ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 8

8

 

 

 

அன்றைய தினம் அலுவலகத்தில் தேவாவிற்கு டைட் ஒர்க்.. மாலை ஆறு மணிக்கு மேல் தான் சற்று ஓய்வாக அமர்ந்து, தன் இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து கண்களை மூடி இளப்பாறினான்.

 

அவனது பி. ஏ மிக தயக்கமாக அவனை நெருங்கி.. ‘ சர் ” என்றான்.

 

தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பி, கண்களாலேயே அவனிடம் என்னவென்று கேட்க, ” சர்.. கமின்ஷனர் லைன்ல..” என்று அலுவலக உபயோகத்திற்கு இருக்கும் போனை அவனிடம் நீட்ட..

 

ஏதுக்காமாம்.. என்று அலட்சியமாக கேட்டானே ஒழிய போனை வாங்கினான் இல்லை.. 

 

” சர்.. அவர் ஏதோ பெர்சனல்.. உங்ககிட்ட தான் பேசணும் சொல்றாரு”

 

கிஞ்சித்தும் தேவாவிற்கு அவன் செய்த செயலோ அதன் பற்றிய நியாபகமோ சிறிது கூட இல்லை.

 

 ஃபோனை வாங்கியவன், ” எஸ்.. இட்ஸ் தேவா ஹியர்” என்றான் ஆளுமையாக குரலில்..

 

” சர்.. உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல.. இவ்வளோக்கு நீங்க இறங்கி இருக்க வேணாம், அதுவும் குடும்ப பெண்ணிடம்” என்றார் வைஷாலி நினைவில்..

 

” சர். ஐம் நோட் கேட் யூ.. மோர் ஓவர் சோ பிஸி ” என்றான் சொல்லுவதை தெளிவாக சுருங்க சொல்லு என்னும் விதமாக..

 

 

” நீங்க ஒரு பெண்ணை பற்றி சோஷியல் மீடியாவில் ஆட்களை வைத்து போட சொன்னதை தான் சொல்லுறேன் சர்.. ஏதோ நீங்க பெரிய இடம் என்பதால் இந்த விசயத்தை நாங்க பெரிசு பண்ணலை.. இல்லைன்னா.. இந்நேரம்…’

 

” ஹவ் டெர் யூ த்ரட்டன் மீ?” என்று அவன் கோபத்தில் கத்த.. 

 

” சர். நீங்க கத்திறதுனால உண்மை பொய் ஆகிடாது.. நீங்க பாங்க் பண்ண நினைத்தது ஒரு நல்ல குடும்பத்து பொண்ணை.. அதுவும் அவங்க சுதந்திர போராட்ட தியாகி நமசிவாயம் பேத்தி.. “

 

” வாட்..? ” என்று அதிர்ந்தான். 

 

” எஸ்.. அந்த போட்டோஸ் எடுத்திட்டு இங்க தான் வந்தாங்க.. சைபர் கிரைம் மூலமாக, நீங்க போட சொன்ன ஆள் வரை எங்க டீம் கண்டுபிடிச்சு, அந்த போட்டோஸ் எல்லாம் நெட்வொர்க் இருந்து டெலீட் பண்ணியாச்சு.. அவங்க கிட்ட உங்களை பத்தி ஒன்னும் சொல்லலை.. ஆனா நீங்க இந்த மாதிரி செய்தது சரியில்லை சர்”

 

தேவாவினால் ஒன்றும் பேச முடியவில்லை. ” அந்த போட்டோஸ் எனக்கு வேண்டும்” என்றான் அழுத்தமாக..

 

” சர்.. மறுபடியும் எதும் ஆரம்பிக்காதீங்க”

 

” நோ.. நோ.. ஜஸ்ட் வான்ட் டூ சீ..”

 

ஓகே சொல்லி போனை அணைத்தவர், அந்த போட்டோக்களை அவனுக்கு அனுப்ப, பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்.

 

 

ஆமாம், அவன் எதிர் பார்த்ததோ முப்பது வயது மேல் மதிக்கத்தக்க ஒரு பொம்பளையை.. சத்தியமாக வைஷாலி போன்ற பெண்ணை இல்லை.. பார்த்தவுடன் அவன் செய்த தவறு நச்சு என்று உரைத்தது.

