14 AV
இன்றே வேணும் என்ற எந்த ஆத்திரமும் இல்லைதான் செல்வாவுக்கு.. ஆனால் விஜியின் நேர்மை தான் எரிச்சல் தந்தது.. சொல்றேன் சொல்றேன் என்று சொல்லியே அவளை நெருங்கும் விளிம்புக்கு தள்ளிவிட்டாள்.. அதனாலேயே அவள் பின்னோடு அணைக்கும் நிலை.. விஜிக்கு வேணும்னா இது புதுசு.. செல்வா கற்பனையில் காதலாய் தொட்டு மகிழ்ந்திருக்கிறான் அவனுக்கு அந்நியமாயில்லை.
“எதுக்கு கிட்டே வந்தே?” சட்டுனு விஜி பதறி திரும்ப.. முதுகின் அருகில் இருந்த செல்வாவின் முகம் மார்புக்குள் பதிய.. பதறி தள்ளி படுத்தாள் விஜி.. புது அனுபவம்
கொண்டவனுக்குத்தான் லேசா முகம் வாடியது.. நான் அவளோ மோசமா? இப்படி விலகுரா?
தொண்டைக்குள் ஏதோ உருள எச்சில் விழுங்கி சமன் செய்தான்.. பிடிக்க வைப்போம்!
“நீ பேசியது கேட்கல.. கிட்டே வந்தேன்..”
“ஓ.. இருந்தாலும் இவ்ளோ கிட்டக்க வேணாம் செல்வா”
“ஏன் விஜி?”
“சங்கடமாயிருக்கு..”
“அப்போ ஏன் கல்யாணம் பண்ணினே?! நான் இப்ப உங்க கேங்ல கூட இல்லியே.. வெளியே போனபின் என்னை தேடக்கூட இல்ல.. ஏன் விஜி, மற்றவர்களை எதிர்பார்க்கல.. விடு! ஆனா முதன் முதல் நீ நான் ரகு என்று மூணு பேர் தானே ஒன்னாயிருந்தோம்.. தேடணும்ல என் மீது சின்ன அன்பு கூட இல்லையா உனக்கு? நாய் வளர்த்திருந்து அது காணோம்னா கூட மனசு பதைக்கும்.. நான் அதுக்கு கூட ஒர்த் இல்லையா?” ஒருவித ஆற்றாமை தொண்டை கவ்வ.. விழுங்கி சமம் செய்தவன்.. சோகமாய் “ஒரு வீட்டில் இருக்கக்கூட ரத்த பந்தம் வேணும் போல.. நான் யாரோ தான்” முடித்து அமைதியானான்.. இதெல்லாம் அவன் மனசு கேட்டு மருகும் கேள்விகள்.. நேரடியா ரகுவிடமோ விஜியிடமோ கேட்க விரும்பாதவை. ஆனால் நிர்பந்தம் வந்தது அதுவும் தன் விஜியிடமோ கேட்டது செல்வாக்கே பிடிக்கவில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பும் சொல்லப்பட்ட வார்த்தைகளையும் திரும்ப பெற முடியாது. இலக்கு சரியோ தப்போ எங்காவது குத்திட்டு நிற்கும்.
விஜிக்கு நல்லவன் செல்வாவின் கேள்விகள் நியாயமானவை. ஆனால் பதில்கள் அதையும் விட கொடுமையானவை. சிலதெல்லாம் அப்படியே விட்டுறலாம் தொடக்கூடாது. தொட்டால்??!! இருபக்கமும் வலிக்கும். ஆனாலும் நொடியில் பின்னத்தில் செல்வாவை கம்பர்ட் பண்ண விரும்பினாள் விஜி.
“ஏய்! செல்லு ஏன் இப்படிலாம் கேட்கிற? உனக்கு இவ்ளோ பேச வருமா?”
விஜியிடம் முதன் முதல் இவ்ளோ வசனம் பேசி இருக்கிறான் செல்வா.. அவளுக்கே நம்ப முடில.. ஆம் இல்லை பதில் தரும் பாறை இது..
