அத்தியாயம் 3
“ஹரி..”
“ம்ம்..”
“நான் செஞ்ச தப்புக்கு எதுக்கு அப்பாக்கிட்ட கோபப்படுற? அதுவுமில்லாம நான் உனக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்.. அதுக்கு நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லலேனாலும் பரவாயில்ல.. இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டு பின்லாடன் மாதிரி முறுக்கிட்டு இருக்காத..”
“பின்லாடனா? முன்ன பின்ன பின்லாடனை பார்த்துருக்கியா?”
“இதோ.. எனக்கு முன்னாடியே நிற்குறானே.. மிஷின்கன்னே இல்லாம வார்த்தையாலயே கொல்லுறதுக்கு..”
“நீ என்னைய ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்க.. அதுவும் எந்த பொண்ணும் சொல்ல தயங்குற விஷயத்தை அசால்டா சொல்லிட்ட..”
“தப்பு தான்.. அது ஏதோ தெரியாம..”
“ஏது தெரியாமலா? நீ எல்லாத்தையும் ப்ளான் பண்ணி தான்டி செஞ்சுருக்க.. அதெப்படி கரெக்டா என்னோட பெட்ல என் கூட? கடவுளே.. அதை எப்படி என் வாயால சொல்லுவேன்.. எல்லோரும் அந்த கோலத்துல நம்மளை பார்த்துட்டு, நான் உன்னைய ரேப் பண்ணேன்னு நம்பிட்டாங்க.. அவங்க நம்புனதை கூட மன்னிச்சுடுவேன்.. ஆனா, அவங்க நம்புற மாதிரி ஒரு சீன் போட்ட பாரு.. அந்த நடிப்புக்கு நீ ஆஸ்கார்டே வாங்கலாம்.. அந்த மாதிரி ஒரு பர்பாமென்ஸ்.. அதைத்தான் என்னால இப்ப வரைக்கும் ஜீரணிக்கவே முடியல..”
“நீ அந்த காமினியோட வலையில விழுந்துடுவியோன்னு பயந்து தான்..”
“அவ என்கிட்ட பழகி.. எனக்கு பண்ணதை விட.. நீ பண்ணது தான்டி நம்பிக்கை துரோகம்..”
“சும்மா துரோகம் பண்ணேன்னு சொல்லாத.. அவளுக்கு ஏற்கனவே ஒருத்தன் கூட கனெக்சன் இருக்குன்னு எத்தனை தடவை சொல்லிருப்பேன்? ஒரு தடவையாவது நம்புனியா? இது ஜெர்மனி.. நம்ம ஊர் கிடையாது.. இங்க ஆணும் பெண்ணும் தொட்டு பேசுறது எல்லாம் சகஜம்னு சொன்ன.. கடைசில கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி அவளோட புருஷன்னு ஒருத்தன் வந்து நிற்குறான்.. அதுமட்டுமா? உன்னைய கொலை பண்ண போறதா, உன்னோட நம்பருக்கு அறிமுகமில்லாத நம்பர்ல இருந்து மெஸேஜ் அனுப்புனான்.. நான் தான் அதை அப்பாக்கு அனுப்பி, அந்த நம்பரை ட்ரேஸ் பண்ண சொன்னேன்.. உன்னைய தேடி நான் வர்றதுக்குள்ள.. நீ.. நீ.. அன்னைக்கு நைட் நடந்த ஆக்ஸிடென்ட்ல உன்னால எந்திரிச்சே உட்கார முடியாம, எவ்வளவு கஷ்டபட்ட?”
“அது என்பாடு பார்த்துக்குவேன்.. உன்னைய யாரு முந்திரிக்கொட்டை மாதிரி இப்படி பொய் சொல்ல சொன்னா?”
“அந்த காமினியோடு ஹஸ்பெண்ட்கிட்ட இருந்து உங்களை காப்பாத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்ன நம்பவா போற? இருந்தாலும் உன்னைய ப்ளான் பண்ணி தான் தூக்குனேன்..”
“என்ன வாய்க்குள்ளேயே முணங்குற?”
“ஒன்னுமில்ல..” என்றவள் தனது பெட்டியில் தனது ஆடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவாறே, அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.
