17
கை கொடுத்தவனை பார்த்து, ” எப்படி எப்படி.. இது உங்க எதிரீங்க செய்த வேலையா ?? பிராடு.. செய்யுறது எல்லாம் வில்லன் வேலை.. ஆனா பேசுறது எல்லாம் ஹீரோயீசம்… நீங்கள் எல்லாம் என்ன டிசைன் ” என்று அருகில் உள்ள பொருட்களை அவன் மீது வீச..
” ஹே.. ரௌடி.. சும்மா இருடி.. படாத இடத்தில பட்ற போகுது.. இத்தனை வருசத்துல ஒன்னும் பார்க்காத ஒரு கன்னி பையன் சாபம் உன்னை சும்மா விடாது.. பார்த்துக்கோ ” என்று அவள் வீசய பொருட்களில் இருந்து தப்பித்து கொண்டே சொல்ல…
லாவகமாக தப்பியவன், ஒரே எட்டில் அவளின் கை பிடித்து இழுத்து, அவளை பின்பக்கமாக அணைத்து, ” நான் வில்லன் தான், ஆனா உனக்கு ஹீரோ அதுவும் ஆண்டி ஹீரோ ” என்று அவள் கதை கடிக்க…
” ஹீரோ ஓகே.. ஆமா எந்த ஆண்டிக்கு ஹீரோ நீங்க. ” என்று அவனிடம் நக்கல் அடிக்க..
” அந்த ஆண்டியே நீங்க தான்.. கரஸ் மேடம்” என்று அவளை வார…
” நான் ஆண்டியா ?? இந்த ஆண்டி ஒன்னும் உங்களுக்கு வேண்டாம்.. போ போ.. போய் நல்ல இளசா.. புதுசா.. பார்த்துக்கோ போ ” என்று முறுக்க..
” எல்லாம் இந்த ஆண்டியே போதும்.. இந்த பீஸ் புதுசா ? இளசா ? நான் வேணும்ன்னா செக் பண்ணி சொல்லவா? ” என்று அவள் கழுத்தில் முகம் பதித்து கூற…
” ஒன்னும் வேண்டாம்.. வேண்டாம்…” என்று அவள் அவசரமாக கூறி விலக..
” காலேஜ் அதனால் தப்பிச்சிங்க கரஸ் மேடம் ” என்று அவளை விலகி அவளை இருக்கையில் அமர்த்தி எதிரில் அவன் அமர்ந்தான்.
” எப்போ இந்த ஏற்பாடு எல்லாம் செய்தீங்க.. அதுவும் லீவ்ல இருந்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க . ” என்று ஆச்சர்யமாக கேட்டவளிடம்..
” நேற்று காலை ஆபீஸ் போன முதல் வேலையே இது தான்.. என்று அவன் சிரிக்க…
” என்ன.. காலையிலே வா.. அப்போ அத்தை பேசினது..” என்று அவள் குழப்பமாக பார்க்க…
” உங்க அத்தை உனக்கு சிபாரிசு பண்ணறது முன்னாலேயே.. உன் புருசன் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான்.. ஆனா ஸ்டூடண்ட் கூட்டி வர ஐடியா மட்டும், அப்பா தான் சொன்னாங்க.. ” என்க..
விழி விரிய அவனை பார்த்து, ” அப்போ முன்னமே தெரியுமா அத்தைக்கும் மாமாவுக்கும்.. இந்த ஏற்பாடு எல்லாம்…”
” உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் அவங்க சொல்லல.. அதான் கோவில் போய்ட்டு போக சொன்னாங்க.. ” என்றவனின் பேச்சை கேட்ட உடனே.. மாமா அத்தை மீதும் அளவு கடந்த பாசம் அப்போது ஊற்று எடுக்க… அவர்களுக்கு ஃபோன் செய்ய போனவளை தடுத்து, ” தாயே.. வீட்டுல போய் உன் நன்றி நவிலுதல் படலத்தை வைச்சுகோ… இப்போ கிளம்பலாம் எனக்கு டைம் ஆகுது ” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வர..
