ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21

21

 

 

இரு வாரமாக நன்றாக யோசித்து பார்த்து விட்டான் நந்தன்.. தேவாவை எப்படி நெருங்குவது என்று புரியவில்லை.. வாழ்க்கையில் தனக்கு தோல்வியை தந்த தேவாவிற்கு.. தொழில், வாழ்க்கை இரண்டிலும் பெரும் தோல்வியை, வீழ்ச்சியை காண துடித்தான். அதற்கு தான் முதலில் தொழிலில் நுழைய வேண்டும் என தீர்மானம் கொண்டு, முதற் கட்டமாக தன் தந்தையை நோக்கி சென்று, “அப்பா.. நான் நாளை இருந்து நம் கம்பனிக்கு வருகிறேன் ” என்று கூறியவனை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் மனோகர்.

 

காரணம் மகனின் வார்த்தை அல்ல… தேவாவின் வார்த்தையை நினைத்து..

மகனின் மாற்றம் ஒரு பக்கம் கொஞ்சம் அதிர்ச்சியே என்றாலும், இரண்டு நாட்கள் முன் பேசிய தேவா, ” சித்தப்பா நந்தன் கம்பனி வரேன் சொன்னாலோ, இல்லை நான் ஹேன்ட் ஓவர் பண்ணிக்கிறேன் சொன்னாலோ.. ஒன்னும் அப்ஜெக்ட் பண்ணாதீங்க.. லெட் ஹிம் அலோ” என்று கூறி வைத்து விட்டான். ஏன் எதற்கு என்று காரணம் அவன் சொல்லவில்லை, இவரும் கேட்கவில்லை.. காரண காரியமின்றி தேவாவின் நுனி விரல் கூட அசையாது என்று அறியாதவரா அவர். அவன் கணித்தது போலவே தன் மகன் கேட்கவும் தான் அவருக்கு அவ்வளோ அதிர்ச்சி, கூடவே தம்பி என்ற பாசம் தேவாவிற்கு இருக்கு என்று நிம்மதி வேறு.. ஏன் மறுக்க போகிறார்.

 

ஆனால் அதை மகன் முன் காட்ட முடியாது, ” என்ன இந்த திடீர் ஞானோதயம் ” என்றார் கொஞ்சம் அலட்சியமாகவே…

 

,” ஏன் நான் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா.. எனக்கு வயசு ஆகலையா என்ன ” என்றான் கடுப்பாகவே..

 

“பரவாயில்லையே உனக்கு அது ஞாபகம் வந்துடுச்சு போல ஒரு வழியா “என்றார் மனோகர் கெத்து குறையாமல்..

 

” எனக்கு ஞாபகம் வந்தது இருக்கட்டும். உங்களுக்கு தான் மறந்தே போச்சு போல. எதுக்கு இந்த வள வள பேச்சு.. நாளைக்கு நான் ஆஃபிஸ் வரேன் தட்ஸ் ஆல் ” என்று கூறி சென்றுவிட்டான் உறங்க..

 

மனோகருக்கு பெரும் நிம்மதி நந்தனின் இந்த அதிரடி மாற்றங்களை புரியாதவர் இல்லை. ஆனாலும் தேவா இருக்க பயமேன் என்று அவரும் உறங்கச் சென்றுவிட்டார் நிம்மதியாக வெகு நாளைக்கு பின்..

 

 

 

காலை எழுந்த தேவா இப்போது எல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர் அறையில் செலவிடுவது இல்லை.. அவனின் ஸ்ட்ரெஸின் கூடவே நேரம் சரியாய் இருப்பதால்..

 

பிசினஸ் எக்ஸ்பிரஸில் பிஸியாக இருந்தவனின் அருகில் அரவம் கேட்டு திரும்ப, காலை காஃபியுடன் வைஷூ..

 

” காஃபி வித் கரஸ் ” என்று கண் சிமிட்டலுடன் அவனிடம் நீட்ட.. 

 

நீட்டிய காஃபியை வாங்கி டேபிளில் வைத்து விட்டு, அவள் கையை சுண்டி இழுக்க, அவள் திமிற, திமிறலை லட்சியம் செய்யாமல் மடியில் சாய்த்து கொண்டவனின் முகம் தாபத்தில் மிளிர..

