வானவில் 2
தன் விவிஆரின் தடத்தை தளத்தை பதிக்க சிங்காரச் சென்னையில் கால் பதித்தான் விநாயக் ரணசிங்க!!
கூடவே அவனது பிஏ ரபின்!! தமிழும் சிங்களமும் தெரிந்த தமிழன்!! விநாயக்கிடம் கடந்த இரண்டு வருடமாக நிலைத்து நிற்கும் ஒரே பிஏ. விநாயக்கின் அதிரடிக்கும் வேகத்திற்கும் வந்த இரண்டே மாதத்தில் ஒவ்வொருவரும் பிய்த்துக் கொண்டு செல்ல.. இது வரை தாக்கு பிடித்தவன் இவன் மட்டுமே!!
விநாயக்கிடம் ஒரு பழக்கம்!! அவன் எந்த மொழியில் அருகில் உள்ளவனிடம் கேள்வி கேட்கிறானோ.. அதே முறையில் பதிலையும் எதிர்பார்ப்பான். அந்த வகையில் ரபின் மூன்று மொழிகளையும் கரைத்துக் குடித்திருப்பதால் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிகிறது.
“ஷிட்!!! வாட் அ ட்ராஃபிக்??” என்று சலித்துக் கொண்டான் விநாயக்!!
ரபினும் ஒருவித டென்ஷனில் தான் இருந்தான். இன்று காலை குறித்த நல்ல நேரத்தில் அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட வேண்டும். அந்த நல்ல நேரம் சாருமதி குறித்து கொடுத்தது. இல்லையென்றால் அவரிடம் பதில் சொல்ல முடியாது என்ற பதட்டம் அவனிடம்.. அதனால் விநாயக் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.
‘நல்லவேளை ஏசி காரில் அமர்ந்து இருக்கிறார். இல்லையென்றால், அதற்கும் ஒரே ஹாட் என்று புலம்பி இருப்பார்!’ என்று ரபின் மனதில் நினைத்து முடிக்கவில்லை அதற்குள் என்ன ட்ராபிக் என்பதைப் பார்ப்பதற்காக கார் ஜன்னலை இறக்கிய விநாயக் அதே வார்த்தைகளை அச்சரம் பிசகாமல் கூறினான் அவனது ஸ்டைலில்!! “ஹோ காட்!! வெரி ஹாட்!! சோ மச் டஸ்ட்!!” என்றான். நல்ல இயற்கை சூழலில் வளர்ந்தவனுக்கு இங்கு வந்த முதல் நாளே இந்த சென்னையின் வெப்பம் பயம் காட்டியது!! எரிச்சல் ஊட்டியது!!
அவனது ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே அவனுக்கு எதிர் புறத்தில் ஆட்டோவில் அமர்ந்திருந்த நம் நாயகி ப்ரியவர்ணாவின் காதில் விழுந்தது..
அவளோ “ஹிந்தி தெரியாது போடா!!” “தாய் மண்ணே வணக்கம்!! தமிழ் மண்ணே வணக்கம்!!” என்கிற தீவிர தேசப்பற்று உடையவள்.. சும்மாவா விடுவாளா இதைக் கேட்டு??
“இந்த ஊரில் இருக்கும் மேன் பவரையும், வளத்தையும், சீதோஷண நிலையும் இவங்க தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்த இவங்கள போல வெளிநாட்டினர் எல்லாம் இங்கே வந்து குவிறாங்க.. அப்புறமென்ன?? வந்ததுக்கு அப்புறம்.. குறை கூறுவது போதாதுனு.. ஹாட்.. டஸ்ட்.. டிராபிக்கின் வேறு.. நொட்டம்!!” என்று அவன் முகத்துக்கு நேரே அவனுக்கு குறையாத எரிச்சலோடு கூறினாள்.
அவன் பேசிய ஆங்கிலமும் அதன் உச்சரிப்பும் அவன் இருந்த உயர்தர வாகனமும்.. அவனை அச்சு அசல் வெளிநாட்டுக்காரனாவே அவளுக்கு உருவகப்படுத்தி இருக்க, துளியும் தாமதிக்காமல் பொங்கி விட்டாள். அதிலும் அவனுக்கு தமிழ் தெரியும் என்பது அவளுக்கு தெரியாதே!! அப்படி தெரிந்திருந்தாலும் ஒன்றும் கேட்டுக்கொள்ள மாட்டாள்.
