ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20

 

20

 

 

 

வைஷாலி பேச்சை நந்தன் ரசித்தாலும் அது தனக்கு எதிராக அவள் பேசியது கண்டு மனம் துணுக்குற்றது. அவளின் மிடுக்கான பேச்சை நந்தன் வெகுவாகவே ரசித்தான் அதை அவனது கண்கள் வெளிப்படையாகக் காட்ட… அவனை கண்களாலே எரித்தான் தேவா.. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்த வைஷாலி நந்தனை நோக்கி.. ஓ நீங்க உங்க லெக்சரரை் பார்க்க வந்தீங்களா என்று அவன் மேம் என்று அழைத்ததை சூசகமாக கூற.. அப்போதும் நந்தன் அவளை பார்த்தவண்ணமே நின்று கொண்டிருந்தான். 

 

தன் கணவரை கையை பிடித்து இழுத்து ” உக்காருங்க தேவா “என்று அமர வைத்தவள் , தானும் அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்க்க.. இப்போது சொல் என்றது அவளின் அந்த பழுப்பு பாவை…

 

அவளின் செய்கைகள் ஒவ்வொன்றும் அவனுக்கு கோபத்திற்கு பதில் ரசனையை கூட்டுவதாகவே.. அவனின் ரசனை பார்வை புரியாதா தேவாவிற்கு.. ஒரு ஆணாக ஒரு ஆணின் பார்வையை புரிந்து கொண்டவன் மனதில் இவன் அடங்கவே மாட்டேன் என்கிறானே என்ற நினைப்பே.. ஆனால் நேற்று மனைவியிடம் பேசி வந்த பின் மனதில் ஒரு தெளிவுடன் கூடிய நம்பிக்கை பிறந்திருக்க.. இப்போது மனைவியின் செயல்களை கை கட்டி அவதானித்துக்கொண்டு இருந்தான் பார்வையாளனாக… 

 

நந்தனை நோக்கி” நீங்க லக்சரர் இல்ல கரஸ்பாண்டன்ட் பார்க்கணும்னா காலேஜ் தான் வரணும்.. என்றாள் அழுத்தமாக.

 

” அப்போ ரீலேஷனா வரலாம் தானே ” என்றான் நந்தன் விட்டேனா என்று…

 

“தாராளமா ” என்றவள், தன் நாடியைத் தொட்டு ஏதோ யோசித்து ஒரு சோஃபா தள்ளி அமர்ந்திருந்த தமயந்தியை நோக்கி.. ” அத்தை இவர் எனக்கு கொழுந்தன் முறை தானே.. ஒவ்வோரு முறையும் இவரை வாங்க கொழுந்தன்.. போங்க கொழுந்தன்..சாப்பிடுங்க கொழுந்தன்னு சொன்னா நல்லாவா இருக்கும்… நீங்க எப்படி உங்க கொழுந்தனாரை கூப்பிடுவீங்க ” என்று அப்பாவியாக கேட்க..

 

விஷயம் எல்லாம் அறிந்திருந்த தமயந்தியும் மருமகளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்து ” என் கொழுந்தனார் அதாவது நந்தன் அப்பாவை நான் தம்பினு தான் கூப்பிடுவேன் வைஷூமா ” என்றார்.. 

 

கண்கள் மின்ன அவரைப் பார்த்தவள் “தேங்க்ஸ் அத்தை “என்றாள்.

 

பின் அதே குறும்புடன் நந்தனை பார்த்து ” ஏன் தம்பி.. இன்னும் நின்னுகிட்டு இருக்கீங்க தம்பி.. உட்காருங்க தம்பி.. டீ காபி ஏதும் சாப்பிட்டீங்களா தம்பி?? என்றாள் வார்த்தைக்கு ஒரு தம்பியை போட்டு.. 

 

தேவாவும் இதழ் பிரிக்காமல் உடல் குலுங்க ஒரு சிரிப்பை தத்தெடுக்க.. தமயந்தியும் மோகனும் தங்களுக்குள் மென்னகை புரிந்து கொண்டனர்.

