ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18


18

 

 

காலையில் மிக தாமதமாகத்தான் எழுந்தான் தேவா.. அவன் நெஞ்சை மஞ்சம் என்ன கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தாள் வைஷாலி. அவனில் இருந்து அவளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அவள் தலையை கோதிக்கொண்டே படுத்து இருந்தான் தேவா. நேற்று நந்தன் பேசிய சொற்கள் அவன் காதில் நாராசமாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நமக்கே இப்படி என்றால் வைஷூ என்ன பாடு பட்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வருத்தப்பட வைக்க இறுக்கி அணைத்துக் கொண்டான் தன் மனையாளை எதிலிருந்தோ காப்பவன் போல..

 

அந்த இறுக்க அணைப்பிலும் ஆழ்ந்து உறங்கும் மனைவியை கலைக்க மனமில்லாமல் எழுந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வீட்டினரை எதிர் கொள்ள கீழே இறங்கி சென்றான்.

 

மிரு மருத்துவமனை கிளம்பி சென்று இருக்க , அங்கே அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் காத்து இருந்தார்கள் அவனின் பெற்றோர். 

மோகன் முகம் வெகு தீவிரமாக இருக்க தமயந்தியோ கலக்கம் கலந்த வருத்தத்தில்…

 

இவர்களை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே என்ற நினைப்புடன் அவர்கள் முன்னே சென்று நின்றான் தேவா.

 

எதுவும் பேசாமல் தேவாவை ஆழ்ந்து பார்த்தார் மோகன். எதுவா இருந்தாலும் உன் வாய் மொழியாகவே வரவேண்டுமென்று அப்பார்வை சொன்னது..

 

ஒரு பெருமூச்சு எடுத்து விட்டவன் தன் சித்தப்பா தன்னை காண வந்தது முதல் ஆதியோடு அந்தமாக அனைத்தையும் ஒப்புவித்தான். 

 

அடுத்த கணம் அவனை அறைந்திருந்தார் தமயந்தி. ” என்னடா பண்ணி வைச்சு இருக்கீங்க ரெண்டு பேரும் ஒரு பொண்ணோட வாழ்க்கையில… அதுவும் உன் கிட்டே இருந்து இப்படி ஒரு காரியத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை தேவா ” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்..

 

மனைவி அடித்தது விட, தேவா அதை வாங்கிக்கொண்டு நிற்பதை பார்த்த மோகனின் மனதில் வருத்தமே..

எல்லாத்தையும் சரியாக கணிக்கும் என் பையன் வைஷூ விஷயத்தில் மட்டும் எப்படி தவறினான் என்று.. முடிந்ததை பேசி இனி பயனில்லை என்று உணர்ந்தவர். தன் தம்பியை அழைத்து இது பற்றி கேட்கவா என்று தேவாவிடம் கேட்டார். 

 

” இல்லப்பா எப்போ நந்தன் இந்த மாதிரி பேசினானோ.. இனி பிரச்சனை அவனுக்கும் எனக்கும் மட்டும் தான்.. நீங்களோ சித்தப்பாவோ இதில் தலையிட வேண்டாம் ” என்றான் எஃகு குரலில்..

 

” வேண்டாம் தேவா நான் மனோகர் சொல்லி அவனை அடக்கி வைக்க சொல்றேன் “

 

” ஹ ஹ.. யாரு உங்க தம்பியா..அவரால் முடிஞ்சிருந்தா ஏன் எங்கிட்ட வந்திருக்க போறாரு.. தேவாவை தான் பார்த்து இருப்பான்.. இனிதான் தேவேஸ்வர ராஜனை பார்க்கப் போறான் ” என்று உரைத்து விட்டு தன் தளத்தை நோக்கி விரைந்து சென்று விட்டான்.

 

 

அதே நேரம் நந்தனும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தான். இனிதான் இந்த நந்த ராஜன் யாரென அவன் பாக்க போறான்… (அண்ணன் தம்பி எதுல ஒற்றுமையோ இல்லையோ பஞ்ச் டயலாக் மட்டும் கரெக்ட்டா இருக்கானுங்க)

 

நந்தன் அப்போதுதான் படுக்கையிலிருந்து இல்லையில்லை மப்பில் இருந்து தெளிந்தவன் தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க நேற்று நடந்தவைகள் எல்லாம் நினைவடுக்குகளில் ஒவ்வொன்றாக அணி வகுத்து வந்தது…

 

நேற்று இரவு நண்பர்களை பார்ப்பதாக சொல்லிக்கொண்டு தன் வழக்கமான பப்பில் நுழைந்தவன்.. அங்கே ஹை பிட்சில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றவாறு தன் கை கால்களை அசைத்துக் கொண்டே அந்நடன கும்பலில் கலந்து ஆடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் இவர்கள் நண்பர்கள் குழு ஒவ்வொருத்தராக வந்துவிட அந்த இடமே கலகலப்புக்கு பஞ்சமின்றி ஆட்டம் பாட்டமாய் தண்ணீரில் மிதந்தது…

 

“என்ன மாப்புள.. ஈரோப் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது ” இவனை போல அப்பாவின் பணத்தில் கெட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்லவன் பேச..

