ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 13

13

 

சூரிய கதிர்கள் தன் கூட்டை விட்டு வெளியே வர சோம்பலாக யோசிக்க, பூமியவள் தன்னவனை காண ஆவலுடன் காத்து இருந்தாள். வெகு நேரம் அவளை காக்க விடாமல், பகலவனும் தன் கதிர்களை விரித்து அவளை அரவணைத்து கொண்டான்.

 

நேற்று தந்த களைப்பில் சற்றே தூக்கத்தின் பிடியில் சிக்கி விட்ட தமயந்தி அவசரமாக எழுந்து வந்தார். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் திறன் பட வேலை வாங்கி.. வீடு என்னும் வண்டியினை லாவகமாக கொண்டு செல்லும் அச்சாணிகளே இல்லதரசிகள்‌ தான்.

 

என்ன தான் ரூபாவதி இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருந்த வரை அனைத்து மேற்பார்வை வேலைகளும் தமயந்தி தான். நடுத்தர வீடோ பெரிய மாளிகையோ வேலை செய்பவர் தான் செய்வர், மற்றவர்கள் பெரும்பாலும் பார்வையாளர்கள்.. இதில் தமயந்தி முதல் ரகம் என்றால் ரூபாவதி இரண்டாவது ரகம்.

 

இன்றும் அப்படியே அரக்க பரக்க ஓடி வர, அங்கே பூஜை அறையில் தலைக்கு குளித்து காட்டான் புடவையில் பளீர் என வெளிப்பட்ட அழகுடன், மங்கலகரமாக விளக்கு ஏற்றி கொண்டு இருந்த வைஷாலியை தான் பார்த்தார். இவ்வளவு நாளில் தன் பெண்ணிடம் கூட அவர் இதை எதிர் பார்க்கவில்லை. அதிலும் மருமகள்.. நேற்று தான் அவ்வளவு களேபரத்திலும் திருமணம் முடித்து வந்த புத்தம் புது மருமகள்.. சற்று வியந்து தான் பார்த்து கொண்டிருந்தார். இதுவரை நாற்பது பர்செண்ட் மட்டுமே அவரிடம் வாங்கி இருந்த வைஷூ, சட சட வென உயர்ந்து சென் பர்செண்ட் வாங்கி விட்டாள். நேற்று தன் கணவர் பரப்பி விட்ட, தன் மகனின் அந்த காதல் கதை நிஜமாக இருந்திருக்க கூடாதா.. என்று ஆசையே துளிர் விட்டது தமயந்தியிடம்.

 

 

பூஜை முடித்து வந்தவள், அத்தையிடம் தீபாராதனை காட்டி விட்டு, ஒரு மென் சிரிப்புடன் நகர்ந்து விட்டாள். அனாவசிய அலட்டல்கள் இல்லை அவளிடம்.

 

சபர்மதியும் நமச்சிவாயமும் கிளம்பி வர அவர்களைப் வைஷூ குழப்பமாய் பார்த்தாள்.

 

தமயந்தியை நெருங்கியவர்கள் , ” அப்புறம் நாங்க கிளம்புறோம் சம்பந்திம்மா.. ஒரு நல்ல நாளா பார்த்து பிள்ளைகளை மறு வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.. அதுக்கு முன்ன எங்களுக்கு தகவல் சொல்லிட்டா நாங்க ரெடியா இருந்துப்போம்” என்று நமச்சிவாயம் கூறினார்.

 

சபர்மதியும் அதற்கு ஆமோதிப்பாக தலையசைக்க வைஷூக்கு தான் ஒரு இனம்புரியாத கவலை.

 

தாயை நிமிர்ந்து பார்த்தது “அம்மா எங்க கூடவே போகலாம் இல்லையா ” என்று கண்களால் கெஞ்சினாள்.

