ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31

31

 

 

 

அன்றைய நிகழ்வுக்கு பின் அவன் சரியாக கூட அவளிடம் பேசுவது இல்லை. இவளே சைட்டுக்கு சென்றாலும் பில்டிங் பற்றிய விவரங்கள், கட்டிடம் எந்நிலையில் உள்ளது , அவள் ப்ராஜக்ட் விஷயங்கள் பேசுவதோடு சரி.. வேறு எவ்வளவுதான் பேசினாலும் அவளை முறைத்துவிட்டு சென்று விடுவான். ஆனால் தவிர்க்கவில்லை..

அந்த மட்டில் போதுமென்று இவளும் தனக்கு தோன்றாத சந்தேகத்தையும், தேவையில்லாத விளக்கங்களையும், ப்ராஜெக்டில் கேட்டே அவனை தன்னுடன் இருத்திக் கொள்ள பார்ப்பாள் அதிக நேரம்.

 

அவனின் தனிமையான நேரங்களில் அவன் தனிமையை தகர்க்கவென செல்வாள் தாரகை இவள்..

 

அவளின் குறும்புகளையும் , தனக்காக அவள் செய்யும் செயல்களையும் கண்டு மனம் துள்ளினாலும் வெளியில் சொன்னால்.. காட்டிக் கொண்டால்.. மோகினி பிசாசு வைத்து செய்வா நம்மை.. இப்படியே கெத்தை மெயிண்டன் செய்வோம்.. என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வான் பல நேரங்களில்.. 

 

இன்னும் சில நேரங்களில் அவனுக்கு போனை போட்டு அவன் பேசாமல் இருந்தால், இந்த பக்கத்தில் ஏதாவது ஒரு பாட்டை அலற விடுவாள்.. அதுவும் ஃபாரின் ப்ராட்அப் ஆனா அவனை கண்டே பிடிக்க முடியாத தமிழ் பாட்டு ஒன்று போட்டு. சைட்டில் மிக முக்கியமான வேலையில் இருக்கும்போது இவளின் இந்த செயலில் அதிர்ந்து தான் போவான் தேவா.

 

இவன் பேசாமல் தண்டித்தால், அவள் இம்சை செய்தே இவனை தண்டித்தாள்.

அதுவும் முக்கியமாக யாரோடும் பேசும்போது அவனால் ஒன்றுமே சொல்ல இயலாது. போனை எடுக்காமல் விட்டாலும் அதற்கும் நொடிக்கொருதரம் போனை போட்டு அவனை படுத்தி எடுத்தாள் இம்சை ராணி.. 

 

” ஸ்டடி ஹாலிடேஸ் லீவ் விட்டாலும் விட்டார்கள் இவள் தொல்லை என்னால தாங்க முடியலையே ” என்று அலுத்துக் கொள்வான் செல்லமாக..

 

 

இதற்கு அவளை நான் பாவம் பார்த்து மன்னித்து விட்டிருக்கலாம் என்று அழும் நிலைக்கு தள்ளப்பட்டான் தேவா. அவளை அவனால் கடிய முடியாததற்கு அவன் மனதின் ஆழமான நேசமே காரணம்.

 

 

” அப்போ அண்ணி உன்னையும் வச்சு செஞ்சிருக்காங்க சொல்லு.. அப்பா இப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. எங்கே நான் மட்டும்தான் அந்த மாதிரி அனுபவிச்சேன் நினைச்சேன்” என்று நமட்டு சிரிப்புடன் நந்தன் சொல்ல…

 

கார்த்திக்கோ அவனின் பாசமலரின் இந்த காட்டுத்தனமான காதல் விளையாட்டுகளில் விழி விரியே நண்பனை பார்த்து ” மச்சி எதுக்கும் என் தங்கச்சி கிட்டே, மிருக்கு இதெல்லாம் சொல்லி கொடுக்க வேணாம்னு சொல்லணும் மச்சி ” என்றான் பெரும் யோசனையுடன்.. அவன் கஷ்டம் அவனுக்கு..

