ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 08

அத்தியாயம் 8

 

“அய்யோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்? நாளைக்கு அவனோட கம்பெனிக்கு போனா.. என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானே.. இப்ப என்ன பண்ணுவேன்?” என்றவாறே சாப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவளின் கவனம் சமையலில் இல்லை. சிறிது நேரத்தில் சமையலறைக்கு வந்த ஹரிஷான்த், குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றியவன், கண்ணில் யோசனையுடன் நின்றிருந்தவள் பட,

 

“இப்ப யாரை ஏமாத்தப் போற?” என்று கேட்க, அவன் கேட்பது புரியாது மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்து இளகிய மனதை, பிடிவாதமாக அதட்டி, தனதுள்ளே அடக்கியவன்,

 

“இல்ல தீவிரமா யோசிக்கிறியே.. இந்த தடவை யாரை ஏமாத்த ப்ளான் போட்டுருக்க?” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்க,

 

“ம்ம்.. எங்க கம்பெனியை புதுசா ஒரு கம்பெனி வாங்கிருக்காங்க.. அதான்.. அதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்..” என்றவளது அருகே நெருங்கி வந்தவன், தனது மூச்சுக் காற்று அவளது முகத்தில் படும் தூரம் நின்று,

 

“உன்னைய மாதிரி எம்ப்ளாய் வேலை பார்க்குற கம்பெனியை வாங்குன அந்த கம்பெனிக்காரன்ல யோசிக்கணும்.. நீ எதுக்கு அதைப் பத்தி எல்லாம் யோசிக்குற?” என்று கேட்க, அவனது நெருக்கம் தாளாமல் விலகியவள் மனதுக்குள்,

‘அந்த இளிச்சவாயன் நீ தான்னு தெரிஞ்சா.. என்ன பண்ணுவியோ? பாவம..’ என்று யோசித்தவாறே, 

 

“உங்களுக்கு பிடிக்கும்னு ஃபிஷ் பிரியாணி பண்ணிருக்கேன்.. போய்.. ஃப்ரெஷாகிட்டு  வாங்க..” என்றவளை நக்கலாக பார்த்தவன்,

 

“பேச்சை மாத்துற? உன்னைய வேலைக்கு வைச்சுருக்குறானே.. அவனெல்லாம் சீக்கிரம் தலைல துண்டு தான் போடப்போறான் பாரு..” என்றவாறே குளிக்கச் செல்ல, 

 

“துண்டு.. துண்டு.. இந்தாங்க..” என்றவாறே ஹரிஷான்தின் பின்னோடு வந்து ஹாசினி கொடுக்க, அவளை கேள்வியாக பார்த்தான் அவன். 

 

“இல்ல.. குளிக்க போறேன்னு சொன்னீங்கல்ல.. அதான்.. ஹிஹிஹி..” என்று நின்றவளை மேலும் கீழுமாக பார்த்தவன், எதுவும் கூறாது அவளது கையில் இருந்த துண்டை வாங்கி கொண்டு, தனதறைக்குள் நுழைந்தான் ஹரிஷான்த். குளிக்க சென்றவனைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்தவளின் காதில் வாயில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் விழ, செக்யூரிட்டி கேமிரா வழியாக வாசலில் நின்றிருந்தவர்களை கண்டதும், பதறியடித்துக் கொண்டு வீட்டிற்குள்ளே ஓடினாள் ஹாசினி. 

 

வந்தது யாராக இருக்கும்?

***********************************************

 

“ஹேய் எங்க டி இருக்க?”

 

“என்ன கேள்வி மம்மி கேட்குறீங்க? நீங்க தானே பெட்டி படுக்கையை கட்டிவிட்டு ஊட்டிக்கு அனுப்பிவிட்டீங்க. இப்போ அம்னீஷியா பேஷண்ட் மாதிரி கேட்குறீங்க?”

 

“வாயடிக்காம ஒழுங்கா பதிலை சொல்லு.. ரெண்டு பேரும் தனித்தனியா வேற வேற ரூம்ல இருக்கீங்களா?”

