ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 06

அத்தியாயம் 6

 

“என்ன ஹாசி.. ஊர்ல இருந்து எப்ப வந்த?” 

 

“நேத்து தான் வந்தேன் சிந்து..”

 

“நீ பாட்டுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்ட.. அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துடுச்சு..”

 

“என்ன சொல்ற சிந்து? அப்படி என்ன நடந்துச்சு?”

 

“என்ன நடந்துச்சா? நம்ம கம்பெனிய ஏஹெச் கம்பெனியோட ஜாயின் பண்ணிட்டாங்க..”

 

“என்னது ஏஹெச்சா?”

 

“ஆமா.. அதுக்கு நீ ஏன் இவ்ளோ சாக்காகுற?”

 

“ஒன்னுமில்ல.. இனிமே, நாம என்ன பண்ணப்போறோம்னு நினைச்சு சாக்காகிட்டேன்..”

 

“நாங்களும் அப்படி தான் சாக்கானோம்..”

 

“பரிதி.. அசோக்.. எப்படி இருக்கீங்க? ரெண்டு பேரும் ட்ரெயினிங்காக போயிருந்தீங்க.. அதுக்குள்ள ட்ரெயினிங் முடிஞ்சுடுச்சா?”

 

“அதை ஏன் கேட்குற ஹாசி.. உடனே ஹெட் ஆஃபிஸ்கு ரிட்டர்னாகணும்னு மெயிலோட சேர்த்து டிக்கெட்டும் வந்துடுச்சு.. சோ, எனக்கும் பரிதிக்கும் வேற வழியில்ல.. அதான் திரும்பி வந்துட்டோம்.. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.. அந்த ப்ராஜெக்ட்டோட  ஹெட் ஏஹெச் கம்பெனியோட எம்டினு..”

 

“என்னது ஏஹெச் கம்பெனியோட எம்டியா?”

 

“ஏன் ஹாசி காலைல இருந்து எல்லாத்துக்கும் ஷாக்காகுற?”

 

“ம்ம்.. வேண்டுதல்..” என்று ஹாசினி கூற, அனைவரது கைபேசியிலும் ஒரே நேரத்தில் மெஸேஜ் வரவே, அதனைப் பார்த்த நால்வரும் அதிர்ச்சி அடைந்தனர். 

 

“அடுத்த வாரம் ஏஹெச் கம்பெனியோட எம்டி நம்ம கம்பெனிக்கு அஃபீஸியலா வர்றாராம்.. நம்ம ப்ராஜெக்ட் ஹெட் அவர் தானாம்.. நம்ம ஃபெர்ஃபாமஸை பார்த்து தான் பெர்மனென்ட் எம்ப்ளாய் ஆக்குவானாம்..” என்று அசோக் செய்தியை படித்து கூற,

 

“ஷிட்..” என்று தன் காலை உதைத்தாள் பரிதி. 

 

“இப்ப நாம என்ன பண்ண போறோம்?” 

 

“பார்ப்போம்.. அவன் வந்து என்ன கலட்டி போறான்னு?” என்று முணுமுணுத்தாள் சிந்து. அனைவரையும் தன் பார்வையால் சுற்றி வந்த ஹாசினி, தன் கையில் இருந்த பெப்சியை மெல்ல ஸ்டராவில் உறிஞ்ச தொடங்க, அவளது கையில் இருந்த மருதாணியையும் முகத்தில் இருந்த ஜொலி ஜொலிப்பையும் பார்த்த பரிதி,

 

“உன்னோட மாமா பையனுக்கு கல்யாணம்னு தான போன? இப்ப உனக்கே கல்யாணமான மாதிரி வந்துருக்க.. என்ன நடந்துச்சு? உண்மைய சொல்லு..” என்று கேட்க, ஹாசினியின் பதிலுக்காக கண்ணில் உயிரை தேக்கி வைத்து பார்த்திருந்தான் அசோக். 

 

“ஹிஹிஹி.. கல்யாணத்துக்கு போனா மெஹந்தி வைக்க மாட்டாங்களா? சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்குற?”

 

“போடுவாங்க தான்.. ஆனா, இவ்வளோ நீளமாவா? அதுவும் இல்லாம உன் முகத்துக்கு பின்னாடி இன்னைக்கு ஒரு ஒளிவட்டம் தெரியுதே?”

 

“ரிதிக்குட்டிக்கு எப்பவுமே விளையாட்டு தான்..” என்று கூறிய ஹாசினியின் வந்து நின்றான் அக்கம்பெனியின் க்ளர்க் ரமேஷ். 