 

” அடிங்க நான் ஒருத்தன் என் கஷ்டத்தை சொன்னா, அவன் என்னமோ யூ டூ புரூட்டஸ் என்று சந்தோஷ படுறான். நீ உன்னை நினைச்சு கவல படுற.. போங்கடா இதுக்கு மேல நான் சொல்ல மாட்டேன் ” என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவன் கோபமாக விறைத்து உட்கார..

 

கார்த்திக்கும் நந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். பின் கார்த்திக் ” மச்சி நீயே சொல்லிட்டேனா உனக்கு ப்வேரான விஷயங்களை சொல்லிடலாம். இதே நாங்க போய் தங்கச்சி கிட்ட கேட்டோம் வச்சுக்கோ.. அப்புறம்… ” என்றவனை நோக்கி தன் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டவன் ” வேணாம் ராசா.. வேணவே வேணாம்.. நானே சொல்லுறேன்.. நானே சொல்லறேன் ” என்று தன் கதையை தொடர்ந்தான்..

 

காலையில் எழுந்ததிலிருந்து வைஷாலிக்கு இடது கண் துடித்து கொண்டே இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் ஆரம்பிக்க இருக்க செமஸ்டர் லீவில் இரவு அதிக நேரம் படித்துக்கொண்டிருந்ததால் இருக்குமோ என்று ஒரு மனம் சொன்னாலும் அவள் உள்ளுணர்வு வேறு ஒன்று காட்டியது. 

 

அது அவளுக்கு மிக நெருக்கமான யாருக்கோ ஏதோ ஒரு ஆபத்து நிகழ போகிறது என்று உறுத்திக்கொண்டே இருந்தது. வெகுநேரம் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாலும் சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.. இதெல்லாம் சும்மா.. என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திக்கொண்டாள் . இருக்க.. இருக்க.. எண்ணம் வலுத்தது தவிர எவ்வளவு முயன்றும் குறையவே இல்லை. 

 

முதலில் தன் அன்னைக்கும் தந்தைக்கும் போன் செய்து அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தியவள், பின் ஊரில் இருக்கும் தன் தாத்தாவுக்கும் போன் செய்து அவரின் நலத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டாள். 

 

 

அனைவருக்கும் ஒன்றும் இல்லை என்ற ஆசுவாசத்துடன் அவள் ஃபோனை வைக்க, தன்னவன் நினைவு சட்டென்று வர இன்னும் பதறித் துடித்தது அவளது நெஞ்சம்.

 

வைஷாலி தேவாவுக்கு கால் செய்ய அவரின் நம்பரும் சுவிட்ச் ஆஃப் என்றது.

அவள் பதறி மீண்டும் மீண்டும் முயற்சிக்க.. மீண்டும் மீண்டும் அந்த கணினி பெண்ணோ மீண்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பதை சொல்ல இவளுக்கும் முதலில் பயம் தொற்றிகொண்டது.

 

அவன் பணி செய்யும் இடங்களுக்கு சென்று பார்த்தால் , அங்கே அவன் காலையில் இருந்து வரவில்லை என்று கூற , அருகில் இருக்கும் அவன் அறைக்குச் சென்று பார்த்தால் அறை பூட்டியிருந்தது அவன் இருப்பதற்கான சுவடும் இல்லை.

பின் எங்கு சென்றிருப்பான் ?? என்று கட்டிடத்தையே அங்கு அவன் இல்லை என்று தெரிந்தாலும் சுற்றி சுற்றி வந்தாள் பேதை..

 

பின் சோர்ந்து போய் தன் அறைக்கு வந்தவள் , ஒரு பருக்கை உணவருந்தாமல், பொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் கையில் போனை வைத்துக்கொண்டு தவமிருந்தாள்.

