ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 07

அத்தியாயம் 7

 

“ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.. எனக்கொரு கவலையில்லை.. நான் தான்டா.. என் மனசுக்கு ராஜா.. வாங்குகடா வெள்ளில கூஜா..” என்று பாடியபடியே இறங்கி வந்தான் அகில். 

 

“என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு..” என்றவாறு அவனை வழிமறித்து நின்ற நகுலனை ஏன் இறங்க பார்த்த அகில்,

 

“பின்ன உங்களை மாதிரி வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அடைகாக்க சொல்றியா? என்னால முடியாதுப்பா.. நான் ஊட்டிய சுத்திப் பார்க்க போறேன்.. சரி.. சரி வழிய விடு.. நரி முகத்துல முழிச்சுட்டுப் போனா யோகம்னு சொல்லுவாங்க.. ஆனா நான் காட்டுப் பூனை மூஞ்சில முழிச்சுட்டு போறேன்.. போற காரியம் விளங்குன மாதிரி தான்..” என்று நகுலனை விலக்கி, அங்கிருந்து செல்ல முயல, அகிலனின் கையைப் பிடித்து இழுத்து நகுலன் தடுக்க, இருவரும் சண்டையிட தொடங்கும் நேரம், 

 

“ஹலோ கெய்ஸ்.. என்ன காலையிலேயே நல்ல தரமான ஆக்ஸன் ப்லாக் இருக்கு போல?” என்றவாறு அங்கு வந்தான் சஜன்.

 

“கடுப்பேத்தாத டா.. நேத்து நான் வெளிய கிளம்பும் போது என்னடா சொன்னீங்க? வேலையிருக்கு அதை முடிச்சுட்டு எங்க வேணா போங்கன்னு சொன்னீங்கல்ல.. இப்போ இந்த தடிமாடு வெளிய கிளம்புறப்போ மட்டும் எதுவும் சொல்லாம, பேசாம இருக்கீங்க?” என்ற அகிலின் தலையில் தட்டியபடி அங்கு வந்தான் ஹர்ஷவர்தன். அவனை பார்த்ததும், 

 

“ரொம்ப பேசாம.. எல்லோரும் வேலையைப் பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல இந்த கேம்மை லான்ச் பண்ணியாகணும்.. அடுத்த வாரம் டைரக்டர்ஸோட மீட்டிங் இருக்கு.. அதுல ட்ரையல் கேம் ரிலீஸ் பண்ணணும்.. கொஞ்சமாவது சின்ஸ்சியாரிட்டி இருக்கா? நான் போய் என் வேலையை பார்க்குறேன்பா..” என்றவாறே அங்கிருந்து போய், தனது சிஸ்டத்தில் அமர்ந்து கொண்டான்.

 

“உனக்கென்னப்பா..” என்றவாறே திரும்பிய நகுலனும் அகிலும் ஹர்ஷவர்தனை பார்த்த மறுநொடி, தங்களது வேலையை பார்க்க சென்றனர். 

 

“எம்மா.. என்ன பார்வைடா? இப்படியே முறைச்சு.. முறைச்சே வேலை வாங்கிடுறான்..” என்ற நகுலனை ஓரக்கண்ணால் பார்த்த அகில்,

 

“நம்மளுக்கே இந்த கதினா, இவன் பொண்டாட்டிய கொஞ்சம் நினைச்சுப் பாரு..” என்று கிண்டல் செய்ய,

 

“அவன் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசாதடா.. சரியா அவன் கல்யாணாத்தப்போ நம்மளை பிஸ்னஸ் ட்ரிப் அனுப்பிட்டான்.. துரோகி..” என்று மீண்டும் ஹர்ஷவர்தனை திட்டினான் நகுலன். 

 

“சரி விடு.. அவனோட சூழ்நிலை.. அவனால போக முடியாது.. சோ, பார்ட்னர்ஸ்குற முறையில நாம் போக வேண்டிய கட்டாயம்.. அதுனால அவனோட கல்யாணத்தை பார்க்க முடியாம போச்சு..” என்றவாறே நகுலனை சமாதானப்படுத்த முயற்சித்தான் சஜன். 

 

“அதுமட்டுமா.. அவ மேரேஜ் போட்டோவைப் கூட சோஷியல் நெட்வொர்க்ல போடல.. சரி அதை விடு.. சோஷியல் நெட்வொர்க்ல போடலைன்னாலும் நம்மக்கிட்ட காட்டிருக்கணும் தான? இப்போ அவன் பொண்டாட்டியே நம்ம எதிர்ல வந்து நின்றாலும், நமக்கு அடையாளம் தெரியாதே..” என்று மீண்டும் நகுலன் பொறும,

“இப்போ.. யாரு.. யார் பொண்டாட்டிய பார்க்கணும்?” என்றவாறே அவர்களுக்கு எதிரே இருந்த கம்யூட்டரில் அமர்ந்தான் ஹர்ஷவர்தன். 