“வாட்!! வாட் டிட் யூ சே??” என்ன என்று அவன் திரும்ப பேசும் முன்னரே அவளது ஆட்டோவும்.. இவனது காரும் எதிர் எதிர் பக்கத்தில் சென்றது.
இப்படியாக அவர்களின் முதல் சந்திப்பே ஒருவித சண்டையில் முடிய..
முதல் கோணல் முற்றும் கோணல் ஆனது!!
இவர்களது சண்டையை யார் சுவாரஸ்யத்தோடு பார்த்தார்களோ இல்லையோ நம் கியூபிட் வெகு ரசனையோடு பார்த்தது. வெகு நாளைக்கு பிறகு அதனது கண்களில் அப்படி ஒரு ஒளி!!
பின்ன எதிரெதிர் துருவத்தை தானே சேர்க்க முடியும்..
எங்கே என் மன்மத பானம்?? துருபிடிச்சதை கூர் செய்ய கிளம்பியது!! நம் கியூபிட்!!
அதன்பின் அந்த டிராபிக்கில் பார்த்த பெண்ணை பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாமல் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தான் விநாயக்!!.
சரியான நேரத்திற்கு சென்றிருந்தனர் விநாயக் மற்றும் ரபின். அது பல காலத்துக்கு முன்னே ஆரம்பிக்கப்பட்ட சேனல் தற்போது புது புது ட்ரெண்ட்களை போல ஷோ நடத்த தெரியாமல்.. கால ஓட்டத்திற்கு தாக்கு பிடிக்காமல் ஒடுங்கிப் போய் இருக்க.. அதைத்தான் வாங்கியிருந்தான் விநாயக் ரணசிங்க!!
தமிழ்நாட்டில் சரியாக போகாத ஒரு சேனலை தான் அதுவும் நேஷனலைஸ்டு சேனலை தான் விலைக்கு வாங்கியிருந்தான்.
“சார்.. இந்த சேனலுக்கு மக்களிடையே அவ்வளவா வரவேற்பு இல்லை. இவங்க டெலிகாஸ்ட் பண்ற ஷோவுக்கு பீப்பிள் கிட்ட ரீச்சே கிடையாது!! அப்புறம் ஏன் வாங்குறீங்க? இந்த சேனலில் இருந்து நம்ம சேனலுக்கு மக்கள் மனசை மாற்ற இன்னும் டைம் பிடிக்குமே??” என்று கேட்டான் ரபின். அவனுக்கு தெரிந்த அறிவு அவ்வளவுதான்!!
“சீ ரபின்!! நான் எது செஞ்சாலும் அதுக்கு பின்னாடி கரெக்டான ஒரு காரணம் இருக்கும்!” என்றான் சற்றே அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்த படி..
“தெரியும் சார் இருந்தாலும்…”
“புதுசா நாம இந்த ஊரு சேனல் ஓபன் பண்றதுக்கு இடம் பாக்கணும்.. அதுக்கு நமக்கு மெயினா இடம் கிடைக்கணும்.. அடுத்து எம்பிளாய்ஸ் ஹையர் பண்ணனும்.. அட்வடைஸ் கொடுக்கணும்.. லைசன்ஸ் எடுக்கணும்.. இப்படி நிறைய.. இல்லையா?? இதையெல்லாம் முடிய கிட்டத்தட்ட ஒரு ஒன் மந்த் ஆகாது?”
“கண்டிப்பா சார்!! என்ன தான் நம்ம லைசன்ஸ் மத்ததெல்லாம் காசை வீசி வாங்கினாலும், இதை எல்லாம் செட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் தான்.. நீங்க சொன்ன ஒன் மந்த் மினிமம் ஆகும்” என்று ஒத்துக் கொண்டான்.
“பின்ன?? இப்போ கையெழுத்து போட்டு அக்ரிமென்ட் முடிச்சாச்சு. இப்போதிலிருந்து இந்த ஆபீஸ் எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல!! அந்த ஒன் மந்த்ல நாம டிஆர்பி லெவல்ல முன்னுக்கு வந்துடலாம். புரியுதா? சரி சரி போய் இந்த ஆபீஸ் ஸ்டாப்புக்கு எல்லாம் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்!!” என்றான்.
