33
“ஏண்டி.. மூணு வருசமா என்னை நினைக்கவே இல்லையா?? என்னை பார்க்கணும்னு உனக்கு தோணவே தோணலையா? ஏன் ஷாலு?” என்று மனம் கலங்க, முகம் வருத்தத்தில் கசங்க, உயிர் உருக அவளை பார்த்து கேட்டான் தேவா.
அவள் அமைதியாக அவனை பார்த்து கொண்டிருக்க..
“மூணு வருஷத்திலே என்னை மிஸ் பண்ணலையா நீ?” என்று தேவா வருத்தமாக கேட்டான் திரும்பவும்..
காதலில் கசிந்துருகி, அவர்களின் காதலின் சாட்சியாக வைஷாலி வயிற்றில் அவர்கள் மகவு, இப்போது வந்து கேட்கிறானே, இத்தனை வருடங்கள் கடந்து என்று அவனை பார்க்க…
“அப்படியெல்லாம் பார்க்காதே டி.. நீ தான் என் கிட்ட சண்டை போட்டு போன.. நான் உன்னை தேடனும்னு நினைத்தால் கண்டிப்பாக கண்டுபிடித்து இருப்பேன்.. ஆனால்…”
“ஆனால்..” என்று அவனை கூர்ந்து பார்க்க..
எப்பொழுதும் போல இப்பொழுதும் அவளின் அந்த பழுப்பு பாவை வீச்சை தாங்காமல், தன் தலையை ஆட்டி சிரித்தவன், தன் கைகளை உயர்த்தி தூக்கி சரண்டர் என்றான்.
பின் அவளின் கைபற்றி தன் நெஞ்சினுள் பொதிந்து, “ஒத்துகிறேன்.. நான் உன்னை தேடல தான், எப்படியும் நீ என்னை தேடி வருவ, உன் சின்னபுள்ளத்தனமான ஆசைகளை எல்லாம் விட்டுட்டு மெச்சூர்டா மாறி, என் காதலை உணர்ந்து, வருவேன்னு நினைச்சேன்.. ஆனா அன்னைக்கு அப்படி வருவேன்னு நினைக்கலடி ” அன்றைய நினைவில், முகம் கொள்ளா சிரிப்புடன் அவளை பார்த்தவன், அவள் மூக்கை பிடித்து ஆட்டி நெற்றி முட்டி சிரித்தான்.
“பின்னே எப்படி எதிர்பார்த்தீங்க.. ?” என்று அவள் வழக்கம் போல கீழ் உதடு நெளிய சிரித்தாள்.
அவள் உதட்டை தன் இரு விரல்களால் பிடித்து, தன் அருகே இழுத்து மெல்ல கவ்வியவன், விடுவித்து “இப்படி சிரிக்காதே டி.. கொல்லுறடி மோகினி பிசாசு” என்று கொஞ்சினான்.
“ம்ப்ச் சொல்லுங்க.. எப்படி வந்தேன் அன்னைக்கு ” என்று அவனை விலகி விட்டு, அவன் மீதே சாய்ந்து உட்கார்ந்தாள் வைஷாலி.
அவளின் மேடிட்ட வயிற்றில் அவன் கை வைக்க, அதன் மீது தன் கையை வைத்து அழுத்தி பிடித்து கொண்டாள்.
” என் அழகு மோகினி பிசாசு, அன்னைக்கு தலை எல்லாம் கலைந்து, முகமும் இந்த கூர் மூக்கும் கோபத்துல ஜிவு ஜிவ்வுன்னு சிவக்க, ஒரு மினி காளியா உட்கார்ந்து இருந்தா” என்று அவன் கூற.. “நான் காளியா?” என்று அவன் கையை வலிக்க கிள்ளினாள் வைஷூ, வலிக்கவில்லை என்றாலும் அவுச் என்று பொய்யாக கத்தினான் தேவா.
“கமிஷ்னர் உன் போட்டோவை அனுப்பினதுமே எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு.. சத்தியமா நான் அங்க உன்னை எதிர்பார்க்கல.. விடிஞ்சதும் உன்னை வந்து பாக்கணும்னு நினைச்சுகிட்டே தான் வண்டி ஓட்டிட்டு வந்தேன்.. ஆனா உன்னை இங்க பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்ள தான் நினைத்தேன். பிறகு உன் காளி அவதாரத்தை பார்த்து பயந்து தான், என்னை கட்டுப்படுத்திக்கொள்ள தான் கையை கட்டி உன் முன்னாடி நின்னேன்.