மற்ற ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு நிற்க.. தூரத்தில் வைஷுவை பார்த்து கொண்டிருந்த சங்கீதா கண்ணில் பட்டாள்.
கணவன் கல்லூரி முதல்வரோடு பேசி கொண்டிருக்க.. இவள் விரைந்து சென்று விட்டாள், நட்பை காண..
” சங்கீ என்று அழைப்பிலேயே அவளும் வைஷூ என்க கட்டி கொண்டனர் இருவரும்.
” ஆனாலும்.. நீ ரொம்ப அழுத்தமடி.. சாரை லவ் பண்ணுனதை சொல்லவே இல்லைல.. நான் மட்டும் கிறுக்கி மாதிரி.. என் மாமா பேசினது எல்லாம் உன்கிட்ட ஒப்பிச்சேன்.. போடி..” என்று முறைத்து கொண்டவளை பார்த்து, அந்த காதல் கதை இங்கேயும் பரவி விட்டதா..( கொரோனா விட ஸ்பீட் ஆ பரவுது பா) என்ன சொல்லுவது என்று இவள் விழிக்க…
” சாரி.. சிஸ்டர்.. நான் தான் யார் கிட்டேயும் சொல்ல கூடாதுனு சொல்லி இருந்தேன்” என்று அருகில் கேட்ட குரலில் யார் அதிகம் திடுக்கிட்டு போனார்களோ… ஒரு சேர இருவரும் பார்க்க…
மனைவியை பார்த்து ஒற்றை கண் அடித்தவன், இவரா நம்மிடம் பேசியது என்று அதிர்ந்து நின்ற சங்கீதாவை தங்கள் ரிசப்ஷன்க்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து, மேலும் அதிர செய்து தன் மனைவியுடன் விடை பெற்று சென்றான் தேவா…
அடுத்து வைஷூவை அழைத்து சென்று அந்நாளின் இன்ப அதிர்ச்சியை நீட்டித்தான் தேவா.. தொழில் துறையில் மட்டுமல்ல.. சம்சார சாகரத்திலும் நான் வல்லவன் என்று நிரூபித்து கொண்டிருந்தான் அவன்.. சம்சாரம் என்னும் மின்சாரத்தை மிக லாவகமாக கையாண்டான் அவன்..
அவனின் மின்சாரம் எதிர் காலத்தில் அவனுக்கு கொடுக்கும் ஷாக் எப்படி பட்டது என்று யார் அறிவார்..
ஆம்.. அவளை அழைத்து சென்றது அவளின் வீட்டுக்கு தான்…
அவர்கள் வீட்டு வாசலில் நின்ற காரை கண்டு அவள் வாய் பிளந்து நிற்க.. ” வைஷூ.. இப்படி பப்ளிக்கா எல்லாம் கேட்க கூடாது.. எதா இருந்தாலும் நம்ம ரூம்ல மட்டும் தான் ” என்று காது அருகே பேசியவனை பார்த்து , இம்முறை அவள் பழுப்பு பாவைகள் சினம் விடுத்து சிநேகம் கொள்ள… தொலைந்து தான் போனான் அவ்வாழியில் அவன்…
இருவரும் ஒன்றாக அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள் பலத்த வரவேற்ப்புடன்…
அதே நேரம் தன் செக்கிங் எல்லாம் முடித்து கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான் நந்தன்.
வழக்கம் போல் அவனை அழைக்க டிரைவர் வந்து காத்து இருக்க.. கையில் சுழற்றிய ரெபேனுடன், தன் டிராலியை உருட்டி கொண்டு, அலட்சிய பார்வையை தன் சுற்றி உள்ளவர்கள் மீது செல்லுத்தியவாறு தன் ஈரோப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, தனக்கான காரில் அமர்ந்து வீட்டை நோக்கி சென்றான்.