நண்பர்கள் சாப்பிட அழைத்தபோது மறுத்து , அவள் போனையே கண்கொண்டு பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் கண்களில் வழியும் நீரைத் கூட துடைக்க தோன்றாமல்..

 

மதியத்திற்கு மேலே திரும்பவும் அவன் நம்பருக்கு அழைத்து பார்க்க அப்போது ரிங்க் போனவுடன் மனதில் சந்தோசதுடனும் பரபரப்புடனும் அவன் எடுப்பதற்காக இவள் காத்திருக்க, அங்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இவள் அழைக்க மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டதேயொழிய இவள் இணைப்பு எடுக்கப்படவில்லை.

தேவாவிற்கு என்னானதோ ஏதானதோ போன் யாரு கையில் இருக்கிறதோ என்று புரியாமல் அழுது கொண்டே இருந்தாள் பெண்ணவள்.

 

இரவு முழுக்க கண்ணீர் வடித்தவள் தன்னை அறியாமல் தூங்கி விட்டாள்.

விடிந்து தாமதமாகத்தான் எழுந்தவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு சாப்பிடக்கூட இல்லாமல் விரைந்து அவன் கட்டிடத்தை அருகிலுள்ள அவன் அறை நோக்கி செல்ல.. அங்கே கூலாக கையில் காப்பியுடன் மறுகையில் பேப்பருடன் அமர்ந்திருந்தான் தேவா.

 

அவனை கண்ட நொடி அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என நினைத்து பெரும் நிம்மதியையும் சந்தோசத்தையும் தர, அடுத்தகணம் நேற்றிலிருந்து தான் அந்த பாடுபட்டுக் கொண்டிருக்க, இவன் கூலாக இருக்கிறான் என்று கோபத்துடன் அவன் அருகே சென்றாள். 

 

இவளை பார்த்த உடன் நேற்று போனை எடுக்காமல் இருந்ததற்கு இன்று ஏதாவது செய்வாளோ என்று மனதில் நினைத்தாலும் தன் கெத்தை விடாமல் “என்ன காலையிலேயே விஜயம் ” என்றான்.

 

அவன் கையில் இருந்த காபி கப்பை வாங்கி அவன் முகத்திலேயே ஊற்றினாள் வைஷாலி.

 

“ஏய் ” என்று அவன் கோபமாக கத்த..

 

” நேற்றிலிருந்து ஒருத்தி எத்தனை தடவை போன் பண்ணினேன்.. என்ன ஏதுன்னு ஒரு நிமிஷம் நீ கேட்டியா.. நீ எங்க இருக்க எப்படி இருக்குன்னு தெரியாம நேத்து ஃபுல்லா ஒரு பருக்கை சாப்பாடு இறங்காது ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் ராத்திரி ஃபுல்லா அழுது அழுது காலையில் வந்த நின்னா.. நீ ரொம்ப கூலா ஏன் வந்தேன் கேக்குற..” 

என்று ஏக வசனத்தில் அவள் பொரிந்து தள்ள..

 

அப்போதுதான் அவளை கவனித்தான் கலைந்து.. ஓய்ந்து போய் இருந்த அவளின் தோற்றம் மனதில் இருந்த கோபம் எல்லாம் ஓட அவளை தாவி அணைத்துக் கொண்டு ” சாரி சாரி சாரி சாரிமா ஒரு மீட்டிங்.. நீ சும்மா போன் பண்ற நினைச்சுதான் கட் பண்ணுனேன் ” என்றான்.

 

” ஒரே ஒரு நிமிஷம் போன் எடுத்து சொல்ல கூடாதா ” என்று வருத்தத்துடன் அவள் கேட்க..

 

” நீ எப்பவும் போல விளையாடுற நினைச்சு தான்.. நான் அட்டென்ட் பண்ணல . அதுவுமில்லாம அது எவ்வளவு முக்கியமான மீட்டிங் தெரியுமா ?” என்றான்.