“பேச வைத்தது நீயும் உன் அண்ணனும் தான்.. என் அன்பை உங்கள் மேல் வச்சுட்டு அதுக்கு எந்த பிரதிபலிப்பும் வராது .. அத்தனையும் வேஷமா? நோகும் அளவு போனதால் வந்த வார்த்தைகள் இது விஜி” விரக்தியுடன் விளம்பி,
“எப்போ நீ மாறினே விஜி? ஒரு போன் கால் கூட பேச முடியாத அளவு!! சாரி இதெல்லாம் கேட்க கூடாது நினைச்சிருந்தேன்.. இப்படி ஆகிப்போச்சு.. ஏதும் பதில் வேணாம் .. விடு” என்று சொல்லிட்டு.. என்ன நினைத்தானோ?! கட்டிலை விட்டு எந்திரித்தான்.. அந்த அறையில் மூச்சு முட்டிய உணர்வு.. வெளியில் செல்ல ஆயத்தமாக, சட்டையை போட ஆரம்பித்தான்..
செல்வாவின் குரலின் வருத்தம் தனக்கும் வலி கொடுக்க,
“சாரி செல்லு.. உன் மேல பாசம் இல்லன்னு இல்ல.. உண்மையா பேச வெட்கமாயிருந்தது.. தொழில் விட்டுட்ட என்று ஜானுமா சொன்னாங்க.. நீயாச்சும் நல்லா இருந்தா போதும்.. எங்க நிழல் கூட உன் மேல் படக்கூடாது நினைச்சோம்.. அதான் எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி உனக்கு சுதந்திரம் கொடுத்தோம்..”
“அவங்களை தெரியும்.. நீ ஏன் தேடல?!”
“நிஜமாவே தெரில செல்லு.. அப்போ உன் அருமை தெரில வச்சுக்கோயேன்.. மன்னிச்சிருப்பா..” இறங்கி பேசியவள்.. லேசா குரல் உயர்த்தி .. இதோடா நீ ரொம்ப பண்றே.. இது எங்க செல்வா இல்ல. ம்ம்ம்”
பதிலேதும் சொல்லாது உர் முகம் வச்சு செல்வா வேறுபக்கம் முகம் திரும்பி கதவருகில் போக முயல..திகைத்தாள் விஜி.
“ஏய் உனக்கு இவ்ளோ கோவம் வருமா? என்ன? இப்டிலாம் பண்ணின கொன்றுவேன் பார்த்துக்க..” அவனை கதவு திறக்க விடாது.. அவன் வலிய கைகளை தன் கைகளுக்குள் சிறை படுத்தினாள்..
மென்மையாகவே தன் கையை அவளிடமிருந்து பிரிக்க செல்வா முயல.. விஜி விடாது பிடித்து ..
“வா படுக்கலாம் செல்லு.. தூக்கம் வருது ப்ளீஸ்.. ப்ளீஸ் ..” தன் சேல் விழி சின்னதாக சுருக்கி கெஞ்ச.. பதின்ம வயது விஜியா செல்வாவுக்கு காட்சி தர.. மவுனமாய் மன்னித்தான்
கட்டிலுக்கு வந்து இருவரும் படுக்க.. அங்கு அமைதி மட்டுமே இருப்பில்..
“செல்லு ஏன் இவ்ளோ பீலிங்ஸ்?!!”
“பேசாதே!”
“ஏன் இப்படி முரடு பண்ற?”
“நம்புனவங்க கிட்டே ஏமாற்றங்கள்.. கள்ளப் பாசங்கள் .. துரோகங்கள் அப்படித்தான் பேச வைக்கும் விடு விஜி”
என்னது இது? திரும்ப! திரும்ப!
இவளுக்கு முதுகு காட்டி பேசியவன் மீது கோபம் வர.. கண்ணில் பட்ட அந்த பரந்த முதுகில் நாலு போட்டு..
“சும்மா இரு..செல்லு.. இப்படி பேசினா நீ நல்லாவேயில்ல.. சொல்லி தெரியும் பாசங்களா நம்மது.. புதுசா அடுத்த ஆள் போல சிலம்பு தூக்கிட்டு வர நாயே..”
அதீத பிணைப்பும் உரிமையும் கொண்ட
விஜியின் வார்த்தைகள் மாயங்கள் செய்ய கொஞ்சம் மனம் இரங்கியவன்.. அவள் பக்கமாய் திரும்பி.. ஆடி விலகிய ஆழி கண்களை தன் கண்களோடு கவ்வி கலக்கவிட்டு..
