ATM Tamil Romantic Novels

4 ஆசை வெட்கமறியாது

AV 4

அழுகிறாளே!! இந்த வெட்கத்தை விட அவசரம் அவசியம் என்று பல்லை கடித்து கடைக்காரர் முகம் பாராது சீட்டு கொடுத்து வாங்கி கொடுத்தால்..

அடுத்து சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம்..

இதை எப்படி யூஸ் பண்ணுறது செல்லு ன்னு.. அவனிடமே கேட்க நொந்து போய்ட்டான்.. செல்வா..

வீட்டில் பெண்ணின் தேவை புரிய..

இதுவரை பழகி வைக்காத பக்கத்து வீட்டு அக்காக்களை தேடி போய் விஜி நிலைமை சொல்லி உதவி கேட்க.. அந்த சேரிப்பகுதியே திரண்டுவிட்டது அவளை பார்த்துக்க..

பெத்தவங்க இல்லாத பிள்ளை என்று பரிதாபப்பட்டு.. குளிப்பாட்டி .. இருந்ததிலேயே புது துணி கொடுப்பா செல்வாவிடம் கேட்டப்ப.. பழசு வேணாம்.. இருங்க இதோ வரேன்.. என்று தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் தேடி எடுத்து மார்க்கெட்டில் இருந்த சின்ன கட்பீஸ் கடையில்.. ஜரி வச்ச சாதா சிந்தடிக் சில்க் சேலை வானம் கலரில் எடுத்துக்கொண்டு பொம்மைக்கு போட்டிருந்த ரெடி மெட் பிளவுஸ் காட்டி வாங்கி வர.. அதற்குள் அங்கு வந்த ரகு முதல் முறை பரிதவித்து நின்றான்.. ஒன்னும் அவனுக்கு ஓடல..

“தங்கை” “தங்கை” என்று பொத்தி வளர்த்தாலும் அவனுக்கு பெண்ணை பற்றி தெரில.. சுற்றி நின்று அரவணைத்த மக்கள் அன்பை பார்த்து கண்ணீர் மல்க ஓரமாய் நின்று விட்டான்.. தான் மட்டுமே துயர நிலையில் இருக்கோம் எண்ணம் மாறியது.. அந்த சேரிப்பகுதியில் குடும்பமா இருந்தாலும் இந்த அடி தட்டு மக்களின் வாழ்க்கை .. கூவம் நதிக்கரையில் ஆரம்பித்து அங்கேயே முடிகிறது எந்த மாற்றமும் இல்லாது.. அங்கே சுற்றி திரியும் பன்றிகளும் மனிதர்களும் ஒரே இனம் தான்..

செல்வாவின் எழுச்சியான பல எண்ணங்களுக்கு அன்று தோன்றிய எண்ணங்களே விதையாகவும் மாறியது..

அரசே எல்லாம் செய்யும் காப்பாற்றும் கவலைபடும் சலுக்கைகள் கொடுத்து முன்னிலை படுத்தும் என்று எதிர்பார்க்கக்கூடாது..

நான் ஏன் இந்த ஏழ்மை நிலையில் இருக்கிறேன்.. ஒவ்வொருவரும் சுய ஆய்வு பண்ணனும் .. வறுமை சேற்றிலிருந்து எழுந்து வெளியில் வரணும்..

பன்றிகள் போல இது “என் சந்தனமே” என்று அதிலேயே காய காய உருண்டு கொண்டிருக்கக்கூடாது..

முதலில் நான் சரியானால் சமூகம் சரி ஆகும்.. தன்னைத்தானே செதுக்கும் சிற்பியானான் ரகு..

“தேங்க்ஸ் செல்வா”

சட்டுனு அந்நியம் ஆன உணர்வு செல்வாவுக்கு ரகுவின் சடங்கான வார்த்தை கேட்டு.. அதோடு ரகுவையும் விஜியையும் தன்னை விட்டு ஒரு அடி தள்ளி வச்சே பழக கற்றுக்கொண்டான்..

அவர்களாகவே இவன் மேலே புரண்டு உருண்டு அன்பு செய்தால் ஏற்கும் பக்குவம் உண்டு .. கொடுக்கும் விதம் சின்ன புன்னகை வெட்கத்துடன்..

இதன் பெயர் மெச்சூரிட்டி என்றால் அது அவனுக்கு தெரியாது.. ஓட்டாதவரிடம் எட்ட நிற்கும் குணம் இயல்பாய் வந்தது..

