11
தேவேஷ்வர ராஜன் வெட்ஸ்
வைஷாலி தேவி..
என்ற பெயர்கள் மலர்களால் வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு அவர்களின் பாரம்பரிய ஸ்தலம், இப்போது விழாக்கோலம் பூண்டு இருந்தது அவர்களின் மாளிகை மட்டுமல்ல ஊரே..
அம்மாளிகையின் இளைய ராஜா என்றும் இளவரசன் என்றும் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற தேவேஸ்வர ராஜனுக்கு திருமண வைபவம்.. பின் கொண்டாட்டத்திற்கு என்ன குறைச்சல்!!!
இரண்டு நாட்களில் திருமணம் என்கிற நிலையில் மண்டபம் பிடிப்பது, சொந்த பந்தங்கள், அவர்கள் தொழில் வட்டார நண்பர்கள் எல்லாம் பெரிய கூட்டம்.. அனைவரையும் அழைக்க முடியா நிலை. எனவே கல்யாணம் அவர்கள் பரம்பரை மாளிகையில் வைத்து மிக நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருந்தனர்.
பின் கோவையில் பெரிய அளவில் ரிசப்ஷன் வைத்து கொள்ளலாம், அப்போது அனைவரையும் அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்டது என்பதை விட எடுத்தார் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
ஆம், அனைத்தும் மோகன ராஜன் மட்டுமே, மனோகர் அண்ணன் சொல்லுவைதை தட்டாத லட்சுமணனாய்.. தேவாவோ எதையும் கண்டுகொள்ளாமல்…
அன்று காலையிலே திருமண ஆடைகள் நகைகள் திருமாங்கல்யம் வைத்து பூஜை முடித்து இருந்தார் தமயந்தி, வைஷாலியை வைத்து கொண்டு.. அப்போது நடந்த அந்த உரையாடலில் தான் வைஷாலி சொன்ன உதட்டை பற்றியே சிந்திந்து கொண்டிருந்தான் தேவா.
வைஷாலியின் விழிகள் தேவாவை பார்த்துக் கொண்டே கடக்க, அவள் கடந்து செல்லும் வரை அவன் கூர் விழிகளும் அவளிடமே லயத்திருந்தன.. அந்த விழிகளில் கோபமும் ஏளனமும் கலந்து வெளிப்பட்டாலும் உள்ளுக்குள் அவள் மீது உண்டான ஏதோ ஒரு ஈர்ப்பு விசையை தேவா உணரவில்லை.
தான் யார் அவள் யார் என்பது எல்லாம் நியாபகத்தில் இல்லை. கண்கள் ஃபோனில் இருந்தாலும் கருத்தில் இல்லை..
சிறிது நேரத்திற்கு பிறகு உணர்வுக்கு வந்தவன்.. ” நம்மை குழப்பி விட்டு போய்ட்டா.. இருக்குடி இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு ” தான் அமர்ந்திருந்த சோபாவில் கையை மடக்கி ஒரு குத்து குத்தி விட்டு எழுந்து தன் தளத்தை நோக்கி சென்று விட்டான்.
தேவாவின் மனத்தை குழம்பி விட்டதை அறியா வைஷாலியோ அங்கே மிருவிடம் பேசி கொண்டு இருந்தாள், ஆனால் அவள் மனமோ அன்னை மற்றும் தாத்தா வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி கொண்டிருந்தது.
இங்கே வந்த இரண்டு நாட்களில் இருநூறு முறை அழைத்து பார்த்து விட்டாள் அன்னைக்கு, அவர் எடுத்த பாடு தான் இல்லை. மன அழுத்தம் மிக தாத்தாவை அழைத்து அழுக, தைரியமாக அனைத்தையும் எதிர் கொண்ட பேத்தி அழுவது அவருக்கு பொறுக்கவில்லை.