 

” ரொம்ப போக்கு காட்டுறடி… எதுவா இருந்தாலும் இங்க இருந்து பேசுடி, என் காந்த கண்ணழகி.. தள்ளி நிக்காதே..” என்று காது மடல் உரச பேச.. சொக்கி நின்றாள் பழுப்பு பாவை கிறங்க..

 

அவன் முகத்தில் தெரிந்த ஆண்மையின் வசிகீரம் அவளை ஆகர்ஷித்தது. அவளை நோக்கி அவன் குனிய.. விலக முடியா விரப தாபம் அவளுள். அவளை மடி சாய்த்து அவளின் இதழ்களின் மீது அழுத்தி கவ்வி கொண்ட அவன் இதழ்களிடம் அவள் இதழ்கள் தஞ்சமாக.. கண் மூடி கிறங்கி கிடந்தாள் அவன் மடியில்…தேவா விலக விரும்பா அவள் உதடுகளில் அவன் தீவிரமாக முத்தம் பதித்து கொண்டிருந்தான். அவளது பலவீனமாக எதிர்ப்புகள் முறியடிக்கபட்டு கொண்டே போக. அவனது தேடுதல்களும் நீண்டு கொண்டே செல்ல.. மெல்ல இதழ்களை நீக்க.. நடுங்கி கொண்டிருந்தவளை இறுக்கி அணைத்து அவனுள் அவளை புதைத்து, அவள் பின்னகழுத்தில் முகம் புதைத்த போது அவளிடம் கொஞ்சம் நஞ்ச இருந்த எதிர்ப்பு போய் மொத்தமாக அவன் கைகளில் துவண்டாள். அவள் விடும் மூச்சு காற்றின் மிக லேசாக வெப்பம் அவன் உதட்டோரம் பட்டு, அவனின் மூச்சு வெப்பத்தை அதிகப்படுத்த, கைகளோ அவள் உடலில் பயணிக்க, அவள் இடுப்பு பகுதியின் வழவழப்பில் பதிந்து அழுந்திய போது, அவள் கிறங்கி மோகமுற்ற அவனை இறுக்கி தழுவியிருந்தாள். இந்நிலை நீடித்து இருந்தால் அழகான ஒரு கூடலில் முடிந்து இருக்க கூடுமோ.. மெல்ல அவளை விடுத்தவன் அவள் கழுத்தில் தன் இதழ்களை பொதித்து அங்கே நிற்க.. ” எனக்கு நீ மொத்தமா வேணும் வைஷூமா.. ஆனா இப்படி இல்லை” என்று அவன் கண்கள் கூறிய விசயம் அவளுக்கு புரிந்தாலும், அவளால் அது முடியுமா என்று தெரியவில்லை.. அவள் புரிந்து அவனை விட்டு விலக, அவளை விசில் அடித்து அழைத்தவன், ” வரும் டி.. கண்டிப்பாக நான் கேட்டது உன் கண்களில் வரும்.. அப்போ பாரு மாமன் பர்ஃபாமன்ஸ் ” என்று கண்ணடிக்க, அவளோ அவ்விடம் தப்பி குளியலறையில் தஞ்சம் கொள்ள, அவன் சிரிப்பு அவளை தொடர்ந்தது…

 

அலுவலகத்தில் தன் வேலைகளை தேவா பார்த்து கொண்டிருக்க, அறை கதவு தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக். 

 

” வாடா மச்சி ” என்று தேவா எழுந்து அவனை வரவேற்றான்.

 

” அப்புறம்.. எப்படி போகுது மேரஜ் லைஃப். சேதாரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா? என்று அவனை மேலும் கீழும் பார்த்து கேட்க.. 

 

” அவ்வளோ ஒன்னும் மோசம் இல்லை‌ மச்சி.. ஏதோ ஜிம் பாடிங்கிறதனால தாங்குது ” என்று தேவா போலியாக வருத்தப்பட்டு கூற..

 

” உன் வாய்க்கு, சிஸ்டரை பயங்கரமா கவனிக்க சொல்லணும்.. அப்புறம் எதுக்கு மச்சி வர சொன்ன ” என்று கேட்டான் கார்த்தி.

