியின் அருகே ஓடி வந்து கட்டிக்கொண்டாள். அக்கா நாங்கள் எல்லோரும் உனக்கு கூடிய சீக்கிரம் திருமணம் செய்வதாக ஒரு முடிவுக்கு வந்து விட்டோம். அம்மா மாப்பிள்ளை கூட பார்த்து விட்டாள்.
மாப்பிள்ளையும் உன்னை பார்த்து விட்டாராம். ரொம்ப பிடித்து இருக்கிறதாம். நீ என்ன சொல்கிறாய் என்று சீண்டினாள்.
ரவி விழித்தான். ஓஹோ யாரது அந்த மாப்பிள்ளை என்று கவிதாவை கேட்டான். நீங்கள் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது. என்ன சொல்லுகிறீர்கள் அக்காவை இன்று பெண் பார்க்க வர சொல்லலாமா என அவனையும் வெறுப்பேத்தினாள்.
கோமதி என்னடி இது விளையாட்டு . என கோபித்து கொண்டு செல்ல ..நீ மாப்பிள்ளையை பார்த்தால் பிடிக்காது என்று சொல்ல மாட்டாய் என்று சொல்ல .
இந்த செல் போனில் அவர் படம் உள்ளது. பார்த்து கொள் என்று சொல்லி கோமதியிடம் நீட்டினாள் கைபேசியை. ரவி பாய்ந்து வந்து அந்த கைபேசியை பிடுங்கி பார்த்தான். அதில் இவனுடைய போட்டோ இருக்க ..
“கோமதி மாப்பிள்ளை ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கிறார் . நீ பார்த்தால் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்ல மாட்டாய்” என்று கவிதாவுடன் விளையாட்டுக்கு சேர்ந்து கொள்ள கோமதி அவனை முறைத்தாள்.
குழந்தைகள் அங்கே வந்தன . கவிதா அவர்களிடம் “உங்கள் அம்மா யார் ? ” என கேட்க அவர்கள் ஓடி வந்து கோமதியை கட்டிக்கொள்ள
கவிதா “இப்படி இருந்தால் எப்படி இவளுக்கு திருமணம் செய்வது. ரெண்டு பிள்ளையை பெற்றவளை யார் கட்டி கொள்வார்கள்” என்று கேட்க
உடனே ரவி நான் ரெடி என்று சொல்ல … கோமதி வெட்கப்பட .
கவிதா “கைபேசியில் உள்ள மாப்பிளையை பார் ” என்று கோமதியிடம் காண்பிக்க அதில் ரவியின் போட்டோ இருக்க இன்னும் வெட்கம் வந்து அவளை மேலும் அழகு படுத்தியது.
ரவி அவளின் அருகில் வந்து ” கோமதி என்னை பிடித்து இருக்க என்று கேட்க ..”
குழந்தைகள் ” அம்மாவுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும் ” என்று மழலையில் சொல்ல
என் பதிலை தான் குழந்தைகள் சொல்லிவிட்டனவே என கோமதி சொல்ல
அங்கே இனிமையான தருணம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருமணம் சென்னையில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
காற்றாய் பறந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தவளை திருமணம் என்னும் வேலியிட்டு அடைத்து விட முடியுமா . என்ன .. ?
தொடரும் கோமதியின் வெற்றி பயணம்
👌👌👌👌👌👌
Thanks for continuous support