“சும்மா தான் இருக்கேன்.. தாலி கட்டிய பின்னும்..” கேலியா லேசா புன்னகைத்து, பட்டை மீசை தன் வடிவத்திலிருந்து வளைய கவிதையா பேச..
ஏற்கனவே கண் எனும் கண்ணியில் சிக்கிய கன்னி இச்சிரிப்பில் தன் ரெட்டை புருவம் பூட்டிய வில்லாய் எழும்ப வியந்தாள்.. இந்த காதலன் செல்லு அவளுக்கு உண்மையில் புதியவன்.. என்னதான் கிட்டருந்து பார்க்கும் பொழுது புதுசா தெரிஞ்சாலும் விஜியின் கூட பிறந்த பிறவி வாய் சும்மா இருக்காதே..
“என்ன ரொம்ப சலிச்சுக்கிற செல்லு..”
“பேக்ட் சொன்னேன்’
“என்ன பெரிய பேக்ட்.. இவ்ரு பெரிய மன்மதரு போடா டேய்..” அவளும் கேலி செய்தாள்..
“வாய்ப்பு கொடு நிரூபிக்கிறேன்.. விஜி..”
“வாய்ப்பு தந்தால்!!” நினைக்கும் பொழுதே.. பெண்ணே பார்க்காதவன் ரத்தம் ஜிவ்வுன்னு எழும்பி எங்கெங்கோ தறி கெட்டு பாய.. போதை குரலில் செல்வா..
“போ போ உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்.. வெறும் வாய் தான்.. “
“ம்ம்ம்.. நாம் செய்யலாம் தானே? லைசன்ஸ் கூட இருக்கே?.. ” சீரியஸா செல்வா கேட்க..
“இருந்தா.. ஹான்.. ம்ம்ம்.. சும்மா இரு எருமை.. நான் வருத்தத்தில் இருக்கேன்”
“அதான் காது ஜவ்வு வலிக்க சொல்லிட்டியே?!”
“முதலில் அதெல்லாம் மறக்கணும் செல்லு.. அப்புறம் தான் நம்ம லைப் ஓகே.. புரிஞ்சிக்கோ ப்ளீஸ்..”
“ம்ம்.. மறக்க எத்தனை நாள் ஆகும்?”
“அதெப்படி கணக்கு சொல்ல முடியும்? லூசாப்பா நீயீ..”
“நான் லூசு தான். இன்னைக்கு இணைஞ்ச நம் உறவுக்கு என்ன அர்த்தம் விஜி?”
“முதலில் நான் சரியாகிக்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் செல்லு..”
“உன் பக்கம் உன் இஷ்டம் என் பக்கம் நான் சொல்றேன்..நமக்குள் ஒரு சின்ன டீல்.. சரி உன் லவ் பெயிலியரை வருசக்கணக்கில் நீ கொண்டாடிக்கோ.. நான் கேட்கவே மாட்டேன்.. அது என்னை ஒன்னும் பண்ணாது..”
“ஆமாவா செல்லு?!!!”
“இரு! இரு! ரொம்ப ஆச்சரியப்படாதே.. எனக்கு மட்டும் அப்பப்போ லஞ்சம் தந்தால் போதும்.. “
என்ன லஞ்சம் கேப்பான்?!! பாவம் அவனும் அப்பாவி ஆண் தானே ! பாவம்! பருவக்கோளாறு.. அப்பாவி வேற! முத்தம் தான் ஆசைப்படும் இந்த ஹல்க்கு.. ஹுக்கும்.. தப்பா யோசிச்சு, முந்திக்கொண்டு
“என்ன முத்தமா?”
“மொத்தம் விஜி!!”
மூச்சு திணறியது கேட்டவனுக்கும்..
கேட்கப்பட்டவளுக்கும்.. சிறிது நேரம் அங்கு பேச்சுக்கு வேலையில்லை. என்னென்னவோ ஆச்சு!
“நீ மோசம் போ..” சுணங்கினாள் விஜி. இன்னும் அவளுக்கு நம்ப முடில.