அங்கே வீட்டில் நந்தன் ஃபோன் செய்ததில் இருந்து மிக பெரிய அழுத்தத்தில் இருந்தார் மனோகர். ரூபாவதி எப்படியும் அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து விட்டது. இனி பிரச்சனை இல்லை.. நிம்மதி என்று நினைத்து கொண்டிருக்க.. அதற்கு மாறாக இனி தான் பிரச்சனை ஆரம்பம் என்று உழன்று கொண்டிருந்தார் மனோகர்..
இதில் தேவா அவரிடம் முகம் கொடுத்து சரியாக பேசுவதில்லை என்பதும் அவருக்கு மன உளைச்சல்.. வைஷூ நீதி கேட்டு வந்த மறுநாள், மனோகர் அங்கே சென்று அவளை பார்த்து அதிர்ச்சி அடைய.. தேவா அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. வீட்டிலும் அவன் பேச பிடி கொடுக்கவில்லை.. ஊடல் கொண்ட புது பொண்டாட்டியை பார்ப்பதுபோல இவர் அவனையே பார்க்க, அவனோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போலவே பார்த்தான். தாங்காமல் பின் அவன் அலுவலகத்துக்கே சென்று விட்டார்.
” சொல்லுங்க ” என்றான் முறைப்புடன்..
” தேவா.. இதுபோல எல்லாம் நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கல.. நந்தன் பண்ணியதால நீ இதுல சம்மந்தப்பட வேண்டியதாச்சு. நந்தன் பத்தி அண்ணன் கிட்ட சொல்லாதே பா.” இப்பவும் சுயநலமாகவே யோசிக்கும் அவரை பார்த்து அவனுக்கு இவர்கள் உறவு வெறுத்து போக..
“என்ன எதிர்பார்க்கல.. வைஷாலி பற்றி முன்னமே எல்லாம் தெரிந்தது தானே உங்களுக்கு.. ஆனா என்கிட்ட நீங்க மறைச்சிட்டீங்க.. யாரோ ஒரு மூணாந்தர பெண்ணை பேசுவது போல பேசுனீங்க.. ஆனா அவ அந்த தியாகி பேத்தி..இது மட்டும் எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தது.. நீங்களும்.. உங்க பையனும்… என்று அவன் டேபிளில் தட்டிய தட்டில் அங்குள்ள பொருட்கள் பறக்க.. எழுந்தே விட்டார் மனோகர்.
” என் பிரச்சனையை சமாளிக்க எனக்கு தெரியும். அடுத்தவர் பின்னே போய் ஒளிய எல்லாம் எனக்கு தெரியாது ” என்று நக்கலாக கூறி ” இனி இது என் பிரச்சனை, இதுல நீங்களோ இல்லை உங்க பையனோ தலையிட கூடாது. முக்கியமா வைஷாலி பக்கம். அப்புறம் தேவாவோட ருத்ர அவதாரம் நீங்க தெரிஞ்சிக்க வேண்டி இருக்கும் ” என்று கிட்டதட்ட மிரட்டியே அனுப்பி வைத்தான்.
அன்று வந்தது முதல், அவருக்கு நந்தன் வந்தால் என்ன செய்வான் என்கிற எண்ணமே தான். மகனிடம் இருந்து மற்றவரை காக்கும் நிலை போய், தேவாவிடம் இருந்து இவனை எப்படி காப்பாற்ற.. என்பதே மனதை அரிக்க தொடங்கியது.. இதோ இப்போது வரை…
” ஹாய் அம்மா.. ” என்று துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைத்தான் நந்தன்.. அவனுக்கு மேல் சந்தோசத்துடன் மகனை எதிர் கொண்டார் ரூபாவதி..
” என்ன டா.. இளச்சி போய்ட்ட” என்ற வழக்கமான அம்மா டயலாக் பேச , ” அம்மா உன் கண் கண்ணாடி கேட்குது.. சீக்கிரம் வாங்கி கொடு ” என்று அசால்ட்டாக கூறி விட்டு அப்பாவை பார்த்தான்.
