ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 5

அத்தியாயம் 5

 

“எனக்கு பாகற்காய் ஜூஸ் கொடுத்துட்டு, இப்ப கும்பகர்ணி மாதிரி தூங்கவா செய்யுற? இருடி..” என்ற முணுமுணுதந்த ஹர்ஷவர்தன், தன்னருகே காரின் முன் சீட்டில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்த விளானியை வெட்டவா குத்தவா‌ என்று பார்த்தவன், பின் சீட்டில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கலாவதியை காரின் கண்ணாடி வழியாக பார்த்தவாறு,

 

“பாட்டி..” என்று அழைக்க,

 

“சொல்லு ஹர்ஷு..” என்று புலம்பியவரிடம்,

 

“நம்ம கோயில் வழக்கப்படி விளாக்கு வேப்பிலை ஜூஸ் கொடுக்கணும்னு சொன்னீங்க.. அதுவும் காலைல வெறும் வயித்துல கொடுக்கணும்னு சொன்னீங்க..” என்று ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு கேட்க,

 

“அங்க கோயில்ல போயி கொடுத்துக்கலாம்டா..” என்றவாறே மீண்டும் தூங்க தொடங்கியவரை,

 

“பாட்டிஇஇஇஇ..” என்று சத்தமாக அழைத்தான் ஹர்ஷவர்தன். அவன் போட்ட சத்தத்தில் காருக்குள் இருந்த அனுராகாவின் குழந்தைகளோடு விளானியும், கூடவே சேர்ந்து கலாவதியும் பதறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார, காரை சாலையோரமாக நிறுத்தினான் ஹர்ஷவர்தன்.

 

“ஹேய் என்ன சொல்ற? தாய்கிழவி.. இவன் பேச்சைக் கேட்டுட்டு எனக்கு வேப்பிலை ஜூஸ்னு.. எதையாவது கொடுத்தீங்க.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..” என்றவள் காரில் இருந்து இறங்க முயற்சிக்க, அதனை ஆட்டோ லாக் செய்தவன், பின்னாடி திரும்பி கலாவதியை பார்த்து,

 

“வெறும் வயித்துல தானே குடிக்கணும் பாட்டி.. இவளை விட்டா, எதையாவது உள்ளே தள்ளிடுவா.. அப்புறம் சாமிக்குத்தமாகிடும்.. நீங்க உங்க கொல்லுபேரனை சீக்கிரம் பார்க்க வேணாமா? அப்புறம் உங்க இஷ்டம்..” என்றவனை பயபக்தியுடன் கலாவதி பாட்டி பார்த்தார் என்றால் பரிதாபமாக பார்த்தாள் விளானி. 

 

“இப்ப என்னடா பண்றது? வேப்பிலை ஜூஸ்கு நான் எங்க போவேன்?” என்று அப்பாவியாக கேட்ட கலாவதியை கொலைவெறியோடு பார்த்தாள் விளானி.

 

“ட்டொண்டடொய்ங்.. இதோ.. நானே இவளுக்காக ஸ்பெஷலா அரைச்சு, வேப்பிலை ஜூஸ் எடுத்துட்டு வந்துருக்கேன்.. இதை இவ குடிச்சுட்டா, தெய்வ குத்தம் ஆகாது..” என்றவாறே தன்னிடம் இருந்த வேப்பிலை ஜூஸ் பாட்டிலை எடுத்து ஹர்ஷவர்தன் கலாவதியிடம் காட்ட, 

 

“இதை இவ குடித்துச்சுட்ட.. இன்னும் பத்து மாசத்துல எனக்கு கொல்லு பேரன் வந்துடுவானா?” என்று குதூகலித்த கலாவதியை அடிக்க கையில் எதுவும் கிடைக்குமா? என்று தேடினாள் விளானி. 

