ATM Tamil Romantic Novels

12 ஆசை வெட்கமறியாது

12

எதிர் முனையில் அஸீம் குரல் கேட்டதும் வடிவேலு போல முகம் போச்சு நம் விஜிக்கு..

இந்த இம்சையா? ஐயோ!! அம்மா!! தப்பிக்க முடியாதே!!
எட்ட இருக்கும் வரை தேவனாய் தெரிந்தான் கிட்டே வந்தா கோரை பல்லு காட்டி அரக்கனாய் இருக்கான்.. வச்சு தள்ள முடில..

இதயம்ன்னா என்ன? கேட்பான் போல.. மத்தவங்களுக்கும் ஏதாச்சும் வேலை வெட்டி இருக்கும்.. தெரியுதா? லூசுப்பய!! ஒன்னும் கண்டுக்க மாட்டுறான்.. இவன் கிட்டே
பேசுவதா? விடுவதா?
ஊஞ்சலாட்டத்தில் .. விஜி பேசாது இருக்க..

சாப்டியா? அவன் திரும்ப கேட்க..

“ஐ லைக் திஸ் வேர்ட்.. அஸீ”

“இதோ ட்ரெஸ் பண்ணிட்டா சாப்பிட்டு லெச்சர் க்கு கிளம்பிருவேன்..”

“சரி.. சாயங்காலம் நான் எப்பவும் நிற்கும் இடத்தில் நிப்பேன் வந்துருடி”

இந்த முரடன் ‘டி’ போடுவது எரிச்சலாயிருந்தது..

“இதோ பாருங்க அஸீம் .. மதியத்துக்கு மேலே எனக்கு லேப் இருக்கு.. எங்கே இருப்பேன்னு தெரியாது.. அதனால என்னை பார்ப்பது பேசுவது கஷ்டம்.. வீக் எண்ட்ல பார்ப்போம் ப்ளீஸ்.. வச்சுடுறேன்..

கட் பண்ணிட்டா.. போடா டேய் பாவ் பஜ்ஜி! இவன் கலரும் இவனும்.. கண்டமேனிக்கு திட்டி நகர.. திரும்ப லேண்ட் லைன் அடிக்க.. அவனே தான்.. ஆனாலும் பார்க்காத மாறியே நகர.. எடுத்தவர்கள் விஜி யாரு இங்கே? என்று ஏலமிட..

ஹாஹாங் .. ஹாஸ்டலே என் பேரை பச்ச குத்த வச்சுருவான் போல கீதே..

இம்சை.. கடுப்பாகி எடுக்க..

இதோ பாருங்க அஸீ ..ஏதோ சொல்ல விஜி முயல..

அங்கு இதெல்லாம் காது கொடுத்து கேட்பவனா இருக்கான்?

“லீவ் போட்ரு விஜி.. அங்கேயே நேரடியா வரேன் என் கூடவே இன்னைக்கு பூரா இரு.. ஷார்ப் 9.45 ஓகே..” வச்சுட்டான்

அடேய்.. பதிலுக்கு போட இது செல் இல்லாதது அஸீக்கு வசதியா போச்சு..

போ போ .. இந்தம்மா மதியாது வகுப்புக்கு சென்றுவிட.. ராட்சசன் வந்து நின்று அடிவயிற்றில் டிரம்ஸ் வாசிக்க விட்டான்..

எப்படி வந்தான்? !! யாருக்காய் வந்தான்? திகைக்கும் போதே..
“விஜயலட்சுமி மை கேர்ள் பிரன்ட் .. அவள் எனக்கு சென்னையை சுற்றி காட்டுகிறேன் சொல்லி இருக்கா..” எல்லோரிடமும் தோளை குலுக்கி நடிச்சு மயக்கி..

“வா விஜி போகலாம்” உரிமையா கையை பிடிக்க..

முத நாள் மயக்கம் இல்லாது எரிச்சல் வர..

“ப்ளீஸ் நான் படிக்கணும் அஸீ..”

இத்தனை நாள் வாராத காதல் படிப்பின் மீது சட்டுனு வந்துட்டது.. இவனை விட அது எம்புட்டோ கிரேட் ன்னு ஞானோதயம்..