” அழாதே டாம்மா.. அம்மாவுக்கு உன் மேல சின்ன வருத்தம்.. அவ்வளவு தான். நான் எப்படியும் கூட்டிட்டு வந்திடுவேன். நீ கவலை படாத டா தேவிம்மா” என்று ஆறுதல் படுத்தி இருந்தார்.
பின் மதிய உணவை முடித்து கொள்ள, இவர்களுக்கான டெம்போ வேன் வந்து சேர்ந்தது ஈரோடு செல்ல..
அனைவருக்கும் ஒரு வழி என்றால்.. எப்போதும் தேவாவிற்கு வேற தனி வழி தான். அனைவரும் அந்த வேனில் ஏறி கொள்ள, இவன் மட்டும் தன் லம்போர்கினியில் வருவதாய் சொல்லிவிட்டு அதில் ஏறி கொண்டான்.
தமயந்தி தன் கணவனை நோக்க, அவர் விழி மொழி அறிந்து, அவரும் அவனுடன் ஏறி கொண்டார். தேவா அவரை அழுத்தமாக பார்க்க, ” ஏறு.. ஏறு.. கல்யாணத்தை பக்கத்தில் வச்சு கிட்டு உன்னை நம்ப முடியாது.. நீ என்ன வேணாலும் செய்வ”
” அப்பா… ” என்று அவன் பல்லை கடித்து அவரை மீண்டும் முறைக்க, ” டேய்.. சும்மா என்னை சைட் அடிக்காத.. உனக்கு பொண்டாட்டியா வரவளை அடி” என்று அவன் முறைப்புக்கு ஒரு ஷெட் வைத்து விட்டு காரில் ஏறி கொண்டார்.
ஒரு வழியாக, மொத்த குடும்பமும் கிளம்பி ஈரோடை நோக்கி சென்றது..
இக்குறுகிய நேரத்திலும் மிக அழகாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அப்பாரம்பரிய மாளிகை. வண்ண வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும்.. விதவிதமான பூக்களை கொண்டு அலங்கரித்து, அக்காலத்தில் உள்ளது போன்ற பிரம்மையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்கள்.
இன்றைய காலத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை எல்லாம் தன் கம்பீரத்தாலும் அழகாலும் முழுங்கி விட்டிருந்தது மாளிகை.
மனதில் தோன்றிய வியப்பை முகத்தில் காட்டாதவாறு மிக நிதானமாகவே வேனிலிருந்து நடந்து வந்தாள் வைஷாலி.
நெருங்கிய உறவினர்களாலும் அப்பகுதியைச் சேர்ந்த இவர்களின் விசுவாச குடிகளாலும் அம்மாளிகை நிரம்பி வழிந்தது.
வைஷாலிக்கு உள் மனதில் அன்னையும் தாத்தாவும் வராத எண்ணமே சுழன்று கொண்டிருந்ததால் , இவை எதையும் கண்டுகொள்ள வில்லை.
வைஷாலியை ஆலம் கரைத்து உள்ளே அழைத்து சென்றார்கள். அவள் பதுமையாக அவர்கள் உடனே சென்றாள்.
இரவு உணவு அவளுக்கு ருசிக்கவில்லை.. பேருக்கு கொறித்து விட்டு எழுந்து சென்று விட்டாள், பின்னாடியே மிருவும் அவளை தொடர்ந்தாள்.
இவர்கள் வந்து வெகு நேரம் கழித்தே வந்து சேர்ந்தார்கள் தேவாவும் மோகனும்.. வண்டிக்கு வலிக்குமோ, ரோட்டுக்கு வலிக்குமோ என்று ஓட்டிய மகனை முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.
அவனுக்கும் ஆலம் சுற்ற.. வாட்ஸ் திஸ் நான்சென்ஸ் என்று தான் அவனின் பார்வை..
தன் விறு விறு நடையுடன் உள்ளே சென்று விட்டான். தமயந்தி கணவனை ‘ ஏன் இவ்வளவு லேட் என்று கண்களாலேயே எரிக்க..” எல்லாம் உன் மகனின் மகிமை தமா.. பசிக்குது டி” என்று அவர் பாவம் போல கூற, வாங்க.. என்றார் சிரிப்புடன்.
