AV 10
பட்டாக்கத்தி கொண்டு விலாறு விலாறா வெட்டினால் மொத்த வலிகளோடு வலி வேதனைகள் சேர்ந்திடும்.. மென் கூர் சிறுஊசி மெல்ல மெல்ல குத்தி வலிகள் கொடுத்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் வித வலி கொடுக்கும் அவ்வலியும் கூட இசையின் லயங்கள் போல போதை போல மயக்கும்… அந்நிலை கொண்டாள் அவ்விளம் பாவை..
அஸீ நல் வார்த்தையாலும் முரண் செயலாலும் என்னென்னவோ தொல்லைகள் செய்தான்.. நடிகன் புகழ் பெற்றவன் VVIP என்பதெல்லாம் விஜிக்கு பழகிய கணங்களின் கனத்தால் தெரில.. அண்ணார்ந்து பார்த்த பிரமிப்பு அருகில் கண்டதில் பேசியதில் இயல்பாகிட்டது..
“நான் போறேன்.. ” வேணும்னே வீம்பு பிடித்தாள்..
வெகு சிரமத்தில் குருவியை பிடிச்சு கையில் வச்சிருக்கேன்..ம்ம் .. விட்டால் திரும்ப பிடிப்பது முடியாது.. என்று தன் கோபம் பொறுத்து..
“இப்போ என்ன செய்ய சொல்ற? விஜ்ஜு”
முதலில் சாப்பிடுங்க
போகணும்டா அவசரம்
ஐந்து நிமிசத்தில் ஒன்றும் ஆகாது.. உணவை வீண் செய்வது ரொம்ப தப்புங்க..
அஸீ சும்மா இருக்க..
அப்ப நான் உங்க பிரன்ட் இல்லையா? போகவா?
அஸீயால் வலுக்கட்டாயமாக இழுத்து பிடிச்சு உக்கார வைக்கப்பட்டவள் திரும்ப எழ முயல..
பிரன்டுதான் உட்காருடி.. திட்டிட்டு .. அவன் வாழ்விவியலின் பழக்க வழக்கங்களால் அமெரிக்கையா சாப்பிட்டான்..
டீயா??? !!! இது ரொம்ப அதிகம் பீல் பண்ணாலும் ஏதும் கேட்காது..
எதிரில் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவள் பார்வை முழுக்க அஸீம் மீதே..
எப்பப்பா!! செம்ம ஹான்சம் !! என்னா கலரு!!.. என்னா உயரம்!! தமிழ் பேச்சு ஹிந்தி கலந்த மாதிரி அந்நியமாய் இருந்தாலும் அந்த டப்பிங் தமிழும் அவன் வாயிலிருந்து வந்தால் இனிக்கத்தான் செய்தது..
வாய் என்றதும் உதட்டை பார்த்து.. இது ஏன் இவ்ளோ மெல்லிசா இருக்கு? ரோஸ் நிறத்தில் இருக்கு.. ம்ம்ம்
போதாது.. இன்னும் பட்டையா வேணும்.. லேசா கருத்து இருக்கணும் அப்போதான் செம்மையா இருக்கும்..
என்னடி கிஸ்யா பண்ணப் போறான் உன்னை? உனக்கு எதுக்கு இந்த வீண் ஆராய்ச்சி?? ஒரு மனம் கலாய்க்க..
ச்சீ ச்சீ.. இன்னொரு மனம் உடனே கண்டனம் செய்து கோவிச்சாலும் ரகசியமா பெண் உடல் சுகமாய் நெளிந்தது ..பருவயுத்தம்
மீசை இல்லாத பச்சை மோவாயும் பிடிக்கல.. மீசை தான் ஆணுக்கு அழகு.. அதும் அடர்த்தியா பட்டையா வேணும்.. இந்தம்மா குறை குறையா மார்க் போட்டிங்..
“என்ன அழகா இருக்கேனா?” தன் மீதே நிலை குத்தி நின்ற விஜியின் பார்வை கண்டு குறும்பாய் அலட்சியமா அஸீ
இல்ல ஆமாம் ரெண்டு கெட்டானா வழிந்து சமாளித்து கண் பார்க்காது தலை குனிந்தாள் விஜி..
