வானவில் 1
பரந்து விரிந்த இந்தியப் பெருங்கடலில்.. நீரிலே முத்துக்குளிப்பாய் ஒரு பதக்கம் வடிவிலே இருக்கும் அழகிய தீவு இலங்கை!! இந்திய துணைகண்டத்தின் முத்து தீவு.
ஆங்கிலேயர்.. போர்த்துகீசியர்.. ஒல்லாந்தர் ஆண்ட இத்தீவு தப்பரபேன்.. செரண்டீப் சிலோன்.. என பல பெயர்களில் உலா வந்திருந்தாலும் தற்கால விளிப்பு ஸ்ரீலங்கா!!
கடல் விளையாட்டு தொடக்கம் , சபாரி, அழியாத ஓவிய குகைகள்,
சிவனின் பாதம் தாங்கும் சிவனொளிபாதமலை உயர்ந்த சீகிரியா மலை.. இப்படி எல்லா வளமும் அழகும் ஒருங்கே அமைந்த அழகிய குட்டி நாடு.
அவ்வழகான இலங்கை திருநாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர் குடும்பங்களில் பெரு ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டது ரணசிங்க குடும்பம். வழிவழியாக வந்த வம்ச பெருமையையும் கூடவே பெரும் வளமும் கொண்டது. இக்குடும்பத்தின் தற்போதைய தலைவன் விஜயரணசிங்க.. அவரது காதல் மனைவி சாருமதி!!
ஆம்! இலங்கை வாழ் தமிழச்சியை காதல் கொண்டு பல எதிர்ப்புகளை தடையெறிந்து கரம் பிடித்தார் விஜயரணசிங்க..
இந்நாள் வரை அக்காதலும் அன்பும் ஒரு துளி கூட குறையாமல் மனைவியை தாங்குபவர்.
அவரின் “சாருமா…!!” என்ற உருகிய அழைப்பே கூறும் அவர் கொண்ட காதலை. அவருக்கு சற்றும் குறைவில்லாத அன்பை பொழிபவர் சாருமதி. அன்பும் அறிவும் அமைதியின் மறுவுருவம் அவர். எப்போதும் மலர்ந்த சிரிப்புடன் வளைய வருபவர். அவரின் மலர்ந்த சிரிப்பின் பின்னால் இருப்பது மன்னவன் கொண்ட காதலும் அவர் கொடுத்த நம்பிக்கையும்!! கூடவே இனிய இல்லறத்தால் விளைந்த தேஜஸ்!!
என்னதான் நாம் நல்லவர்களாக இருந்தாலும், நம்மை சேர்ந்தவர்கள் எல்லாம் நல்லவர்களாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே…
விஜயரணசிங்கவும் அப்படிதான்!! வீட்டில் எவ்வளவு அன்பாக இருக்கிறாரோ.. அதற்கு நேர்மாறாக தொழிலில் தன் பெயரை ஒத்த சிம்மமாகவே உலா வருபவர். அவரின் தொழில்களில் அவரது தம்பி சுஜிவரணசிங்கவும் ஒரு பங்குதாரர். அவரது மனைவி பிரேமாவதி இலங்கையை சேர்ந்தவர், அதனால் எப்பொழுதும் சாருமதியிடம் அவருக்கும் கண்களில் ஒரு அலட்சியமும் கீழான பார்வையும் தென்படும். ஆனால் அந்த அலட்சியம் எல்லாம் விஜயனை பார்த்த அடுத்த நிமிடம் பறந்துபோய் பவ்யம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆனால் சாருமதியோ அதனை கண்டுகொள்ள மாட்டார். அவர் பொறுத்த வரை குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!
சுஜிவரணசிங்கவுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள். பெண் கோதமிக்கு கோலாகாலமாக திருமணம் முடித்தார்கள் சுகத் பதிராஜாவோடு. அவர்களுக்கு இப்பொழுது இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை.. பைவப் பதிராஜா!! ஆண் வாரிசான குஷால் ரணசிங்க இப்போது தான் மேற்படிப்பை ஜெர்மனியின் தலைசிறந்த பல்கலைக்கழக ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறான்.