“மரமண்ட.. மரமண்ட.. கல்யாணமானவளா தேடி தேடி லவ் பண்ணுவான்.. பக்கத்துலயே பத்து வருஷமா இருக்கேன்.. திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறான்..” என்று வாயிற்குள் முணுமுணுத்தவளின் கைகள் அதன் போக்கில் வேலையில் ஈடுபட, தனது கோர்ட்டை அணிந்து கொண்டே,
“இன்னைக்கு நைட்டு பார்ட்டி முடிஞ்சதும், நாம ரெண்டு பேரும் நாளைக்கு காலைல ஹைதராபாத் போறோம்.. அப்புறம் நாம ரெண்டு யாருன்னு அங்க யாருக்கும் தெரியக்கூடாது.. அதுனால தான் நம்ம கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த போட்டோவையும் நியூஸையும் வெளில விடாம பார்த்துக்கிட்டேன்.. இனிமேலும் யாருக்கும் நீ தான் என் பொண்டாட்டின்னு தெரியாம பார்த்துக்கணும்.. வீட்டுக்கும் நாம டிவொர்ஸ் பண்ணப் போறது இப்போதைக்கு தெரியாம பார்த்துக்கணும்..” என்றபடியே அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவன், அவளது பதிலுக்காக அவள் முகம் பார்த்து நிற்க,
“ம்ம்ம்..” என்றவளை கூர்மையாக பார்த்தவன்,
“நீ தனியா எங்கேயும் போக வேணாம்.. உன் தங்கச்சியக்கூடவே ப்யூட்டி பார்லருக்கு கூட்டிட்டு போயிடு.. அங்க வேலை முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணு நான் வந்து உங்க ரெண்டு பேரையும் பார்ட்டிக்கு கூட்டிட்டு போறேன்..” என்ற ஹரிஷான்த், அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல், அங்கிருந்து கிளம்பி அமிர்தனோடு கம்பெனிக்கு செல்ல, பெருமூச்சு விட்டவாறே, தனது வேலைகளை செய்யத் தொடங்கினாள் ஹாசினி. காரில் தன்னோடு வந்து கொண்டிருந்த ஹரிஷான்த்தை கோபமாக பார்த்த அமிர்தன்,
“நீ செய்யுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல.. இப்ப எதுக்கு உடனே ஹைதராபாத் போகணுங்குற?”
“ஏஜி கம்பெனியோட ட்டையப் பண்ண போறேன்.. அதுல கொஞ்சம் ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டியிருக்கு.. சோ, நான் சீக்கிரம் கிளம்பியே ஆகணும்..”
“நான் நம்ம கப்பெனியோட ப்ரசிடெண்ட்.. நீ நம்ம கம்பெனியோட எம்டி.. எல்லா வேலையையும் நான் பார்த்துக்குறேன்.. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு கலாவதியம்மா சொல்லிட்டிருந்தாங்க.. அந்த சடங்கை எல்லாம் முடிச்சுட்டு, ரெண்டு பேரும் கிளம்புங்க.. அதுக்கு மேல உங்க ரெண்டு பேரையும் நான் தடுக்கமாட்டேன்..”
“நான் சொன்னா கேட்கவா போறீங்க? என்ன பண்ணணுமோ பண்ணுங்க? என்னைய மட்டும் அதை பண்ணு.. இதை பண்ணுன்னு, ஏதாவது ஆர்டர் போட்டீங்க.. அப்புறம் நான் அங்க ஒன் செகண்ட் கூட இருக்கமாட்டேன்..” என்றவனை புன்னகையோடு பார்த்த அமிர்தன், அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை.
“மாரியம்மா.. மாரியம்மா.. திரி சூலியம்மா.. நீலியம்மா..” என்று ஒலிப்பெருக்கி அலற, அதை கேட்டவாறே, மதியம் ஒரு மணி அளவில், கோயிலின் பிரகாரத்தில் நின்று கொண்டிருந்தனர் குடும்பம் மொத்தமும்.
“தாய்கிழவி.. அப்படிய ஜொலி ஜொலின்னு தரை வெயில்ல ஜொலிக்குது.. இதுல சிக்கன் சிக்ஸ்டி ஃபை பொரிச்சு எடுக்குற மாதிரி என்னைய பொரிச்சு எடுக்கப் போற? அப்படித்தானே?” என்ற விளானி கலாவதியின் பின்னே நின்று கொண்டிருந்தவாறு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹர்ஷவர்தனை முறைத்துப் பார்த்தாள்.
“அதெல்லாம் ஆத்தாக்கு முன்னாடி ஒன்றுமேயில்ல.. பக்தியோடு அவளை மனசுல வேண்டிக்கிட்டு, இந்த மஞ்சத்தண்ணிய தலைல ஊத்திக்கோ.. அப்புறம் கையை மேல தூக்கி கும்பிட்டமாதிரி படுத்து உருளு.. நானும் உன் அம்மாவும் உன்னோட ட்ரெஸ் விலகாம பார்த்துக்குறோம்..” என்று விளானியை பார்த்து கலாவதி கூற, வெட்ட போகும் ஆட்டின் தலையில் மஞ்சத்தண்ணீர் ஊற்றும் முறை ஞாபகம் வரவே, ஹர்ஷவர்தன் தன்னை ஆடாக கையோடு இழுத்து வருவது போன்ற மாயை கண் முன்னே தோன்ற, தனது தலை சிலுப்பிக் கொண்டாள் விளானி.
“அம்மா.. அம்மா.. வேணாம்மா.. இன்னைக்கு ஈவினிங் பார்ட்டி இருக்குல்ல.. அதை முடிச்சுட்டு.. நாளைக்கு காலைல தானே அங்கப்பிரதட்சணம் பண்ணணும்னு சொன்னீங்க.. இப்ப திடீர்னு கூட்டிட்டு வந்து பண்ண சொல்றீங்க.. இதெல்லாம் நியாயமே இல்ல..”