 

“இல்லையே.. எங்க ரூம்ல தான் இருக்கேன் மம்மி..”

 

“பொய் சொல்லாத.. உன் முழியே சரியில்ல.. நிஜமா உங்களோட ரூம்ல தான் இருக்கியா? இல்ல.. ஹர்ஷுக்கிட்ட சண்டை போட்டுட்டு தனியா வேற ரூம்ல தங்கிருக்கியா?”

 

“அய்யோ மம்மி.. உங்க ஆயா சத்தியமா.. நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருக்கோம்..” 

 

“நான் நம்பமாட்டேன்.. எங்க ரூமை சுத்தி காட்டு.. நான் பார்க்குறேன்..”

 

“ஹலோ.. ஹலோ.. மம்மி.. கொஞ்சம் சத்தமா பேசுங்களேன்.. நீங்க பேசுறது எதுவும் சரியா கேட்கமாட்டேங்குது.. ஹலோ.. ஹலோ.. இங்க சிக்னல் வீக்காயிருக்கு மம்மி.. ட்டூ மினிட்ஸ் கழிச்சு ஃபோன் பண்றேன்..” என்று தன் கைபேசியை அணைத்த ஹாசினி, அடித்துப்பிடித்துக் கொண்டு ஹர்ஷவர்தன் அறைக்குள் ஓடினாள். அப்போது தான் குளியலறையில் இருந்து குளித்துவிட்டு வந்தவனின், இடையில் மட்டுமே துண்டை சுற்றியிருக்க, வந்த வேகத்தில் அவனது மார்பில் விழுந்தாள் விளானி. அவனது நெஞ்சின் ஈரம், அவளது கன்னத்தில் பதிந்து ஜில்லென்றெருக்க, ஓடி வந்த வேகத்தில், கையில் இருந்த கைபேசியில், வீடியோ அழைப்பை தவறுதலாக ஆன் செய்திருந்தாள் விளானி. 

 

“அய்யோ.. விளானிஇஇஇ.. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒரே ரூம்ல இருக்குறதை மட்டும் தான் நான் பார்க்கணும்னு சொன்னேன்.. அச்சோ.. கடவுளே.. கடவுளே.. நல்ல பொண்ணுமா நீ?!” என்று படபடவென பேசிய மலர்கொடி, தன் இணைப்பை துண்டித்துக் கொண்டார். ஆனால், அவரையோ அவர் பேசியதையோ கவனிக்கும் நிலையில் இருவருமே இல்லை. அவள் விழுந்து விடாமல் இருக்க, தன்னிச்சையாக விளானியை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தான் ஹர்ஷவர்தன். இருவரின் கண்களும் ஒன்றாக கலந்ததோ?! 

 

“ஹர்ஷா.. டேய் ஹர்ஷா.. எவ்வளவு நேரம் டா குளிப்ப? உனக்காக ப்ரியா வெளிய வெயிட் பண்ணிட்டுருக்காடா.. நீ இப்போ வர்றியா? இல்ல நாங்க மட்டும் ஷாப்பிங் போகட்டுமா?” என்ற நகுலனின் குரலைக் கேட்ட இருவரும் தன்னிலைக்கு திரும்பினர். அவனை விட்டு வேகமாக விலக நினைத்தவளின் கால் வழுக்கி விட, ஆஆஆஆவென விழப் போனவள், தன் பிடிமானத்திற்காக ஹர்ஷவர்தனின் துண்டை பிடித்து இழுத்தவாறே கீழே விழுக,அவளது இழுப்பிற்கு சென்றவன், துண்டில் கை வைத்தவாறே அவள் மீது விழுக, இருவரது இதழ்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன. ஜில்லென இருந்த அவனது தேகம், அவளது பஞ்சு போன்ற மேனியில் பட்டதும் சூடாகத் தொடங்கியது. மெல்ல உரசி நின்ற இதழின் மீது ,ஆழமாக தன் இதழ்களை பதித்தவனின் கைகள், அவளது இடையை தழுவ, 

 

