ATM Tamil Romantic Novels

காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்

காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்

சென்னை வீட்டில் அன்று திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் நேரே மைதிலி படத்திற்கு முன் விளக்கேற்றினாள். இனி என் பெயர் மைதிலி என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

அனைவரிடமும் அப்படியே அவளை அழைக்க சொன்னாள். கெஜட்டில் பெயர் மாற்றம் செய்தாள்.

மாமனார் கோமதி , “இதெல்லாம் தேவையா.”. என கேட்டார். “
“ஆமாம் நான் மைதிலியின் இடத்தில இருப்பதால் அந்த பெயரே இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறேன்.” என்று கூறினாள்.

இனி நீங்களும் என்னை மைதிலி என்றே அழையுங்கள் என்றாள். அவர் கண்களில் தன் பெண் மைதிலி உயிரோடு வந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டது அவருக்கு.

ரவிகுமாரோ ” மைதிலி .. மைதிலி ..” என்று மகிழ்ச்சியாக அழைக்க குழந்தைகள் அவளின் கன்னங்களில் முத்தமிட்டு தங்கள் சந்தோசங்களை வெளிப்படுத்தின.

கோமதியின் அம்மா ,அப்பா , தங்கைகள் அனைவர்க்கும் இவளின் செய்கை நெருடலாக இருந்தது. இருந்தாலும் இது அவள் வாழ்க்கை அவள் பார்த்துக்கொள்ளட்டும் என்று பேசாமல் இருந்து விட்டனர்.

ரவிகுமாரிடம் மைதிலியின் புடைவைகளை கேட்டு வாங்கி கொண்டாள். அவள் அணிந்து இருந்த பல மாடர்ன் டிரஸ் , பண்ட்ஸ் , ஜீன்ஸ் , அண்ட் சுரிதார் என எல்லாவற்றையுமே அணிய துவங்கினாள்.

திருச்சியில் 25 ஏக்கர் பெரிய இடத்தை வாங்கினாள். அதற்கான தொகையை அவனுடைய அக்கௌன்ட் மற்றும் தன்னுடைய அக்கௌன்ட்டில் இருந்து கொடுத்தாள்.

அங்கே “மைதிலி கருணை இல்லம் ” என்று ஒரு அமைப்பை உருவாக்கினாள். பெற்றோர்களை பார்த்து கொள்ள முடியாத வாறு சூழலில் உள்ளவர்கள் அங்கே தங்கள் பேற்றோரைவிட்டு செல்லலாம். குறைவான கட்டணம் நிறைவான சேவை என்று அறிவித்தாள்.

அந்த கருணை இல்லத்தில் உணவு, மருத்துவம் அனைத்தும் ஏற்படுத்தி இருந்தாள். ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல் போன்ற அமைப்பு அங்கே ஏற்படுத்தினாள். தரமான மருத்துவர்களை தேர்ந்து எடுத்து அப்பொய்ண்ட் பண்ணி இருந்தாள்.

சேவை மனப்பான்மை உள்ள மருத்துவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தினாள். மருத்துவர்களுக்கு சம்பளம் மாதம் 3 லட்சம் அத்துடன் அவர்களுக்கு வீடு, கார் அந்த கேம்பஸ் உள்ளேயே கொடுக்க பட்டது.

அதன் அருகிலேயே “மைதிலி வித்யாஷ்ரம்” என்று ஒரு CBSE பள்ளி உருவாக்கினாள் . அதனால் அங்கே பணி புரிய வரும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மற்றும் அனைத்து துறையில் அங்கே வேலை செய்பவர்களின் பிள்ளைகள் அங்கேயே படிக்க வசதியாய் இருக்கும் அதனால் மருத்துவர்கள் வெளிய செல்லாமல் அங்கே தொடர்ந்து பணியாற்றுவார்கள் என எண்ணினாள்

நான்கு அடுக்கு மாடியில் கான்டீன். கார் பார்க்கிங் மிக பெரிய கீழ் தளத்தில் அமைத்து மேலே நான்கு தளங்களில் திருமணம் ஆகாத செவிலியர் தங்கும் விடுதி அமைத்து இருந்தாள்.

