10
“என்னது மருமகளா??” என்று அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தை வரவில்லை அவருக்கு.
மனோகரும் அந்த போட்டோஸ் எல்லாம் நெட்டில் பார்த்து இருந்தார். முதலில் அதில் பயன்படுத்தி இருந்த வார்த்தைகளில் சற்று சங்கடம்.. இவ்வளோ இறங்கி இருக்க வேண்டாமோ என்ற எண்ணம் இருந்தாலும், மகனின் வாழ்க்கை என்கிற பெரிய அஸ்திரம் அனைத்தையும் வீழ்த்தி இருந்தது.
எப்படியும் மகன் வரும் போது, இவற்றை எல்லாம் காட்டி, நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள் இல்லை.. நம் குடும்ப கௌரவம்.. பாரம்பரியம் என்று பேச்சிலே அவனை மாற்றி விடலாம் என்கிற எண்ணத்துடன் நேற்று முழுவதும் சந்தோச மனநிலையில் இருந்தனர் மனோகரன் தம்பதியர்.
ரூபாவதி தமயந்தியிடம் சுவாரசியமாக பேசி கொண்டிருந்ததில் வைஷூவை கூர்ந்து கவனிக்கவில்லை. மருமகள் என்ற வார்த்தையில் வாணிஸ் குரூப் பெண் தான் வந்திருக்கிறாள் போல என்று ஆவலுடன் திரும்பிய அவருக்கும் பேரதிர்ச்சி..
தன் கணவனை பார்க்க, அவரும் அதே அதிர்ச்சியுடன்.
” அண்ணே.. என்ன சொல்றீங்க? ” மனோகர் அதிர்ச்சி நீங்காமல்..
“ம்ம்ம்.. நிறைய விசயம் நடந்துட்டு… என்று பெரு மூச்சு விட்டு நேற்று நடந்த அனைத்தையும் கூறினார். அப்போது தான் புரிந்தது மனோகருக்கு அனைத்தும் அவருக்காகவும் அவர் மகனுக்காகவும் உதவ வேண்டி தேவா இறங்க அது அவனுக்கே ஆப்பாக முடிந்ததை..
இப்பொழுது எல்லாவற்றுக்கும் காரணம் தன் மகன் நந்தன் என்று தெரிந்தால், மோகன் என்ன செய்வார் என்று கூறுவதற்கில்லை. ஒரு காலத்தில் அவரும் கோபத்தில் கர்வதில் திளைத்தவரே.. எல்லாம் தமயந்தி என்ற பெண்ணின் கடை கண் பார்வையில் உடைந்து நொறுங்கியது..
அதை நன்கு அறிவார் மனோகர், அதனாலேயே ராஜராஜன் தன் தங்கை மகளை மனோகருக்கு அவசரவசரமாக பேசி முடித்தார்.
இந்த விசயம் தெரிய வந்தது என்றால்.. மெல்ல எச்சில் விழுங்கினார் மனோகர்.
அதே நேரம் தன் லிஃப்ட் இல் இருந்து இறங்கி வந்தான் தேவா.. கூர் விழிகள் வைஷாலியை துளைக்க தவறவில்லை. அவளோ அவனிடம் பார்வை கூட திருப்பவில்லை. மும்மரமாக அவ்வறையில் உள்ள, அழகிய மின் விளக்குகளை அதி முக்கியமாக கவனித்து கொண்டிருந்தாள்.
வந்தவன் தனி சோஃபாவில் அமர்ந்து, தன் செல்லில் அன்றைய பணிகளை பார்க்க தொடங்கினான். மனோகர் மெல்ல அவனை பார்க்க, அவனோ அவரை கண்டுகொள்ள வில்லை.
” அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் நம் ஜோசியர் வந்திடுவார்.. ” மோகன் கூற..
“வரட்டும்… வரட்டும்” என்று அசட்டையாக கூறினார்.
