26
தடாலடியாக வந்து என் அதிரடி எப்படி என்று கேட்ட நந்தனை கிஞ்சித்தும் பார்க்காமல் மடியில் அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து ” காஃபி குடிச்சு முடிச்சிட்டீயா பேபி ” என்றான் காதலாக…
” இல்லைங்க.. படார்னு தம்பி வந்து கதவை திறந்தாரா பாதி காபி கீழே சிந்திடீச்சு ” என்று மூக்கை உறிஞ்சியவாறு வைஷூ சொல்ல..
“வேணும்னா இன்னொரு காபி சொல்லவா பேபி ?” என்று மிக அக்கறையாக தேவா கேட்க…
” இரண்டா சொல்லுங்க.. தம்பி வந்து இருக்கார் இல்லையா.. ” என்று தன் விருந்து உபசரிப்பை வைஷூ காட்ட..
” யூ ஆர் ரைட் ” என்றவன் இன்டர்காமில் இரண்டு காபி ஆர்டர் கொடுத்தான். அதுவரை தன் மடியை விட்டு மனையாளை இறக்கவில்லை.
நந்தன் பேசியதை ஒரு வார்த்தை கூட தான் கண்டு கொள்ளவில்லை என்று காட்டியவனை கண்டு நந்தனுக்கு தான் கோபம் எகிறியது. தன்னை வைத்துக் கொண்டு இருவரும் கொஞ்சி கொள்வது கொஞ்சம் சங்கடமாக கூட இருந்தது நந்தனுக்கு.. ‘ என்ன டா நடக்குது இங்கே!!! நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது டா !!’ என்ற மைண்ட் வாய்ஸ் உடன் நந்தன் அமர்ந்திருக்க.. நமட்டு சிரிப்பு இருவருக்குள்ளும்..
கதவு தட்டும் சத்தத்தில் தேவா மடியிருந்து எழுந்து தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். பணியாள் வந்து காபியை வைத்து விட்டு செல்ல, நந்தன் எதுவோ பேச வாய் எடுக்க வைஷாலி தன் கரம் கொண்டு தடுத்தவள் ” இருங்க தம்பி.. முதல்ல குடிக்கவிருந்த காபி போச்சு.. இந்த காபியாவது குடிச்சிக்கிறேன் ” என்று கூறி அணுவணுவாக ரசித்து ருசித்து அந்த காபியைப் பருகினாள்.
நந்தனை பார்த்த தேவா ” என்ன சொல்ல வர நீ எங்களுக்கு நஷ்டம் பண்ணிட்ட.. அதனால 30 கோடி பணம் இழப்பு அதானே ” என்று சாதாரணமாக கேட்க..
நந்தனுக்கு எழுந்த கடுப்பை மறைத்துக்கொண்டு ” உங்களுக்கு அந்த பணம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் முதலடி.. உங்களுக்கு இனிமே வரிசையாய் வந்து கொண்டே இருக்கும் இந்த நந்தன் மூலமா.. அதை சொல்லத்தான் வந்தேன் ” என்று கூறி அவன் எழுந்து செல்ல முயல..
அவனைத் தன் கையாலே சைகை காட்டி அமர சொன்னான் தேவா. ” இந்த ப்ராஜெக்ட்ல நீ ஜெயிச்சுட்டே.. எங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துட்ட.. அப்படித்தானே ” என்று ஆழ்ந்த குரலில் அவனை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே கேட்க..
நந்தன் அவன் கண்கள் கூறும் செய்தியை அறிய இயலாமல் ஸ்டைலாக தன் தோள்களை தூக்கி “ஆஃப் கோர்ஸ் ” என்றான்.
அப்போ ” ஓகே ஜூனியர் நம்ம ஒரு டீல் வைச்சுக்குவோமா “என்று தேவா கேட்க..
” என்ன “என்றான் நந்தன்.
“ஒன்னும் இல்ல இதுல நீ தோற்றா நாங்க சொல்லுறதை செய்யணும்.. என்று தேவா கூற தன் மேல உள்ள அபரிமிதமான நம்பிக்கையில் நந்தனும் கண்கள் மின்ன ” அப்போ நீங்க தோற்றா.. நான் சொன்னது செய்வீர்களா ?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
அவன் என்ன கேட்பான் என்று அறியாதவனா தேவா.. ஆனாலும் அவனுக்கு அந்த வாக்கை கொடுக்க அவன் விரும்பவில்லை.