இரண்டு ஆண்களுக்கு ஞானோதயம் கிடைத்த அச்சுப நாளில்

செல்வா வாங்கி தந்த சேலையில் அப்படி ஒரு மரப்பாச்சி தேவதை அம்சத்தில் மிளிர்ந்தாள் விஜி.. கன்னங்கள் உப்பி மினுங்கின.. கருப்பு நிறமும் கூட லேசாக வெளுத்தாற் போல பளீர் தோற்றம்..

அன்றிலிருந்து செல்வாவுக்கு விஜியை பார்க்கும் பார்வை மாறித்தான் போனது.. தன் எண்ணத்தை வார்த்தையால்
சொல்லாததால் விஜிக்கு தெரில.. ஒரு மூன்று இன்ச் தாண்டி அவன் கண்ணை பார்த்திருந்தால் ஆயிரமாயிரம் காதல் தூதுமடல் அனுப்பியதை உணர்ந்திருப்பாள்.. காதல் பற்றிய படிப்பில் அவள் மக்கு மடச்சி எத்தனை கண் கணைகள் படையெடுத்து சொல்லியும் விஜியிடம் முனை மழுங்கி தோல்வியில் திரும்பிவந்து செல்வாவின் இதயத்தில் குத்தி நின்றது தான் அவன் முதல் காதலின் பரிதாபம் ..

விஜியுடன் இனி செல்வா இருப்பது ஆகாது ஆனால் அவனுக்கு ரெண்டு பேரும் வேணும்.. மூளை எனும் அலாவுதீன் மந்திர விளக்கை தேய்த்த ரகு..

முதன் முதல் பெரிய வழிப்பறி செய்தது அப்போதான்.. ஒரு மத்திய தர அடகு நகை வியாபாரியை 10 நாட்கள் பொறுமையா கண்காணித்து என்று அவன் கையில் பணம் இருக்கும் பேங்க் ல எப்போ டெபாசிட் பண்ணுவான் என்று கணக்கு போட்டு.. உறைவிட வசதி கொண்ட பள்ளியில் சேர்க்க எவ்ளோ பணம் வேணும் என்று கணக்கு போட்டு.. பாங்க் வாசலிலேயே சின்ன பையனை விட்டு கல்லெறிய விட்டு கவனம் திருப்பி 2 லட்ச ரூபாய் எடுத்துட்டு பறந்துட்டான்.. நேரா விசாரித்து வைத்திருந்த .. செங்கல்பட்டு தாண்டி இருந்த அந்த பெண்கள் பள்ளியில் போய் தான் நின்றான்..

முன்பே ஆசிரம தலைமையின் சிபாரிசும் இருந்ததால் ரகுவை முறைச்சுட்டே தான் சேர்த்தார்கள்..

முதலில் 20000 கட்டணும் இருக்கா?
அவன் அழுக்கு கேவலமான உடையை பார்த்து கொண்டே..

10000 எடுத்து வச்சு.. இத வச்சுக்கோங்க.. என் சம்பளம் வர வர மாச மாசம் வந்து கட்டுறோம் சார் ப்ளீஸ்.. வேலைக்கு போன பின் கட்டிருறேன் சார் காலில் விழுந்து அழுது புரண்டு எதிராளியின் இரக்கம் வருவித்து சேர்த்தே விட்டான் ரகு..

அவன் உள்ளாடையில் மிச்ச பணத்தை மறைத்து மறைத்து வைத்திருந்தான்

கழுதை காலை பிடிச்சாச்சு காரியமும் ஆச்சு..

செல்வா வேலை செய்த ஜூஸ் கடைக்கு போன் போட்டு

உடனே வீட்டுக்கு போ அப்டியப்டியே எல்லாத்தையும் விட்ரு.. விஜியை கூப்பிட்டு செங்கல்பட்டு வந்துரு .. அடையாளங்கள் அழித்து விடு

அனைத்தும் கட்டளை தான் முதன் முதல் செல்வாக்கு கொடுத்த வேலை

ஏன்? எதுக்கு? செல்வாவும் கேள்வி கேட்கவில்லை

சரி ரகு .. போன் வச்சுட்டான்..

இதோ வரேன் சார்.. ஓனரிடம் சொல்லிட்டு வெளியேறியவன் தான்.. விஜிக்கு ட்ரெயின் ல போக ஆசை உண்டு.. அவளின் உளறல்களில் இதுவும் ஒன்னு..

உடம்பு நோகாது கைப்பிள்ளையா பத்திரமா அவள் அண்ணனிடம் சேர்பித்துவிட்டான்..

