7
தேவாவிடம் சொல்லி வந்த மாதிரியே மகனை அழைத்த மனோகர்..
“நீ ஒரு 15 நாள் ஈரோப் சைட் சுத்திட்டு வா.. இதை சொல்லி உனக்கு நிச்சயம் பண்ண இடத்திலேயும் லேட் பண்ணிடுறேன்.. நீ சொன்ன பொண்ணு வீட்டில் பேசி வைக்கிறேன்.. அம்மாவையும் சமாளிக்கணும் பார்த்துக்கோ” நச்சுன்னு சொல்ல..
” வேற வழியே இல்லையா?” என்றான் நந்தன் கோபமாக..
“குடும்ப கௌரவம் முக்கியம்.. சரியா? அவசரமில்ல யோசிச்சு காலையில் எனக்கு முடிவு சொல்லு” என்று அவனுக்கு மேல் கோபமாக கத்தி விட்டு சென்றார் மனோகர்..
எப்பவும் மகன் பக்கம் நிற்கும் ரூபாவதியும் ஏதும் பேசாமல் கணவனை பின் தொடர்ந்து விட்டார்.
இரவு முழுதும் யோசனை செய்தவன், இவங்க இஷ்டத்துக்கு தான் போகணும் இப்போதைக்கு.. கையில் காசு இல்லாமல் காதல் கூட இனிக்காது சுயநல புதிய கொள்கையுடன், விடுமுறையை கொண்டாட முடிவு செய்தான் நந்தன்.
மனோகர் நந்தன் வெளியூர் சென்றதை தேவாவிடம் மனோகர் சொன்ன போது தான் நேற்று பேசியதே நியாபகத்துக்கு வந்தது தேவாக்கு.. அவ்ளோ அவனுக்கு அவன் ஒர்க் பிரஷர்..
முகம் அறியா பணத்துக்கு ஆசைப்பட்டு சின்ன பையனை வீழ்த்த நினைக்கும் ஒழுக்கம் இல்லா பொம்பளையாக நந்தன் காதலிக்கும் பெண்ணாகவே அவன் மட்டில் உருவக படுத்தபட்டு இருந்தாள் வைஷாலி. அதனால் அவளை அசிங்கப்படுத்தனும் வேண்டும் என்ற வெறியே அவனுக்கு.. விஷயத்தை சொல்லும் ஆளிடம் சொல்லி வேண்டியதை செய்ய சொன்னவன் விஷயம் மறந்துட்டான்..
இதெல்லாம் அறியாத வைஷாலி அம்மாவிடம் தர்க்கம் பண்ணி கொண்டிருந்தாள். விஷயம் என்னவென்றால் அவளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை வீட்டை தான் கழுவி கழுவி ஊற்றி கொண்டு இருந்தாள்.
சபர்மதிக்கு இந்த சம்பந்தத்தில் மிக திருப்திதான்.. மாப்பிள்ளை பெற்றவர்கள் கேட்பதை போல அவர்களுக்கு செய்வதில் அவருக்கு விருப்பம் தான். பணத்திற்கு குறைவில்லை அவர்கள் சொன்னதை காட்டிலும் சிறப்பாகவே அவர்களால் செய்ய முடியும். தனக்குப் பின் தன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு அந்த குடும்பத்திற்கு தன் பெண்ணை அனுப்ப துணிந்து விட்டார்.
மாப்பிள்ளையிடம் எந்த குறையும் இல்லை. தன் பெண்ணோடு ஒப்பிடுகையில் அவர் சற்று சுமார் தான், என்றாலும் கல்யாண சந்தையில் மாப்பிள்ளையின் அழகு கவனிக்கப்படுவதில்லை.. அவனின் கல்வி உத்தியோகம், சம்பளம் , அந்தஸ்து மட்டுமே.. அதில் அவன் புல் மார்க் வாங்க வில்லை என்றாலும் 60% வாங்கிவிட்டான் சபர்மதியிடம்..
