ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 9

அத்தியாயம் 9

 

“அது.. அது வந்து..” 

 

“ப்ச்.. இவளுக்கு இப்ப தான் மேரேஜாச்சு.. திடீர் மேரேஜ்.. சோ, யாரையும் கூப்பிட முடியல..”

 

“ஹஸ்பெண்ட்..”

 

“இப்போதைக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க.. எப்போ, ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்குறாங்களோ.. அப்போ சேர்ந்திருப்பாங்க.. போதுமா? இப்ப வந்த வேலைய பாருங்க.. எப்பப்பாரு தொணத்தொணன்னு..”

 

“சரி அதை விடுடா.. அவ‌ ஏன் உன் கூட இருக்கா?”

 

“அவளோட ஜாப் இங்க தான்.. சோ, என் கூட ரூம் மேட்டா இருக்கா.. என்னமோ நாங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒரே வீட்டுல இருந்ததே இல்லாத மாதிரி பேசுறீங்க? காலேஜ்ல இருந்து ஒன்னா தானே இருக்கோம்.. இது என்ன புதுசா?”

 

“டேய்.. சரத்.. போதும்.. போலீஸ் மாதிரி துருவி துருவி விசாரணை பண்ணிட்டுருக்க.. இவன் யாருடா? நம்ம உயிர் தோழன்டா.. நம்மக்கிட்ட இதுவரைக்கும் எதையாவது மறைச்சுருக்கானா? அவனை நம்பமாட்ட நீ?” என்று சரத்திடம் பேசிய  ராக்கி,  ஹரிஷான்தை பார்த்து, 

 

“மச்சா.. நான் நம்புறேன் டா.. முழுசா நம்புறேன் டா..” என்று கூற, தன் வாயிற்குள் சிரித்துக் கொண்டாள் ஹாசினி. அதனை பார்த்த ஹரிஷான்த் கண்களால் முறைக்க, தன் வாயை கப்பென மூடிக் கொள்ள, நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான் ஹரிஷான்த். நண்பர்கள் அனைவரும் ஒயின் குடித்துக் கொண்டிருக்க, ஹாசினியின் முகத்தை கண்ட ஹரிஷான்த்,

 

“ஹாசி.. நீ உன் ரூம்க்கு போ.. நாங்க கொஞ்சம் பர்ஷனலா பேசணும்..” என்று பாட்டில்களை பார்த்தவாறே அங்கிருந்து எழுந்து சென்றவள், மதியம் சமைத்த உணவுகளை சூடு செய்ய, அவ்வழியாக சமையலறைக்கு செல்லும் போது, நண்களுடன் ஹரிஷான்த் பேசும் குரல் தெளிவாக ஹாசினியின் காதில் விழுந்தது. 

 

“அந்த காமினி உன்னோட,  புது கம்பெனி ஷேர்ஸ் வாங்கிருக்காளாம்? இப்ப என்னடா பண்ணப் போற? இதை சாக்கா வைச்சுக்கிட்டு, திரும்பத்திரும்ப உன்னைய வந்து பார்த்து, டார்ச்சர் பண்ணுவாளே..”

 

“ஆமா ஹரி.. ராக்கி சொல்றதும் சரி தான்.. இப்ப என்ன பண்ணப் போற?”

 

“ப்ச்.. அவளெல்லாம் ஒரு ஆளா? அப்படி என்ன பண்ணிருவா? அதையும் பார்த்துடலாம்.. ம்ம்.. அப்புறம் எனக்கு உங்க ஹெல்ப் வேணும்..”

 

“இப்ப நீ வாங்குன கம்பெனிக்கா?”

 

“ஆமா.. அதுல இருந்து வர்ற அம்பது பேருக்கு ட்ரெயின் கொடுக்கணும்.. அதுவும் லீடரா இருக்குற இருபது பேருக்கு டைரக்டா நாம தான் ட்ரெயின் கொடுக்கணும்..”

 

“இதுக்கு எதுக்கு ஹெல்ப் வேணும்னு கேட்குற.. செய்ங்க டான்னு சொன்னா செஞ்சுடப் போறோம்..” என்ற ராக்கியைப் பார்த்து புன்னகைத்தான் ஹரிஷான்த். 