 

நந்தனுக்கு அந்த தம்பி வேப்பங்காயாக கசந்து வழிந்தது.. எப்படிச் சொல்வான் தம்பி சொல்லாதீங்க என்று அவன் விழி பிதுங்கி நிற்க.. தேவா மெல்ல எழுந்து அவன் புறம் சென்று , அவன் தோளில் கைபோட்டு அணைத்தவாறு ” ப்ரோ.. நானாவது பரவாயில்லை வலிச்சா அழுகிற மாதிரி அடிப்பேன்.. ஆனால் அவள் இருக்கா பாரு கேடிக்கெல்லாம் கேடி.. வலிச்சா வெளியில் சொல்லி அழுத முடியாத மாதிரியே அடிப்பா… அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ ” என்று பாசத்துடன் அறிவுரை கூறினான்.

 

அப்படி எல்லாம் என்னை தடுத்துவிட முடியாது என்று தன் அண்ணனை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு வைஷூவிடம் ” பை மேம்.. லெட் அஸ் சீ சூன் ” என்று கூறி நெற்றியில் இரு விரல்களால் ஒரு சல்யூட் அடித்து விட்டு சென்றுவிட்டான்.

 

அதுவரை நந்தனை எப்படி வைஷூ எதிர்கொள்வாளோ.. மீண்டும் ஏதேனும் ஒரு சண்டை வந்து விடுமோ என்று பயந்திருந்த மோகன் தமயந்தி தம்பதியினரும் வைஷூவின் இந்த கையாடல் மிகப்பிடித்தமே.. 

 

 

அலுவலகம் செல்லவேண்டும் என கிளம்ப அறைக்கு வந்தவன் பின்னே வைஷூவும் வர.. அலுவலகம் கிளம்பிக் கொண்டே அவளை பார்த்தவன் ” நீயும் என் கூட ஆபீஸ்க்கு வாயேன் ” என்றான் தன் டையை சரி செய்து கொண்டே..

 

” ஏற்கனவே கரஸ்பாண்டன்ட் போஸ்ட் என் தலையில் கட்டியாச்சு.. அங்கே வந்தா உங்க எம்.டி போஸ்ட் என்கிட்ட கொடுத்துட்டு சார் என்ன செய்ய போறீங்க ?” என்று கேட்க..

 

” எம்.டி போஸ்ட் நீ எடுத்துகிட்டனா.. நான் ரொம்ப ஃப்ரீயா.. ஹேப்பியா.. என் பொண்டாட்டி ஐ லவ் செய்ற வேலைய மட்டும் செய்வேன் ” என்றான் உல்லாசமாக.. 

 

” ஆமாமா.. இவர் அப்படியே ரொமான்ஸ் மன்னர். ஆபீஸ்ல போயும் ரொமான்ஸ் பண்ண போறாரு ” என்று தன் கீழ் உதடு சுழிக்க..

 

சுழிக்கும் உதட்டுக்கு தண்டனை கொடுக்க அவனுக்கு எண்ணம் தோன்ற, அவள் கீழ் இதழை மட்டும் பிடித்து இழுத்தவன்‌. ” உன்ன மாதிரியே இந்த லிப்ஸூம் அடங்கவே மாட்டேங்குது டி ” என்று கிறக்கமாக கூறிக்கொண்டே, தன் இதழ்களுக்குள் அவளின் கீழ் உதட்டை விழுங்கி சுவைத்தான். கோவையென சிவந்திருந்த முகத்தை பார்த்து மீண்டும் ஆசை துளிர்க்க, இடை பிடித்து அணைத்தவனை நெஞ்சில் கை வைத்து ” போதும் போதும்… ஆபீஸ் கிளம்புங்க ” என்று அவனை பிடித்து தள்ள.. ” வைஷூமா நிஜமா தான் சொல்றேன் நீயும் ஆபீஸ்க்கு வா ” என்றான் கொஞ்சலாக..