அப்பா.. தப்பிசேன் என்றவாறே உள்ளே சென்றார் மோகன்.
போனை கையில் வைத்து கொண்டே அலைந்து கொண்டு இருந்தாள் வைஷாலி. அவளை பார்த்த வண்ணமே கன்னங்களை இரு கையில் தாங்கி அமர்ந்து இருந்தாள் மிரு.
” என்ன அண்ணி.. போனையே சைட் அடிக்கிறீங்க,?” என கூறி கண்ணடித்தாள்.
” ம்ப்ச்.. எங்க தாத்தா அம்மா கிளம்பிட்டாங்களா தெரியல.. அதான் போனையே பார்த்துகிட்டு இருக்கேன்”
” கவலை படாதீங்க அண்ணி.. அப்பா அவங்ககளை அழைத்து வர கார் அனுப்பி இருக்காங்க.. கண்டிப்பா வந்திடுவாங்க” என்று ஆறுதல் அளித்தாள்.
“ம்ம்… நானும் அதையே தான் எதிர் பார்க்கிறேன்.. ஆனா இங்கே சரியா டவர் கிடைக்கல.. ”
” நீங்க.. மாடிக்கு போய் பாருங்க அண்ணி “
” இதோ..” என்று விரைந்து விட்டாள் மாடிக்கு..
போனை முன்னால் நீட்டி கொண்டே அவள் சென்று கொண்டே பார்க்க.. டவர் ஒரு கோடு.. இரண்டு கோடு என்று மாற்றி மாற்றி காட்டி அவளை சோதித்தது .
இவளும் அந்த மூன்று அடுக்கு மாடியின் உச்சிக்கே வந்து விட்டாள்.. ஆனால் டவர் ஆட்டம் காட்டியது.. ‘ முதல இந்த நெட்வொர்க் மாத்தனும்.. ‘ என்று அருகில் இருந்த ஏணியில் ஏறி விட்டாள். அதன் பிறகே அது மொட்டைமாடியில் உள்ள தண்ணீர் தொட்டி என்று அறிய… ” ஐயோ வைஷூ.. உனக்கு இவ்வளவு ஆர்வ கோளாறு இருக்க கூடாது.. ஸ்ப்ப்பா… என்னா ஹைட்.. கீழே விழுந்தா ஒரு எலும்பும் கூட முழுசா கிடைக்காது போல” பயந்தவாறு கூறி, அருகில் இருந்த சலாப்பில் அமர்ந்து கொண்டாள்.
அங்கு ஓரளவு டவர் கிடைக்க, தாத்தாவுக்கு அழைக்க, ” தேவிம்மா.. நாங்க கிளம்பிட்டோம் டா.. வந்து கிட்டே இருக்கோம்”
” சரி.. தாத்தா..” என்று ஃபோனை அனைத்து விட்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.
எப்படி இறங்க என்று யோசித்து கொண்டே, கால்களை ஆட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள் வைஷாலி.
அந்நேரம் பார்த்து தேவா ஃபோன் பேச அங்கே வர, மேலே ஆடிய இரு கால்கள கண்டு ஒரு கணம் பயந்து பின் வாங்கி விட்டான்.
” ச்ச்சச… இது உண்மை பிசாசு இல்லை.. அதுக்கு தான் கால் இருக்காதே.. இது ஏதோ குரூப் ல டூப்” தனக்குள் கூறி இல்லையில்லை தன்னை கொஞ்சம் தேற்றி கொண்டே மெதுவாக அவன் அண்ணார்ந்து பார்க்க…
அங்கே இருந்தவளை பார்த்து அவனுக்கு பயம் போய் கோபம் வந்தது.. ” ஏய் மோகினி பிசாசு.. இங்க என்னடி பண்ற” என்றான் எரிச்சலாக… அவனின் கத்தலில் அவளுக்கு திக் என்று ஆக.. “ஆஹ்ஹ ” என்று அலறினாள்.
