ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 4

அத்தியாயம் 4

 

“டேய் ஹரி.. எங்கடா இருக்கீங்க? பார்ட்டிக்கு எல்லோரும் வந்துட்டாங்க.. விளானியும் ஹர்ஷுவும் கூட வந்துட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் எங்கடா போனீங்க?”

 

“நாம டேக் ஓவர் பண்ணப் போற கம்பெனியோட எம்டி உடனே ஹைதராபாத் வரச் சொன்னாரு.. அதான் நான் கிளம்பினேன்.. ஹாசினிய பார்ட்டிக்கு வரச் சொன்னேன்.. அவ தான் என்கூடவே வர்றேன்னு சொன்னா.. சோ, அவளும் நானும் இப்ப ஹைதராபாத் போயிட்டு இருக்கோம்..”

 

“எதுல?”

 

“கார்ல.. பெங்களூர்ல இருந்து ஹைதராபாத் போக வெறும் நயன் ஹவர்ஸ் தான் ஆகும் டாட்.. நாங்க பத்திரமா போயிடுவோம்.. யூ டோண்ட் ஒர்ரி..”

 

“அதுக்கில்ல ஹரி.. இங்க இருக்குற ரிலேட்டிவ்ஸ்.. ஸ்டாஃப்ஸ், பிஸ்னஸ் மேன் எல்லோருக்கும் நான் என்னடா பதில் சொல்லுவேன்? எதையாவது சொல்லி சமாளிங்க டாட்.. நாங்க இப்போ திரும்பி எல்லாம் வர முடியாது..” என்றவன் கைபேசியை அணைத்து விட, செய்வதறியாது நின்றார் அமிர்தன்.  

 

“சின்ன வயசுல இருந்து அவனோட இஷ்டத்துக்கு விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான் புரியுது..” என்று முணுமுணுத்த அமிர்தனின் தோளில் கை வைத்த அர்ஜுன்,

 

“இப்ப ஃபீல் பண்ணி.. ட்டூ லேட்.. சரி வா.. சமாளிப்போம்.. அர்ஜெண்ட் பிஸ்னஸ் ட்ரிப் போயிருக்குறதா சொல்லுவோம்.. வேற வழி?” என்றவாறு தன் நண்பனை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான் அர்ஜுன். 

 

“அய்யோ எப்படா விடுவீங்க? தலையெல்லாம் வலிக்குதே..” என்றவாறு தன்னருகே நின்றிருந்த விளானியை ஓரக்கண்ணால் பார்த்த ஹர்ஷவர்தன், சற்று தூரத்தில் நின்றிருந்த கலாவதியை,

 

“பாட்டி.. பாட்டி..” என்று தன்னருகே அழைக்க, நிற்க முடியாது நின்றிருந்த விளானி நேராக நிமிர்ந்து நிற்க,

 

“அது.. அந்த பயம் இருக்கணும்..” என்று அவளது காது பட, தன் வாயிற்குள் முணுமுணுத்தவனை முறைத்து பார்த்தவள், அங்கே சென்று கொண்டிருந்த வெயிட்டரை யாரும் அறியாமல் தன்னருகே அழைத்தவள், அவனது காதிற்குள் ஏதோ கூறி, அவனது கையில் சில ரூபாய் நோட்டுகளை கொடுக்க, அதனை வாங்கிய வெயிட்டரும், சிறிது நேரத்தில் கையில் ஏதோ ஒரு பாணத்தை எடுத்துக் கொண்டு வந்தான். 

 

“சார் ஜுஸ்..” என்றவாறு ஹர்ஷவர்தனிடம் நீட்ட, அதனை தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டே எடுத்து வாயில் வைத்தவனின் முகம் அஷ்ட கோலமாகியது. அவன் முகம் சென்ற போக்கை பார்த்த விளானியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன் வாயில் இருந்ததை முழுங்கியவன்,

 

“என்ன இது? இப்படி கசக்குது? இதை யார் கொடுக்க சொன்னா?” என்று வெயிட்டரை கோபமாக முறைத்து கொண்டே  கேட்க,  

 

“உங்க பொய்ப் தான் உங்களுக்கு பாகற்காய் ஜூஸ் கொடுக்க சொன்னாங்க.. உங்களுக்கு சுகர் இருக்காம்.. இன்னைக்கு அளவுக்கு அதிகமா நீங்க ஸ்வீட் சாப்பிட்டீங்களாம்.. அதனால உங்களுக்கு டையட் மெயின்டெயின் பண்ணணும்னு சொன்னாங்க.. இந்த பாகற்காய் ஜூஸ் போட்டு கொடுத்தா.. நீங்க என்னைய பெர்மனெண்ட் எம்ப்ளாய் ஆக்கிடுவீங்கன்னு சொன்னாங்க.. நான் பெர்மனென்ட் எம்ப்ளாய் ஆயிட்டேனா சார்?” என்று ஆர்வத்துடன் கேட்ட வெயிட்டரை பல்லைக் கடித்தவாறு பார்த்த ஹர்ஷவர்தன், 

