11 AV
அஸீயின் கனவுக்குள் விஜி வரக்காரணம் பருவகாதல் அல்ல வெறுப்பு.. தன் வீட்டில் முதன் முதலா தன்னுடைய முடிவுக்கு எதிர்ப்பு வந்ததுதான் காரணம்.. அந்த ஈதிர்ப்பு அவனுக்கு திமிர் ஆணவம் வீம்பை கிளப்பிவிட்டது தொடர்ந்த விவகாரங்கள் ஒன்றை தொட்டு ஒன்று நிகழ்ந்தது
கோடி கோடியா பணம் தர தயாரா இருக்கும் தெலுங்கு நிறுவனத்தை விட்டு தமிழில் அதுவும் அட்ரஸ் இல்லாதவனுக்கெல்லாம் எதுக்கு தேதி தந்த? மொத்தமா 30 நாட்கள் பைத்தியமா பிடிச்சிருக்கு..” அப்பா பேச குடும்பம் மொத்தமும் கூடி ஆட்சேபம் தெரிவிக்க…
நொடியில் அஸீக்கு உள்ளத்தின் அடியில் கிடந்த ஈகோ கிளறப்பட ..
ஏன் என் இஷ்டம் என்று ஒன்னும் கிடையாதா? முதன் முதல் தன் இதயத்திடம் கேள்வி கேட்டான்..
இல்ல என் வாழ்க்கை என் கையில் தான்.. சினிமா எனக்கு பாஷன் தான் தொழில் இல்ல.. திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டான்.
அதே விரைப்போடு எதிர்த்தும் விட்டான்..
“இனி நடிக்கவே மாட்டேன் குடும்ப தொழிலுக்கு வந்துடுறேன் வரும் ஜூன்ல மேரேஜ்.. ஸ்டேட்டஸ் பார்த்து பொண்ணு பார்த்து ஏற்பாடு பண்ணிருங்க.. அசிங்கமா இன்னும் லைம் லைட் ல நின்னுகிட்டு லாஜிக்கே இல்லாமல் பாட்டு டான்ஸ் ன்னு ஆடிக்கிட்டு பன்ச் என்று அபத்தமான வசனம் பேசிட்டு திரிய முடியாது… பணம் வரது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரிது.. ஒரு நாள் ஒரே நாள் ஷூட்ல நடிச்சு பாருங்க.. எத்தனை தடவை திரும்ப திரும்ப ஒரே டேக் வாங்கணும்.. எத்தனை அவமானத்தை உதட்டுக்குள்ள வச்சுக்கிட்டு வெளியில் சிரிக்கணும்.. எல்லாத்துக்கும் மேலே.. சுற்றி கூட்டம்.. உத்து உத்து பார்த்துட்டே இருந்தா..
அவசரம்ன்னா ஒன் பாத்ரூம் கூட போவ முடில.. ப்ரைவசி சுத்தமா இல்ல சோ போய்ட்டு இருக்க ஆல் ப்ராஜக்ட் கான்செல் பண்ணிருங்க.. இதான் கடைசி படம்.. கமிட் ஆகிட்டேன் முடிச்சுட்டு வரும் போது சொத்து தொழில் பிரிச்சுடுங்க.. நான் தனியா செஞ்சுக்கிறேன் அண்ணன் கூட வேணாம் இனி கூட்டு”
அதிரடியா பேசிட்டான்.. நெத்தி அடி
பரம்பரை தொழிலில் கூட மித வருமானமே.. அஸிமின் சம்பளம் வருஷத்துக்கு 3 படம் என்றாலும் கூரையை பிச்சுட்டு கொட்டும் ரகம்..
பெற்றோரை விட அஸி அண்ணனும் அண்ணியும் தான் அதிர்ந்து திகைத்துப்போனார்கள்..
சொத்து பிரிக்கப்பட்டால் பொறுப்பும் பிரிக்கப்பட்டு தொழில் பார்க்கும் தலைவலி வரும்.. யாரு கல்லாவையே காவல் காத்துட்டு உக்காருவது?? அப்போ இந்த ஜென்மத்துக்கான இன்ப வாழ்க்கை எப்பொழுது வாழ்வது?
இப்போ டாப் பணக்கார்கள் லிஸ்ட்ல இருப்பதுக்கு முதல் காரணமே அஸிம் தான்..
அண்ணன் கிஷோர், அப்பாவை அதட்டி..
“தம்பி என்ன செய்கிறானோ செய்யட்டும் .. அவனுக்கு எல்லாம் தெரியும்.. போங்க போங்க பின்னாடி பார்த்துக்கலாம்..” சமாதான படுத்த… அவர் ஏதும் பேசாது உம் மென்று முகம் வைக்க..
கிஷோர் ஏதும் பேசாதே.. நமக்குள் அடுத்த கட்டம் வந்துருச்சு நாளை நம் லீகல் அட்வைஸரிடம் நானே பேசுறேன்..