 

” இப்போ உனக்கு காலேஜ் லீவு தானே.. அங்க போய் என்ன பண்ண போற ? வீட்டில் உனக்கும் போர் அடிக்கும்.. என் கூட நீ கிளம்பி ஆபீஸ்க்கு வர ” என்றான் முடிவு எடுத்தவனாக…

 

” சரியான பிடிவாதம் நீங்க ” என்று அவன் டையை இழுத்த வண்ணமே கூறி.. ” ஆபீஸ்ல நான் என்ன வேலை பார்க்க ..” என்று ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு மறுகையால் தாடை தாங்கி யோசிக்க… 

 

” என்ன வேலை வேணா பார்க்கலாம்.. உங்க ஆபீஸ் எம்.டியை சைட் அடிக்கலாம்.. இல்லை எனக்கு அப்பப்போ ஒர்க் டென்ஷன் வந்தால் தலையை பிடித்து விட்டு ஒரு ஸ்ட்ராங் காபி போட்டு தரலாம்.. அப்புறம் உங்க எம்.டிக்கு ரொமான்ஸ் மூட் வரும் போதெல்லாம் அவருக்கு கம்பெனி கொடுக்கலாம்.. இப்படி நிறைய லாம்..லாம்.. இருக்கே ” என்று புருவம் உயர்த்தி கேட்க..

 

” நீங்க வேணா உங்க பொண்டாட்டிய விட்டுட்டு ஆபீஸ் ஸ்டாப்வோட ரொமான்ஸ் பண்ணலாம். ஆனா என் புருஷனுக்கு மட்டும் இது தெரிஞ்சது அவர் எம்.டி. எல்லாம் பார்க்க மாட்டாரு.. சேர்மேன்னு பார்க்க மாட்டாரு ஒரே வெட்டு தான் ” என்று அவள் கையில் அருவா வீச.. கன்னம் குழி விழ அழகாக சிரித்தான் தேவா.. வீரம் பேசியவள் இப்போது கன்னக்குழியின் வசீகரத்தில் மயங்கி நின்றாள்.. 

 

” ஓகே ஓகே.‌ இப்போ சீரியஸ் மூடுக்கு வருவோமா ?” என்றவன், ” நம்ம கம்பெனில முக்கியமான பிசினஸ் பினான்ஸ் தான்.. தாத்தா ஆரம்பிச்சு வச்சது.. அப்பாவும் சித்தப்பாவும் அதை வளர்த்தாங்க, கூடவே இன்னும் வேற தொழிலையும் அப்பா காலத்துல ஆரம்பிச்சாங்க. இப்போ நான் ஹேண்ட் ஓவர் பண்ணதுக்கு அப்பறம் இன்னும் விரிவு செய்தேன்.. ஆனா இந்த பினான்ஸ் பிசினஸ் மட்டும் அப்பாதான் பாக்குறாங்க.. சோ.. நீ பினான்சில மாஸ்டர் தானே. அதான் உன்னை பார்க்க சொல்றேன்.. மொத்தமா சார்ஜ் எடுத்துக்க வேணாம்.. இப்போதைக்கு ஜஸ்ட் பினான்சியல் அனாலிஸ்டா வொர்க் பண்ணு, காலேஜ் ஓப்பன் பண்ற வரை ” என்று கூறினான்.

 

அவனின் இந்த கூற்று அவளுக்கும் சரி என்றே தோன்றியது. வீட்டில் பொழுது போகாமல் சுற்றிக் கொண்டே இருப்பதற்கு இது மேல் அல்லவா அதுவும் அவளது டிபார்ட்மெண்ட்.. சரி என்று கூறி அவனுடனே ஆபீஸ் கிளம்பினாள் வைஷாலி..

 

தன்னுடன் காரில் வரும் மனைவியை ரசித்த வண்ணமே காரை செலுத்திக் கொண்டிருந்தான் அலுவலகத்தை நோக்கி.. மனமோ வைஷுவை அலுவலகத்துக்கு அதுவும் பைனான்ஸ் பார்த்துக்க சொல்லியது, அப்பாவின் வயசு ஒரு காரணம் என்றாலும் முக்கியமான காரணம் நந்தனே.. அவர்களின் முக்கியமான தொழிலிலும் பைனான்ஸ் தான். அதனால் தான் நந்தன் பைனான்ஸ் எடுக்கிறேன் என்றதும் சித்தப்பாவை ஒப்புக்கொள்ள செய்தான் தேவா… ஒருவகையில் நந்தனை அவர்களுக்கான தொழில் முற்றுமாக மடைமாற்றி விட தான் வைஷூவின் இத்தொழில் விஜயம்.. ஆயிரம் சண்டைகள் போட்டாலும்.. நந்தனை மாற்றும் கடமை அண்ணனாகிய தேவாவுக்கு என்ற எண்ணமும் ஒரு காரணம். அதை இவர்களுக்கு தெரியாமலே மிக சாதுர்யமாக காயை நகர்த்தினான்.. தேர்ந்த தொழில் நிபுணன் அல்லவா..