“அம்மா .. அந்த அம்மா என்ன கல்யாணத்துக்காக பேசுது? என்னமோ அவங்க புள்ளையை விற்க போற மாதிரி பேசுது.. அவங்க மட்டும்தான் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தாங்களா.. நீங்க எல்லாம் படிக்க வைக்கலையா?”
“நீ பேசுற டயலாக்ஸ் எல்லாம் பட்டிமன்றத்துல.. உன் காலேஜ் செமினாரில் பேசுறதுக்கு தான் சரியா இருக்கும். இது பிராக்டிகல்.. இங்கே இப்படித்தான்.. எப்படி இருந்தாலும் இது உனக்காக செய்தது தானே.. உனக்கு தான் தரப்போறேன்.. அவங்ககிட்ட இல்லையே அப்புறம் என்ன உனக்கு” கல்யாண நிதர்சனத்தை புரிய வைத்தார் சபர்மதி.
“மா… இருந்தாலும் மா…” என்று வைசாலி இழுக்க, தன் கையை நீட்டி அவள் பேச்சை தடுத்தார்.
“மாப்பிள்ளை கிட்ட ஏதாவது குத்தம் குறை இருந்தா சொல்லு.. நான் ஒத்துகிட்டு அவங்களை வேண்டாம்ன்னு தரகர் கிட்ட சொல்லி அனுப்புகிறேன்.. அதை விட்டுட்டு இந்த மாதிரி விஷயம் தயவுசெய்து பேசாதே.. உன் கொள்கை சீர்திருத்த பேச்சை எல்லாம் மூட்டை கட்டி பரணில் போடு புரியுதா?” என்று சற்று அதட்டல் ஆகவே மொழிந்தார்.
அவளுக்கும் அம்மா சொல்வது சரி என்று தோன்ற “சரி உங்கள் இஷ்டம்.. எனக்கு பெருசா எந்தவித எக்ஸ்பக்ட்டேன்ஷனும் கிடையாது.. உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே ” என்று விட்டாள்.
அப்போதுதான் சபர்மதிக்கு நிம்மதியாக இருந்தது. மனநிறைவோடு தன் பெண்ணை அணைத்து விடுவித்தார்.
மனோகர் தீப்பட்டாற்போல் துடித்து எடுத்து தேவாவிடம் போகாது ஆறப்போட்டு இருந்தாலே.. வைசாலிக்கும் அவர் அம்மா பேசி முடித்து இருந்த பையன் கூடவே கல்யாணம் நடந்து இருக்கும்.. ஆனால்.. விதி வலியது அல்லவா!!!!!
தேவாவின் கட்டளை தன் வேலையை ஆரம்பித்து இருந்தது.. இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், சோஷியல் மீடியாவில் பரபரப்பான செய்தி வைஷாலி பற்றி பரவி இருந்தது..
” பணக்கார பையன்களுக்கு தூண்டில் போடும் ஆசிரியை.. “
” தன் காம இச்சைக்கு மாணவர்களை பயன்படுத்தும் லெக்சரர்”
” கல்லூரியில் விரிவுரையாளரின் காதல் லீலைகள்.. அதுவும் மாணவர்களிடம்”
என்று பலதரப்பட்ட தலைப்புகளை தாங்கி வைஷாலி படத்தோடு சமூக வலைதளங்களில் அவளை குத்தி கிழித்து இருந்தனர்.
வைஷாலி விடுமுறையில் இருந்தாலும் அவர்கள் நண்பர்களுடனும் தொடர்பில்தான் இருந்தாள். முதலில் இதை சங்கீதா தான் பார்த்துவிட்டு வைஷூ வீட்டிற்கு போன் செய்தாள்.
“ஹாய் சங்கீ..என்ன அதிசயமா இருக்கு.. ஃபோன் பண்ணியிருக்க.. உன் மாமன் கிட்ட தானே பேச நேரம் இருக்கும் உனக்கு” என்று கிண்டலடித்தாள் வைஷாலி.
ஆனால் அந்த பக்கம் சங்கீதாவோ மிக பதற்றமாக “சோசியல் மீடியாவுல மெசேஜ் பாத்தியா?”