இவற்றுக்கெல்லாம் அவன் வங்கி இருந்து பணம் எடுத்து கொண்டே இருந்தாள். இவனிடம் ஏற்கனவே ஏன் என்று கேட்க கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தாள். ஆனாலும் அவனுக்கு இவ்வளவு பணத்தை இவள் பணத்தை என்ன தான் செய்கிறாள் என்று புரியமல் தவித்தான்.

மாமனாரிடம் கேட்டான் ஏதாவது உங்களுக்கு தெரியுமா என்று. அவருக்கும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 50 கோடிகளுக்கு மேல் செலவழித்து விட்டாள்.

இது எல்லாமே பெரிய பில்டர் வசம் ஒப்படைத்து விட்டாள். இவளுக்கு அவ்வப்போது வீடியோ எடுத்து வேலைகளை அனுப்ப சொல்லி பார்த்து கொண்டாள். மேலும் தரமான சி சி டிவி கமெராக்கள் உற்பத்தி கண்காணித்தாள். எல்லாமே உட்காந்த இடத்தில் பண்ணி கொண்டு இருந்தாள்.

சென்னையில் உள்ள ஆர்கிடேக்ச்சர் இவளுக்கு 3D வடிவில் மொத்த இடத்தின் வடிவமைப்பையும் சொல்லி விட்டதால் இவளுக்கு குழப்பமே இல்லாமல் வேலைகளை கண்காணிக்க வசதி ஆக இருந்தது.

ஒரு வருடத்தில் 95 சதவீதம் வேலைகளை முடித்து ஒரு நல்ல தை மாத முகூர்த்த நாளில் திறப்பு விழா . அனைத்து முக்கிய ஊர்களிலும் விளம்பரம் வைக்க பட்டது. டிவி சானெல்களில் விளம்பரம் கொடுக்க பட்டது.

திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து 10 நிமிட கார் பயணம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் பெற்றோரை வந்து பார்த்து விட்டு செல்வது மிகவும் எளிது.

திறப்பு விழாவிற்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. ரவி அந்த விளம்பரத்தை பார்த்து விட்டு நாமும் நமக்கு வயதானே பின்னே பொய் விடலாம் போல இருக்கு நிறைய வசதிகள் என்று இவளிடம் காண்பித்தான்.

நீங்கள் திறப்பு விழாவிற்கு வாருங்கள் நாமும் பொய் விட்டு வரலாம் என்று சொன்னாள்.

இங்கே பார்த்தாயா அதுவும் நம் மைதிலி பெயரில் இருக்கிறது என்று சொன்னான்.

அட ஆமாம் என்று ஒன்னும் தெரியாதவள் போல சிரித்தாள்.

வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு அனைவர்க்கும் அந்த ஸ்பெஷல் இன்விடேஷன் கொடுத்தாள். அதில் ” மைதிலி மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் சரிடபிள் டிரஸ்ட் ” திறந்து வைப்பவர் நமது நிறுவனர் ” திரு ரவிக்குமார் தொழிலதிபர் , சென்னை ” என்று இவன் பெயர் மற்றும் போட்டோ அச்சிடப்பட்டு இருந்தது .

ஒரு நிமிடம் ஆடி போய் விட்டான். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது தானாய். அனைவருக்குமே அது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியாய் இருந்தது.

இது எப்படி சாத்திய பட்டது என்று அவனுக்கு மட்டுமல்ல அங்கே உள்ள அனைவருக்குமே விளங்கவில்லை.

அதற்கு தான் இவ்வளவு பணம் செலவழித்து இருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவளை பெருமையாய் பார்த்தான்.

மாமனார் சொன்னார் .. கோமதி சாரி மைதிலியின் செயல் திறனை பாருங்கள். நம்மிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை ஆனால் நடத்தி இதனை பெரிய காரியத்தை நடத்தி இருக்கிறாள் பாருங்கள் என்று அவளை வணங்கினார்.

இவள் காற்றை போன்றவள் .. இவளின் திறமைக்கு செயலுக்கு எல்லையே அமைக்க முடியாது . இதுவே காற்றுக்கென்ன வேலியின் கதை

சுபம்

3 thoughts on “காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்”

  1. Great post. I was checking constantly this blog and I’m impressed! Very useful info specifically the last part 🙂 I care for such information a lot. I was seeking this particular info for a very long time. Thank you and good luck.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top