 

” வெல்கம் டூ அவர் ஆபிஸ் மிஸ்ஸர்ஸ். தேவேஷ்வர ராஜன் ” என்று அவளை தன் ஆஃபிஸ் அறைக்கு அழைத்து சென்றான்.

 

கார் ஆபீஸில் நுழைந்தது முதல் அந்த பிரமாண்டமான பத்து அடுக்கு கட்டிடத்தை விழிகள் விரிய பார்த்துக் கொண்டேதான் வந்தாள் வைஷூ. அவளின் எண்ணத்தை விட அவனின் வளர்ச்சி அபரிமிதமான தான். வாய் கூறவில்லை என்றாலும் அவளின் முக பாவனைகள் அவற்றை கூறிக்கொண்டே தான் வந்தது.. அவள் முகங்கள் காட்டும் நவரசங்களை ரசித்தவாறு இருந்தான் தேவா.

 

” தேவா.. யூ ஆர் கிரேட்.. உங்க க்ரோத் ஆவ்ஸம்.. என்றாள் இன்னும் ஆச்சர்யம் கலையாமல்.

 

” இந்த வளர்ச்சி எல்லாம் இந்த மூணு வருஷத்திலே வந்தது தான் ” என்றான் அவளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு.. அவன் கண்களின் செய்தியை படித்த வைஷூ, புரிந்து கொண்டதை அவனிடம் காட்டாமல் அவ்வறையை நோக்கி கண்களைச் சுழற்றினாள்..

 

தேவாவும் தன் தலையை இருபக்கமும் ஆட்டி சிரித்துக்கொண்டே.. தன் இருக்கையில் அமர்ந்து, எதிர் இருக்கையில் அவளை அமரச்செய்து சில பைல்ஸ்களை அவரிடம் கொடுத்து பார்க்கச் சொன்னான்.. 

 

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில் இருவரும் அலுவலகம் செல்வதும் மதியம் போல வீட்டுக்கு உணவுக்கு வரும் போது அவளை வீட்டில் விட்டு அவன் சென்று விடுவதும் வழக்கமாகின.. வைஷூ அலுவலகத்துக்கு வந்த மறுநாளே தன் அறையிலேயே அவளுக்கான தனி கேபினையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டான்.. இருவருக்கான நேரங்கள் இவ்வாறே சென்றது.

 

மோகனும் தமயந்தியும் அவர்களுக்கான வரவேற்பு பணிகளை துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துணிகள் நகைகள் என்று எல்லாவற்றையும் தமயந்தியே பார்த்துக்கொள்ள.. மண்டபம் புக் செய்வது கேட்டரிங் அலங்காரம் என இதற்காக உள்ள ஏஜென்சியிடம் மோகன் விட்டுவிட்டாலும், நண்பர்கள் வட்டாரம், சொந்த பந்தங்கள் என அழைப்பு கொடுக்க இருவரும் அலைந்த வண்ணமே இருந்தனர்.. மிருவும் தன் பங்கிற்கு தன் நண்பர்கள் அழைப்பு கொடுக்க என அவளும் பிசியாக. தேவாவிற்கு நண்பர்கள் என்று இங்கே பெரிதாக யாரும் கிடையாது . அதேபோல வைஷூக்கு அதிகம் காலேஜ்ஜில் படித்த நண்பர்களே, அவர்களுக்கு மெயில் மூலமே தன் வரவேற்பு அழைப்பிதழ் அனுப்பி வைத்திருந்தாள்.

 

அன்று தேவா பிஸியாக தன் தொழில்கள் பற்றி மேனேஜர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்க.. இந்தத் தொழில் நிபுணன் எப்பவும் போல இப்பவும் அவளுக்கு வித்தியாசமானவனே.. கூடவே வசீகரமானவனே.. வைஷூ அவனையே பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

 

அவர்களை அனுப்பி வைத்தவன் சன்னமாக விசிலடித்துக் கொண்டே தன்னவள் புறம் திரும்பி ” என்ன மேடம் அன்னைக்கு உங்க எம்டியை சைட் அடிக்க மாட்டேன்னு சொன்னீங்க.. இப்போ வச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டே இருக்கீங்க.. அப்புறம் உங்க புருஷன் அருவாளோட வந்துட போறாரு..” என்று அவளை வாரினான். அவள் வெட்கி சிரித்து கொண்டாள்.