 

“உங்களுக்கு விஷயமே தெரியாதா? நம்ம கம்பெனில இருந்து ஒரு டீமை ஏஹெச் கம்பெனிக்கு ட்ரைனிங் அனுப்புறாங்க.. அதுல உங்க நாலு பேர் பெயரும் இருக்கு..” என்றவன் கூற, 

 

“வாட்?” என்று ஒரே குரலில் கூறியவர்கள், அவனை விலக்கி விட்டு நோட்டீஸ் போர்டை நோக்கி ஓடினர். 

 

“அடுத்த வாரம் தானே அவன் வர்றதா சொன்னாங்க?” என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த ஹாசினியின் தோளில் கையிட்டவாறே,

 

“அவன் இன்னைக்கே கம்பெனிக்கு வந்துட்டான் போலவே?” என்ற சிந்துவை கண்கள் விரிய பார்த்தவளின் விழிவட்டத்தில் விழுந்தான், தூரத்தில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த ஹரிஷான்த். அவனை பார்த்ததும், தன்னைச் சுற்றி இருந்த கூட்டத்திற்குள் மறைத்துக் கொண்டாள் ஹாசினி. இதனை கவனித்த சிந்து, ஹாசினியை தனியே யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றவள்,

 

“என்னடி இது? இவரு.. இவரை தானே நீ..” என்று கேட்க,

 

“ஆமா..” என்ற ஹாசினியின் முகத்தில் வெட்கம் தாண்டவமாட, அவளது கழுத்தில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிறு பளிச்சென்று ஒருபுறம் தெரிய கண்கள் விரிய பார்த்த சிந்து,

 

“என்னடி இது? எப்ப கல்யாணம் பண்ண? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல? என்னடி நடக்குது இங்க?” என்று கத்தியவளின் வாயை தன் வாயால் மூடிய ஹாசினி,

 

“கத்தாதடி.. எல்லோருக்கும் தெரிஞ்சுட போகுது?” என்றவள் சுற்றி முற்றி பார்க்க, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, மொட்டை மாடியின் ஒரு மூலையில் சென்று நின்று கொண்டாள். ஹாசினியின் பின்னோடு வந்து நின்ற சிந்து, 

 

“என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட கூட சொல்லமாட்டியா?” என்று அவளது தோளை தொட, ஒரு பெருமூச்சுடன் திரும்பியவள்,

 

“உனக்கே தெரியும் ஹரியை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு.. நம்ப விரும்பின ஒரு பொருள் நம்மக்கிட்ட இருக்குறதை விட, அடுத்தவங்கக்கிட்ட பத்திரமா.. நல்லாயிருக்கும்னு தெரிஞ்சா, நாம சந்தோஷமா விட்டு கொடுக்கலாம்.. ஆனா, அதுவே உடைஞ்சு சின்னாபின்னமாகிடும்னு தெரிஞ்சா.. அவங்கக்கிட்ட கொடுப்போமா?” என்று சிந்துவை பார்க்க, 

 

“ம்கூம் மாட்டோம்..” என்று சிந்து பதிலளிக்க,

 

“அதே மாதிரி தான்.. ஹரியோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்.. அந்த கல்யாணம் நிற்கணும்னு நினைச்சேன்.. அதான் ஹரியும் நானும்.. ஒன்னா.. சேர்ந்து வாழுறோம்னு எல்லோரையும் நம்ப வைச்சேன்.. பெரியவங்க எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..” என்ற ஹாசினி, நடந்து கொண்டே, தன் புருவங்கள் சுருக்கி,

 

“ஆனா, எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல..” என்றவாறே சிந்துவை பார்த்தாள். 

 

“என்ன?”

 

“இல்ல.. இந்த காமினி எந்த தைரியத்தில் ஹரியை ஏமாத்த நினைச்சா? அவளுக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயத்தை ஹரிக்கிட்ட இருந்து மறைச்சு, தன்னோட அப்பாக்கிட்ட கூட சொல்லாம, எப்படி இப்படி தைரியமா..”

 

“அப்போ.. அவ ஹரியை ரெண்டாவது கல்யாணம் பண்ண நினைச்சது தப்புங்குறியா?”

 

“நான் அப்படி சொல்லல.. பட், அவ ஹரிக்கிட்ட பொய் சொன்னது தப்பு தான?”

