3 ஆசை வெட்கமறியாது
ஹோட்டல் பாத்ரூமிலேயே தன் கறையை போக்கி குளித்த ரகு சோர்ந்து கிடந்த உடலை கேவலமாய் பார்த்தான்.. போதுமா? உனக்கு இந்த ஆட்டம் தானே வேணும்.. எவ குழிலேயாவது இறங்கனும் உனக்கு பைத்தியம் போல இயங்கனும் முடிஞ்சிச்சா.. உன்னோடு என் மனசால போட்டி போட முடில.. பொங்கி எழுந்து அறிவையும் கெடுக்குற.. உன் தேவைக்கு தான் பெண்கள் எனக்கு இல்லை சரியா?
அறிவு அதிகம்.. தாள முடியாத சக்தி .. அவனால் பெண் இல்லாமல் இருக்க முடியவில்லை .. அவன் கழிவுகளை கொட்டவாவது பெண் கண்டிப்பா பெண் வேண்டும் இன்று அவன் குழு கவனம் முழுவதும் வாத்து கிட்டேயே இருக்கும் என்பதாலேயே இன்றைய பகல் பொழுதை தன் அரிப்புக்கு வைத்துக்கொண்டான் ரகு
இவன் மதம் பிடிக்காமல் சோராமல் இருக்க இந்த காதல் கழிவு நிறய விதத்தில் உதவுவது உண்மை
கல்யாணம் மீதில் நம்பிக்கை இல்லை.. கண்ணெதிரே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நம்பாது அவர்களின் சுய நலத்துக்காய் யார் பெருசு? சண்டையிட்டு தகப்பன் சொன்ன சுடு சொல் தாங்காது ..தன்னை நம்பி பிறந்த இரு குழந்தைகளின் பிற்கால நலன்களை கணக்கில் எடுக்காது புருஷன் தன்னை பத்தினியா ஏத்துக்கோணும் என்ற ஒரே நோக்கில் தன்னையே மண்ணெய் ஊற்றி ஏரித்துக் கொண்ட சுயநல தாய் க்கு பிறந்த துரதிஷ்ட குழந்தைகள் ரகுவும் விஜியும்..
அந்த கொடூர நிகழ்வில் காப்பாற்ற போன தகப்பனும் இறந்தது இன்னும் அவலம்..
உறவினர்கள் சிறிது நாள் கவனித்து பின் அனாதை இல்லத்தில் சேர்க்க.. வாழ்க்கையின் இருள் பக்கங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டியதிலும் துரதிர்ஷ்டசாலி குழந்தை ஆனான் ரகு..
வளர வளர வைராக்கியமும் வளர.. இன்றைய அசுர வளர்ச்சி.. தன் கீழ் வேலை செய்பவர்களை அடக்கி ஆளும் ஆளுமை எல்லாம் கொண்டான்..
அவனின் ஒரே பிடிமானம் விஜி மட்டுமே.. பெற்றோர் ஒருவரை மட்டுமே ஆதாரமாய் நம்பி பிறக்கும் குழந்தைகளை இப்படி பொறுப்பில்லாது விட்டு சென்ற அந்த ஆத்மாக்களை மன்னித்தும் மறந்தும் விட்டான் ரகு..
எவ்விடம் இரைக்காய் வானத்தில் பறந்து திரிந்தாலும் கழுகின் கண் தன் கூட்டுக்குள்
ரகு கர்ம தனயன்.. அவன் கடாட்சம் முழுதும் தன் விஜி மேல் மட்டுமே..
அவளின் இன்னொசென்ஸ் கலையாது வச்சுப்பான்.. உலகம் அறிஞ்சி என்ன செய்யப்போகிறாள்? விரக்தியால் வந்த ஞானோதயம்..
அதனாலே சர்வமும் அறிந்தே அவள் நில் என்றால் நிற்பான் நட என்றால் நடப்பான்..
அவள் அருகில் அவளுக்குண்டான பாசமும் அன்பும் மட்டுமே அந்த அண்ணனுக்கு இருக்கும்.
நானாவது தாய் தகப்பன் முகம் பார்த்து பழகி இருக்கேன் தொட்டில் குழந்தை இவளுக்கு என்ன தெரியும்? என்ற இரக்கமே பாசத்தின் உச்சமானது..
அதைவச்சி அந்த கோலி குண்டு கண்ணுக்காரி பண்ணும் அட்ராசிட்டீஸ் அவன் குழுவுக்கு ஆகல..
அரசனின் நாய்க்கு கூட மரியாதை கொடுக்கும் நிலையில் மாட்டி முழித்தனர்..