 

 

‘சித்தப்பாவின் பேச்சை அப்படியே கேட்டு இருக்க கூடாது, நாம இதை சரியா விசாரிச்சு இருக்கனும்.. நந்தன் பற்றி தெரிந்தும் நான் அவசர பட்டுட்டேன் ‘

என்று தனக்குள் வருந்தியவன், பரவாயில்லை அந்த பெண், தைரியமாக தான் இதை ஹான்டில் செய்து இருக்கிறாள். மற்ற பெண்களை போல அழுது கரையாமல்… 

 

இனி தான் அவளின் முழு தைரியத்தை பார்க்க போகிறோம் என்பதை அறியாமல்..

 

சிறு குற்ற உணர்ச்சியும் மேல் ஓங்கியது அவனுக்கு.. அவன் தாயின் வளர்ப்பு..

 

 

தன் லம்போர்கினி யை லாவகமாக ஓட்டி கொண்டு, தன் வீட்டை அடைந்தவன் அங்கே இருந்தவளை பார்த்து அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டான் .

 

ஆம், அங்கே கோபத்திலும், அழுததிலும் முகம் கோவை நிறம் பூசி இருக்க, முக இறுக்கத்திடன் தன் வீட்டு போர்டுகோவில் அமர்ந்து இருந்தவளை பார்த்தவன், இவள் இங்கே என்ன செய்கிறாள்.. கமிஷனர் தான் என்னை பற்றி சொல்லவில்லை என்றாரே.. என்று யோசனையுடன் அவன் அவளை நெருங்க…

 

 

அப்போது தான் அவளை சுற்றி பார்க்க, அவன் மொத்த குடும்பமும் அவளை சுற்றி தான் நின்று கொண்டிருந்தனர்..

 

அடடா.. ஆப்பு நமக்கே ரிப்பேட் ஆகுதே.. 

 

நியாயம் கேட்டு வந்த கண்ணகி போலவே அமர்ந்து இருந்தவளை பார்த்தவன், இவள் என்ன சொல்லி வச்சு இருக்கா தெரியலையே.. 

 

மெதுவாக எல்லோர் முகத்தையும் பார்க்க, 

தந்தையோ அமைதியின் சிகரம் போல இருக்க.. தாத்தாவோ கண்களில் எரிமலை லாவாவை உண்டாகி கொட்ட காத்திருக்க.. பாட்டியோ வைஷாலியை முறைத்து கொண்டு… 

 

அன்னை முகமோ நீயா இப்படி செய்தது என்று பார்க்க.. தங்கையோ விட்டால் அவனை அடித்து விடுபவள் போல பார்க்க.. இந்த பொடுசு எல்லாம் என்னை பார்த்து டெரோர் லுக் விடுறா.. 

 

 

எல்லாம் இவளால என்று வைஷூவை முறைக்க.. மனதோ தோன்றிய வருத்தம் எல்லாம் வருத்தபடும் அளவுக்கு அவள் மீது இப்போது கோபம் பொங்க.. அவளை பார்த்த வண்ணமே நெருங்கி வந்தான்.

 

 

 

” சோ… ,” அலட்டாமல் அவளை பார்க்க..

 

” என்ன.. சோன்னு அசால்ட்டா சொல்றீங்க…. என்னை எப்படி நீங்க அவமானப்படுத்தலாம். அதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு? ஒரு பெண்ணை இப்படி பலருக்கு காட்சி பொருளாக, கேவலமாக எப்படி உங்களால் சித்தரிக்க முடிஞ்சது.. நீங்க செய்தது உங்க கல்லூரியில் வேலை செய்யும் உங்க ஸ்டாப் பத்தி.. என்ன மாதிரி மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கீங்க??” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேச..

 

 

அவன் தன் இருகைகளையும் கட்டி கொண்டு அவளையே தீர்க்கமாக பார்க்க.. 

 

அவள் மேலும் தொடர்ந்தாள்..

 

” அப்படி என்ன நான் உங்களுக்கு கெடுதல் செய்தேன்… சொல்லுங்க.. ” என்று அவள் ஏகிற..

 

” இப்போ இந்த காளி அவதாரத்துக்கு என்ன அவசியம் நேர்ந்தது?”

 

” காளி.. இல்லடா.. தவறு செய்தது மன்னனே ஆனாலும் தட்டி கேட்ட கண்ணகி டா.. தேவைப்பட்டா காளி அவதாரம் எடுத்து அழிக்கவும் தயங்க மாட்டேன்” என்று அவன் மரியாதை அதல பாதாளத்துக்கு போக..