“ஆமாம் .. பெண்டாட்டியிடம் மட்டும் தான் விஜி..” செல்வா சுத்தம்
“டீல் வேணாம் போ”
“அப்போ இன்று உரிமையா மனையில் உக்கார்ந்தது நாடகமா? நான் உன் கை பொம்மையா? நீயம் ரகு போல என்னை யூஸ் பண்ணிக்கிட்டியா?”
“ப்ச்! எருமை.. எதுக்கு இப்படி மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற..”
“கல்யாணம் என்றாலே அதுக்குத்தானே விஜி..” கால் குரலில் செல்வா இசையாய் கேட்க.. மனம் குழம்பி கிடந்தாலும் உடல் சிலிர்த்தது விஜிக்கு. .. இது உண்மை தானே..
“டயம் வேணும் செல்லு”
“அப்போ நான் வெளியில் படுக்கிறேன் விஜி.. ஒரே கட்டிலில் சும்மா படுக்கணும் என்றால் என்னால் முடியாது.. சாரிம்மா.. என் அறைக்கு போறேன்.. அது முன்பு போல அப்படியே தான் இருக்கு.. போறேன்”
“அண்ணன் திட்டுவான்.. இங்கேயே இரு செல்லு”
“உன் மனசு உன் இஷ்டத்துக்கு என்னை ஏத்துகிறப்போ ஏற்று கொள்ளட்டும்.. நான் தலையிடவேயில்ல.. உன் பீலிங்ஸ் நான் மதிக்கிறேன்.. எனக்கு அது மட்டும் விட்டு கொடு.. இன்று மட்டும் என்றால் கூட போதும் .. 28 வயசு.. நீ சொல்வது போல எருமை மாதிரி உடம்பு வளர்த்து வச்சிருந்தாலும் இதுவரை செய்யாதது என் பிளாக் மார்க் தான் விஜி.. நீ அதை அழிச்சி எனக்கு ஹெல்ப் பண்ணலாம்ல..”
அவன் சுத்தி வளைச்சு.. உறவை யாசிக்கிறான்.. இது சங்கடமான நிலைதான் விஜிக்கு.. அதெப்படி இன்று முதலிரவு அஸீயோடு என்று கனவிலிருந்தவளுக்கு செல்வாவோடா? முடியுமா? திகைத்தாள்..
“ப்ளீஸ் விஜி.. நானும் பாவம் தானே? வேறு பெண் என்றால் இப்படிலாம் பேசுவேனா என்றெல்லாம் கூட தெரியாது.. நீ என் விஜி தானே.. நீயே உதவலேன்னா எப்படி?”
“இது உதவியா?” முகம் சிவந்தாள் விஜி. வராத வெட்கம் பொங்கி வழிந்தது.
” பல்லை கடிச்சி கண்ணை மூடிக்கோ! எனக்கு பதிலே தர வேணாம்.. நீ சும்மா மட்டும் இரு நான் கத்துக்கிறேன் என்று விட்டு கொடு விஜி.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ” எச்சில் விழுங்கினான் செல்வா.. எது பற்றி பேசுகிறோம் என்று உடலுக்கு தெரிய.. மெல்ல மெல்ல மோகத்தீ பற்றி எரிஞ்சி பட்டு பட்டுன்னு ரத்த நாளங்கள் வெடித்தது.. இன்று காலில் விழுந்தாவது சம்மதம் வாங்கிரனும்.. முட்டிக்கொண்டான் செல்வா..
விஜியின் இஷ்டத்துக்கு விடுவதும் அவள் மன காயத்தை ஆற்றாது.. தன் பக்கம் திருப்ப இதன்றி வேறு வழி இல்லை…. பித்தனாய் சும்மா காரணம் கற்பித்துக்கொண்டான்
அதும் சுங்கம் தாண்டினால் வரி வசூலிக்க முடியாது என்பது போல.. இன்று தாண்டிட்டா இவளிடம் இப்படி நெருக்கி கேட்பதும் முடியாது..
“ப்ளீஸ் விஜி.. எந்த கெட்ட பழக்கமும் கூட இல்லை.. இது மட்டுமே பழகனும் ஆசை படுறேன்…. பிச்சை போல கூட வேண்டா வெறுப்பாய் கூட தா.. ஆனால் “தா” விஜி..” கெஞ்சினான்..