“டேய் ஹர்ஷா..” என்ற சஜனின் குரலில், அவனை தன் மேலிருந்து கீழே தள்ளியவள், அங்கிருந்து வெளியே ஓட, தன்னை தள்ளிக் கொண்டு வெளியே வந்தவளை ஆச்சரியமாக பார்த்தனர் நகுலனும் சஜனும். அவள் பின்னோடு சிறிது நேரத்தில் உடையை மாற்றிக் கொண்டு வந்த ஹர்ஷவர்தனிடம்,

 

“என்னடா நடக்குதிங்க?” என்று நகுலன் கேட்க, 

 

“ப்ச்.. வீட்டுல இருந்து போன்டா.. ஆன்ட்டி பேசணும்னு சொன்னாங்களாம்..” என்று அலட்சியமாக பதிலளித்தவன், அங்கிருந்த தனது நண்பர்களை பார்த்து,

 

“சரி.. எங்கேயோ போறோம்னு சொன்னீங்க.. இன்னும் கிளம்பாம இருக்கீங்க..” என்று கேட்டவாறே அங்கிருந்த சோஃபாவில் அமர,

 

“டேய்.. ப்ரியா வந்துருக்காடா..” என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றான் அகில். தன் முன்னே வெள்ளை நிற மேற்சட்டையும் கால் பாதத்தைத் தொடும் நீலநிற பாவாடையும் அணிந்து,  அமர்ந்திருந்தவளை பார்த்தவன்,

 

“எனக்கு கண்ணு நல்லா தெரியும்..” என்றான் அலட்சியமாக. அதனை கேட்ட ப்ரியாவின் முகம் வாட, 

 

“ஓகே.. ஓகே.. நாம எல்லோரும் ஷாப்பிங் போகலாம்.. ஒருவாரமா வேலை வேலைன்னு சாவடிச்சுட்டான்.. வா.. ப்ரியா.. நாங்களே உன்னைய ட்ராப் பண்ணிடுறோம்.. அவனுக்கு மூட் சரியில்ல.. நாளைக்கு கேம் ரிவ்யூ வேற இருக்கு.. அவன் வரமாட்டான்.. வாங்க நாம போகலாம்..” என்றவாறே அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் அகில். அவர்கள் சென்றதும், தனது அலுவலக அறைக்குள் சென்றவன், தன் வேலைகளை செய்யத் தொடங்க, அவனது கைபேசி அலறியது. 

 

“ஹலோ.. ப்யூட்டி..” 

 

“எப்படிடா இருக்க? புது பொண்டாட்டியோட ஒரே குதூகலமா இருக்க போல?”

 

“நான் என்னமோ பத்து பன்னிரண்டு பொண்டாட்டி கட்டுன மாதிரி புது பொண்டாட்டின்னு சொல்ற.. நானும் புது மாப்பிள்ளை தான்.. அதுவுமில்லாம உன் பேத்திக்கூட இருந்துட்டு குதூகலமா இருக்க முடியுமா? நான் பாட்டுக்கு நான் உண்டு.. என்னோட வேலை உண்டுன்னு இருக்கேன்.. அவளை எதுக்கு என்கூட கோர்த்து விட்டுருக்க.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?”

 

“என்ஜாயி.. என்ஜாமி.. என்ஜாய்.. என்ஜாய்.. என்ஜாமி..”

 

“போ.. ப்யூட்டி.. நீ இங்க வருவேன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?”

 

“வயசு பசங்களுக்கு நடுவுல நான் எதுக்கு வயசானவ? நீயும் உன் பொண்டாட்டியும் சீக்கிரமே ஒன்னு சேர்ந்துட்டீங்கன்னா.. அதுவே எனக்கு போதும்..”

 

“அவ கூட.. நான்.. நடக்குறதை பேசு ப்யூட்டி..”

 

“ஏன்டா நடக்காது.. ஆமா அவளை ஷாப்பிங் பண்ற மாதிரி எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போனியா?”

 

“ஏன் கேட்குற?”

