ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15

15

 

 

 

 

தேவாவின் பிறந்தநாள் இன்று, முதல் நாள் செய்த வேலையின் அசதி காரணமாக நன்கு அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பியது ஒரு வேகமாக இசைக்கும் 

 இசையா? பாடலா ?.. அவனுமே ஒரு முடிவுக்கு வந்து எழுந்து அமர, அப்பொழுது மீண்டும் வேற ஒரு பாடல் தொடர்ந்தது அதே போல்.. அவன் வாழ்க்கையில் கிஞ்சுத்தும் கேட்டிராத பாடல்… ஹைபை சொசைட்டியின் அங்கமாகவே வாழ்ந்தவன், நானும் இங்கே தான் இருக்கிறேன் என்னையும் அறிந்து கொள் என்ற மாதிரியான பாடல்… ( பில்ட் அப் ஓவர் ஆ இருக்கோ)

 

 

பாடல் முடிந்தவுடன் திரும்பவும் வேறவொன்று ஆரம்பிக்க… தாங்காமல் எழுந்தவன் விரைந்து போய் பார்க்க, அங்கே ஸ்ட்ரெஸ் பஸ்டர் அறையில் அபிநயங்கள் பிடித்து கொண்டிருந்தாள் நம் நாயகி அந்த ‌பாடலுக்கு…

 

” ஏய் பாட்ட நிறுத்துடி… என் தூக்கத்தை கெடுத்துகிட்டு ” என்று அவன் அலற..

 

அபிநயங்கள் பிடித்தபடி அருகில் வந்தவள், ” ஹேப்பி பர்த்டே புருஷர் ” என்று விட்டு மீண்டும் தன் வேலையை தொடங்கினாள்.. அபிநயம் பிடிப்பதை..

 

” இப்போ.. நிறுத்த போறீயா இல்லையா டி ” என்றவன் விரைந்து போய் ஸ்விட்ச் அணைக்க.. 

 

“சூப்பர் ஸ்டார் பாட்டு… நல்ல பாட்டு.. இப்படி இடையில நிப்பாட்டீங்களே.. கோபால்.. கோபால் ” என்று குமுறி ஒரு கையால் தன் நெஞ்சை பிடித்து கொண்டு, மறு கையை திருப்பி புறங்கையால் தன் நெற்றி மீது வைத்து கூற… 

 

 

மொத்த கோபமும் தலைக்கு ஏறியது அவனுக்கு..

 

” நிறுத்துடி.. உன் டிராமா வை.. இது சூப்பர் ஸ்டார் பாட்டா.. எனக்கு தமிழ் பாட்டு பரிச்சியம் இல்லை தான்.. அதுக்காக இப்படியா புளுகுவ.. எந்த காலத்து பாட்டு டி இது” 

 

” சூப்பர் ஸ்டார் சொன்னேன்.. எந்த சூப்பர் ஸ்டார் சொன்னேனா?” என்று தன் நயணங்களில் அவள் அபிநயம் பிடிக்க.. அதில் தொலைக்க இருந்த மனதை கடைசி நேரத்தில் பிடித்து, அவன் அவளை முறைக்க… 

 

” இன்னைக்கு என் பர்த்டே… என்கிட்ட வாங்காத “

 

” இது என்ன புது ஃபார்முலா வா இருக்கு.. எல்லோரும் பர்த்டே பேபியை திட்ட வேணான்னு சொல்லுவாங்க.. இங்க ஒரு பர்த்டே பேபி திட்டு வாங்கதேன்னு சொல்லுதே.. அடடே.. ஆச்சிரிய குறி” என்றாள் நக்கலாக..

 

அவன் முறைக்க.. இவள் தன் இரு விரல்களால் தன் கழுத்து சதையை பிடித்து, ” நம்புங்க புருஷர்… இது சூப்பர் ஸ்டார் பாட்டு தான்.. ஆனா 80 ஸ்ஸ் சூப்பர் ஸ்டார் இல்லை.. பாட்டுகளின் சூப்பர் ஸ்டார்” என்று மீண்டும் அபிநயம் பிடிக்க..

 

” கொழுப்பு டி ” கண்களால் அவளை எரித்தவன், ” ஏண்டி உனக்கு இந்த கொலவெறி ” என்க..