“கஷ்டப்படுத்தாதே செல்லு.. ” கண் கலங்கினாள் விஜி.. பெண் என்றால் பேயும் இரங்குமாம்.. இவன் கணடுக்கல..
இங்கோ செல்வாவின் கெஞ்சலும் ஏக்க வார்த்தைகளும் விஜியை இரங்க வைத்தாலும்.. எப்படி அப்படி தன்னால் கொடுக்க முடியுமா? முடியாதே! தவித்தாள்..
“நீ சகிக்கும் அளவுக்கு கூட நான் அழகா இல்லயா?.. ” கட்டிலின் ஓரத்துக்கு அவன் தள்ளி போக..
“அப்டிலாம் இல்ல.. எனக்குத்தான் பிராப்ளம்.. டயம் கொடேன்.. எதுக்கு இப்போ தள்ளி போற? செல்லு”
“மனசு ஏங்க ஆரம்பிச்சுட்டுது விஜி.. இன்று நீ தரலேன்னா என்னைக்கும் வேணாம் .. நான் என் ரூமுக்கு போறேன் விடு..”
எங்கோ தொடங்கி எங்கோ வந்து நின்றது பேச்சு.. இந்த முறை வீரியமாவே செல்வா எந்திரிக்க.. அவனை எழ விடாது .. மேலேயே பூமாலையா விழுந்தாள் விஜி..
“விடு விஜி போறேன்.. எனக்கு எதுக்கும் ராசியில்ல.. “அவளை படுக்கையில் தள்ளி விட்டு எந்திரிச்சு போக..
“வேணாம்ன்னா போ போ..” திமிராய் படுத்துக்கொண்டு விஜி.. சடர்ன் பிரேக் போட்டது போல நின்றவன்..
அப்போ?
……..
“எஸ்யா?”
“உன் இஷ்டம்.. என் பக்கம் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பும் வேணாம் ஒகேவா?.. ” கவிழ்ந்து படுத்துக்கொண்டாள் விஜி.. ஏதோ ஒரு ஆகா உணர்வு..
“வேணாம்.. ” மூச்சு வாங்கினான் செல்வா..
விஜி எனக்கே எனக்கா?!!
உடல் தான் தரேன் சொல்லி இருக்கா? மனசு? பார்த்து வைக்கும் திருமணங்களில் உடல் தானே பிரதானம்.. மெல்ல மெல்ல தானே மனம் பழகும்.. தப்பில்லை..
நீள கூந்தல் பின்னி வைக்கப்பட்ட மல்லிகை சரங்கள் ஒழுங்கில்லாமல் முதுகில் படர்ந்திருக்க.. நெளி இடையும்.. வீணை குடம் போன்ற எழில் பின் மேடுகளும் லேசா தெரிந்த கொலுசு கால்களும்.. பெண்ணே ஒரு காந்த சக்தி.. ஆணெனும் காந்தத்தை கரைக்கும் காந்தம்.. செல்வாவும் மயங்கி நின்றான்..
தொட்டுக்கோ! சம்மதம் சொல்லிட்டா கொண்டவள்.. என்ன செய்யணும்?! எங்கிருந்து தொடங்கணும்?! முதன் முதல் காதல் செய்ய ஆசைபட்டவனுக்கு.. ஆசையே இப்போ அவனுக்கு எதிரியா நின்றது.. தேவை என்று கேட்டாச்சு.. வரமும் வாங்கியாச்சு.. அந்த வரத்தை எவ்வாறு பயன் படுத்துவது? பித்தனாய் நின்றான்..
காதல் தொடங்க தெரில.. விழித்தான்.. எனக்கு என்ன பிடிக்கும் விஜியிடம்? கூடல் உறவு மட்டுமா? இல்லயே .. அதுக்கும் மேலே காதல் வேணுமே… அதை காட்டு போதும் மனம் வழிகாட்ட.. அனுபமில்லாதவன் தயங்கியபடியே விஜியின் கால் பக்கம் சென்றவன்.. மடிந்து முட்டாங்கால் இட்டு.. மருதாணி பாதங்களில் தன் நெற்றி வைத்து பெண் எனும் சக்தியின் மறு வடிவத்துக்கு மரியாதை செய்தான்.. விஜியின் இதயரேகை பாதைகள் அதிர்ந்தது.. உயிருள் நுழைய உடலே கருவியாம்..