 

‘போச்சு.. போச்சு.. அந்த இருபது பேர்ல நானும் ஒருத்தி.. என்னைய அங்க பார்த்ததும் என்ன நடக்கப் போகுதோ?’ என்று மனதுக்குள் புலம்பியவாறே தனது அறைக்குள் நுழைந்தவள், உறக்கம் வர மறுத்தது. சில மணி நேரங்களில், ஹரிஷான்தின் அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க, அங்கு சென்று பார்த்தாள் ஹாசினி. அங்கே ஹரிஷான்த் வாந்தி எடுத்து கொண்டிருக்க, அவனது நண்பர்கள் அனைவரும் ஹாலில் இருந்த சோஃபாவிலும் தரையிலும் படுத்திருப்பதை கண்டவள், அவனது அறைக்குள் நுழைந்து, அவனது நெற்றியை பிடித்து கொண்டாள். அவனையும் அவனது ஆடையையும் சுத்தம் செய்தவள், மெல்ல அவனை நடத்தி வந்து, கட்டிலில் படுக்க வைக்க, அவனது கணம் தாளாமல் அவனோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தாள் ஹாசினி. அவனது படிக்கட்டு போன்ற தேகத்தோடு இணைந்து படுத்திருந்தவளை தன்னோடு மேலும் இறுக்கி அணைத்து கொண்டவன், அரை போதையில் தன் கண்களை திறுந்து பார்க்க, அவனது முகத்தின் மிக அருகில் அவளது முகம் காண, 

 

“டெய்லி ஏன் என் கனவுல வந்து இம்சை பண்ற? உன்னைய தான் பிடிக்கலைன்னு சொல்றேன்ல.. அப்புறமும் என்னைய எதுக்கு விடாம துரத்துற? இப்ப உனக்கு என்ன வேணும்?” என்றவன் அவளை கீழே தள்ளி அவள் மீது படர்ந்தவன், தன் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் முத்தமிட்டவாறே,

 

“உனக்கு இதானே வேணும்.. ம்ம்ம்.. இதானே வேணும்..” என்று கூற, அவனது கைகள் செல்லும் இடத்தை அறிந்தவள், தன் கைகளால் அவனை தடுக்க முயன்று தோன்றுப் போனாள். குடி போதையில் இருக்கும் நீர்யானையை சமாளிக்க முடியாது, அவனுக்கு இசைந்து கொடுக்கத் தொடங்கினாள் ஹாசினி. அவனது கழுத்தோடு தன் கைகளை கோர்த்து கொள்ள, அவளை இடையோடு தூக்கியவன், அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட, கன்னியவளின் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வலைகள் தாக்கியது. வில்லென வளைந்திருக்கும் புருவங்களில் சிறு கயல் போன்ற விழிகளில் முத்தமிட்டவன், மெல்ல அங்கிருந்து கூரான நாசியில் இறங்கி, உதடுகளில் இளைப்பாறியவனின் கைகளுக்கு தடையில்லை போல?! அவளது மேடு பள்ளங்களில் தடையின்றி பயணிக்க மங்கையின் அனிச்சம் போன்ற தேகமோ  கூசி, சிணுங்கியது. தீராத மோகத்தில், சிந்தாத முத்தங்களை அவளுக்கு அவன் வாரி வழங்க, மிச்சம் மீதி இல்லாது, அதனை தனக்குள் சேமித்துக் கொண்டவளின் நெற்றியில் நிறைவாக முத்தமிட்டு, விடியும் வேளையில், தன் வாயிற்குள், “ஹாசினி..ஹனி..” முணங்கியவாறே, அவளை தன் உயிருக்குள் புதைப்பது போல் இறுக்கி அணைத்தவாறே மன்னவன் கூற, மயங்கிக்கிடந்த மங்கையின் காதிலோ,