 

” உங்களுக்கு யாருன்னு தெரியாத ஒருத்தர் அதுவும் செந்தமிழ் பாட்டு, அதை கேட்க முடியல.. ஆனா நீங்க பாடுறானா.. கத்துறானா தெரியாத ஒன்னை பாட்டுன்னு போட்டு கொல்லுறீங்க.. எங்களுக்கும் அதே மாதிரி தானே இருக்கும் புருஷர்.. என்று பவ்யமாக கூற..

 

 

” பாவம் இந்த பிளோர்க்கு மட்டும் வாய் இருந்தது, இந்நேரம் உங்களை அது கூவ பாஷையில் கண்டபடி திட்டி இருக்கும் ” என்று கூறி சிரிக்க..

 

சிரிக்கும் போதும் அவள் கண்களில் தெரிக்கும் மின்னல் அவனை வீழ்த்த பார்க்க, திரும்பி நடந்தவன், ” இன்னொரு முறை போட்ட… அப்புறம் தான்” என்று ஒரு விரல் காட்டி பத்திரம் காண்பிக்க…

 

” இன்னைக்கு கோட்டா.. முடிஞ்சுது. நீங்க போட்டா.. என் கோட்டா தொடரும் புருஷர்.. இதே போல வகை வகையா டவுன்லோட் பண்ணி வைச்சு இருக்கேன்” என்று இவள் பதில் குரல் கொடுத்தாள்.

 

 

அப்படி என்ன பாடல் என்று யோசிக்கிறீர்களா தானே???? இதோ உங்களுக்காக… 

 

 

ஸ்ஸ் அம்மா… ஸ்ஸ் அப்பா…

ஸ்ஸ்… அம்மம்மா…

 

அடியே.. மனம் நில்லுனா… நிக்காதடி..

கொடியே என்னை கண்டு நீ….

 

சில்க் ஸ்மிதாவின் பாடலே தான்…

பின்னே அவனை வழிக்கு கொண்டு வர வேண்டுமானால்… 

 

பூஜை அறையில் தமயந்தி காத்திருக்க, வேக நடையுடன் வந்து சேர்ந்து கொண்டாள் வைஷு.. 

 

பூஜை முடித்து மோகன் தமயந்தி சேர்ந்து நிற்க, ஆசிர்வாதம் வாங்க சென்றவனை தடுத்து, மனைவியோடு என்றார் தமயந்தி. காலையில் அவள் பாடலை போட்டு எழுப்பிய கடுப்பில் இருந்தவன், கண்களில் அவளை எரித்து வா என்று தலை அசைத்தான்.

 

செய்த வரை போதும் என்ற நல்ல நினைப்பில் அமைதியாக சென்று அவன் அருகில் நின்று ஆசிர்வாதம் வாங்க.. 

 

பொடி வைர கற்கள் பதித்த பிரேஸ்லெட் ஒன்றை மோகன் அவனுக்கு அணிவித்து விட.. ” எதுக்கு பா.. என்கிட்ட நிறைய பிரேஸ்லெட் இருக்கு ” என்று கூறினாலும் அணிந்து கொண்டான் தந்தைக்காக..

 

 

தமயந்தி வைஷுவின் கையிலும் ஒன்றை அணிவிக்க அவள் அதிர்ந்து, ” அத்தை அவருக்கு தானே பர்த்டே ” என்க..

 

” தெரியும் மா.. உங்க மேரேஜ் அப்புறம் வர அவன் முதல் பிறந்தநாள் அதான்.. அப்புறம் இது கப்லஸ் பிரேஸ்லெட்.. ” என்றார். 

 

மிரு தன் அண்ணன் அருகில் வந்து கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியவள், தன் பரிசாக கான்வே பிராண்ட் பேனாவை கொடுத்தாள். அது அவள் வழக்கம். சிரிப்புடன் வாங்கி தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி கொண்டான் தேவா.