 

“நீ மட்டும்.. ஹரி செய்யாத ஒன்றை செஞ்சான்னு.. பொய் சொல்லித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

 

“அதுக்கு காரணம் இருக்கு சிந்து.. அமிர்தன் அங்கிள் காமினியைப் பத்தி எல்லாத்தையும் சொல்லி, ஹரியை எப்படியாவது இந்த கல்யாணம் பண்ணாம தடுக்கணும்னு சொன்னாரு.. அங்கிள் சொல்லியே கேட்காதவன், நான் சொல்லியா கேட்கப் போறான்? ஆனா, அங்கிள் கேட்கும் போது மறுத்து பேச முடியல..”

 

“எங்க என்னைய பார்த்து உண்மைய சொல்லு.. நிஜமா அங்கிள் கேட்டதுக்காக மட்டும் தான் ஹரியை கல்யாணம் பண்ணுனியா?”

 

“…”

 

“உன்னோட மௌனமே சொல்லிடுச்சு.. நீ ஹரியை உனக்காக தான் கல்யாணம் பண்ணிருக்கன்னு.. ஆனா, அவருக்கு ஒரு சாய்ஸ் கூட கொடுக்காம, நிர்ப்பந்தம் பண்ணி கல்யாணம் பண்ணிருக்க.. இது உனக்கு சரியா படுதா?” 

 

“உனக்கு ஒன்னு தெரியுமா சிந்து? எவ்ரித்திங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.. நான் அவர்கூட இந்த ஒரு வருஷம் மட்டும் தான் வாழப் போறேன்..”

 

“என்னடி சொல்ற?”

 

“எஸ்.. ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் அவருக்கு டிவொர்ஸ் கொடுத்துடுவேன்..”

 

“லூசா நீ? இதுக்கு தான் பொய் சொல்லி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டியா?”

 

“ஸ்ஸ்ஸஸுஸுஸு.. சத்தம் போடாதடி.. எனக்கு அவரோட மெமரீஸ் மட்டும் போதும்.. இந்த ஒரு வருஷம் அவர் கூட சந்தோஷமா வாழணும்.. அப்புறம் தானே டிவொர்ஸ் கொடுத்துடுவேன்..”

 

“பாப்பா ஏதாவது வந்துச்சுன்னா?”

 

“அதுக்கு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் பொறுப்பு.. அவருக்கும் என்னோட குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..”

 

“எல்லா முடிவையும் நீ மட்டும் தான் எடுப்ப இல்ல? அவரை பத்தி யோசிக்கவேமாட்ட இல்ல?”

 

“அவரைப் பத்தி யோசிச்சதுனால தான் இந்த முடிவெடுத்தேன்..” என்ற ஹாசினி, தனது ஒரு விரலை மடக்கி, மீதம் ஒன்பது விரல்களை காட்டி,

 

“இன்னும் ஒன்பது மாசமிருக்கு.. இந்த ஒன்பது மாசத்துக்குள்ள, எனக்கு பிடிச்ச வாழ்க்கையை நான் ஹரிகூட வாழ்ந்துக்குவேன்.. ப்ளீஸ்.. இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு சிந்து.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று கண்களை சுருக்கி, முகத்தை பாவம் போல் வைத்து கேட்க, 

 

“சரி, நானா யார்க்கிட்டேயும் சொல்லமாட்டேன்.. ஆனா, அமிர்தன் அங்கிளுக்கு தெரிஞ்சுதுனா? அப்போ என்ன பண்ணுவ?” என்று கூர்மையாக அவளை பார்த்தவாறு சிந்து கேட்க, சிறிது யோசித்த ஹாசினி,

 

“அப்போ நடக்குறதை அப்போ பார்க்கலாம்.. இப்போ நான் ஹரியை எப்படி சமாளிக்குறதுன்னு யோசிக்கணும்..” என்று யோசனையில் ஆழ்ந்தவளுக்கு தெரியவில்லை, நினைப்பதெல்லாம் வாழ்க்கையில் நடந்துவிடுமா? என்ன? என்று.. 

