25
சூரியன் இன்னும் விழிக்காத இளங்காலை நேரம் துயில் எழுந்தவள், தன் நெஞ்சில் தலை வைத்து இரு கைகளால் அவளை அணைத்தவாறே உறங்கும் கணவனை கண்ட நொடி, மெல்லிய வெட்கம் மேவிட, விடியும் முன் தங்கள் அறைக்கு செல்ல அவனை எழுப்ப, தேவாவோ ஆழ்ந்த உறக்கத்தில்.. நேற்று அவன் செய்த சீண்டல்கள் நினைவு வர, குறும்பு புன்னகையுடன் அவன் கன்னத்தை அழுத்தமாக கடித்து வைத்தாள் வைஷூ.. வலியில் அரண்டு அவன் எழ, ” குட் மார்னிங் புருஷர் ” என்று அப்பாவியாக இமை கொட்டி, இதழ் குவித்து சொன்னவளை பார்த்து கோபம் போய் தாபம் கொள்ள, மீண்டும் ஒரு சங்கமத்தை தொடர்ந்தான் கொஞ்சம் வன்மையாக…
கூடல் முடித்து அவளை அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து காதருகே தன் மூச்சு காற்றால் வெப்பமேற்றி ” ஒவ்வொரு நாளும் என் காலை உன்னுடைய இதழ் முத்தத்தில் துவங்க வேணுமடி ” என்றான் காதலாக…
“எப்படி.. இப்போ கொடுத்தேனே அப்படியா” என்று அவள் கிளுகிளுத்து சிரிக்க,
அவள் கழுத்தில் இருந்து முகத்தை நீக்கி அவளை பார்த்தவன், ” வித் பிளாசர் பேபி.. ஆனா அதுக்கு அப்புறம் இப்போ நடந்தது போலவே தான் நடக்கும்.. எனக்கு டபிள் ஓகே ” என்றான் கிறக்கமாக..
” அடப்பாவி ” என்று அவள் வாய் பிளக்க..
அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தவன், ” ஐ லைக் டர்டி கிஸ் ” என்றவனை புரியாமல் பார்க்க, மீன் குஞ்சினை நிகர்த்த அவள் பிளந்த வாயை அடைத்து இருந்தான் தன் வாயை வைத்து..
மீண்டும் தூங்க முயன்றவனை உலுக்கி எழுப்பி, அவர்கள் அறைக்கு அழைத்து வந்தாள் வைஷூ. மெத்தையில் விஸ்தாரமாக அவன் தூங்க, அவள் குளியல் முடித்து வந்து, ஆழுந்து உறங்கும் கணவனை பார்க்க, மீண்டும் ஒரு குறும்பு புன்னகை அவள் இதழ் ஓரம் துளிர் விட, அவன் ஸ்ட்ரெஸ் பஸ்டர் அறைக்குள் நுழைந்து வழக்கம் போல ஒரு குத்து பாட்டை அலற வைத்து விட்டு, லிஃப்ட் மூலமாக கீழே ஓடி விட்டாள். பின் தேவா கையில் மாட்டினால் அவனுக்கு வரும் கோபத்திற்கு தாபமாக மாறினால், இன்று முழுவதும் வைத்து செய்வானே அதற்கு பயந்து தான் இந்த ஓட்டம்…
வைஷாலி எதிர்பார்ப்பின் படியே தூக்கத்தில் இருந்தவன் பாட்டு அலறலில் இவன் அலறி எழுந்து வைஷூ என்று கத்தினான் அப்பாட்டுக்கும் மேலாக…
அவள் தான் உஷாராக கீழே சென்று விட்டாளே.. விரைந்து சென்று பாடலை அணைத்தவன். அவனும் குளியல் முடித்து வேகமாக சென்றான் கீழே குறும்பு பெண்ணவளை குறும்பாக தண்டிக்க..