 

” நீ அதே மாதிரி ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போது , எனக்கு ஆக்சிடெண்ட் இல்லை நான் செத்துப் போயிட்டேன்னு தயாராவது கால் பண்ணா கூட இப்படித்தான் இருப்பியா ?” என்றாள் வேதனையாக கூடவே கோபமாக…

 

ஷாலு என்று கத்தினான் அவன்..

 

” ஒரு வார்த்தை சொல்வதையே உனக்கு இப்படி இருக்கே.. நேத்து ஃபுல்லா நான் என்ன பாட்டு பாட்டேன்னு உனக்கு தெரியுமா ?” என்று அவள் கண்ணீர் உகுக்க..

 

அவள் கண்ணீரில் அவன் மனம் வலித்தாலும் அதைக் காட்டாமல் ” சும்மா சும்மா இப்படி கண்ணீர் போட்டு டிராம பண்ணாதடி.. எரிச்சலா இருக்கு ” என்றான்..

 

அவள் வீறு கொண்டு எழுந்து ” என் கண்ணீர் எல்லாம் உனக்கு டிராமா வா தான் தெரியும்..என் மனசு புரிஞ்சுக்கனும்னா.. அதுக்கு உன்கிட்ட மனசு வேணும் . அங்கதான் இல்லையே எப்ப பார்த்தாலும் பணம் மட்டும் தான் பிரதானமாக இருக்கு ” என்று அவள் வார்த்தை விட..

 

வைஷாலி என்று அவன் அதட்டினான்..

 

” ஆமாம் உனக்கு கர்வம்.. பணம் இருக்கு என்கிற கர்வம்… தான் என்கிற கர்வம்.. தன்னால் எல்லாம் முடியும்கிற கர்வம்..

மனதை புரிந்து கொள்ள முடியாத கர்வம்..

உயிர்ப்பான சிறுசிறு விஷயங்களில் பங்கெடுக்க முடியாத கர்வம்.. முக்கியமா நான் உனக்கு காதல் சொன்ன உடனே கிடைத்த அந்த கர்வம்.. இது எல்லாம் தான் உன்னை இப்படி யோசிக்க நடக்க வைக்குது.. எனக்கு இந்த கர்வம் வேணாம்.. இவ்ளோ கர்வத்தை சுமக்கிற நீயும் எனக்கு வேணாம் ” அவள் மனம் குன்றலோடு சொல்லி முடிக்க.. 

 

அவனின் தன்மானத்தை அது சீண்டி விட ” ஆமாண்டி எனக்கு கர்வம்தான்.. அது என்கூட என் ரத்தத்துல பிறந்தது. நான் எதுக்காக விடனும் சொல்லு.. உனக்கு வேணாமுன்னு போடி ” என்று அவன் கர்வத்துடன் கூறி முகம் திருப்பிக்கொள்ள..

 

அவனைக் காணாமல் விடுவிடுவென்று தன் அறையை நோக்கி சென்று விட்டாள்

வைஷாலி.

அதன் பின் வந்த நாட்களில் அவள் கவனத்தை தன் படிப்பில் காட்ட பத்து நாட்கள் பறந்து போனது.

 

அன்று அவன் கோபம் கொண்ட போது திரும்பி அவளாக வந்து பேசி சண்டையிட்டு சென்றதால் இம்முறையும் அவள் வருவாள் என்று இவன் எதிர்பார்க்க.. வைஷாலியின் இந்த வலியை அவன் உணரவே இல்லை. கூடவே அவளுக்கு செமஸ்டர் நடந்து கொண்டிருப்பதால் அவளை தொந்தரவு செய்ய மனமின்றி அமைதியாக இவன் இருக்க.. 