செல்வந்தர்கள் பல ஏக்கர் கணக்கில் வீடு வைத்திருக்கும் சினமன் கார்டன் பகுதியிலே இவர்களின பரந்த விரிந்த மாளிகை பல மரங்களுக்கு நடுவே அழகாய் கம்பீரமாய் வீற்றிருக்கும்!!
ஆக, அப்பெரிய மாளிகையில் இப்போது இரண்டு தம்பதிகள் மட்டுமே!!
அட.. அப்போ ஹீரோ??
அவன் ஒரு
தனிமை பிரியன்..
இசை பிரியன்..
நீச்சல் பிரியன்..
இயற்கை பிரியன்..
ஆழி பிரியன்..
பெரும்பாலும் வீட்டிலிருப்பதை விட,
ஓய்வு எடுக்கவென்றே இவன் தனக்கென்று கட்டி வைத்துள்ள
வீட்டில் தான் அதிகம் விஜயம்!!
இவனின் கடலோடு உறவாடும் அழகான கெஸ்ட் ஹவுஸ் மவூண்ட்லேவனியா கடற்கரை ஓரத்தில்!! வீட்டோடு சுற்றிலும் தென்னை மரங்களை கொண்டு அழகாக காட்சி கொடுக்கும் சோலைகளுக்கிடையே இந்த வீடு.
கூடவே ஒன்றல்ல இரண்டு நீச்சல் குளங்கள்!!
ஒன்று அவ்வீட்டின் மேல் மாடியில்.. மற்றொன்று தோட்டத்தில்!!
அம்மேல் தட்டிலிருக்கும் நீச்சல் தடாகத்தில் இவன் நீந்தினால் தூரத்து இருக்கும் அலை கடல் கூட இவனை பார்த்து ஏக்க பார்வையால் அளந்து வடிந்த அலையாய் திரும்பிச் செல்லும்.
அவனின் திண்ணிய புஜங்களும்..
பரந்த விரிந்த மார்பும்.. தேக்கு மரத்தை ஒத்த தேகமும்.. நீர்த் திவளைகள் கொஞ்சி விளையாடும் அலை கேசமும்.. கிள்ளை மொழி பேசும் தத்தைகளை அவன்பால் உருக வைக்கும். அதிலும் அந்த ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் பார்க்கும் அந்த வசீகர பார்வை.. அப்பப்பா… பார்ப்பவரை சிலையென சமைய சொல்லும்!! மெழுகென உருகச் செய்யும்!!
அத்திராவிட நிறத்தவன்..
குறுந்தாடி சொந்தக்காரன்…
கற்றை மீசை அழகன்..
கவர்ச்சி சிரிப்பில் கவர்ந்து இழுக்கும் கந்தர்வன்..
ஆனால்.. சிரிப்பதற்கே காசு கேட்கும் கருமி அவன்!!
சற்றே ஸ்டேட்டஸ் பார்ப்பவன்..
ஒரு சொல் தவறாக புனைந்து அவனை பற்றி சொல்லி விட முடியாது!!
அவ்வளவு நேர்மையானவன் என்பதை விட.. ஒரு சொல் வரவிடாதளவு அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
அவன் விநாயக்ரணசிங்க!!
இத்தனைக்கும்.. அவர்கள் விஎஸ்ஆர் குரூப்ஸ் பல தொழில்களை அவனது அப்பாவும் சித்தப்பாவும் கட்டி ஆண்டாலும், அவனுக்கு என்னவோ அதில் எல்லாம் விருப்பமில்லாமல் மீடியாவை தேர்ந்தெடுத்தான்.