 

“இல்லைடாம்மா அவசரத்துல கிளம்பி வந்தாச்சு நானும் லீவு சொல்லல ஹாஸ்பிடலுக்கு.. உனக்கிட்ட எல்லாரும் நல்லா தானே இருக்கிறார்கள்.. ” என்று மகளிடம் கூறிவிட்டு தமயந்தியை பார்க்க அவரும் ” கண்டிப்பா அண்ணி எனக்கு வைஷூ மிரு மாதிரி பொண்ணுதான் ” என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

 

சற்று பொறுங்கள் என்று கூறி தன் கணவனை எழுப்பி அழைத்து வர மோகனராஜன் தமயந்தியிடம் விடைபெற்றுக் கொண்டு , தன் மகளிடம் ” மாப்பிள்ளை ‌?” என் வினவ, “அவர் இன்னும் எழுந்திருக்கல மா” என்று வைஷூ கூற.. மோகன் ” நாங்கள் சொல்லிக்கிறோம் மா ” சொல்லவு திரும்ப அனைவரிடத்திலும் விடை பெற்று கிளம்பினார்கள்.

 

வைஷூவை பார்த்த தமயந்தி ” இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்று வாஞ்சையாக கூறி.. ” சாப்பிட நேரம் இருக்கு தானே பொறுமையா வாங்க.. ஒன்றும் அவசரமில்லை..” என்று அவர்கள் ரூமுக்கு அனுப்பி வைத்தார்.

 

அவர்கள் அறை சென்று பார்க்க அங்கே தேவா இல்லை. “எங்கே போனான் இவ்வளவு சீக்கிரம்.. இங்க ஸ்டிரஸ் பஸ்டர் ரூம் கூட இல்லையே.. ” என்று யோசித்தவாறே தலையை பிரித்து காய வைத்துக் கொண்டிருந்தாள். 

 

 

” என்ன டிபிக்கல் மருமகளாக காலையில் பூஜை எல்லாம் நடந்துச்சு போல..” என்று நக்கல் குரலில் திரும்பிப் பார்த்தாள் வைஷூ.

 

ட்ராக் சூட் பேண்டில் அப்போதுதான் தன் ஓட்டத்தை முடித்துவிட்டு வியர்வைத் துளிகள் மின்ன, அவளை பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் தேவா.

 

” ஆரம்பிச்சுட்டான் காலையிலேயே..” என்று நினைத்தாளே ஒழிய அவனுக்கு பதில் பேசாமல் வெகு சிரத்தையாக தன் கற்றை முடியை காய வைப்பதிலேயே குறியாக இருந்தாள்…

 

 

“கொழுப்புடி.. உனக்கு கொஞ்ச நஞ்சம் கொழுப்பில்லை ஊர்ப்பட்ட கொழுப்பு.. என் உயரத்தை மறந்து உன் கூட சகஜமாக பேசினாலும் நீ இன்னும் முறுக்கிக்கிட்டு நிக்கிற.. ” என்றவனை பார்த்து ஒரு மென்னகை புரிந்தாள் வைஷாலி.

 

‘ என்னடா நாம பேசி விதத்துக்கு நம்ம மேல சீறி பாயாமல் பம்முறாளே என்னவாயிருக்கும்… ‘ யோசித்தவாறே கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.

 

அப்போது பெண் அதே மென்னகையுடன்…

 

” இவ நேத்து பேசுனதுக்கும் ஒரு ரியாக்ஷனும் காட்டவில்லை.. இப்போ பேசுவதற்கும் காட்டாமல், அமைதியாக இருக்கா.. ஆனா ஏதோ பெருசா ப்ளான் பண்றா போல… தனக்குள் கூறியவாறு அவளை வினோதமாக பார்த்துக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.

 

அவனின் குழப்பங்கள் இவளுக்கு ஏக சந்தோஷத்தை கொடுத்தது.  

 

தேவா குளித்து வந்து ரெடியாகி அமரவும் அவன் அன்னையிடமிருந்து சாப்பிட வருமாறு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.. 

 

வைஷூவை பார்க்க அவளும் தயாராகி இருப்பதை பார்த்து அவன் முன்னே நடக்க, அவளும் அவனுடன் நடந்து டைனிங் ஹாலில் நோக்கி சென்றார்கள்.

 

ஏற்கனவே மற்ற குடும்ப உறுப்பினர்கள் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்னர். இவர்களைப் பார்த்ததும் அனைவரும் தேவாவை பார்த்து குட்மார்னிங் தேவா என்று ஒவ்வொரு விதமாய் தங்கள் பாசத்தை பொழிந்தனர்.. வைஷாலியை யாரும் கண்டுகொள்ளவில்லை தமயந்தி மோகன ராஜன் மிருவை தவிர.. 