 

“வர்ற அவசரத்துல சில திங்க்ஸ், அவ அங்கேயே விட்டுட்டு வந்துட்டா.. இங்க வந்து வாங்கிக்கலாம்னு இருந்தா.. நீ அவளை கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கிக் கொடுத்து, கூட்டிட்டு வா..”

 

“நானா?”

 

“பின்ன நானா? கூட்டிட்டு போடா..”

 

“சரி..” என்றவன் விளானியின் அறையை நோக்கிச் சென்றான். அவளது கதவை தட்டியவன், தன் முன்னே வந்து நின்றவளை நிமிர்ந்து பார்க்காது வேறெங்கோ பார்த்தவாறே,

 

“கிளம்பு.. ஷாப்பிங் போயிட்டு வருவோம்.. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ.. நான் காரை ஸ்டார்ட் பண்றேன்.. நீ சீக்கிரம் கிளம்பி வா..” என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றான். காரை எடுத்துக் தயாராக இருக்க, கருப்பு நிற மேற்சட்டையும் மஞ்சள் நிற குட்டை பாவாடையுமாக வந்தவளை மேலும் கீழுமாக பார்த்தவன்,

 

“முதல்ல இவளுக்கு நல்ல ட்ரெஸ் எடுத்து கொடுக்கணும்..” என்று தனக்குள் முணுமுணுக்க,

 

“என்ன சொன்ன?” என்றவாறே முன் சீட்டில் அவனுக்கு அருகில் அமர்ந்தவளை பார்த்து, “ ஒன்னுமில்ல..” என்றவன், காரை அங்கிருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸை நோக்கி செலுத்தினான்.  

**********************************************

“ஹேய்.. என்ன எதுக்கு இப்படி ஓடி வர்ற?”

 

“வெளில யார் வந்துருக்காங்கன்னு பாருங்க?

 

“யாரு?” என்றவன் கதவின் அடையாள ஓட்டை வழியாக பார்க்க, அங்கே ராக்கி, சேவக், ராஜு, சரத் நின்று கொண்டிருக்க,

 

“அய்யோ இவங்களா? எதுக்கு இங்க வந்துருக்காங்க?” என்ற ஹரிஷான்த் அதிர்ச்சியுடன் ஹாசினியை பார்க்க, 

 

“உங்களோட ப்ரெண்ட்ஸ் தானே? எதுக்கு ஷாக்காகுறீங்க? உள்ள கூப்பிடடுங்க..’ என்றவாறே கதவை திறக்க சென்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,

 

“இவனுங்க எல்லாம் யுஎஸ்ல இருந்து இப்ப தான் திரும்பி வர்றானுங்க.. நமக்கு மேரேஜானது எதுவும் இவனுங்களுக்கு தெரியாது.. இப்போ நீ என் கூட இருக்குறதை பார்த்தா.. அவனுங்களே கதை திரைக்கதை வசனம் எழுதி பிக்சர் ரிலீஸ் பண்ணிடுவானுங்க..” என்று கூற,

 

“இப்போ என்ன பண்றது?” என்ற கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன், 

 

“நீ போய் உன்னோட ரூம்ல ஒளிஞ்சுக்கோ.. அவனுங்களை எப்படியாவது சீக்கிரம் அனுப்பிடுறேன்.. அதுக்கப்புறம் நீ வெளிய வா..” என்றவன் அவளை உள்ளே தள்ளி விட்டு கதவை திறக்க, தனது அறையின் அருகில் சென்ற ஹாசினிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது, அவள் அந்த அறையை பூட்டி, சாவியை கிச்சனில் வைத்திருப்பது.‌ மலங்க மலங்க விழித்திரை அங்கு நின்றிருந்தவள், அவர்கள் உள்ளே வருவதை உணர்ந்து, ஹாலில் இருந்த சோஃபாவில் பின்னால் ஒளிந்து கொண்டாள். 

 

“டேய்.. எப்படிடா இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு?! இப்ப என்னைய பார்க்கணும்னு தோணுச்சா?” என்று ஹரிஷான்த் கேட்டுக் கொண்டே, ஒளிந்து கொண்டிருந்தவளை பார்த்துவிட, அவளும் சைகையால் சாவி இருக்கும் இடத்தை கூற, அவள் மறைந்து இருக்கும் சோஃபாவை மறைத்தவாறு நின்று கொண்டவனின் கண்கள் சமையலறையை தொட்டு மீட்டன. 