சிறிது நேரத்தில் காவி உடை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, கண்களில் தீட்சன்னியத்துடன் வந்தார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆலவராயர். காலங்காலமாக ராஜன் குடும்பத்தின் நற்காலங்களில் நல்லவைகளையும்.. தீய காலங்களில் அதற்கு ஏற்ப பரிகாரங்களையும் கூறி வழி நடந்தும் குல குரு போன்றவர்.
அனைவருக்கும் வணக்கம் கூறி அமர்ந்தவர், ” சொல்லுங்க ராஜன்” என்றார் மோகனை நோக்கி…
மகனின் விசயத்தை கூறாமல், வைஷாலிய அழைத்து, அவரிடம் ஆசி பெற சொன்னார். அவளும் அவ்வாறே செய்ய, ” தீர்க்க சுமங்கலி பவ” ஆசிர்வதித்தார் வைஷூவை.
“இந்த பெண் தான் என் மருமகள் ஆலவரே.. கல்யாணம் தேதி குறிச்சி கொடுங்க.. அடுத்து உள்ள தேதியா இருந்தா ரொம்ப சௌகரியம்” என்றார் மோகன்.
வைஷூவையும் தேவாவையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவர், கண்களை மூடி தியானித்து, தன் விரல்களால் சிறிது கணக்கீடு செய்தவர், ” புதன் கிழமை நாள் ரொம்ப அருமையா இருக்கு.. அன்னைக்கே செய்திடலாம் ” என்றார்.
மோகன் ஒற்று கொண்டு தகுந்த மரியாதையோடு அவரை அனுப்பி வைத்தார்.
பின் தம்பியை நோக்கி, ” இன்னும் இரண்டு நாளு தான் இருக்கு மனோ” அவருக்கான வேலையை அவருக்கு பிரித்து கொடுக்க.. அவரும் முழு வீச்சில் இறங்கினார்.
மகனை திரும்பி பார்க்க, அவன் ஃபோனில் தலையை நுழைத்துப படி…
இடது வலமாக தன் தலையை அசைத்து கொண்டு, தன் மனைவியை பார்த்து, ” தமா.. நீ சம்மந்திக்கு போன் செய்து, அவங்க கிட்ட எல்லா விசயத்தையும் பகிர்ந்துக் கோ”
“நானும் நமசிவாயம் பெரியவர் கிட்ட எல்லாத்தையும் போன் பேசி சொல்லிவிடுறேன் சரியா” என்றார்.
“மறந்துட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல புடவை கடையில் இருந்தும் நகை கடையில் இருந்து ஆளுங்க வந்துருவாங்க.. தேவையானதெல்லாம் பார்த்து நீயே எடுத்துக்கோ.. ரூபா , நீயும் தமா கூட இருந்து உதவி செய்” என்றுவிட்டு கையில் போனுடன் வெளியில் சென்றுவிட்டார்.
தேவாவும் யாருக்கு வந்த விருந்தோ என்று போனிலேயே இருந்தவன் பின் எழுந்து டைனிங் டேபிள் நோக்கி சென்று விட்டான்.
காலை டிஃபன் முடித்தவன் பொதுவான ஒரு தலை அசைப்புடன் தன் லம்பார்கினி உயிர்ப்பித்துக் கொண்டு தன் கம்பெனி நோக்கி சென்று விட்டான்.
தமயந்தி திருமண நாள் குறிப்பது பற்றியும் புடவை நகைகள் எடுப்பது பற்றியும் சபர்மதி இடம் போனில் கலந்து ஆலோசித்தார். மேலும் வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பும் விடுத்தார்.
” இல்லம்மா வேணாம் உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதையே நீங்க செய்யுங்க..” என்று கத்தரித்து விட்டார்.
தங்களை கலந்து கொள்ளாமல் மகள் செய்த செயல், அவருக்கு நெஞ்சில் கோபம் கனன்று கொண்டே தான் இருந்தது.
” மதி நீ இப்படி இருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.. நடக்கப் போறது அவங்க பையன் கல்யாணம் மட்டும் இல்ல நம்ம வீட்டு பொண்ணு கல்யாணமும் தான். இப்பதான் மோகனராஜன் எங்கிட்ட பேசினாரு.. தேதி குறித்தது எல்லாம் அவர் என்கிட்ட சொன்னார்.. நம்மகிட்ட மாற்றுக் கருத்து ஏதும் இருக்கான்னும் கேட்டார்”
” எனக்கு என்னமோ அவங்க அவ்வளவு மோசமான குடும்பமா ஒன்னும் தெரியல மதி” என்றார் நமசிவாயம்.