 

“செமையா போச்சு மச்சான்.. எதுக்கும் குறை இல்லை..” என்று நண்பனை பார்த்து கண்ணடித்தான் நந்தன்..

 

” உங்க அப்ப ரொம்ப நல்லவரு டா அதுக்குள்ள உன்னை ஈரோப் ட்ரிப் எல்லாம் அனுப்பி வைக்கிறார்.. இங்கே பப்புக்கு அனுப்புவதே வெல்ர்ட் டூர் அனுப்புற லெவலுக்கு பேசுவாருடா எங்கப்பா ” கூட்டத்தில் ஒருவன் அங்கலாய்ப்பு..

 

” அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் மச்சி ” என்று நந்தன் தன் காலரை தூக்கி கொண்டான்..

 

” அதானே நீங்க எல்லாம் வழிவழியாக வந்த பரம்பரை பணக்காரர்கள்… எங்கள மாதிரியா? ” என்று நந்தனின் புகழ் ஒருத்தன் பாட..

 

இன்னும் மிதப்பான பார்வையை தன் நண்பன் கூட்டத்திடம் காட்டினான் நந்தன்.

 

” இவ்வளவு பரம்பரை கௌரவம் இருக்கிற உங்க அண்ணன் போயும் போயும் அவர் காலேஜில் வொர்க் பண்ணுற லெக்சரர எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு ” ஒருவன் குண்டை போட…

 

லக்சரர் என்ற வார்த்தையில் அதிர்ந்தவன் , சேச்ச அவளா இருக்காது அவளுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே.. தான்தான் சம்பந்தப்படுத்தி வைத்தோம் என்பதை அறியாமலே யோசித்துக் கொண்டிருந்தான்… 

 

“ஆமாண்டா இன்னும் ரிசப்ஷன் கூட வைக்கல போலயே.. ஆனாலும் செம அழகுடா உங்க அண்ணி.. உங்க அண்ணன் பர்த்டே பார்ட்டில நான் பார்த்தேன்.. அதுவும் லவ் மேரேஜாமே… உங்க அண்ணன் லவ்வுக்கு வொர்த்தான பொண்ணுதான் “

 

இவர்கள் அவன் அண்ணியை பற்றி பேச பேச மனம் என்னவோ அவனுக்கு வைஷூவை தான் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது..

 

உடனே அவனிடம் அந்த போட்டோஸ் வச்சிருக்கியா என்று கேட்க ” இருடா பாத்து சொல்றேன் ” என்று தன் மொபைலில் நோண்டி அவன் எடுத்திருந்த ஒரு போட்டோவை எடுத்து நந்தனிடம் காட்டினான். 

 

போட்டோவை பார்த்தவுடன் நந்தன் அதிர்ந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அதில் தேவா வைஷூவின் தோளை அணைத்தவாறு இருக்க.. சுற்றி நண்பர்கள் கூட்டம் எதையோ சொல்லி சிரிக்க… கண்கள் மின்ன சிரித்து கொண்டிருந்தான் தேவா.. வைஷூவோ தன் கண்களால் அவனை பருகி கொண்டே… பார்க்க பார்க்க பற்றி எரிந்தது அவனுள்..

 

அடுத்து என்ன நினைத்தானோ தன் முன் இருந்த பாட்டிலை ஒரே மூச்சாக எடுத்துக் குடித்தவன் விறுவிறுவென்று தன் காரை நோக்கி சென்று விட்டான். காரை பேய் துரத்துவது போல வேகமாக விரட்டி வந்தவன் நிறுத்திய இடமுமோ தேவாவின் வீடுதான்…

 

” டேய் தேவா வெளியே வாடா .. இப்போ வெளிவர போறீயா இல்லையாடா ” என்று காட்டுத்தனமாக வீட்டின் போர்டிகோவில் என்று அவன் கத்த… தங்கள் தளத்தில் இருந்த வீட்டினரால் அதைக் கேட்க முடியவில்லை. 

 

வேலையாட்கள் சற்று தயங்கி மோகனிடம் நந்தனை பற்றி கூற அவர்கள் என்னவோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு வந்தனர். வந்தவர்களிடம் தேவா எங்கே என்று கேட்டான்.