மேற்படிப்பு விஷுவல் டெக்னாலஜி மற்றும் ஊடகவியலில் முடித்தவன், பின் தானே விவிஆர் என்று ஒரு சேனலை ஆரம்பித்து கொண்டான். இன்று வரை இலங்கையின் பட்டி தொட்டி.. மலை முகடு.. கடற்கரை ஓரங்கள் என்று அவனது சேனல் தனது சேவையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
அதுவும் மகளிருக்கு சீரியலுக்கு என்றே தனி சேனலும்.. பாட்டுக்கு.. படத்திற்கு.. சிறுவர்களுக்கு.. செய்திகளுக்கு.. விளையாட்டுக்கு.. மற்றும் ஷோவுக்கு என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கின்றன. செலிப்ரீட்டியை வைத்து புதுப்புது ஷோவை நடத்துவதில் அவனது சேனலை அடித்துக் கொள்ள முடியாது.
அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான் இந்த இருபத்தியெட்டு வயது முரட்டு வாலிபன்!!
ஒற்றை வார்த்தைக்கு கூட டைம் பார்ப்பவன்.. அவன் அதிகமாக இரண்டொரு வாக்கியங்கள் பேசுகிறான் என்றால் அது அவன் அம்மா சாருமதியிடம் மட்டுமே!!
சித்தப்பா குடும்பத்தை எல்லாம் தன் ஒற்றை பார்வையிலேயே தள்ளி வைத்து விடுவான்.
என்னதான் பிரேமாவதி சாருமதியிடம் அலட்சியமான பாவனை காட்டினாலும், ‘இவனும் உன் பிள்ளை தானே?!’ என்று அதே அலட்சியத்தை விநாயக்யிடம் காட்ட முடியாது!! அண்ணனோடு தொழில் செய்தாலும் அவரது அண்ணன் அளவு தனது கணவருக்கு தொழில் திறமை கிடையாது என்று பிரேமாவதிக்கு தெரியும். அதனாலேயே இத்தனை வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறார். இல்லையென்றால் எப்போதோ தொழிலையும் குடும்பத்தையும் பிரித்திருப்பார் இவர்!!
அவரை விட படு அலட்சியமாக அவரை பார்ப்பான். என் வீடு!! என் தொழில்!! என்று தனித்து வளர்ந்து இருப்பவனை கண்டாலே பிரேமாவதியும் சற்று ஒதுங்கி தான் இருப்பார்.
ஆனால்.. அதற்கு எதிர்மறையாக விடாமல் பேசும் ஒரு பெண்ணிடம் அதுவும் தமிழ்நாட்டின் ஒரு மூலையில் பிறந்து வளர்ந்தவளிடம் விழ போகிறான் என்றால்… இவ்விதியை என்ன சொல்வது??
அன்று மாலை போல தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து இருந்தனர் இரு தம்பதியரும். என்னதான் வேலையாள் டீ சிற்றுண்டி கொண்டு வந்து வைத்தாலும் தன் கையாலே பரிமாறுவதையே விரும்புவார் சாருமதி.
அதிசயமாக அன்று மாலை வீட்டுக்கு வந்தவனை ஆச்சரியமாக பார்த்தார் தந்தை!! அன்பாக பார்த்தார் அன்னை!!
“என்ன விநாயக்?? ஈவினிங் ஃப்ரீ போல!!” என்று இலகுவாக சிங்களத்தில் கேட்டார் தந்தை..
“தம்பி.. உங்களுக்கும் டீ கலக்கவா?” என்றார் அன்னை தமிழில்..
“இல்லை டாட்.. உங்களுக்கு ஒன்றை காண்பிக்க கூட்டிப் போகலாம் என்றுதான் வந்தேன். நீங்க இப்போ ஃப்ரீனு உங்க பிஏ சொன்னார்!” என்றான் தந்தையிடம் சிங்களத்தில்..
“ஐயோ அம்மா.. இவ்வளவு டீயில நீங்க அவ்வளவு சக்கரையை அள்ளி போடுவீங்க. எனக்கு கலோரி ஏறும்!!