 

 காலை உணவு தடபுடல் ஆக ஏற்பாடு செய்து இருந்தார் தமயந்தி. வழக்கம் போல பொதுவாக அனைவரிடமும் ஆபீஸ் கிளம்புறேன் சொல்லிவிட்டு செல்ல, ” தேவா.. மதியமே வந்திடு.. ஈவ்னிங் பார்ட்டி இருக்கு. மறந்திடாதே.. என்று நியாபகபடுத்தி அனுப்பினார் மோகன், மகனின் வேலை ஆர்வம் தெரிந்து…

 

அண்ணன் சென்றவுடன் தாவி அணைத்து கொண்டாள் மிரு அண்ணியை.. ” அண்ணி.. செம போங்க.. பாட்டு கொஞ்சமே கொஞ்சம் பழசு தான்.. ஆனாலும் அந்த கொடுமைக்கு இது ரொம்ப பெட்டர் ” என்று கூறி செல்ல, அவனின் பெற்றோர்கள் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விட்டார்கள்..

 

மாலை போல வீட்டுக்குள் வந்தவன் கையில் வைஷூவிற்கான பார்சல்.. தன் தளத்தில் சென்று பார்க்க அங்கே அவள் இல்லை.

 

பிறகு அம்மாவை அழைத்து கேட்டவன், மிரு அறைக்கு சென்று பார்க்க சொன்னார். 

 

 

அவள் தளம் நெருங்கும் போதே வைஷூவின் வீல் என்ற சத்தம் காதை பிளக்க.. ஸ்பீக்கரை முழுங்கி இருப்பா போல.. கேடி.. என்று பாராட்டியவாறு அறைக் கதவைத் தட்ட கை ஓங்க மீண்டும் ஒரு அலறல்… கொஞ்சம் பக் என்று ஆனது அவனுக்கு..

 

கதவை தட்ட, வேர்த்து விறு விறுக்க வந்து கதவை திறந்தாள் மிரு. அண்ணனின் பார்வை புரிந்து, ” அண்ணிக்கு வேக்ஸ் பண்ணினேன் அண்ணா.. அதுக்கு தான் அண்ணி அவ்வளோ சத்தம்.. நாளைக்கு இவங்களுக்கு நான் டெலிவரி பார்க்க மாட்டேன் பா.. ” என நொந்து கொண்டு போனாள் அவர்களுக்கு தனிமை கொடுத்து…

 

கண்கள் எல்லாம் கலங்கி, நீர் நிறைந்து நின்ற வைஷூவை பார்க்க கொஞ்சம் பாவமாக தான் இருந்தது… ஆனாலும் பாவம் பார்ப்பவனா அவன்?? அவளை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க.. குறிஞ்சிப் பூ வென அரிதாய் சிரிக்கும் போது வெளிப்படும் அவனின் கன்ன குழிகள்… அவ்வளவு கவர்ச்சியாய்.. ஆண்களிலும் இவ்வளவு கவர்ச்சிகரமாக பெண்களை தூண்டிலிடும் வண்ணம் இருக்க முடியுமா என்ன.. இதோ கண் எதிரில்.. வைஷூவை சுண்டி இழுப்பதாய்.. அப்பப்பா இவனின் கோபமே தேவலை… சிரிப்பில் நம்மை சிறை வைக்கிறான்.. என்று வைஷுவின் மனது ஒரு சுற்று சுற்றி வர..அவனை தன்னை அறியாமல் ஆழ்ந்து நோக்கினாள்.

 

தன் சிரிப்பிற்கு அவள் பதில் இல்லாமல் போக.. என்ன ஆச்சு என்று சிரிப்பை நிறுத்தி பார்க்க.. இரும்பென இதயம் கொண்டவனை, அவளின் பழுப்பு பாவைகள் காந்தமென இழுக்க… அவ்விசையின் வழியே சென்றவன், அவள் மூச்சு காற்று படும் தூரத்தில்…

 

வேக்ஸ் செய்து பூனை ரோமங்கள் அற்று வாழைத் தண்டு போல வழுவழுப்பாக உள்ள அவளின் கைகளின் மென்மை அவனை வா என்று அழைக்க.. தன் முரட்டு கரங்கள் கொண்டு மிருதுவாக தீண்டினான் அவளின் முழங்கைகளை கண்களை பார்த்து கொண்டே…

 

வெளியில் கேட்ட மிருவின் குரலில் அவள் இதழ்களை மெலிதாக தீண்டி சென்றது அவனின் உதடுகள்.. இரு எட்டு பின்னோக்கி நகரந்தவன் அவள் கையில் தான் கொண்டு வந்த பார்சல் கொடுத்து விட்டு, ” மோகினி பிசாசுக்கு ஏற்ற ட்ரெஸ் ” என்று கண்ணடித்து சென்று விட்டான்.