 

“பொண்ணுங்க நீங்க எல்லாம் காணும் இந்த புறத்தோற்றத்துக்கு அப்பாலும் அவங்களுக்கு ஒரு மனமும் பல திறன்களும் கொண்டவங்க.. அவங்களை காட்சிப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் உங்க வக்கரத்தை தீக்குறதுக்காக கேவலமாகவும் உருவகப்படுத்த நினைக்காதீங்க..”என்று விழி விரித்து குரல் உயர்த்தாமல் அவள் அவனை வார்த்தைகளால் கடித்து துப்ப…

 

அவன் அவளின்‌ இந்த ஆளுமை பேச்சில் அதிர்ந்து அவளை பார்க்க..

 

சட்டென்று மிரு கை பிடித்து இழுத்து வந்து, அவன் முன்னே நிறுத்தி, ” இதே உங்க தங்கையா இருந்தா.. அவள் முடிக்கும் முன், ஏய்… என்று தேவாவின் கை அவள் கன்னம் நோக்கி விரைய.. 

 

” ம்ம்ம்.. அடி.. ஏன் நிறுத்திட்ட…” என்று ஒருமையில் தாவி அவன் முன்னே விடைத்து கொண்டு நின்றாள்.

 

அதற்குள் தமயந்தி, ” தேவா என்றார் கண்டிப்பு குரலில்…

 

அண்ணனின் கோபத்தில் மிரு பயந்து, வைஷாலி பின்னே ஒளிந்து நிற்க, அதை பார்த்தவன், ” ச்சே.. என்று கையை கீழே இறக்கினான். தன் தலையை கோதி தன்னை சமன் செய்து கொண்டான்.

 

பின் வைஷாலியை நோக்கி, ” இங்க பாரு.. அது தவறுதலாக நடந்த ஒரு இன்சிடெண்ட்… அதான் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு இல்லையா.. போ.. போ.. கிளம்பு இங்க இருந்து” 

 

“என்னது இன்சிடென்ட்டா… உன் தங்கைன்னு சொன்ன போதே உனக்கு அவ்வளோ கோவம் வருது.. ஆனா என்னை அதுவும் இளம்பெண்ணை கண்டபடி மீம்ஸ் போட்டோஸ் போட சொல்லி இருக்கீயே.. அதனால அந்த பெண்ணுக்கு வரும் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா நீ… உன்னை மாதிரி பல ஆண்கள் என்னை பத்தி என்னென்ன பேசி இருக்காங்க தெரியுமா?..

ஒரு போலீசாரால் ஒரு பொண்ணு கைது செய்யப்பட்டாலும் அவ முகத்தை காண்பிப்பதோ.. மீடியாவில் அவ போட்டோவ போடுறதோ தவறுன்னு சட்டம் சொல்லுது… ஆனா நீ தப்பே செய்யாத என்னை கண்டபடி போட்டோஸ் நெட்டில் போட்ட, அதை நெட்டிசன்கள் பலவித விவாதங்களுக்கும் ஆக்கி விட்டிருக்காங்க.. அதுக்கு என்ன சொல்ல போற” என்று தன் நிலையை கோபத்துடன் கூறி இன்னும் அவனை தான் முறைத்து கொண்டு இருந்தாள். 

 

பின் தமயந்தியை நோக்கி, ” ஆண்டி.. நீங்களே சொல்லுங்க.. ஒரு பெண்ணை பெற்ற அம்மாவா.. ஒரு பெண்ணா.. எனக்கு நியாயம் சொல்லுங்க” என்று அவள் அழுக..

 

 

தமா அவளை அணைத்து, ” தப்பு தான் மா. ரொம்ப பெரிய தப்பு என் மகன் செய்தது.. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கை கூப்ப..

 

 

மோகனும், தேவாவும் பதறி போய் அவர் அருகே வந்து ஒரே நேரத்தில்,” தமா.. அம்மா.. ” என்று கூவினார்கள்..

 

 

” இவன் செய்த செயலுக்கு என்ன பண்ண சொல்லுறீங்க.. நானும் ஒரு பெண்ணை வைத்து இருக்கிறேன்” 

 

 

மோகன் தேவாவை முறைத்தவாறு, ” சொல்லு எதற்காக இப்படி செய்த? 

 

எப்படி சொல்லுவான், சித்தப்பாவுக்காக உதவ போய், நான் தீர விசாரிக்காமல் இப்படி செய்து விட்டேன் என்று..