அஸீம் .. பொறுமை எடு கோவப்படாதே.. அப்பாக்கு பிபி எறிப்போச்சு அதான் கிறுக்கு போல பேசிட்டார் பெருசு பண்ணாதே.. தாய் மகனை சமாதானம் செய்ய..
முடியாது ஒரேடியா முடிச்சுடுங்க.. தன் அறைக்கு வந்துட்டான்.. சென்னையில் பகல் பூரா மாலை மும்பை என்று அலைச்சலில் கண்ணு சூட்டில் எரிய.. குளிர குளியல் போட்டு தாயின் கைகளால் உணவெடுக்க கண் சொக்கி விட்டது.. கை கழுவி எழுந்தவனிடம் சூடா பாதாம்பால் தந்த சோனம் ..
“ஒன்னாவே இருப்போம் அஸீம் குடும்பம் கட்டுக்கோப்பா இருக்காது..”
“எனக்கு எல்லாம் புளிச்சு போச்சு.. தனியா போறேன் விடுங்க.. சமமா பிரிப்பது கூட தப்பு.. என் சினிமா சம்பாதனை தனியே எடுத்து வச்சுட்டு வரவு செலவு பிரிங்க..” கறாரா சொல்லிட்டு தன் அறைக்கு போய்ட்டான்..
சூடு ஆறும் வரை கூட பொறுமை இல்லை கட்டிலில் மட்ட மல்லாக்க படுத்துவிட்டான் அலுப்பாய் இருந்தது..
நான் தான் பெரிய ஆள் என்று எகிறியாச்சு.
இனி அதில் நிற்பதுதான் ஆண்மை.. முகம் இறுகினான்..
செல்லில் பப் நட்புகள் அழைக்க .. எடுக்க பிடிக்காது ஆப் செய்து தூக்கிபோட்டுவிட்டான்.. இந்த படம் ஒத்துகிட்டதுக்கு அவள் தான் காரணம் உன்னை நாசம் பண்றேன் இருடி பல்லை கடிக்க.. தெருநாயை தொட கூட அருவெறுப்பு வருது.. அதே நேரம் முகம் சுளித்தான் .. அசதியில் கண் தானா மூட உறக்கத்தில் ஆழ..
குட்டை குர்தா போட்ட உடையில் விஜி ஆட்டோ ஏறும் போது தலையசைத்து விடைபெற்று திரும்பிய பின்புறம் மயிற்தோகையென விரிந்து அடர்ந்த முடி.. இதுக்கு மயங்க மாட்டேன் போடி.. தானா வாய் புலம்ப.. அக்காட்சி தொடர்பு அறுந்து ..
நீங்க நாங்க அண்ணார்ந்து பார்க்கும் நட்சத்திரம் வியக்கலாம் பழக முடியாது..
“போடி நீ பழகவே வேணாம் ____” கெட்ட வார்த்தை போட்டு திட்டி தூக்கம் அஸீம் ..
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடைவெளி நூலிழையளவே அஸீம் அறியல..
இங்கு விஜியின் எண்ணங்களிலேயே ஊறி வாழும் காதல் தேவன் செல்வாவோ அவளின் துப்பட்டாவை நெஞ்சோடணைத்து அதில் அவள் சென்ட் வாசம் நுகர்ந்து காதல் கிளர்ந்து பெண்டாட்டியாகவே ஆளும் கனா கண்டான்.. அது எப்படி இருக்கும்? தெரில.. ஆனால் போதை போட்ட மாதிரி சுக மயக்கத்தை தந்தது.. அவன் அறையில் அவள் குளிச்சுட்டு விட்டு போன ஆடைகள் உண்டு.. அதில் பெண்களின் முன்னழகை பாதுகாக்கும் கவசமும் கண்டான்.. அச்சோ.. கண்டு வெட்கி நைட்டியிலேயே சுருட்டி தன் செல்பின் அடியில் பத்திரப்படுத்திட்டான் கள்ளன்.. எது காணோம்? எது இருக்கு?
என்பதெல்லாம் விஜிக்கு தெரியாது தேடவும் மாட்டாள்.. இவனுக்குத்தான் வசதி .. ஷால் என்பதால் ஆசையா மேல் போட்டுக்கொண்டான்.. அவளையே சுமந்த பீல்..எப்ப இப்படி என்னுடன் உரிமையுடன் இருப்ப விஜி? சும்மாவே விடமாட்டேன் .. வேணும் தினமும் கேட்பேன் தருவியா? விரகத்தில் புலம்பினான்.. இரவானால் மன்மதன் இவனுக்கு மட்டும் அம்பு விட்டு துடிக்க வச்சு ரசிப்பான் .. ஈதோர் ஃபன் அவனுக்கு.. ரதியே ஒருதரம் செல்வாவை இமை கொட்டாது ரசிச்சதால் வந்த வினை .
இரவுகள் இவ்வாறு கட்டிலும் தலையணையும் கனவுமாய் கழிய..