இருந்த கோபத்துக்கு என்ன அடிச்சுடிவியோனு நினைச்சேன். நல்லவேளை தப்பிச்சேன்டா சாமி” என்று அன்றைய மனநிலையை அவளிடம் கூறிவிட்டு அவன் சிரித்தான்.
அவன் மீது சாய்ந்த அண்ணாந்து அவனைப் பார்த்தவள், “அடித்திருப்பேன்.. ஆனால் வந்த நாளே அப்படி செஞ்சா எப்படி எங்க அத்தையோட சப்போட்ட வாங்குவது? அதான் அடிக்கல.. அப்புறம் இவ திமிருபுடிச்சவ ராங்கிகாரி அப்படின்னு நினைச்சிட்டாங்கன்னா?உங்க பாட்டி எல்லாம் எனக்கு ஒரு ஆளா? நான் கத்துக்கிட்ட கராத்தே இரண்டு வெட்டு வெட்டி இருந்தா உங்க பாட்டி அங்கேயே பொட்டுனு போய் இருப்பாங்க. அப்புறம் கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போகியிருக்கும்”
என்று அவனை பார்த்து குறும்பு மின்ன கண்ணாடித்தவளை அடிப்பாவி என்று வாயை பொத்தி பார்த்தான் தேவா.
“நானே பெரிய பிசினஸ்மேனு நினைச்சு பல பளானை போடுவேன், நீ என்னை விட பெரிய ஆள் இருக்கியேடி.. கேடிடி நீ” என்று வாயைப் பிளந்தவனை பார்த்து , தன் நைட்டியில் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள்.
“இதெல்லாம் குடும்ப அரசியல் தேவா சார்.. இதை எல்லாம் புரிஞ்சிக்க, கத்துக்க நீங்க இன்னும் வளரணும்!!” என்று அவனை தலையை தன் முன்னால் இழுத்து தலைமுடியை கலைத்தவாறு அவள் கூற.. அவளின் தலை கோதலில் சுகமாக கண் மூடி லயித்தான் தேவா..
சிறுது நேரம் அமைதியாக அவளின் தலை கோதலை அனுபவித்தான் தேவா.
“உன்னை மறக்க முடியாம வேலை வேலைனு சுத்திக்கிட்டு இருப்பேன். மீசை கூட உன்னை ஞாபகப்படுத்த, அதையும் மழிச்சிட்டேன்.. என்று தன் தாடையை தடவி சிரித்தவன், நம் கம்பேனி பெயர் தெரியுமா உனக்கு? என்று கேட்க.. “ம்ம்ம்.. டி.வி.ஆர்.. தட் மீன்ஸ் தேவேஷ்வர ராஜன் ” என்றாள் வைஷூ.. “ம்ஹீம்… தட் மீன்ஸ்.. தேவா வைஷாலி ராஜன்” என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கூற, அவளது பழுப்பு பாவை வியப்பில் விரிய… கண்களில் மெல்லிய முத்தமிட்டான் தேவா.
பின் அவளை தன் மடியில் நன்றாக சாய்த்து படுக்க வைத்தவாறு அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “ஷாலு நீ இன்னும் உன் பக்கத்தை சொல்லவே இல்ல.. கூடவே அந்த வார்த்தையை இன்னும் சொல்லவே இல்ல டி.” என்று கெஞ்சுதலாக வந்தது அவனது வார்த்தைகள்.
காதல் யாதெனில் கர்வம் அல்ல தன் சுயமும் சரிவது தான். நான் என்ற அகங்காரம் இல்லாமல்.. நீ என்ற பேதமும் இல்லாமல்.. நாம் என்று கலந்து அதில் உயிர்த்து வாழ்வதே காதல். தேவாவும் வைஷூவும் இப்பொழுது இந்த நிலையில்தான். ஆனால் தன் பக்கத்தை அவள் சொல்லாமல் இருப்பது அவனுக்கு சிறு குறை.
“சொல்லுடா” என்று ஊக்கினான் தேவா.
மெல்ல கண்மூடி நினைவுகளை கொண்டு வந்து சொல்ல தொடங்கினாள் வைஷாலி.