 

ஏற்கனவே அவனால் மன வலியில் துடித்துக் கொண்டிருந்த அவள் அவனின் இந்த ஒதுக்கும் சேர்த்து அவளை ஒரேடியாக சுருங்க வைத்தது. ஒரு வார்த்தை மட்டும் வார்த்தை கூட வேண்டாம்.. நேரிலோ அல்லது போனிலோ அவனின் ஷாலு என்ற வார்த்தையை கேட்டிருந்தால் கூட அனைத்தையும் மறந்து அவனிடம் ஓடி வந்து இருப்பாள்.

 

ஆனால் அவனின் இந்த விட்டேத்தியான குணம் அவளை மிகவும் பாதிக்க எதையும் யோசிக்க தோன்றாமல் படிப்பு படிப்பு மட்டுமே கவனம் கொள்ள, முயன்று படித்து, தேர்வும் எழுதி தன் இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்தாள் வைஷாலி..

 

 

ஹாஸ்டலைக் காலி செய்து ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. அவனின் வரவுக்காக காத்துக்கொண்டு இருக்க அவனுக்கு அது தெரிந்தால் தானே..

மாலையில் அவளுக்கு விமானம் சஞ்சய் அவளை கொண்டு விடுவதற்காக வந்திருக்க வைஷாலியை தேவாவுக்காக காத்துகொண்டு இருந்தாள்.

 

ஒரு போன் செய்து இருந்தால் கூட அவன் வந்திருப்பான். இருவருக்கும் எழுந்திருந்த ஈகோ என்ற சிறுவிதை ஆல விருட்சமாக வளர்ந்து ஒருவரை ஒருவர் மறைத்து கொள்ள.. மனது முழுக்க ஆழமான காதல் இருந்தாலும் அந்த விரிசல் அவர்களை பிரித்தே வைத்தது.. ஆனா எதிர்பார்த்து ஏமாந்து போய் விமானம் செல்லும் வழியில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை போட்டு விட்டாள் மனம் கேட்காமல் தேவாவிற்கு..

 

சஞ்சயையும் தன்னுடன் அழைத்துக் கொள்ளவில்லை. எதுவா இருந்தாலும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று காரில் ஏறும் நேரம் அவனையும் விட்டுவிட்டு தனியாகவே சென்றாள்.

 

அவள் வாய்ஸ் மெசேஜ் கேட்டவனின் உள்ளம் கோபத்தில் கனன்றது. ” திரும்பவும் போற என்னை விட்டு.. என்னை எப்படி டிசைன் டிசைனாக வச்ச செய்யறதுன்னு இவ கிட்டதான் கத்துக்கணும்.. இவ்வளவு நாள் என் காதல் உனக்கு புரியவே இல்லையா டி ?” என்று கோபம் ஆற்றாமை எல்லாம் கலந்த கலவையாக தன் வண்டியை பறக்கவிட்டு அவன் விமானத்தில் சென்று பார்க்கிங்கில் கூட நிற்காமல் வண்டியை அப்படியே போட்டுவிட்டு உள்ளே ஓடினான்.

 

 

வெடிங் ஹாலில் அமர்ந்திருந்தவள் முன் தன் இரு கால்களையும் விரித்து கம்பீரமாக நிற்க, எப்படியும் தன் வாய்ஸ் மெசேஜ் கேட்டு வருவான் என்று எதிர்பார்த்தது தானே , தன் மன கலக்கத்தை எல்லாம் மறைத்து கெத்தாகவே அவனை பார்த்தாள். கண்களைக் கொண்டே கருத்தை படிப்பவன் வரும் பொழுதே அவள் கண்கள் அவனை தேடியதை.. பிறகு அவனை கண்டுகொண்டு தன்னை சமன்படுத்துவதை பார்த்தவன், ‘கொழுப்புடி மோகினி பிசாசு ‘உனக்கு என்று அவளை திட்டிக்கொண்டே அமைதியாக ஆழ்ந்து அவள் கண்களைப் பார்த்தான்.