எனக்கு பிளாக் டீ வித் ஒன் கியூப் சுகர் போதும்!!” என்றான் அன்னையிடம் தமிழில்..
எப்போதும் அப்படித்தான் விஜயரணசிங்கமும்.. சாருமதியும் சரி.. பிறந்தது முதல் அவரவர் மொழியில் பிள்ளையிடம் பேச.. அவனும் அப்படியே!! இல்லை சிங்களம் மட்டும் தான் பேச வேண்டும் என்று தந்தையோ.. தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்று அன்னையோ அவனிடம் திணிக்க மாட்டார்கள். அவர்கள் பேச பேச அப்படியே அவனும் பழகி வளர்ந்து விட்டான்.
அவன் கேட்டது போல அவனுக்கு பிளாக் டீயை அன்னை கலந்து கொடுக்க ரசித்து குடித்தவன், “சரி சரி.. கிளம்புங்க கிளம்புங்க!!” என்று அன்னையையும் தந்தையையும் கிளப்பினான். விஜயரணசிங்கவோ தன் தம்பியை கண்களால் காட்டி மகனிடம் பார்வையால் பேச.. அவனும் சித்தியை பார்வையால் காட்டி விழிகளால் பேச…
விஜயனும் விநாயகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தொழில் துறையில் மற்றவற்றிலும் மகனுக்காக எது வேணாலும் விட்டுக் கொடுப்பவர் குடும்பம் என்று வந்தால் சற்றும் இளகவே மாட்டார். அதை புரிந்து கொண்ட விநாயக் சரி என்று தலையாட்டிவிட்டு சித்தப்பாவிடம் திரும்பி “நீங்களும் கிளம்புங்க சித்தப்பா.. சித்தியோடு!” என்றவன், தனது காரில் ஏற.. இவர்களும் அவனோடு ஏறி சென்றனர்.
மவுண்ட் லுவினியா நோக்கி சென்று கொண்டிருந்த காரை பார்த்து சித்திக்கு ஆர்வம் மின்ன அலட்சிய புன்னகை. அங்கேதான் அவனது கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது என்று தெரியும். இதுவரை அன்னை தந்தையைத் தவிர வேற யாரையும் அங்கே அவன் அழைத்து சென்றது கிடையாது. இப்போது அங்கே தான் அழைத்து செல்கிறான் என்ற ஆர்வமும்.. அன்று கூட்டி போக மாட்டேன் என்ற நீ.. இன்று நீயாகவே கூட்டிப் போகிறாய் என்று அலட்சியம்!!
அவரின் பார்வையை கண்ணாடி வழியே பார்த்தவனது உதட்டில் இகழ்ச்சியாக புன்னகை ஒன்று அமர்ந்து கொண்டது. அவன் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் ஏரியா வழி செல்லாமல் சற்று வேறு வழி சென்றதைப் பார்த்து இப்போது கேள்வி தொக்கி நின்றது பிரேமாவதி கண்களில்.. ஆனால் அவனின் அப்பா அம்மா சித்தப்பா அனைவரும் அமைதியாகவே வந்தனர்.
அங்கிருக்கும் ஏர்போர்ட்டில் இவனது கார் நுழைந்து பார்க்கிங்கில் நிற்க.. இங்கே எதற்கு என்று விஜயரணசிங்க பார்வைக்கு பதில் கண்ணடித்தவன் முன்னே செல்ல.. விஐபி என்ட்ர்னஸ் வழி அழைத்துச் சென்றான்.
அங்கிருந்து தனி டோப்பே மூலம் அவர்கள் அழைத்துச் செல்ல… அதிலும் அவர்களது விவிஆர் லோகோ பார்த்து சற்றே ஆச்சரியத்துடன் மகனை பார்த்தார் தந்தை. அவனிடம் அதே இளம்புன்னகை!!
