ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளாராதே 2

அத்தியாயம் 2

 

ஜில்லென்ற ஏசி காற்றையும் தாண்டி, உடல் முழுவதும் வேர்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஹாசினி. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லிருக்கின்றாள்? எந்த பெண்ணும் செய்ய தயங்கும் காரியம். சொல்லும் போது உறுதியாக இருந்த மனம், இப்போது படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அலங்கரிக்கப்பட்ட அறைகளின் நுழைந்தவளுக்கு அடைபட்ட சிங்கம் கூண்டிற்குள், இங்கும் அங்கும் நடப்பதை போல், நடந்து கொண்டிருந்த ஹரிஷான்த்தை கண்டதும், கால் தரையில் நிற்காது, நடுங்கத் தொடங்கியது. உள்ளே நுழைந்தவளை திரும்பி பார்த்தவனின் கண்ணில் இருந்ததென்ன? வெறுப்பா? குரோதமா? ஏமாற்றமா? கோபமா? அல்லது அதையும் தாண்டிய ஒன்றா? மெல்ல நடந்து வந்தவள், தன் கையில் இருந்த பால் செம்பை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்தாள். தன் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பவளை வளைத்துப் பிடித்தவன், அவளது முகமெங்கும் முத்தமிட, தளிர் மேனி கொண்டவளோ, வெடவெடத்துப் போனாள். மேகம் மறைத்த நிலாவை வெளியே இழுப்பதை போல, தேகம் மறைத்த பாலாடையை கலைக்க, நாணங்கொண்ட மங்கையோ மன்னவனின் மேல் சாய, வெட்கம் வந்து அழையா விருந்தாளியாக ஒட்டி கொண்டது. 

 

“ ஹேய் என்ன? அங்கேயே நிற்குற, போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்கோ.. நீ செஞ்ச காரியத்துக்கு உன்னைய அப்படியே கொல்லணும் போல இருக்கு.. பட், அர்ஜுன் அங்கிள் முகத்துக்காக மன்னிப்பு விட வேண்டியதா போச்சு.. இங்கப்பாரு, நம்ம ரெண்டு பேருக்கும் நடந்தது, என்னைய பொறுத்தவரைக்கும் என் வாழ்க்கையில நான் செஞ்ச மிகப் பெரிய மிஸ்டேக்.. புரியுதா? சரியா ஒரு வருஷத்துல நாம் ரெண்டு பேரும் டிவொர்ஸ் பண்ண தான் போறோம்.. அது உனக்கு எந்த வித சந்தேகமும் வேணாம்.. இல்ல, ஏதாவது பண்ணி இவன் மனசை மாத்தலாம்னு மட்டும் நினைச்சிடாத.. அது மட்டும் நடக்கவே நடக்காது.. இந்தா, இந்த போர்வையும் தலையணையையும் எடுத்துட்டு போய் அங்க இருக்குற சோஃபால படுத்துக்கோ.. குட் நைட்.” என்று விளக்கை அணைத்த ஹரிஷான்த், அவ்வளவு தான் தன்னுடைய பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போல் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான். அவனையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்த ஹாசினி, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். பின்ன, அவள் செய்த காரியத்திற்கு அவன் அவளிடம் பேசுவதே பெரிய விஷயமல்லவா?! போர்வையை கீழே விரித்து படுத்துக் கொண்டவளை பார்த்தவாறே கண் மூடினான் ஹரிஷான்த். அவன் தூங்கிவிட்டத்தை உணர்ந்து கொண்ட ஹாசினி, அவன் புறம் திரும்பி அவனை பார்த்தவாறே கண்விழித்திருந்தாள். ஒரு ஜோடி உறங்கத் தொடங்கியிருக்க, மற்றொரு ஜோடியோ, கையில் ஆயிதத்தோடு நின்றிருந்தனர். 

 

“எல்லோர் முன்னாடியும் என்னோட வேஷ்டியை அவிழ்த்து விட்டுருப்ப? உன்னைய.. ஹேய் ஓடாத.. நில்லுங்குறேன்ல..” என்றவாறு தூரத்தியவனுக்கு அழகு காட்டியவாறு இங்கும் அங்கும் ஓடியவள், சட்டென விளக்கை அணைத்து விடவே,

 

“ஹேய்.. என்ன பண்ணுற? என்கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்னு நினைக்குறியா?” என்றவன் தட்டுத்தடுமாறி குளியலறை பக்கம் செல்ல, அவன் அசந்திருக்கும் நேரமாக பார்த்து, அவனை பின்னால் இருந்து தள்ளிவிட்டாள் விளானி. 