“மும்பையிலிருந்த டெல்லி வந்த ரெண்டு நாள்ல அப்பா சைட்ல வொர்க் பண்ணும் போது, தவறி விழுந்து இறந்துட்டாங்க..” என்றவளின் உதடு அந்நாளின் நிகழ்வில் உதடு துடிக்க அழுக தயாராக, அவளின் தந்தையின் அன்பை ஏற்கனவே அறிந்தவன் ஆகையால், வைஷூ அப்போது எவ்வாறு துடித்திருப்பாள் என்று நினைத்தவனின் நெஞ்சம் வலித்தது, அவளை இறுக அணைத்தவன், ” சாரிடி… சாரி அப்போ உன்கூட நான் இருந்திருக்கனும்.. உன்னை என் தோளில் தாங்கி இருக்கனும்.. உனக்கு எல்லாவாக நான் இருக்கேனு என் செயலில் காட்டி இருக்கனும்” என்று கூறி அவள் முகம் முழுவதும் தன் முத்தங்களால் நிறைத்து அன்றைய அவனின் ஆதங்கத்தை இன்று நிறைவேற்றினான்.
அவனின் அணைப்பில் கட்டுண்டு அமைதியாக இருந்தாள் வைஷூ. ஆனால் தேவாவின் சட்டை ஈரத்தில் நனைய, அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவன், வைஷூவின் கண்ணீரைக் கண்டு தன் உதடுகளால் துடைத்தவன் “நான் இருக்கும்போது இனி நீ அழவே கூடாது” என்று அவளை இருக்க அணைத்துக் கொண்டான்.
அவனின் அணைப்பில் இருந்து மெல்ல வெளி வந்து, தோளில் சாய்ந்து கொண்டு தொடர்ந்தாள். “அப்போ உங்களோட அருகாமையை ரொம்ப தேடினேன் நானு, ஆனால் அம்மாவை விட்டு என்னால் நகர முடியவில்லை. என்னோட துக்கத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கிட்டு அவங்களை தேடினேன். உங்களை கேட்டு மும்பை காலேஜுக்கு ஒரு தடவை போன் பண்ணுனேன். ஆனா நீங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க.. அதுக்கப்புறம் அங்கிருந்து வேறு ஏரியா மாறி நான் என்னோட பிஜி முடிச்சேன். அப்பா இறந்தவுடன் அம்மாவால அந்த ஊர்ல இருக்க முடியல. கோயம்புத்தூருக்கு போலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. என் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கும் அப்ளை பண்ண டிரான்ஸ்பர் கிடைச்ச உடனே நாங்க இங்க மாறிட்டோம். ஆனா அது உங்க காலேஜ்னு எனக்கு தெரியாது என்று கூறியவளை, அவன் முறைக்க “ஓ சாரி சாரி நம்ம காலேஜ்” என்று சொல்லி சிரித்தாள்.
“என்ன ரொம்ப தேடினியாடி?” என்று ஆசை பொங்க அவளை பார்த்து கேட்டான் தேவா.
ஆமாம் இல்லை என்று எல்லா பக்கமும் அவள் தலையை ஆட்ட, அவளை முறைத்தான் தேவா. பின் கிளுக்கி சிரித்தவள், இல்லையே என்றாள் அவனின் மனையாட்டி சந்தோஷமாக..
“அடிப்பாவி” என்று அவன் மீண்டும் முறைக்க.. அவன் கை பற்றி தன் வயிற்றில் பொதித்தவள், ” நான் உங்களை மறந்தால் தானே.. மிஸ் பண்ண.. நீங்க என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என் கூடத்தான் இருந்தீங்க.. என் டார்லிங் இறந்த போது எனக்கு ஆறுதலாய்.. அம்மாவை தேற்ற கஷ்டப்பட்ட போது எனக்கு உந்து சக்தியாய்.. இந்த சமூகத்தை எதிர் கொள்ள என் தைரியமாய்.. என்னோடு எப்போதும் அர்த்தநாரீஸ்வரராய்.. இப்போ சொல்லுங்க.. ” என்றவளை ஆச்சரியமாக பார்த்தான். என்ன மாதிரியான காதல் இவளுடையது என்று!!
” எங்க அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன் தவிர.. உங்களை தவிர யாரையும் என் கழுத்தில் தாலி கட்ட விட்டுடுவேணா என்ன” என்ற அவனின் காதலை பெற்று கர்வமாக பார்த்தவளின் மூக்கை பிடித்து ஆட்டி, “என் மோகினி பிசாசு” என்றான் காதலாகி அணைத்து கொண்டே..
“நீ என் தேவதைடி.. என் கர்வம் சரிந்த, கர்வமடி நீ ” என்று கண்களில் காதல் மின்ன தேவா கூற, “ஆஹான்” என்று உதடு சுழித்து வைஷூ நக்கல் செய்ய..