 

அப்படி என்ன டிரஸ் என பிரித்து பார்த்தவள் அசந்து தான் போனாள். வெண்ணிற டிஸ்யூ சில்கில் தங்க நிற கற்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்ட அழகிய டிசைனர் புடவையும், அதற்கு மேட்ச் ஆக கிராண்ட்டான வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற ப்ளவுஸ்.. கண்களை பறித்தது அவன் தேர்ந்து எடுத்த அவளின் புடவை‌ அழகு..

 

அப்போது அறையினுள் நுழைந்த மிரு புடவையைப் பார்த்து ” அண்ணி புடவை செலக்சன் சூப்பர்” என்று வியந்தாள்.

 

” எல்லாம் உங்க அண்ணன் செலக்ஷன் தான் ” என்றாள் வைஷூ…

 

” என்னது அண்ணனா!!!! ” ஆச்சரியமாக அவளது முட்டை விழியை விரித்தாள்..

 

“ஆமாம் மிரு… அந்நியனான உங்க அண்ணன் உள்ளேயும் ஒரு ரெமோ ஒளிஞ்சி இருக்கான் பாரு ” என்று கிண்டலடித்தாள் வைஷூ.

 

மிரு ” எங்க அண்ணா அந்நியனா” என்று முறைக்க…

 

” இல்லையா பின்ன.. ஆனா ஒன்னு எப்ப அந்நியனா இருக்கார்… எப்போ ரெமோ வா இருக்காருன்னு எனக்கு மட்டுமில்ல.. அவருக்குமே தெரிய மாட்டேங்குது ” என்று அபிநயம் பிடித்தவளை பார்த்து கல கலத்து சிரித்தாள் மிரு..

 

“அண்ணி.. நீங்க சான்ஸ் லெஸ் “

 

மகளின் சிரிப்பு சத்தத்தை கேட்டு கொண்டே வந்த தமயந்தி, வீட்டுலேயே வளர்ந்த கூண்டு கிளி தான் அவள், அதிகமாக நட்புகள் கிடையாது. அவளின் இந்த மன நிறைந்த சிரிப்பு அவருக்கு மன உவகையையும், வைஷூ மேல் நன் மதிப்பையும்

 தந்தது..

 

” பொண்ணுங்களா சிரிச்சது போதும்.. சீக்கிரம் கிளம்புங்க.. அப்புறம் தேவா லேட் ஆகிடியிச்சுன்னு குதிப்பான் ” என்று அவர் கூற… வைஷு மிருவை பார்த்து எப்படி நான் சொன்னது என்பது போல கண்ணடிக்க.. இன்னும் விழுந்து சிரித்தாள் மிரு..

 

கலகலப்புடன் அனைவரும் பார்ட்டிக்குக் கிளம்பினர்.. ஒரு காரில் மோகன் தமயந்தி.. மிரு கிளம்ப.. வழக்கம் போல தேவா வைஷூவுடன் தன் லம்பார்கினியில்.. அழகு பதுமையாக அருகில் இருக்கும் மனைவியை பாராமல் பார்த்து கொண்டு வந்தான் தேவா, இதழ்கள் ஓரம் நெளிந்த சிரிப்பில்… அவளோ கண்டும் காணாமல் வந்தவனை கண்டு கொண்டவள்..

 

” சைட் அடிக்கிறதுன்னா.. டைரக்டா செய்யலாம்.. ” என்று கூறி உதடு சுழிக்க..

 

” யாரு.. நானு.. உன்னை… நினைப்பு தான்”

 

” அப்போ என்னை பார்க்கல.. நம்ம்பிட்டேன்” என்று ராகம் இழுக்க..

 

” கொள்ளி வாய் பிசாசு மாதிரி இருக்கிற உன்னை… போய்.. ஹ ஹ ஹ.. ” என்று அவன் வம்பு இழுத்து சிரிக்க..