 

 

சோ.. இருகைகளையும் குறுக்கே கட்டி அவளை பார்த்தவனை அவளும் அமைதியாக பார்க்க…

 

” என் காதல் உனக்கு புரியவே இல்லை அப்படித்தானே.. புரியாதவங்களுக்கு தான் புரிய வைக்க முடியும் புரிய மறுக்கிறவங்களுக்கு ஒன்னும் பண்ண முடியாது… இனி என்னை நியாப்படுத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.. உனக்கு எப்போ என்னோட காதல் புரியுதோ அப்போ வா அதுவரைக்கும் நான் காத்திருக்கிறேன்.. டேக் கேர் ” என்றவன் கடைசியாக என்று கூறி அவள் என்ன என்று சுதாரிக்கும் முன், இடை தழுவி அவள் இதழை தன்வசப்படுத்தி இருந்தான். மிக நிதானமாக முத்தமிட்டுக்கொண்டிருக்க விமான நிலையமே அவர்களை ஆவென பார்த்துக்கொண்டிருந்தது. அவளின் சின்ன சின்ன விருப்பங்களில் கூட ஸ்டேட்டஸ் பார்ப்பவன் இன்று மொத்தமாக தன்னை தொலைத்து தன் சுயத்தை தொலைத்து , விமான நிலையமும் அவர்களை வேடிக்கை பார்க்க அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். இந்த முத்தமே அவன் மொத்தக் கர்வமும் சரிந்தது என்று அவளுக்கு எடுத்துக்காட்ட.. பாவமும் பெண்ணவள் எங்கே புரிந்துகொண்டாள். 

 

 

அவனில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள் சட்டென்று அவன் மார்பில் தன் கை வைத்து தள்ளி.. “இப்போகூட உங்களுக்கு இது தான் முக்கியம் ” என்று அவனைச் சாட அதில் மூண்ட கோபத்தில்.. ” போடி உனக்கு என்னை கடைசி வரைக்கும் புரியவே இல்லை.. உனக்கு எப்ப புரியுதோ அப்ப என்னை தேடி நீ தான் வரனும்.. நான் இனி வர மாட்டேன் ” என்றவன் அவளை திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று சென்றுவிட்டான்.

 

 

திகைத்து விழித்து அவள் பார்க்கும் பொழுது அவன் விமான நிலையத்தை கடந்து சென்றுவிட, அவன் கடைசியாக சொன்ன நான் வரமாட்டேன் , நீ தான் வரணும் என்ற வார்த்தை அவளை சீண்டி விட போடா போ நான் ஒன்னும் உன்னை தேடி வர மாட்டேன், அவன் தன்னை தேடி வந்ததை மறந்து வீம்பு கொண்டே இவள் விமானம் ஏறி டெல்லி வந்தடைந்தாள்.

 

இவள் டெல்லி வந்த அடுத்த இரண்டு நாட்களில் அவளின் தந்தை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறக்க.. அன்னையைத் தேற்றுவதிலும் தந்தையின் இழப்பு இதிலிருந்து மீள்வதிலும் இருந்தவளுக்கு தேவாவின் நினைப்பும் பின்தங்கிப் போனது. 

 

 

சஞ்சயைும் தன் மேல் படிப்புக்காக பூனா சென்றுவிட , தேவாவினால் வைஷாலியை தொடர்பு கொள்ள இயலவில்லை. அவன் நினைத்திருந்தால் கண்டிப்பாக முடியும் தான் . ஆனால் அவள் தன்னைத் தேடி வரவேண்டும் என்று அவனின் வீம்பும் சேர்ந்துகொள்ள , அதற்கு மேல் மும்பையில் இருக்க முடியாமல் தன் கம்பெனி ஆட்களை கொண்டு மீதி இருக்கும் கட்டிடங்களை பார்த்துக் கொள்ளச் சொன்னவன் கோவை திரும்பி விட்டான்.