“நைட் படிச்சுக்கோ..” நாயை இழுத்துட்டு போற மாறி கையை வலுக்கட்டாயமாக பிடித்து கொண்டு போக..

“பாடம் புரியாது அஸீ..”

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ படிக்கவே தேவை இல்லை”

பிள்ளையாரப்பா.. யாரை? இந்த சைக்கோவையா??!! நெவர்..

உம்முன்னே மூஞ்சை வச்சு வர.. அதோர் அழகாய் இருந்தாள் விஜி.. குண்டு கன்னம் உப்பி உதடு இறுக்கி தாடை தொங்க.. பார்த்தவன்

“இப்படியே எப்பவும் இரு நல்லாருக்குடி..” என்று குலுங்கி குலுங்கி சிரிக்க..

விஜி, முதுகில் ஒன்று போட்டு அவன் கையை கிள்ள.. இவளின் நகம் பட்டு எரிய.. எரிச்சலில் அவன் முகம் சுளிக்க..

“சாரி அஸிமா.. ப்ளீஸ் சாரி தெரியாம பட்ருச்சு..” ஸ்ஸ்ஸ்ஸ் என்று விஜி ஊதி விட.. அந்த கையை அவள் உதட்டுலேயே வச்சு அழுத்த .. முத்தமாகி போனது விந்தை..

எச்சில் ஈரம் வெளி எரிச்சலை தணித்து உள்ளிருந்த எதையோ தொட.. குனிந்திருந்த அவளின் தலையை வன்மையா இழுத்து அங்கங்கு கடித்து எடுத்து உதட்டை பிச்சு தின்னும் வெறி கிளம்ப..

ச்சீ.. ச்சீ .. இவளிடமா? அருவெறுத்தான்..

“ஒரு டீடி போட்ருங்க அஸீ .. நகம் விஷம் ப்பா..”

நீயே விஷம் தாண்டி .. தானா முனகி.. கைப்பாவையா ஷூட்டிங்க்கே கூட்டிட்டு போய்ட்டான்.. ரெண்டு மூன்று ஷாட்ஸ் தான் எடுத்திருக்க.. ராம் க்கு திருப்தியே இல்ல..

தன் அபிப்ராயத்தை அஸீயிடம் சொல்ல.. இது ஜஸ்ட் டயம் பாஸ் .. யூ டோன்ட் வொரியா? ஈஸியா சொல்ல..

உப்பு வைத்திருக்கும் கதை லைன் அருமை.. ரெண்டு பாட்டும் சரிதான்.. டைரக்டர் தான் சொதப்புறார் புரிய.. இந்த பாக்ட் அஸீயிடம் எடுத்து சொல்ல..

“அது தயாரிப்பாளர் துயரம் ராம்.. நாம் என்ன செய்ய முடியும்?”

“இல்ல பாட்டு சீன்ஸ் இப்படி கண்றாவியா எடுக்கக்கூடாது.. ஹெவியா இருக்கு மைல்ட் யா போகணும் .. உங்களை இதில் வச்சு என்னால் பார்த்துட்டு இருக்க முடில அஸீம் .. ஒர்ஸ்ட் மேக்கிங்..”

நீங்களே கூட மேற்பார்வை பண்ணுங்க ராம் உப்புகிட்டே சொல்றேன்.. சொன்னதோடு அல்லாது உப்பை ராம் சொல்வது தான் நான் கேட்பேன் என்று பிளேட் திருப்பி போட..

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

உப்பு ராமசாமி, தெய்வமே நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. நடிச்சா மட்டும் போதும் என்று சட்டுனு இறங்கியும் விட.. அந்த சரணம் நடிப்பில்லை.. மெய் வெளிப்பாடு நடிகன் அஸீம் க்கு புரிந்தும் விட.. முதன் முதல் மனிதர்களின் மெய் சாயங்களை உற்று நோக்க ஆரம்பித்தான்..

கூட வந்த இவன் கைப்பாவையோ? நிழலில் அமர்ந்தவாறே கவிழ்ந்து தூங்க.. என்ன இது? வேடிக்கை கூட பார்க்க மாட்டாளா? கோவித்தான்..

அவன் நடிப்பதை பழிவாங்க போவதாய் சொல்லப்படும் அவள் ஏன் பார்க்கணும் ஆசைப்படணும்? லாஜிக் மனசு வசதியா மறந்துவிட்டது..

