AV 5
“எருமை என்னை போலி டாக்டர் சொல்றியா? சொல்லு சொல்லு..”
செல்வாவின் பின்னாடியே ஓடிவந்த விஜி கத்தி ஸீன் போட..
“எப்ப சொன்னேன்?
வார்ட்ரோப்பில் இருந்து துணிகளை எடுத்தவாறே ஆண் தெனாவெட்டு பதில் செல்வா ..
“நல்ல டாக்டர் ன்னா என்னா?”
“நல்ல டாக்டர் விஜிமா”
வெறுபேத்தாத பன்னி.. விஜி முதுகு காட்டி நின்றவனின் இடுப்பு பகுதியை ஆத்திரத்தில் கிள்ள..
அந்த உயர பிரமாண்ட சிலைக்கு கிச்சு கிச்சு மூட்டிய உணர்வு வர.. நெளிந்து எடுத்து அது சிரித்தது.
உன் வீக்னெஸ் இதா? வா .. வா இன்னும் இன்னும் அவள் கிள்ள தாளாது .. ஒரு செகண்ட் போதும் அவளை நண்டு பிடி பிடிச்சி கவிழ்த்து அடக்கி இந்த இம்சையை தடுக்க.. ஆனால் தொட்டு தடுக்க முடியாது கட்டிலில் போய் விழுந்து தப்பிக்க முயன்றான். இவள் அவன் பக்கவாட்டில் விழுந்து வைத்து கம்புகூட்டை கிள்ள பெரும் பிரயத்தனம் செய்ய.. விஜியின் இடுப்பையும் தாண்டிய ஜடை ஒருபக்கம் அவன் மேல் விழ.. அங்கே குட்டி கைகலப்பு போன்ற கூச்சல் சிரிப்பு சலசலப்பு.. இதில் விஜியின் தாவணி லேசா விலகி எடுத்து அவளின் பெண்மையின் ரெட்டை செழுமைகளின் விளிம்புகளை எதிர்பார்வையில் இருந்த செல்வாவின் கண்களுக்கு காட்ட.. சட்டென்று வேறு பக்கம் பார்வையை கண்ணியமாக நகர்த்திக்கொண்டான். விரும்பின நாளிலிருந்து முகம் தாண்டி கீழே இறங்கியதில்லை..
அப்பப்பா!! பருவம் அவள் உடம்பில் அபரிதமாகவே செழிப்பு தந்திருந்தது.. இவனின் ஆண் உணர்வுகளை தூண்டி கிக் அடிச்சாலும் வேலியிட்டு நிறுத்தி விட்டான்.. நொடியில் ரேகை ரேகையா பிரிந்து சுகமின்னல்கள் உடலின் மொத்த ரத்த நாளங்களிலும் பரவியது நிஜம்.
அவன் விருப்பம் விஜி எனும் உன்னத பெண்மையை மட்டுமே.. அவளின் உடல் நிறம் அழகு செழுமைலாம் எதிர்பார்க்கல.. அது தனி ட்ராக்
இருவரின் அந்த குட்டி போரை நிறுத்தும் வண்ணம்.. செல்வாவின் போன் அடிக்க.. ரகு காலிங் என்றது அது..
மைக் ஏதாச்சும் சொல்லி இருப்பான் ஓட்டை வாய்.. ம்ம்
ரகு கூப்பிடுறான் விடு விஜி..
இதான் சமயமென அவன் ரகசிய உணர்வுகளை சீண்டிய விளையாட்டில் இருந்து விடுபட்டு
தன் மீது படர்ந்திருந்த அவளின் கைகளை பிரித்து ..
“சாரி ரகு இனி இப்படி நடக்காது .. வாத்து சரியா ஸ்பிரே ஸ்வாசிக்காததால் இடையில் மயக்கம் தெளிஞ்சிடுச்சு…”
“அதை விடு.. உனக்கு காயம் எப்படி இருக்கு?”
“சின்ன கீறல் தான்.. ஒன்னுமில்ல”
“இரு.. நான் வந்து ஹாஸ்பிட்டல்
கூட்டிட்டு போறேன்”
“இதோ நானே கிளம்பிட்டுத்தான் இருக்கேன்.. அவ்ளோ ஒன்னும் பெரிய காயமில்ல விடு ரகு ..நான் பார்த்துகிறேன் ..”
அவர்கள் இடையே அடுத்து பேச ஏதும் இல்லை.. பெண்கள் என்றால் ஏதாவது புள்ளி கிடைத்தால் பேசியே கோலம் போட்டு கலர்கூட கொடுத்துவிடுவார்கள்.. பாவம் ஆண்கள் உலகங்கள் வார்த்தை வறுமையின் சப்தத்தால் சுழல்வதால் முடிந்துவிட்டது..
