6 ஜில்லு
என்னடா இது ஷாஷாக்கு வந்த சோதனை!
உடல் சார்ந்த உறவுக்குத்தான் சக்தி அதிகமா?!
நான்! என் லவ்! என்னிடம் உள்ள அவனுக்கான நினைவுகள் அனைத்தும் வீணோ?! விளையாடும் மனநிலையிலிருந்தவள் தீவிரமானாள்.
உன்னை வாடா போடா சொல்றேன் ரோஷம் வரலியாடா.. கடுப்பாகி தமிழில் அடித்தாள்.
வரல..
நேரம் கழிச்சு விடை வந்தது.. கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில்ல போடறான் பிராடு பாஸ்
“ம்ம்ம். மன்னிச்சுட்டேன் மறந்துட்டேன்.. குட் பை..”
ஆப்பை டெலிட் பண்ணிட்டு வெளி வந்துவிட்டாள். அந்த டம்மி சிம்மையும் உடைத்து போட்டாள்.
அவனுக்கு எளிதாய் வந்த துரோகம் இவளுக்கு வரல..
தன் கட்டிலோடு ஒட்டிய ஒரு மூலையில் குத்துக்காலிட்டு முகம் புதைத்து அழுகையோ அழுகை. இமையோரங்கள் வீங்கி சிவக்குமளவு.
கண்ணனை நேசித்த மீரா பாடல்கள் வழி காதலில் கசிந்து உருகினாளாம். இவளுக்கு கண்ணீர் உதவியது.
ஒருபக்க காதல் இத்தனை கொடியதா?!! அவனுக்கு என் லவ் தெரில. மிஸ்டேக் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு குட்டி பெண்ணின் அஞ்சு வருஷ வாழ்க்கையை வீண் பண்ணி இருக்கான் அந்த குற்றவுணர்வு கொஞ்சங்கூட இல்லையா? காலங்கார்த்தாலா மெசேஜ் போட்டது தப்பு. போன் அடிக்க எரிச்சலானாள் ஒரு பீலிங்ஸ்ய உருப்படியா பீல் பண்ண உடாது இது. கடுப்பில் எடுத்தாள்.
“மேடம் கீழே நிற்கிறேன்..” ட்ரைவர்.
“இன்னைக்கு நான் லீவு. ஆபிஸ்க்கே போய்டுங்க குமார்.”
“சார் ரீசன் கேப்பாரே?”
“மெயில்ல சொல்லிக்கிறேன். நீங்க போங்க..”
“நாளைக்கு கூட போடுங்கம்மா இன்னைக்கு சேர்மன் சாருக்கு பிறந்த நாளு..” அவர் இழுக்க..
பிளான் செஞ்சதே எங்க டீம் தானே சலித்தாள். கூட பொண்டாட்டி இருப்பது பேரனுக்கு தான் கண்ணு தெரியாது. சேர்மன் தாத்தாக்கு தெரிஞ்சுடுமே..
“நானே வரேன் போங்க..” பொய் சொல்லி அனுப்பிவிட்டாள்.
மூட் அவுட் என்பதால் பூனை குட்டியாக சுருண்டு படுத்து சொகுசு கண்டுக் கொண்டிருந்தாள்.
மீன் தொட்டியில் நீந்தித் திரியும் கோல்டு பிஷ் போல நிச்சலமான மனதோடு கிடந்தாள்.
வேலைக்கு போனால் தான் சும்மாயிருக்கும் அருமை புரியுது.. அவ்ளோதான் இங்கு வேலை முடிச்சதும் இப்படியே சுகமா கிடக்கிறோம்.. வாழ்க்கையை சும்மா கிடந்தே அனுபவிக்கிறோம்.. எவன் புன்னகையும் வேணாம். இந்த முதலாளிங்க தொல்லை தாங்க முடில.. சலித்துக்கொண்டாள்.
போன் நீத்து..
“என்னடி உன் தலையையே காணோம்.”
“லீவ்”
“என்னாச்சுடி “
பிஜில வைபை ஒர்க் ஆகலயா? இப்படி வீணா போச்சே ஒரு நாள்ன்னு மனசு சரியில்ல.”
என்னவோ ஏதோன்னு கதை கேட்டு கொண்டிருந்த நீத்துக்கு குபீர்னு சிரிப்பு வந்துவிட்டது.
“என்னதிது சிறுப்பிள்ளைத்தனமா மரியாதையா கிளம்பி வாடி” உரிமையா திட்டினாள் நீத்து.
“அன்னைக்கு ஒன்னு சொன்னே தெரியுமா?”
“என்னது?”
“என் புருஷனை கொல்லப்போறேன்னு..”
அது அ.. து அன்னைக்கு உணர்ச்சி வசப்பட்டிருந்தேன்.. ஆற அமர யோசிச்சு பார்த்தேன்.. அவன் கிடக்கிறான் விடு. எதுக்கு வெறுக்கிறவனை தொட்டுகிட்டு.. நம்மள பத்து பேருக்கு பிடிச்சுதுன்னா தாராளமா வாய்ப்பு கொடுக்கலாமே.. அந்த வாய்ப்பை விட இது பெட்டர்ல்ல டாலி..”