” அப்பா.. ” என்று அவன் அடுத்து பேசும் முன் ” போ.. போய் ரெஸ்ட் எடு.. ஈவ்னிங் பேசலாம் ” என்று கூறி அவர் உள்ளே சென்று விட.. ஓகே என்ற தோள் குலுக்களுடன் அவனும் தன் அறையை நோக்கி சென்று விட்டான்.
மனோகர் ” கடவுளே.. இப்போ சம்மாளிச்சிட்டேன்.. ஈவ்னிங் என்ன பண்ண போறேனோ என்று புலம்பியவாறு…
ஜெட் லாக் போக தூங்கி எழுந்தவன், ஹாலில் வந்து அமர, தன் அன்னை கொடுத்த டீ பருகி கொண்டே அப்பாவை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
” நந்தா, தேவாவுக்கு சடன்னா மேரேஜ் நடந்து போச்சு.. அதனால்… “
” பொண்ணு வாணிஸ் குரூப் ஆஆ… ” என்று அவன் இழுக்க..
” இல்லை வேற பொண்ணு.. “
” அப்பாடி.. நல்ல வேளை வேற பொண்ணை கல்யாணம் பண்ணினான். கிரேட் எஸ்கேப் மீ.. ” என்று ஆசுவாச மூச்சு விட்டவன் அறிவானா அவன் காதலித்த பெண் தான் என்று…
” சோ.. மேரேஜ், ஃபுங்ஷன் என்று கொஞ்சம் பிஸியா இருந்ததுனால, நான் உன் பிரச்சனை இன்னும் யோசிக்கல.. ”
” பரவாயில்லை.. அது தான் வாணிஸ் குரூப் பேச்சு முடிஞ்சிடிச்சுல.. அது போதும் இப்போதைக்கு.. நான் ப்ரெண்ட்ஸை பார்க்க போறேன்” என்று அவன் சென்று விட.. மனோகருக்கு தான் எப்போ இது வெடிக்கும் என்று எரிமலை அருகில் இருக்கும் எபெக்ட்..
அங்கு வைஷூ வீட்டிலோ, நமசிவாயத்திடம் சபர்மதியிடமும் முழுதாக விளக்க முடியாமல் தவறான புரிதல், கூடவே எதிரிகள் சூழ்ச்சி என்று ஒரு வழியாக இருவரையும் சமாளித்து சமாதானப்படுத்தி இருந்தான் தேவா… போதும் போதும் என்றானது அதற்குள் அவனுக்கு… ஒரே ஒரு மீம்ஸ் போட்டுட்டு நான் படுற பாடு… ஓ மை கடவுளே என்ற மைண்ட் வாய்ஸ் உடன்..
அதன் பின் மாப்பிள்ளை விருந்து தடபுடல் பட, அன்று அங்கே தங்கி விட்டார்கள்..
இரவு வைஷூ அறையில் அவன் இருக்க, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தன் மாமனாருக்கு நன்றி நவிழ்தல் தொடங்கிய பின் மாமியாரிடம் பேசி,
இப்போது மிருவிடம் வந்து நிற்க.. துளிர்ந்த கண்ணிரீல் இவள் பாச பயிரை வளர்க்க , நொந்து நூடுல்ஸ் ஆனான் தேவா..
காலை முதல் இவளுடனான தனிமைக்கு அவன் ஏங்க, அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், சுற்றி திரிந்து கொண்டே… இப்போதும் தன்னுடன் குடும்பம் நடத்த முயற்சி எடுக்காமல்,
ஃபோனில் தன் குடும்பத்துடன் கடலை போடும் இவளை என்ன செய்ய…
இவள் வழிக்கு வர மாட்டாள் என்று உணர்ந்து, பேசும் அவள் வாயை அவன் சிறை எடுக்க, அதிர்ந்து பழுப்பு பாவைகள் விரிய, அங்கே மிரு அண்ணி… அண்ணி என்று கத்தி கொண்டு இருக்க… சத்தமில்லாமல் ஒரு முத்த யுத்தம் இங்கே அரங்கேறி கொண்டு இருந்தது..