அவளின் அலறலில் அவ்வளவு நேரம் இருந்த திடம் ஓட, சுற்றிலும் இருந்த இருளில் அவனுக்குமே கொஞ்சம் திக் என்று ஆனது.
மெதுவாக கீழே குனிந்து பார்க்க, தான் கண்டு கத்தியது பேய் இல்லை, பேய் பூதம் எல்லாவற்றையும் விட ரொம்ப மோசமானவன்.. என்பது அறிய இவனிடமா வந்து மாட்டனும்? என்று புலம்பினாள்.
இவள் பீதியில் மிரண்டு போய் பார்க்க, அவனோ அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். சிரித்தவனை பார்க்க பார்க்க அவள் கண்களில் அனல் அடித்தது.
அவளின் முக பாவனைகளை பார்த்து இன்னும் பீறிட்ட சிரிப்பை அடக்கியவன், தன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு அவளை பார்த்து, “ஏய் மோகினி பிசாசு.. எதுக்கு டி அங்க போய் உட்கார்ந்து இருக்க ?” என்று கேட்க..
” ம்ம்… இங்கே இருந்து பார்த்தால் நிலா ரொம்ப பக்கத்துல தெரியுது.. அதான்.. அதை பிடிக்கலாம்ன்னு வந்தேன்.. ஆமா நீங்க ஏன் வந்தீங்க?” என்று கூற..
” நீ பிடிக்கிற நிலாவை கூறு போட்டு விக்கலாம்ன்னு வந்தேன்.. ” என்றான் கிண்டலாக..
” போடுவீங்க.. போடுவீங்க.. எதுக்கு அப்படி பேய் மாதிரி சிரிச்சீங்க.. நான் பயந்து போய்ட்டேன்..” என்றாள் சிறு படபடப்புடன்..
” யாரு பேய்.. நீ தான் பேய் மாதிரி நட்டு நடு ராத்தரியில் .. காலை தொங்கவிட்டு கொண்டு, விட்டலாச்சாரியா படத்தில் வர பிசாசு மாதிரி உட்கார்ந்து இருக்க.. அதே வையிட் பேண்ட்.. மோகினி பிசாசு தான்டி நீ “
” போய்யா.. போ ” என்று உதடு சுழிக்க..
” ஏய்… அங்க உட்கார்ந்து என்ன தனியா புலம்புற.. கீழே இறங்கி வா” என்றான் தேவா கடுப்பாக..
” எனக்கு இறங்க தெரியும்.. நீங்க போங்க” என்றாள் பேஸ்மெண்ட் வீக், பில்டிங் ஸ்ட்ராங் என்பதாய்…
” எங்க போக.. அதான் கமீட் ஆகிட்டேனே ” என்றான் அப்பட்டமான எரிச்சலில்..
” ஒன்னும் வேண்டாம்.. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல.. ஸ்டேட்டஸ் ஐ கமிட்மென்ட் இருந்து சிங்கிள் ஆ மாத்திடுங்க ” என்றாள்.
” அந்த ஆணி எங்களுக்கு தெரியும்.. நீ இறங்கு” என்றான் அழுத்தமாக..
” நீங்க போங்க.. ” என்றாள் கெஞ்சுதலாக..
கெஞ்சுறாளா.. இவளா…. அப்போ எதும் பிளான் பண்ணி இருப்பாளோ.. என்று எண்ணியவாறு அவளை உற்று பார்க்க..
ஏறும் போது எதை பற்றியும் கவனத்தில் கொள்ளாமல், போனை பார்த்தவாறு ஏறிவிட்டாள்.. ஆனால் இப்போது எப்படி இறங்க… இவன் வேற போக மாட்டேங்கிறானே… தன் நகத்தை கடித்தவாறு அமர்ந்திருக்க..