 

மோகனோ இவன் நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று யோசித்தவாறு.. தேவா தன் மாமனார் வீட்டிற்கு சென்று இருக்கிறான் என கூற, அவனுக்கு இன்னும் வெறி பிடித்தது. உடனே போனை போட்டு வரச் சொல்லுங்க என்று கத்த பிறகுதான் மோகன் போன் செய்து தேவாவை வர சொன்னார். 

 

நினைவுகளில் மூழ்கியிருந்தவன் அறையை விட்டு வெளியேறி சென்றது தன் தந்தை அறைக்கு தான்.

 

” ஏன் இப்படி செஞ்சீங்க.. உங்க கிட்ட நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வைச்சு இருக்கீங்க.. ” என்று கோபமாக கத்த..

மனோகரும் தன் மகனை சமாதானப் படுத்த வேண்டி தாங்கள் செய்ததை முழுவதுமாக சொல்லி முடித்தார். 

 

அதில் தந்தையை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தவன். ” என் கிட்டேயிருந்து அவளை பிரிக்கிறேனு.. மொத்தமா தூக்கி அவன் கையில் கொடுத்துடீங்க ” 

 

ஏதோ சொல்லப்போன தந்தையை கை நீட்டி அவர் பேச போவதை தடுத்தவன்.. ” என்ன சின்ன பையன் நினைத்து தானே நீங்க ரெண்டு பேரும் செஞ்சீங்க.. இனிமேதான் இந்த நந்த ராஜன் யாரென்று நீங்க பார்க்க போறீங்க ” என்று கூறி வெளியில் விரைந்து விட்டான். அவரோ மகனை விட தேவா என்ன ‌செய்ய போகிறானோ என்று பயந்தவாறு அருகில் இருக்கும் சோஃபாவில் பொத்து என்று அமர்ந்தார்.

 

தன்னளைத் தேடிச் சென்ற தேவா படுக்கையில் அவனை காணாமல் தேட… பால்கனியில் நின்றவாறு தோட்டத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையில் ரசனை இல்லை வெறுமை மட்டுமே…

 

சிறுது நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல அவளை நெருங்கினான்.. பின்னிருந்து அணைத்தவன் அவள் தோளில் தன் தாடையை பதித்து.. “கரஸ் மேடம் என்ன தனியா யோசனை.. நேத்து விட்ட கணக்கை இன்னைக்கு சரி பண்ணுவோமா ? ” என்றான் அவள் காதுகளில் ரகசியமாக…

 

நேற்று எதுவும் நடவாத மாதிரி, இப்போது தன்னுடன் ரொமான்ஸ் செய்யும் இவனை என்ன செய்ய என்று முறைத்தாள் வைஷூ..

 

அவள் பார்வையின் பொருள் உணர்ந்து.. அவளை பற்றியிருந்த இடையை ஒரு சுழற்று சுழற்றி அவளை தன்னை நோக்கித் திருப்பினான். ஆனால் இடையின் இறுக்கம் சற்றும் தளரவில்லை.. அவள் முகத்தை தன்னை நோக்கி மேல் உயர்த்தி அந்த பழுப்பு பாவைக்குள் ஆழ்ந்து பார்த்தான். எப்போதும் அவனை தன்னுள் இருக்கும் அப்பாவை இன்று அவனுள் தொலைய.. 

 

” வைஷூமா.. நந்தனை பற்றி எனக்கு தெரியும். அவனுக்கு தன் அழகு மீது அதீத ஒரு பெருமை.. அவன் இருக்கும் இடத்துல அவனை தான் எல்லாரும் பார்க்கணும் அவனுக்கு ஒரு வெறியே இருக்கும்.. என் கணக்குபடி நீ அவன திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட.. அதனால உன்னை பார்க்க வைக்க.. அவன் உன்னோட பழக ஆரம்பித்து இருப்பான். நீ இதை போட்டு குழப்பிக்காத… அவன் ஆயிரம் சொன்னாலும் என் பொண்டாட்டியை எனக்கு தெரியாதா.. என் சட்டையை பிடித்து என்னிடம் சண்டை போட்ட நவீன கண்ணகி இல்லையா ” என்று அந்நாளின் நினைவில் கண்கள் மின்ன ரசித்து சொன்னான்.

 

இதுவரை தேவா எப்படி இதை எடுத்து கொள்வானோ வீட்டில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று மருகி கொண்டிருந்த வைஷூவின் நெஞ்சம் குளிர்ந்தது. கணவனின் புரிதலில் அவனை அணைத்து உச்சி முகர ஆவல் கொண்டது மனம் . ஆனால் நாணம் தடுக்க அமைதியாக கண்களில் காதல் வழிய அவனைப் பார்த்த வண்ணமே இருந்தாள்..

