ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 10

அத்தியாயம் 10

 

“ம்ம்.. ப்ச்.. தலையெல்லாம் ஒரே  வலி..” என்றவாறே எழுந்த ஹரிஷான்த், தான் இருக்கும் கோலத்தை உணர்ந்ததும், அருகினில்  இருப்பது யார் என்று பார்க்க, அங்கே யாரும் இல்லாது குழம்பிப் போனான். 

 

“ஹாசி.. ஹாசி..” என்று குரல் கொடுத்தவாறே தனது ஆடைகளை அணிந்தவன்,

 

“எங்க போனா இவ?” என்று தன் வாயிற்குள் முணுமுணுத்தவாறே ஹாலிற்கு வந்தவனின் கண்ணில், இன்னும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் பட,

 

“டேய்.. எந்திரிங்கடா.. விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு.. இன்னும் தூக்கமா? எந்திரிச்சு தொலைங்கடா..” என்றவன் அவர்களை எழுப்பிவிட,

 

“ப்ச்.. என்னடா அதுக்குள்ள விடிஞ்சுருச்சு.. எனக்கு இன்னும் தூக்கம் தூக்கமா வருது..” என்றவாறே ராக்கி, மீண்டும் படுத்துறங்க முயல, அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து, அதிலிருந்த தண்ணீரை அவன் மீது ஊற்றியவன்,

 

“இப்ப ஒழுங்கா எந்திரிக்கல.. மவனே! இப்ப சாதாரண தண்ணீர் தான் ஊத்திருக்கேன்.. அப்புறம் கொதிக்குற சுடு தண்ணியை மூஞ்சில ஊத்திடுவேன்..” என்று அவர்களை மிரட்ட,

 

“கொலைகார.. கொலைகார.. உன்னைய நம்பி வந்ததுக்கு ரொம்ப நல்லா கவனிக்குறடா.. இது தான் உன் அதிகாரத்துல விருந்தோம்பலா? அப்படியே சோப்பையும் தூக்கிப் போட்டேனா? இங்கேயே குளிச்சுடுவோம்..” என்ற ராக்கியை, ஹரிஷான்த் முறைத்துப் பார்க்க, மற்றவர்களையும் எழுப்பிவிட்ட ராக்கி, ஹரிஷான்தின் அறைக்குள் அழைத்துச் சென்றான். அவர்கள் அனைவரும் தனது அறைக்குள் செல்வதை பார்த்த ஹரிஷான்த்,

 

“ஹாசி.. ஹேய் ஹாசி.. எங்கடி போன? எதையும் சொல்லி தொலையுறதில்ல.. விடிஞ்சும் விடியாம எங்கடி போன?” என்று கத்தியவாறே, அவளது அறைக்குள் நுழைய, அங்கே அவளில்லாது ஏமாந்து போனான். அவளது அறையில் இருக்கும் மேஜையின் மீது கடிதம் போல் ஏதோ இருக்க, அதனை எடுத்து படித்தவன்,

 

“சொல்லாம கொள்ளாம உன் அம்மா வீட்டுக்கா போயிக்க? திரும்பி வருவயில்ல? அப்ப இருக்குடி.. உனக்கு?!” என்று கோபத்தால் தன் பற்களை நறநறவென கடித்துக் கொண்டவன், தன் வேலைகளை தானே செய்ய தொடங்கினான். இதுவரை, காலையில் உணவு சமைப்பதிலிருந்து, அவனுக்கு பொருத்தமான ஆடை எடுத்து வைப்பது வரை அவள் தான் செய்து கொண்டிருந்தாள். இப்போது, அவளில்லாதது ஏதோ ஒரு வெறுமையை அவன் மனதில் ஏற்படுத்தியது. 

*********************************************

“இப்ப நீயா கார்ல ஏறி உட்காருறியா? இல்ல நான் வந்து தூக்கி உட்கார வைக்கட்டுமா?”

 

“ஏன்? எனக்கு காலிருக்கு.. தானே வந்து உட்கார்ந்துக்குவேன்..” என்றவாறே ஹர்ஷவர்தனின் பிஎம்டபிள்யூ காரில் ஏறி அமர்ந்தாள் விளானி. 

