2 ஆசை வெட்கமறியாது
“தையல் போடணும் செல்லு”
முதுகின் வெட்டு ஆழம் கண்டு செல்வாவின் காதுக்கு எக்கி கிசுகிசு வென்று விஜி சொல்ல.. கூசி சிலிர்த்தான் அந்த ப்ரவுனி ஹல்க்….
முதுகில் சுண்டி இழுத்து வலித்து எரிந்த பகுதி காதலி கைப்பட குணமே பெற்ற மாதிரிதான் இருந்தது.. கழற்றிய சட்டையை கொண்டு அகன்ற நெஞ்சை மூடி.. உதட்டை அலட்சியமா சுழித்த செல்வா, மயக்கங்கள் தெளிந்து.. வெளியே செல்லலாம் சமிஞ்சை காட்ட…
கருப்பழகை மறைக்க ஏதேதோ கிரீம் போட்டு விளக்கி.. புது நிறமாய் செயற்கையாக மாற்றி நாட்டுப்புற முகவடிவை பெங்களூருவின் நவீன யுவதியரை போல பேச்சு நடத்தையில் பாவனை வைத்தாலும் ..
உள்ளிருந்த ஆதி தமிழச்சி உயிர்பெற்றிட அவ்ளோதான் விஜி என்கிற விஜயலட்சுமிக்கு நொடியில் பேய் பிடித்துவிட்டது..
அதெப்படி இந்த எருமை என்னை கொஞ்சமும் மதிக்காது போவது.. விடக்கூடாது..
விஜி மைக் பாவா மூவரும் வெளியில் போனதும்
மயக்கத்தில் கிடந்த வாத்தின் வாய் கை கால் கட்டுக்களை கழற்றி 10 × 10யில் சவுண்ட் ப்ரூப் கொண்ட அந்த ஏசி ரூமில் இருந்த சொகுசு கட்டிலில் அசிமை கிடத்தி.. லாக்கர் கதவு போன்றே விசேஷமாய் அமைக்கப்பட்டிருந்த முரட்டு இரும்பு கதவை பூட்டி .. சாதா பேன் லைட் சுவிட்ச் போன்றே இருந்த பட்டன் தட்டி அந்த அறையை அண்டர் கிரவுண்ட்க்குள் சொருகி பதுக்கிவிட்டான். செல்வா..
இந்தியாவிலேயே சிறந்த??!! கடத்தல் குழுவின் தலைவன் விஜியின் அண்ணன் ரகுவரன் தான் தொழில் பெயர் பூத்..
பூத் ஸ்கெட்ச் போட, புள்ளி முனை அளவு பிசகாது செய்பவன் செல்வா.. அரசனுக்கும் அடிமைக்கும் ரசாயனம் அபரிதமாய் சேர்ந்திருந்தது…இருவரின் அறிவு கூட்டல் ஆற்றல் கொண்ட உழைப்பால் இதுவரை 100% வெற்றி..
போலீஸ் மற்றும் பெரிய தாதாக்களாலும் கூட இவர்களின் இந்த திரைமறைவு தொழில் ரகசியம் மற்றும் யுக்தியை கண்டே பிடிக்க முடில.. மோசமாணர்வர்களில் முக்யமானவர்கள் பூத் டீம்
ரகுவிடம் வேலை பார்க்கும் ஆட்கள் முழுக்க அவனின் விசுவாசிகள்.. கழுத்தை அறுத்தாலும் காட்டி கொடுக்கமாட்டார்கள். ஏனெனில் இடையில். உணர்வு பூர்வமான பந்தம் இருந்தது ..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ரகுவிடம்.. ரகுவும் அப்படித்தான் அந்த தகுதிக்கு உரியவனும் கூட..
தனக்கு என்றால் கூட அசட்டையாயிருப்பவன் தன் குழுவுக்கு ஏதாவது என்றால் அடிக்கும் அடி மரணமா இருக்கும்…
சைலெண்ட் கில்லர் & கிரேட் ரெவெஞ்சர்
அது அவன் மனம் மட்டுமே அறியும் ரகசியம் வச்சு செஞ்சிட்டு. யாரோ போல இருப்பான்..
இந்த கில்லரிடம் 3 பலகீனங்கள் உண்டு..
1 விஜி 2 விஜி 3 விஜி அவனின் எல்லாமே விஜி..