“நக்கலா பண்ற உன்னை” சுழித்த உதடுகளை தன் விரல்களால் சுண்டி விட, அவள் வலியில் அவனை முறைத்து பார்த்தாள். தேவாவோ தன் கன்ன குழி தெரிய சிரிக்க, அக்கன்ன குழியை தன் பலம் கொண்ட மட்டும் கடித்து வைத்தாள் வைஷூ.”அடியே என் மோகினி பிசாசு” என்று அவன் கத்த அவளோ கலகலவென சிரித்தாள்.
பின் அவளை தன் மடியில் சாய்த்து கொள்ள, அவன் விரல்களோ தன் வாரிசின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருக்க.. முகமோ அதன் சந்தோசத்தை பிரதிபலித்தது.
“ஆரம்பிச்சுட்டாங்கய்யா இவனும் இவன் பிள்ளையும் ” என்று அலுத்து உட்கார்ந்திருந்தாள். இரவானால் தேவா வருடிக் கொடுப்பதும் அதற்கு உள்ளிருந்து பிள்ளை தன் இருப்பை காட்டுவதும் இவர்களின் வழக்கமான விளையாட்டு இது. இதில் தவித்து போவது என்னவோ வைஷாலி தான்.
” உனக்கு பொறாமடி.. என்னையும் என் பேபியையும் பார்த்து “என்றவனை பார்த்து, அவள் தன் கீழ் உதட்டை சுளித்து சிரிக்க, அவனோ உன்னை என்றவன், சுளித்த உதட்டை விழுங்கி இருந்தான். அவள் மூச்சிக்கு முட்டும் போது விட்டவன், காந்தமென ஈர்க்கும் அவளின் பழுப்பு பாவையில், தன்னை தொலைக்க.. காதலோடு பார்த்த பார்வை சட்டென்று வலியை காட்ட.. அதிர்ந்து அவன் நோக்கும் போதே, அவள் வலியில் சுருண்டாள்.
அவளை அள்ளிக் கொண்டு, மாமியாரை அழைத்து சொல்லி, மருத்துவமனை நோக்கி விரைந்தான். ஒற்றை கையால் காரை செலுத்தி கொண்டு,மறு கையால் தன் ஷாலுவை அணைத்தவாறே சென்றான் தேவா. அவன் வாயோ, ” ஷாலு.. ஒன்னுமில்லை.. பீ ப்ரேவ் பேபி. குட்டி பேபி சீக்கிரமே வந்திடுவாங்க.. அழாதே பேபி” என்று கூறினாலும், கண்களோ கண்ணீரை சொரிய, மன்னவன் கண்ணீரை கண்டதும், பெண்ணவளுக்கு தன் வலி மறந்து, அவனை தேற்றினாள்.
“சரியாகிடும்.. நீங்க அழாதீங்க” என்று அவள் கூறி கொண்டே வர.. இவர்களின் காதலை.. அன்னியோன்யத்தை.. தன் கண் கலங்க பின் சீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டே வந்தார் சபர்மதி.
விஷயம் கேள்விப்பட்டு அங்கே மொத்த குடும்பமும் வர.. கார்த்திக், நந்தன், தேவா மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் மனம் பதை பதைக்க நடை பயின்று கொண்டிருந்தனர். இவர்களை பார்த்து இவனுங்க வேற என்று தமயந்தி தலையில் அடித்து கொண்டார்.
அன்று இரவு அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கி அதி காலை வேளையில், சூரியனின் ஒளி பிம்பமாக, தேவா வைஷாலி அழகை அள்ளி கொண்டு பிறந்தாள் தேவாவின் பெண்ணரசி…
கர்வம் சரியும்..
34
ரோஜா பூங்குவியலென கையில் இருந்த மகளை கண்கள் கலங்க தேவா பார்க்க, மொத்த குடும்பமும் அங்கே நான் நீ என்று குழந்தையை தூக்க போட்டி போட, என்ன நினைத்தாளோ தேவாவின் இளவரசி வீல் என்று அழுது தூக்க வந்த அனைவரையும் ஒரு மிரட்டு மிரட்டினாள், அவள் அன்னையை போல.. உருவம் மட்டுமே தந்தையை கொண்டு.. பின் செவிலியர் குழந்தையை வாங்கி சென்று விட, தன் நலுங்கிய சட்டையை மெல்ல நீவி விட்டான் தேவா காதலோடு..