” அது தோற்றா பாத்துக்கலாம் ஜூனியர் ” சற்று கர்வமாகவே பதிலளித்தான் தேவா.
“ஆனாலும் இவ்வளவு கர்வம் உனக்கு ஆகாது சீனியர் ” என்றான் நந்தன்.
“கர்வமமே தாண்டா!! அதுல என்ன தப்பு. என் கர்வம் சரியும் இடம் ஒன்னு தான் ” என்று மென்னகையுடன் தன்னவளை பார்க்க வைஷாலியும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் கண்களில் காதலை தேக்கி…
இவர்களின் கண் ஜாடைகளை பார்த்து தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நந்தன் சீனியர் என்று கத்தினான்.
” உனக்கு ஏன்டா இவ்ளோ கோவம் வருது ஆக்ச்ட்வலி.. எனக்கு தான் வரணும். கல்யாணமான சின்னஞ்சிறு கப்ல்ஸ் இருப்பாங்கன்னு, கதவை தட்டாம நீ உள்ளே நுழையுற.. அப்போ இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் நடக்கத்தான் செய்யும்.. நீ பார்க்க தான் செய்யணும்” என்று கூலாக தன் தோள்களை குலுக்கி கொண்டான்.
நந்தனுக்கு தன் தலையை எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. நாம் என்ன நினைத்து இங்கே வந்தால் , இவன் இங்கே நம்மை வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவன் தேவாவை முறைத்து பார்க்க..
” ஓகே .. இப்போ டீலுக்கு வரலாமா… சொல்லு “
என்னது என்று தெரியாவிட்டாலும் ஓகே சொல்லிட்டான் நந்தன்..
” இட்ஸ் அ ஜென்டில்மேன் அக்ரிமென்ட்.. பின் வாங்க கூடாது ” என்ற தேவாவை நோக்கி , ஒரு எகத்தாள சிரிப்பை உதிர்த்தான் நந்தன் நானாவது தோற்ப்பதாவது என்று..
தன் ப்ரீஃப்கேசிஸில் இருந்து ஒரு பைலை எடுத்து தேவா நந்தாவின் முன் வைக்க என்னவென்று பார்த்தவனை, ” பிரித்து படிச்சு பாரு ” என்றான்.
அதைப் படித்து பார்த்தவன் அதிர்ச்சியில் அவனை அறியாமல் எழுந்து நிற்க கையிலிருந்த ஃபைல் தன்னை போல நழுவி கீழே விழ, அதிலுள்ள பேப்பர்கள் எல்லாம் சிதறியது.
” இப்போ சொல்லுங்க ஜூனியர்… வெல்கம் பார்ட்டி அள்ளுதா ” என்று அவனை போலவே தேவா கேட்க பேச்சின்றி சமைந்திருந்தான் நந்தன்.
வைஷாலி இந்த ப்ராஜக்டை ஆரம்பித்து கடன் தொகை கொடுக்க ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும்போதே இந்த செய்தி நந்தனை எட்டியது. உடனே தேவாவைப் பழிவாங்க எண்ணினான். அதற்கு முப்பது ஆட்கள் வரை நந்தன் தனியாக தேர்வு செய்தான். அதாவது ஏற்கனவே தொழிலில் நஷ்டம் அடைந்து தொழிலை இதற்குமேல் நடத்த முடியாது என்கிற நிலையில் இருக்கும் 30 நபர்களை நந்தன் தேர்வு செய்து, அவர்களிடம் ராஜன் பைனான்ஸ் பற்றிக் கூறி, அங்கிருந்து கடன் வாங்கி வர வேண்டும், அதற்கு மேல் அவர்கள் இங்கே இருக்க கூடாது. மேலும் கடன் தொகைக்கு ஈடாக அவர்கள் அங்கு வைத்த சொத்திற்கு அதன் மதிப்பிற்கான பணத்தை இவன் கொடுத்து தன் பெயரில் எழுதி வாங்கியிருந்தான்.
எப்படியும் கடன் தொகையை திரும்ப செலுத்தும் நாட்களில் இவர்கள் குட்டு வெளிப்பட்டு விடும் அடுத்த அவர்களுடைய பார்வை சொத்தின் மீது தான் செல்லும் என்று அறிந்துதான் அவ்வாறு செய்தான்.