காலையில் அஸீமுக்கு ராம் கால்.. பாட்டு ஷூட்டிங் இருக்கு சென்னைக்கு வாங்க என்று..
ரெக்கார்டிங் க்கு நாளாகும்ல..
இல்ல .. சால்ட் ஏற்கனவே ரெடி பண்ணி தான் வச்சுருக்கு.. ரெண்டே பாட்டுத்தான்..
என்னது ரெண்டா? அஸீம் அதிர..
“ஆமாம் நானும் இதயே கேள்வியா கேட்டேன்.. கதை ரொம்ப நல்லா இருக்குமாம் பாட்டு போட்டா கெட்டுருமாம்.. சால்ட் அடிச்சு சொல்லுது”
இந்தாளுக்கு டேட்ஸ் கொடுத்ததே பெருசு.. இதில் சோதிக்க வேற செய்யுறானே.. கடுப்பானான் ஹீரோ..
“சரி கிளம்பிட்டேன்.. சொல்லிருங்க “
தலையை கொடுத்தாச்சு.. இனி நோ நெகட்டிவ் தாட்..
ரிலாக்ஸ்!! அஸீம் ரிலாக்ஸ் !! கிளம்ப கிளம்ப தனக்குத்தானே மூச்சை உள்ளேயும் வெளியேயும் ஆழமாய் எடுத்துக்கொண்டான்..
ஏன் நைட் போன் எடுக்கல அஸீ பிராது வாசித்த நட்புகளை .. அருமையான கதை அம்சத்தோடு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு.. அது கூட ஓடிட்டு இருக்கேன் மச்சி.. கொஞ்ச நாளைக்கு என்னை பிரீயா விடுங்க .. ஓகே.. நயமாய் தள்ளிட்டான் இம்சைகளை..
கேளிக்கை பொழுதுபோக்கில் நாட்டமில்லை.. குறி பூரா விஜி மீது ..
அம்மாவை கூப்பிட்டு ஆடிட்டர் வக்கீல் வருவாங்க அப்பாவை விவரம் கொடுக்க சொல்லுங்க.. எனக்கு கண்டிப்பா எப்படி பிரிச்சி இருக்கீங்க? எனக்கு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும்.. பை மாம்..
குடும்பம் டா அஸீ..
ஆமாம் யார் இல்லன்னாங்க.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு பாருங்க.. என் கூட வந்துருங்க.. அண்ணன் பேமிலியும் வரட்டும் போவட்டும்.. சொத்து தான் பிரிக்கிறேன் உறவை இல்லம்மா..
தொழிலுக்கு கண்டிப்பா வர போறியா? இவ்ளோ புகழ் பணத்தையெல்லாம் விட்டு..
அது ஒரு லக் ல ஓடும் நிலையில்லா தொழில்மா.. அஸீம் மார்க்கெட் இழந்து போனான் சொல்றதை விட.. வேணாம் என்று தன் வேலைக்கு திரும்பிட்டான் என்பது கெத்துல்ல..
அழகாய் சிரித்து அம்மையின் கன்னத்தில் பாசமுத்தம் இட்டு விடைபெற..
நேற்று இரவு முழுவதும் இருந்த மன உளைச்சல் குறைந்து.. குருவிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு பறக்க ஆசைப்படுவது இயற்கைதான்.. ஆறுதல் கொண்டார்..
இவர்களின் சம்பாஷணையை ரெகார்ட் பண்ணி கிஷோரின் மனைவி கணவனுக்கு அனுப்ப..
அன்றே இவனை கடத்த மட்டும் விட்டது தப்பா போச்சு . நல்ல சம்பளம் வருதே என்று விட்டு வச்சது தப்பா போச்சு.. நாயை அன்றே கொன்னுருக்கணும்..
சொத்து பிரிப்பது பிடிக்காது அஸீமின் அண்ணன் பொருமினான்..
ஏதாவது லீகலா அவனுக்கு தொல்லை தர முடியுமா? தன் லாயரை முத வேலையா ஆலோசனை கொடுக்கும்படி அழைத்தான்..
விஜி வழக்கம் போல தன் வகுப்புக்கு செல்ல தயாராக..
விஜி உனக்கு போன் கீழே கூப்பிடுறாங்க..
அண்ணனா இருக்கும்.. இவளும் ஆர்வமா ஓட.. லேண்ட் லைன் ஒலிக்கவும் சரியா இருந்தது..
அல்லோ அண்ணா.. மூச்சு வாங்க செல்ல குரலில் விஜி கொஞ்ச..
,”ஓய் விஜி நான்தான்.. சாயங்காலம் உன் கிட்டே இருப்பேன் ரெடியா இரு.. சாப்பிட்டியா?” கேட்டு திகைக்க வைத்தது அஸீம்..
காதல் கத்திக்கப்பல் எவ்விதயத்தை குத்தும்..ம்ம்ம்