ஆனால் சபர்மதி இடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவரும் தோள்களை குலுக்கி கொண்டு சென்றுவிட்டார்.
தமயந்தி பம்பரமாக தான் சுழன்றார் என்று சொல்லவேண்டும். புடவைகள் வந்து குமிய.. வைஷாலி எந்த சிரத்தையும் இல்லாமல் அமைதியாக கைகட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள்.
தமா கேட்கும் கேள்விக்கு கூட சரியாக பதில் சொல்லவும் இல்லை.. சரி என்று மட்டுமே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்தே மனதைப் படித்த அந்த புது மாமியார், மகள் துணையுடனே அவளுக்கு வேண்டிய பட்டுப்புடவைகள், நகைகள் என்று கல்யாணத்திற்கு தேவையானவற்றை தேர்வு செய்தார்.
ரூபாவதி எதையும் கண்டுகொள்ளாமல் வெறும் பார்வையாளர் மட்டுமே…
இது எல்லாம் ஒரு வித பொறாமையுடனும் எரிச்சலுடனும் ரூபாவதி பார்த்துக்கொண்டிருந்தார்.
தமயந்தி அவருக்கும் கல்யாணத்திற்கு என்று ஐந்து பட்டு புடவைகளை எடுத்து கொடுத்திருந்தார்.
ஆனால் ரூபாவதி மனதில் அப்போது ஓடிக்கொண்டிருந்தது வேறு ஒரு விஷயம்..
அது என்னவென்றால் வாணிஸ் குடும்பப் பெண்ணை தன் இரு பேரன்களுக்கும் கட்டவேண்டும் என்று ராஜராஜன் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது தேவாவின் கல்யாண வைஷாலியோடு என்றால்.. அப்போது தன் மகனின் கல்யாணம் அந்த பெண்ணுடன் நடக்குமா ?? நடக்காதா ?? என்ற பதைபதைப்பு ஒருபுறம்….
அப்படி நடந்தால் இவர்களைக் காட்டிலும் நாம் ஒரு படி மேலே முன்னேறி விடலாம் என்ற பேராசை மறுபுறம்…. சுயநலத்தின் மறு உருவாய் ரூபாவதி…
திருமணத்திற்கு இரண்டு நாட்களே என்பதால் மனோகர் ரூபாவதி இருவரையும் அங்கேயே தங்க சொல்லியிருந்தனர் மோகன் தமயந்தி தம்பதியினர்.
கிடைத்த தனிமையில் தன் சந்தேகத்தைக் கேட்டார் ரூபாவதி கணவனிடம்..
” எனக்கு வர கோவத்துக்கு… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. இங்க என்ன பிரச்சனை நடந்து இருக்கு.. இப்போ போய் நீ உன் பையன் கல்யாணத்தை பத்தி பேசுற “
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்”
“எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமே நீயும் உன் பிள்ளையும் தான்.. இந்த விஷயம் இது வரைக்கும் எங்க அண்ணனுக்கு தெரியல.. தெரிஞ்சது அவரை பத்தி ஏற்கனவே உனக்கு தெரியும் ஞாபகத்தில் வச்சுக்கோ ”
“ஹூக்கும்..” என்று நொடித்துக்கொண்டு தன் கட்டையை நீட்டி விட்டார் ரூபாவதி…
” இவள சமாளிச்சாச்சு, நந்தா ஈரோப் போய்விட்டான், வரப்போறப்ப அவனை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே? இன்னும் என்னென்ன ஏழரை அவன் கூட்டுவானோ?? ” என்று புலம்பியவாறு இருந்தார் மனோகர்.