“என்ன மெசேஜே… உருப்படாத மெசேஜ் எல்லாம் ஊர் பட்டது வந்துகிட்டு இருக்கு எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை”
“ஊரு மெசேஜ் பார்க்கச் சொல்லலடி.. உன்ன பத்தி வந்த மெசேஜ் பாருடி”
“என்ன பத்தியா?.. என்ன மெசேஜ்?? சற்று பதட்டத்துடன் வைஷாலி..
“அதை எப்படிடி என் வாயால சொல்லுவேன்?”
லிங்க் போட்டோஸ் அனுப்புறேன் பாரு .. எந்த முடிவும் எடுக்காதே.. பீ ரிலாக்ஸ் ஓகே..
“என்னது இது பெரிய பேச்செல்லாம் பேசுற” அசட்டையா வைஷூ
“நிஜமாவே விஷயம் ரொம்ப சீரியஸ்…என் வாயல அத சொல்லல எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. நான் உனக்கு மெசேஜ் பார்வேர்ட் பண்ணிட்டேன் நீயே பாரு” இரைந்தாள் சங்கி
“ம்ம்ம்”என்றவள் கொஞ்சம் டென்ஷனாகவே அமர்ந்திருந்தாள் அந்த மெசேஜை பார்ப்பதற்கு.
மெசேஜ் பார்த்தவுடன் வைஷூக்கு யோசிக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். என்னதிது??!!!
அழுகை வந்தது.. தன் குடும்பம் எண்ணி? இதென்ன அவதூறு??!!
பூடகமாக காலேஜ் ஓனர் பையன் தான் கேக்குதா? என்றெல்லாம் செய்தி இருக்க.. அதிர்ச்சியில் மூளை ஸ்தம்பித்து விட்டது..
செய்திகள் தான் பேக் பேரை கெடுக்க பொது கழிவறையில் கிறுக்கல்கள் என்றால் , அதற்கு கமெண்ட் கொடுத்த நெட்டிசன்கள் போட்ட கெட்ட வார்த்தைகள் படு கேவலம்..
இவளிடம் படிக்கும் பசங்களே.. தெரிஞ்சிருந்தா நானும் ட்ரை பண்ணியிருப்பேனே .. ஆனால் என்னால் 100 ரூபாய் தான் கொடுக்க முடியும் என்பதை மீமாகவே போட… வைஷூக்கு அனைத்தும் வெறுத்தது.. இன்னும் படிக்க முடியாது கண்ணீர் மறைக்க.. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..
காலேஜ் குரூப்பில் நந்தன் வீழ்த்தியதிலேயே பெருமை பட வேண்டிய ஐட்டம் வைசாலி டீச்சர்.. என்று பசங்க பச்சையா பேச.. அங்கிருந்து எக்சிட் அடித்தாள்..
அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்ததால் வந்த வினை இது என்று நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது வைஷாலியால்..
சங்கீதா போன் அடிக்க.. பேச விருப்பம் இல்லாது தாங்க்ஸ் என்று மெசேஜ் போட்டுட்டு .. போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அழுது கொண்டே இருந்தாள்..
சபர்மதி” என்னதிது? வைஷூ”
அவருக்கும் வந்திருந்த போட்டோஸ் காட்ட.. குற்றமே செய்யாதவள், அன்னையை அணைத்து வருந்தி அழுதாள்..
“என்னை ஏன் இப்படி அசிங்கப்படுத்துராங்க தெரியலம்மா” முகம் மூடி கேவ..
“ம்ப்ச்.. நெருப்பில்லாது புகையாதுன்னு பேசுவாங்க.. ஏதோ பெரிய தப்பு உனக்கு தெரியாதே பண்ணியிருப்ப விடு” அவர் பெரும் சோர்வில் பேசினார்.. மாப்பிள்ளை வீட்டில் மகளை கழுவி ஊற்றி.. கெட்டு போன பொண்ணை தலையில் கட்ட பார்த்தீங்களா? போம்மா உங்க உறவே வேணாம் முடிச்சுக்கலாம் என்று விட்டார்கள்.. இனி வைஷூ எதிர்காலம்?