 

“பெர்மனென்ட்டா தானே உடனே? ஆக்கிடுறேன்..” என்று கூறிவிட்டு திரும்ப, அவனது பார்வையில் கண்கள் பளிச்சிட சிரித்தவாறு நின்றிருந்த விளானி படவே, 

 

“மவளே.. உன் வேலை தானா இது? இருடி.. உனக்கு இருக்கு..” என்று முணுமுணுத்தவனை பார்த்து தன் உதட்டை நீட்டி, கண்களை சுருக்கி, அழகு காட்டியவளின் கைபேசி அழைக்க, அதனை காதில் வைத்தவள், துள்ளி குதித்தாள். 

 

“வாவ்.. சூப்பர் டி.. நான் இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவேன்..” 

 

“நீ மெதுவாகவே வா.. அது என் அண்ணோட ப்ரெண்ட் வீடு தான்.. உன்னைய பத்தி அண்ணன் கிட்ட பேசிட்டேன்.. அங்க பக்கத்து வீட்டுல தான் இருப்பான்.. அவன்கூட வெறும் பசங்க மட்டும் தான் இருக்காங்க.. உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க..”

 

“தாங்க்ஸ் டி சைலு..” என்றவள் துள்ளிக் குதிக்க, தூரத்தில் இருந்து இதை பார்த்தவனது புருவத்தின் மத்தியில் முடிச்சொன்று விழுந்தது. 

 

“யார் கூட பேசிட்டுருக்கா? இப்படி குதிக்குறா?” என்றவனின் கவனத்தை கலைத்தது அவனது கைபேசி. அதனை எடுத்து காதில் வைத்தவன்,

 

“இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவேன்.. பிரசன்டேஷன் டீடெயில்ஸ் எனக்கு மெயில் பண்ணிடு..” என்றவன் கலாவதியை நோக்கிச் சென்றான். 

 

“ப்யூட்டி.. எனக்கு புதுசா ப்ராஜெக்ட் கிடைச்சுருக்கு.. நாளைக்கு போர்ட் டைரக்டர்ஸ்கூட ஆன் லைன் மீட்டிங் இருக்கு.. அடுத்த நாள் காலைல நான் ஊர்ல இருந்தாகணும்.. உங்க சடங்கு எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சுருங்க..  ப்ளீஸ் ப்யூட்டி..”

 

“ஓகே.. ஓகே.. கூலா இருடா.. இந்த பாட்டி இருக்கும் போது நீ ஏன்டா கவலைப்படுற? ஆனா, நானும் விளானியும் உன்கூட தான் வருவோம்..”

 

“என்னமோ பண்ணுங்க.. ஆனா நாளைக்கு மறுநாள் காலைல கிளம்பணும்..”

 

“ஓகே டீல்..” என்ற கலாவதி, அங்கு வந்த விருந்தினரை கவனிக்க செல்ல, கணவன் மனைவி இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டனர். 

 

தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமும், ஆந்திரா மாநிலத்தின் உரிமைப்படியான தலைநகரமுமான ஹைதராபாத்திற்குள் நுழைந்தது ஹரிஷான்த்தின் உயர்ரக கார். இந்நகரம் “முத்துக்களின் நகரம்” என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றதாகும். சுற்றி வயலும் அதன் சார்ந்த நிலமுமாக இருந்த இடத்தின் நடுவே, அழகாக அமைந்திருந்தது ஹரிஷான்த்தின் இல்லம். உள்ளே நுழைந்ததும் அவளைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டே ஓடி வந்தது டைகர்.