 

“க்கும்.. கார் நல்லாருக்கேன்னு.. கொஞ்சம் ஆஆஆன்னு பார்த்துட்டேன்.. அதுக்கு இப்படித்தான் கிண்டல் பண்ணுவானா? ஹும்.. இருக்கட்டும் உனக்கு இருக்குடா.. ஒருநாள்” என்று தனக்குள் முணுமுணுத்தவாறே சீட் பெல்ட் அணிய, அடுத்த நிமிடம் கார் காற்றில் பறந்தது. சிறிது நேரத்திலேயே ஷாப்பிங் மாலை அடைந்துவிட, மூச்சு வாங்கிக் கொண்டே,

 

“எதுக்குடா.. இவ்வளவு ஃபாஸ்டா வர்ற.. பாரு.. என் ஹார்ட் எப்படி துடிக்குதுன்னு..” என்றவள் தன் நெஞ்சில் கை வைத்து காட்ட, தானும் துடிக்கும் அவளது இதயத்துடிப்பை அறிய ஆவல் கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில், அப்படியோர் எண்ணம் தனக்கு வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டவன், எதுவும் பேசாது காரை விட்டு இறங்கினான். அவன் பின்னோடு காரை விட்டு இறங்கியதும், அவனை பின் தொடர்ந்து ஓடினாள் விளானி. 

 

“டேய்.. ஓடாதடா.. நில்லுடா.. நானும் வர்றேன்.. உன்னை நம்பி நான் எதுவும் எடுத்துட்டு வரல..” என்றவாறே அவனோடு இணைந்து லிஃப்ட்டில் ஏறியவளுக்கு, தனக்கு மேலே இருக்கும் எண்ணை அழுத்த முடியவில்லை. குதித்து குதித்து பார்த்து சோர்ந்து போனவள், பரிதாபமாக ஹர்ஷவர்தனை பார்க்க,

 

“இதுக்கு தான் கொஞ்சம் வளரும்.. குள்ள கத்திரிக்கா..” என்றவாறே லிஃப்ட்டில் மேல் தளத்திற்கான எண்ணை அழுத்த

 

“நீ பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் சாப்பிட்டு ஹைட்ரா வளர்ந்தா.. அதுக்கு நானா பொறுப்பு.. நல்லா லைட் ஹவுஸ் டவர் மாதிரி இருந்துட்டு.. என்னைய குள்ள கத்திரிக்கான்னு சொல்ற? உன் ஹைட்டுக்கு எல்லாம் கல்யாணமே ஆகாது தெரியுமா? ஏதோ.. பாவம் தெரிஞ்ச பையனாச்சேன்னு வாழ்க்கை கொடுத்தா.. ரொம்ப ஓவரா பேசுற?” என்ற விளானி குதித்து குதித்து பேச, தனது காதுக்குள் சுண்டு விரலை விட்டு குடைந்தவன், அவளை சிறிதும் மதிக்காது, பல்பொருள் அங்காடி தளத்திற்குள் சென்றான். அவனை வால் பிடித்துக் கொண்டே உள்ளே சென்றவள், தனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று தனது கைபேசியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“ஹேய் ஹர்ஷா.. வர மாட்டேன்.. வர மாட்டேன்னு சொன்ன? இப்ப ப்ரியாவை சைட் அடிக்க.. யாருக்கும் தெரியாம வந்துருக்கியா?” என்று நகுலன் கேட்க, கண்கள் பளிச்சிட ஹர்ஷவர்தனை பார்த்தாள் ப்ரியா. ஆனால் அவனோ, சற்று தூரத்தில், மேலே இருக்கும் கேலாக்ஸ் பாக்கெட்டை எடுக்க குதித்துக் கொண்டிருந்த விளானிக்கு இவன் கூறியது கேட்டு விட்டதோ? என்று பார்த்துக் கொண்டிருந்தான். ஹர்ஷவர்தன் பார்வை செல்லும் இடத்தை பார்த்த ப்ரியாவின் முகம் சுருங்கியது. சிறிது நேரத்தில் சடாரென சத்தம் கேட்க, அங்கு ஓடி வந்து பார்த்தவன் கண்ணில், மொத்த அலமாரியையும் சரித்து விட்டிருந்த விளானி படவே, ஒருவித பதட்டத்தோடு,

 

“என்னடியாச்சு? அடிகிடி எதுவும் படத்தையே?! திரும்பு.. இப்படி திரும்பு..” என்று பார்வையால் அவளை அளவிட்டவனின் முன்னால் வந்து நின்றார் அத்தளத்தின் மேனேஜர். 