பாத்ரூம் பக்கம் போனவனை..
“தண்ணீர் மேல ஊத்தின அவ்ளோதான் செல்லு.. ரெண்டுநாள் குளிக்காதே..” விஜி முறைக்க..
“ஏய் அதெல்லாம் ஒன்னும் ஆவாது.. சாப்பிடாதே கூட சொல்லு இருந்துப்பேன்.. குளிக்காதே சொல்லாதே விஜி..”
“இன்னைக்கு பச்ச புண்ணு வலி தெரியாது நாளை பிச்சி எடுக்கும் இப்போ தண்ணி பட்டா நீர்
கோர்த்துடும் ஆறுவது லேட் ஆகும் பார்த்துக்க..”
திரும்ப அவன் இவள் சொல்ல மதியாது போக..
“எருமை சொல்லிட்டே இருக்கே போற..”
“ஜஸ்ட் பிரஷ் அப் பண்ணிட்டு வரேன் உனக்காக ஒரு வாரம் குளிக்கமாட்டேன் சரியா?”
“அ.. துது..” குழந்தை போல சிரித்தவள்..
முன்பு படிச்சுட்டு இருந்த திவானில் மகாராணியா சாய்ந்து தன் வேலையை தொடர்ந்தாள்..
“செல்லு.. இந்த லேடீஸ் நாவல் லாம் நீ படிக்கிறியா?”
“ஆமாம்..”
“ஐய ஒன்னு கூட நல்லால்ல.. ப்ளேடா இருக்கு..”
“ஓ.. அப்படியா?.. நீயே நல்ல ஆசிரியர் பேர் சொல்லு நான் அது வாங்கி படிக்கிறேன்..”
“ம்ம் என் பிரண்ட்ஸ் கிட்டே கேட்டு சொல்றேன்..”
அவனின் புக் செல்ப்பை ஆராய்ந்தவள்..
“என்ன ஓஷோ புக்ஸ் யா வச்சிருக்க.. கிறுக்கா போவப்போற.. துர இங்கிலீஷ்லாம்
படிக்குது.. இதெல்லாம் ஓவர்” என்று நக்கல் பண்ண..
வேறு உடை மாற்றி முகம் கழுவி ரெஸ்ட் ரூமில் இருந்து வெளி வந்த செல்வாவின் இதழில் அதே ஓவிய வெட்கப்புன்னகை விஜிக்கு பதிலாக கிடைக்க..
“தமிழ் நாவல்லாம் படிக்காதே .. எல்லா புக்கிலேயும் கல்யாணம் பண்ணியும் தொடாத கணவன்மார் கதையையே காவியமா வளைச்சு வடிச்சு எழுதி இருக்காங்க.. நீயும் அப்படி இருந்தியென்னா உன் பொண்டாட்டி போடா ன்னு ரெண்டே நாளில் ஓடிரும்..” என்று சீரீசா அட்வைஸ் பண்ண..
கிளுங்கி சிரித்தான் செல்வா.. அவளின் வார்த்தைகள் வழி கற்பனைகளுக்குள் சென்று..
நீ என் மணவாட்டியாகு கண்மணி.. ஒரு நொடியும் வீண் பண்ண மாட்டேன்.. அதே ரகசிய நினைவுகள் உணர்வுகளை கிளறி உரு ஏற்றி விரைக்க வைத்தது நரம்புகளை… இன்று ரொம்ப சோதிக்கிறியே அம்மு.. மனசில் அவள் இட்லி கன்னம் வலிக்காது கிள்ளி கொஞ்சினான் அந்த பிரௌனி ஹல்க்
திறந்திருந்த கதவருகே நின்று லட்சுமிம்மா அழைப்பு..
விஜிமா.. வாடா உனக்கு பிடிச்ச நெய் சோறு பெப்பர் சிக்கன் இருக்கு.. நீயும் வாப்பா செல்வா..
இளம் சிட்டுகளின் உரையாடல்கள் அதோடு முற்று பெற்றது..
உன் பொருள் எடுத்தா எடுத்த இடத்தில் வை விஜிமா..
நான் அப்படித்தான் செய்யுறேன்ம்மா..
இங்கே பாரு உன் மெடிகிட் எங்கே கிடக்குன்னு.. உன் சுடி சால் பிரிஜ் மேல .. உன் கிளிப் சமையல் ரூம் ல விஜி.. ரகு உனக்கு சமையல் கத்து கொடுக்க சொல்லிட்டான் .. வா இருக்கும் 10நாள் என் கூட இரு மெல்ல மெல்ல ..