 

 

தன்னை முழுவதுமாக தொழிலில் நுழைத்தான். அவளை மறக்க வேண்டும் என.. தொழில் தொழில் தொழில் என்று அதையே கட்டிக்கொண்டு இருக்க 3 வருடத்தில் அபரிமிதமான வளர்ச்சி தான். அவன் நினைத்த தொழில் வெற்றிகள் அவனின் காலடியில் வந்து விழ ஆரம்பித்தது.

 

அவளின் நினைவு வரும்போதெல்லாம், மனபாரம் அழுத்தும் போதெல்லாம் அதனிடமிருந்து தப்பிக்கவே அவனின் அந்த ஸ்டிரஸ் பஸ்டர் ரூம்.

 

காதலின் கோட்பாடுகளை இரு உள்ளங்களும் இருவேறு விதமாக கணித்து வைத்திருக்க ஆனால் அந்த காதலே..கோட்பாடுகளை விதிகளை மாற்றும் காரணி என்று யார் அவர்களுக்கு சொல்வது. வீணான வீம்பும்.. காரணமற்ற விவாதங்களும் பெரும்பாலான காதல் மற்றும் திருமண வாழ்க்கை தோல்விக்கு காரணம். விட்டுக்கொடுத்தல் அங்கே விடுபட்டுப் போகிறது. புரிதல் அங்கே புரியாமல் போகிறது. 

 

மூன்று நெடிய ஆண்டுகளுக்குப் பிறகு வைஷாலியை காவல்துறை ஆணையர் அனுப்பிவைத்த போட்டோவில் தான் பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்து ” என்ன செய்து வைத்திருக்கிறேன் நான் தன்னவளுக்கு ” என்று அவன் நொறுங்கிப் போய் வீடு வந்த பொழுது எதிர்பார்க்காமல் அவளின் தரிசனம் அங்கே..

 

தன்னை காதலால் தேடி வராமல் சண்டையிட வந்திருக்கிறாள் என்று அவனுக்கு சற்று மன‌சுணங்கல் தான். அதுதான் அவனின் பாராமுகம் மற்றும் அவனின் அவள் மீது கொண்ட கோபத்திற்கான காரணம். அதையும் உடைத்து எறிந்துவிட்டாள் தேவாவின் செல்ல மோகினி பிசாசு..

 

தன் கதையை ஒருவழியாக இருவரிடமும் சொல்லிக்கொடுக்க ஆழ்ந்த அமைதி அந்த காரினுள்.

 

சற்று அமைதியாக இருந்த நந்தன் தன் அண்ணனை நோக்கி ” அண்ணா நான் கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பண்ணிக்க போறேன் ” என்றான்.

 

தேவாவோ ” இவ்வளவு கேட்டுமாடா.. ஆனாலும் உனக்கு மன தைரியம் ஜாஸ்தி தான் ” என்று கிண்டலடித்தான்..

 

கார்த்திகை ” விடு மச்சி.. விதி வலியது” என்று சிரிக்க அங்கே ஒரு சிரிப்பு அலை எழுந்தது.

 

மூவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டே செல்ல தேவாவின் போன் அழைத்தது. புது நம்பர் என்பதால் சற்று யோசனையுடன் எடுத்தவன் அதில் கூறப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியுடன் நோ என்று கத்தினான். அதற்குள் காரை ஓரமாக நிறுத்தி இருந்தான் கார்த்திக்.

 

அவனிடம் போனை வாங்கி லவுட் ஸ்பீக்கரில் போட ” சார்.. சார்.. கேக்குறீங்களா என்று ஒரு நம்பரை கூறி இந்த லம்போகினி கார் உங்களது தானே மிக மோசமான ஒரு ஆக்சிடெண்டில் இந்த இடத்தில் மாட்டிக் கிட்டு இருக்கு.. கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்..

” என்று அந்த அழைப்பை துண்டித்து விட.. 

 

“ஷாலு ” என்று அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினான் தேவா..

 

 

கர்வம் சரியும்..

1 thought on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top