 

“நான் வர சொல்லலடா உன் சிஸ்டர் தான் ஏதோ பிசினஸ் விஷயமா பேசினும்னு வர சொன்னாள். இப்போது அது சம்பந்தமா தான் அவங்க செக்டார் மேனேஜர்ஸ் கூட மீட்டிங்ல இருக்கா.. இப்போ வந்துருவா நீ உட்கார் “

 

“வாவ் கிரேட்.. சிஸ்டர் பிசினஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா ” என்றான் ஆச்சரியமாக கார்த்திக்..

 

“அதெல்லாம் நல்லா வெளுத்து வாங்குறா” என்றான் கண்கள் மின்ன..

 

” சரி எதுக்கு நீ வர சொன்ன என்ற கார்த்திக் தேவாவின் கண்களை ஆழ்ந்து நோக்கி கூற.. தன் தலையை இடவலமாக ஆட்டி சிரித்துக்கொண்டே தேவா ” நீ என்ன விட ஷார்ப் டா ” என்று சிரித்தான்.

 

கார்த்திக் இன்னும் தீர்க்கமாக அவனை பார்க்க ” சரி நான் சொல்கிறேன் ‘ என்று கூறி சித்தப்பா வந்து அவனிடம் கூறியது முதல் நேற்று நந்தன் வந்து சென்றது வரை அனைத்தையும் கூறினான்.

 

 கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு கைகள் முறுக்கேறி கோபம் ஏறியது. தேவாவை நோக்கி சென்ற கார்த்திக் அவனை எழுப்பி வயிற்றிலேயே இரண்டு குத்து குத்தினான். ” டேய் விடுடா விடுடா” என்று தேவா அலற அலற அவன் கோபம் தீரும்வரை மீண்டும் மீண்டும் குத்து குத்தினான். ” டேய் ஜிம் பாடி என்று ஒரு பேச்சுக்கு சொன்னா அதுக்கு இப்படியாடா குத்தி அதை சோதிப்ப.. எக்குத்தப்பா ஒன்று இரண்டு அடி கீழே விழுந்தா என்னடா ஆகிறது என் நிலைமை.. என்னை விடு உன் சிஸ்டர் நிலைமை யோசிச்சிக்க டா ” என்று கூறி மூச்சு வாங்க.. அவனை முறைத்துக்கொண்டே கார்த்திக் தண்ணீர் எடுத்து குடித்தான். 

 

“அடிவாங்குனது நானு மூச்சு வாங்க.. ஆனா தண்ணீர் குடிக்கிறது நீயா டா.. ஒரு நியாயம் வேணாமடா ” என்றான் புலம்பலாக…

 

” இதோ இந்த மட்டும் நான் உன்னை விட்டேறன்னு சந்தோசப் படு ” என்றான் கார்த்தி முறைப்பாக.. 

 

கார்த்திக் சந்திரன் தப்பை பொறுக்காதவன். அது அவன் குடும்பமே ஆனாலும் சரி , சுட்டிக்காட்டி சரி செய்து விடுவான் இல்லை ஒரேடியாக ஒதுக்கி வைத்து விடுவான். தொழிலில் சாணக்கியனாக இருந்தாலும் நேர்மையின் பக்கம் தான் அவன் என்றுமே…

 

” உங்க சித்தப்பா சொல்லி நீ தீர விசாரிக்காமல் செஞ்சது பெரிய தப்பு.. அதைவிட நந்தனை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க பாரு இது அதைவிட ரொம்ப பெரிய தப்பு… அவனை என்கிட்ட விடு நான் பார்த்துக்கறேன் ” என்றான் முகம் சிவக்க கோபமாக…

 

கார்த்திக் அருகில் வந்த தேவா தோளை அணைத்துக் கொண்டு.. ” முதல்ல செஞ்சது மட்டும்தான் என்னோட தப்பு மச்சி.. அவனை எல்லாம் ஆடவிட்டு நான் பார்த்துட்டு இருப்பேனா.. பொறுத்து பாரு “

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வைஷூ தன் மீட்டிங் முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கார்த்திகை கண்டவுடன் எவ்வாறு அழைப்பது என்று ஒரு சிறு தயக்கம் அவளுள்.