அவரும் கலங்கி தவித்து நின்றிருந்தார்.
அந்நேரம் சபர்மதியின் அப்பா நமசிவாயமும் வர.. மரியாதைக்கு தள்ளி நின்று.. ” வாங்க ப்பா” என்றாலும் உயிர்ப்பில்லை அதில்..
நமச்சிவாயம் சுதந்திர போராட்ட வீரர்.. தியாகிகள் ஒன்றிணைந்து ஏதோ மாநாடு என்று சொல்ல, டெல்லியில் சிறிது நாட்கள் தங்கி இருந்தவர், ஊர் திரும்பிய வேளையில் கேட்ட.. பார்த்த அந்த பதிவுகள் அவரை கொதிப்படைய செய்தது..
“தேவி ம்மா.. என்னாச்சுடா.. ஊரில் என்னென்னவோ சொல்றாங்க”
“தாத்தா.. நான் அப்படி பட்டவ இல்ல தாத்தா” அவர் பரிவான கைகளில் முகம் புதைத்து பேத்தி அழ..
பேத்தியின் அழுகை பொறுக்காத தாத்தாவோ, ” கடினமான நேரத்தில் மன தைரியம் வேணும்டா.. உனக்கு தெரிஞ்சதை சொல்லு ” என்றார்.
” தனக்கு தெரிந்ததை ஏதோ சொன்னாள்..
“வா போலீசுக்கு போகலாம்.. துணைக்கு நீயும் வாம்மா மதி”
“எதுக்கு அப்பா அங்கெல்லாம்.. போனால் இன்னும் இன்னும் அசிங்கம் ” மகள் மறுக்க..
“இன்னைக்கு நம்ம தேவியை மானக்கேடு பண்ணியிருக்காங்க.. அடுத்து வேற பொண்ணு என்று போகும்.. நிச்சயமா பதில் கொடுக்கணும் மதி வா” பெரியவர் இதிலேயும் பொது நலமே முன் வைக்க..
” என்னத்த அப்பா நீதி கிடைக்க போகுது” மனநிலையை பிடிக்கவே இல்லைன்னாலும் மகள் கூட மதியும் கிளம்ப மூவரும் காவல்துறை ஆணையரை நேரில் சென்று சந்தித்தனர்.
வைஷாலியின் தாத்தா மற்றும் அவரின் அப்பா எல்லாரும் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று அவர்களுக்கு அவ்வூரில் மதிப்பு இருப்பதும் ஆணையருக்கு நன்றாக தெரியும். ஆகவே பெரும் மரியாதையுடன்
“வணக்கம் சார்.. உக்காருங்க என்ன விஷயம்” என்றார்.
விஷயம் சொல்லப்பட.. ஒரு விண்ணப்பம் எழுதி, ஸிரோ கிரைம் பிரிவுக்கு போங்க நான் சொல்றேன்.. அவர் மாற்றிவிட.
அங்கு இவளிடம் ப்ரூப் கேட்கனர். தன் மொபைலில் இருந்த அந்த போட்டோக்களை அவர்களிடம் காண்பித்தாள் வைஷாலி…
அவர்கள் அதை வைத்து தேட விடிகாலையிலிருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்டது பல்கி பெருகியிருந்தது..
வைஸூக்கு காண சகியாது.. மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வர.. ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்து ஷாலில் துடைத்துக்கொண்டே இருந்தாள்.
இங்கு எதுவும் நியமம் தானே.. ஆசிரியை அதுவும் கவுரவமான குடும்பத்து பெண்.. வைஷுவின் பால் முகமே தவறான செயலுக்கு போக கூடியவள் அல்ல என்று கட்டியம் கூறயது அவர்களுக்கு..
உயர் அதிகாரியின் அழுத்தத்தால் ஸிரோ கிரைம், அவனின் ஐடி கண்டுபிடிக்கப்பட்டு.. அனைத்து பரவலும் தடை செய்யப்பட்டு.. தேடி தேடி டெலிட் பண்ணி.. முழு ரிப்போர்ட் ஆவணமாகவே அதிகாரியிடம் ஒப்படைக்க பட்டது. ஸிரோ பெர்சனை விசாரிக்க அவன் சொன்ன தகவல் இவரை மலைக்க வைத்தது..