அம்மா சொல்வதையெல்லாம் காதே கேட்காதது போன்று.. அமெரிக்கையாய் உண்ணும் விஜியை சாதாவா பார்வையிட்ட செல்வா.. படிப்பு என்னெல்லாம் மாற்றம் தருது என்று அதிசயப்பட்டான்.. நடத்தையில் செயலில் சொல்லில் நாகரீகத்தில் விஜியின் பாவனைகள் ஹை பை யா இருந்தது தான் காரணம்..
பச்சை லூஸ் சுடிதார் பெண் அதுக்குள் தொலைந்தே போனாள் இந்த மாற்றத்தால்..
அன்றைய காட்சிகளின் பார்வையாளனுக்கு புத்தி அங்கு போனது..
செங்கல்பட்டில் விஜியை விட்டு நண்பர்கள் இருவரும் மும்பை ரெயில் ஏறியது தான் இன்றைய வளர்ச்சிகளின் அடிப்படை..
சென்னை நாடோடி வாழ்க்கை அங்கும் எதையும் தாங்கி வாழும் ஆற்றல் தர.. அப்போ அறிமுகம் ஆனது மைக்கேல் அவனும் சேரி புரத்தை சேர்ந்தவன்தான் அவனிடம் இவர்கள் அடைக்கலம் புகுந்தனர்.
கையிலிருந்த மிச்ச பணம் கொண்டு என்னென்னவோ சோதனை முயற்சி செய்து சம்பாரிக்கும் வழியை கண்டுப்பிடித்துவிட்டான் ரகு..
அவனின் ட்ரையல் எரர் டெஸ்ட்க்கெல்லாம் அலைவது செல்வா எனும் அடிமை.. எது எப்படியோ சனி ஞாயிறு விஜிக்கு தான் ரகு ஒதுக்குவான்.. அதும் சில மாதங்கள்தான்.. விஜி, அந்த உறைவிட பள்ளியிலேயே செட்டில் ஆகி விட போன் கால்கள் இவர்களின் உறவை உயிர்ப்பாக்கின.. ஒருநாளும் செல்வாவை விஜி விஷயங்களில் முன்னிறுத்தவில்லை ரகு என்பது கவனிக்கத்தக்கது..
மும்பையில் சமையலுக்கு என்று சேர்ந்தவர் தாம் லட்சுமி .. பாதுகாப்பு அன்பு மரியாதை நல்ல சம்பளம் என்று அனைத்தும் இந்த நண்பர்களிடம் கிடைத்ததால் விசுவாசி ஆகிட்டார்..
விஜி இங்கு வந்த அவளின் லீவு நாட்கள் ஆண்களின் வசந்த காலமாகின.. ஒவ்வொருவிதத்தில்..
ரகு கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை எங்கு புதுசா கோர்ஸ் இருந்தாலும் கற்றுக்கொண்டான்.. தேடி தேடி படிச்சான்.. லாப்டாப்பும் கையுமா அதிலேயே முழு கவனம் .. சூக்குமமா யோசிக்க அவன் கிரிமினல் மூளைக்கு ஹேக்கிங் சூட் ஆக வருமானம் தர ஆரம்பிச்சது..
அல்லு சில்லறை பிராடு வேலைகள் விட்டு ஒரே தொழிலாய்
கடத்தல் பழகியதும் அப்போதான்..
உபரி தகவல் .. ரகு கையில் அபரிதமாக பணம் வரத்துவங்கியதும் முத வேலை வட்டியோடு 2 லட்சத்தை ஒருகட்டாய் கட்டி நன்றி என்ற வார்த்தையோடு..
சென்னை சென்று அடகுகடை வியாபாரி கடையில் ஏறிந்துவிட்டு பறந்துவிட்டான்..
அந்த ஆளின் மீது இரக்கம் கிடையாது.. தங்கையை சீர் பண்ண உதவிய நன்றி அவ்ளோதான்..
மும்பை இவர்களின் தொழிலுக்கு ஒரு நேரத்தில் நெருக்கடி தர.. பெங்களூருவின் கடைகோடியில் வீடு ரகுவின் பிளான் படி கட்டப்பட்டு ஊர் மாறிக்கொண்டனர்.. அங்கு இந்த நால்வரோடு ஐவர் ஆனார் பாவா..
யாரும் இல்லாது கல்யாணம்கூட பண்ணாது ட்ரைவரா வாழ்நாளை எந்த குறிக்கோளும் இல்லாது சுற்றிக்கொண்டிருந்த பாவாவுக்கும் லட்சுமிக்கும் அந்தரங்கமாய் செட் ஆக அவரின் சேருமிடம் ரகுவின் அரண்மையானது..
இதே நேரத்தில் சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் விஜியும் முதல் வருட படிப்புக்கு சேர்ந்தாள்.. நிரந்தர இருப்பிடமாய் இவ்வூர் ஆனது..
ரகு கார் போர்டிகோவை அடைய..