அவளுக்கு மட்டும் பேன்சி பொருள்கள்.. புது உடைகள் அவள் கேட்ட அளவையும் விட அதிகமா.. புதுபுத்தகங்கள்.. வயிறு நிறைய சுவையான உணவு என்று வாங்கி ஸ்கூல் வாசலில் விடும் பொழுது

அந்த பைகள் மொத்தமும் ரகுவிடம் கொடுத்துவிட்டு..

“இதெல்லாம் வேணாம்ண்ணே நீ மட்டும் போதும்ண்ணே..” இருகரம் கொண்டு முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுத அச்சிறுபெண்ணின் பாசம் பயம் பாதுகாப்பின்மை தனிமை.. கொடுமை

“டேய் விஜிமா அழாதே ப்ளீஸ் நான் இருக்கேன் உனக்கு ..” காதலன் கண்ணும் கலங்கி கைகள் இரண்டும் அவளை அணைத்து ஆறுதல் தர .. தானாய் முன் நீள..

அவனுக்கு முன் ரகு..

அம்மு .. கொஞ்ச நாள் பொறு சரியா.. கல்லு வீடு ஒன்னு வாடகைக்கு எடுத்துட்டு உன்னை கூட்டிட்டு போறேன்.. இங்கு உன்னை படிக்க வைக்கலாம் சேர்க்கல.. நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கினா மட்டும் போதும்.. அண்ணன் வந்து கூட்டிட்டு போற வரை பாதுகாப்புக்கு இங்கு விடுறேன்..

ஓ? சின்ன முகத்தில் ஈர பெரிய கண்கள் மலராய் விரிய.. அழுகை விட்டு அவன் வார்த்தைகளின் வீச்சில் மயங்கி விஜி நிற்க..

ஆமாம் .. இங்கு உன் வேலை சும்மா இருக்கணும் அவ்ளோதான்.. படிக்க பிடிச்சா படி.. பிடிக்கலேன்னா வேணாம்.. நீ நீயா இரு.. அண்ணன் வாரமானா ஞாயிற்றுகிழமை வந்துருவேன் பிடிககலன்னா சொல்லிரு கூட்டிட்டு போயிடுவேன்

ஆமாவா? ண்ணா ஒருபக்கம் தலை சாய்த்து அன்னபறவையா தங்கை நம்பியும் நம்பாமலும் கேட்க..

செல்வாவுக்கு அந்த அன்னத்தை அணைக்க ஆசை கூடியது

தன் தங்கையெனும் மைனாவின் உச்சி தடவி ..

அண்ணன் சொன்னா செய்வேன் நம்பனும் அம்மு

அப்போ சரி.. கிளம்புண்ணா ஞாயிறு வந்துரு.. செல்லு நீயும் வரணும்ன்ன..

கீழே வைத்த பாகை தூக்கிக்கொண்டு மருண்ட மான் விழிகள் உருட்டி திரும்பி திரும்பி பார்த்தவண்ணம் போகும் விஜியை விழி தட்டாத பார்த்த ரகுவின் கண்களில் தண்ணீர் சொட்டு சொட்டாக வழிந்தது..

அவள் தூரத்துக்கு அண்ணனின் கண்ணீர் தெரியாது ஆனால் துடைக்க முயன்றால் தெரிந்துகொள்வாள் நிச்சயமா..
அதனால் வளர்பருவ ஆண்மகன் ரகு ஈரம் துடைக்காது அடவி சூழ் பாறை துளை வழிவரும் நீர்போல கண்ணீரை வழிய விட்டான்..

நண்பனின் பாசம் இதயத்தை துளைக்க இத்தனை நாள் கூடவே இருந்த விஜியின் பிரிவும் சேர.. ஆறுதல் சொல்ல தெரியாது ரகுவின் தோளின் மீது கை வைத்து அழுந்த..

பைத்தியக்காரன் போல அட்டெண்டர் ஆயாவோடு தங்கை ஒரு கட்டிடத்துக்குள் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்த ரகு.. எழுந்து சாலையை கடந்து.. அந்த பள்ளியின் பெரிய கேட்டின் எதிரில் இருந்த கூரை போட்ட பஸ் ஸ்டாப் யின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கொண்டான்.. பிற்பகல் மூன்று மணி வெயில் மேலே அடிப்பது அவனுக்கு உறைக்கவே இல்லை..

இரு பாசஉள்ளங்களின் உணர்வு பூர்வமான பிரிவில் பார்வையாளரா செல்வா..