 

“அய்யோ.. அம்மா..” என்றவாறே குளியலறைக்குள் சென்று விழுந்தவனை, அப்படியே உள்ளே வைத்து கதவை வெளித் தாழ்ப்பாளிட்டாள் விளானி. 

 

“ஹேய்.. என்னைய உள்ள வைச்சா பூட்டுற.. ஒழுங்கு மரியாதையா கதவை திற.. இல்ல?”

 

“இல்லன்னா.. என்ன பண்ணுவ? இன்னைக்கு நைட்.. குட் நைட்யில்ல.. டாயிலெட் நைட் தான்.. உள்ளேயே கிட..” என்றவள் கட்டிலில் படுத்து கண்ணை மூட, கதவை உடைத்து விடுபவன் போல் தட்டிக்கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“தட்டு.. தட்டு நல்லாத் தட்டு.. அந்தகாலத்து தேக்கு மரத்தால செஞ்ச கதவு.. அவ்வளவு சீக்கிரம் உடையாது.. நான் மியூசிக் கேட்டுட்டே தூங்கப் போறேன்.. காலைல பார்க்கலாம்..” என்றவாறே தூங்கித் தொடங்கினாள் விளானி. கதவைத் தட்டி, தட்டி ஓய்ந்து போனவன், அப்படியே குளியலறைக்குள்ளேயே கண்ணயர்ந்தான் ஹர்ஷவர்தன். மறுநாள் காலையில் எழுந்தவள், குளியலறைக் கதவை சத்தமில்லாது திறந்து விட்டவள், அகிலனுடைய அறைக்குள் சென்று குளித்துவிட்டு கீழே சென்றாள். 

 

“ஹேய் தாய்கிழவி.. தாய்கிழவி.. ஹேய்.. தாய்கிழவி.. தாய்கிழவிஇஇஇ..” என்று பாடியபடியே வந்த விளானியை பார்த்த கலாவதி,

 

“இந்த வாய் மட்டும் குறையுதான்னு பாரு.. இந்தா.. ஹர்ஷூக்காக ஸ்பெஷலா ஹைல்தி ட்ரிங் பண்ணிருக்கேன்.. இதை கொண்டு போய் அவன்கிட்ட கொடு.. பாவம்.. ரொம்ப டயர்டா இருப்பான்..” என்றவாறே விளானியின் கையில் கொடுக்க, அதனை முறைத்துப் பார்த்தவாறே நின்றிருந்தாள் விளானி. 

 

“இப்ப இதை கொண்டு போய் கொடுத்தா? தலை தப்புமா? ம்ஹூம்.. நான் மாட்டேன்பா..” என்று தனக்குள் முணுமுணுத்தவள், அங்கே சென்று கொண்டிருந்த அகிலை அழைத்து அவனிடம்,

 

“இந்தா தாய்கிழவி, உனக்காக ஆசை ஆசையா போட்ட ஹெல்த் ட்ரிங்..” என்று அவனது கையில் கொடுக்க,

 

“இதை பாட்டி போட்டாங்க சரி.. ஆனா, நீ இதை என்கிட்ட கொண்டு வந்து கொடுக்குற பாரு.. அதுல தான் டவுட்டே வருது.. நீ ஒன்னும் அவ்வளவு நல்லவயில்லயே?!” என்று அவளை சந்தேகமாக பார்த்தான் அகில். 

 

“ப்ச்.. பாசத்தை கூட பாயிஷனா பார்க்குது இந்த உலகம்.. சத்திய சோதனை..”

 

“யாருக்கு சத்திய சோதனை?”

 

“எனக்கு தான்.. இப்படி உண்மையான பாசத்தோட வந்து கொடுக்குறேன்.. சந்தேகப்பட்டு கேள்வி மேல கேள்வியா கேட்குற? குடிக்கவே வேணாம் போடா.. தானே குடிச்சுக்குறேன்..” என்றவாறே அவளது வாயருகே கொண்டு செல்ல,

 

“சரி.. சரி.. இவ்வளவு பாசமா வந்து கொடுக்குற எதுக்கு வேஸ்ட்டாக்குவானேன்னு குடிக்குறேன்..” என்ற அகில் அதனை வாங்கிக் குடிக்க, இதனை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“இருடி.. தனியா மாட்டுவ இல்ல.. அப்போ வைச்சுக்குறேன் உன்னைய..” என்றவாறே தங்களது அறைக்குச் சென்று குளித்து விட்டு திரும்பிவர, உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். ஹரிஷான்தின் அருகில் ஹாசினி அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க, அவளது அருகில் விளானி அமர்ந்திருந்தாள். அவளை பார்த்து கொண்டே அங்கு வந்த ஹர்ஷவர்தன், விளானியின் அருகில் இருந்த நாற்காலியில் அமர, அனைவருக்கும் உணவு பரிமாறி கொண்டிருந்தனர் மலர்கொடியும் அனுராகாவும். 