 

அதைக் கண்டவன் அவனே முன்னே சென்று ” ஹாய் சிஸ்டர் கலக்குறீங்க போல… சூப்பர் ” என்று இரு கைகளையும் உயர்த்தி பாராட்டினான்.

 

அவள் தயங்குவதைப் பார்த்த தேவா.. ” கார்த்திக் உன்னை விட பெரியவன் தான் வைஷூ.. அண்ணனே கூப்பிடு” என்றான்.

 

கணவனிடம் சம்மதமாக தலையாட்டி ” வாங்கண்ணே.. இவங்க பினான்ஸ் பிஸினஸ் குரூப்பில் தான் கொஞ்சம் சேன்ஜஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் ” என்று கூற தேவா அவளை பார்த்து முறைத்தான் இவன் ஏன் என்னையே முறைக்கிறான் என்று புரியாமல் அவள் குழம்ப.. ” அவங்க பினான்ஸ் குரூப் சொல்லக்கூடாது எங்கன்னு சொல்லணும் ” என்று மனைவியைத் திருத்தினான்.. ஓகே என்று கணவனிடம் தலையாட்டிவிட்டு கார்த்திக்கிடம் தொடர்ந்தாள். 

 

 

” ஸ்மால் ஸ்கேல் இன்ட்ரஸ்ட்க்கு கொஞ்சம் ஃபைனான்ஸ் சப்போர்ட் பண்ணலாம்னு நாங்க இருக்கோம்.. டெக்ஸ்டைல்ஸ் செக்டார்ல இந்த மாதிரி ஸ்மால் ஸ்கேல் இன்ட்ரஸ்டீரீஸ் நிறைய பேர் இருப்பாங்க.. முக்கியமா நெசவாளிகள் தறி போட்டு பட்டுப்புடவை நெய்றவங்க.. சோ உங்களுக்கு தெரிஞ்ச அந்த மாதிரி நம்பிக்கையான ஆளுங்களை எங்களுக்கு நீங்க இன்ட்ரோ பண்ணுங்க அண்ணா.. கொஞ்சம் ஹெல்பிங் மைண்டா நாம உதவி பண்ணலாம் அவங்களுக்கு..” என்று அவள் திட்டத்தை கூற கூற கண்கள் தெறித்து விடும் வண்ணம் அவளையே பார்த்துக்கொண்டு புன்னகை முகமாக பாசம் பொங்க நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.

 

தேவா அவனைத்தான் பார்த்து ” இவன் பாசப் பயிர் வளர்க்க ஆரம்பிச்சுட்டான்.. எப்படித்தான் பேசுற எல்லாரையும் அவ பக்கம் சாய்கிறானு தெரியலையே..” என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்க அவன் மனமும்.. நீங்க எப்படி சார் என்று கேட்டு அவனை வாரியது…

 

வைஷூவின் தொழில் திறனும் அவளின் அணுகுமுறையும் தொழிலைத் தாண்டி அவள் காட்டும் காருண்யமும் கார்த்திக்கு மிகப் பிடித்தது. 

 

அவள் பேசிய உடன் அவள் கையை பிடித்து குலுக்கியவன் ” சூப்பர்டா வைஷூ..உன்னோட திட்டமெல்லாம் பக்குவப்பட்ட மனதை காட்டுது. திரும்பி தேவாவை பார்த்து முறைத்தவன் ” இத்தனை வருசத்துல ஒரு தடவை.. உனக்கு இந்த மாதிரி எல்லாம் செய்ய தோனி இருக்காடா எப்ப பாரு பணம் பணம் பணம்.. ” என்று அவனை திட்ட ஒரே மணி நேரத்தில் மாறி போன தன் நண்பனை நினைத்து தேவா தான் வாயை பிளந்தான்..

 

வைஷூ அதோடு நிற்காமல் அவனை தங்கள் இல்லத்திற்கு அழைக்க.. ஏற்கனவே மிருவை பார்க்க துடித்துக் கொண்டு இருப்பவன் விடுவானா.. வாய்ப்பை.. சரியாக பற்றிக்கொண்டு அவர்களுடனே வீடு வந்து சேர்ந்தான்.