 

முதன் முறையாக தான் செய்த செயலுக்கு விளக்கம் கொடுக்க முடியாமல் இருக்கும் இந்த தேவா மோகனுக்கு புதிது… 

 

வைஷாலி காணாமல் அதுவரை எங்கே சென்றாள், என்று பதறி போய் தேடி கொண்டிருந்தனர் மதியும், நமசிவாயமும்..

 

ஒருவேளை தப்பான முடிவு எடுத்து இருப்பாளோ என்று எண்ணமே அவர்களை நடுங்க செய்வதாய்…

 

மதிக்கு பொறி தட்டியது, ஒரு வேளை அந்த ஏட்டு சொன்னதை கேட்டு, அவர்கள் வீட்டுக்கு சென்று இருப்பாளோ.. உடனே தன் தந்தையிடம் கூற, இருவரும் ஆட்டோ பிடித்து அவர்கள் விலாசம் தேடி விரைந்து வந்தனர்.

 

இடையிடையே அவர் அழைத்த அழைப்புகளை வெட்டி கொண்டு இருந்தாள் வைஷூ.. 

 

தேவா வந்து இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்க, அவர்களும் விரைந்து வந்து சேர்ந்து விட்டனர்.

 

மதியும், நமசிவாயமும் நிற்பதை பார்த்து அனைவருக்கும் ஒரு சங்கடம்.. என்ன பேசுவது.. இல்லை என்ன சமாதானம் சொல்லுவது என்று.. தமா தான் அதையும் கையில் எடுத்தார். 

 

வைஷூவை கையில் பிடித்து கொண்டு மதியிடம் வந்தவர், ” என்ன சொல்றதுன்னு தெரியல.. பெரிய விசயம் தான். எங்க பையன அது போல நான் வளர்க்கல.. ஏதோ தப்பான புரிதல்.. மனசுல வைச்சுக்காதீங்க…'”

 

 

” தலைவலியும் காய்ச்சலும் தனுக்கு வந்தால் தான் தெரியும் மா.. அதுவும் நாங்க மிடில் கிளாஸ்.. உங்க கூட எல்லாம் மோத மனசு வயசு இரண்டும் இல்லை எங்களிடம்.. இதுக்கு மேல எங்களை கஷ்டபடுத்தாதீங்க ” என்று மதி கை எடுத்து கூப்பி.. தன் மகளை பார்த்து, ” வாடம்மா போகலாம்” என்று கூறி முன்னே நடக்க..

 

 

வைஷூவின் கால் அவ்விடத்தில் வேரூன்றி இருந்தது… 

 

ஏதோ தோன்ற மதி திரும்பி பார்க்க, மகள் அங்கே நிற்பதை பார்த்து, ” வைஷூ வா ,” என்றார் அழுத்தமாக..

 

அப்பொழுதும் அவள் அசைந்தாள் இல்லை..

 

கோபமாக வந்தவர், மகள் கை பிடித்து இழுக்க, அவர் கையை உதறியவள் அன்னையை நோக்கி, ” நான் வர மாட்டேன்.. இனி இங்கு தான் இருப்பேன்” என்று அனாயசமாக குண்டை போட்டாள்.

 

 

” என்ன.. என்ன.. பல்வேறு வகையான குரல்கள் அவ்விடத்தில் ஒலிக்க..

 

” ஆமாம்.. என்னுடைய இந்த நிலைக்கு இவங்க தானே காரணம்.. கெட்டு போன பெயர் திரும்ப கிடைக்குமா.. ” என்று விம்மியவள், தேவாவை நோக்கி சென்று, ” ரொம்ப சிம்பிளா ஒரு பொண்ணு பேர கெடுத்துட்டல .. ஆனா உன்னால அதை திருப்ப முடியுமா.. உங்க பணத்தால திருப்ப முடியுமா.. முடியாது இல்ல” என்று கோபமாக இரைந்தவள்.

 

அங்கே இருந்த போர்டிகோ நடுவில் தன் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்து விட்டாள்.

 

அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்க்க, அவள் திடமாக அப்படியே அமர்ந்து இருந்தாள்.

 

அப்போது, சுகுணா தேவி ஆங்காரமாக வைஷாலி அருகே வந்தவர், அவள் கை பிடித்து , ” என்ன.. இது தான் சாக்குன்னு ஒட்டிக்கலாம் பார்க்கிறீயா.. எழுதுறிடி..” தர தர வென இழுக்க, அவரின் வலிய பருத்த உடம்பு முன், மெல்லிய மென் இடையாள் ஆன, அவள் புயலில் சிக்கிய சிறு மலராய் வதைப்பட..