 

பின் தன் கையிலிருக்கும் பைலை அவன் அருகே கொண்டு வந்தவள் அதை வைத்து அவனிடம் தொழில் பற்றிய விவரங்களை பேச ஆரம்பித்தாள். 

 

“என்னங்க.. இது நம்ம பைனான்ஸ் குரூப் பத்தின ஒரு டேட்டா.. இதுல நான் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாமென நினைக்கிறேன். நம்ம கம்பெனி பினான்ஸ் கொடுக்கிறது ஜாஸ்தி பாத்தீங்கன்னா பெரிய பெரிய கம்பெனி .. எஜூக்கேஷனல் இன்ஸ்டியூட்.. எக்ஸாபோர்ட் இம்போர்ட் கம்பெனி.. இந்த மாதிரி தான். நமக்கு இதுல லாபம்தான் இல்லைன்னு சொல்லல.. பட் நாம ஏன் கொஞ்சம் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி பக்கம் கன்சிடர் பண்ணக்கூடாது.. மொத்தமா வேணாம். ஜஸ்ட் 25% அவங்களுக்காக நாம ஸ்பெண்ட் பண்ணலாமே.. நம்ம நாட்டு தொழில் துறையில் முக்கியமான பங்கு அவங்களுக்கு இருக்கு. அதோட இண்டஸ்ட்ரிஸ் கம்பேர் பண்ணும்போது பெரிய கம்பெனி விட அவர்கள் தான் ஜாஸ்தி.. இதனால நம்ம கம்பெனி நேமும் இன்னும் பிரபலமாகும். நீங்கதான் மாமா கிட்ட பேசி கன்சிடேர் பண்ண சொல்லுங்க ” என்று கூற அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தேவா.

 

என்ன என்று அவள் கேட்க.. ” பாரு இங்க கம்பெனிக்கு வர ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள எப்படி எல்லாம் யோசிக்கற வித்தியாசமா ” என்று அவன் வியக்க.. 

 

“நான் தேவா பொண்டாட்டியாக்கும்.. இது கூட கற்றுக்கொள்ளலேன்னா எப்படி இந்த ஒரு வாரத்தில் ” என்று அவள் கண் சிமிட்ட..

 

ஒரு பெருமூச்சை விட்டவன் ” இது மட்டுமா சொல்லித் தந்தேன் நான். வேற ஒரு விஷயம் தான் சொல்லிக் கொடுத்தேன். ஆனா அதுல எந்த முன்னேற்றமும் இல்லையே ” என்று வருத்தப்பட…

 

அவன் பேச்சில் லஜ்ஜையுற்றவள்.. ” உங்க ட்ரெய்னிங் பத்தல ராசா.. பத்தவே இல்லை.. ” என்று தன் உதடு பிதுக்கி ராகம் இழுத்தாள்.

 

இருக்கையில் இருந்து டக்கென்று எழுந்தவன், தனது சட்டையின் கை பட்டன்களை அவிழ்த்து, முழங்கை வரை ஏற்றி கொண்டே அவளை நெருங்கியவன் ” என்னது டிரைனிங் பத்தலயா.. இனி நோ ஆஃபீஸ்.. நோ ஒர்க்.. ஒன்லி ட்ரைனிங் தான் ” என்று அவளை நெருங்கினான். 

 

” அச்சோ.. இது ஆஃபிஸ் ” என்று அவள் அஞ்சி ஓட, அவளை துரத்தியவன் இரண்டே எட்டில் அவளை பிடித்து, தன் தேவையை அவள் உதட்டில் நிறைவேற்றி கொண்டே அவளை விடுவித்தான். 

 

இருவரின் பொழுது இனிமையாக சென்று கொண்டிருக்க.. அவர்களுக்கு இடைஞ்சல் செய்யவென்றே நந்தன் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆம் தொழில்களை அவன் பார்த்துக்கொள்வதாக கூற பெரும் அதிர்ச்சியில் மனோகர்.. 

 

 

கர்வம் வளரும்..

2 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top