 

இவளுக்கு வீடு வந்து சேர்ந்த போது தமயந்தி மட்டும் கீழ இருக்க, கார்த்திகை உபசரித்தார். அதற்குள் தேவா அவனிடம் தலையாட்டிக்கொண்டு ரெப்ரெஷ் செய்து வருவதாக அவன் தளம் நோக்கி மனைவியுடன் சென்று விட்டான். 

 

 

“கார்த்திக் உனக்கு லைட்டா டிபன் மாதிரி எடுத்துட்டு வரேன் சாப்பிட்டு தான் போகணும் ” என்று உபசரித்த தமயந்தியை பார்த்து ” அத்தை நான் நைட் டின்னர் இங்கதான் முடிச்சுட்டு போகலாம்னு ஐடியால இருக்கேன் நீங்க வெறும் டிபனில் என்ன விரட்டாதீங்க”

 என்று சிரித்தான்.

 

போக்கிரி என்று அவன் கன்னத்தை தட்டி விட்டு சமையல் பக்கம் செல்ல..

 

” அத்த நீங்க மெதுவாவே டின்னருக்கு பாருங்க..நான் மேல போய் மாமாவை பார்த்திட்டு வரேன் ” என்று கூறி லிப்டை நோக்கி விரைந்து விட்டான்.

 

லிப்டில் சென்றவனின் கால் இறங்கியதோ மிருவின் தளத்தில்தான்.

 

அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு வந்து இருந்த மிரு , அலுப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு தன் தலையை உலர வைத்த வண்ணம் இருந்தாள். தன் முதுகு பின்னால் யாரோ குறுகுறுவென்று பார்ப்பது போல எண்ணம் தோன்ற திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்றுகொண்டு இருந்த கார்த்திக்கை பார்த்து அதிர்ந்து விட்டாள்.

 

அடுத்த கணம் வாய் தன் போல அலற போக.. காற்றை விட வேகமாக அவளிடம் விரைந்தவன் அவள் வாயை மூடி.. “அழுமூஞ்சி கத்திகித்தி தொலைச்சிடாதடி உங்க அண்ணன் கட்டைய தூக்கீட்டு வந்திருவான் ” என்றான் அவசரமாக..

 

 

 இதழ்களின் மென்மையில் அதை அடைத்தவன் கை கீழே இறங்க மறுத்தது. அவன் மனமும் கையில் படும் போதே இவ்வளவு மென்மை என்றால் உதடுகள் இரண்டும் உரசினால்.. என்ற எண்ணம் தறிகெட்டு ஓட அவளை பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தான்.

அவன் மனம் விரும்பியதை கண்கள் காட்ட.. கார்த்திக்கின் கண்கள் காட்டிய பாவனையில் பதறிதான் போனாள் மெல்லிய மனம் கொண்ட மிருளாளிணி…

 

சில நாட்களாக கார்த்திக்கின் கண்கள் காட்டும் ஆர்வமும் அவனின் உரிமையான பேச்சும் மனதிற்கு பிடித்து இருந்தாலும் ஏதோ ஒரு வித அவஸ்தை அவளுள். இது காதலா இருக்குமோ என்ற பயம் ஒரு புறம்.. காதலாகவே இருக்க வேண்டுமே என்ற தவிப்பு மறுபுறம். தன் எண்ணம் தெளிவாக புரியாமலே அவனைக் கண்டதும் காத தூரம் ஓடினாள் பெண்.

இன்று வசமாக மாட்டிக் கொண்டதும் செய்வதறியாது திருதிருவென முழித்தாள்.

 

அவன் மெதுவாக அவள் வாயிலிருந்து கையை எடுத்ததும் அதுவரை நம் ரூம் தானே என்று சாதாரண டீ சர்ட் பிளாசாவில் இருந்தவள் அருகிலிருந்த துப்பட்டாவை எடுத்து அன்னிச்சையாக மேலே போட்டுக் கொள்ள.. 

 

அவள் சும்மா இருந்தாலாவது ஏதோ பேசிவிட்டு சென்றிருப்பான். ஆனால் இவளின் அந்த செய்கை அவனை உசுப்பி விட.. அவனின் பார்வை அவளின் உடலில் ஊர்ந்து மேய்ந்தது..

 

” இந்த டிரஸ்ல உன்னை பார்த்த டாக்டர் என யாரும் சொல்ல மாட்டாங்க மிரு ” என்றான் அவள் உடையை ரசனையாக பார்த்துக்கொண்டே..