மிரு போனை அணைத்தாலும், இவர்களின் அணைப்பு இன்னும் இங்கே இறுக.. அதற்கு மேல் தாங்காமல் அவளை அள்ளி கொண்டு கட்டிலில் அமர்ந்து அவளை தன் மடி மீது அமர்த்தி, முத்த யுத்தத்தை தொடர்ந்தான் தேவா…
மூச்சுக்கு அவள் ஏங்கும் பொழுதில் விட்டவன், சிறிது இடைவெளி விட்டு அவள் கண் மூக்கு கன்னம் என்று அவள் முகத்தில் இஞ்சு விடாமல் தன் இதழ்களை அழுத்தமா ஒற்றி எடுத்து , மென் கன்னங்களை கடித்து வைக்க, வலியில் அவள் உதடு சுழிக்க, சுழித்த உதடுகளுக்கு வன்மையாக ஒரு தண்டனை…
அவனின் இந்த முரட்டுத்தனமான அணுகுமுறை அவளுக்கு சற்று உள்ளுக்குள் பயத்தை தூண்டி, அவனை விட்டு விலக.. விலகியவளை மீண்டும் இழுத்து அணைத்து அவள் மொத்த உடலும் அவன் உடலில் உரசி, தாப தீயை மூட்ட.. சிற்றிடையில் ஊன்றி நின்ற அவன் விரல்கள் அழுத்தமாக அவள் பெண்மையை… மென்மையாய் ஆராய தொடங்க… உச்சகட்ட மோகத்தில் அவன் உதடுகள் அவள் உதடுகளில் புதைந்து போயின…
அதற்குள் அறை கதவு தட்டப்பட்டது.. அதிர்ந்து விலகினாள் வைஷூ.. வெளியில் இரவு உணவுக்கு அழைத்து கொண்டிருந்தார் மதி..
கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை பிடிங்கிய பிள்ளை போல தேவாவின் நிலை…
செல்லும் மனைவியின் புடவை பற்றி இழுக்க, அவளோ ” அச்சோ விடுங்க… அம்மா கூப்பிடுறாங்க.. ”
” இந்த சாப்பாடு இருக்கும்போது, அது எதுக்குடி.. ” என்று அவள் கழுத்தில் புதைந்து கொண்டே கூற.. அவனை கஷ்டப்பட்டு விலக்கி, கெஞ்சி கொஞ்சி அழைத்து சென்றாள் சாப்பாட்டுக்கு…
சாப்பாட்டில் எங்கே அவன் கவனம், வாயும் கையும் தட்டில் சண்டையிட, கண்களோ அவளை பருகி கொண்டே…
வைஷூ விழிகளால் மற்றவர்களை காண்பித்து, ஒழுங்கா சாப்பிடுங்க என்று உருத்து விழிக்க, ரூம்க்கு வாடி.. வச்சுக்கிறேன் என்று வாய் அசைவில் மெசேஜ் அனுப்பினான், கூடவே முத்த ஸ்மைலியும்…
பெரியவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் சாப்பாடு முடித்து எழ, மீண்டும் இவர்களின் கண்கள் மற்றும் வாய் அசைவு நாடகங்கள் அரங்கேறின…
மதிக்கு பெரும் நிம்மதி, பெண் மாப்பிள்ளையின் அந்நியோன்யம் கண்டு…
அறைக்குள் நுழைந்தவள் அடுத்த நொடி அவன் அணைப்பில் இருக்க, விட்ட சரசத்தை தொடர்ந்தான் காதலனாக..
பதறி விலகி போனவளை, இடை பற்றி பின் பக்கமாக அணைத்து வாசம் பிடிக்க, கைகள் இரண்டும் அலைந்து கொண்டே அவள் முன் எழில்களின் எழில்களை சோதனை செய்ய… அவனின் வெப்பம் முழுவதும் அவளுக்கு கடத்தப்பட்டது.. அவனின் இதழ்கள் செய்யும் முத்த மழையில் ஏற்பட்ட குளிர்ச்சியும், அவனால் கடத்தப்பட்ட வெப்பமும் சேர்ந்து அவளை நிலை குழைய வைத்து அவன் மீதே சாய, அவன் படுக்கையில் விழ, இவளோ அவனையே படுக்கையாக்கி விழ மோக தாபங்கள் இருவருக்குள்ளும் கரை கடக்க இருந்த நிலையில்… மீண்டும் கரடியாய்.. இம்முறை அவன் மொபைல் ஒலித்தது..