“அவரிடமே கேட்பேன் ” என்றார் ஆணையர்.
அவனும் பெரிய இடம் சொன்னால் ஈஸியாக தப்பிவிடலாம் என்று எண்ணி..
“இதோ போன் ஆதாரம் ” என்று அந்த நெட் ஹாக்கர் ருசுவும் அனுப்பிவிட.. நெற்றி கீறி யோசனையில் வீழ்ந்தார் கமிஷ்னர்
அந்த காவல் நிலையத்துக்கே விஷயம் கசிய.. ஸ்தம்பித்து நின்றனர். பெரிய இடமாச்சே!!
எல்லாம் எடுத்து விட்டுட்டோம்.. இனியும் வாராது ..நமசிவாயத்திடம் சொல்லப்பட்டு கேஸ் முடிந்ததாய் கையெழுத்து வாங்க..
அவரும் 3 மணிக்கு வந்து 6 மணிக்குள் ஒற்றை ரூபாய் செலவில்லாது துரிதமாக காரியம் ஆற்றிய காவல்துறைக்கு நன்றி சொல்லி.. கையெழுத்திட குனிய..
“தாத்தா ஒரே ஒரு நிமிஷம்”
“சார்.. அந்த துரோகி யார் என்று மட்டும் சொல்லுங்க போதும்”
“டெவில் எனும் ஒரு பொறுக்கி.. அவனை நாங்க பார்த்துகிறோம்.. நீங்க கிளம்புங்க” என்று சமாளித்தார்.
“அந்த பேரில் எனக்கு யாரையும் தெரியாது.. இல்ல.. ஏதோ மறைக்கிறீங்க” வைஷூ சந்தேகம் கொள்ள..
“அவ்ளோதான் .. கேஸ் முடிக்கலேன்னா டெவில கூட எங்களால் ஒன்னும் பண்ண முடியாது” என்று அவர்கள் மொத்த பேரும் நழுவ..
“நீ வேற சும்மா இருடி.. இங்க இவ்ளோ நேரம் இருந்ததே எரியுது எனக்கு.. நீங்க கையெழுத்து போடுங்க மாமா” மதி எரிச்சல் பட..
ஒரு வழியாக அவர் கையெழுத்திட்டு, ” அவனை எல்லாம் சும்மா விடாதீங்க.. சார்.. இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கை பாழாக்குவானா” என்ற பொருமலுடனே வெளியே வந்தனர்.
மூவரும் கேட்டுக்கு வெளியில் நடக்கும் பொழுது.. வயதான ஏட்டு ஒருத்தர் தாத்தா விடம்..
“தேவேஸ்வர ராஜன்.. காலேஜ் ஓனர் சொல்லி நடந்திருக்கு பெரிய இடம் பெரியவரே..” என்று சொல்லிவிட்டு வைஷாலி பக்கம் திரும்பி,
“பாப்பா நீயும் இனி உசாரா இரும்மா.. ” என பத்திரம் சொல்லி சென்று விட்டார்.
வீட்டிற்கு செல்லாம் என்று ஆட்டோ கைகாட்டி நிறுத்தி ஏறப்போக..
வைசாலி தேவியை மட்டும் காணோம்..
நமசிவாயமும் மதியும் திகைத்து நிற்க..
வேறு ஆட்டோவில் புயலாய் வைஷூ தேவாவின் வீட்டிற்கு பயணப்பட்டு விட்டாள்.. கூகுள் உபயத்தில் அவன் ஜாதகம் முழுக்க வாசித்தபடி..
கட்டம் கட்டியவனே கட்டத்தில் சிக்க போகிறானா??? இல்லை மீண்டும் அவளை சிக்க வைப்பானா???
கர்வம் வளரும்…
Vaishu sama athiradi
Super sis 💞
தேவா என்ன பெரிய பதவியில் இருந்து எண்ண புண்ணியம் ??
எத்தனை பெரிய தவறு செய்து விட்டான்?