வலியில் சுருண்டு, தேவாவின் சட்டையை அழுத்தமாக பற்றி கசக்கி ஈஸ்வர் என்றாள் ஈனஸ்வரத்தில், அவன் வேண்டி கேட்டபொதெல்லாம் அழைக்காதவள், இன்று வலி மிகுதியில் தன்னை மறந்து அழைத்திருந்தாள். அதை தான் நினைத்தான் தேவா.. மனைவியை காண சென்றவனின் கண்ணீரில் காய்ந்த கன்னங்களை மெல்ல வருடினாள் வைஷூ. சொல்லாமலேயே அவனின் ஆழ காதல் அவளுக்கு புரியதாய்.. அவன் வருடலில் கண்ணன் குழி விழ சிரிக்க ஈஸ்வர் என்று வைஷாலின் மெல்ல அழைக்க , தாவி அணைத்துக் கொண்டான். அங்கே ஷாலு ஷாலு என்ற உச்சரிப்பும் முத்தச் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது.
மூன்றாண்டுகள் கழித்து…
ஸ்ட்ரஸ் பஸ்டர் அறையில் பாட்டு அதிர தியானம் செய்து கொண்டிருந்த வைஷாலிக்கு மனதை ஒருமுகப்படுத்தியது இதெல்லாம் பறந்துபோக, அவ்வறையே நோக்கி விரைந்து சென்றாள். அங்கே தேவா தன் 3 வயது மகள் தீக்ஷிதா தேவியை வைத்துக்கொண்டு நடனமாட , தந்தையைப் போலவே தன் செப்புப் கைகால்களை உதைத்துக் கொண்டு அப்பூங்சிட்டும் நடனம் ஆடியது.
அப்போதும் அதே வெஸ்டன் பாடலைத்தான் போட்டிருந்தான். உருண்டு திரண்ட புஜங்களோட, அவனின் சிக்ஸ் பேக் உடலுடன் அங்கே தன்னை மறந்து தன் மகள் என்னும் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் தேவா.
கணவனின் ஆளுமையான தோற்றத்தில் மனம் கிறங்கினாலும் அவளுக்குப் பிடிக்காத இந்த வெஸ்டன் பாடலை கோபம் கொண்டு முதலில் அதை அணைத்தாள்.
பாடல் நின்றதால் தன் மூக்கை சுருக்கி உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாரானாள் தீக்ஷி மிருவை போலவே..
மகளை தூக்கி சமாதானம் செய்தவன், அவள் கையில் டெட்டி பியர் கொடுக்க, அழகை மறந்து போனது அக்குட்டிக்கு..
“காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்.. முதல்ல இந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் ரூமை பஸ்ர்ட் பண்ணனும் ” என்று மூக்கு சிவக்க கூறியவளின் அருகே வந்தவன்.
“அசத்துரடி அழகி.. முன்னை விட கொஞ்சம் சதை போட்டு, மல்கோவா மாம்பழம் மாதிரியே இருக்க ” என்று அவன் சரசம் கொண்டு இழைய.. பெண்ணை கண்களால் காட்டி அவனை தள்ளி நிறுத்தினாள். பெண் தீக்ஷியை குளிக்க வைத்து கீழே சென்று தன் மாமியாரிடம் விட்டு விட்டு வந்தவள் கணவனின் கைப்பிடியில்..
” இப்போ செய்யலாம் தானே ” என்று கண்ணடிக்க.. நாண சிவப்பில் செங்காந்தள் வண்ணம் பூசிக்கொண்டது வைஷூவின் வதனம்.. அதில் தொலைந்தவன் அவளை அள்ளிக்கொண்டு காலையிலேயே பள்ளியறை பாடம் நடத்தினான். அழகிய கூடல் முடிந்து மன்னவன் நெஞ்சை மஞ்சமாக்கி கொண்டவள், வழக்கம்போல அவனின் மீசையை பிடித்து ஆட்டினாள்.
“வலிக்குதுடி.. விடுடி ” என்று அவன் கத்த..