 

“ஹேய் தாய்கிழவி.. கண்ணாடியை திரும்புன ஆட்டோ ஓடிடுங்குற மாதிரி.. இவ கொடுக்குற ஜுஸை குடிச்சா.. உனக்கு கொல்லு பேரன் வந்துடுவானா?” என்றவளின் இருகைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்ட ஹர்ஷவர்தன், அவளது வாயில் ஜூஸை திணித்து, முழுதாக அவளை குடிக்க வைக்க, பெரிய போராட்டத்திற்கு பிறகு முழுவதையும் குடித்து முடித்த விளானி,

 

“என்னைய வேப்பிலை சாறு குடிக்க வைச்சுட்டீங்கல்ல.. தாய்கிழவி, உனக்கு கொல்லு பேரன் எப்படி வர்றான்னு நானும் பார்க்குறேன்.. கடைசி வரைக்கும் நீ இந்த தடியனை தான் பேரன்னு கொஞ்சணும்.. உனக்கு பேரனை பெத்து கொடுக்குறேனான்னு பாரு..” என்று கோபமாக பேசிய விளானி, தன் கைப்பைக்குள் இருந்த சாக்லேட்டுக்களை எடுத்து ஒரே வாயில் போட,

 

“என் பேரன் சிங்கம் டீ.. இன்னும் பத்து மாசத்துல உன் வயித்துல சிங்கக்குட்டியை கொடுக்கல.. அப்புறம் நீ என்னைய என்னன்னு கேளு..” என்று பெருமையாக ஹர்ஷவர்தனை கலாவதி பார்க்க,

 

“சிங்கக்குட்டி பிறந்தா.. அதை கொண்டு போயி ஜுல விடு.. எப்படியும் ஒரு அனிமலுக்கு அனிமல் தானே பிறக்கும்..” என்று சிரித்தவாறு பார்த்தவளை முறைத்து பார்த்தான் ஹர்ஷவர்தன். இருவரும் தம்பதியாக கோயிலுக்கு செல்ல, அங்கிருக்கும் அர்ச்சகரோ, மணமகளுக்கு மறுபெயரிட்டு, பொங்கலிடச் சொல்ல, திருதிருவென முழித்தாள் விளானி. 

 

“பொங்கலை சாப்பிடச் சொன்னா.. முதல் ஆளாக சாப்பிடுவா.. இவ எப்ப பொங்கல் வைச்சு.. நான் எப்ப ஊருக்கு கிளம்ப.. ஆத்தா, நீ தான் காப்பாத்தணும்மா..” என்று ஹர்ஷவர்தன், விளானியின் காதுபட முணங்க, கோபத்தோடு பொங்கலிடும் இடத்திற்கு சென்ற விளானி, மலர்கொடியின் சொல்லிற்கேற்ப, அனைத்தையும் செய்து, பொங்கலிட்டாள். பச்சைப் பட்டு கட்டிக் கொண்டு, அதன் கொசுவத்தை இடையில் தூக்கி சொறுகியபடி, வேர்வையில் நெற்றியில் வைத்த விபூதி குங்குமம் ஒருபுறம் கரைந்து ஓட, பொறுப்புடன் நடந்து கொள்பவளை பார்த்தவாறு, எதிரே இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“க்கும்.. பொண்டாட்டிய தனியா உட்கார்ந்து சைட் அடிக்குற போல?”

 

“அப்படியெல்லாம் இல்ல அங்கிள்..”

 

“ஹேய்.. கமான் ஹர்ஷு.. அப்படி சைட் அடிச்சாலும் தப்பில்ல.. இந்த மாதிரியான சந்தர்ப்பம் நமக்கு எப்பவாச்சும் தான் கிடைக்கும்..”

 

“அனுபவமா அங்கிள்?”

 

“எஸ்.. ஆனா, உன் பொண்டாட்டிய விட.. என் பொண்டாட்டி தான் ரொம்ப அழகு இல்ல?!”

 

“இருக்கலாம்..”

 

“இருக்கலாம் என்ன? அவ தான் அழகு..” என்ற அர்ஜுனின் கண்ணில் தன் மனைவிக்கான காதல் வழிந்தது. 

 

“அங்கிள்.. நீங்க எதுவும் மைண்ட் பண்ணலேன்னா.. உங்கக்கிட்ட ஒன்னு கேட்கலாமா?”

 

“ம்ம்.. கேளு ஹர்ஷு..”

 

“ஆண்ட்டியை நீங்க எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?”

 

“அவ பிறந்ததுல இருந்து..”

 

“வாட்?”

 

“அவ என்னோட அக்காப் பொண்ணு.. அவ பிறந்ததும் அப்படியே ரோஜா குவியல் மாதிரி.. அவ்வளவு அழகாயிருந்தா..”

 

“ம்ம்.. அப்புறம்..”

 

“உனக்கு ஒன்னு தெரியுமா? உன் ஆண்ட்டிக்கு ஓடவே தெரியாது.. ஓடச் சொன்னா.. குதிச்சு குதிச்சு நடப்பா.. அப்புறம் எங்கேயாவது பொத்துன்னு விழுந்துடுவா..”

