5 ஜில்லு
ஷால்யாக்கு பசியில்லேன்னாலும் பாஸ் சொன்னால் சாப்பிட்டு தான் ஆகணும் சும்மா பேருக்கு கொரித்தாள்.
எதிரில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கேசி. எதற்கு இவளிடம் மட்டும் இளகுகிறேன்? ஓர் இரவு என்னோடு இருந்தவளையும் பிடிக்குதே! புதிதாய் தோன்றும் வினோத உணர்வுகளால் திணறினான். ஒருகாலத்தில் இரும்பு இதயம் எனப்பட்டது பேப்பர் போல கசங்கியது.
டைனிங் லாபியிலிருந்து கீழே போனால்தான் ரிசப்ஷன் வரும் அமைப்பு கொண்டது அந்த ஹோட்டல். உண்ட பின் இருவரும் லிப்ட்டில் ஏறும் பொழுதே பின்னோடு திமு திமு வென ஸ்போர்ட்ஸ் டீம் போன்று யூனிபார்ம் போட்ட நான்கு முரட்டு ஆண்கள் ஏற.. அனிச்சையாய் கேசியோடு ஒட்டினாள் ஷால்யா.
இவர்கள் கிரவுண்ட் பிளோர் பின் பண்ணி வைத்திருக்க, அவர்கள் அதை எடுத்துவிட்டு மேல் மாடிக்கு அழுத்தினர்.
ஏதோ சரியில்ல கேசியின் மூளை எச்சரிக்கையானது. இத்தனை நாள் வெளியிலிருந்த எதிரி இன்று நேரடியாக ஆள் அனுப்பி இருக்கான்.. ம்ம்ம்
இவ்ளோ பயம் விட்டு போச்சா?! தாடை இறுகி தன் பாக்சர்களுக்கு இவன் அலர்ட் கொடுக்கும் போதே.. தோளில் தொங்க விட்டிருந்த கேஸ்களிலிருந்து உருட்டு கட்டைகளை எடுத்தனர் அந்த முரடர்கள்.
எத்தனையோ நாள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது அவர்களின் பதட்டமில்லா அணுகுமுறையில் தெரிந்தது.
“ஏய் பொண்ணு வர புளோர் இறங்கிக்கோ? போலீஸ்லாம் கூப்பிடக்கூடாது ..புரிதா?”
“சரிங்கண்ணா.. நீங்களாம் கொஞ்சம் பின்னாடி வாங்க.. நான் முன்னாடி வந்துருறேன்.. வெளியே போக வசதியாயிருக்கும்” முன் பக்கம் போனாள் லியா.
இவன் மீது தாக்குதல் நடத்த போவது உறுதி என்று தெரிஞ்சி போச்சு கேசிக்கு.. லியாவை அனுப்பி விட்டது நல்லதுக்கே எண்ணிக்கொண்டான்.
தனக்கு உதவி வரும் வரை சமாளிப்போம். டையை தளர்த்தி, கை கஃப் பட்டனை கழற்றி, மடித்து தயாராகி விட்டான். என்ன ஆனாலும் பரவாயில்லை ஒரு கை பார்த்துருவோம் தயாரானான் கிருஷ்ணசந்தர்.
முன்னாடி வந்த ஷால்யா லிப்டை ஹோல்ட் மோடில் போட்டவள் அடுத்த நொடி, முதலில் மாட்டியவன் கையை முறுக்கி திருக்கி மட்ட மல்லாக்க நச்சுன்னு லிப்டின் மெட்டல் தரையில் அடித்தாள். மற்றவர்களையும் சுதாரிக்க விடாது கை கால் முட்டியில் பவர் கொடுத்து எதிராளியின் வலி மிகும் இடங்களை அடுத்தடுத்து தாக்க.. சண்டைக்கு ரெடியாக இருந்த கேசியும் அவள் சேப் என்றதும் அவர்களின் கட்டையையே ஆயுதமாய் எடுத்து நைய புடைக்க ஆரம்பித்தான்.
இருவரும் அந்த குட்டி சதுர இடத்திலேயே அதகளம் செய்து விட்டனர். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பொறிக்குள் சிக்கிய எலிகள் போல அந்த சதை மலைகள் வசமாய் சிக்கிக்கொண்டன. இந்த ட்விஸ்ட் அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
நால்வரும் சுருண்டதும் கேசி அபிசியலா போலீசை அழைக்க.. இவள் சும்மா இருக்கவில்லை. கிரவுண்ட்க்கு வரும் போது ஓடி தப்பிக்க முடியாதளவு நாலு பேரு சட்டையையும் அவிழ்த்து பின் பக்கமாய் கைகளை ஒன்னு சேர்த்து நாட் போட்டுட்டா.