 

“அட சும்மா இருங்கடா.. எனக்கென்ன இவன்கிட்ட பயமா?” என்று மற்றவர்களை பார்த்து கூறிய நகுலன், வேகமாக எழுந்து சென்று ஹர்ஷவர்தனிடம் சென்றான். அவன் வருவதை பார்த்தாலும் பார்க்காதவாறு அமர்ந்திருந்த ஹர்ஷவர்தன், தன்னருகே வந்த நகுலனை நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வையில்,

 

“அது வந்து.. அது வந்து..” என்று திணறினான் நகுலன். சரியாக அதே நேரத்தில் வாசலில் அழைப்பு மணி அடிக்க,

 

“நான் ஆர்டர் பண்ணது வந்துடுச்சு.. நான் போய் வாங்கிட்டு வாங்கிட்டு வாயேன்..” என்று பாவம் போல் நிற்க, என்ன நினைத்தானோ தானே வாயிலுக்கு சென்றான். வாயில் அழைப்பு மணியை அடித்துவிட்டு, கையில் பிரியாணி பொட்டலத்தோடு நின்றிருந்தாள் விளானி. 

 

“வீட்டுக்குள்ள போன உடனே இந்த சிக்கன் பிரியாணியை ஒருபிடி பிடிக்கணும்..” என்று முணுமுணுத்தவாறே நின்றவளின் முன்னே இருந்த கதவு திறக்கப்பட்டது. கையில் இருந்த கைபேசியை பார்த்தவாறே கதவை திறந்து வெளியே வந்தவன், அவளது முகத்தை கூட பார்க்காது அவளது கையில் பணத்தை திணித்து விட்டு, பிரியாணி பொட்டலத்தை பிடிங்கிக் கொண்டு வேகமாக உள்ளே செல்ல,

 

“அடேய்.. நான் என்ன டெலிவரி கேர்ளா? உன் பொண்டாட்டிடா..” என்ற விளானியின் குரல் காற்றில் தேய்ந்து மறைந்து போனது.

 

“அடேய்.. திமுரு பிடிச்சவனே.. இருடா.. உன்னை என்ன பண்றேன்னு பாரு..” என்றவள், தனது கைபேசியை எடுத்து,

 

“ஓ.. மை காட்.. இந்த நாட்டுல பெண்களுக்கு எதிராக கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.. இதை தடுக்க யாருமே இல்லயா?” என்று சோகமாக நடித்து இன்ஸ்டாவில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, 

 

“அப்படி என்ன நடந்துச்சு பேபி?”

 

“ஓ மை காட்.. அவன் உன்னை ரேம் பண்ணிட்டானா?”

 

“உன்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி.. உன்னைய ஏமாத்திட்டானா?”

 

“டோண்ட் ஒர்ரி பேபி.. உனக்கு நான் வாழ்க்கை கொடுக்குறேன்..” என்று பலரும் பல விதமாக கமெண்ட் பதிவு செய்ய, கைபேசியில் தற்செயலாக இன்ஸ்டாவை திறந்தவனின் கண்ணில் அவளது லைவ் ஸ்ட்ரீமிங் பட, அதில் கவனம் செலுத்தினான். 

 

“ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நான் வாங்கி வைச்சிருந்த பிரியாணி பொட்டலத்தை பிடிங்கிட்டு போயிட்டான்..” என்றவள் ஹர்ஷவர்தன் இருக்கும் வீட்டை காட்டி,

 

“இதோ இந்த வீட்டுல இருக்குற.. தி க்ரேட் ஏஹெச் கம்பெனியோட.. என் ஆஃப் தி டைரக்டர் ஹர்ஷவர்தன்.. எனக்கு நீதி வேணும்.. என்னோட பிரியாணி திரும்ப எனக்கு வேணும்.. இந்த ஊட்டிக் குளிர்ல அந்த பிரியாணியை நான் எப்படி தேடித் தேடி வாங்கிட்டு வந்தேன் தெரியுமா?” என்று கண்ணில் கை வைத்து தேய்த்து தேம்பித் தேம்பி அழுவது போல் நடித்தவள், ஹர்ஷவர்தன் வீட்டை நோக்கி,

 

“யோவ்.. ஹர்ஷவர்தா.. வெளிய வாயா! எனக்கு ஒரு நியாயம் சொல்லிட்டு போ..” என்று கத்த, 

 

“அஞ்சே நிமிடம்.. பிரியாணியோட வந்துடுறோம்.. பேபி..” என்று பலரும் பல விதமாக கமெண்ட் பதிவு செய்ய,

 

“அய்யோ.. என் மானமே போச்சு.. இவள?” என்று முணுமுணுத்தவாறே, கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ஹர்ஷவர்தன், 

 

“உள்ள வந்துத் தொலைடி..” என்று அவளது கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவள்,

 

“இங்கப் பாருங்க ப்ரெண்ட்ஸ்.. வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டான்.. ஆனா, இன்னும் பிரியாணி கொடுக்கல..” என்று அப்போதும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, 