அவள் சிரித்துக்கொண்டே மேலும் ஒரு ஆட்டு ஆட்டி பின்பு மெல்ல தன் நாவினால் அம்மீசையை வருடி கொடுத்தாள். அவன் அதை ரசித்து, அவள் இதழ்களை ருசித்தான். இவர்கள் காதல் கொண்ட நேரத்தில் தேவாவின் மீசைப் பிடித்து இழுப்பது வைஷூவின் ஒரு வேலை ,அவளை தொலைத்த அந்த மூன்று ஆண்டுகளில் அவளின் ஞாபகம் துறத்த, தன் மீசையை மொத்தமாக மழித்திருந்தான். கல்யாணம் ஆன பின்பு கூட அவன் மீசை வைக்கவில்லை.. என்று வைஷூ, ஈஸ்வர் என்று காதல் பொங்க அழைத்தாளோ அன்று முதல் வளர்க்க ஆரம்பித்தவன் தான். ஒவ்வொரு கூடலின் முடிவிலும் வைஷூவின் இந்த செய்கை வாடிக்கையானது. தேவா மெல்ல வைஷூ இடை தழுவி அடுத்து கூடலுக்கு அடித்தளமிட, அவனை விலக்கி ஒரு விரல் பத்திரம் காட்டி குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
காலையில் பெண்ணை அருகில் உள்ள நர்சரியில் விட்டுவிட்டு வைஷூ கல்லூரிக்கு சென்று விடுவாள். தேவா தன் ராஜன்ஸ் ஸ்குயருக்கு சென்று விடுவான். மதியம் வரை கல்லூரியில் இருப்பவள் பின்பு கணவனோடு அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவாள் மதியம் போல.. மதியம் முதல் மாலை வரை பெண்ணோடு மட்டுமே.. அதன் பின் தேவா வந்தால் வீடு களைகட்டும் அப்பா மகள் அட்ராசிட்டிஸ்..
கார்த்திக் மிரு தம்பதியினருக்கு ஹரிஷ் சந்திரன் என்று ஒரு வயது மகன். மிரு சொன்னது போல தன் பிஜி கைனகாலிஜிஸ்ட் முடித்துவிட்டு தற்போது தன் மாமனாரோடு இணைந்து மருத்துவமனையில் வேலை செய்கிறாள். வைஷாலி சொல்லி இதய நிபுணர் அசோக்ராஜ் ஆரம்பித்த அதே மருத்துவமனை தான் , ஜெய் மெமோரியல் ஹாஸ்பிடல் என்று விஸ்தாரமாய்.. சபர்மதி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் கணவர் பெயர் தாங்கியுள்ள இந்த மருத்துவமனையில் தற்போது அட்மினிஸ்ட்ரேட் ஆக இருக்கிறார். நமச்சிவாயம் இந்த வயதிலும் நண்பர்கள் , தொண்டு , பொது சேவை என்று காலம் கழிக்கிறார்.
இப்பொழுதெல்லாம் மனோகர் அவ்வபோது வருவதோடு சரி.. தொழிலை நந்தன் பார்த்து கொள்ள, நந்தணை தேவா பார்த்து கொள்வதால்.. நந்தன் இம்முறை பேபர் கேஸிங் செய்யாமல் தேர்வாகி இருந்தான். காரணம் கரேஸ் மேடம் தான். அவ்ளோ பயம்..
அன்று தேவாவின் அலுவலகத்திற்கு வந்தவன் வைஷூ முன்னால் ஒரு பைலை போட்டு கோபத்துடன் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
“என்னன்னு சொல்றது? நீங்க இன்ட்ரஸ்ட் கம்மியா கொடுத்தா.. அதே இன்ட்ரெஸ்ட்டுக்கு நான் எப்படி கொடுக்க முடியும் ” கொஞ்சம் கோபமாக கேட்க..
அவன் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கையில் அமர்ந்து அவனை கூர்ந்து பார்த்தாள். அப்பார்வை வீச்சை தாங்க முடியாதவனாக, ” போங்க.. நான் சம்மதிக்க மாட்டேன் ” என்று இன்னும் அதிக கோபத்துடன் கூறிவிட்டு வெளியே சென்றான். தேவா எல்லாம் பார்த்தாலும் அவன் கண்டு கொள்ளாமல் ஒரு சின்னப் புன்னகையுடன் கடந்து விடுவான்.. இவர்களை பற்றி தெரியும் ஆதலால்..
முன்னர் நெசவாளர்களுக்கு செய்ததுபோல, இப்போது விவசாயிகளுக்கான குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் பிராஜக்ட் ஒன்றை எடுத்திருந்தாள் வைஷாலி. அதில் நந்தனையும் பார்ட்னராக சேர்த்ததற்கு தான் அவனுக்கு இவ்வளவு கோபம்.