இவன் இவ்வளவு திட்டம் தீட்டி முப்பது நபர்களை அனுப்பி இருக்க… வைஷூ மற்றும் அவருடைய அலுவலக ஆட்கள் மிக மிக பார்த்து தெரிவு செய்வதில் பதினைந்து நபர்கள் மட்டுமே தேர்வாகினர். பரவாயில்லை முதலில் இவர்களை வைத்து காய்களை நகர்த்துவோம், அதற்குப் பின் வேறு வழி பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தான் நந்தன்.
நந்தனின் இந்தத் திட்டம் மனோருக்கு தெரியாது. மிக துல்லியமாக யாருக்கும் தெரியா வண்ணம் தான் தன் திட்டம் இருந்தது என்று மிதப்பு வேறு நந்தனுக்கு. ஆனால் எங்கே..எப்படி.. இது நடந்தது என்று தலையை பிக்காத குறைதான் அவனுக்கு.
எந்த சொத்துக்களை அந்த பதினைந்து நபர்களிடமிருந்து நந்தன் தன் பெயருக்கு எழுதி வாங்கி இருந்தானோ, அந்த சொத்துக்கள் அனைத்தும் ராஜன் பைனான்ஸ் குரூப்பின் பெயரில் மாற்றப்பட்டு ரெஜிஸ்டரும் செய்யப்பட்டிருந்தது.
அது சம்பந்தப்பட்ட ஃபைலை தான் தேவா நந்தனிடம் காண்பித்து இருந்தான். இதை கண்டவுடன் தான் அவனுக்கு அத்தனை அதிர்ச்சி எவ்வாறு இது சாத்தியம் என்று. பாவம் நந்தனுக்கு தெரியவில்லை எதுவும் சாத்தியம் தேவாவுக்கு என்று!! அறியா பிள்ளை…
” என்ன ஜூனியர் வெல்கம் பார்ட்டி.. எப்புடி ” தன் புருவங்களை உயர்த்தி கேட்க தான் தோற்ற கோபத்தை விட, வைஷாலி முன்பு தேவா தன்னை அவமானப்படுத்துவது அவனால் தாங்க முடியவில்லை.
அதைவிட அந்த பதினைந்து நபர்களுக்கு தேவா கொடுத்த இரண்டு கோடியை தவிர இவனும் கொஞ்ச பணத்தை அவர்களுக்காக செலவழித்து இருந்தான். அதைத் தவிர இந்த சொத்துகளுக்கு ஈடான பணமும் அவன் கொடுத்து இருக்க , அதுவே கிட்டத்தட்ட ஐம்பது கோடியை நெருங்கி இருந்தது. நந்தன் இவர்களுக்கு முப்பது கோடியை நஷ்டப்படுத்தி இருப்பதாக நினைத்திருக்க அவனுக்கோ அது ஐம்பது கோடியாக இருந்தது.
” வெல் ஜூனியர்… வேறு எந்த கொஸ்டின் கேக்கலையா நீங்க.. எப்படி நான் அவங்கள கண்டுபிடிச்சேன்?? எப்படி சொத்துக்கள் உன் பேர்ல இருந்தை கம்பெனி பேருக்கு மாறினோம் ?? எப்படி ரிஜிஸ்டரஷன் ஆனது ?? இந்த மாதிரி இன்னும் நிறைய கேள்விகள் வரணுமே ”
நந்தன் அமைதியாக தேவாவையே பார்த்துக்கொண்டிருக்க..” ஓகே நானே சொல்றேன். நீ முப்பது பேரை எப்போ பிடித்தியோ.. அப்பவே எனக்கு இன்ஃபர்மேஷன் வந்துட்டு.. உன்ன ஆடவிட்டு வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். உன் ஆட்கள் கொடுத்த செக்யூரிட்டி சொத்தை கடன் தொகை கொடுத்த இரண்டாவது நாளே எங்க கம்பெனி நேம்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். ஏன் ப்ரோ சொத்தை எழுதி வாங்கினியே அதை ரெஜிஸ்டர் பண்ணியா?? வட போச்சே” என்றான் தேவா.
“தீனா மட்டுமில்ல.. நீயும் என் கண்ட்ரோலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு ” என்று கூற ஷாக் அடித்தது போல் நிமிர்ந்து பார்த்த நந்தனை ஒற்றை கண்ணடித்து சிரித்தான் தேவா.