வழக்கம்போல டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து தேவாவிற்காக காத்துக் கொண்டிருக்க.. இவன் முகத்தில் கடுகடுப்பு விரவ இறங்கி வந்தான். அதை பார்த்த அனைவருக்குள்ளும் ஒரு கேலி புன்னகை ஓட அதை தங்கள் இதழுக்குள் புதைத்து அவனைப் பார்த்தனர். பார்த்த மாத்திரத்தில் அவன் கண்டு கொள்ள.. அனைத்துக்கும் காரணம் தன் மனைவி என்று புரிந்து அவளை முறைத்து ” தனியா மாட்டும் போது உன்னை வச்சிக்கிறேன்டி ” என்று உதட்டு அசைவில் அவளுக்கு விரைவாக ஒரு செய்தி அனுப்ப.. அதற்கெல்லாம் பயந்தால் அவள் வைஷாலி அல்லவே..
உடனே ” வச்சுக்கோங்க.. வச்சுக்கோங்க.. ” என்று பதில் செய்தி அனுப்பி அவனை உசுப்பேத்தி விட்டாள்.
அன்று பிரபல இதய மருத்துவரான அசோக் ராஜ் இடமிருந்து அவர்கள் ராஜன் பைனான்ஸ் குரூப்புக்கு லோன் சம்பந்தமாக ஒரு அறிக்கை வந்து இருக்க அதைப் பார்த்த பிறகு வைஷூவின் மனதில் பல கணக்குகள். கணவனிடம் அவரின் ப்ரோபைல் காட்டி இதை ப்ரோசீட் செய்யவா என்றாள். “இதுக்கு நீ நேர்ல போய் தான் ஆகணுமா?” என்று தேவாவின் கேள்விக்கு “ஆமாம் தேவா” என்று கூறி அம்மருத்துவரை காண விரைய, அவளை நிறுத்தி பல விஷயங்களை கூறி அனுப்பி வைத்தான்.
ராஜன் குரூப்பில் இருந்து நேரடியாகவே மருத்துவரைக் காண அதுவும் எம்டியே வந்து இருப்பதாக கூற அவருக்கு சற்று திகைப்பே.. அவசரமாக உள்ளே அழைத்தவர் வைஷாலியை கண்டதும் மீண்டுமொரு திகைப்பு ஒட்டிக்கொண்டது அவர் முகத்தில்..
ஆனால் வைஷாலியின் நிமிர்ந்த பார்வையில் தானாகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். ” நான் காட்டியாலிஜிஸ்ட்.. இப்போ கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் சென்னையிலிருந்து. இங்கே நான் ஒரு கிளினிக் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன் சின்னதா.. அதுக்குதான் பினான்ஸ் உங்க கன்ஷர்ன்ல அப்ளை பண்ணினேன் ” என்றார்.
” நீங்க ஒரு க்ளினிக் ஆரம்பிக்கிறது பதிலா ஏன் சார் ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்க கூடாது.. அதுவும் மல்டி ஸ்பெஷாலிட்டி..” டாக்டர் திகைத்து நோக்கி ” இப்போ என்னோட பினான்சியல் ஸ்டேட்டஸ்க்கு சரி வராதுமா. அதுவும் அதில் நிறைய டிஃபிகல்டீஸ் இருக்கு .. “
” உங்க ப்ராடீஸ்கே நிறைய பேசன்ட்ஸ் வருவாங்க டாக்டர்.. உங்க கேப்பபிள் அப்படி ” என்று அவருக்கு ஐஸ் வைத்து.. ” நியூராலஜிஸ்ட் ராமச்சந்திரன் உங்களுக்கு தெரியுமா? அவர் எங்க ரிலேசன்.. அவரையும் உங்க ஹாஸ்பிடல்ல ஷேரிங் பாட்டனரா சேர்த்துக்கலாம். உங்களுக்கு நாங்க கொடுக்கிற அமௌண்ட்டுக்கு நீங்க எங்களுக்கு சர்ட்டன் ஷர்ஸ் கொடுக்கலாம். ஷேர் கொடுத்தா உங்க கேபிடல் அண்ட் இன்டரஸ்ட் குறையும். இல்லை என்றாலும் பரவாயில்லை ” என்று அவள் அடுக்கடுக்காக யோசனைகள் சொல்லி கொண்டே சென்று அவரையும் அறியாது அவள் திட்டத்திற்கு ஒப்பு கொள்ள செய்ய..