அங்குள்ள ஊழியர்களுக்கு எல்லாம் ஏற்கனவே தெரியும் இன்று இந்த கம்பெனி கைமாறுகிறது என்று!! இனியாவது புதுப்புது உத்திகளை பயன்படுத்தி நம் சேனலும் முன்னுக்கு வந்துவிடாதா? என்று ஏக எதிர்பார்ப்பு அங்கு உள்ள இளவட்டங்களிடம்!!
ஆனால் ரொம்ப நாளாக வேலை செய்த பெருசுகளின் நிலையோ ‘நம்மை தூக்கி விடுவானோ? இனிமேல் புதிதாக வேலை தேட வேண்டுமோ?’ என்று பயம் அப்பட்டமாக தெரிந்தது. எல்லாவற்றையும் ஒருமுறை கூர்ந்து அவதானித்து படி அவர்கள் முன் சிறிதுநேரம் நின்றவன்..
“வெல் கைஸ்!! ஐ அம் விநாயக் ரணசிங்க ஃப்ரம் ஸ்ரீலங்கா.. எனக்கு இப்போ உள்ள எம்பிளாய்ஸ் யாரையும் மாத்தும் எண்ணம் இல்ல.. பட் என்னோட வேகத்துக்கும் மாற்றத்திற்கும் உடன்படாதவர்களை என்னோட வைத்துக் கொள்வது எனக்கு பிடிக்காது. அதற்கு அனுசரித்து ஒர்க் பண்ணா உங்க எல்லாருக்கும் நல்லது!” என்றதும் தான் அந்தப் பெருசுகளின் முகத்தில் சற்றே ஆசுவாசம்!!
“இனி இந்த விவிஆர் சேனல் எப்படி எல்லாம் இருக்கும்னு எனக்கு ஒரு புரோட்டோகால் இருக்கு. அது படி தான் நீங்க எல்லாரும் பாலோ பண்ணனும்” என்றவன் கடகடவென்று அனைத்தையும் ஒப்புவிக்க.. சற்றே அவனது வேகத்தில் அந்த ஊழியர்கள் தள்ளாடினார்கள்.
புது முதலாளி புது சேனல் இனி நாங்களும் கெத்தா இருக்கலாம் என்று நினைப்பவர்கள், தங்களுக்கு தெரிந்த ஐடியாக்களை கூற.. இதற்கு என்று ஒரு தனி டீமை உருவாக்கினான். அந்த டீமுக்கு ஹெட்டாக ஒரு பெரியவரை போட்டவுடன் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்!!
“எங்க அப்பாவும் இன்னும் ஃபீல்டுல தான் இருக்காரு. ஆனா இந்த பீல்டுக்கு ஏத்த மாதிரி தன்னை அப்பப்போ அப்டேட் பண்ணிட்டு இருக்காரு! அந்த மாதிரி நீங்களும் இருந்தால் இந்த வயசுல இன்னொரு வேலையை தேட உங்களுக்கு தேவை இருக்காது!!” என்று மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தான்.
“இந்த மந்த் உங்களோட ஆக்டிவீடிஸ் எல்லாம் பார்த்து உங்களோட சேலரி அப்ரைசல் நெக்ஸ்ட் மந்த் நடந்து ஹைக்கும் தரப்படும்!!” என்றவுடன் இன்னும் சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக தங்கள் வேலையை தொடங்கினார்கள்!!
“கரெக்டா சார் எங்க அடிக்கணுமோ.. அங்க அடிச்சிட்டாரு!! சேலரின்னதும் என்னா ஒளிவட்டம் பாரு எல்லாரோட முகத்திலேயும்!!” என்று மைண்ட் வாய்ஸோடு நின்றிருந்த ரபினை பார்த்து முறைத்தான் விநாயக்.
‘இவர் வேற!! அப்பப்போ நம்ம மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிடுறாரு’ என்று தலையை குனிந்து கொண்டான்.
‘”சேலரி கொடுக்கிறது அவர்கள் செய்த வேலைக்கான உரிமை! புரியுதா?” என்று ஆழ்ந்த குரலில் விநாயக் கேட்க பயந்து பயந்து தலையாட்டினான் ரபின்.