நொடியில் பின்னத்தில் அவள் முகத்தில் வெட்டிய நாண மின்னல்கள் கண்டு கொண்டான் அஸீ …
இதுவரை எப்பெண்ணிலும் காணா அதிசயம்.. இவனிடம் பழகும் மேக் அப் முகமூடி போட்ட பெண்கள் மனமூடியும் போட்டு கொண்டதால் இதெல்லாம் கண்டதே இல்லை…
மனசு கண் வழி ஏக.. பிடித்து நிறுத்தினான் அதன் லகானை.. விடு விடு .. இவள் என்ன பேரழகியா? அசிங்கமா போய் விழாதே … என் காலின் மண்ணிற்கும் ஈடு பெறாதவள்.. சுத்த குப்பை.. திட்டி கண்டித்தான்.. இனி இழையக்கூடாது உறுதி எடுத்தான்
இருவரும் வெளியில் வரும்போது.. அவள் தனகாய் வண்டி பிடிக்க சொல்ல… மெல்லிய சிரிப்போடு மவுனமாய் தலையசைத்து..
விடை பெற்று செல்ல ..
இவன் உயரம் என்பதால் அருகில் விஜி அஸீ கண்ணுக்கு முழு உருவமாய் காம்பக்ட்யா தெரிந்தாள்.. இழுத்து அணைத்து கட்டிக்கொள்ள ஏற்ற உயரம்.. அவன் மனசு கணக்கு போட.. அந்த நினைவை வெறுத்தான்.. எபிபோதிலிருந்து நீ இப்படி ஆனே? முகம் சுண்டினான்..
ஜீன்ஸ் பாண்ட் மேலே குட்டை குர்தி தாண்டி அடர்த்தி முடி இறங்கி தோகையாய் அசைய
மெல்லிய சிரிப்போடு மவுனமாய் தலையசைத்து..
விடை பெற்று செல்ல ..
அந்நீளமுடியும் கூட இம்சித்தது இளையவன் கண்ணுக்கு.. திடீர் என்று ஏதோ தன்னை சுற்றி இருந்த ஒளி குறைந்ததாய் உணர்ந்தான் அஸீ..
தமிழ் பெண்ணே!!
நீ உயிர் கொண்ட
மரபு செய்யுள்ளடி!!
வாய் தானா முணுமுணுக்க
என்னவா மயக்குறா? தலை உதறி அச்சிந்தனையை கலைத்தான்
அடுத்து நொடியும் வீண் செய்யாது.. தன் வீட்டுக்கு சென்று இன்னும் ஜிகினா உலகுக்கு தேவையான ஆள் மயக்கி ட்ரெஸ் பண்ணிட்டு பூஜை நடக்கும் இடத்துக்கு போக..
அப்பப்பா.. அங்கு வரலாறு காணாத கூட்டம்.. வெற்றி விழாவுக்கு கூட அஸீ இப்படியோர் ஜனதிரள் அவன் பார்த்ததில்லை.. இவனை மறைமுகமாக பாதுகாக்கும் ஜிம் கார்ட்ஸ் இப்போ தங்கள் கைகளை வளையமா மாற்றி பூஜை நடக்கும் மேடைக்கு அழைத்து போக உடனே மந்திரங்கள் ஓத துவங்க பட்டுவிட்டது.. நேரம் இல்லாததால்
தயாரிப்பாளர் மற்றும் ராம் மட்டுமே அடையாளம் தெரிந்தது.. பட்டாளமே நின்றி ருந்தாலும்..
யார் ஹீரோயின் ராம்? சும்மா அஸீ கேட்க..
ராம் அவஸ்தையாய் எதிரில் கருப்பு நிறமாய் பல் லேசா துருத்தி ஒல்லியான ஒரு பெண்ணை காட்ட..
ஹாங்.. பல்லை கடித்தான் அஸீ.. ஓ மை காட்!!!
மிக தவறான முடிவெடுப்பு. இந்த ஒரு படத்தோடு அஸீயின் சினிமா வாழ்க்கை அஸ்தமனம் ஆவப்போறது உறுதி.. ஆரூடம் சொன்ன சினிமா ஜாம்பவான்கள் கருத்து உண்மையே.. அதற்கான முதல் அறிகுறி தென்பட்டதை பீல் பண்ணான்.. முகத்தில் ஏமாற்றம் வந்ததை காண்பிக்காது ஓவியம் அனைய மலர் முகம் வைத்துக்கொண்டான்
ராம், என் சம்பளப்பணம் முழுசும் கொடுத்துட்டாரில்ல சால்ட்..
அதை கட்டு பிரித்து வைத்த லிஸ்ட் செல்லில் காட்டி கிசு கிசுன்னு பேசிக்கிட்டு இருக்க..
“தொட்டு கும்பிட்டுக்குங்க..” கற்பூர தட்டு காட்டப்பட.. கண்ணில் ஒற்றி கொண்டவனுக்கு வெற்றி திலகமும் பின்னோடு வைக்கப்பட.. ஆளுயர மாலை பூவால் செய்யப்பட்ட கிரீடம் செங்கோல் என்று உப்பு அஸீமை அலங்கரித்து கொண்டாட.. லேசா வெட்கம் கூட வந்தது அந்த கர்வம் பிடிச்சவனுக்கு..