இவர்கள் சென்றதும் அங்கே சொகுசு பிள்ளையாய் சற்றே அளவில் பெரிதும் சிறியதுமாய் நின்றிருந்த மூன்று விமானங்களை பார்த்து தந்தை “வாவ்.. நான் நினைச்சிட்டே இருந்தேன் இந்த பிஸினஸ் பத்தி.. நீ சாதிச்சிட்ட டா மகனே!” என்று கட்டிக் கொண்டார்.
அவனும் மகிழ்வுடன் தந்தையை தழுவிக் கொண்டான். சாருமதிக்கு கண்களில் ஆனந்தம். இதுவரை பல நாடுகளுக்கு விமானத்திலும் சென்றிந்தாலும்.. தங்கள் சொந்த விமானம் என்று சொல்லும் போது தனி பெருமை அல்லவா??!!
சித்தப்பா வழக்கமான வாழ்த்தை சொல்ல. சித்தி மனதில் நஞ்சை வைத்தே உதட்டில் புன்னகையோடு வாழ்த்தினார். அங்கிருந்த மூன்றில் இரண்டு மட்டுமே தற்போது தொழிலுக்கு என்றும், ஒன்று என் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு என்றும் கூற.. இன்னும் வயிறு காந்தியது பிரேமாவதிக்கு!!
தொட்டது துலங்கும் கை சாருமதிக்கு!! பிள்ளைக்கு முதன் முதல்ல தொழிலை அவர் தொடங்கி கொடுக்க.. மளமளவென்று வளர்ந்து இப்போது தனி சொகுசு விமானம் வாங்கும் அளவு உயர்ந்தான்!! அதற்கும் அவன் உழைப்பும் அபிரிமிதமே!! எடுத்த செயலில் நின்று வென்று காட்டுவான் விநாயக்!!
வி என்றால் விக்டெரி என்று மாறி.. விநாயக் என்று சொல்லுமளவு இருந்தது அவனது உயர்வு!!
“மகனே.. நீயும் அம்முக்கண் முதல்வனின் மகன் போல ஒற்றையாய் சுற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. உன்னை பதிவிரதையோடு பார்த்தால் தான் எனக்கு சந்தோஷம்!!” என்ற விதியின் சதியால்
இதுவரை இலங்கையில் மட்டுமே தனது தொழிலை நடத்தியவன், அடுத்து உலகதரத்தோடு போட்டி போடவென்று சிங்கார சென்னையை நோக்கி தன் சொகுசு விமானத்தில் பயணித்தான்.
அதே நேரம்.. தனது சிறுவயது கனவை நினைவாக்க.. மீடியாவில் பல மாற்றங்களை கொண்டு வர என்று சென்னையை நோக்கி ஆம்னி பஸ்ஸில் பயணித்தாள் ப்ரியவர்ணா!!
அவள் வரும் அதே ஆம்னி பேருந்தில் பயணித்தது நம் கியூபிட்.. இந்த இண்டர்நெட் உலகில் சிக்கி சின்னாபின்னமாகி.. வெறும் காதலை மட்டுமே வைத்துக் கொண்டு.. தன்னுடைய பழைய மன்மத அம்பையும் வில்லையும் விரக்தி புன்னகையோடு பார்த்துக் கொண்டது.
‘உன்னை ஓஎல்எக்ஸ் கூட எவனும் வாங்க மாட்டான் போல!!’ என்று சிரித்துக் கொண்டது.
விமானத்தில் வரும் விநாயக்..
பேரூந்தில் வரும் வர்ணா…
காரணங்கள்.. காரியங்கள்.. வரும் முறை.. வேறு வேறு தான்!!
ஆனால்.. தளமோ ஒன்றே!!
எதிர் எதிராக ஊடக களத்தில் சதிராடுவார்களா? இல்லை கியூப்பிட்டால் காதல் சமர் களத்தில் விளையாடுவார்களா??
வானவில்.. வரும்..
arumai.. vanavillai ethirparthu…
ZvlosYQnDwRp
QYrtDqHh
vnjTewBiXMHkL
LvhgZUnbGPIpCe
Startingey semaya irukku sis 💞
👌👌👌👌👌👌👌👌