“காமினி..” என்று விழுந்தது. அனல் மேலிட்ட புழுவாய் துடித்துப் போனாள் ஹாசினி. அவனது அணைப்பு தனக்கானதென அதில் உருகிக் போயிருந்தவளின் மீதே ஆசிட்டை வீசியது போல் உணர்ந்தவளின் கண்களில் இருந்து நீர் கசிந்தது. சட்டென அவனது பிடியில் இருந்து விலகியவள், தனது ஆடைகளை அணிந்தும் அணியாமலும் தனது அறைக்கு ஓடினாள். அவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மூச்சடைப்பது போலிருக்க, தற்காலிகமாக அவ்வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தாள். தனது ஆடைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, பெங்களூரை நோக்கி சென்றாள். யாரும் எதிர்பாராத நேரத்தில், திடிரென தன் முன்னே வந்து நின்ற மகளைப் பார்த்ததும், அதிர்ந்து போய் நின்றிருந்தான் மலர்கொடி. 

 

“ஹாசி.. என்னாச்சும்மா? எதுக்கு திடீர்னு வந்து நிற்குற?”

 

“ஏன்மா? நான் இங்க வரக்கூடாதா?”

 

“அப்படியில்ல.. கல்யாணமாகி முதன்முதலா அம்மா வீட்டுக்கு வரும் போது ஹஸ்பெண்ட்டோட தான் வரணும்..”

 

“ப்ச்.. அவருக்கு வேலை இருந்துச்சு.. அதான் நான் மட்டும் வந்துருக்கேன்.. போதுமா?”

 

“அதில்லம்மா..”

 

“இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க? நான் இங்க வரக்கூடாதுன்னு சொல்றீங்களா? அதை டேரக்டா சொல்ல வேண்டியது தானே? நான் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்..” என்றவள் கிளம்ப எத்தனிக்கும் நேரம்,

 

“ஹனி.. என்ன பேச்சு இது? இப்படி தான் அம்மாக்கிட்ட பேசுவாங்களா? இதை தான் நாங்க உனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தோமா? இது என்ன பழக்கம்? புதுசா ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்ற?” என்றவாறே வீட்டின் நுழை வாயிலுக்கு வந்தார் அர்ஜுன். 

 

“டாடி? நான்.. ஐம் சாரி டாடி..” என்று கண்கலங்கிய தன் அன்புமகளை கண்டதும் உருகிப் போனார் அர்ஜுன்.

 

“டேய் செல்லம்.. என்னடா நடந்துச்சு? ஹரி ஏதாவது சொன்னான்னா? உன்னைய ஏதாவது கஷ்டப்படுத்தினானா? நீ முதல்ல உள்ள வா.. என்ன நடந்துச்சுன்னு.. அப்பாக்கிட்ட சொல்லு.. அவனை நான் என்ன பண்ணுறேன்னு பாரு..” என்ற அர்ஜுன், தன் மகளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றவர்,

 

“குட்டிம்மா.. நீ ஃப்ரெஸாகிட்டு வா.. அஞ்சே நிமிஷம், டாடி.. உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சு வைக்குறேன்.. போ.. போ..” என்றவாறு அவளை குளியலறைக்கு அனுப்பி வைக்க, அர்ஜூனின் பின்னோடு வந்து நின்றார் மலர்கொடி.   

 

“என்னங்க இது? இவ இப்படி தனியா வந்து நிற்குறா? என்ன நடந்துச்சோன்னு பயமாயிருக்கு..”

 

“நீ எதுக்கும் பயப்படாத.. நம்ம பொண்ணு அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒத்துக்க மாட்டா.. அவ ரொம்ப ஸ்ட்ராங்.. நீ போய் அகிலனை பாரு.. நான் அவளை பார்த்துக்குறேன்..” என்றவாறே சமையலறைக்குள் நுழைந்தவர், ஹாசினிக்கு பிடித்த உணவுவகைகளை செய்யத் தொடங்கினார். இங்கே குளியலறைக்குள் நீரின் அடியில் நின்றவளுக்கோ, அவனது நகக்கீரல்கள் ஏற்படுத்திய காயத்தை விட, அவன் உதிர்த்ததாக நினைத்த காமினி என்னும் பெயரினால் ஏற்பட்ட காயம், உடலிலும் மனதிலும் தாங்காத வலியை கொடுத்தது. உண்மை தெரியாது, தன்னை வருத்திக்கொள்ளும் ஹாசினியை மீட்க வருவானா ஹரிஷான்த்?

 

8 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top