இப்போதைக்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் தான் விநாயக்கின் வாசம்!! அவன் டேஸ்டுக்கு சரியாக வீடு அமையாததால் இந்த ஏற்பாடு!! பாவம் ரபின்தான் காலையில் அவனோடு ஆபீஸில் வேலை என்றால்.. மாலையில் அவனுக்கு வீடு தேடும் வேலை. அதுவும் இவன் ஜம்பமாக சூட் ரூமுக்குள் சுகமாக இருக்க.. ரபின்தான் அந்த வீட்டை பார்த்து வீடியோகால் மூலம் அவனிடம் காட்டுவான். பார்த்ததுமே சொல்லிவிடுவான் பிடிக்கவில்லை என்ற ஒற்றை வார்த்தையில்.. ‘அவ்வளவு தூரம் போனது அலைந்தது எல்லாம் வேஸ்ட் ஆஆ!!’ என்று புலம்புவான் ரபின்!!
விநாயக் மனமோ தென்னைமர சூழலில் இருக்கும் அவனது வீட்டையும்.. கடற்கரையோரம் இருக்கும் அவனது கெஸ்ட் ஹவுஸையும் மனதில் நினைத்து அதையே தேட. இங்கே அதுபோல் கிடைப்பேனா என்றது!!
“அடியே வர்ணா.. எழுந்திருடி!! மணி என்ன ஆகுது பாரு?!” என்று தன் தோழி மட்டுமல்லாது தன்னுடன் காலேஜில் ஒன்றாக படித்ததோடு.. இப்போது வேலை பார்க்கும் இடத்திலும் தனக்கு ரூம் மெட்டாக வந்து வாய்த்தவளை மொத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் சூர்யலேகா!!
மெல்ல கண் திறந்தவள், உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து அதில் பார்த்து “அப்பனே.. விநாயகா!!” என்று கூறியப்படி எழுந்தாள் நம் நாயகி ப்ரியவர்ணா!!
“வேலை கிடைச்சிருச்சு எனக்கு டோய்! சென்னையில டோய்!” அப்படி என்று பொய் சொல்லி ஊரிலிருந்து ஓடி வந்து, ஒழுங்கு மரியாதையாக வேற வேலையை தேடுறாளோ இல்லையோ காலையில நல்லா கும்பகர்ணி கணக்கா தூங்க வேண்டியது.. அப்புறம் அடிச்சி புடிச்சி கிட்டு இன்டர்வியூ போகுறதுக்குள்ள அங்கு இன்டர்வியூ முடிஞ்சிடும். இதுல வேல கிடைக்காததுக்கு டிராபிக் தான் காரணம்னு சொல்ல வேண்டியது!” என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் சூரியா..
“நான் என்னடி பண்றது? இந்த ஊர்ல டிராபிக் அவ்வளோ இருக்கு. ஒரு சிக்னல் முடிஞ்சு அடுத்த சிக்னல் போகறதுக்கே அரை மணி நேரமாகுதடி.. காலையில இதுக்கு மேல ஒரு இளம்பெண் எப்படி சீக்கிரம் இருந்திருப்பா?” என்று எட்டு மணியை காட்ட..
“மனசுல வேலை கிடைக்கனும்.. அதுல ஏதாவது சாதிக்கணும்னு எண்ணம் இருந்தா.. இந்த மணி எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. பக்தி பழமா அப்பனே விநாயகா என்று சொல்லி எழுந்திருக்கிறது.. டெய்லி காலைல கோயில் போறது மட்டும் பத்தாது” என்று அவளை திட்டிக்கொண்டே தனது அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சூரியா.
இருவருக்கும் ஊடகவியல் தான் ஏக பிரியம். சூரியலேகா தற்போது ஒரு பத்திரிக்கையில் வேலை செய்கிறாள். வர்ணாவுக்கு பத்திரிக்கை எல்லாம் எண்ணமில்லை. ஏதாவது ஒரு சேனலில் சேர வேண்டும். ப்ராக்கிராம் ஹெட்டாக உயர வேண்டும் என்பதே அவளது கனவு!!
அதற்காகத்தான் ஊரில் சண்டைபோட்டு வேலை தேடி வந்திருக்கிறாள். கல்யாணத்துக்கு அத்தைமகன் ரெடியாக காத்திருக்க இவளுக்கு வேலை சேர்ந்து ஒரு வருடம் பின்புதான் கல்யாணம் என்று தர்ணா செய்து, இதோ சென்னையில் கால் பதித்தது சேனல் சேனலாக ஏறி இறங்குகிறாள்.
