AV 9
சோம்பேறி விஜி எப்பவும் போல முக்கி முனகி தன் நீள கூந்தலை பின்னி குட்டி கருப்பு பொட்டு வச்சு ஸ்லைட் மேக்கப் முகத்துக்கு இட்டு.. கடைசியா மெஸ்ஸில் 6 இட்லி சாம்பாரில் ஊறப்போட்டு தின்று எந்திரிக்க..
இந்த அணுகுண்டை ஆசையா திங்கும் ஒரே பொண்ணு நீதான்மா அந்த மெஸ்ய கிளீன் பண்ணும் ஆயாவே கேலி பண்ண..
எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் ஆயா மென் புன்னகைத்து
ரெண்டு கிளாஸ் சூடா காபி குடித்து.. யப்பா மதியம் வரை தாங்கும் .. திருப்தியாகி..பெரிய காம்பவுண்டுக்குள் ஒரே கிராமம் போன்ற அமைப்பு கொண்டது இவள் கல்லூரி.. மருத்துவம் தவிர வேறு நிறய பிரிவுகளும் உண்டு அதுக்கெல்லாம் எப்படி போகணும்? எங்கு போகணும்ன்னு கூட இவளுக்கு தெரியாது..
கடிவாளம் பூட்டிய குதிரை போல ஹாஸ்டல் .. கல்லூரி .. அடுத்து நிர்வாகம் நடத்தும் மாதிரி ஹாஸ்பிடலில் பயிற்சி இது மூணுக்கும் தான் இந்த குதிரை நடக்கும்.. பின் மனசு வச்சு நேரமிருந்தால் படிக்கும் இல்லன்னா தூங்கும் தூங்கும் தூங்கிட்டே இருக்கும்..
செல்லில் கிடையா கிடக்கும் சகாக்களை காணும் பொழுது தூங்காமல் அதை பார்த்து என்ன கிடைக்கும் நினைச்சுப்பா..
தானே தூக்கம் இல்லா விழிகளை பெறவிருக்கிறோம்.. வெளியில் ஒருவன் அதைத்தர காத்திருக்கான் அக்கணம் அறியவில்லை..
அலட்சியமா கடைசி மாணவியர் தன் கடமை உடமைகளோடு இரும்பு கேட்டை தாண்டும் போது கூட எதையும் பார்க்காது.. இன்று பர்ஸ்ட் ஹவர் யார் வருவார்? என்ன பாடம்? என்ற சிந்தனையில் கால்கள் பாட்டுக்கு நடக்க.. எதிரில் நிழல் விழ.. அனிச்சையாக அண்ணார்ந்து பார்க்க.. யாரை நட்சத்திரம் என்றாளோ? அது காலை பொழுதில் முன் நின்றது..
இதுக்கு என்ன பதில் உணர்ச்சி தருவாள்? திகைப்பை தவிர..
“குட்மார்னிங் விஜி”
ஹாங்.. மூச்சு திணறினாள்.. ஏன் இப்படி?
“குட் மார்னிங் சார்..” நிற்கவில்லை நடந்தாள்.. நேரமாச்சு அவளுக்கு..
“உன்னை பார்க்க வந்தா நிற்காமல் ஓடுற..”
அவளின் தவிர்ப்பு போன்ற நடையில் உள்ளுக்குள் ஈகோ ரொம்ப இடிச்சது அஸிம் க்கு
“தப்பா எடுத்துக்காதீங்க நேரமாச்சு சார்.. நீங்க காலேஜ் வந்துருப்பீங்க.. எதேட்சையாய் என்ன பார்த்திருப்பீங்க.. உங்களின் வேலையை நான் கெடுக்கவேணாமே என்றுதான் நகர்றேன்..”
பல் அமைப்பே தெரியாத சிறு வெண்முத்துமணி சரம் போன்ற வரிசை மெல்ல காட்சி தர காணும் யாவரையும் ஈர்க்கும் அழகிய சிரிப்பு..
கொள்ளைக்காரிக்கெல்லாம் எப்படி தான் இப்படி அப்பாவி லுக் வருதோ?