 

 

வைஷூ அங்கு யாரையும் கண்டுகொள்ளாமல் மிரு அருகில் அமர தேவா தன் தாத்தா அருகில் அமர சென்றான். 

 

 

தமயந்தியின் தேவா என்ற ஒற்றை அழைப்பில் நிமிர்ந்து பார்க்க அவர் கண்களாலேயே வைஷுவை காட்ட ஒரு சலிப்புடன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். 

 

பொதுவாக இவர்கள் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் நிலையில் வேலைக்காரர்களை அனுமதிப்பதில்லை.. பெரும்பாலும் குடும்ப விஷயங்கள் இந்த டைனிங் ஹாலில் சாப்பிடும்போது அலசப்படும். 

 

அதனால் சாப்பாடு எடுத்து வைப்பதோடு அவர்கள் வேலை முடிந்துவிடும். 

அவரவர் தமக்கு பிடித்த உணவுகளை பரிமாறிக்கொண்டு மற்ற விஷயங்களை பேசுவார்கள். 

 

அனைவரும் காலை உணவு முடித்து சென்றுவிட தமயந்தி உடன் பேசிக்கொண்டே நின்றுவிட்டாள் வைஷாலி… என்னதான் கல்யாணம் நடந்து விட்டாலும் சுகுணா தேவிக்கு மனதில் ஒரு பிடித்தமின்மை வைஷாலியை பார்த்தாலே…

 

அவள் தனித்திருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

 

” எங்க பாரம்பரியம் என்ன.. வம்சம் என்ன.. என் பேரனோட கம்பீரத்துக்கும் அழகுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லா வந்து சேர்ந்திருக்கா.. என்ன செய்ய எல்லாம் தலை எழுத்து.. என்று அங்கலாய்த்தார்..

 

 

வைஷாலியின் அவரை தீர்க்கமாக பார்த்து, ” உங்க பாரம்பரியம்ன்னா நீங்க பிறந்து வளர்ந்த குடும்பப் பாரம்பரியமா? என்று கேட்க 

 

அவர் சற்று திகைத்து விட்டு, ” எங்க பாரம்பரியம்னு நான் சொன்னது இப்போ நான் வாழுற வீட்டோட பாரம்பரியம்.. கல்யாணம் பண்ணி வந்துட்ட அதுக்கப்புறம் இது தான் என் வீடு ” என்றார்.

 

” கரெக்ட்.. எப்படி நீங்க தாத்தாவை கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் தாத்தாவோட பாரம்பரியம் உங்க பாரம்பரியம் சொல்றீங்களோ.. அதே மாதிரி, இப்போ நான் தேவேஷ்வர ராஜன் ஓட பொண்டாட்டி.. அப்பா அவரோட பாரம்பரியமும் என்னோடது தானே.. இன்னும் சொல்லப்போனால் இந்த மாளிகையில் உங்கள விட அதிகாரம் எனக்கு தான் ஜாஸ்தி ” என்றாள் கெத்தாக..

 

அவர் ” என்ன.. என்ன.. என்ன சொல்ற என்னை விட உனக்கு அதிகாரம் ஜாஸ்தியா ? “என்று கோபமாக கத்தினார்.. 

 

 

” இதுக்கு இவளோ சத்தம.. ஏற்கனவே பிபி சுகர் எல்லாம் இருக்குதானே… 

 

நேத்து எங்க கல்யாணம் முடிஞ்சதும் அவருக்கு ராஜா பட்டம் சூட்டினீங்க இல்லையா? அப்ப அவர் ராஜான்னா நான் ராணி தானே… என்றாள் மிதப்பாக.

 

இப்போது திகைத்து விழிப்பது சுகுணா தேவியாரின் முறை ஆயிற்று… 

 

பாட்டியோ தன் மருமகள் தமயந்தியை பார்த்து, ” என்ன தமா இப்படித்தான் சின்ன பசங்கள பேசவிட்டு வேடிக்கை பார்ப்பியா என்று அதட்டினார்.. 

 

” என்னத்த செய்ய.. பாருங்க உங்களையே இந்த பேச்சு பேசிட்டா.. நான் ஏன் கேட்டா.. என்னையும் திரும்ப பேசிட்டா.. நாங்க ரெண்டு பேரும் தான் இனிமே அந்த வீட்ல ஒண்ணா இருக்கணும்.. என்னால யாரையும் அடக்கவும் முடியாது.. பேசிடவும் முடியாது.. பகைக்கவும் முடியாது “

 

 

 சுகுணா தேவியார் ஒன்றும் பேச முடியாமல் தன் அறையை நோக்கி சென்று விட்டார். 