 

“ஆஃப் பண்ணுடி அந்த லைவ்வை..” என்று அவளிடம் இருந்து கைபேசியை பிடுங்க முயல, அவனிடம் இருந்து லாவகமாக நழுவியவள், ஹாலில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளை கோபமாக முறைத்துக் கொண்டே,

 

“கருமம்.. கருமம்.. போயும் போயும் உன் கைல இருந்த பிரியாணியையா நான் வாங்கணும்..” என்ற ஹர்ஷவர்தன், தன் நெற்றியில் கையால் அடித்துக் கொண்டே,

 

“டேய்.. நகுல்.. அந்த டேபிள் மேல இருந்த பிரியாணி பொட்டலத்தை இவ மூஞ்சில விட்டெறிடா..” என்று கத்த, அவன் முன்னே தனது ஐந்து கைவிரல்களையும் சப்பிக் கொண்டே வந்த நின்றான் நகுலன். கோபமாக தன்னை பார்க்கும் நண்பனை எச்சில் விழுங்க பார்த்த நகுலன்,

 

“பிரியாணி செம டேஸ்ட் டா மச்சா..” என்றவனை கொலைவெறியோடு பார்த்தாள் விளானி.

 

“இப்ப என் பிரியாணி வேணும்.. இல்லன்னா..” என்றவளை ஏளனமாக பார்த்த ஹர்ஷவர்தன்,

 

“இல்லன்னா என்ன பண்ணுவ?” என்று கேட்க, அவன் கண் முன்னாடியே தான் செய்த லைவ் ஸ்ட்ரீமிங்கை இன்ஸ்டாவிலும் வாட்ஸ் அப்பிலும் பதிவிட, அடுத்த நிமிடமே அமிர்தனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுத்து காதில் வைத்தவனின் முகம் அஷ்ட கோலமாகியது. பேசி முடித்தவன், அவளை கோபமாக பார்த்து, தன் பல்லை கடித்தவாறே,

 

“டெலிட் பண்ணு..” என்று உத்தரவிட,

 

“முடியாது..” என பட்டென்று பதிலளித்தாள் விளானி. 

 

“டெலிட் பண்ணு..”

 

“முடியாது..”

 

“கடைசியாக கேட்குறேன்.. டெலிட் பண்ண முடியுமா? முடியாதா?” என்றவனின் முகம் கோபத்தில் ஜொலி ஜொலிக்க, அதனை பார்த்த நகுலனும் அகிலும், 

 

“டேய் நகுலா.. முதல் தடவை.. நம்ம பாஸ் சொல்லி.. முடியாதுன்னு சொல்ற ஆளை பார்க்குறேன்டா..” என்று கூற, அகிலனை பார்த்த நகுலன், “நானும் தான்டா..” என்று தலையாட்ட, 

 

“சரி.. ஓகே.. அப்போ நீ எனக்கு பிரியாணி செஞ்சு கொடு..” என்றவளை கூர்மையாக பார்த்தவன்,

 

“சரி.. பண்றேன்.. டெலிட் பண்ணு.. அப்புறம் அந்த வீடியோவையும் டெலிட் பண்ணு..” என்று கூற, அவன் கூறியதை அப்படியே செய்தாள் விளானி. பின்னர், அவளது கைபேசியை வாங்கி சோதித்து பார்த்தவன்,

 

“ஓகே.. குட்..” என்றவாறு சோஃபாவில் இருந்து எழுந்தவன், “அப்புறம் உன்னோட ரூம் இருக்கு.. மேல ரைட் சைட்ல இருந்து ரெண்டாவது ரூம்..” என்று கூறிவிட்டு செல்ல, 

 

“ஹோய்.. அப்போ என்னோட பிரியாணி?” என்றவள் அவனது கையைப் பிடித்து தடுக்க,

 

“நான் எப்போ இப்போவே செஞ்சு தர்றேன்னு சொன்னேன்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், லாவகமாக அவளது கையை தன் கையில் இருந்து எடுத்து விட்டவாறே,

 

“போ.. போய்.. குளிச்சுட்டு வந்து.. கிச்சன்ல இருக்குற சாம்பார் சோறு திண்ணு.. நல்லாப்பிள்ளையா ரூம்க்கு போ..” என்று நக்கலாக கூறியவன், அங்கிருந்து செல்ல, 

 

“யூ ச்சீட்.. என்னையவா ஏமாத்துன.. உனக்கு இருக்குடா.. தடியா..” என்று முணுமுணுத்துக் கொண்டே, தனதறைக்கு செல்ல, இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த மூவரும் ஒன்றும் புரியாது தலையை சொறிந்து கொண்டு நின்றிருந்தனர். மோதலில் இருந்து காதல் வருமா? விளானியை தனது மாமன் மகளாக அறிமுகம் செய்து வைத்தவன், தனது மனைவி என்று உரிமைகோரும் நாள் வருமா?

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 07”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top