“சாப்பிடு வா ” மதியம் எழுப்ப..

இவ்ளோ வெயிலில் எப்படி நடிக்கிறீர்கள்? அதுவும் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப பேசி .. வெரி போரிங் அஸீ..
ஹாஸ்டலில் விட்ருங்களேன்..

அப்போ தினமும் அங்கு வருவேன் .. நீ என்னை பார்க்க வரணும்.. சாக்கு சொல்லக்கூடாது

மாட்டேன் .. படிப்பை தொந்தரவு செய்யக்கூடாது..

ஓகே..

போனில் ஏதோ செய்தி வர கத்தி தீர்த்தான் .. ஹிந்தியில் .

இவள் அவன் கோபத்துக்கு பயந்து கண் உருட்டி மிரள..

ஜஸ்ட் பேமிலி இஸ்யூஸ்.. முகம் மாற்றி அஸீ இவளை கூல் பண்ண..

நான் ஒன்னு சொல்வேன் அஸீ கேட்பாயா?

என்னடி?

பேமிலியே வரம் .. சண்டைலாம் போடாதே.. உனக்கு பொறுமை போதாது..

ஏய் .. கோடி கணக்கில் சொத்து எங்கண்ணன் பொய் கேஸ் போட்டு ஸ்டே வாங்க போறானாம்.. நான் விடுவேனா? மாட்டவே மாட்டேன்..

சார் ட்ரெஸ் சேன்ஞ் செய்யணும்.. உடை தரப்பட

வா கேரவனுக்கு போயிரலாம்.. விஜியையும் இழுத்துட்டு அங்கு போக.. மினி சொர்க்கமே அங்கு இருக்க..

நல்லாருக்குல்ல அஸீ விஜி மழலையாய் மகிழ..

அவனுக்கு இதற்குள் வந்தால் என்னென்னவோ தோணும்.. நிறய செஞ்சும் இருக்கான் ஆசைப்பட்டதெல்லாம்.. விஜியோடு தோன்றல.. வெறுப்பே காரணம் எதிர்பதமாய் நினைத்தும் கொண்டான்..

திரும்ப போன்.. அவன் தாய் போல.. இவன், அவரை திட்ட துவங்க கையை அழுத்தி பிடித்து கண்ணோடு கண் பார்த்து வேண்டாம் என்பதாய் மவுனமொழி பேச..

இப்போ என்னதான் சொல்றான் அந்த திருடன்?

உன் சினிமா சம்பாதனை எடுத்துட்டு போக சொல்றான் குடும்ப தொழில் வருமானம் பூரா அவன் உழைப்பாம் உனக்கு பங்கு தர மாட்டானாம்..

கண்ணு நரம்பு பூரா சிவப்பாக.. வாய் திறக்க முயன்றவனின் கன்னம் ரெண்டையும் தன் இரண்டு கைகளாலும் பிதுக்கி.. வேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ் விஜி வாயசைக்க..

நீங்களும் அப்பாவும் என்ன சொல்றீங்க? நார்மல் குரலிலேயே சின்ன மகன் கேட்க..

அப்பா அவனுக்கு ஒத்து ஊதுவது போலத் தெரியுது கண்ணா.. ஆனா இந்தம்மா ரொம்ப ஏழைடா உன் கூட வச்சுப்பியா? தாய் தன் செல்ல மகனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்காய் அழ..

தாயின் ஈரம் இவனையும் நனைக்க..

அம்மா அவனே எல்லாம் வச்சுகட்டும் எனக்கு நீங்க மட்டும் போதும்மா .. அழவேக் கூடாது.. சென்னைக்கு வந்துருங்க.. மும்பையை மறந்துட்டேன்.. அவ்ளோதான்.

குழப்பமான மன நிலையில் போன் வைக்க..

என் குட் புஜ்ஜி குட்டி.. கன்னம் கிள்ளி விஜி அவன் சாந்தத்துக்கு பரிசு தர..

லூசு போ.. உன்னால் அம்மாகிட்ட எதுவும் பேசல.. இப்படியே விடமாட்டேன் அவனை எங்கு வச்சு செய்யணுமோ செய்வேன் ..