 

“ஓ?!”

 

“ஹர்ஷு.. உன்கிட்ட ஒன்னு மட்டும் தெளிவா சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..”

 

“சொல்லுங்க அங்கிள்..”

 

“கணவன் மனைவி உறவுக்குள்ள நீ எந்த முடிவெடுத்தாலும் உன்னோட மூளை சொல்றதை கேட்காத.. உன்னோட மனசுல என்ன சொல்லுதோ.. அதை கேட்காம விட்டுடாத.. ஹர்ஷு இப்ப நீ ஒரு செடி பிடிங்கி வேற இடத்துல நட்டு வைக்குறேன்னு வைச்சுக்கோ.. நட்டு வைக்குற உனக்கோ இல்ல அந்த செடி வாங்கிக் கொடுத்தவங்களுக்கோ.. புதுசா ஒரு இடத்துல வேரூன்றி நிற்குற அந்த செடியோட கஷ்டம் தெரியாது.. அது மாதிரி தான் மனைவியும்.. புதுசா ஒரு இடத்தில அவ பழகுறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுவாங்குறது கல்யாணம் பண்ண உனக்கும் தெரியாது.. எங்களுக்கும் தெரியாது..”

 

“அங்கிள்?”

 

“எனக்கு புரியுது.. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விருப்பபட்டு கல்யாணம் பண்ணல.. ஆனா, கொஞ்சம் ப்ரெண்ட்ஸா இருக்கலாமே? எல்லா விஷயத்துக்கும், ரெண்டு பேரும் சண்டை போடணும்னு எந்த அவசியமும் இல்லையே?! நம்மக்கூட ட்ரெயின்ல ட்ராவல் பண்றவங்கக்கிட்டக் கூட நாம சிரிச்சு பேசுறோம்.. மனைவிங்குறவ லைஃப் லாங் நம்மக்கூட வர்றவ.. அவக்கிட்ட சிரிச்சு பேச வேணாம்.. ஆனா, முறைச்சு பார்க்காம இருக்கலாமே.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..” என்ற அர்ஜுன், சற்று தூரத்தில், தன் இடையில் தண்ணீர் குடத்தை வைத்து நடந்து வந்த மலர்கொடியை பார்த்த மறுநிமிடம், அங்கிருந்து சிட்டாக பறந்து, அவள் போய் நின்றிருந்தான். அவள் சுமந்து வந்த தண்ணீர் குடத்தை தன் தோளில் தாங்கியவன், தனது கைக்குட்டையை எடுத்து, தன் மனைவியின் முகத்தில் அரும்பி இருந்த வேர்வை துளிகளை ஒற்றி எடுத்தான். காலம் கடந்தாலும் கோலம் கரைந்தாலும், விடாது தூவும் தூவானமாக தூவும் அர்ஜுன் மற்றும் மலர்கொடியின் காதல், ஹர்ஷவர்தனை வியக்கச் செய்தது. அர்ஜுன் தன்னிடம் தேடி வந்து பேசிய பிறகு, விளானியை சீண்டாது, அவளிடம் இருந்து ஒதுங்கி சென்றான். முதலில் அவனது ஒதுக்கத்தை கவனிக்காத கலாவதி, பின்னர் அவனது ஒதுக்கத்தை கண்டு கொள்ளும் நாளும் வந்தது. மறுநாள் காலையில் எழுந்தவரின் முன்னால் தனது பயணப்பொதியோடு நின்றிருந்தான் ஹர்ஷவர்தன். கேள்வியாக பார்த்தவருக்கு தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக கூறி, மும்பை சென்றான். தனது டிசியை காரணமாகக் காட்டி, அவன் சென்ற சிறிது நாட்களித்து மும்பைக்கு செல்லவாத கூறினாள் விளானி.

************************************************

“எங்க கிளம்பிட்ட?”

 

“ஆஃபீஸ்கு..”

 

“உன்னைய எல்லாம் நம்பி.. எவன் வேலை கொடுத்தானோ? சீக்கிரமே அந்த கம்பெனி திவாலாகத் தான் போகுது..” என்றவாறே தனது கம்பெனிக்கு செல்ல தயாரானான் ஹரிஷான்த். 