வா போகலாம் ரகு

போகலாம் செல்வா.. விஜிக்கு ஒருவேளை இந்த ஸ்கூல் ஹாஸ்டல் பிடிக்கலேன்னா சொல்ல வந்து தேடினா இருக்கணும்ல்ல .. கொஞ்ச நேரம் இருப்போம்..

சரி .. பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி கொடுத்து குடிக்க வைக்க .. போன அரைமணி நேரத்தில் கேட்டில்தேடி ஓடித்தான் வந்தாள் அவர்களின் கருப்பு ராட்சசி விஜி..

தங்கையின் வரிவடிவம் கண்ணில் தெரியும் போதே ரகுவின் அவள் கண்களில் பட வசதியா கேட்டருகே பதைத்து ஓடி போய் நிற்க..

பின் பண்ணப்பட்ட ஷால் பொருந்தா தொள தொள பச்சை சுரிதார் கழுத்தில் வெள்ளை பாசி மணி.. குச்சி குட்டி சத்தில்லா உடல் .. ரெட்டை சடையில் ஒரு ரிப்பன் பூ அவிழ்ந்த தலை.. பச்சை ஒட்டு பொட்டு.. வாய் நிறைய பல்லு மட்டுமே காட்டி.. அறியாமையின் அழகு தேவதையா அப்பாவி விஜி..

அண்ணேஅண்ணே .. தூரத்திலிருந்தே கூவிய படி வந்தவள்..

ரகு அருகில் மூச்சு வாங்கி திக்கி ..

இந்த ஹாஸ்டல் ரொம்ப நல்லா இருக்குண்ணே எனக்கு பிடிச்சிருக்குண்ணே பிள்ளைக நல்லா பேசுதுகண்ணே.. நான் சந்தோசமா இருந்துப்பேன் ண்ணே
நீ பத்திரமா போண்ணே.. ஞாயிறு வா .. சரியா?

சரி அம்மு.. முகத்தில் வெளிச்சம் வர ராகு கொக்காய் காத்திருந்ததுக்கு பரிசு மகிழ்ச்சி நிம்மதி..

காதில் சில விஷயங்களை எப்போவும் சொல்லி கொடுப்பதை சொல்ல..

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வேண்ணே .. தங்கை மழலை சிரிப்பு.. கண் நிறய வாங்கினான் ரகு..

என் தங்கபிள்ள .. போய்ட்டு வரவா?

சரிண்ணே நல்லா சாப்பிடு ண்ணே.. எனக்கும் ஒரு உருண்டை சேர்த்து நானும் உன் உருண்டை செல்லூது சாப்பிடுவேன் ..

செல்லு என்றதும் தன் அடிமை நண்பனை தேடி பஸ்ஸ்டாண்டில் கண்டு பிடிச்சு..

செல்லு நீயும் வரணும் ஞாய்த்துகிழமை.. ஊருக்கே கேட்க கத்தி சொல்ல..

சரி சரி அவன் அங்கிருந்தே கை காட்டினான் செல்வா.. விஜி எனும் தேவதை வார்த்தைகளால் அவனுக்கான உறவை உயிர்ப்பித்தாள்..

இதோ இன்று இப்பொழுது…

சீருடைபணியாளர் வேலைகளின் மேலே ரகுவுக்கு காதல் உண்டு.. அவனுக்கு வாய்ப்பே இல்லை.. அதனால் அதை சுமார் படிப்பு விஜியிடம் தள்ளி பூரா கோல்மால் பண்ணி லட்சக்கணக்கில் செலவு செய்து டாக்டரா மூன்றாம் வருடம் அழகு பார்க்கிறான்..

செல்வாவின் இம்சியோ ஒரே போல தான் இருந்தாள்.. அதே பேச்சு பார்வை எதுவும் மாறல..

ரகுவின் அன்பு செல்வாவை பொறுத்த வரை சோதனைக்குட்பட்டது..

ஆனால் விஜியின் அன்போ? கோபமோ? சிரிப்போ? எரிச்சலோ? அனைத்தும் நேர்மையானது.. எட்ட நின்று அதை நேசித்தான் ரசித்தான் செல்வா.. இப்போதும் அவன் மூன்றாம் ஆள்தான்

இந்த கதையின் கதாநாயகன் ரகுவா? செல்வாவா? என்பது படிப்போர் மனங்களே சொல்லட்டும்

6 thoughts on “4 ஆசை வெட்கமறியாது”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top