இவள் தேர்ந்த நடிகை தொழில் ரீதியாக அஸீ திட்டினான்..“உன்ன பார்க்கத்தான் வந்தேன்” பொய்!
ஹாங்.. வாய் லேசா திறந்து அதிர்ந்து நின்றவள் ..
“என்ன விசயம் சார்?” தன் அகன்ற முட்டை கண்ணை ஆச்சரியத்தில் விரித்து அதன் முழு வடிவையும் எதிரிலிருப்பவனுக்கு தோகையாய் காட்டி கேள்வி கேட்க..
என்னதான் பகை உணர்வில் ஒற்றனாய் ஆராய வேண்டி வலிய
பேசுபவனாக இருந்தாலும் அடிப்படை இளவயது ஆணல்லவா? எதிர்பாலின காந்தம் எல்லாத்தையும் தாண்டி தன் பக்கம் ஈர்க்கும் அல்லவா? விஜியின் முகத்தில் முக்கிய இடத்தை பிடித்த கண்ணை பார்த்தவன் அந்த ஆட்கொல்லி கருவண்டுக்கு இரையானான்..எப்பா !! கண்ணு ரொம்ப பெரிசு.. !!
அசந்து தான் போனான்.. அந்த காட்டுப்பூவின் அழகு பிரமிக்க வைத்தது..“ஹலோ..” அவன் முன் தன் விரல்களை அசைத்து.. நிதானத்துக்கு கொண்டு வந்தவள்..
அதே விரல்கள் கொண்டு “எதுக்கு?” என்பதாய் மவுன மொழி பேச..
“சும்மா பிரன்ட் ஆகலாம்ன்னு வந்தேன்..” தன் தடுமாற்றம் மறைத்து தோள் குலுக்கி ஸ்டைலா சிரிக்க..
“இதெல்லாம் அயில் போங்கு.. போங்க போங்க.. பை.. நேரமாச்சு” அவள் தன் கல்லூரி நோக்கி விரைய.. கொஞ்சம் கூட கூச்சமின்றி அவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்துவிட்டான் அந்த மாஸ் நடிகன்
இரண்டாவது முறை அசீமின் ஸ்பரிசம்.. முடியல விஜிக்கு..
“பேசணும் நில்லு”
“நேரமாச்சு சார் லெக்சர் தொடங்கி இருக்கும்.. “
“காசு கொடு! ஆத்தா வையும்! ” ரக ராகத்தில் அந்த வார்தையையே திரும்ப திரும்பச் சொல்லி விஜி.
“போனா போவுது.. என் நேரத்தோட மதிப்பு உனக்கு தெரியுமா? லீவு போடு வா.. ” தர தர ன்னு காரில் இழுத்து போய் உக்கார வைக்க…
முத முறை காலேஜ் பங்க் பண்ணுவதுலாம் பீதியாகி அடிவயிற்றில் பய உருண்டை ஓட திகில் பிடித்து அமர்ந்திருந்தாள் விஜி.. ஓர் ஆகா உணர்வு.. முன்பு அசீமை பிடிச்ச மனசுக்கு இப்போ பிடிக்கல… மயக்கம் தெளிந்து விட்டது..
“ப்ளீஸ் சார்.. இதெல்லாம் வேண்டாம்.. கிளாஸ் போகணும்”
“அறஞ்ன்னா பார்த்துக்கோ.. சும்மா இரு.. என் கிட்டே பேசியே ஆகணும்.. வலிய வந்து பேசினா கிராக்கி பண்ணுற.. நீ ரொம்பத்தான் பேரழகியோ?? சொல்லுடி..” அவன் கோபத்தில் கத்தி தீர்க்க.. ஓங்கிய சத்தத்திலும் அவன் வேகத்திலும் நடுங்கினாள் விஜி.. வாயே வரல.. கண்ணு மட்டும் தன் பிறவி கடமையை தண்ணீர் ஊற்றி ஆறாய் ஓடி கடக்க..
“அழுத .. அதுக்கும் சேர்த்து ரெண்டு விழும் பார்த்துக்கோ விஜி..” புருஷன் போலவே அதட்ட.. கப் சிப் . கண்ணீர் ஹோல்டாகிடுச்சு விஜிக்கு..