“என்னைய என்னடி பண்ண சொல்ற? நாளைக்கு காலைல நாம எல்லோரும் உங்க குலதெய்வ கோவிலுக்கு போகணும்னு அமிர்தன் அண்ணா முடிவு பண்ணிட்டாங்க.. அப்போ வேண்டுதலை தள்ளி போடக்கூடாதுன்னு, பாட்டி தான் இன்னைக்கே பண்ணிடலாம்னு முடிவு பண்ணாங்க.. எங்களுக்கும் வேற வழி தெரியலையே.. நேர்த்திக்கடனை முடிச்சுட்டு ஹாசினிக் கூட சேர்ந்து ப்யூட்டி பார்லர் போயிட்டு வந்துடு.. இன்னைக்கும் நாளைக்கும் தான் டயர்டா இருக்கும்..”
“அப்புறம்?”
“அதுவே பழகிடும்.. சீக்கிரம்..” என்ற மலர்கொடி, விளானியின் தலைமீது மஞ்சள் தண்ணீரை ஊற்ற,
“என்ன பாட்டி? மனசார வேண்டுதல் வைக்குறவங்க.. சாமியாடுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்.. இவ சாமியாடுறதென்ன? டிஸ்கோ கூட ஆடமாட்டேங்குறா?” என்ற ஹர்ஷவர்தனை முறைத்துப் பார்த்த விளானி,
“மவனே.. நீ என்கிட்ட ஒருநாள் மாட்டுவ.. அன்னைக்கு உன்னைய எண்ணெய் சட்டிக்குள்ள போட்டு பொரிக்கல.. நான் அர்ஜுன் மலர்கொடியோட பொண்ணு இல்ல..” என்று அவனுக்கு மட்டும் புரியுமாறு வாயசைக்க,
“முடிஞ்சதை பண்ணு.. போடி..” என்று பதிலுக்கு அவனும் வாயசைக்க, விளானியை அங்கப்பிரதட்சணம் பண்ண செய்தனர் அனைவரும்.
“கலாவதி.. உன்னைய காலாவதி ஆக்குறேனா? இல்லையான்னு பாரு.. அய்யோ.. அம்மா.. வலிக்குதே..” என்றவாறே தனது அறைக்குள் நுழைந்தவள், மெல்ல கட்டிலில் அமர,
“அம்மாடி.. ஆத்தாடி.. உள்ள எல்லாம் வலியாடி.. நீ பாதி.. ஆளாக.. இருப்பதை காண சுகம்.. சுகம் தாண்டி.. யம்மா.. யம்மா.. யம்மா.. யம்மா..யம்மம்மா..” என்று பாடிக்கொண்டே, கையில் பாதம் கீருடன் வந்தான் ஹர்ஷவர்தன்.
“மவனே.. நான் வலில துடிக்குறேன்.. உனக்கு பாட்டு கேட்குதா?” என்று முணுமுணுத்தவாறே, தன் அருகில் உள்ள மேஜையின் மீதிருந்த வாழைப்பழத்தை எக்கி எடுத்து, அதனை வேக வேகமாக சாப்பிட்டாள். ஹர்ஷவர்தன் அசந்த நேரமாக பார்த்து, அவன் நடந்து வரும் பாதையில் போட, அதனை கவனிக்காதவனும் அதில் வலிக்கி,
“அய்யோ.. அம்மா..” என்று தரையில் விழுக,
“விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டாய்.. வாழைப்பழத்திலே..” என்று அவனுக்கு முன்னே, தன் பெருவிரலை தலை கீழாக கவிழ்த்து காட்டினாள் விளானி. அதனைப் பார்த்த ஹர்ஷவர்தன்,
“உன்னைய?” என்றவாறே வேகமாக தட்டுத்தடுமாறி, அவளை பிடிக்க எழுந்து நிற்க,
“விளா.. சீக்கிரம் கிளம்பி வெளியே வா.. நீயும் ஹாசினியும் ப்யூட்டி பார்லர் போகணும்..” என்று மலர்கொடி குரல் கொடுக்க,
“இதோ வர்றேன்மா..” என்றவள் அங்கிருந்து வெளியே செல்ல, அடிமைப்பெண் எம்ஜிஆர் போல் நடந்த ஹர்ஷவர்தனோ, பொத்தென மெத்தையில் மல்லாக்க படுக்க, வலி உயிர் போனது.
“இதுக்கெல்லாம் உன்னைய வைச்சு செய்யல.. நான் அமிர்தனோட பையனில்லடி..” என்றவாறே, அவளை அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட தொடங்கினான் ஹர்ஷவர்தன். அவன் விரிக்கும் வலையில் மானென விளானி மாட்டுவாளா? அல்லது எலியென உடைத்தெறிவாளா?
🤣🤣🤣🤣🤣🤣🤣 wowwwwwww awesome epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️
Super 😍
Sema and intresting sis