 

 

தமயந்திக்கு அலை அடித்து ஓய்ந்தது போலிருந்தது.. ஆனாலும் தன் மாமியார் பேசுற பேச்சுக்கு மருமகள் கரெக்டாக தான் கொடுத்தாள் என்று நினைத்தார்.

 

 

வைஷாலி சிரித்துக்கொண்டே தன் அறை நோக்கி சென்றாள்.

 

 

அறையில் நுழைந்தவளை கை பிடித்து வேகமாக இழுத்து தன் முன்னே நிறுத்தியவன், ” உனக்கு மரியாதைன்னா என்னன்னு தெரியாதா பெரியவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா நீ” என்றான் கோபத்தை குரலில் காட்டி.. 

 

ஹவ் டெர்ர் யூ ? என்றான்..

 

 

அவன் முறைக்க இவள் தொடர்ந்தாள்.. ” மரியாதை கொடுத்தால் தான் திரும்ப கிடைக்கும் என்கிட்ட… இன்னிக்கு காலைல பேசுனது சத்தியமா நானா பிளான் பண்ணது இல்ல. உங்க பாட்டி வாண்டடா வந்து வாங்கிக்கிட்டாங்க ” என்றாள் அப்பாவியாக இமையை கொட்டி…

 

 

அவளை தன்னோடு சேர்த்து நெருக்கியவன் ” கொஞ்சம் கூட உனக்கு என் மேல பயம் இல்லடி ” என்று கூற..

 

” ஏன்..‌ நீங்க என்ன காட்டுல வாழுற மிருகமா.. இல்லைல.. என்னை போல வீட்டில வாழுற‌ மனிசன் தானே.. இப்போ என் புருசன் வேற.. இதுல எங்க பயம்‌ வரும்?” கண்களில் குறும்பு மின்ன அவள் கூற…

 

 அந்த பழுப்பு நிற கண்களில் மீள முடியாமல் தொலைந்தான் தேவா.

 

அவளின் அருகாமை , பார்வை.. அவளின் ஸ்பரிசம் உணர்த்தும் மென்மை ஏதோ ஒரு மாய வலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதைய தொடங்கினான் தேவா தன்னை அறியாமல்…

 

பார்வை பார்த்தபடி இருக்க அது தந்த போதையின் தாக்கம்.. அவள் மீது உள்ள அவனின் கோபம்.. தங்கள் திருமணம் நடந்த விதம்.. என அனைத்தையும் மறக்கச் செய்து ஒரு மோன நிலைக்குள் அவனை இழுத்து சென்றது அவனை..

 

அவனின் நிலை புரியு.. வைஷாலி வழக்கமான தன் கீழ் உதட்டில் சிரிப்பை நெளிய விட்டாள்…

 

தன் இரு விரல்களால் அவள் கீழ் உதட்டை பிடித்து ” அன்னைக்கே சொன்னேன் இல்லையா.. இந்த மாதிரி சிரிக்காதேனு ” என்று சொல்லி அவள் இதழிலேயே உற்றுநோக்க..

 

வைஷாலி தேவாவிடம் இருந்து விடுபட திமிறினாள்..

 

” வெயிட் வெயிட்.. என்ன உனக்கு அதுக்குள்ள அவசரம்.. நான் இன்னும் பணிஷ்மெண்ட் பண்ணவே இல்லையே” என்றான் அசால்டாக.. 

 

‘ என்னது பானிஷ்மெண்ட் ஆ‌’ அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிய..

 

மெல்ல அவள் இதழ்கள் நோக்கி முன்னேறி.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் நித்தமும் அவனை இம்சிக்கும் அந்த செர்ரி நிற உதடுகளை தன் வன் உதடுகளுக்குள் வைத்து சுவைத்தான்.. நேற்று லேசாக தீண்டிய அந்த இதழ்கள் இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அழுத்தமாக அங்கே லயித்து இருந்தது.. வன்மையாக ..மென்மையாக.. 