ஏழுலோகம் சுற்றி பரந்து பாயும் ரகுவின் சூப்பர் ப்ரயின் தன் சுழற்சியை நிறுத்தி களிமண்ணாய் மாறுவதும் அவளிடமே…
பலம் .. ரகுவிடம் ரெண்டு நல்ல கொள்கைகள் இருந்தன.. ஒன்று எந்த உயிருக்கும் ஊறு விளைவிக்கும் ப்ரொஜெக்ட் எடுத்து கொள்ளவேமாட்டான்
மற்றொன்று போதை வஸ்து.. கடத்தினால், உரிய இடம் கொண்டு சேர்ப்பித்தால், 10 மடங்கு பணம் சம்பளமாக கிடைக்கும்.. அந்தமாதிரி ஆட்களின் சங்கிலிகள் தெரிந்தாலும் இது என்னால் முடியாது மறுத்து விடுவான்..
ஆள் கடத்தலுக்காய் ..
இவனுக்கு மேலிருக்கும் ஆள் போட்டோ/ கடத்த வேண்டிய நாள்/ பண குதிரை பேரம் பேசப்பட்டு ராகுவால் அட்வான்ஸ் 40% அமவுண்ட் வாங்கபட்டு உறுதியானதும் ..
பூத்தின் திட்ட வேலை தொடங்கும்
மைக் எனப்படும் ஜானி மைக்கேலை தான் அந்த வாத்தின் முழு நாள் அட்டவணை கண்காணிக்க பட்டு நம்பகமான தகவல் பரிமாறப்பட்டு.. செல்வாவால் வாத்து பிடிக்கப்பட்டு.. இவர்களின் சாரதியாக பாவா .. மின்னல் வேகத்தில் வாகனம் ஒட்டக்கூடிய இந்தியாவின் அனைத்து சாலைகளும் அவருக்கு அத்துபடி.. பூத் குழுவோடு இணையும் முன் சரக்குந்து ஓட்டிய அனுபவம் .. டீமுக்கு பலம்..
ரகுவின் வெளியுலகத்க்கு தெரிந்த தொழில்
மிக பவர்புல் எதிக்கல் ஹாக்கர் இன் இந்தியா..
மாதத்துக்கு ரெண்டு வாத்துக்கு வேலை செய்தால் போதும்
நிறய கடமைகளுக்கு அப்பணம் உதவும்..
மைக் ..” தல வந்தா எப்படி சமாளிப்பது தெரில.. வாத்துக்கு அடிப்பட்டது தெரிஞ்சா அவ்ளோதான்”. மைக் தன் வழமையா புலம்ப.வாயே சத்ரு அவனுக்கு…
“ரகு கிட்டே இதோ இந்த தடியன போட்டுக்கொடு.. எல்லோரையும் அடிச்சு துவைச்சுட்டு அலையறதே இந்த காண்டாமிருகத்துக்கு வேலை..” மைக்கிடம் இவள் செல்வாவை போட்டு கொடுக்க..
பாதி தூரம் போன செல்வா.. விஜியை நின்று திரும்பி பார்த்து வேணும் என்றே முறைக்க..
வா வா எருமை.. யாருக்கிட்டே.. விஜி நவ் ஹாப்பி பேபி
“இதோ என் ஹீரோ எப்படி பதில் கொடுத்துருக்கான் பார்த்தியா? …. வல்லவனுக்கு வல்லவன் உண்டு.. உடம்பை பாறை போல ஏத்தி வச்சுருக்கோம்ன்னு திமிர்ல திமிங்கலமா அலையக்கூடாது .. ஹாங்.. “
செல்வாவிடம் வலிய நெருங்கி கண்ண பார்த்து மிரட்டி??!!
“இப்போ நீ காயம் பண்ணியிருக்க ஆள் யார் தெரியுமா? தெரியுமா? என் ஆளு .. என் புஜ்ஜி பேபிய உடம்பெல்லாம் அரைச்சு வச்சிருக்க.. எனக்கு வலிக்குது தெரியுமா? “
இவள் சாதா பார்வையை செல்வா கண்ணு கவ்வி ஏதோ செய்ய.. அதை அலட்சியபடுத்தி..
அதிகமா சலம்பி விஜி வாயடிக்க.. கண்ணை உண்டு கொண்டிருந்த ஆணெனும் காதல் மாமிசபட்சி பட்டாம் பூச்சியின் ரெக்கையென பேசும் போதெல்லாம் பட படவென அடிக்கும் கருப்பும் சிவப்பும் கலந்த விஜியின் உதட்டை நிதானமாக மென்று திண்ண பேராவல் கொண்டது… எச்சில் ஊறியது தானா ஆசையில்..
முட்டாசு வார்த்தைகளால் ஏசும் காதலியின் கெட்டவார்த்தைகள் அவன் செவிப்பறை பக்கம் எட்டவே இல்ல..
“அட.. இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டியா நீ?” சமையல் உள்ளிலிருந்து வந்த கமலாம்மா மகளை அடக்க..