சூர்யாவும் தனக்கு தெரிந்த வகையில் அவளுக்கு உதவி கொண்டிருக்கிறாள். கூடவே அவளது நண்பர்களின் மூலமும் எந்த சேனலிலாவது ஏதாவது ஒரு வேலையை தேடித் தேடிக் கொண்டுவந்து சொல்வதும் அவளது மற்றொரு வேலையாயிற்று..
எப்படியாவது சேனலுக்குள் நுழைந்தால் போதும்! அதன் பிறகு தனது திறமையை காட்டி மென்மேலும் முன்னேறி விடலாம் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை!!
விஷ்வல் டெக்னாலஜி முடித்தவள் கூடவே இயக்குனருக்கு சம்பந்தமான சில பட்டயப் படிப்புகளையும் முடித்தவள்!! ஆக..ஏக திறமைக்காரி தான்!! ஆனால்.. அந்த நாக்கு இருக்கிறதே.. அது சற்றே கொஞ்சம் துள்ளி விளையாண்டு விடும் துடுக்காக!! அதுவே பெரும் வினையாக!!
இப்படியாக ஒரு மாதம் ஓடி விட்டது அவள் சென்னைக்கு வந்து.. அன்றும் அவளுக்கு ஒரு இண்டர்வியூ!! அதுவும் பிரபல சேனலின் சிஇஓவை பார்க்க நண்பியை அழைத்துக் கொண்டு சென்றாள் சூர்யா.. அந்த சேனலில் கேமரா மேனாக இருக்கும் முகேஷ் சூர்யாவின் நண்பன். அந்த முறையில் அவளுக்காக இந்த அப்பாயின்மென்ட்டை பெரும்பாடுபட்டு வாங்கி வைத்திருந்தான்.
எங்கே தோழி சொதப்பி வைத்துவிட போகிறாளோ என்று பயந்து சூரியாவும் கிளம்பி இருந்தாள். ஆனால்.. வெளியே லாபியில் அவள் காத்திருக்க, பல முறை சொல்லி சொல்லியே அனுப்பி வைத்தாள் “டூ ஃபோர்!!” என்று ரூம் நம்பரை..
அவளாவது தெளிவாக 24 என்று உரைத்திருக்கலாம்!! அல்லது இவளாவது நாற்பத்துநாலு என்றால் அதை டபுள் ஃபோர் என்றுதானே குறிப்பிடுவார்கள்.. டூ ஃபோர் என்று குறிப்பிட மாட்டாளே என்று புரிந்திருக்கலாம்!!
எல்லாம் லாம்.. லாம்.. தான்!! ஆனால் எல்லாவற்றையும் மேலிருந்த ஆட்டி வைத்த அந்த குட்டி கியூப்பிட்டின் “லாம்!” வேறையாக இருந்தது!!
அந்த டூ ஃபோரை.. டபுள் ஃபோர் என்று எண்ணிக் கொண்டு.. அப்பெரிய சூட் அறையினுள் நுழைந்தாள் ப்ரியவர்ணா.. அங்கே இருப்பது விநாயக் என்று அறியாமல்!!
இவள் சென்றது காலை 10 மணி அளவில்.. அன்று தான் ஒரு மீட்டிங் என்று சென்னை வந்து இறங்கி இருந்தான் விநாயக். இந்த ஒரு மாத காலத்தில் அவன் எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட் அவனது சேனலுக்கு பெருகிவிட.. அதேநேரம் இலங்கையிலுள்ள தொழிலையும் பார்க்க வேண்டும் அல்லவா? அதனால் இரண்டுக்குமிடையே அவ்வப்போது பறந்துக் கொண்டிருந்தவன். ஒரு வாரம் கழித்து இப்போதுதான் சென்னையில் கால் பதித்தது இருந்தான். அதுவும் இன்று புதிய சேனல்கள் லான்சிங் மீட்டிங்..
விவிஆர்-இன்.. அடுத்தடுத்த சேனல்களை தமிழகம் மட்டுமல்ல உலகம் பூரா இருக்கும் தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பெரிய மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். ஏற்பாடு எல்லாம் ரபின் கவனித்துக் கொண்டிருக்க, காலையில் வந்தவன் சென்னை வெயிலின் தாக்கத்தில் மீண்டும் குளியல் ஒன்று போட்டுவிட்டு வெளியில் வர அவனது அன்னை அழைத்து விட்டார்.