 

” நான் கொள்ளி வாய் பிசாசு ஆ.. ” என்றவள் அவன் உணரும் முன் தன் பல் தடத்தை அவன் கன்ன குழியில் பதித்து இருந்தாள்..

 

 கொள்ளி வாய் பிசாசோடு.. இப்போ இரத்த காட்டேரியும் சேர்ந்து கொண்டது..

 

பின்னே கொள்ளை அழகுடன் வந்தவளை பார்த்து, கொள்ளி வாய் பிசாசு என்று சொன்னால், அந்த கடுப்புஸ் தான் வைஷூக்கு…

 

பார்ட்டிக்கு மனோகர் ரூபாவதி.. ராமச்சந்திரன் அவரின் மனைவி வைதேகி மகன் கார்த்திக் சந்திரன்.. நமசிவாயம், சபர்மதி மற்றும் இவர்கள் உறவினர்களும் வந்திருந்தனர்.. கூடவே சில தொழில் துறை நண்பர்களும்.. என்று களை கட்டியது பார்ட்டி..

 

அழகாக அமைக்க பட்டிருந்த மேடையில் முதலில் ஏறிய மோகன்.. ” குட் ஈவெனிங் ப்ரெண்ட்ஸ்.. என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.. என் பையன் தேவேஸ்வர ராஜன் பர்த்டே பார்ட்டி மட்டும் இல்லை.. அவரோட மேரேஜ் அனோன்ஸ் பார்ட்டியும் கூட.. என்று கூற.. ஒவ்வொருத்தருக்கு தெரிந்து இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.. எனவே அங்கு சற்று சலசலப்பு.. 

 

 

” லெட்ஸ் வெல்கம் மை சன் தேவேஸ்வர ராஜன்.. அண்ட் மை டாட்டர் இன் லா வைஷாலி தேவி..” என்று கூற அவர்கள் ஜோடியாக மேடை ஏற, கரகோஷம் விண்ணை பிளந்தது…

 

தேவதையாய் ஜொலித்தாள் வைசாலி.. கம்பீரமான நிமிர்வோடு தேவா என பார்ப்பவர் கண்ணை கவர்ந்தனர். 

ஜோடி பொருத்தம் அவ்வளவு அம்சமாய்.. வந்தவர்கள் வாழ்த்தி செல்ல, இனிமையை கழிந்தது நேரம்..

 

மோகன் அங்கேயும் தன் மகன் காதல் கதையை அரங்கேற்றி, வாணிஸ் குடும்ப பேச்சை எடுக்க விடாமல் பார்த்துக் கொண்டார்.

 

நண்பர்களுடன் பேசி கொன்டிருந்த தேவாவின் முகத்தில் வெட்கத்தின் கோடு லேசாய்… கல்யாண கதையை கூறுகிறானாக்கும்.. என்னமாய் நடிக்கிறான்.. அதுவும் வெட்கம் வேற பொறும தான் முடிந்தது வைஷூவுக்கு..

 

” ஹாய் சிஸ்டர்… ” என்ற புதியவனை கண்டு அவள் விழி விரிக்க..

 

” ஐம் கார்த்திக் சந்திரன்.. ” தன் தந்தை தாயை சுட்டி காட்டி அவர்கள் மகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டான்.

 

கல்யாணத்தில் அவர்களை பார்த்த நியாபகம் இருக்க, ” ஹலோ ” என்று தலை ஆடினாள் வைஷூ..

 

” நிஜம்மா உங்களது லவ் மேரேஜ்னு நம்ம முடியல ” என்று கூறி அவளை கூர்ந்து பார்க்க..

 

சில கணம் அதிர்ச்சி காண்பித்த அவள் பழுப்பு விழிகள் அது பொய்யோ என்ற விதமாய் நிர்மலமாக மாறி, மெல்ல சிரித்தாள்.

 

” யூர் ஐஸ்.. ப்யூட்டி ஃபுல் ” என அவன் புகழ.. அவள் முறைக்க.. ” ஜஸ்ட் காம்ப்ளீமெண்ட் ” என்று புன்னகை மன்னனாக நின்றான் அவன். 