” யூ ஆர் அமேசிங்… சாதாரண கிளினிக் ஆரம்பிக்க இருந்த என்னை இப்படி மல்டி ஹிஸ்ப்பிடல் ஆரம்பிக்க வைச்சிட்டீங்க.. என்று சொல்லி சிரித்தவர்,” பட் கன்ஸ்ட்டிரக்ஷன் எல்லாம் ” என்று இழுக்க..
” டோன் வொர்ரி டாக்டர்.. எங்க டி.வி. ஆர் கன்ஸ்ட்டிரக்ஷன் அதை பார்த்துப்பாங்க ” என்க..
” என்ன அவர்களா.. அவங்க எல்லாம் ரொம்ப பெரிய குரூப் மா.. இட்ஸ் நாட் பாசிபிள் ” என்றார் திகைத்த வண்ணம். கணவனின் புகழில் சற்றே கர்வம் கொள்ள, ” அதுவும் எங்க கன்சர்ன் தான் சர்” என்றாள் புன்னகை முகமாக…
” அப்போ.. தேவ்ஜி என்று அவர் மெல்ல கூற..
” என் ஹஸ்பண்ட் தான் ” என்றாள் பெருமையாக..
” வாவ்.. கிரேட்.. இப்போ புரியுது உங்க பேச்சு திறமை எல்லாம் எங்கே இருந்து வந்தது ” என்று அவர் புகழ..
அவருக்கு தலையாட்டி விடை பெற்று வெளியில் வந்தவள், பணியில் இருந்த அன்னையை பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு சென்றாள். அவள் பேசியதை பார்த்து மதியிடம் டாக்டர் விசாரிக்க, தன் மகள் என்று கூறினார்.
” சச்ச ஏ டேலண்ட் கேர்ள்.. ” என்று வைஷாலி பேசியதை கூற, மதிக்கும் பெருமை, அப்படியே அவள் அப்பாவை கொண்டு பிறந்து இருக்கிறாள் என்று.
காலை வேலை, வேலையின் இடையே அவ்வப்போது கணவனுடன் சரசம், மதியம் முடிந்தால் வீட்டிற்கு இல்லையேல் ஆபீஸில் உணவு உண்டு மாலை நேரம் வீட்டிற்கு சென்றால் , குடும்பத்தினருடன் பேசிவிட்டு அவர்களுக்கான நேரம் என இனிதாக.. காதலாக.. காமமாக.. சென்றது.
அன்று வைஷாலி இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் குறுந்தொழில் செய்பவர்களின் லோன்களுக்கான முதல் தொகை செலுத்த வேண்டிய நாள். அவள் தேர்ந்தெடுத்த ஐம்பது நபர்களில், பதினைந்து நபர்களின் பணம் மட்டும் அவர்கள் அக்கவுண்டில் இருந்து இவர்களுக்கான அக்கவுண்டில் மாற்றப்படவில்லை. சில பேர் இதே போல் ஒரு சில நாட்கள் தவறுவது உண்டு என்று நினைத்து இரு நாட்கள் பொறுத்துப் பார்த்தும், அவ்வாறு நடைபெறாமல் இருக்க அவர்களை பற்றி விசாரிக்க தன் ஆட்களை அனுப்பினாள் வைஷாலி.