” ஓகே இப்படி டீலுக்கு வருவோமா.. டில் என்னென்ன.. ” என்று தேவா ஆரம்பிக்கும்போது, அதுவரை அமைதியாக தேவாவின் ஆட்டங்களை தன் நாற்காலியில் அமர்ந்து இரு கைகளால் தாடையை தாங்கிய வண்ணம் ரசித்துக்கொண்டிருந்த வைஷாலி சட்டென எழுந்து, ” தேவா.. தேவா.. நான் சொல்லுறேன் ப்ளீஸ் ப்ளீஸ்” என்றாள்.
” சரி ஃபர்ஸ்ட் சொல்லு.. ஓகே வா இல்லையான்னு பார்க்கலாம் ” என்றான் தேவா.
” இன்னும் இரண்டு வாரத்தில் செமஸ்டர் லீவ் முடிய போகுது.. சோ நந்தன் திரும்பவும் காலேஜ்க்கு போகணும். அதுவும் முன்னை மாதிரி கிளாஸ் எல்லாம் கட் அடிக்காம எல்லாம் ஹவரும் ஒழுங்கா கிளாஸ் அட்டென்ட் பண்ணனும். நல்ல பர்சன்டேஜ்ல பாஸ் ஆகணும் ” என்று அக்மார்க் லெக்சரராய் வைஷூ பேச..
“என்னது கட் அடிக்காம காலேஜ் போகணுமா?” ஜெர்கானான் நந்தன்.
வைஷூவின் தலையில் கையை வைத்து ஆட்டிய தேவா “அடியே இப்போ நீ லெக்சரர் இல்லடி கரஸ்பாண்டன்ட்!!” என்று ஞாபகப்படுத்த… “அப்போவும் அதை தான் சொல்லுவேன் ” என்று தன் தலையிலிருந்து அவன் கையை தட்டி விட்டாள்.
ஜெர்க்கான நந்தனைப் பார்த்து சிரித்த தேவா..” உனக்கு இன்னொரு ஆப்சன்ஸ் தரேன்.. எப்படியும் இந்த செமஸ்டர் உனக்கு கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். நீ இந்த ப்ராஜெக்ட் எனக்கு கீழே பண்ணனும்.. சாய்ஸ் யுவர்ஸ் ”
எண்ணெய் சட்டிக்கு தப்பி அடுப்பில் விழுந்த கதையாக நந்தனின் நிலை. இவர்களுக்கு ஆப்பு வைக்க வந்தவன்.. இரண்டு ஆப்புகளில் எதை தேர்ந்தெடுக்க என்று புரியாமல் தவித்து நின்றான். திடீரென்று தன் தலையைத் சிலுப்பிக் கொண்டு ” நான் ஏன் இதுக்கு சம்மதிக்கணும் அதெல்லாம் முடியாது” என்று வாசலுக்கு விரைந்தவனை தன் கரம் கொண்டு இறுக்கிப் பிடித்தான் தேவா.
” இருங்க ஜூனியர்.. அதுக்குள்ள போகனும்னா எப்படி ?” என்று அவனை தன் அருகில் இழுத்து தோள் மீது கை போட்டுக் கொண்டு தன் ஃபோனில் சில வீடியோக்களை காட்டினான். அதில் நந்தன் அவன் ஏற்பாடு செய்த ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் ஒவ்வொன்றாய் தெரிய விதிர்விதிர்த்து போனான் நந்தன். ” இது எல்லாத்தையும் நான் போலீஸ் ஸ்டேஷன் கூட வேணாம்.. உங்க அப்பாகிட்ட காட்டினேன் வை, உன் ஜோலி முடிஞ்சிடும் ” என்று தேவா நக்கல் செய்ய..
கண்களில் பயத்துடன் தேவாவை பார்த்தான் நந்தன். ” இதுக்கே பயந்தா எப்படி இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு ” என்று வேற ஒரு வீடியோவை காட்டினான்.
அதில் இவனிடம் ஏமாற்றிய அந்த பதினைந்து நபர்களும் கண்கள் கட்டப்பட்டு ஒரு அறையில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி அடியாட்கள் சிலரும் நின்று கொண்டிருந்தனர்.
” என்ன ஜூனியர்.. இவர்களிடம் வாக்குமூலம் வாங்கி விடலாமா ? அப்புறம் என்ன நடக்கும்.. ” தன் தாடையை தடவியவாறு யோசனையுடன் நந்தனை பார்க்க.. “ஓகே டீல் அக்சப்ட் பண்ணிக்கிறேன் ” என்றான் நந்தன்.