 

ஒரு நெடிய முத்ததிலும் நிறைவு பெறாமல் ஒன்ஸ் மோர் கேட்கும் தன் மனதை அடக்க முடியாமல்.. அவளை விட்டு விலக முடியாமல்.. தடுமாறினான் தேவா.

 

தண்டனை என்னவோ அவளுக்கு தர போவதாய் காரணம் சொன்னாலும், காயம் என்னவோ அவன் மனதிற்கு தான். பின்னே முடிவிலியாய் வேண்டும் இவ்வமிர்தம் என்று கேட்கும் மனதை அடக்க இயலவில்லை அவனால்.. அப்படியெனில் காயம் அவன் மனதிற்கு தானே. 

 

அவள் மூச்சுக்கு திணறும் வேளையில் அவளை பிரித்து எடுத்தவன், அவளை திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.

வைஷாலியோ அவனின் இந்த அதிரடியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

 

 

அன்று மாலையே மோகன் குடும்பமும் மனோகர் குடும்பமும் தத்தம் கார்களில் கோவையை நோக்கி புறப்பட்டனர்.

 

வழக்கம்போல தேவா லம்போர்கினியில் இம்முறை புதிய மனைவியோடும்.. சேர்ந்துதான் இருவரும் வரவேண்டுமென்று தமயந்தியின் கட்டளை.. இருவரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி ‌ஊர் வரும் வரை..

 

கோவை வீட்டிலும் ஆலம் சுற்றியே மணமக்கள் வரவேற்கப்பட்டனர். உள்ளே நுழைந்து தேவா தன் தளத்தை நோக்கி விடுவிடுவென்று சென்றுவிட்டான்.

இப்போது அவனை தொடர்வதா என்ன செய்வது என்று புரியாமல் வைஷாலி நிற்க.. 

 

 

தமயந்தி அவளை நெருங்கி ” வைஷூ என்னடா தயங்கி நிக்கிற உங்கள் தளத்துக்கு போக வேண்டியது தானே.. அவள் தயக்கத்தை உணர்ந்து வா என்று அவரே அழைத்துச் சென்றார்..

 

 

அத்தளம் நுழைந்தது முதல் ஆங்காங்கே உள்ள புகைப்படங்களையும் ஸ்பீக்கர்களையும் வினோதமாகவே பார்த்துக் கொண்டு சென்றாள் வைஷாலி.

 

மகன் அறை முன் நின்று அறைக் கதவை தட்ட , கதவைத் திறந்த தேவா அன்னையை பார்த்து என்னமா என்றான்..

 

அவர் முறைக்க.. இன்னும் என்னம்மா.. என்றான் சலிப்புடன்..

 

உள்ளே போ வைஷூ என்று கூறி.. மகனை ஒரு அர்த்த பார்வை பார்த்து விட்டு சென்றுவிட்டார்.

 

தேவாவின் அறை முதலில் வரவேற்பறையும் அதனுள்ளே சென்றால் படுக்கை அறையும் குளியல் அறையும் இருந்தது. வரவேற்பறையில் ஒரு பக்கம் முழுவதும் புத்தகங்களால் ஆன அலமாரிகள் மிக நேர்த்தியாக இருந்தன. அவற்றைப் பார்த்ததும் வைஷூவின் கண்கள் ஆவலாக விரிந்தன.

 

 

பின் அந்த அறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் தன் கண்களை சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி. அவள் அறையின் அலங்காரங்களையும் நேர்த்தியையும் பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவளை தான் அளவு எடுத்துக் கொண்டிருந்தான். 

 

” இங்கே நின்னு எவ்ளோ நேரம் இதெல்லாம் பாத்துட்டு இருக்குற போற.. தூங்குற எண்ணம் இல்லையா? உள்ள போ ” என்றான் அதட்டலாக… 

 

அவன கத்தலில் இவள் முறைத்துவிட்டு தன் பெட்டியை உருட்டி கொண்டு உள்ளே செல்ல.. பின்னிருந்து கதவு தாழிடப்படும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள். தேவா தன் அறை கதவை தாழிட்டுக் கொண்டு இருந்தான்..

 

பின் அவளை நெருங்கியவன்.. “ஆர் யூ ரெடி பார் செலிப்ரேட் அவர் ஃபர்ஸ்ட் நைட் ??? என்று கூறி அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான்…

 

 

 

கர்வம் வளரும்..

2 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top