 

தேவா இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று திரும்பி நிற்க.. மிருவும் தமாவும் பதறினாலும் மாமியாரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் கை பிசைந்து நிற்க..

 

பார்த்து கொண்டிருந்த தமயந்திக்கு அவள் மீது இரக்கம் சுரக்க.. கண்கள் தானாக கண்ணீரை சுரந்தது.. 

 

 

கேட் அருகே நின்றுருந்த மதியும், நமசிவாயமும் ” அய்யோ வைஷூ ” என்று பதறி ஓடி வந்தனர்.

 

அதற்குள் மோகன ராஜன், தன் அம்மாவை தடுத்து, அவரிடம் இருந்து வைஷாலியை பிரித்து எடுத்து, ” அம்மா ” என்று கோபமாக கத்தினார். ” ஏற்கனவே அவன் செய்த செயலுக்கே என்ன பரிகாரம் செய்யுறதுன்னு தெரியல.. இதுல நீங்க வேற எதையும் இழுக்காதீங்க” அழுத்தமாக உரைத்து உருத்து விழித்தார்.

 

இராஜராஜனி தன் பங்கிற்கு “ஏன் டா.. அவள் சொன்னதில் என்ன தப்பு.. ஏதோ தேவா அறியாமல் ஒரு இன்ஸிடெண்ட் நடந்து போச்சு.. அதான் ஒன்னும் பெரிசா ஆகலையே அப்புறம் என்ன.. இன்னும் கொடி பிடிச்சு கிட்டு உட்கார்ந்து இருக்கா” என்று அதிகாரமாக கேட்டார்.

 

” எல்லாம் மீடில் கிளாஸ் தானே.. அதான் பணம் அந்தஸ்து என்றதும் மனசு கிறங்கி போய்ட்டு” என்று சுகுணா இளக்காரமாக உதடு சுழிக்க..

 

மதி விரைந்து வந்து ” இந்த மாதிரியான பேச்சு எல்லாம் நமக்கு தேவையா டா.. வா போகலாம்.. இவங்களுக்கு பணம் மட்டும் பிரதானம்.. இன்னும் இங்க இருந்து அவமானப்பட வேண்டாம்.. வா போகலாம்” கெஞ்சலில் தொடங்கி அதிகாரமாக முடித்தார்.

 

அவள் அப்பவும் பிடிவாதமாக இருக்க, மதி தன் தந்தையை பார்த்து, நீங்களாவது சொல்லுங்களேன் என்று பார்க்க..

 

அதுவரை பொறுமையாக இருந்த நமச்சிவாயம், பேத்தியின் தலையை ஆதுரமா தடவி கொடுத்து..” நீ நடத்துடா தங்கம்.. நான் இருக்கேன் உனக்கு.. நாளை காலையில் இவங்க வீட்டு முன்னாடி என் நண்பர்களை எல்லோரையும் கொண்டு வந்து இருக்கிடுறேன்” என்க.. மொத்த குடும்பமும் ஜெர்க்காகி விழி விரிய பார்த்தனர்.

 

இம்முறை செயலை கையில் எடுத்த தமா ஒரு அரசியின் நிமிர்யோடு வந்தவர், வைஷுவை தன் பக்கம் இழுத்தார், மதியை நோக்கி, ” அவள் இனி எங்க வீட்டு பொண்ணு.. நீங்க பயப்படாமல் போகலாம்.” என்றவர் பெரியவரை நோக்கி, ” நண்பர்களோடு வாங்க.. பேத்திய பார்க்க மட்டும்” கூறியதோடு, கணவனை ஒரு அர்த்த புன்னகை பார்க்க, அவரும் தலை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தார்.

 

பின் தன் மகளை நோக்கி, ” மிரு அண்ணியை உள்ள கூட்டிட்டு போ..” என்றார். அவள் மகிழ்ச்சியோடு மான் குட்டி போல தலையாட்டி வர..

 

அனைவரும் திகைத்து தமாவை பார்த்தார்கள். 

 

தேவாவோ அன்னையை கூர்மையுடன் நோக்க.. அதை விட அவர் கூர்மையாக நோக்கி அவன் அன்னை என்று நிரூபித்தார்.

 

உள்ளே நுழைந்த வைஷூ வலது காலை எடுத்து வைத்து, பின் புறம் திரும்பி தேவாவை கீழ் உதட்டில் நெளியும் புன்னகையும், கண்ணில் மின்னலுடன் பார்த்தாள்.

 

 

 

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top