 

“இதோ பார் வீட்டுக்கு சீக்கிரம் வந்துரு.. அப்புறம் தேவையில்லாம என்னையத் தேடி கம்பெனிக்கு வர்றதோ? இல்ல ஃபோன் பண்ணறதோ? வைச்சுக்காத.. புரிஞ்சுதா?” என்றவாறே கார் சாவியை கையில் எடுத்தவன் வெளியே செல்ல, அவன் பின்னோடு வெளியே வந்த ஹாசினி, சரியென்று தலையாட்ட, குனிந்து ஜு மாட்டிக் கொண்டிருந்த ஹரிஷான்த்,

 

“என்ன சத்தத்தையே காணோம்?” என்று கேட்க,

 

“தலையாட்டிட்டு இருந்தேன்..” என்றாள் ஹாசினி. அவளை அமர்ந்தபடியே பார்த்த ஹரிஷான்த்,

 

“நான் சொன்னது புரிஞ்சுச்சான்னு கேட்டேன்.. வாயை திறந்து பதில் சொல்லு..” என்றான் பல்லை கடித்து கொண்டு..

 

“புரிஞ்சுச்சு..” என்றவள் அவனது காரை நோக்கி செல்ல,

 

“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நீ ஏதாவது கால் டாக்சியோ.. இல்ல ஆட்டோவோ பிடிச்சு ஆஃபிஸ் போயிடு..” என்றவாறே தனது காரை எடுத்துக் கொண்டு பாய்ந்து சென்றவனை பெருமூச்சுடன் பார்த்த ஹாசினி ஆட்டோவில் ஏறி அலுவலகம் சென்றாள்.

*************************************************

“இது யாருன்னு தெரியுதா டாட்?”

 

“ஹரிஷான்த்?”

 

“எக்ஸாட்லி..”

 

“இப்போ இவன் போட்டோவை எதுக்கு எனக்கு காட்டுற? நம்மளோட அஞ்சு கோடி ரூபா காண்ட்ராக்ட்டை அசால்டா தூக்கிட்டு போயிட்டான்.. இவனை?”

 

“இவனால தான் ஏஹெச் கம்பெனியோட ஷார்ஸ் வேல்யூ மார்க்கெட்ல டாப் ஸ்கோர்ல நிக்குது..”

 

“அதுக்கு?”

 

“ஏஹெச் கம்பெனியோட ஷார்ஸ்.. இருபத்தைந்து சதவீதம், இப்போ மார்க்கெட்ல விலைக்கு வந்துருக்கு.. நான் அங்கக்கிட்ட ஷார்ஸை விலை பேசிட்டேன்.. நீங்க மட்டும் சரின்னு ஒரு கையெழுத்து போட்டீங்கன்னா.. ஏஹெச் கம்பெனியோட ஷார் ஹோல்டராகிடுவீங்க.. அந்த அஞ்சு கோடி ரூபா காண்ட்ராக்ட்டோட லாபமும் மறைமுகமாக உங்களுக்கு வந்து சேர்ந்துடும்.. நீங்க அந்த கம்பெனியோட பங்குதாரராகிடுவீங்க..”

 

“இதுல உனக்கென்ன லாபம்?”

 

“கொஞ்சம் கொஞ்சமா அந்த கம்பெனியை உங்களுக்கு சொந்தமாக்கிக்கலாம்..”

 

“நீ சொல்றது நடக்குமாம்மா?”

 

“நான் காமினிப்பா.. உங்க பொண்ணு.. சொன்னா.. சொன்னதை செஞ்சு காட்டுவேன்..” என்றவளின் கண்கள் மின்ன, அவள் கண் முன்னே ஹரிஷான்தின் முன் தோன்றியது. 

 

‘என்னைய விட்டு விலகிடலாம்னு நினைச்சியா? இந்த காமினி நினைச்சதை அடையாம விடமாட்டா.. உன்னைய தேடி வந்துகிட்டே இருக்கேன்.. இந்த ஜென்மத்துல நீ எனக்கு தான்.. எனக்கு மட்டும் தான்..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவளுக்கு தெரியவில்லை. காதல் என்பது கண்கள் பார்த்து வருவது.. ஆனால் திருமணம் என்பது கடவுளால் நிச்சயிக்கப்பட்டது என்று.. காதலிக்கு இருக்கும் உரிமையை விட மனைவிக்கு உரிமையோ ஆயுதம் போன்றது.. தன் கணவனை தீயது நெருங்கினால் தாக்க வல்ல ஆயுதம் அவளே, என்பதை உணராது போனாள் காமினி. 

 

 

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top