வழக்கமான நல்லநேரம் பற்றி அவர் கூறிக் கொண்டிருக்க.. சரி சரி என்று பேசி கொண்டிருந்தவன் தனது படுக்கை அறையில் இருந்து வெளியில் உள்ள அறைக்கு வரவும்..
“சார்?? சார்!! யாராவது இருக்கீங்களா??” என்று கூப்பிட்டுக் கொண்டே வெளியில் இருந்த அறையிலிருந்து அந்தப் படுக்கை அறைக்குள் மெல்ல வர்ணா வரவும் சரியாக இருந்தது.
போனில் கவனம் வைத்து இருந்தவனுக்கு, இப்படி தன் அறையில்.. தன் அனுமதி இல்லாமல் ஒருத்தி வரக்கூடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவனும் கேஷுவலாக வர.. வந்தவனோடு முட்டிக்கொண்டவள் அவன் மீதே சரிய.. அந்த திடீர் தாக்குதலில் தன்மேல் சரிய இருந்தவளை இடையை இழுத்துப் பிடித்து நிறுத்த, அவளோ பயந்து பிடிமானத்திற்காக அவனது டவலை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
அவனின் அந்த ஒற்றை பூந்துவாளை அந்தோ பரிதாபமாக அவனின் இடையை விட்டு இறங்கி நழுவிட.. சட்டென்று சுதாரித்தவன், அவளை இடையோடு இறுக்கி அணைத்து, அவள் அணிந்திருந்த சுடிதாரின் ஷாலை சரெலென்று எடுத்தான், தன்னை பாதுகாத்துக் கொள்ள..
அவளுக்கோ நடந்ததே அதிர்ச்சி என்றால்.. இப்போது அவன் செயல் பேரதிர்ச்சி!!
விழிவிரித்து அவனை பார்க்க.. அவளின் பயந்த அதிர்ந்த ஆழிவிழிகளோ அவனை அதனுள் இழுக்க.. ஒற்றை தலையசைப்பில் அதனை தவிர்த்தவன்,
“உங்களுக்கு எல்லாம் காலம் நேரம் கிடையாதா?? அப்படி ஒரு அவசரம்!! ச்ச்சீ.. அப்படியென்ன உடல் சுகம் தேவைப்படுதோ?? இல்லை பணத்திற்காக அலைகின்ற கூட்டமா? என் கிட்ட எல்லாம் அந்த வேலை செல்லாது!! நீ கிளம்பலாம்..” என்று அமில வார்த்தைகளை கொட்டினான். அவளை விலைமாது என்று தவறாக நினைத்துக் கொண்டு..
முதலில் அதிர்ச்சியில் இருந்தாலும் அவன் பேசியதை கேட்ட வர்ணாவுக்கு உள்ளுக்குள் தகித்தது அந்த வார்த்தைகளும் அதன் வீரியமும்!! அது எப்படி ஒரு பெண்ணை எடுத்த எடுப்பிலேயே விலைமாது என்கிறான் என்று!!
வழக்கம் போல அவளது கட்டுப்பாடில்லாத வாய் அவள் யோசிக்கும் முன்னே பேசி விட்டது.
“என்னது?? நான் அப்படிப்பட்ட பொண்ணா?? என் ஷாலை உருவி இப்படி கட்டிபிடிச்சிட்டு நிக்குற நீ என்ன பெரிய உத்தமனா? அப்படிப்பட்ட பொண்ணுகிட்ட போற நீயும் வேசன் (வேசிக்கு ஆண்பாலாமாம்) ஒழுக்கம் கெட்டவன்..” என்ற படபட எனப் பொரிய..
தன்னை ஒரு சொல் சொல்லவிடாமல் இதுவரை வாழ்ந்தவனுக்கு கோபம் கொதித்து கொண்டு வந்தது. அப்போதுதான் வந்த முதல்நாள் தன்னை பேசியதும் இவள் என்று இவளது குரலை வைத்து கண்டுபிடித்தான் விநாயக்.
ஆத்திரத்தில் துடித்த அவளது கனிந்த இதழ்கள் தானே அன்றும் இன்றும் என்னை இழந்து பேசியது என்று யோசித்தவன்… சற்றும் யோசிக்காமல் அவள் இதழ்களை வன்மையாக தண்டித்தான். தன் பற்களாலும் இதழ்களாலும்..
வானவில்.. வரும்…
Q👌👌👌👌👌👌👌👌👌👌
JVyUpoXHmhFMvL
Super sis 💞