4 ஜில்லு
ஸ்ரீ.. புது பெண்ணுக்கு ட்ரெஸ் கோட் சொல்லலயா?
அவங்க போர்த் பிளேஸ்ல இருந்ததால் சொல்லல.. ஸ்ரீனி நெளிந்தான்.
பேன்ட் ஷர்ட் ஹை ஹீல்ஸ் அல்லது புஷ் ஷர்ட் லாங் ஸ்கர்ட் அதெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியாச்சு. லியா டிசைனர் சுடிதார் போட்டு மயிலாய் வருவாளே தவிர வெஸ்டர்ன் கிட்டே போக மாட்டா. ஏனோ சட்டத்திட்டதுக்கு அடங்கல.
இனி சொல்லிடுங்க.. இன்னைக்கு ஷெட்யுல்?
ஸ்ரீனி நோட் எடுக்க..
ஷால்யா கிட்ட கொடு ஸ்ரீ.
ரோபோவாக வாசித்தாள். மனசு மட்டும் எதிலும் இல்ல…
அன்னைக்கு குடி மயக்கம் அடையாளம் தெரில.. அவனின் ஆயிரம் ஆட்டக்காரிகளில் ஒருத்தியா நடந்துகிட்டான். ஒத்துக்கிறேன். தாலி கட்டினானே கண்ணு தெரிலையா? அவ்ளோ வெறுப்பு போல.. ஒருவேளை அப்பி வச்சிருந்த பேய் மேக்கப்ல இவன் ஒரிஜினல் முகத்தை மறந்துட்டானோ? அதெப்படி மறக்கும்பா?!! அதெல்லாம் கூட சந்தேகத்தின் அடிப்படையில் விட்ருறேன்.
என்னோடு சிறு வயதில் குடும்பமாய் பழகியது.. ஸ்கூலில் பார்த்து சிரிப்பது.. அவன் அழகில் தான் சொக்கி நின்றது தெரிலையா? அசிங்கம். வெளி சொன்னால் அவமானம். இவளுக்கு கிறுக்கி முத்திரையே குத்திவிடுவார்கள்..
உன் ஆசைமுகம் எனக்கு ஏழெழு ஜென்மத்துக்கும் மறக்காதே கண்ணா! கண்ணீர் தேங்கி பார்வையை மறைத்தது.
உன் அப்பா அம்மா வேற அவன் பாரெண்ட்ஸ் வேற ஜீன் மாறும்ல உனக்கு மெமரி ஜாஸ்தி அன்பு ஜாஸ்தி அவனுக்கு ரெண்டும் இல்லன்னா அடிப்படை குறைபாடு தானே..
உலகியல் பொது கோட்பாட்டுக்குள் அதற்கு வெளியில் உள்ளவர்களை ஒப்பிடக்கூடாது. அறிவு கோடு போட, ஏற்பதாய் இருக்கவே விட்டுவிட்டாள்.
வா!
ஹான்.. கண் விரிய விழித்தாள் லியா.. அவளுக்குத்தான் கவனம் இல்லையே..
அவ்விடத்தில் யாரேனும் இப்படி நின்றிருந்தால் நொடியில் எரிச்சலாகி சாடியிருப்பான். ஷால்யாவின் கள்ளமில்லா பால்முகம் நெருக்கமாய் உணர வைத்தது. புதுசு தானே.. சொல்லலாம் தப்பில்லை மன்னித்தான். அவனை பொறுத்தவரை சமீ போல எள் என்றால் எண்ணையாக வழியும் ஸ்பீடி லேடிக்கு இணை யாருமில்லை. அதனால் எக்ஸ்பக்ட் பண்ணுவதும் மிஸ்டேக் தான். நிதனமானான்.
ஆர்&டி போகணும்ல..
ஆமாம் சார்..
இங்கு சார் சொல்லக்கூடாது. கால் கேசி
பழக்க தோஷத்தில் மண்டையை ஆட்டினாள் லியா.
வார்த்தைகளால் பதில் சொல்லு கட்டளையிட.
வாங்க கேசி! ஆர் அன் டி போலாம் கேசி! நேரமாச்சு கேசி! ஒன்பது பதினஞ்சுக்கு அங்கு இருக்கணும் கேசி! சென்னை ட்ராபிக்கை நம்ப முடியாது கேசி. பீக் ஹவர் கேசி.. புலம்பி தீர்த்துவிட்டாள்.
கேசிக்கு வடிவேலு ஜோக் கேட்ட மாதிரி குலுங்கி குலுங்கி ஒற்றே சிரிப்பு.. அவன் சிரிப்பு சப்தம் சம்பந்தன் வரை எட்ட கண்ணாடி கழற்றி அதிசயமாய் பார்த்தார். சேர்மன் சாருக்கு உடனே சொல்லணுமே சொன்னா செய்தியா இருக்கும் வீடியோ எடுத்தார்.
இதுபோல அவன் வாய்விட்டு சிரித்து வருஷ கணக்கா இருக்கும். சும்மாவே உம் குழந்தையவன். தாயில்லாதவன். படிப்பு, அப்பாவுக்கு அடுத்து தொழில் அவன் தான் பார்த்துக்கணும் என்ற வெப்பத்துக்குள்ளேயே வைக்கப்பட்டவன். இவ்ளோ கூல் கிடையாது.
கேசி கேசி என்று கிளி போல மிழற்றும் லியாவின் குரல் நரம்பை தொட்டது.
போதும் போதும் ஷால்யா.. போகலாம்.
வேக நடையோடு லிப்ட் பக்கம் போக பின்னோடு ஓடினாள் லியா.
*******
அவனுடைய பிரத்யோக டபார்க்கிங் போனதும்,
காத்திருந்த டிரைவரிடம்..