 

“டைகர்.. எப்படிடா இருக்க? அக்கா.. உன்னைய பார்க்காம எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா?” என்ற ஹாசினி, அதனை தூக்கி கொஞ்ச,

 

“அட.. அட.. அடடடா. ஒரு நாய் இன்னொரு நாயை கொஞ்சறதை பார்க்கும்போது.. கண் கொள்ளா காட்சியா இருக்கு..” என்றவாறே ஹாசினியை பார்த்து ஹரிஷான்த் கூற,

 

“அதைப் பார்த்த இன்னொரு நாய் பொறாமைபடுகிறதே?!” என்று கூற,

 

“ஹேய் என்ன? என்னைய நாய்னா சொல்ற?” என்றவளை முறைத்தவன், 

 

“இங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோருக்கும் என்னோட கல்யாணம் நின்னது தான் தெரியும்.. நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமான விஷயம் யாருக்கும் தெரியாது.. அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ..” என்று கூறிவிட்டு, தனக்குறிய அறையை நோக்கிச் செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றாள் ஹாசினி. தன் பின்னால் நாய்குட்டியை போல் வருபவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்த ஹரிஷான்த், கண்களால் என்னவென்று கேட்க,

 

 “இல்ல.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. இதுல நாம ரெண்டு பேரும் தனித்தனியா தூங்குறது நல்லதில்லன்னு பாட்டி சொன்னாங்க.. அதான்..” என்று கழுத்தை மேலும் கீழுமாக பார்த்தவன்,

 

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரே ரூம்ல தங்கலாம்னு நினைச்சியா?” என்று கேட்க, ஆமென்று வேகமாக தலையை ஆட்டினாள் ஹாசினி.  

 

“இங்கப்பாரு ஹாசினி.. அது பெங்களூர்.. எல்லோரும் கூட இருக்கும் போது, நாம ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட் அண்ட் வொய்பா நடிக்கத்தான் செய்யணும்.. ஆனா, இங்க அப்படி நடிக்கணும்னு எந்த கட்டாயமும் கிடையாது.. நீ.. நீயா இருக்கலாம்.. நான் நானா இருக்கலாம்.. நாம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்குறது.. ஒரு மாதிரி அன்கண்ஃபர்டபுளா இருக்கு.. அண்ட்.. நாம தனித்தனியா தூங்குறதை வீட்டுல யார்கிட்டேயும் சொல்லிடாத.. முக்கியமா பாட்டிக்கு தெரியவே கூடாது..” 

 

“ம்ம்.. ஓகே..” என்றவள் கூறிய மறுநிமிடம், தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான் ஹரிஷான்த். 

 

“இப்படி தனித்தனியா இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணணும்?” என்று ஹாசினி முணங்கிக் கொண்டே செல்ல, 

 

“அங்க என்ன முணுமுணுப்பு?” என்று ஹரிஷான்த் குரல் கொடுக்க,

 

“இல்ல.. காலைல என்ன ப்ரேக் ஃபாஸ்ட் பண்ணலாம்னு கேட்டேன்..” என்றவள் குரல் கொடுக்க,

 

“எப்பவும் பண்ணுவியே கம்பு இட்லி.. அதையே பண்ணு.. நான் கொஞ்ச நேரத்துல ரெடியாகி வந்துடுவேன்..” என்று பதிலளித்தவன் இருக்கும் திசையை நோக்கி திரும்பி பார்த்தவள், பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றாள். 

**************************************************

 

“டாடி..”

 

“சொல்லுமா..”

 

“எனக்கு பிரகாஷ்கிட்ட இருந்து டிவொர்ஸ் வேணும்..”

 

“அது என்ன கடையில கிடைக்குற மிட்டாயா? உடனே வாங்கிக் கொடுக்க? வாழ்க்கை சம்பந்தப்பட்டதுமா.. அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ண முடியாது.. முதல்ல உன் பிரச்சினை என்னன்னு சொல்லு..”

 

“நான் ஹரிஷான்த்தை லவ் பண்றேன்.. அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்..”

 

“ஓ.. ஏஹெச் கம்பெனியோட வாரிசை சொல்றியா? அவன் தான் உனக்கு  கல்யாணம் ஆகிடுச்சுன்ன உடனே விலகி போயிட்டானேமா.. அவனை விட்டுத்தள்ளு.. பிரகாஷ் அவனை விட திறமைசாலி.. புத்திசாலி.. நீ அவன் கூட வாழுறது தான் நியாயம்.. அப்புறம் பிரகாஷை அனுசரிச்சு, போக கத்துக்கோ.. உனக்கு நடந்த கல்யாணம் ஒரு பில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டோட சம்பந்தப்பட்டது.. அதுக்கு ஏதாவது பங்கம் வந்துச்சு, பெத்த பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.. கொன்னு, குழி தோண்டி புதைச்சுடுவேன்.. “ என்று காமினியை எச்சரித்து விட்டு சென்றார் அவளது தந்தை விஸ்வநாதன். தான் நினைத்ததை நடத்தி பழக்கப்பட்டிருந்த காமினியின் காதில் தந்தை கூறியது விழுந்திருக்குமா? அப்படியே விழுந்து இருந்தாலும் ஹரிஷான்த்தை  விட்டு விலகுவாளா காமினி? 

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top