பல்லை கடிக்க..

பணம் போவும் வரும் அஸீ .. உறவுகள் கிடைப்பது அரிது..

சண்டை போட பிடுங்க கூட உனக்கு உறவுகள் இருக்கே நீ நிஜமா கிப்டட் அஸீ.. எங்களை.. பேச்சு எடுத்தவள். சிவப்பு விளக்கு மூளைக்குள் எரிய.. அப்படியே அந்த பேச்சை கட் பண்ணி.. நீ கோபப்படாதே.. முகமே விகாரமா ஆகுது.. கூல் யா… எல்லாம் நல்லது தான் நடக்கும் அஸீ.. விஜி மெல்லிசு குரலில் சொல்ல.. உண்மையில் அந்த நேரத்தில் அவனுக்கு இது மனசை மயக்கத்தான் செய்தது.. வார்த்தைகள் சொன்ன அர்த்தங்கள் அல்ல.. சுத்தமா அவள் குரலின் இனிமையின் ஆழ்ந்துகிடந்தான்.. கண்ணன் குழலோசைக்கு ஆயர்பாடியே கட்டுண்டு கிடைந்ததாம்.. இந்த ராதையின் குரலுக்கு மாயக்கண்ணன் சுயம் இழந்தான்..

சரியா .. ரெண்டாவது வாரத்தின் மாலையில் அவன் வரவே இல்லை.. அவள் தோழிகள் ஷூட்டிங்கில் அடிபட்டு விட்டதாய் சொல்ல..

ஓடி தன் கட்டிலில் கவிழ்ந்து படுத்து முதுகு குலுங்க அழுதப்பத்தான் விஜிக்கு தெரிந்தது .. அந்த இம்சையை நேசித்தே விட்ட நிலையில் இருக்கிறோம் என்று..

தான் ஒரு பாதி டாக்டர்.. என்ன? எங்கே அடிபட்டது? பாதிப்பு எவ்வளவு கேட்க தோணாது அழுகை மட்டும் வருவது பேரன்பு அல்லவா?

உன்னை காணாது நான் இன்று நானில்லையே..!!
விதை இல்லாமல் வேரில்லையே..!!

தலைவனுக்காய் பாடி தலைவி ஏங்கி நிற்க.. அவளின் மாயவன் உணர்ந்தானோ?..

ஓர் உயிர் கெஞ்சுவதும் மறு உயிர் மிஞ்சுவதும் காதலின் சுவாரஸ்ய விளையாட்டு.. எண்ணியது போல யாவும் கிடைத்து விட்டால் சுவையிராது அல்லவா??
×××××××××××
இப்பக்கம் அதே நேரத்தில் தன் மனதை ரகுவுக்கு செல்வா சொல்ல..

“விஜியை உனக்கு தர வாய்ப்பே இல்லை செல்வா.. இது உனக்கு நண்பனாய் சொல்லல.. நாமே கேர் ஆப் பிளாட் பார்ம்.. விஜி படிப்பை முன் வைத்தாவது பேமிலியில் இருப்பவருக்கு கொடுத்து அழகு பார்க்க மட்டுமே எனக்கு விருப்பம் செல்வா..

இதுக்கு மேலேயும் இங்கு இருப்பது உனக்கு பிடிக்கலேன்னா கிளம்பி போயிரு.. உன் பங்கு பணம் செட்டில் பண்றேன் .. எங்கிருந்தாலும் தொடர்பில் இரு.. நான் விஜிக்கு நல்ல அண்ணன்.. அதே நேரத்தில் உனக்கும் நல்ல நண்பன் செல்வா.. இரக்கமே இல்லாது ரகு பேச.. அன்றே தன் அளவான பொருள்களோடு ஒர்க் ஷாப்பில் தங்கிக்கொண்டான்.. செல்வா.. அண்ணார்ந்து வெட்ட வெளியை வெறிச்சு பார்த்து கிடந்தவனின் கண்களில் வலியுடன் கூடிய ஒற்றை கண்ணீர் துளி வைரமாய் அவன் காதல் பெண் விஜிக்கு பரிசளித்தான் செல்வா..

காதல் காயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் விதமாய் வலிகள் தருவது வினோதமே..!!!

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top