” குட் .. அப்போ காலேஜ் ஓகே தானே ” என்று கேட்க அவசரமாக தலையாட்டி மறுத்தவன், வைஷாலியை பார்த்து “அவங்க கிளாஸ்ல வச்சி செய்வாங்க அதுக்கு பதில் நான் ப்ராஜெக்ட் உங்க கூடவே இருக்கேன் ” ஏற்கனவே வைஷாலியிடம் பாடம் பயின்ற அனுபவத்தில் நந்தன் அவசரமாக கூற..
அவனை அறியாமல் பன்மையில் அழைத்திருந்தான் இருவரையும்..
அவன் கூறியதை கேட்டு கலகலவென்று சிரித்தான் தேவா வைஷூவை பார்த்து… அவள் இருவரையும் முறைத்து பார்த்தாள்.
” நீங்க பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் தானே அப்ப ப்ராஜெக்ட் என் கீழ் தான் செய்யணும்” என்று கெத்தாக தன் புருவங்களில் அபிநயம் பிடித்து கூற.. நிஜமாகவே மிரண்டான் நந்தன்.
அந்த பயத்துடனே அவர்களிடம் விடைபெற்று சென்றான் நந்தன்.
ஒருவரின் தவறுக்கு வீழ்த்தி அடித்து காயப்படுத்துவது என்பது மிக சுலபம்.. ஆனால் அதையே அவன் செய்த தவறை சுட்டிக்காட்டி அவனை மாற்றுவது என்பது மிகப்பெரிய காரியம். தேவாவிற்கு நந்தனை அவன் செய்த காரியத்திற்காக அடித்து போடுவது மிக சுலபமே!! ஆனால் அதனால் அவனுடைய வன்மம் கூடுமே தவிர அவனில் எந்த மாற்றமும் ஏற்படாது. கூடவே அவன் யார் தன் குடும்பம் தானே என்று ஒரு எண்ணமும் தான் தேவாவை நந்தனை மாற்ற காரணம்..
அன்று இரவு தங்கள் அறையில் வைஷூவை கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தான் தேவா.
” அப்படி என்னடி கிளாஸ் எடுத்த அவன் பயந்து ஓடுற மாதிரி ” அதையே சொல்லி கேலி செய்து அவளை ஆங்கிரி பேர்ட்டாக மாற்றிக் கொண்டிருந்தான்.
அவனை முறைத்து விட்டு, மிக மும்மரமாக தனக்கு வந்த பார்சலை பிரித்து கொண்டிருந்தாள். “என்னது ஏது இவ்வளவு பெரிய பார்சல்?” என்ற தேவாவிற்கு, ” தெரியலங்க கார்த்திக் அண்ணா வந்து கொடுத்ததா அத்தை சொன்னாங்க “என்று பிரித்தவளின் கண்கள் விரிந்தது வியப்பில்.
அங்கே அழகிய பிங்க் நிற டெடி ஒன்று மூன்று அடியில் அமர்ந்திருந்தது. வாவ் ” சூப்பர் அன்னைக்கு பேச்சுவாக்கில அண்ணன் கிட்ட சொன்னேன்.. உடனே வாங்கி கொடுத்திட்டார் ” என்று சந்தோஷத்தில் அந்த டெடியை கட்டிப்பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் வைஷூ.
தேவாவோ முசு முசு என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே வைஷூவையும் அவள் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த டெடியையும் பார்த்து “அடேய் பாசமலர் இருடா.. உன் கல்யாணத்தின் போது என் தங்கச்சிக்கு 5 அடி உயரத்தில் டெடி பியர் வாங்கி பார்சல் அனுப்புறேன் ” என்று அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.
அடுத்த நொடி அந்த டெடியை கைப்பற்றி தூக்கிக்கொண்டு ஒடியவனை துரத்தினாள் வைஷாலி.
” இங்க பாருடி என் பெட்ரூம் பெட்டுல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் இடம்.. வேறு எதுக்கும் கிடையாது ” என்று அந்த டெடியை தங்கள் படுக்கை அறையின் வெளியில் இருந்த வரவேற்புறையில் ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு, தன் செல்ல டெடியை தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் வைஷாலியின் சிக்ஸ் பேக் டெடி.
இதே சந்தோஷம் நாளையும் அவர்களிடம் இருக்குமா??? இல்லை குள்ள நரியின் குள்ளநரித்தனம் பழி வாங்குமா ??
கர்வம் வளரும்..
❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️
Super sis 💞
Nice sis