 

“இன்னைக்கு நைட் நம்ம ஸ்டாஃப் கூட பார்ட்டி இருக்கு ஹரி.. சோ, நீயும் ஹர்ஷுவும் ரெடியாகி ஹாசினியையும் விளானியையும் பார்ட்டி ஹாலுக்கு கூட்டிட்டு வந்துடுங்க..” என்று அர்ஜுன் கூற,

 

“டாடி.. பார்ட்டி முடிஞ்சதும் நாளைக்கே நாங்க ஹைதராபாத் போறோம்..” என்று அமிர்தனிடம் கூறினான் ஹரிஷான்த். அதனை கேட்ட அர்ஜுன் அதிர்ச்சியோடு ஹரிஷான்த்தை பார்க்க, அவனோ தட்டில் இருக்கும் சாப்பாட்டில் கவனம் செலுத்தியவாறே,

 

“எங்க ரெண்டு பேருக்குமே வேலையிருக்கு.. என்னோட ப்ராஜெக்ட் இன்னும் ஒரு வாரத்துல ஸ்டார்ட்டாகிடும்.. சோ, நான் நாளைக்கு காலைல ஃப்ளைட்ல கிளம்புறேன்.. ஹாசினி வேணும்னா இங்க இருக்கட்டும்.. எப்ப அங்க வரணும்னு தோணுதோ.. அப்ப வரட்டும்..” என்று கூறியவன், அத்தோடு தன்னுடைய பேச்சு முடிந்தது என்பதற்கு அறிகுறியாக தட்டில் கையை கழுவி விட்டு எழுந்து கொள்ள,

 

“ஹரி இன்னும் ரெண்டு நாள்‌ இருந்துட்டு போகலாமே? மறுவீடு இருக்கு.. இன்னும் குலதெய்வ கோயிலுக்கு போயி, நம்ம முறைப்படி கல்யாணமாக புதுஜோடிங்க.. புதுசா பெயர் வைச்சுப்பாங்க.. சில சடங்குகள் எல்லாம் இருக்கு..” என்று அர்ஜுன் கூற,

 

“நான் கிளம்பணும் டாடி.. மத்த சடங்குகள் எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்.. “ என்று விட்டேற்றியாக பதில் கூறிய ஹரிஷான்தை கோபமாக பார்த்த அமிர்தன்,

 

“ஹரி என்னதிது? பெரியவங்கக்கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? நான் உன்னைய இப்படியா வளர்த்தேன்?” என்று கேட்க,

 

“என்னைய நம்பாதவங்கக்கிட்ட நான் வேற எப்படி பேச? இல்ல வேற எப்படி நடந்துக்குறது டாடி? என் மனசுல இருக்குற காயம் ஆறுறதுக்கு டைம் கொடுங்க..” என்றவாறு அங்கிருந்து சென்றான் ஹரிஷான்த். செல்லும் அவனை கண்ணில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்த ஹாசினி, எங்கே தனது கண்ணீரை தனது பெற்றோர் பார்த்துவிட்டால், வருத்தப்படுவார்களோ என்றெண்ணியவள், அதனை தனக்குள் இழுத்துக் கொண்டே,

 

“விடுங்க டாடி.. ஹரி இப்படித்தான்னு உங்களுக்கு தான் தெரியுமே.. அவனை வளர்த்ததே நீங்க தானே? இப்ப ஃபீல் பண்றீங்க..” என்று அர்ஜுனிடம் கூறியவள்,

 

“நானும் அவன் கூடவே கிளம்புறேன் டாடி.. அவன் கோபத்துல என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது.. நான் போய் என்னோட திங்க்ஸை பேக் பண்ணுறேன்..” என்றவாறே அவளும் அங்கிருந்து தங்களது அறைக்கு செல்ல, ஹர்ஷவர்தன் மீது தனது பார்வையை அழுத்தமாக செலுத்தினர் அங்கிருந்து அனைவரும்.