அடுத்த பத்தாவது நிமிடம் உள்ளே வந்தவன் , அவளுக்கு எதிரே கைகளை கட்டிக்கொண்டு விரைப்பாகவே அமர்ந்திருந்தான். அவளும் அவனை கண்டுக்காமல் தன் வேலையில் மூழ்க, இரு கைகளையும் உயர்த்தி சமாதானம் என்றவன் , ஃபைலில் தன்னுடைய ஒப்புதலுக்கான கையெழுத்துயிட்டு அவளைப் பார்த்து சிரித்தான்.
“எதுக்கு என்ன ட்ராமா எல்லாம் ” என்று நந்தனை சரியாக கணித்து அவள் கூற…
” சும்மா உங்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே ” அவளை வம்பிழுக்க..
“சீண்டி பார்த்து சின்னாபின்னமாகனுமா என்ன..” என்று திருப்பிக் கொடுக்க..
” அண்ணியாரே என்ன விட்டுடுங்க.. அதுக்கு தான் உங்களுக்கு நாங்க ஒரு தர்ம பிரபுவை தானம் பண்ணியிருக்கோம் , அவரை வெச்சு செய்ங்க ” என்று கூறி அவன் விடைபெற்றான்.
நந்தன் அடிக்கடி வைஷாலியை சீண்டிப் பார்த்து பின் அவனே சமாதானமாக்கி சென்றுவிடுவான் நல்ல தோழனை போல..
கார்த்திக்கோ ஓவர் பாச மழையை மட்டுமே வைஷாலியின் மீது , தேவாவே பொறாமை கொள்ளும் வண்ணம்…
லிப்டில் பயணம் செய்த நந்தன் நான்காம் தளத்தில் உள் நுழைந்த, வைஷாலியின் வலது கை, சஞ்சனாவை பார்த்து ஆள் இல்லாத லிப்டில் கூட்டம் இருப்பது போல அவளை நெருங்கி நிற்க…
“துஷ்மன்.. எவ்வளவு கிட்ட நிற்கிறான் பாரு.. அறிவு கெட்டவன்...அவன் பார்வையே சரியில்லை கண்ணை முழி இரண்டையும் பிடுங்கி காக்காவுக்கு போடனும் ” என்று என்று வசைமாரி ஹிந்தியில் பொழிய..
ஹிந்தி தெரியாத காரணத்தினாலும், சஞ்சனாவை ஒரு தலையாக காதலிக்கிற காரணத்தினாலும் அவள் பேசுவது எல்லாம் தன்னைப் அவள் பாராட்டுவது போலவே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தான் நந்தன்.
” ஏய் குள்ள கத்திரிக்கா… ரொம்ப பேசுற.. ஒரு நாளு உன் வாயை இழுத்து வச்சு.. என்று அவன் முடிக்கும் முன் தன் ஒற்றை விரலால் தூக்கி பத்திரம் காட்டி கொன்றுவேன் என்க.. விரலை பிடித்தவன் ” நீயேன் டர்ட்டி டர்டியா திங்க் பண்ற, நான் தைச்சிடுவேனு தான் சொல்ல வந்தேன் ” என்றான் ஒற்றை கண்ணடித்து..
” போடா பீம்பாய் ” என்றவள் அதுக்கு அடுத்த வந்த தளத்தில் இறங்கி சென்றுவிட்டாள் சஞ்சனா. வைஷாலியின் நண்பன் சஞ்சயின் தங்கைதான் அவள். சிஏ படித்து கொண்டே, இங்கே வைஷாலியிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். சஞ்சனாவை பார்த்த நாள் முதல் காதல் பொறி பற்றிக்கொண்டது நந்தனுக்கு..
” ஏதோ ஒன்னு உன்கிட்ட என்னை இழுக்குதுடி குள்ள கத்திரிக்கா .. ரொம்ப பிகு பண்ணாதடி.. அப்புறம் தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்” என்று கத்தி சொல்லிக்கொண்டே சென்றான் நந்தன்.
அவனை திரும்பி பார்த்து வவ்வலம் காட்டி சென்றாள் நந்தனின் சனா.. அவர்கள் காதலும் சீக்கிரமே கை கூடட்டும்.
மகனின் மனது தெரியாமல் பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறார் ரூபாவதி.. மகனின் காதல் தெரியும் போது அவரின் கற்பனைகளும்… கோட்டைகளும்.. என்ன ஆகப்போகிறதோ!!!