அதுவும் அவன் தந்தையின் பிரத்யேக ரிங் டோன்.. இவர்கள் இங்கே இன்று தங்க போவது தெரியும், தெரிந்தும் கூப்பிடுகிறார் என்றால், அதுவும் இவ்வளவு நேரம் கழித்து, மோகங்கள் அறுந்து விழ, ஃபோன் எடுத்தவன் கேட்ட செய்தி அதை விட அதிர வைத்தது…
அவசரவசரமாக உடை சரி செய்து, வைஷூவையும் சரி செய்ய வைத்து அவசரமாக செல்ல வேண்டும், வீட்டில் அனைவரும் நலம், என்று பொதுவாக மதியிடம் உரைத்து விட்டு, தன் லம்பார்கினியில் பறந்தான் வைஷூவுடன் வீட்டை நோக்கி…
தேவாவின் இறுகிய முகம் எதையும் கேட்க விடாமல் வைஷூவின் வாயை அடைக்க, ஆனாலும் அவனை பார்த்து கொண்டே வந்தாள். வீட்டை நெருங்கியதும், அவள் கையை பற்றி அழுத்தி, அவளை இறுக்க அணைத்தவன், பின் விடுவித்து ” ஐம் ஆல் வேஸ் வித் யூ ” என்று அவள் கண்களை பார்த்து கூறினான் அழுத்தமாக…
இவர்கள் இறங்கி உள்ளே நுழைய, அன்று வைஷூ அமர்ந்திருந்த அதே இடத்தில்
தலை எல்லாம் கலைந்து, அவன் சட்டை எல்லாம் கசங்கி, புயலில் அகப்பட்டு சிக்கியவன் போல இருந்தாலும், கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து , வெறி வந்தவன் போல நடை பயின்று கொண்டிருந்தான் நந்தன்..
அவன் நின்ற விதமே சொல்லியது, முழு மட்டையாகி வம்பு இழுக்கவே வந்து இருக்கான் என்று.. இவர்களை ஜோடியாக கண்டு அவன் கண்களை ஒரு நொடி மூடி திறந்தவன், வேகமாக அருகில் செல்ல, வைஷூவோ தன்னை போல, தேவாவின் கரங்களை இறுக்க பற்றி, அவன் அருகில் இன்னும் நெருங்கி நின்றாள்.
பார்க்க பார்க்க அவன் கோபம் பொங்கி, ” ஏய்.. எப்படி என்னை விட்டு அவனை கட்டுவ நீ.??? அப்போ என்கிட்ட பழகுனது, ” என்று எகிறி அவள் அருகில் போக..
நந்தன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய தேவா, ” நந்தா..போதும். நீ குடிச்சிருக்க.. வீட்டுக்கு போ..”
” ஆமாம்.. யாரால. எல்லாம் இவளால தானே. என்னடி இல்ல.. என்கிட்ட. அவன் கிட்ட இருக்கிறது எல்லாம் என்கிட்டேயும் இருக்கு, பணம், அந்தஸ்து, தொழில், பரம்பரை.. கூடவே அவனை விட அழகு நான் ” துக்க மிகுதியிலும் தன் அழகை விடாதவனை நினைத்து தேவா தலையில் அடித்து கொள்ள, மோகன் தமயந்தி மிரு எல்லாம் புரியாத பாவனையில்…
” என்னை விட.. என்ன உசத்தி இவன்.. அப்பவே உன்னை தூக்கி இருக்கனும் டி.. விட்டுட்டேன்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல ” என்று தள்ளாடிய படியே அவளை நெருங்க, அவள் தேவா பின்னால் சென்று நின்று கொண்டாள்.