“போ போ இதெல்லாம் போங்காட்டாம். உன்ன நம்பி என் புருசரை தூக்கலாம் ஆள் ரெடி பண்ணேன்.. போச்சே போச்சே காசு போச்சே..” இப்பக்கம் லியா நீத்துவை பங்கம் பண்ணினாள்.
ரெண்டும் கெக்கே பிக்கே ன்னு சிரிப்பு.
“வாயேண்டி..”
“இந்த முதலாளிங்க தொல்லை தாங்கலடி விடு.. நீ என்ஜாய் பண்ணு.”
23 மாடிக்கு உன்ன யார் போவச்சொன்னது 10 நல்ல நம்பர் இங்கே வந்துரு எங்க ஜோதியிலே ஐக்கியமாயிரு..”
“அப்டிங்குற?”
“யெஸ்..”
“கேசி பார்த்துட்டா”
“வாய்ப்பேயில்லை அவங்க வர லிப்ட்டுக்கும் நம்ம வர லிப்ட்க்கும் ஏரோபிளேன் விட்டாலும் எட்டாது. எப்டி பார்த்துக்க முடியும்?”
“அப்படியா சொல்ற?”
இவளை நம்பி போலாமா? லேசா ஆசை வந்தது. கேசி பேமிலிய பார்க்கலேன்னா போலாம் தப்பில்லை.
“இன்னும் ரெண்டு தியரியும் இருக்கு அது மூலமா கேசி சாரை உன்னால் பார்க்க முடியாது என்பதை பார்முலா போட்டு சொல்ல முடியும்.. எப்டின்னா..”
இத்தனை அறிவாளியான நீத்துவை நட்பா பெற்றது பூர்வ ஜென்மப்புண்ணியம் ஷால்யாக்கு தேகம் பூரா ரோமாஞ்சனமாகி கண்ணு வேர்த்தது.
“ஒன்னு லாஜிக்கல் இன்டெலிஜென்ஸ் அடுத்தது ப்ராபபலிட்டி..”
“போதும் நிறுத்து நீத்து! நிறுத்து! பத்தாம் நம்பருக்கு பதுங்கி வரேன் வெற்றி நமதே.. இன்னைக்கு எனக்கும் ஆபிசுக்கும் ஒட்டு இல்ல உறவு இல்ல.. இது நம் நட்பின் மீது ஆணை.” எமோசனில் குளித்தாள்.
எச்சரிக்கையாகவே மாறுவேசத்தில் போக.. தாத்தாவும் சம்பந்தமும் ஆஃபீஸ் லிப்டில் கிரவுண்ட் பிளோர் வர, லிப்டுக்கு வெயிட்டிங்ல சந்தன பட்டு சேலை கட்டில் மாரனின் மயிலாக நின்ற ஷால்யா கையும் களவுமாக சிக்கினாள்.
நீஈஈத்தூஊஊஊ.. பல்லை கடித்து வழிந்து விட்டு.. லிப்ட் வாசலிலேயே தாத்தா காலில் விழுந்துவிட்டாள்.
நல்லாருமா நல்லாருமா!எந்திரிமா ஷாஷா.. எப்படி இருக்க? என்ன இந்த பக்கம்? . நான் இங்கு வந்தது உனக்கு தெரியுமா? சந்துரு அத்து விட்டா உறவு முடிஞ்சிருமா என்ன? உன் செல்ல தாத்தாவை நீயும் மறந்துட்டல்ல.. போ.
ரெண்டு பேரும் பார்த்து பழகி ஏழு வருஷத்துக்கு மேலே இருக்கும்.. ஏழே நாள் ஆனது போல ஆஸ்கார் நடிப்பு வைக்க.. இவள் தன் கன்னங்குழி விழ ஒரு அப்பாவி சிரிப்பை போட்டு ஆக்டிங் வைத்ததாள். முடில.
இந்த சங்கடங்கள் வேணாம்னு தான் தலைமறைவானது.
கார் வரையுமாவது வாயேன் ஷாஷா
10வது மாடில ஒரு வேலை இருக்கு தாத்தா..
நான் போன பிறகு போ.. அடம் பிடித்தார்.. அவரை அனுப்பி வைத்தப்பின்
சம்பந்தம் சாரிடமும் கேசியோடு கூடிய பந்தத்தை ஏதும் பெருசு பண்ணிக்க வேண்டாம். எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எனக்கு மேரேஜ் மாப்பிள்ளை பார்த்தாச்சு ப்ளீஸ் என்று ரிக்வஸ்ட் வைத்தாள்.
கேசிக்காக இங்கேயே வேலை பார்த்தீங்களா?
என் பிரண்ட் நீத்து ஹெச்ஆராக இருந்ததால இங்கிருந்தேன்.. அவ்ளோதான்.