வயது மூப்புக் காரணமாக இப்போதெல்லாம் பெரும்பாலும் ராஜராஜன், சுகுணா தம்பதியர் மூத்த மகனின் வீட்டில் தான். ராஜராஜனோ வைஷூ தங்கையின் பேத்தி.. அதோடு பேரனின் அன்பு மனைவி என்றதுலேயே அடங்கி போய்விட, சுகுணா தேவியாரோ அவ்வப்போது பேசி வைஷூவிடம் வாங்கி கட்டி கொள்வார். இப்போது அவரின் நாத்தனாரும், வைஷூ பாட்டியுமான வைஷ்ணவி தேவியின் பேச்சுக்கு பயந்து வாயை அடக்கி கொண்டார். பின்னே இவளை பேச போய் மொத்த குடும்பமும் இங்கே படை எடுத்தால் என்ன செய்ய..
வைஷாலி மீது அன்று நடந்த விபத்துக்கு, சரியான பதிலடி தீனாவுக்கு கொடுத்து இருந்தான். ஆனால் அவர்கள் குடும்பத்திற்கென அவன் உயிரை மட்டும் விட்டு வைத்து , உயிர் இருந்தும் உயிரற்ற ஜடம் போன்ற வாழ்வை அவனுக்கு பரிசளித்திருந்தான். தேவ்ஜியை பகைத்துக் கொண்டால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று தொழில்துறையில் நிரூப்பித்திருந்தான் தேவா.
ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் வைஷூவை கையில் அள்ளிக்கொண்டு மொட்டை மாடியை நோக்கி சென்றான் தேவா.
இரவு நேர சிலுசிலு காற்றையும் தாண்டி குளிர் அவளைத் தாக்க மன்னவன் தோளை கட்டிக்கொண்டாள் பெண்.
மெல்ல கண்திறந்து பார்க்க.. மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. சட்டென்று கண்களை நன்றாக விரித்துப் பார்த்தாள். நிஜமா நீங்கதான் எனக்கு தூக்கிட்டு வந்தீங்களா அதுவும் மழையில் நனைய என்று நிஜமா கனவா என தன்னவன் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க…
அங்கே மயக்கும் புன்னகையுடன் அவளை வசீகரித்து கொண்டிருந்தான்.
அவன் கையிலிருந்து துள்ளி ஓடி மழையில் நின்று நனைந்து அதில் குளிர்ந்து மெல்ல ஒரு நடனம் போட.. மாடிப்படி வாயில் கைகளை கட்டிக்கொண்டு தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான் தேவா.
சிறுது நேரத்தில் அவன் அருகில் வந்தவள் அவன் சுதாரிக்கும் முன் அவனையும் இழுத்துக் கொண்டு மழைக்குள் சென்றுவிட்டாள். முதலில் திகைத்தவள் பின் மனைவியின் குறும்புத்தை ரசித்து அவளுடன் இழைந்து கொண்டே மழையில் நனைந்து கொண்டு இருந்தான். சிறு சிறு செயல்களில் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மனைவியின் இந்த காதலில் , தன்னையும் தொலைத்து , தன் கர்வத்தையும் தொலைத்து காதலாகி நின்றான் இந்த காதல் கணவன் கசிந்துருகி..
பனியில் நனைந்த ரோஜாவென மழைத்துளிகளால் நனைந்த அவளின் முகத்தை பார்த்து காதல் மீறி மோகம் கொள்ள, இதழ்களை சிறை செய்தான் தேவா..
தேவா பின் நின்று வைஷூவை அணைத்த வண்ணம், அவள் காது மடல்களை இவன் மீசையால் உரசி கொண்டே மெல்ல பாடினான்..
நேற்று முன்னிரவில், உன் நித்திலப்பூ மடியில்,
காற்று நுழைவது போல், உயிர் கலந்து களித்திருந்தேன்!
இன்று பின்னிரவில், அந்த ஈர நினைவில்,
கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்!
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்….
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்….
கர்வம் சரிந்ததடி…! சகியே!! என் கர்வம் சரிந்ததடி…..!
இன்று போலவே , என்றும் அவர்கள் காதலோடு வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..
உங்கள்.. ஜியா ஜானவி…
Super sis 😍😍😍😍
Super and happy ending sis 💞
Super 👌 Super story sis
Uyir urukum thetal nee story potunga
sema story
Wonderful love
Enjoyed reading it
Good narration and plot
Super story sis
Wowwwwww wowwww ultimate sis lovlyyyyyyyyyy marvelous love positing awesome story sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Semmma story…. Super❤❤❤
Nice story…. keep rocking 😍