வீட்டின் உறுப்பினர்கள் உடம்பில் விரைப்பு வந்தது..
ப்ரெஷ் ஆகி சாப்பிட அமர்ந்தவன்.. கண்களால் விஜியை துழாவ..
புக் படிச்சுட்டு இருக்கா.. செல்வா ரூமில்..
தாடை இறுகியது அவனுக்கு..
செல்வா எங்கே?
டாக்டர் கிட்டே போறேன் என்று வெளியில் போனான் இன்னும் வரல
கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து..
மைக்கேல் வா சாப்பிட..
இப்போதான் சாப்பிட்டேன் ரகு
அட வாடா.. உன்ன பத்தி தெரியாதா எனக்கு அடிக்கடி பசிக்கும் .. வா கம்பனி கொடு.. லட்சுமிம்மா டெய்லி செல்வாக்கு கவுச்சி செய்யும் போது இவனுக்கும் கொடுங்க.. ஒல்லியாவே இருக்கான் பாருங்க..
பாவா.. நீங்க வாங்க சாப்பிடலாம்..
ஆச்சுப்பா .. நீ சாப்பிடு
என்ன டல்லா இருக்கு வாய்ஸ்.. சுகர் கூடிவிட்டதா? டெஸ்ட் பண்ண வர சொல்லவா?
தூங்கிட்டு இருந்தேன் ரகு.. நீ வந்தததால் பார்க்க வந்தேன் அதான் உனக்கு அப்படி தெரிது.. ரொம்ப நல்லா இருக்கேன்ப்பா.. அவர் சிரிக்க.. திருப்தியானான் ரகு..
அவன் உண்ணும் உணவு மிக எளிமையான சைவம் தான்.. அங்கு அனைவரும் அசைவபிரியர்களா இருக்க.. ரசம் தயிர் என்று ஏதாவது ஒன்று இருந்தாலே போதும் ஒருபிடி உண்டு எழுந்துவிடுவான்..
அவன் குணத்துக்கும் சாப்பாட்டுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை..
நெடு நெடு பனை உயரம் ஒல்லி உடம்பு மாநிறம் களையான ஆண்மை ததும்பும் திருத்தமான முகம் ரகுவினது..
தன் ஆபிஸ் அறைக்கு சென்றவன்
செல்வாவுக்கு அழைக்க..
வாத்துக்கு உணவு வாங்கிட்டு வந்துட்டே இருக்கேன் ரகு
ம்ம்.. சக்ஸஸ் .. நைட் குளத்தில் விட்ரு ரகு..
டன்.. இவ்ளோ சீக்கிரம்.. அதிசயம்ல
பணம் செல்வா பணம்.. பரம்பரையாவே பணக்காரன் போல.. இப்போ நடிப்புக்கும் கோடி கோடியா சம்பளமாம் உடனே படிஞ்சுடுச்சு.. சீக்கிரம் வா..
இதோ ரகு..
ம்ம் வச்சுடுறேன்..
ஆசிம்ய சப்தமில்லாமல் தூக்கியது மும்பையின் பிரபல இரவு விடுதியில் என்றால் இறக்கியது அவனுடைய சென்னை ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் கள்ள சாவி கொண்டு திறந்து உள்ளே விட்டாச்சு..
பிளான் பக்கா ..
மறுநாள் காலை தூங்கியவன் போலவே எழுந்த அஸீமுக்கு நடுவில் ஒரு நாள் அவனுடைய நாட்காட்டியில் சுத்தமாய் அழிக்கப்பட்டதை போன்று உணர்ந்தான்.
தன் பிரவுன் நிற பாம்பு விழிகளை உருட்டி நேற்றின் எச்சத்தை நினைவு படுத்த முயல..
V வடிவத்துடன் அடர்புருவத்துடன் சேர்ந்த இரண்டு வட்ட விழிகளும்.. அந்த கண்ணழகி பேசிய கிள்ளை மொழி தமிழும் மட்டுமே எஞ்சின..
தன் பொருள்கள் ஒன்றும் திருடப்படாது தொலையாது இருக்க
.. தன் தகப்பனிடம் என்ன நடந்தது கேட்டான்.
50 கோடி போச்சு .. அசிம்
இது அசிமின் ஆணவத்துக்கு கிடைத்த பலத்த அடி.. ரௌத்திரம் மூள..
“நானே ஒன்னாம் நம்பர் கிரிமினல் என்கிட்யேயா? வரேன்.. நீ யாரா இருந்தாலும்.. பணத்துக்காக இல்ல.. என்னை தொட்டதுக்காய்.. கேம் ஸ்டார்ட் நவ்______ பயலுகளா தயாரா இருங்க என் மரண அடிக்கு..” கருவினான்