“இவன் முதுகை பாருங்கம்மா.. எப்படி அடிப்பட்டுருக்கு? எருமையை சண்டலாம் போடாதே.. சமாதானமா இருக்க பழகு சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன்..”
பிளேட்டை திருப்பி போட்டாள் பித்தலாட்டகாரி விஜி..
அந்த முகத்தில் பாதி அளவு இடத்தை பிடித்த கண்கள் இங்கும் அங்கும் ஆடி திரிந்து அது தனியா வாய் தனியா பொய் சொல்ல காண்போர் அனைவருக்கும் இஷ்டப்பெண்ணானாள் கருப்பழகி விஜி..
“எங்கே காட்டு செல்வா?” கமலா பதற..
“ஒன்னும் இல்லக்கா .. பக்கத்தில் நல்ல டாக்டர் பார்த்து போய்க்கிறேன்.. ” பட்டென்று சொல்லி அவன் ரூமில் போய் பதுங்கிட்டான் செல்வா..
“நீ போலி போடி” விஜியை வார்த்தையில் சொல்லாமல் சொல்லி நறுவிசா செல்வா கலாய்த்தது.. எல்லோருக்கும் புரிந்து முகத்திலும் சிரிப்பு வர.. விஜிக்கு காதில் புகை..
ஏற்கனவே இந்தம்மா செல்வா ரூமில் தான் கதை புத்தகம் படிச்சுட்டு இருந்தது.. அதனால் தன் எதிரியை அவனுடைய குகையிலேயே சந்திக்க பின்னாடியே ஓடிவிட்டாள்..
“படிப்பு முடிந்ததும் ரகுவிடம் சொல்லி ரெண்டு பேருக்கும் முடிச்சு வைக்கணும் பாவா..”
“வாய்ப்பில்லை கமலா.. ரகு சார்க்கு வேற எண்ணம் இருக்கு..”
“போங்க போங்க.. நான் பேசுறேன்.. செல்வா விஜிமேலே உயிரே வச்சு இருக்கான்.. கட்டிக்கொடு ராணி போல பார்த்துப்பான்.. நான் எடுத்து சொல்றேன் கேட்டுப்பார் ரகு சார்”
இவ வேற ஊர் நியாயம் பேசிக்கிட்டு.. அக்குழுவின் தாயாக இருக்கும் வயதான திரு நங்கை கமலாம்மாவை கடுப்படித்தார் பாவா..
விஜி விஷயத்தில் ரகுவின் தீர்மானம் யாருக்கும் கட்டுப்படாது.. பாவா விற்கு “தல” யின் மனோரதம் ஓரளவு தெரிந்ததால் கமலாவிடம் சொல்லாது பெருமூச்சு விட்டுக்கொண்டார்.. இந்த குழுவின் தந்தை யென செயல் பாட்டில் இருக்கும் பாவா..
காதல்கள் யாரோடு ?யாருக்கோ? யாரிடம்?
அதே நேரம் அந்த ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அறையில் இளைய ஜோடிகளின் கூடற்சுகபுலம்பல்கள்..
மரம் மீது கொடி படருமாம் இங்கு இயற்கைக்கு முரணாய கொடி மீது தேவதாருவை ஒத்த உடல் கொண்ட ஆண் படர்ந்து கிடந்தான் கொடியிடையாள் மேல்.. அதுவும் அசுரனாய் இயங்கிக்கொண்டும் இருந்தான்.. உடையில்லா உடல்கள் தேய்ந்தன.. உரசல்களில்..
பருவ ஆணின் ஊஞ்சல் அசைவுகளின் வேகம் தாளாது அப்பெண் அவனடியில் நசுங்கியது…. மாசு மருவற்ற அப்பெண்ணின் வெள்ளைதேகம் ஆடவனின் விரல்களின் பின்னல் பிசையலில வீங்கி ரெத்தமென சிவந்து கண்ணியது..
பாதுகாப்பு கவசத்தோடு நடந்த அந்த இன்பத்துக்கு மட்டுமான கூடல் முடிய..
உடை போட்டு கிளம்பியவளிடம்.. கட்டு நோட்டை நீட்ட..
வேண்டாம் பாஸ்.. எப்போ வென்றாலும் என்னையே கூப்பிடுங்க போதும்.. ரொம்ப நல்லா இருந்தது… உங்க மனைவி கொடுத்து வச்சவங்க…. அவங்க கிட்டே நான் சொன்னதா சொல்லிருங்க
பேசிய பணம் வாங்காது அப்பெண் மறுக்க..
கூடுதலாய் இன்னொரு
கட்டு கொடுத்து
“இன்றோடு என்னை மறந்துவிடு…. ” அனுப்பி விட்டவன் ரகுவரன் @பூத்