லிப்ட் விட்டு வெளியே வந்தது தான் தாமதம். எமர்ஜென்சி போன்று சட்டப்படி நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் செவ்வென அரங்கேறியது.
லியாவுக்கு நேரடி அடிகள் இல்ல.. கேசிக்கு வலது கைவிரல் முழிகளில் ரத்தம் கசியும் அளவும் தோளில் முதுகில் ஊமையடிகள் பட்டிருந்தன.
ஹாஸ்பிடலில் கேசிக்கு செக் பண்ணும் போதே.. இவளுக்கும் முழு பரிசோதனை செய்ய கேசி ஆணையிட..
வேண்டவே வேண்டாம் எனக்கு ஒன்னுமில்ல.. எனக்கு ஒன் ஹவர் பெர்மிஷன் மட்டும் கொடுங்க ட்ரஸ் மாத்திட்டு அப்படியே நான் ஆபிஸ் போய்டுறேன் கேசி..
டிரைவர் குமார் கூட போ..
சரிங்க.. ஆபிஸ் வந்ததும் சம்பந்தம் சாருக்கு ரிப்போர்ட் பண்றேன்ங்க..
உன் நம்பர் சொல்லு.. சொன்னாள். மிஸ்ட் கால் தந்தவன்..
இது என் பெர்சனல் நம்பர் என்கிட்டேயே நேரடியா பேசு
சரிங்க.
நில்லு.. ஏதாச்சும் கேளு.. நீ செய்த உதவியால் நான் ஹாப்பியா இருக்கேன்.. உனக்கு என்ன வேணும்?
நீ நீ நீ நீ நீ… காதலாய்! சிறு ஊடலாய்! பெரும் தேடலாய்! என் உயிராய் வேணும். மனசுக்குள் கவிதை வரிகள்.
ஆபிசுக்கு என் ஸ்டைலிலேயே ட்ரெஸ் பண்ணிட்டு வர விடணும் அது போதும்..
உன் இஷ்டம் போல வா! வேற கேள் தரேன்.. பணம் கோல்ட் பாரின் ட்ரிப் இப்படி…
எதுவும் வேணாம்.. கிளம்பறேன்ங்க.. சொல்லிச் சென்றவளை அதிசயமாக பார்த்தான் நாயகன்.
இக்கட்டான நேரத்தில் ஸ்மார்ட்யா அதிரடி செய்த ஷால்யாவின் வீரத்தை நம்பவே முடில! மெச்சிப்போனான்.
இவன் ஒருவனே நான்கு பேரொடு சண்டையிட்டால் நிச்சயம்அடிபட்டிருக்கும்..
லியா சமயத்துக்கு வலிமையான பார்ட்னரா அமைய இவனும் நல்லா மொத்திவிட்டான். சண்டை கூட இனித்தது.
தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது மட்டில்லா மகிழ்ச்சியை தலைவனுக்கு ஏற்படுத்தியது. அனுப்பிய எதிரிகளுக்கு எப்படி இருக்கும்? திரும்ப இது போல செய்ய நினைப்பானா?! பெருமை கொண்டான். லிப்டிலேயே வச்சி தாக்கியது இராஜ தந்திரம்.
வாவ் பொண்ணு! சிலாகித்தான்.
தனியே சிக்கி அடிப்படுவது என்பது அவமானம்.. தன்னம்பிக்கையை குறைத்து உயிர் பயம் செய்யவே நடந்த சம்பவம் இது.
அதையும் நல்லா திருப்பி கொடுத்து வா பார்க்கலாம்! என்று எதிரிக்கே சவால் விட செய்தது அற்புதமான மூவ். ஷால்யாவை மனதுள் பாராட்டி தள்ளினான்
“”””””””””””’
ட்ரெஸ் மாற்றவென்று இவள் பிளாட் வந்ததும் திருட்டு வேலை செய்ய கை துரு துரு வென்றது.
கேசி பெர்சனல் நம்பர் கிடைச்சுருச்சே! பொண்டாட்டி தெரில.. பெட் மேட் ஆவது தெரிதா பாப்போம்.. சில தில்லு முல்லு செய்து அவனுக்கு WA ல தங்கிலிஷ் மெசேஜ் போட்டாள்.
டேய் தம்பி நல்லாருக்கியா?
அவன் பார்க்கல.. காத்திருந்தாள்.