 

“எங்கடா.. வேலையே சரியாயிருக்கு.. நாங்க ஆரம்பிச்ச கம்பெனி, இப்போ தான் ஓரளவு நல்லா போகுது.. ஆனா, நீ தான் ஃபோன் பண்ணாக்கூட எடுக்க மாட்டேங்குறியே? அதான், இங்க ஒரு மீட்டிங்குக்காக வந்தோம்.. அப்படியே உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்..” என்றவாறே ஹரிஷான்த் அருகில் வந்த சரத்தை, சிரித்துக் கொண்டே, தனக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர வைத்தவன், அவர்கள் கையில் வைத்திருந்ததை பார்த்து,

 

“என்னடா இதெல்லாம்?” என்று கேட்டு, அவர்களின் கவனத்தை திசை திருப்பினான். தங்கள் கையில் இருந்த பொட்டலங்களையும், பாட்டில்களையும் வைத்தவர்கள், சோஃபாவில் அமர்ந்த நிலையில், 

 

“இதுவா? ஃபாரின் ஸ்காட்ஸ் அண்ட் ஒயின்.. அப்புறம் நம்மூர் ஃபிஷ் பிரியாணி.. சிக்கன் க்ரேவி..” என்று சரத் கூற,

 

“உன்னைய நாள் கழிச்சு பார்க்கிறோம்.. வெறும் கையோடையா பார்க்கிறது? அதான் இதெல்லாம் வாங்கிட்டு வந்தோம்..” என்ற ராஜு வீட்டை சுற்றி கண்களை ஓட விட, தனது கண்களால் 

 

“நீங்க உட்காருங்க.. உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..” என்றவாறே ஹரிஷான்த் கிச்சனுக்குள் செல்ல,

 

“அதெல்லாம் வேணாம்.. அதான் நாங்களே எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டோமே.. நீ எங்கக்கூட வந்து உட்காரு..” என்றவாறே ராக்கி, ஹரிஷான்தின் கையைப் பிடித்து இழுத்து, தன்னருகே அமரச் செய்ய, மெல்ல மெல்ல அங்கிருந்து நகர்ந்தவள், அருகில் இருந்த மேஜையில் தன் தலையை இடித்துக் கொண்டாள். வலியில் தன்னையும் மறந்து, “அம்மாஆஆஆ..” என்றவள் கத்த, அனைவரின் கவனமும் சோஃபாவிற்கு சற்று தூரத்தில் இருந்த மேஜையின் மீது திரும்பியது. அதிர்ச்சியில் சிலையாய் உறைந்து உறைந்து போனவர்கள், ஒரே குரலில்,

 

“ஹாசினி?” என்று கத்த,

 

“ஹிஹிஹி.. நான் தான்.. சும்மா.. என்னோட கம்மல் ஒன்னு கீழ விழுந்துடுச்சு.. அதைத் தான் தேடிட்டு இருக்கேன்.. வேற ஒன்னுமேயில்ல.. என்று கூறியவாறே எழுந்து நிற்க, அவள் கஷ்டப்பட்டு, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிறோ, தானாக வெளியே வந்து தனது இருப்பிடத்தை காட்டிக் கொடுக்க, அதனை பார்த்தவர்கள், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். 

 

“ஹேய்.. நீங்க.. ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா?” 

 

“எத்தனை நாளாகுதுடா? ஏன் எங்கக்கிட்ட சொல்ல?” என்று அவர்கள் கேள்வி மேல் கேள்வியாக கேட்க, என்ன பதில் சொல்வதென்று அறியாது, விழித்துப் படி நின்றிருந்தனர் இருவரும். தனது நண்பர்கள் முன்னிலையில், ஹாசினியை தனது மனைவியாக ஏற்றுக்கொள்வானா ஹரிஷான்த்?

4 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 08”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top