இப்போ உதடு பிதுக்கி முகம் சுண்டி அமர்ந்திருந்தவளை கண்ட அஸீம்..
தொண்டையை கமறி அதோடு தன் உணர்வுகளையும் சரிசெய்து கொண்டு
“ம்ம்..சொல்லு.. உன் முழு பேர் என்ன?”
இது எதுக்கு?!!!! யோசித்தே..
“விஜயலட்சுமி”
“அம்மா, அப்பா சொந்த ஊர்லாம்?”
“எல்லாம் திருச்சில தான் இருக்காங்க”
ஓ.. அப்போ இவளுக்கு பெங்களூர்ல என்ன வேலை?!!
“கூட பிறந்தவங்க??”
இதுக்கு என்ன சொல்கிறாள்? உறுத்தே பார்த்து கேட்க..
“ஒரே அண்ணன்தான்”
ஸ்வரஸ்யமானான் அஸீம்.. கிட்டே வந்துட்டா.. ம்ம்“அவர் என்ன பண்ணுறார்?”
“அமெரிக்காவில் வேலை செய்றாங்க சார் அண்ணன் தான் படிக்க வைக்குது..”
அப்போ லவர்க்காக கடத்தல் நாடகமா?!!
“ஆமாம் உன்ன கட்டிக்க போறவங்க கூட சுத்தினேன் சொன்னியே.. அவர் எந்த ஊரு? என்ன பண்றாரு?”
முன்பு சொன்ன பொய்கள் சரளமாக பேச வந்தது.. அது அவள் அண்ணன் சொல்லித்தருவது.. ஆனால் இது புது
பொய் அல்லவா? திணறி ..“விவசாயி தான்.. எங்க ஊர் பக்கமே தான் சார்..”
“டாக்டர் படிச்சுட்டு எப்படி விவசாயியை கட்டுவ?”
அட!! போயா நீ வேற.. அஸீமின் விசாரணையில் சலித்தவள்..
“இப்போதைக்கு அவர்.. நாளைக்கு மாறலாம் சார்..” அசால்டா சொல்ல.
அவ்ளோதானா? நம்பாது அஸீம்
எல்லோரயும் போல தான் கல்யாணம் பண்ணும் போது யார் தாலி கட்டுறாங்களோ? அவங்கதான் புருஷன் என்று ஏற்றுட்டு போயிறனும் கேலிதான் ஆனால் சீரீசா பேசினாள் விஜி
இதுவரை பேசியதில் விவரம் ஏதும் தெளிவா கிடைக்காது பல்லைக் கடித்தான் அஸீம்..
இன்னும் நெருங்கி பழகனும்.. இவள் அந்தரங்கம் பூரா பேசி பேசியே வரவைக்கணும் வகையா சிக்கட்டும் உன் கூட்டம் .. வச்சு செய்யுறேன்..
உன் மீனு கண்ணு தண்ணீரிலேயே கிடக்கும்டி.. கருவியவன்தன் கோடி பெருமானமுள்ள காரை அலட்சியமா திருகி காலேஜை தாண்டி அஸீம் வேகம் எடுக்க..
உள்ளிருந்த அதீத குளிரும்.. கொஞ்சமே தெரிந்தவன் பண்ணும் இந்த அத்துமீறல்களும் பயமுறுத்த அயர்ந்தாள் விஜி..
“எங்கே போறீங்க சார்? இந்த காம்பவுண்ட் வெளியில் என்ன இருக்கிறது என்றெல்லாம் தெரியாது சார் ப்ளீஸ் ப்ளீஸ்.. ஹாஸ்டலிலேயே விட்ருங்களேன்..”
விஜி பாவமாய் கெஞ்ச.. இரங்கவே இல்லை அந்த வெள்ளை ராட்சசன்..“முத முத பிரன்ட்ஸ் ஆகி இருக்கோம்.. சின்ன அவுட்டிங்.. இங்கேயே திரும்ப விட்டுறேன்”
“சார்.. சார்..எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் சார்.. ஒரு லெக்சர் விட்டுட்டாலும் எனக்கு அது கடைசி வரை புரியாமல் போயிரும் சார்.. ப்ளீஸ் உங்களுக்கும் எனக்கும் ஏரோபிளேன் வச்சாலும் எட்டாது சார்.. விட்ருங்க..”