“வித விதமாகபோட்டோ எடுங்கப்பா” உப்பு ஆணையிட
அதே ராஜ அலங்காரத்தில் போட்டோக்கள் பிடிக்கப்பட கூட்டம் ஆர்பரித்தது..
இதும் கூட அஸீக்கு இதமாய் தானிருந்தது.. இத்தனை நேரம் இறுக்கம் தளர்ந்து..
அங்கேயே நேரம் ஓட.. வயிறு முழுக்க உணவு இருந்ததால் குணமாகத்தான் நின்றிருந்தான் அஸீம்.. விஜ்ஜு தேங்க்ஸ்..
இடையில் ராம் யால் சிறப்பாய் வரவழைக்கப்பட்டு தரப்பட்ட சத்து பானங்கள் குளுமையையும் தர நார்மல் யா இருந்தான்.. மனமும் ஓர் ஏகாந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது.. வேர்காரணம் அவன் ஆராயவே இல்லை..
அவனுக்கு முன்பே பழக்கமான பார்வையாளர்களாய் வந்திருந்த தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகள் கடைசியில் இவனுக்கு அறிவுரை கூறவே சூழ்ந்து நின்று.
“இந்த படம் வேணாம் வெளியில் போயிருங்க அஸீம்.. உங்கள் உயரம் தரம் கெட்டுரும்.. மணி ஒரு லூசுப்பய அவனுக்கு நீங்க ஹீரோவா?
இதை யாருமே ஏற்று கொள்ள மாட்டார்கள்.. அவன் கிட்டே எந்த பண சோர்ஸ்யும் கிடையாது.. உங்களுக்கு சம்பளம்லாம் வரவே வராது. உங்க நன்மைக்கு தான் சொல்லுறோம்” என்று கோரிக்கை வைக்க..
அட போங்கய்யா.. நடிக்கவா இவருக்கு டேட்ஸ் கொடுத்து இருக்கேன்.. எனக்கு சென்னையில் இருக்கவே இந்த காரணம்.. ம்ம்
உங்க அன்புக்கு நன்றி.. மணிமாறன் சார் என் சம்பளம் முழுக்க கொடுத்ததால் தான் இந்த பூஜையே நடந்தது…. கதை ரொம்ப பிடிச்சு போச்சு.. சோ பார்யா சேன்ஞ்க்காக நடிக்கிறேன்… என் படக்கணக்கிலேயே இதை நான் வைக்கல .. அதனால் பெருசா எடுக்காதீங்க.. “
இதமாய் தோள் குலுக்கி ஸ்டைலாய் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி.. அப்படியே செல் எடுத்து நெட்டை வலம் வர.. இவனை கழுவி கழுவி ஊற்றி வைத்திருந்தனர் நெட்டிசன்ஸ்.. இவ்ளோ ரண களத்திலேயும் .. அஸீமின் இந்த தைரியம் யாருக்கு வரும்? வல்லவன் !! நல்லவன் !! தீரன்! வீராதிவீரன்!! துதி பாடி பாதி கூட்டம்.. முடில..
ஒருவேளை தொழிலாக கொண்டு முழு மனமாய் படம் தேர்ந்தெடுத்து இருந்தால் இந்த பேச்சுக்கு வேலையே இல்ல.. நிறைய ஒர்க் அவுட் பண்ணியிருப்பான்.. இந்த
சால்ட் மணி கிட்ட மாட்டி இருக்கமாட்டான்..
இது ஜஸ்ட் விளையாட்டு மட்டுமே இந்த படம் அவனுக்கு உப்புமா உப்பா எடுத்தாலும் இவனுக்கு ஒன்னுமில்ல.. சென்னையில் இருக்கணும் அவ்வளவே..
மும்பையில் இருந்து அவனுடைய குடும்பம் வேறு இந்த திடீர் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து போன் மேல் போன் போட..