 

அங்கு வந்த மிரு, ” அண்ணி.. அத்தை கிளம்புறாங்களாம்.. உங்களை அம்மா கூப்பிட்டாங்க ” என்று அழைக்க..

 

நின்றவனிடம் தலை அசைத்து விட்டு, வைஷூ நகர்ந்து விட, கூடவே செல்ல முயன்ற மிருவை கை நீட்டி தடுத்தவன்…

 

” ஓய்.. அழுமூஞ்சி.. நாம எப்போ இது மாதிரி பார்ட்டி கொடு்க்கிறது..” என்று கூறி வசிய புன்னகை சிந்த..

 

” நான் ஒன்னும் அழுமூஞ்சி இல்லை” என்று தலை குனிந்தபடி மிரு கூற..

 

“ஹும்.. நீ இப்படியே எனக்கு பதில் சொல்லாமல் இருந்த.. டைரக்ட் ஆக நமக்கு நாற்பதாவது கல்யாணம் தான் போல… ஆனா நம் பிள்ளைகள் கூட ” என்று குறும்புடன் கூறி சென்று விட..

 

எப்படி குழந்தைகளோடு பண்ண முடியும் என்று குழம்பி நின்றது ஹவுஸ் சர்ஜன் செய்யும் அம்மணி…

 

” ஹாய் மச்சி.. எப்போ சிங்கப்பூரில் இருந்து வந்த ?” என்ற தேவாவை முறைத்த கார்த்திக்..

 

” நான் இல்லாமல் எப்படி டா.. நீ கல்யாணம் செய்துக்கலாம் ” என்று குறைபட.. 

 

இவர்கள் இருவரும் நேரடி உறவு இல்லை என்றாலும், ஒரே வயது வித்தியாசம் ஆதலால்.. எப்போதும் ஒரு நல்ல நட்பு இருவரிடமும். தேவா கிண்டல் ‌கேலி எல்லாம் கார்த்திக்கிடம் மட்டுமே..

 

அதே போல் சொந்த அத்தை மகன் நந்தாவை விட.. தேவா எப்போதும் ஸ்பெஷல் கார்த்திக்கு… இப்போது சிறிது நாட்களாக மிருவும்…

 

” வேணும்ன்னா உன் கல்யாணத்திற்கு என்னை கூப்பிடாத.. ” என்றான் தேவா உன்னை நான் அறிவேன் என்பதாய்…

 

 

” அந்த தைரியம் தான் டா.. உனக்கு.. ஏன் டா.. உனக்கு எல்லாம எப்படி லவ் வந்தது.”

 

“ஏன் டா.. எனக்கு எல்லாம் லவ் வராதா.. மனுசன் தான் டா நானும் ” 

 

” நீ தான்.. பிஸ்னஸ் காந்தம் ஆச்சே.. அதுக்கு உனக்கு நேரம் இருக்கா என்ன ” 

 

” உலக முழுவதும் கொடி கட்டி பறக்கும் டெக்ஸ்டைல்ஸ் தொழிலதிபர் கார்த்திக் சந்திரனுக்கு வரும்போது… நேரம் இருக்கும் போது.. எனக்கு வர கூடாதா ஆஃபிசர் ” என்று தேவா கிண்டலடிக்க..

 

” ஆனாலும்.. இவ்வளோ அடக்கமான.. அழகான பொண்ணு..” என்று கார்த்திக் வியக்க..

 

“யாரு.. அவ.. அடக்கமான பொண்ணு.. அவ சரியான ரௌடி டா.. எனக்கும் மேல” என்று கூறி அவளின் அடக்கத்தினால் தன் கன்னத்தில் ஏற்பட்ட வீர தழும்பை காட்ட…

 ” உனக்கு எல்லாம் அப்படி கிடைத்தா தான் நீ அடங்குவ ” என்று கூறி அடக்க மாட்டாமல் சிரித்தான் கார்த்தி..

நட்புகள், உறவுகள் வாழ்த்து என்று இனிமையாக கழிந்தது நேரம்.. 

 

அந்நேரம் மனோகருக்கு நந்தாவிடம் இருந்து ஃபோன் வந்தது.. நாளை மறுநாள் ஊருக்கு வருவதாய்…

கர்வம் வளரும்…

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top