விஜியின் சிற்றறிவுக்கு எட்டிய அளவு காரணம் சொல்லி கெஞ்ச..
அந்த அறியாமை கெஞ்சலால் சிரிப்புதான் வந்து தொலைத்தது அவளின் உறவாடி பகை கொள்ள வந்தவனுக்கு..
“சரி உன் இஷ்டத்துக்கே வரேன்..நான் போன் பண்ணா எடுக்கணும்.. “
“என் போன் ரிப்பேர் சார்.. எப்படி முடியும்?”
“கொடு ரிப்பேர் பண்ணி தாரேன்.. “
இல்ல.. வேணாம்.. அவள் தயங்க..
பரவாயில்ல செலவானாலும் நானே பார்த்துகிறேன் கொடு..
நானே வாட்ச்மேன் கிட்டே கொடுத்து விட்டேன் சார்.. ஸ்பேர் இல்லையாம்.. கிடைச்சால் சொல்லிவிடுறேன் சொல்லி இருக்காங்க.. சரி பண்ணிடுவேன் சார்..
எங்கே காட்டு நானே கொடுத்து வாங்கிட்டு வரேன்.. இல்லன்னா விடு .. புதுசு வாங்கித்தாறேன்..
எனக்கு வாங்கி தர இவன் யாரு??!!
ஆனால் புதுசு வாங்கி தரேன் என்று சொன்ன வார்த்தைகள் விஜிக்கு ரொம்ப பிடிச்சுது..
உயர்தர ரெஸ்டாரெண்ட் கூட்டிட்டு போய் விஜியின் கெஞ்சலினால் அவளுக்கு ஜூஸ்யும்.. அவன் சிற்றுண்டியும் எடுக்க..
போன் மேலே போன் உதவியாளர் ராம்..
சார் 11 மணிக்கு பூஜையாம் உடனே வாங்க என்று இடம் சொல்ல..
“என்னதிது? இவ்ளோ அவசரம்?!”
“நீங்க நாளையே பூஜை போட்டுறலாம் சொன்னதை உப்புமா அப்படியே பிடிச்சுட்டது.. கூட்டம் கூடிடுச்சு சார்..” சீக்கிரம் வாங்க..
இம்சைகள்.. முகத்தை சுளித்து பாதி உணவை வைத்து அஸி கை கழுவ பவுல் கொண்டு வர சொல்லி வெயிட்டர் இடம் செய்கை காட்ட..
சார்..
ம்ம்..
முழுசும் சாப்பிடுங்க.. காலை உணவு நேரம் தவறி வேற எடுக்குறீங்க ப்ளீஸ்..
நீ யாரு எனக்கு சொல்ல? ஹாங்.. எங்கோ பற்றிய தீயால் இங்கு எரிந்தான் அந்த அழகன்..
“பிரன்ட் சொன்னீங்க..”
“சொல்லுவேன்.. அடிமை இல்ல ஓகே..”
அவ்ளோதான்.. விஜி நாகரீகமே இல்லாது.. அவள் பாட்டுக்கு எழுந்து வாசல் நோக்கி விடு விடு வென நடக்க..
பட்டிக்காடு.. இவளுக்கு என்ன? என்னை பற்றித்தான் கழுவி ஊத்தும் மீடியாஸ்..
ஏய் .. விஜ்ஜு வா..
நோ.. வ்..
ப்ளீஸ்.. டா
அடடா.. அடடா.. அவன் “டா” என்ற ஒற்றை விழிப்புக்கு நூறு ஜென்மம் பிறக்கலாம்.. விஜிக்கு மயக்கம் சட்டுனு ஏறுச்சு.. இதன் பேர் காதலோ?..
விதி இதற்கு என்ன பொருள் எழுதும்?
வலி என்றா??!!