அடுத்த கணம் அவன் கன்னம் சுள் என்று எரிய, அப்போது தான் தேவா தன்னை அடித்தது புரிந்தது.
” யார கூப்பிடுற, அவ இப்போ என் பொண்டாட்டி.. அடுத்த அடிக்கு உயிரோட இருக்க மாட்ட.. கிளம்பு டா” என்று அவன் சட்டையை கொத்தாக பற்றி இழுத்து கொண்டே செல்ல, ” கல்யாணம் ஆனது எல்லாம் எனக்கு ஒரே மேட்டரே இல்லை.. நீ வேணும் .. நீ எனக்கு வேணும் டி.. அட்லீஸ்ட் ஒரு நாளாவது வேணும் டி. நீ என்ன அப்படி கண்ணகி பரம்பரையில.. இன்னும் இன்னும் அவளை தகாத வார்த்தைகளை கொண்டு அர்சிக்க.. அவனின் வார்த்தைக்கு வார்த்தை தேவாவின் அடி இடியென இறங்கியது அவன் முகத்தில்..
வைஷூ இரண்டு காதுகளையும் பொத்தி கொண்டு அங்கே அமர்ந்து விட, தேவா அம்மா என்று வேகமாக கத்தி, அன்னையிடம் தன் கண்களால் வைஷூவை பார்த்து கொள்ள சொல்லி, நந்தாவை இழுத்து கொண்டு சென்றான் அவன் இல்லம் நோக்கி..
வீட்டில் நுழைந்தவன், நந்தவை கீழே தள்ள, அமர்ந்து இருந்த ரூபாவதி, ” ஐய்யோ நந்தா என்று ஓடி வர, மனோகரோ அதிர்ச்சியில்..
தன் சித்தப்பாவை நெருங்கியவன், ” உங்க பிள்ளை உயிரோட இருக்கணும்னா… என் வழியில் வர சொல்லாதீங்க… அப்புறம் கொள்ளி போட புள்ள இருக்க மாட்டான் ” என்று எச்சரித்து விட்டு, தன் வீட்டுக்கு விரைந்தான் தன்னவளை காண..
அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க, வைஷாலி அங்கே இல்லை. கேள்வியாக தங்கையை நோக்க, ” அண்ணி.. ஒரே அழுகைண்ணா.. சமாதானப்படுத்த முடியல, பாலுல ஸ்லீபிங் பில் கலந்து கொடுத்து தான் தூங்க வைச்சேன்.. கெஸ்ட் ரூமில் தூங்குறாங்க..” அங்கே செல்ல திரும்பியவனை ” தேவா ” என்று மோகன் அழுத்தமாக அழைக்க…
” அப்பா.. பிளீஸ்.. எதுவா இருந்தாலும் காலையில் உங்களுக்கு சொல்லுறேன்..” என்று சொல்லிவிட்டு பதில் எதிர் பாராமல், மனைவியை காண விரைந்து விட்டான்.
தூங்கும் மனைவியை கையில் ஏந்தி கொண்டு, அவன் வெளியில் வர, தேவா வா இது என்ற ஆச்சரியம் அனைவரிடமும்… எதையும் யாரையும் கண்டு கொள்ளாமல், தன் தளம் நோக்கி சென்றவன், அறையில் சென்று படுக்கையில் தான் அவளை விட்டான்.
அசந்து தூங்கினாலும் அவளின் முகத்தில் தெரிந்த அந்த வருத்தம், அவன் உயிர் வரை கரைக்க… அவளை தன் மார்பில் தாங்கி, தலையை மெதுவாக கோதி விட, அவளே அறியாமல்
அவள் அவனிடம் நெருங்க, தன் நெஞ்சில் பொதித்து கொண்டான் தாயுமானவனாக…
ஆசைகள் ஆவியானது அன்பே..
இதய கிண்ணத்தில் தங்கியது..
கர்வம் வளரும்..
Super sis
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
super Deva !! So nice . You r typical husband., you took care of Vaishu
So cute Deva love 😍😍