****************************************************

மலைகளின் அரசி.. பல சுற்றுலாத் தளங்களை ஒரே இடத்தில் கொண்ட, இயற்கை வளங்கள் பொருந்திய ஊட்டிக்கு வந்து இறங்கினாள் விளானி. அவள் பின்னோடு வந்து இறங்கிய கலாவதியோ,

 

“மசமசன்னு நிற்காம, ஒரு டாக்ஸியை பிடி.. காலெல்லாம் மரத்துப் போன மாதிரி இருக்கு..” என்றவாறு தன் தலையில் இருந்த குல்லாவை சரி செய்ய,

 

“தாய்கிழவி.. இது உனக்கே நல்லாருக்கா? மும்பைல சுந்திரமா திரிய வேண்டிய என்னை.. உன் பேரன் ஊட்டிக்கு வந்துட்டாங்குற ஒரே காரணத்துக்காக, என்னைய இங்க இருக்குற காலேஜ்ல சேர்த்தது மட்டுமில்லாம, அவன் கூடவே தங்க சொல்லி, இவ்வளவு தூரம் இழுத்துட்டு வந்துருக்கியே, உனக்கு மனசாட்சியே இல்லையா?” என்று பெட்டிகளை தூக்க முடியாது, தூக்கிக் கொண்டு நடந்தவளை, சிறிதும் கவனிக்காத கலாவதி,

 

“இங்கபாரேன்.. கேரட்டெல்லாம் ப்ரெஸா இருக்கு..” என்று சுற்றி இருந்த கடைகளில் கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். 

 

“நான் என்ன பேசிட்டுருக்கேன்.. நீ என்ன பேசிட்டுருக்க.. இந்த கேரட்டை நீ பார்த்ததே இல்லயா? கூட்டிட்டு வந்ததும் வந்த.. உன் பேரனை  கூட்டிட்டு போக வரச் சொல்லிருக்கலாமே?”

 

“அவன் வேலை விஷயமா பிஸியாயிருக்கான்.. அவனை தொந்தரவு பண்ணக்கூடாது.. அதான் அவனுக்கே சொல்லாம வந்துருக்கோம்..”

 

“என்னது நாம வந்தது அந்த குரங்குக்கு தெரியாதா? அப்புறம் எப்படி என்னைய இங்க இருக்குற காலேஜ்ல சேர்த்துவிட்ட?”

 

“அது உன்னோட தாத்தா காலேஜ் தான்.. உன் அப்பன் தான் அந்த ச்சேரிட்டியோட ஓனர்.. அங்க இருக்குற பிரின்சிபால் அவனோட ப்ரெண்ட்.. சோ, ஈசியா சீட் கிடைச்சுருச்சு.. அதுவுமில்லாம இப்ப ஃபைனல் இயர் தானே பண்ற? உன் புருஷனோட கம்பெனியில ஜாயின் பண்ணிக்கோ..”

 

“அவன் கம்பெனிலயா? நானா? சான்சேயில்ல..”

 

“டாக்ஸிய கூப்பிடப் போறியா? இல்லயா?”

 

“ஏன் நீ வேற ஏதாவது ஐடியா வைச்சுருக்கியா?”

 

“ஹிஹிஹி.. அது வந்து என்னோட காலேஜ் ப்ரெண்ட் வீடு இங்க தான் பக்கத்துல இருக்கு.. அவ என்னைய பிக்கப் பண்ண வர்றேன்னு சொல்லிருக்கா.. இன்னும் ஒரு வாரத்துக்கு அவ வீட்டுல தான் இருப்பேன்..”

 

“கலாவதி.. நீ காலாவதியாகப் போய்ப் பாரு.. இப்ப நான் எப்படி அவன் வீட்டுக்கு போவேன்?”

 

“அவன் உன் புருஷன் தானே ஃபோன் பண்ணி வழி கேளு.. அவனே வழி சொல்லுவான்..”

 

“நானா? அவன் கிட்டயா? நோ சான்ஸ்..” என்ற விளானி தனது கைபேசியை எடுக்க, அதனைப் பார்த்த கலாவதி,

 

“யாருக்கு ஃபோன் பண்ண போற?”என்று கேட்க,

 

“என்னோட டாடிக்கு..” என்று பதிலளித்தவள், அர்ஜுனிடம் ஹர்ஷவர்தன் இருக்கும் வீட்டின் விலாசத்தை வாங்கிக் கொண்டவள், 

 

“இனிமே, நானே போயிக்குவேன்.. நீ உன்னோட ப்ரெண்ட் வீட்டுக்கு கிளம்பு..” என்றவள் கலாவதியை அவரது தோழி அனுப்பிய காரில் ஏற்றிவிட்டவள், தானும் ஹர்ஷவர்தன் வீட்டை நோக்கிப் சென்றாள். விளானியின் வருகை அறியாத ஹர்ஷவர்தன், அவளை பார்க்கும் போது என்ன செய்யவானோ? 

10 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 06”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top