அவளின் முக பாவனையிலே அவளை கண்டு கொண்டான் தேவா.. பார்ட்டிக்கு ஹைட்ன்னா பயம் போல.. மாட்டுனடி என்று இதழுக்குள் சிரிப்பை அடக்கினான்.
” இங்க பாரு.. இது பழைய காலத்து மாளிகை.. நீ அங்கேயே உட்கார்ந்து இருந்தே.. பல்லி, கரப்பான், வண்டுனு சின்ன சின்ன உயிரியல் எல்லாம் வராது.. பாம்பு.. தேள்.. நட்டுவா கிளின்னு எல்லாம் பெருசு பெருசா தான் வரும்.. அப்புறம் உன் இஷ்டம்.. அதுங்க கூடவே நீ குடித்தனம் நடத்து.. மீ க்ரேட் எஸ்கேப் ” என்று அவன் பயமுறுத்தி சிரிக்க..
சுற்றும் முற்றும் பார்த்தவள், இவ்வளவு நேரம் ரம்மியமாக காட்சி அளித்த இடம், அவன் சொன்ன பிறகு பயங்ரமாக காட்சி அளித்தது..
” நோ.. வைஷூ அவன் உன்னை பயமுறுத்துறான்.. இதுக்கு எல்லாம் பயப்பட கூடாது.. இவன் வாய் பேச்சுலே எவ்வளவு பால் போட்டாலும் .. நாம எல்லாத்தையும் க்ளீன் போல்டு ஆக்கிடனும்.. பீ ஸ்டெடி.. பீ ஸ்ட்ராங்..” தனுக்குள் கூறிக்கொண்டு அவனை பார்க்காமல் திரும்பி உட்கார..
” சோ.. யூ டோண்ட் பிலிவ் மீ.. இட்ஸ் ஓகே.. நானும் இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்டுவேன்.. நீ மட்டும் இங்க இரு.. காலையில் பொண்ணை காணும் எல்லோரும் தேடுவாங்க.. நீ எஸ்கேப் ஆகிட்டேன் சொல்லி.. நானும் எஸ்கேப் ஆகிடுறேன்” என்றவன், மாடி ஓரம் ஒரு காலை ஊன்றி, மறு காலால் உந்தி மாடி திட்டில் உட்கார்ந்து கொண்டான்.
இப்போ இறங்கலைன்னா இங்கேயே ஸ்டேட் பண்ணிடுவேன் போலவே.. என்று அவள் பீதி உடன், அவனை பார்க்க.. அவனோ ஃபோனில் தான் பிஸியாக இருந்தான்.
இவனும் போய்ட்டா.. நினைக்கவே பயமா இருக்க.. அதற்கு மேல் தேவா சொன்னது அவளை தாக்க.. மனதில் தைரியம் வரவழைத்து கொண்டு மெல்ல இறங்க முற்பட்டாள். ஏறும் போது இல்லாத பயமும் தடுமாற்றமும் இறங்கும் போதும் ஏன் ஏற்படுகிறது என்கிற லாஜிக் அவளுக்கு புரியவே இல்லை. மெது மெதுவாக ஒவ்வொரு படியாய் இறங்க ஏணி ஒரு ஆட்டம் ஆடி அவளின் தைரியத்தை ஆட்டம் காண வைத்தது.
ஏணியும் வைஷூவும் சேர்ந்து போட்ட ஆட்டம் அலறலில் போய் முடிந்து, கடைசியாக ஏணியே பயந்து இனி என்னால உன்னை தாங்க முடியாது போடி என்று அவளை தள்ளி விட, “அச்சோ செத்தேன்.. முருகா ” என்றவாறு கண்களை மூடி கொண்டு கீழே விழ தயாரானாள் வைஷூ.
” பிளீஸ் தேவா.. ஹெல்ப் ” என்றாள் அவன் மீது தான் கோபத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து..