நீத்து காலிங்… காலிங்.. காலிங் விடாது அடிக்க..நேரில் வரேன் இருடி.. கொல்றேன்.. வெஞ்சினத்தோடு
பத்தாம் மாடிக்கு வேக நடை போட்டு போனாள்.
தாத்தா கூட நின்னதால் ஒரு காக்கா குருவி இல்லாது எல்லோரும் என்னை பார்த்தாச்சு.. கேசி மட்டும் தான் பாக்கி.. பக்கி .. இதோ வரேன்.. வந்துட்டே இருக்கேன்.. நாயே!
நீத்து கேபினுக்காக ஒரு எல் பக்க சுவருக்கு இவள் திரும்ப அங்கிருந்து வந்த கேசியும் மோதிக்கொண்டனர்…
லியாவின் புது ஹீல்ஸ் தன் வேலையை காட்ட இடறி விழப்போனவளை, கேசி இடை பற்றி தன் பக்கம் சேர்க்க .. பூந்தனங்கள் வலிய அவன் புஜங்களில் மோதி வலித்தது. அவனுக்கோ இதயம் படபடன்னு அதிசயமாய் துடித்தது.
இதென்னடா வம்பா போச்சு.. வேணாம் நினைக்கிறது பூரா எதிரி வருது.. என்று விழுந்த கையோடு இவள் எழ முயல.. அவன் பிடியை விடாததால் தப்பா போச்சு..
புவி ஈர்ப்பு விதிப்படி தரையில் விழ அவள் மேல் கேசி.. இதழும் இதழும் மோதியது. லியா தலை மோதவிடாது இடது கையை தரையில் வைத்து தடுத்து விட்டதால் லியாவுக்கு கேசியின் பாரம் தாங்கும் தொல்லையைத்தவிர ஏதும் கஷ்டமில்ல..
அதி மெல்லிய இதழின் ஸ்பரிசம் ஓர் நாள் இரவின் கூடல்களை நியாபகங்களை கொண்டு வர சொக்கிவிட்டான் கேசி எழ மறந்தான். பிசினஸில் படிப்பில் கோபத்தில் கேசி படு ஷார்ப். காதலில் கூடலில் பெண்ணை கையாளுவதில் அப்பாவி.
வலுக்கட்டாயமாக லியா பக்கவாட்டில் தள்ளி எழுந்து திரும்ப பீஜிக்கே ஓடிவிட்டாள். இதெல்லாம் சில நிமிடங்களிலேயே நடந்துவிட்டதால் யார் கண்ணிலேயும் படவில்லை..
கேசி கண் விழித்து பார்த்த பொழுது அவன் மட்டுமே வெறும் தரையில் படுத்திருந்தான்..
அந்நேரம் அவன் மனசு ஒரு விபரீதத்தை விதைக்க அறிவு தப்பு என்றது..
இங்கு தானே இருப்பா.. பேசி பார்ப்போம் என்று தன் கேபின் போக லியா இங்கே வரவேயில்லை என்றார்கள்.
போன் போட கால் வெயிட்டிங்ல வந்தது. பத்து நிமிஷம் கழிச்சு போட வெயிட்டிங்..
ஈகோ இடித்தது. ஒரு பாஸ் போடறேன் செகண்ட் கால் வந்ததும் ஒரு எம்பிளாயி எடுக்க வேணாமா? கடுப்பானான்.
இடையில் சில வேலைகள் பார்த்துட்டு ரெண்டுமணிநேரம் கழிச்சி போட அப்போவும் லியா போன் பிசி. அப்படி யாரு முக்கியமானவங்க? பொறாமை வந்தது
வேற யாரு? நீத்து தான் திட்டு வாங்கிட்டு இருந்தாள்.
பாஸ் எங்க பிளோர் தான் இருக்காரு லேட்டா வா சொல்ல போன் போட்டா நீ எடுத்தியா நாயே! அவள் எகிற..
கேசி எதுக்கு உன் விங்குக்கு வரார் எதுக்கு உள்ளே வுட்ட?
அநியாயமா லியா மிரட்ட..
அவர் ஆபிஸ் எங்க வேணும்னாலும் வருவார்? நான் என்னடி செய்வேன்? அழாக் குறையா முறையிட.. நீ சரியில்ல நான் சரி! இப்படி திரும்ப திரும்ப பேசி இதுக செல்ல சண்டையை விடாது சில்லியா நடத்த..
அதே கதவு நேரம் கதவு தட்ட பட.. இதென்னடா புதுசா.. னு அரைகுறை உடையில் திறக்க கேசி நின்றிருந்தான்.
சார்ஜ் இல்லாது செல் செத்து போச்சு..
👌👌👌👌👌👌👌👌👌
Kandu pidichittana KC 👌👌👌
COzqZdBMwuDcja
👌👌👌👌👌👍
Hi Aadhi,
Waiting for your next Post…..
MqLpyKksmubJAXO
Who are you late for next episode
nhPlodgrcWIxOkp