திருமணத்திற்காக என்று எடுத்த பட்டுப் புடவைகளையும் நகைகளையும் பத்திரமாக தங்கள் கப் போர்டில் வைத்து பூட்டிய தமயந்தி இன்டர்காமில் மிருவை அழைத்து வைஷாலியை உடன் கீழே இறங்கி வர சொன்னார்.
வந்தவர்கள் கையில் ஒரு கேட்லாக் கொடுத்தவர்,” இதில் உனக்கு தேவையான சில சிட்ச்சிடு சுடிதார்ஸ், பார்டி சாரீஸ், நைட் வீயர்ஸ் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் இவங்க கிட்டட நல்லா இருக்கும். நான் மிருவுக்கு இங்க தான் எடுப்பேன். இதுல உனக்கு பார்த்து புடிச்சது, செலக்ட் பண்ணு அவங்களிடம் சொல்லிவிடலாம். இரண்டு நாளுல கொடுத்திடுவாங்க..”
மீண்டும் வைஷாலி மௌனம் சாதிக்க..
” அம்மா விடுங்க.. எல்லாமே நீங்களே எடுத்து கொடுத்தா எப்படி? எங்க அண்ணணுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க” என்று கூறி கண்ணடித்தாள் மிரு.
” போடி.. வாலு” என்று சிரித்து விட்டு சென்றார் தமயந்தி..
சிறுவயது முதலே தனித்து வளர்ந்ததால் என்னவோ மிருவின் இந்த சிறுசிறு குழந்தைத்தனமான பேச்சுகளும், குறும்பு செயல்களும் , மென்மையான அணுகுமுறையும் வைஷாலிக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.
‘அன்று இரவு உணவுக்குப் பின் காரிடரில் நடக்க கால் வைத்த வைஷாலி பின்பு எடுத்துவிட்டாள். இன்னைக்கு அந்த வளர்ந்து கெட்டவன் வந்தா நாம என்ன பண்றது.. தேவையில்லாம ஏதாவது பேசுவான், நாம திரும்ப பேசுற மாதிரி இருக்கும்.. இது தேவையா வைஷூ உனக்கு’ என்று திரும்ப போய் படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை.
காலை முதல் உடற்பயிற்சி, ஆசனம், நடன பயிற்சி , காலேஜ் , மாணவர்கள் என்று சுறுசுறுப்பாக இருந்த வைஷூவுக்கு இங்கே கூண்டுக்குள் அடைபட்டது போன்ற உணர்வை தந்தது.
சிறிது நேரமாவது வெளிக்காற்றை சுவாசித்தால் தான் நார்மலாக முடியும் என்று நினைத்தவள், அதற்கு மேலும் தாமதிக்காமல் தான் போட்டிருந்த நைட் ட்ரஸ் மேலே ஒரு ஷாலை போர்த்திக் கொண்டு மொட்டை மாடியை நோக்கி நடந்து சென்றாள் ஷோ.
மொட்டை மாடிக்கு வந்தவள் வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்தை அப்போது தான் பார்த்தாள். மிக அழகாக நேர்த்தியாக பேணப்பட்டிருந்தது..
பிறைநிலா, ஏகாந்தமான இரவு, சிலுசிலுவென்று அடித்த காற்று அவள் மேனியை தழுவிச் செல்ல.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அந்த இனிய நேரத்தை அனுபவித்தாள் வைஷாலி.
சிறு விஷயத்தையும் ரசித்து செய்பவள் வைஷாலி. நல்ல வேலை இன்னிக்கு இங்கே வந்தோம்.. இல்லை என்றால் இந்த அழகான ஒரு தருணத்தை இழந்திருப்போம், என்று நினைத்துக்கொண்டே அங்கே நடை பயின்றுக் கொண்டிருந்தாள். அவளது இந்து ஏகாந்த தனிமை இன்னும் சிறிது நேரத்தில் கலைய போவது தெரியாமல்…
“கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு இங்கே வந்தா.. இங்கேயும் நீ தானா ?? ” திடீரென்று அருகில் கேட்ட குரலில் தூக்கி வாரிப் போட நிமிர்ந்து பார்த்தாள் வைஷூ…
மாடி வாசலில் தன் இரு கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு, ஷாட்ஸ் டீசர்ட் சகிதமாய் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
முதலில் திடுக்கிட்டு போனாலும் பின் தன்னை சமாளித்துக் கொண்டு..
