ஜான்வி – அத்தியாயம் ஒன்று
ஜான்வி வயது 22 . உயரம் 168 cm . எடை 58 kg .
வீட்டில் அப்பா அம்மாவுக்கு ஒரே பெண். அப்பா கங்காதர் அமெரிக்காவில்இ சொந்த மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார் .பல கோடிகளுக்கு அதிபதி. அம்மா ஜெயஸ்ரீ அப்பாவுடன் அதே நிறுவனத்தின் UK கிளையை பார்த்து கொண்டு இருக்கிறாள். இருவரும் சேர்ந்து இருந்தால் அது அபூர்வம் தான். திருமணமாகி சில ஆண்டுகளில் ஜான்வி பிறந்து விட்டாள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு சில சமயம் மாத கணக்கில் பேசாமல் இருப்பார்கள். இவர்களின் சண்டையை பார்த்து பார்த்து இவளுக்கு திருமணம் என்றாலே இப்படித்தான் போல சண்டை போடு கொண்டு தான் வாழ வேண்டும் எண்ணமே வந்து விட்டது.
இவள் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிடியில் பிசினெஸ் மேனேஜ்மென்ட் படித்து விட்டு அப்பாவின் நிறுவனத்தில் வேலை செய்ய பிடிக்காமல் மேலும் அப்பா பார்த்து வைத்துள்ள மாப்பிள்ளையை பிடிக்காமல் தாத்தா, பாட்டி இருக்கும் சென்னைக்கு கொஞ்ச நாள் இந்தியா வை சுற்றி பார்த்து வந்து விட்டாள்.
சாதாரண ஒரு பெண்ணாக வாழ வேண்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக அவள் மனதில் வேரூன்றி போன விசயம் இப்போது தலை தூக்கியது. அதனால் ஒரு சுரிதார் அணிந்து கொண்டு காலை 5 மணிக்கு மெரினா பீச் வந்து விட்டாள். தமிழ் அப்பா, அம்மாவோடு அவ்வப்போது பேசியதால் பேச மட்டும் வரும் எழுத வராது.
அலைகளின் அருகில் நின்று அலைகள் கால்களின் அடியில் உள்ள மண்ணை திரும்ப அரித்து கொண்டு ஓடும் அந்த உண்டர்வு அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அங்கே ரொம்ப நேரம் நின்று கொண்டு இருந்தாள்.
நிறைய பேர் அங்கே காலை நேர நடை பயற்சி மேற்கொண்டு இருந்தார்கள்.
சிலர் அங்கே வாலிபால் விளையாடி கொண்டு இருந்தார்கள்.
அவினாஷ் . வயது 25 . சென்னை மாநில கல்லூரியில் ஆங்கிலம் படித்து விட்டு ஒரு தேசிய மயமாக்க பட்ட வங்கியின் கிளை மேலாளராக பணியில் உள்ளான். அம்மா தேவி , வீடு வேலை பார்த்து இவனை உருவாக்கியுள்ளாள். அப்பா இவன் சிறு வயதிலேயே மூளையில் ஏதோ சிறு கட்டிகள் என்று அறுவை சிகிச்சை செய்ய அந்த சிகிச்சை பலன் இன்றி இறந்து விட சேர்த்து வைத்த பணம் ,நகை எல்லாம் மருத்துவ செலவிலேயே சென்று விட அம்மாவும் பையனையும் நட்டாற்றில் விடப்பட்டனர்.
பணம் இல்லை என்றவுடன் சொந்தங்களும் பகையாகி போனதால் வேறு வழி இன்றி வீடு வேலைக்கு சென்று இவனை சாதாரண அரசு பள்ளியில் படிக்க வைத்து , நன்றாக படித்ததால் மாநில கல்லூரியில் இடம் கிடைத்து ஸ்கலர்ஷிப்பில் கல்லூரி படிப்பை முடித்தான். பிறகு வங்கியில் வேலைக்கு என்று சில நண்பர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடு பட்டு ஒரு நல்ல வேலையும் வாங்கி விட்டான்.
கடந்த இரண்டு வருடங்களாக அம்மா எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கிறாள்.
இப்போது தான் கொஞ்சம் நல்ல வீடு , நல்ல சாப்பாடு என்று வாழ்கிறார்கள்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அம்மாவுடன் பீச் வந்து இருந்தான்.
அம்மாவுக்கு இவனை விட்டாள் வேறு உலகம் இல்லை. இவனுக்கும் அம்மாவை விட்டால் வேறு யாரும் இல்லை.
அம்மாவும் பையனும் அன்னியோன்மாக பேசி கொண்டு இருந்ததை ஜான்வி கவனித்தாள். தான் ஒரு நாள் கூட அப்பாவுடனோ இல்லை அம்மாவுடனோ இப்படி பேசியதே இல்லை. எப்போதும் தனித்து விடப்பட்டவளாகவே வளர்ந்தாள்.
காரணம் அவர்களுக்கு உள்ள ஈகோ அவர்களை பிரித்து வைத்தது.
அவினாஷும் அவன் அம்மாவும் வீட்டில் இருந்தாலும் எப்போதும் ஏதாவது பேசி கொண்டே தான் இருப்பார்கள் .
அம்மாவுக்கு ஏதாவொது என்றால் துடித்து போய் விடுவான்.
அவர்கள் அங்கே இடத்தில மணலில் அமர்ந்து கொண்டு வந்து இருந்த இட்லி சட்னி சாம்பார் எடுத்து சாப்பிட்டனர். ஜான்விக்கு அவர்களை பார்க்க ஆசையாக இருந்தது. அருகே போய் உட்கார்ந்தாள்.
அம்மா ஜான்வியிடம் இட்லி வேண்டுமா சாப்பிடுறீங்களா ? என கேட்க
ஜான்வியும் சரி கொடுங்கள் என்று கூச்ச படாமல் வாங்கி சாப்பிட்டாள்.
வீடு எங்கே ? என்ன படிக்கிறீங்க ? என்று அம்மா கேட்க , இவள் என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
அவினாஷ் அவளை பார்த்தான். பார்த்தவுடன் கண்டிப்பாக பெரிய இடத்து பெண் என்று புரிந்து கொண்டான்.
இவள் தனக்கு யாரும் இல்லை. இன்று தான் வேலை தேடி சென்னை வந்து இருக்கிறேன் என்று பொய் சொன்னாள். தங்குவதற்கு இடம் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்றாள். இப்போது தெரிந்தவர்கள் வீட்டில் இருக்கிறேன் என்றாள்.
அம்மாவுக்கு அவள் மீது தனக்கு யாரும் இல்லை என்று சொன்னவுடன் இரக்கம் வந்து அவினாஷிடம் அவளுக்கு உதவுமாறு கூறினாள்.
சரி அம்மா என்று சொல்லி விட்டு தன் கைபேசி எண்ணெய் கொடுத்தான்.
( தொடரும் )