இப்போவே கிளம்பி வரேன் .. நேரில் பேசிக்கலாம் என்று வைத்துவிட்டு
ராம் ய அழைத்து.. சால்ட் மணி பணத்தை 10% அவரை எடுத்துக்க சொல்லி மிச்சத்தை அவன் அப்பாவின் கம்பனி பேரில் போட சொல்லி அதிரடியாக பிளைட் டிக்கெட் எடுக்க சொல்லி சடுதியில் கிளம்பிட்டான்.. ஆயிரம் முறை கண்ணாடியில் மில்லி மீட்டர் மில்லி மீட்டர் யா தன் அழகை சரி பார்த்து.. அழகு தானே மூலதனம்
பணம் அனுப்பிட்டா வீட்டில் ரொம்ப விளக்கம் கேட்க மாட்டார்கள் அஸீம் கணக்கு போட காலம் வேறு கோலம் போட்டு கலர்ஸ் வேற ஆட் பண்ணி அழகு பார்த்துக் கொண்டிருந்தது
சுமிக்கு மாத்திரை வாங்கி கொடுக்கணும் என்று முத நாள் இரவு யோசனையில் தூங்கிய மைக் மறுநாள் செல்வா பிடி பிடி என்று தன் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் முரட்டு வேலையில் பிழிந்து எடுக்க.. மதியம் நழுவ பார்த்த பிராடு மைக்கேலை தன் பட்டை புருவம் உயர்த்தி முறைத்தே கைக்குள் செல்வா அடக்கி வைக்க.. டெலிவரி கொடுக்கும் வண்டிகளை வாட்டர் வாஷ் பண்ணி புதுசு போல கொடுக்கும் பாவா.. மைக்கின் அவஸ்தையை பார்த்து ரகசியமாக சிரித்துக்கொண்டார்.
குயில பிடிச்சு கூண்டிலடைச்சு
ஆட சொல்லுற உலகம்.. என்று தப்பு தப்பாய் பாட. .. காண்டாகி.. ஒரு ஸ்பானர் ய அவர் மேலே எட்டி எறிரேன் என்று தள்ளி போட்டு தன் கோபத்தை தீர்த்து கொண்டான் மைக்..
செல்லிலேயோ சுமியிடமிருந்து மிஸ்ட் கால்கள் கணக்கில்லாதவை..
நேற்று கலாபனாய் காதல் காவியங்களை உடலில் வனைந்தவன் காணாமல் போக .. தேடு தேடு என்று தேடினாள் மைக்கின் லூசு ராதை..
நேற்று செய்யும் பொழுது வலித்தது முரடு அவசரம் ச்சீ என்றெல்லாம் குறை சொன்ன மனது இன்று அவனுக்காய் அலைந்து திரிந்தது.. அத்துவான பாலை மணற்காட்டில் புழுதி புயல் நடுவில் காதலன் வரவிற்காய் கண் பூத்து வெக்கையில் கிடக்கும் காதலியின் பெருங்காதல் தன்மையில் சுமி..
உன் ஒற்றை எச்சில்
தேன் முத்தம் கொடடா.. அவ்வமிர்தம் உண்டு யான்
அமரவாழ்வினளாவேனே!!
தனக்கு தானே கற்பனையை அடித்தளமிட்டு ஏதோ ஒரு புரியா எண்ணங்களின் தாக்கத்தால் குருட்டுத்தனமான அன்பின் அடியாழத்தில் மூழ்கிக்கிடந்தாள் சுமி..
இங்கு இதெல்லாம் சேரவேண்டியவனுக்கு சேரல.. இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு போகலாம் என்ற செல்வா..
அதற்கு முன்..
“மச்சி.. கண்ட இடங்களுக்கு போய் உடம்பை கெடுத்துக்காதே.. தேறவே மாட்டுது பாரு.. எங்களுக்காக நீ வேணும்டா.. ப்ளீஸ் அதிலிருந்து வெளியில் வா..”
தோழனாய் மைக்கிடம் விண்ணப்பிக்க..
“நான் இப்போ குறைச்சுட்டேடேனே செல்வா.. எங்கேயும் போறதில்லை.. மேரிம்மா கிட்டே கூட சொல்லி இருக்கேன் ஏதாச்சும் பொண்ணு பார்த்து கட்டி வை ன்னு ..” அண்ட புளுகு வைக்க
பாவா,
” நேத்து மதியம் கூட காணா போய்ட்டான் செல்வா..இவனுக்கு போய் வீணா எதுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க ..”
“பாவா.. விட்ருங்க நான் உங்க ரூட்டுக்கு வந்ததே இல்ல.. நீங்களும் வராதீங்க சரியா?” மைக் பாம்பாய் சீற..
“நாங்க சரியா இருக்கோம் நீ தான் ஒரு ரூட்டுக்கு வரல.. நீ வேணும் நல்லா இருக்கணும் நாங்க ஆசைப்படுறோம்.. எல்லாருக்கும் கிடைக்கிற அடிப்படை உறவுகள் வசதிகள் நமக்கு கிடைக்கல.. நாயா பேயா வாழ்ந்து ரகு தம்பி புண்ணியத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா பலத்தில் இருக்கோம் .. நீயும் அடங்காமல் ஆடினால் பொறுக்கவே முடில மைக்.. சொல்ல வேண்டியது எங்கள் கடமை சொல்லிட்டோம் .. பொறுக்க போறியன்னா போ தெரு நாயே.. அதுக்கு கைமேல் பலன் கிடைக்கும் அனுபவி..”