“உங்களால தான் எல்லார் நிம்மதியும் கெட்டு போகும்.. என்ன அதிசயம் உங்களுக்கு நிம்மதி இல்லைன்னு சொல்றீங்க” என்றாள் அலட்சியமாய்..
” என் நிம்மதி மொத்தமா போனதுக்கு காரணம் நீதான்.. ” என்றான் கோபமாக..
” எங்க உங்க மனச தொட்டு சொல்லு.. உங்க நிம்மதி பறிபோனது காரணம் நானா இல்ல நீங்களே தான் ” … என்று பதிலுக்கு எகிற…
” எல்லா பிரச்சனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது நீதான்.. என்றான் தன் தப்பை மறைத்து முழு பழியையும் அவள் மீது போட்டு..
” பிள்ளையார் சுழி என் கிட்ட இருந்தா? இல்ல உங்கள் வீட்டில் இருந்தா ? என்றாள் அலட்டிக்கொள்ளாமல்…
” என்ன நீ நெனச்சது எல்லாம் நடந்து கிட்டு என்கிற ஆணவத்துல பேசுறியா டி ” என்றான் தீர்க்கமான குரலில்…
பின் அவளை நெருங்கி நின்று ” இந்த தேவா இதுவரைக்கும் யார் கிட்டயும் தோத்து பழக்கமில்லை.. அதுவும் உன்கிட்ட நேவர் ” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்..
” நான் எதுக்கு உங்களை தோற்க அடிக்க நினைக்கனும் ?? அதுக்கு என்ன அவசியம் இருக்கு.. நான் என் வழியில் போயிட்டு இருந்தேன்.. இடையில மறித்து, உங்க வழியில் குறுக்கே வர வைச்சது நீங்கதான்… அப்போ நீங்க தான் அனுபவிக்கனும் ” என்றாள் அவனுக்கு சளைக்காமல்…
” இந்தத் திமிர் பேச்சு தான்டி.. இது எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் குறைக்கிறேனா.. இல்லையான்னு பாரு.. என்றான் சவாலாய்…
” இதுக்குப் பேரு திமிர் இல்லை.. தன்னம்பிக்கை.. அது என் கூடவே வளர்ந்தது.. முடிஞ்சா செய்து பாருங்க” என்றால் நிமிர்வாய்…
“பாரு.. பார்க்கத்தானே போற..” என்றான் சற்றும் திமிர் குறையாதவனாய்…
இம்முறை அவனுக்கு பதில் பேசவில்லை அவள் அவனை உறுத்துப் பார்த்தாள்.
அவனும் பதில் பார்வை பார்க்க , அந்த பழுப்பு பாவை அவனை ஆழி என உள்ளே இழுத்தது..
சிறிது நேரம் கூட அவனால் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன் தலையை திருப்பி கொண்டான்.
அவனை பார்த்துக்கொண்டே அவள் மாடி இறங்கி கீழே சென்று விட்டாள்.
“ஸ்ப்ப்பா… என்ன கண்ணுடா அது.. நம்மை இப்படி இழுக்குது அதுக்குள்ள.. இனி அவ கண்ண பாத்து நாம பேசவே கூடாது “
கீழே இறங்கி சென்று கொண்டிருந்தவளும் அவனைத்தான் நினைத்துக்கொண்டே சென்றாள் கோபமாக.. ‘ மூஞ்ச பாரு மூஞ்ச எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன மங்கீ மாதிரியே வச்சிருக்கான்.. இனி அவன் மூஞ்சியை பார்த்து பேசக்கூடாது.. கடுப்பு கடுப்புஸ்ஸா வருது ‘ என்றவாறே தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
நிலவு மகள் இவர்களின் இந்த பேச்சு வார்த்தையை பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டாள்… இன்று பழித்துப் பேசும் இந்த வாய்கள் தான்.. பிற்காலத்தில் காதலுடன் பேச போவதாய் நினைத்து.. அன்றும் உங்களுக்கு நான் தான் சாட்சியாக இருப்பேன் என்றாள்…
மறுநாள் காலையில் பூஜைக்கு வர வேண்டும் என்று தமயந்தி கூறி இருந்ததால், அவசவசரமாக குளித்து கிளம்பி சென்றாள் வைஷாலி.