 

“என்னைய என்ன பார்க்குறீங்க? நானும் இன்னும் ரெண்டு நாள்ல மும்பை கிளம்புறேன்.. அங்க என்னோட ப்ரெண்ட்ஸ் கூட தான் இருக்கேன்.. இன்னும் தனி வீடு பார்க்கல.. அந்த வீட்டை நாங்க நாலு பேரும் சேர்ந்து தான் வாங்கியிருக்கோம்.. அதை விட்டுட்டு தனி வீட்டுக்கெல்லாம் போக முடியாது.. இவ அங்க வந்து ஹாஸ்டல்ல தங்கி படிக்கட்டும்..” என்ற ஹர்ஷவர்தனை நன்றியோடு விளானி பார்க்க,

 

“அதெப்படி கல்யாணமான ரெண்டு பேரும் தனித்தனியா வாழுறது? உன்னோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னா என்ன இப்போ? அவங்களும் எனக்கு பேரனுங்க மாதிரி தான்.. நானும் விளாவும் அங்க வந்து தங்கிக்குவோம்.. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. தானே உன்னோட ப்ரெண்ட்ஸ்கிட்ட பக்குவமா பேசி.. வேற வீடு பார்த்து போக சொல்லுறேன்.. சரியா? இதுக்கு போய் சின்ன பிள்ளை மாதிரி.. பொண்டாட்டிய கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லுற? சின்னப்புள்ளத்தனமா இல்ல?” என்ற கலாவதியை முதல் முறையாக ஒன்று சேர முறைத்து பார்த்தனர் ஹர்ஷவர்தனும் விளானியும். ஹர்ஷவர்தனை பார்த்து தனது பெருவிரலை தலை கீழாக கவிழ்த்து அழகு காட்டினாள் விளானி. அதனை பார்த்த ஹர்ஷவர்தன்,

 

“பாட்டி, சின்ன வயசுல விளானி டென்த் படிக்கும் போது, அவ நல்லா படிச்சு.. நல்ல மார்க் வாங்குனா, நம்ம ஊர் கோவில்ல அவளை நூத்தியெட்டு தடவை அங்கப்பிரதட்சணம் பண்ண வைக்குறேன்னு நேர்த்திக்கடன் போட்டீங்கல்ல?!” என்றவனை கண்ணில் மிரட்சியோடு பார்த்தாள் விளானி. 

 

“அட.. ஆமா! நான் மறந்தே போயிட்டேனே?”

 

“ஆமா பாட்டி.. நீங்க மறந்த நாள தான் விளானி இப்போ எல்லாம் சரியாகவே சாப்பிடுதில்ல.. பாருங்க அவல் தட்டுல வெறும் நாலு இட்லி தான் இருக்கு.. வழக்கமா எட்டு இட்லி சாப்பிடுறவ.. இப்போ இப்படி கம்மியா சாப்பிடுறா? நேத்து ராத்திரி திடீர்னு எந்திரிச்சு, ரூம் பூரா ஓடிட்டு இருந்தா.. தெரியுமா? உங்களை கூப்பிடலாம்னு நினைச்சேன்.. பட், உங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்.. நாமளே சமாளிச்சுடலாம்னு சமாளிச்சுட்டேன்.. நீங்க அந்த நேர்த்திக்கடனை அவளை செய்ய வைச்சுட்டீங்கன்னா, விளா நார்மல் ஆகிடுவா..”

 

“ஆமா.. ஆமா.. பக்கத்து தெருவுல தான் அந்த அம்மன் கோவில் இருக்கு.. இன்னைக்கே போய் நேர்த்திக்கடன் செலுத்திடலாம்..”

 

“பாட்டி.. மத்தியானம் ஒரு மணிக்கு கொளுத்த ராகுகாலம்.. அப்போ நேர்த்திக்கடன் செஞ்ச, நம்மளை பிடிச்ச ராகுகாலம் எல்லாம் அம்மன் பார்வையால விலகிடுமாம்.. ஃபேஸ்புக்ல படிச்சேன்.. அப்பவே போயி நேர்த்தியுடன் செஞ்சுடலாம் பாட்டி..” என்றவனை கொலைவெறியோடு பார்த்தாள் விளானி. அனைவரும் ஒருமனதாக பார்ட்டி முடிந்த மறுநாள் நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க, அதனை தடுக்க முடியாது, பார்ட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் விளானி. விருப்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே சிறு நூலளவு தான் இடைவெளி.. அவ்விடைவேளியில் இவர்களின் வெறுப்பு காதலாக.. விருப்பமாக மாறுமா? 

 

2 thoughts on “என் மோகத் தீயே குளாராதே 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top