குமார் பிரேக்பாஸ்ட்க்கு ராயல் பாலஸ் போ..
சொல்லிக்கொண்டே அவன் காரின் கதவுக்கு அருகில் நின்று லியாவை பார்த்து அவள் இவன் முதலில் உள்ளே போ என்று சைகை காட்ட ட்ரைவர் பக்கம் இவள் போக முற்பட்டாள்.
கோ பேக்..
திறந்திருந்த இவன் பக்கமே வந்து ஏற முயல.. அந்த பக்கம் ஏறு அதும் சமிஞை தான்.
இதென்னடா ஷால்யாக்கு வந்த சோதனை. முட்டாள்! முட்டாள்! காரிலேயே முட்டிக்கலாம் போல இருந்துச்சு.
இது அவன் அட்டவணையில் இல்லாத நிகழ்வாச்சே! நேரமாகுமே!
சா.. கேசி டிபன் சாப்பிட்டா ஒன் அவர் லேட்டாகுமே!
ஆமாம் ஆகும். சமி இங்கிருந்தா இன்னேரம் எனக்கு என்ன தேவை தெரிந்திருக்கும் அப்புறம் தான் வெளியிலேயே வருவேன். உனக்குத்தான் தெரில..
முந்தைய சமீயின் டெய்லி டைரி பார்க்க.. நிமிசமும் விடாது அந்தம்மா இவனின் அத்தனை தேவையையும் பார்த்துருந்தது. கெடுத்து வச்சிருக்கு இந்த ட்ராகனை.
ஓகே கேசி நான் இனி டயம் மேனேஜ்மென்ட் கீப் அப் பண்றேன்..
அடுத்த நொடி அவர்கள் போகவேண்டிய இடத்தின் அப்பாய்ன்மெண்ட் நேரத்தை மாற்றி கொடுத்தாள். இவன் அருகிலிருந்தாலும் என்ன பேசினால் தெரில..
அடுத்து போன் டேட்டா எடுத்து ஹோட்டலுக்கு டேபிள் ரிசர்வேஷன்&மெனு சொல்ல ஆல்ரெடி புக் பண்ணிட்டாங்க..
ஓ! சீனியா இருக்கும்..
கேசி சாரே நேரடியா கேட்டுக்கொண்டதால் சிறப்பா தயாருகுது.
பாவம் பசி போல!
இவளுக்காய்! தெரில .
காதில் ப்ளூ டூத் மாட்டி, செல்லில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த கேசி இவளுக்கு புதுசு.
சிறுபிள்ளைத்தனம்! அப்படி என்னதான் பார்க்கிறான். ஓரக்கண்ணில் நோட்டமிட.. ஹோட்டலில் கேசி வலு கட்டாயமாக இவளை இழுத்து போகும் காட்சி.. ஐயோ! அம்மா! தெரியுமோ இவனுக்கு?! பீதியானாள்.
××××××××××××
பேரனின் சிரிப்பு தாத்தா தாமோதரனிடமும் தொத்தியது. உடனே சம்பந்தனுக்கு போன் அடிச்சுட்டார்.
திருநா! சந்துரு எதுக்கு இப்படி சிரிக்கிறான்?
ஷால்யான்னு ஒரு பொண்ணு கேசிக்கு பிஏ வா சேர்ந்திருக்கு.. முட்டையிலிருந்து வெளிவந்த கோழி குஞ்சு போல எதுவும் தெரியாத பச்ச மண்ணு. கேசி பேர் சொல்லி கூப்பிட சொல்லியிருக்கார் பயந்து உளறி வச்சிருக்கு அதுக்கு தான் கேசிக்கு சிரிப்பு..
பேக் கிரவுண்ட் செக் பண்ணியா?
பார்த்தா பெரிய இடத்து பெண் தெரிது. சிவி பார்க்கிறேன் சார்..
செய்ங்க.. பேர் என்ன சொன்னீங்க
ஷால்யா
ம்ம்ம் வச்சுட்டார்..
ஷாஷா நினைப்பு வந்தது அவருக்கு.. நானே பழசு கிளறுவதில்லை.. இவன் எதுக்கு பிரஷர் போட்டுக்கிறான். சைக்கோ பேரனை நினைத்து கவலை கொண்டார்.
××××++×++×+++++
ஷால்யாக்கு இங்கிலீஷ் கலர்ஸ் தான் பிரியம் இன்று வெண் பட்டில் மிரர் ஒர்க் செய்யப்பட்ட அழகிய சுடிதார் மெல்லிய ஷால். வளைவுகளை செதுக்கி காட்டும் உடை தைப்பு பூசிய தேகமும் வயிறே இல்லாத உடலமைப்புக்கும் அம்சமாய் பொருந்தி பேரழகியாய் காட்டியது.
கேசி கூட வரும்பொழுது பணியாளர்கள் அதே மைண்ட் செட்டில் வருவதால் உடல் மொழியே பிரிச்சி காட்டிரும். தலைவன் யார் என்று! இங்கோ லியா இயல்பிலேயே சீமாட்டி பிறப்பு.
கேசி கூட நடக்கும் பொழுது அவனுக்கு இணையாய் கம்பீரமாய் நடந்தாள். அவளின் எவ்வித பிரதிபலிப்பும் இல்லா முகம் அவனுக்கானவள் என்றே எதிரிலிருப்பவருக்கு காட்டிச்சு..
நீயும் என்னோடு சாப்பிடு ஷால்யா..
எதிரில் அமர்ந்தவள் சமீயின் டயரிக்குள் தேட போய்ட்டா.. நாமும் சாப்பிடணுமா? அங்கு அது போல இல்ல.
ஒய் மீ? கண்டு கொண்டானா?
👌👌👌👌👌👌👌
iIKbOvjHZexAQLX