முதலில் மெதுவா திட்ட தொடங்கிய பாவா டென்ஷனாகி கடைசியில் ரொம்பவே திட்டிட்டு .. அங்கு நிற்க பிடிக்காது தன் வண்டியில் ஏறி போய்விட..
என்னை கேள்வி கேட்க இந்த கிழவன் யாரு? என்று திகு திகு ன்னு கோபத்தில் எரிந்து கொண்டிருந்த மைக்கின் தோளை நட்போடு பற்றி அமர்த்திய செல்வா..
உன் இஷ்டம்தான் எல்லாம் மைக்.. பாவா அவருக்கு எப்படி பேசத்தெரியுமோ பேசிட்டார்.. என் அட்வைஸ் நீ அந்த விஷயத்துக்கு அடிமை என்றால் பாதுகாப்பு எடுத்துட்டு போ.. நோய் வாங்கிராதே.. நல்லா சாப்பிடு உடம்பையும் வலுவா வச்சுக்கோ.. வா வீட்டுக்கு போகலாம் ..” மெக்கானிக் ஷெட் கதவை மூட..
“இனி பார்த்து இருந்துகிறேன் செல்வா..” சும்மா மேம்போக்காய் ” சமாளித்த மைக்..
“கடைத்தெருவில் வேலை இருக்கு செல்வா.. இதோ அரை மணி நேரத்தில் வந்துடுவேன்..” சிட்டாய் பறந்துட்டான்
இதோ வரேண்டி வெளியில் வா.. சுமிக்கிட்டே போனில் பேசி முன்பே உசார் பண்ணிட்டான்
முத காரியமா மறக்காது வேண்டியதை வாங்கி போய் நீட்ட மிட்டாயோ? ஆசையா பார்த்தவள் … அதுவாக இருக்க..
“இது என்ன?” ஆர்வமா கேட்க..
இந்த லூசு விடம் என்ன சொல்வான்? விவரக்காரன்
உனக்கு நல்லது என்று கையோடு போட வைத்து.. வந்ததுக்கு இனாமா மறைவு பகுதிக்கு தள்ளிட்டு போய் இதழோடு இதழ் கோர்த்து சுவை முத்தம்.. அவனுக்கு மேலே இவள் துள்ளினாள் மொத்தமும் கொடுக்க கூட ஆசைதான் “எனக்கே எனக்கு இவன்” .. உரிமை அதிகமாக அவன் கருத்த தடித்த உதட்டை சப்பி எடுத்தாள்.. எச்சில் பிடிக்கவே இல்ல.. என்னதான் அவன் முண்டி அடித்து இவளுக்கு ஊட்ட முனைந்தாலும் சுமி உடன்படல.. நழுவி தடுத்து உதட்டை மட்டும் கன்று குட்டியாய் இழுத்து உறியும் விளையாட்டு மட்டுமே.. அங்கு அரங்கேறியது..
முத்தம் கொடுத்தால் நல்லதாம் அனைத்து நரம்புகளும் சூடேறி ரத்த நாளங்களில் புது ரெத்தங்களை உற்பத்தி செய்யுமாம்.. ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் முத்தம் கிளுகிளுப்பானது என்பது தான் ஆகச்சிறந்த உண்மை..
குட்டி தேறிடுச்சு.. இனி நம் இஷ்டத்துக்கு வளைக்க வேண்டியதுதான்.. தேனிரும்பு சுமி இளகி நிற்க மகிழ்ந்தான் அந்த மாயவன் மைக்..அடிக்கடி உபயோகிக்க எண்ணம் கொண்டான்.. இப்போவும் கைகள் தாறுமாறாத்தான் சுமி உடலில் திரிந்தது
அடர் மையிருட்டு இரவுக்கு வெண்நிலவே மவுன சாட்சியாம்..
இளம் காளையர் இருவருக்கு ஒற்றை நிலவு கனவில் வந்தது அந்த பெண் நிலவோ சின்ன பிள்ளையாய் கூட்டு புழு ஸ்டைலில் சுருண்டு தூங்கிக்கொண்டு இருந்தது..
அஸீ & செல்வா தான் விஜியை கனவில் கண் கட்டிக்கொண்டு தேடினார்கள்..
யார் கனவு நிஜமாகும்??!!!
Nice 🙂