தாத்தா போன் வர எடுத்தவனுக்கு மேலேயே அந்த செய்தி நிற்க..டேய் தம்பியா?!
அதிர்ச்சியானான்.
வார்த்தைகளும் கரண்ட் ஷாக் தரும் கேசிக்கு இப்பதான் தெரிந்தது.
இவன் எந்த எதிரியோ சடைத்தான். அடிதடியில் நொந்திருந்தவன் இப்ப தான் தன் வீட்டுக்கு போயிருந்தான்.
ஹு ஆர் யூ? கடுப்பில் பதில் கேள்வி அவன் அனுப்ப..
கில்மா போட்டோ ஒன்னு போடுறேன். யார்னு தெரியும்
அனுப்பிவிட்டாள். பைல் கன்டென்ட் போட்டோ
பணத்துக்காக பிளாக் மெயில் பண்றாங்களோ என்று அக்கம் பக்கம் பார்த்து தனியே போய் திறக்க..அவன் சட்டையில்லாது உறங்கும் போட்டோ..
அந்த ஓர் இரவின் அடையாளம்.
அவளோ! அவளே! முகம் தாமரையா பூத்தது.. நம்பர் பார்த்தான். சேவ் பண்ணி பேர் பார்க்க முயல ரோஜாப்பூ மட்டும் இருந்தது.
“ஒயிட் ட்ரெஸ்” என்று பேர் கொடுத்து அவனா பதிந்து கொண்டான்.
நார்மல் போன் போட்டான் போகல.. வீடியோ கால் பண்ண எடுக்கல. சும்மாயிருந்தாள்.
“உன் பேர் என்ன? உன்னை பார்க்கணும்! சாரி கேட்கணும்! பேசணும். பழகணும் “
அதற்கு நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு.. ஒத்துப்பியா தம்பி?
எதுவென்றாலும் டீல்..
தமிழ்ல டைப் பண்ணுடா தம்பி
தமிழே தெரியாதே பேச்சு வழக்கு தெரியும் . பிளஸ் டூ வரை தான் இங்கு ..செகன்ட் லாங்வேஜ் பிரன்ச் எடுத்திருந்தான். மாஸ்டர்ஸ் பூரா லண்டன் தான். முதல் விதியிலே திகைக்க வைக்கிறாளே! அயர்ந்தான்.
அடுத்த பைல் வந்தது
நான் வேணும்னா கஷ்டபடு பூமருஉஊஊ..
அவ்ளோதான் நெட்டை தூக்கிட்டா..
அன்று போட்டிருந்த கவுன் தான் அந்த பைலில் இருந்தது. ஏற்கனவே திரும்ப திரும்ப செல்லில் பார்த்து வசியத்திலிருந்தவன் விழுந்துவிட்டான். நூத்துக்கு மேலே ஊத்துக்கள் அடிவயிற்றில் பொங்கின..
×××××××××××
இதே வேளை
கெஜலட்சுமி இந்நாட்களில் மிகவும் உற்சாகமாயிருந்தார்.
மகள் வேலையை எழுதி கொடுத்ததே தன்னோடு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை தந்திருந்தது. சிறுப்பெண் போல அலைந்தார்.. தங்கள் அரண்மனை போன்ற வீட்டை மராமத்து பார்க்க ஆரம்பித்தார். இது முடிந்ததும் பெயிண்டிங் வேலை தொடங்கிரனும்..
பாப்பா ரூம் இன்டெரியர் மாற்றுவோமா? அவ பொருள்களை கலைத்தால் கோப்படுவா? போன் பண்ணி ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்.. யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே.. அவர் செல்லுக்கு பாரின் கால் வர, லட்சு முகம் ஒளிர்ந்தது.. இது ஷாஷாக்கு அவர் பார்த்து வச்சிருக்கும் மாப்பிள்ளை..
நெருங்கிய சொந்தங்களில் விசாரித்து எடுத்து கிடைத்த வரன் ஜெய் வசந்தன். தூரத்து சொந்தமுமாகவும் இருந்தான்.
முதன்முறை செய்த தப்பு போல அல்லாது உறவினர் புடை சூழ அவன் பெற்றோரை, குடும்பத்தை சோதித்து, ஜாதகம் பார்த்து போட்டோவில் மாப்பிள்ளை முகம் பார்த்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் வசந்த். லட்சுக்கு பிடித்த நல்லவிஷயம் அவனுக்கு இது முதல் திருமணம்.