முதல் பாதிப்பாளர் செல்வா தான்
அவளையும் விட ஐந்து வயது மூத்தவன் .. கொஞ்சம் கூட ஆணாய் மதிக்கமாட்டாள்.. வா போ அவனே இவனே தான்
அவள் கேட்டது கிட்டணும் அதுக்கு செல்வா தான் வேணும்..
சும்மா சும்மா நொய் நொய் ன்னு சவலை பிள்ளையாய் அவன் கைகளில் தொத்தி கிடப்பாள்.. காரணம் ரகுவும் அவளுமான உலகில் மூன்றாவதாய் இணைந்தவன் செல்வா..
ரகுவின் அறிவின் வீச்சு கண்டு மெர்சலாகி கூடவே வந்துடவா என்று சேர்ந்து கொண்ட இவர்களை போலவே ஒரு அனாதை செல்வா..
அம்மை இறக்க தகப்பன் மறுமாசமே சித்தியை கொண்டு வர.. அவ்வீடு அந்நியமாய் போனது 5 வயது செல்வா பாரமானான்..
அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏழை குடும்பம்
அப்பனும் இல்லை என்று பொய் சொல்லப்பட்டு ஆசிரமத்தில் தள்ள.. பாச புரி அவிழ்ந்தே போனது செல்வாவுக்கு.. அம்மாவின் முகம் நினைவில் வரும் அளவுக்கு அப்பா முகம் வரல.. மறந்துவிட்டது..
இந்திய அரசியல் சட்டப்படி குடும்பம் என்றால் குறைந்த பட்சம் இரண்டு உறுப்பினர்கள் வேண்டும்
ஒருத்தருக்காய் ரேஷன் கார்ட் கிடையாது வேறு குடும்பத்தோடு அவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும்..
அந்த கார்ட் வாங்க கூட தகுதி இல்லா குடிமகனாய் நம் செல்வா..
ரகுவோடு சேர்ந்த பிறகே படிப்பு அவசியம் தெரிய.. அதுவரை இருந்த அறியாமைகள் ஓடின.. பின் மூவருக்குக்குமே ஒருத்தர் துணை ஒருத்தர் ஆக.. சின்ன பிள்ளையிலிருந்தே இந்த விஜி எனும் பிளாக் பியூட்டி செல்வாவை பொறுத்த வரை நாட்டி தான்..
முதலில் ஈர்ப்பு வரல என்றாலும் அவள் பருவம் எய்திய நாளில் இவனை படுத்திய பாட்டில் அவன் மனதில் காதலின் மொக்கு துளிர்விட்டது..
ஆசிரமம் தங்கை வளர பாதுகாப்பு இல்லை உணர்ந்ததும் ரகு படிப்பை தொடர்வதை விட்டு கண்ட வேலைகள் செய்ய ஆரம்பித்து போலி சான்றிதழ் காட்டி தங்கையை தனியே வீடு எடுத்து வைக்க.. இதே வழியில் உடன் சேர்ந்தான் செல்வா..
அன்று இவர்கள் உழைப்பை கண்டால் வானம் கூட கண்ணீர் விட்டு அழும் அந்த மாதிரி ஒரு எச்சில் பொறுக்கி வாழ்க்கை நடத்தும் தரம்..
அந்த இழி நிலையிலும் விஜி எனும் தேவதைக்கு ஒற்றை அறை தந்து வராண்டாவில் தன்னோடு செல்வாவையும் வச்சது நம்ம ரகுவின் கிரிமினல் மைண்ட் அப்போவே..
நினைத்தது போலவே தனியே வந்த ஆறுமாத்தில் விஜி பெரிய பிள்ளை ஆகி விட பகலில் ஜூரத்தால் உடம்பு சரியில்லாது வேலைக்கு போவாது இருந்த செல்வா மாட்ட..
வயிறு வலிக்குது செல்லு வலிக்குது செல்லு பயந்து அழுது அவன் மடியில் படுத்த விஜி தான் அவனின் காதலி..
விவரம் தெரியாது டாக்டர் கிட்டே போகலாம் .. செல்லு அழைக்க..
பொருள் பேரெழுதி வாங்கிட்டு வா என்று இரக்கமே இல்லாது மெடிக்கல் சாப்புக்கு அனுப்ப.. அது பேரை படிச்சு பார்த்துட்டு வெட்கப்பட்டான் செல்வா.. ஐய.. இதெப்படி நான்?
😊😊😊
Super super super💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
So cute🥰🥰🥰🥰🥰