இன்று வீடு அமைதியாக இருக்க, என்னவாக இருக்கும்.. ஸ்ட்ரெஸ் பஸ்டர் பாட்டு அலறல.. காது தப்பித்தது எண்ணியவாரே கீழே சென்றாள்.
அவள் எங்கே அறிய போகிறாள்… நேற்று இரவு முழுவதும் அந்த பழுப்பு நிற பாவையின் வீச்சினால், அங்கே ஒருத்தன் தூக்கம் இன்றி தவித்து, அதிகாலை தான் தூங்கினான் என்று..
பொன் கலந்த அழகிய, அதிக சரிகை இல்லாத மென்பட்டில் பாவை விளக்கு போல மின்னினாள் வைசாலி. அதற்கு கான்ட்ராஸ்ட் ஆக பிங்க் கலரில் குட்டை கைளுடன் அழகிய ப்ளவுஸ் அணிந்து இருந்தாள். மெலிதான அலங்காரமும் சிறுசிறு நகைகள் மட்டுமே.. அதுவே அவளை கொள்ளை அழகுடன் காட்டியது.
பூஜை அறையில் இருந்த தமயந்தி அவளை சிரிப்புடன் வரவேற்று பூஜை தொடங்கினார்.
பின் அனைவரும் வந்து கலந்து கொள்ள, பல ஃபோன் கால்கள் பிறகு தேவாவும் கிளம்பி வந்திருந்தான்.
கையில் தீப தட்டுடன் வந்த வைஷாலி தான் அவன் கண்களுக்கு முதலில் தெரிந்தாள். தீப ஒளி அவள் மேனியில் பட்டு, இன்னும் ஜொலிக்க.. அவனை மறந்து அவளை பார்த்தவன்..
” ச்ச்சா.. நல்ல பாம்பு கூட தான் அழகு.. இவளும் அதை போல தான்.. ” என்று நினைத்தவாறு நின்றான். மறந்தும் அவள் கண்களை பார்க்க துணியவில்லை.
அவனருகில் அவள் வந்ததும், ” இப்போ எதுக்கு இவ்வளோ அலங்காரம்.. அடுத்து என்னை மயக்கவா??? ” என்றான் பல்லை கடித்து கொண்டு..
” உங்களை மயக்கி, நான் என்ன செய்ய போறேன்? ” என்று அவள் உதடு சுழிக்க…
” மயக்கி… கல்.. ” இடையில் நிறுத்தி விட்டான். அதான் கல்யாணமே நடக்க போகிறதே, வேற என்ன சொல்ல தெரியாமல்..
” அப்பாடி.. ஒரு வழியா புருஞ்சிடுச்சு போல..” என்றாள் கீழ் உதட்டில் நெளியும் புன்னகையுடன்…
அவளின் அந்த சிரிப்பு அவனை மீண்டும்
சீண்டுவதாய்..
திரும்பி செல்ல முனைந்தவளை, கை பற்றி நிறுத்தியவன், ” இன்னொரு முறை.. இந்த மாதிரி சிரிச்ச… அப்புறம் அடுத்த முறை சிரிக்க இந்த உதடு இருக்காது..”
அவனை பார்த்து முறைத்து விட்டு, பற்றிய முழங்கையை விடுவிக்க முயன்றாள், ” உதடு எனக்கு மட்டும் தான் இருக்கா?” என்று கேட்டவளை அவன் அதிர்ந்து பார்க்க.. தன் கையை விடுவித்து கொண்டு சென்று விட்டாள்.
இப்போது குழம்பிய நிலையில் தேவா!!! எதுக்கு அப்படி சொன்னா???
கர்வம் வளரும்..
Super sis
Happa epadi sanda podranga.😇.. nice episode sis 👌
Lovely epi