ஜஸ்ட் விசாரிச்சு எடுத்து தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு வேளை ஷாஷாக்கு இவனை பிடிக்கலேன்னா வேறு கூட பார்த்துக்கலாம் லட்சு எண்ணம். கட்டாயம் பண்ண விரும்பவில்லை. அனைத்திலும் மகளுக்கு பெஸ்ட் கிடைக்கணும் பேராவல் கொண்டார்.
எப்படி இருக்கீங்க வசந்த் ?..
“பைன் ஆன்டி.. நெக்ஸ்ட் வீக் இந்தியா வரேன். டிக்கெட் கன்பர்ன் ஆச்சு. அதான் உங்க கிட்ட சொல்ல கால் பண்ணேன் “
ரொம்ப நல்லது. சந்தோசம்பா..
ஷாலுவை பார்க்கணும் பழகணும்னே வரேன் ஆன்டி.. தயங்கி பேசினான்.
ஷால்யாவின் போட்டோ பார்த்த பின் பைத்தியம் பிடித்துப்போனது. அவன் நினைத்திருந்த மாதிரி பெண் கிட்ட உடனே கல்யாணம் பண்ணிக்கனும் ஆவல் கொண்டான். அவளை பற்றி சொல்லப்பட்ட கதைகள் பாவம் இந்த பெண் என்று நினைத்தானே தவிர களங்கம் தெரில..
“நல்லதுப்பா வாங்க! ஷாஷா நம்பர் தரேன் வச்சுக்கோங்க. நான் உங்களை பத்தி அவ கிட்ட சொன்ன பிறகு பேசுங்க..”
“இன்னும் அவங்களுக்கு தெரியாதா ஆன்டி” ஏமாற்றமானான் வசந்த்.
“பெரியவங்கக்குள் சுமுகமான பின் சொல்லலாமிருந்தேன்.. நீங்க தான் இங்கு வரீங்களே.. இப்போவே பேசிடுறேன். உங்க நம்பர் அவளுக்கும் சேர் பண்றேன்..”
“ஓகே ஆன்ட்டி.. ஷால்யா அவங்களுக்கு என்னென்ன பிடிக்கும் கொஞ்சம் வாட்சப்லல போட்டு விடுங்க .. வீக்கென்ட் ஷாப்பிங் பிளான்ல இருக்கேன் ஆன்ட்டி.. ப்ளீஸ்!”
“நிச்சயம் அனுப்பறேன்பா பை”
என்ன பிடிக்கும் அவளுக்கு? யோசித்தவருக்கு இந்த அஞ்சு வருஷமும் இவர் அவளுக்காய் செய்வதை வாங்கிக்கொள்கிறாளே தவிர புதிதாய் ஏதும் மகள் கேட்டதில்லை.
அச்சோ! நான் கவனிக்கவேயில்லையே! போனதெல்லாம் போகட்டும். இனி என் கண்மணியை பத்திரமா பார்த்துப்பேன்.. நெகிழ்ந்தார்
கேரளா நம்பூதிரி சொன்ன போல பாப்பாக்கு நல்ல நேரம் தொடங்கிடுச்சு ..
கடவுளே என் பிள்ளைக்கு கருணை காட்டுங்க .. மூணு டாக்டர் பட்டம் வாங்கியவர் மகளுக்காய் மன்றாடினார்.
அன்பு! கடவுள்! உலகத்தில் அதிகமாய் பேசப்படும் கருபொருள்கள்.
ரெண்டை பற்றியும் விளக்கங்கள் வித விதமாக இருந்தாலும் இதான் அது யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
ரெண்டு நாள் கழித்து கேசியை கலாய்க்க ஆசைப்பட்டு செகண்ட் WA பக்கம் போனாள் லியா.
“என்னடா தம்பி! எப்டிகீர?” ப்ளூ டிக் விழுந்த மறுநொடி..
” என் ஒவ்வொரு இரவுக்கும் நீ வேணும் கண்ணம்மா!” சுந்தர தமிழில் பதில் கேசி.
அடேய் இதென்ன இப்படி?! மீன் குஞ்சு வாய் பிளந்து சிலையானாள் ஷால்யா.
😂👌👌👌👌
Nice, wait for next epi
👌👌👌👌👌👌👌👌
dUSIfKHOlmPsLa
Next ud pls
வாரத்திற்கு இரண்டு யூ டி போடுவதற்கு பதிலாக குறைந்தது மூன்றாவது போடவும் நன்றி பிரதர்
Marubadiyum kaanama poidathinga writer re
👌👌👌👌👌
NWbGdXRArtu