 

” உன் மைண்ட் வாய்ஸ் என்ன ” என்றான் சிரிப்புடன்… அதில் உன்னை நான் கண்டு கொண்டேன் என்று பொருள் இருந்தது.

 

“ஒன்னும் இல்லை “என்று அவள் வெட்கி கூற..

 

“ஒண்ணுமே இல்லையா “என்று அந்த ஒன்னுமேவை அழுத்தமாக கூறியவனின் கைகள் அவள் இடையை நெருக்கி வளைத்தது.

 

இந்த கள்வன் எதற்கு அடிப் போடுகிறான் என்று தெரியாதா அவளுக்கு.. கண்களில் மயக்கத்தோடு பழுப்பு பாவைகள் காதலில் மின்ன அவனை நெருங்கி, சிரிக்கும்போது அவளை வீழ்த்தும் அந்த கன்னக்குழியில் மெல்ல முத்தமிட்டாள் காதல் கள்ளியாக…

 

சிணுங்கும் பிள்ளையாக ” இதெல்லாம் போங்கு ஆட்டமடி… கொஞ்சம் கூட பத்தாது” என்றான்..

 

” நான் வேணும்னா சொல்லி தரவா” என்றான் கிசுகிசுப்பான குரலில்..

 

கன்னங்கள் சூடேற முகத்தை அவன் மார்பில் புதைத்து மறைத்தவள்.. வேணாம் என்றாள்..

 

“நிஜமாகவே வேணாமா ” என்றான் சிறு கோபம் எட்டி பார்க்க..

 

அவனின் கோபம் அவளுக்கு ரசித்தது இன்னும் கொஞ்சம் சீண்டிப்பார்க்க எண்ணி.. அவனை நிமிர்ந்து பார்த்து கண்கள் சொருகி உதடு குவித்து “இத்துனூண்டு கூட வேண்டாம் ” என்றாள்..

 

அவனுக்கு முனுமுனுவென்று கோபம் எட்டிப்பார்க்க… ஆனால் அவள் கண்களில் தெரிந்த பளபளப்பு அவள் விளையாடுகிறாள் என்பது புரிய.. 

 

அவள் காதை தன் பற்கள் பட கடித்தவன் ” விளையாடுறீயாடி ” என்றான் கிறங்கிய குரலில்..

 

அவள் கலகலப்பு சிரித்து ” பெரிய பிசினஸ்மேன்.. ஆளைப் பார்த்து நினைப்பை சொல்லுவார் என்ற பெத்த பேரு வேற.. ஆனா பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனு தெரியல ” என்று சீண்டினாள்.

 

அடிப்பாவி என்று அவன் வியந்து பார்க்க.. ஒற்றை புருவத்தை தூக்கி கெத்தாக அவனைப் பார்த்தவள்.. “நாங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தம்.. வேணும்னாலும் வேணும்னு தான் அர்த்தம்… வேண்டவே வேண்டாம்னாலும் வேணும் தான் அர்த்தம் “என்று கூற.. 

அவள் விளக்கத்தில் குழம்பித்தான் போனான் அந்த கணவன். இப்போது அவனுக்கு வேணுமா வேண்டாமா என்பது பெருத்த சந்தேகம்…

 

அவளின் இந்த குறும்பு விளையாட்டில் தன்னைத் தொலைத்தவன்.. இருடி என்று அவளை நெருங்கி தன் கைகளாலும் உதடுகளாலும் தக்கவாறு தண்டனை கொடுக்க… அவனை விட்டு விலக முடியாமல் துள்ளி குதித்து அவனிடமே இன்னும் நெருங்க அவனின் காதல் லீலைகள் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே இருந்தது…

 

 

அவனின் சில்மிஷ தீண்டல்கள் நான் ஸ்டாப்பா செல்ல… அவள் வேண்டாம் என்றால் வேண்டும் என்று எந்த நேரத்தில் சொன்னாளோ.. அந்தக் கள்ளன் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டான். அவள் போதும் என்றாலும்.. விடுங்கள் என்றாலும்.. அதற்கு எதிர்ப்பதமாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு அவளை தன் காதல் கொண்டு கலங்க அடித்துக் கொண்டிருந்தான்..

 

பின் இருவருமாக உணவருந்தச் செல்ல வைஷூவின் முகத்தில் இருந்த புன்னகையும் கன்ன சிவப்புமே அவள் தெளிவாக இருக்கிறாள் என்பதை தமயந்திக்கு தெரிவித்தது. அதனால் அவர் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் பொதுவான விஷயங்களை பேசி கொண்டே அந்த நாள் நன்றாகவே நகர்ந்தது அவர்களுக்கு..

 

மறுநாள் காலை நந்தனை அவர்கள் வீட்டு வரவேற்பரையில் பார்க்கும் வரை…

 

கர்வம் வளரும்..

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top