 

அவனின் வார்த்தையில் அவளுக்கு பதற்றம் தொற்றிக் கொள்ள கைகள் தன் போல துப்பட்டாவை இன்னும் கீழே இழுத்து விட்டது. 

 

அவளின் செய்கைகள் அவனுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை மூட்ட.. மெல்ல நெருங்கி அவளிடம் சென்றவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். 

பார்க்கும்போதெல்லாம் காந்தமென ஈர்க்கும் அவன் கண்கள் இப்போது காதலுடன் சேர்ந்து கொள்ள மிருவினால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

 

இந்நிலையில் இருந்து தப்பிக்க அவள் கீழே போகிறேன் என்று முணுமுணுத்து விட்டு செல்ல.. அவள் கைபிடித்து தடுத்தவன் இன்னும் நெருங்கி மிரு என்றான் குழைவாக…

 

 

மிருவினால் நம்பவே முடியவில்லை தன் கையை அவன் பிடித்ததை.. முதன்முதலாக ஒரு ஆணின் தொடு உணர்வை அனுபவித்தவள் கைவிரல்கள் நடுங்க ஆரம்பித்தன… ஆண் நட்புகளோடு பேசி பழகி இருந்தாலும் இந்த தொடுகை ஏதோ வித்தியாசமாய் உரிமையாய் பட்டது மிருவிற்கு.

 

அவள் கை விரல்களை அவன் அழுத்திக் கொடுக்க.. அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதுவரை அனுபவிக்காத புதுவகை உணர்வில் அவள் திக்குமுக்காடிப் போக அவள் கண்கள் கலக்கத்தில் மேலும் விரிந்தன…

 

கார்த்திக் மெல்ல மிரு என்று அவளை அழைக்க ” ப்ளீஸ் எப்படியெல்லாம் தொட்டு பேசாதீங்க எனக்கு.. எனக்கு ” பாதி பேச்சில் அவள் வழக்கம்போல உதடு பிதுக்கி கண்களில் நீர் துளிர்க்க அவள் அழ ஆரம்பிக்க… 

 

தான் கையை பிடித்து விட்டதற்கு இவள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று அவன் துளி கூட எண்ணவில்லை . கார்த்திக் அவளை தன்னவளாகவே எண்ணிக்கொள்ள அவளின் இந்த கண்ணீர் அவனுக்கு கோபத்தை மூட்டியது..

 

” என்ன நான் செஞ்சேன்.. நீ இப்படி ரியாக்ட் பண்ற ” என்றான் கார்த்திக் உரிமையாக…

 

ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தலையை இல்லையென்று ஆட்டி மேலும் நீர் உகுக்க..

 

” உன் இடையை பிடித்து வளைத்தேனா என்று அவன் கைகள் உயர்ந்து அவள் மென் இடை பற்றி இழுத்தன..

 

“உன் கன்னங்களை தொட்டேனா ” என்று கூறிக்கொண்டே அவன் வலிய கரங்கள் அவள் கன்னத்தை இறுக்கிப் பிடித்தன..

வலியில் அவள் முகம் சுழிக்க அவள் முன்னே குனிந்தான். அவனது மீசை முடிகள் உரசி உரசி அவள் கன்னங்களை பதம் பார்த்தன.. 

 

அவனோ துடித்த அவளின் இதழ்களையும் படபடத்த அவளின் இமைகளையும் பார்த்தபடி அவள் காதோரமாக சென்று..

 

” உனக்கு லிப்-டூ-லிப் கொடுத்தேனா ” என்றான். 

 

இதுவரை செய்தேனா.. செய்தேனா.. என்று அனைத்தையும் செய்தவன், அடுத்து அதை தான் செய்ய போகிறான் என்று பயந்து போய் அவனை விட்டு விலக அவள் எத்தனிக்க.. ஒரே எட்டில் அவளை பிடித்தவன் அவன் சொன்னதை செய்ய தொடங்கியிருந்தான்..

 

மென் இதழ்களை அவனின் வலிய இதழ்கள் மூடியிருந்தது மிக அழுத்தமாக..

 

 

கர்வம் வளரும்..

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top