அவர்களை விசாரிக்க சென்ற நபர்கள் கொண்டு வந்து கொடுத்த விபரம் அவளை தலை சுற்ற வைத்தது. ஆம் பணம் வாங்கிய அந்த 15 நபர்களும் தற்போது அந்த விலாசத்தில் இல்லை அவர்கள் செய்து வந்த தொழிலும் கூட இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய் பணம். தேவாவிற்கு இது அத்தகைய பெரிய பணம் இல்லையென்றாலும் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜக்ட்லேயே அவனுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டோமே என்று மனம் கலங்கினாள் வைஷாலி.
தன் சிஸ்டத்தை பார்த்தவாறு கண்கள் கலங்கி சிலை என்று அமர்ந்தவளை, பின் இருந்து அணைத்தவன் , அவள் தோளில் தன் தாடையை வைத்து வைஷூ என்று கிறக்கமாக மெதுவாக அழைக்க.. எப்பொழுதும் இப்படி அழைத்தால், “வைஷூக்கு என்ன வச்சிருக்கீங்க?” என்று பதில் கேள்வி கேட்டு தன்னை அணைப்பவள் இன்று சிலை என அமர்ந்து இருப்பதை பார்த்து எதுவோ சரி இல்லை அவளை திருப்பினான்.
அவன் திருப்பிய அடுத்த கணம் தன்னவனை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீர் உகுக்க அவனோ பதறி விட்டான்.
” அச்சோ வைஷூ.. என்னடா ஆச்சு ஏன் இப்படி அழுகுற ? விஷயம் என்னன்னு சொல்லு?” என்று அவளைத் தேற்ற திரும்ப திரும்ப அழுதாளே தவிர காரணம் சொல்லவில்லை. பின்பு அவனை அதட்டிக்கேட்க ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு அனைத்தையும் ஒப்புவித்தாள் கணவனிடம்.
அழும் மனைவியை தேற்றியவன் ” பணம் என்னடா இதுல விட்டேனா.. இன்னொரு கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல எடுத்துடுவேன் இதுக்கு போய் அழலாமா.?” என்று மனைவியின் கண்ணீரை தன் உதடுகளால் ஒற்றியெடுத்த அவனைக் கண்டவள் ” இந்த ரணகளத்திலும் உங்களுக்கு ரொமான்ஸ் கேட்குது என்ன?” என அவனிடம் முகத்தை திருப்பினாள்.
” ஐ அம் பிசினஸ் மேன் வைஷூமா.. கிடைக்கும் சான்ஸ் விடவே கூடாது ” என்று அவன் ஒற்றை கண்ணடிக்க..
சட்டென்று நினைவு வந்தவளாய் அவன்கிட்ட ” நான் அவர்கள் செக்யூரிட்டிக்காக, ப்ராப்பர்ட்டீஸ்ல டாக்குமெண்ட் வாங்கி வைத்திருக்கிறோம் தானே சைன் பண்ணி அப்போ அதை விற்று விடலாமா ” என்று தனக்கு ஏற்பட்ட ஏதோ யோசனையில் அவள் பரபரப்புடன் கேட்க..
அவளை பார்த்து சிரித்தவன் ” நோ யூஸ் ஏமாற்றனும் என்று முடிவு பண்ணி இருக்கிறவன் ப்ராப்பர்ட்டீஸ் உண்மையாக இருக்காது ” என்று கூற..
” இல்ல இல்ல தேவா.. நான் எல்லாத்தையும் கிராஸ் செக் பண்ணினேன்.. அவங்க கொடுத்த ப்ராப்டீஸ் டாக்குமெண்ட் எல்லாம் அவங்க பேர்ல தான் இருக்கு.. ஐம் டேம் சூர் ” என்றாள்..
“ஓகே கோ ஹேட் .. செக் பண்ணி பாரு ” என்றவன் அவளுக்கு இடம் கொடுத்து மற்ற வேலைகளைப் பார்க்க வெளியில் சென்றான்.