சட்டென்று அந்தரத்தில் பறக்கும் உணர்வு ஏற்பட, கண்களை திறந்து பார்க்க இரு வலிய கைகள் அவளை அணைத்து இடையில் சற்று அழுத்தமாக பதிந்து இருக்க, சிறிது நேரம் அதிர்ச்சியில் இருந்தவள், பின் கோபம் கொண்டு அவன் கையில் இருந்து திமிற முயல, அதற்குள் அவளை இறக்கி முயன்றவன்,அவள் திமிறலில் அவளை லாவகமாக பிடிக்க முயன்று தோற்று இருவரும் கீழே விழ..
மெதுவாக கண்ணை திறந்தவள் பார்த்தது, தேவாவை மெத்தையென பாவித்து இவள் படுத்து இருந்ததை தான். பலவித உணர்வுகளின் பிடியில் தேவா அவஸ்தையுடன்..
சிக்ஸ் பேக் சிங்கத்தை சாய்த்தது சிறிய புள்ளி மான் ஒன்று..
” தேவா.. ” என்றாள் கோபமாக எழுந்த அடுத்த கணம்…
அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னையா? என்பது போல தன்னையே விரல் நீட்டி கேட்க.. ஆமாம் என்று அவள் தலை ஆட்டினாள்…
” சொல்லு..”
” எதுக்கு இப்போ இந்த ஹீரோ ஆக்சன் எல்லாம்.. இதனால் எல்லாம் என்னை இம்ப்ரஸ் பண்ண முடியாது.. ” என்று கடுப்பாக மொழிந்து விட்டு அவள் திரும்பி போக எத்தனிக்க..
அதற்குள் எழுந்தவன்.. அவளை பார்த்து..
” ஆமா.. ஜான்சி ராணி வாய் எல்லாம் என்கிட்ட மட்டும் தானா.. போனா போகுதுன்னு இறக்கி விட்டேன் பாரு.. ஹெல்ப் மீ கேட்ட வாய் எங்கடி இப்போ. என்னா வெயிட் டி நீ.. ஸ்ஸ்ப்ப்பா என் முதுகு போய்ச்சு.. நாளைக்கு கூன் முதுகோட தான் உனக்கு தாலி கட்ட போறேன்” என்றான் முதுகை தேய்த்து விட்டவாறு…
அவளுக்கு அவன் தன்னை சீண்டுகிறான் என்று புரிய.. ” ஏன் ஏன்.. என் தைரியத்துக்கு என்ன குறைச்சல் .. அப்புறம் நான் ஒன்னும் ரொம்ப வெயிட் இல்லை.. இது சிக்ஸ் பேக் இல்லை.. வெறும் கற்று அடைத்த பலூன்..” என்று வயிற்றை காட்டி சிரிக்க…
” யாரு டி.. பலூன்.. உன்னை எல்லாம் தூக்க வந்தேன் பாரு.. என்னை சொல்லணும், அப்படியே விட்டு இருக்கனும் ” என்றான் அவளை பார்த்து கோபமாக..
அவளுக்கு இன்னும் பொசு பொசுன்னு என்று கோபம் பொங்க அவனை பார்த்து , ” இட்ஸ் ஆல் ஃபேட்.. தாங்கித் தான் ஆகணும்” என்று ஒற்றை விரலை அவன் நெஞ்சில் கை வைத்து காட்ட..
அவளையும் விரலையும் மாறி மாறி பார்த்தவன், அவளை நெருங்கி ” இப்பவும் சொல்லுறேன்.. நீ இங்க இருந்து எஸ்கேப் ஆகிடு.. வீணா என்கிட்ட மாட்டிக்காதே.. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.. லாஸ்ட் சான்ஸ் ” என்று அவளை பார்த்து அழுத்தமாக கூறி விட்டு சென்று விட்டான்.
போகும் தேவாவையே பார்த்தவளின் கீழ் உதட்டில் சிறு கீற்றாய் ஒரு புன்னகை..
கர்வம் வளரும்
Super sis 💞
Super super sis
HIYqCdlGrnUx