தன்னிடமுள்ள ப்ராப்பர்ட்டீஸ் டாக்குமெண்ட் எடுத்து தன் ஆட்களை விட்டு மீண்டும் அந்த ப்ராப்பர்ட்டீஸ் எல்லாம் யார் பெயரில் இருக்கிறது என செக் செய்ய சொல்ல தேவா சொல்வது உண்மை என்பது போல அந்த சொத்துக்கள் எல்லாம் அவர்கள் பேரில் இல்லை.. மீண்டும் தலை சுற்ற எங்கே தன் கணிப்பு தவறானது என்று புரியவில்லை வைஷூக்கு, தன் கைகளால் தலையை தாங்கி கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
அவள் முன் சூடான காபியை நறுமணத்தை உணர்ந்து மெல்ல நிமிர்ந்து பார்க்க, தேவா தான் அவளிடம் ஒரு கோப்பையை வைத்து விட்டு தானும் ஒரு கோப்பையில் அருந்திக் கொண்டிருந்தான். எப்படி இவனால் ஒன்றும் நடக்காது போல இவ்வளவு கூலாக இருக்க முடியுது என்று எண்ணம் தோன்ற அவனையே வெறித்துப் பார்த்தாள்.
” வைஷூ பேபி… இது ஆபீஸ் ரூம் , நம்ம ரூம் இல்ல.. இப்படியெல்லாம் மாமாவ சைட் அடிக்காதே ” என்று சொல்லி கன்ன குழி விழ சிரித்தவனை பார்த்து கோபமாக எழுந்து போய் அவனை தன் மெல்லிய விரல்களால் அடித்தாள்.
” உங்களையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா ?? என்ன மாதிரி டிசைன் நீங்க ?? ” என்று சொல்லி மேலும் அடிக்க, அவள் கையை இழுத்து தன் மடியில் அமர வைத்து, காபி கோப்பையை எடுத்து கொடுத்தவன் குடி டா என்றான் மென்மையாக.. அவன் அன்பில் நெகிழ்ந்தவளாக அவனை இறுக்க அணைத்துக்கொண்டாள்.
அவளை காபி குடிக்க வைத்தவன், ” இன்னும் கொஞ்ச நேரத்துல இது ஏன் இப்படி எல்லாம் நடந்ததுனு உனக்கு புரியும் அதுவரைக்கும் அமைதியா இரு ” என்றான்.
கணவனின் அமைதி அவளுக்கு ஏதோ உணர்த்துவதாக இருக்க அவளும் அவனை புரிந்து , காபியை ரசித்து குடித்து கொண்டிருக்க அந்நேரம் பார்த்து தடாலென அறைக்குள் பிரவேசித்தான் நந்தன் அனுமதியின்றி..
” என்னப்பா இரண்டு பேரும் ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கீங்க போல.. முப்பது கோடி பணம் உங்களுக்கு அவ்வளவு பெரிய பணம் இல்லையென்றாலும் ஏதோ என்னால முடிஞ்ச சின்ன சறுக்கல்.. எப்படி இந்த நந்தனோட அடி.. ” என்று கூறி அவர்கள் எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்த்தலாக அமர்ந்தான் நந்தன்.
” ஜூனியர்ஸ் வந்தா, சீனியர்ஸ் வெல்கம் பார்ட்டி வைப்பாங்க ” பின் ஒரு பெரு மூச்சு விட்டு, ” நீ தான் இந்த ஜூனியருக்கு வைக்கவே இல்லையே சீனியர்.. அதான் நானே வைச்சிக்கிட்டேன்.. எப்படி என் பார்ட்டி அள்ளுதா ” என்று தேவா பார்த்து தன் ரேபானை சுழற்றிக் கொண்டே கேட்டான் நந்தன்.
ஜூனியரா ??? சீனியரா ???
கர்வம் வளரும்..
Adapavi nandha
Semmmaa