 

“அவங்களுக்கு ஒன்னும் ஆகல சார்.. இந்த ரேக்ல இருக்குற பொருளுங்க தான் கொஞ்சம் சேதாரமாகிடுச்சு.. இதுக்கு எப்படி பே பண்ண போறீங்க சார்? கேசா? செக்கா?” என்றவர் கேட்க, 

 

“யோவ்.. என்ன விளையாடுறியா? எக்ஸ்பீரியரான பாக்கெட்டை வைச்சுக்கிட்டு, எல்லா செலவையும் எங்க தலைல கட்ட பார்க்குறியா? சொட்டை தலையா.. பார்க்க கொஞ்சம் கேனையன் மாதிரி தெரிஞ்சா.. மொத்தத்தையும் இவன் தலைல கட்டுவியா? இருடா.. ஹெல்த் டிபார்ட்மென்ட்டை கூப்பிட்டு.. உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்துறேன்..” என்று கத்திக் கொண்டிருந்த விளானியை முறைத்து பார்த்த ஹர்ஷவர்தன், அவள் காதருகே குனிந்து,

 

“இப்ப வாயை மூடல? மவளே! எல்லோருக்கும் முன்னாடி லிப் லாக் சீன் சொல்லிட்டேன்.. ஏற்கனவே டெமோ க்ளாஸ் எல்லாம் எடுத்துருக்கேன்.. மறந்துடாத..” என்று மிரட்ட, கப்பென வாயை மூடிக் கொண்டாள் விளானி. 

 

“சார்.. உங்க முகத்துக்காக பார்க்குறோம்.. இல்லன்னா.. இந்த பொண்ணு பேசுன பேச்சுக்கு போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருப்போம்..” என்ற மேனேஜரை விளானி முறைத்து பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

 

“அதான் உங்களுக்கு அமௌண்ட் செட்டிலாகிடுச்சுல.. தேவையில்லாம அவளை பத்தி பேசாதீங்க.. அவளை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுனீங்க?” என்று தீர்க்கமான குரலில் அவரை எச்சரித்தவன், விளானியின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான். 

 

“அதான் நானே நடந்து வர்றேன்ல.. எதுக்கு மாட்டை இழுத்துட்டு போற மாதிரி.. இழுத்துட்டு போற? அய்யோ என்ன முறுக்கு டப்பா கீழ விழுகப்‌ போகுது..”

 

“அரிசி மூட்டை.. அரிசி மூட்டை.. எப்பப்பாரு திங்குறதை பத்தி மட்டும் யோசி.. அவன் அந்தளவுக்கு பேசுனதுக்கு அப்புறம்.. அந்த இடத்துல ஒரு நிமிஷம் நிற்கலாமா? சீக்கிரம் வண்டில் ஏறு..”

 

“சும்மா கத்தாத.. உன் லவ்வர்கிட்ட பேச முடியலைங்குற கோபத்தை இந்த மாதிரி காட்டாத..”

 

“ஹேய் நிறுத்து.. யாருக்கு யார் லவ்வர்? சும்மா கதை கட்டிவிடாத.. ஒரு பொண்ணோட வாழ்க்கை அடங்கியிருக்கு.. வாய்க்கு வந்த படி பேசாம ஏறு..”

 

“உன்னோட ப்ரெண்ட்ஸ்?”

 

“எப்படி இங்க வந்தாங்களோ? அதே மாதிரி திரும்பி வருவாங்க.. நீ முதல்ல வாயை மூடிட்டு வா.. அவனுங்க நடராஜா சர்வீஸ்ல நடந்தே வருவாங்க..” 

 

“இரு.. இரு.. ஒன்னு வாங்க மறந்துட்டேன்..”

 

“என்னது?”

 

“அது?”

 

“ஓ.. அதுவா.. நான் அப்போவே அதை எடுத்து உள்ள போட்டுட்டேனே..”

 

“எதை?”

 

“அதான்.. அந்த மூணு நாள் உனக்கு தேவைப்படுமே.. அதைத் தானே கேட்குற?’

 

“ப்ச்.. போடா.. லூசு.. அதில்ல.. இதோ வர்றேன்..” என்றவள் மொபைல் ஷோரூமிற்குள் நுழைந்தவள், வெளியே வரும் போது கையில் கேமரா இருக்க, அதனை புரியாது பார்த்தவன்,

 

“இது என்ன?” என்று கேட்க,

 

“கேமரா.. இது கூட தெரியாமலா புரோகிராமரா இருக்க?” என்றவள் அவனை புகைப்படம் எடுக்க,

 

“அது தெரியாமயில்ல.. இப்ப இது எதுக்குன்னு தான் கேட்குறேன்..” என்றான் பொறுமையிழந்து..

 

“ப்ச்.. நாளைக்கு காலேஜ் பர்ஸ்ட் டே போகப் போறேன்.. லைவ் ஸ்ட்ரீம் பண்ணணும்ல..”

 

“அதுக்கு?”

 

“நான் அழகா தெரியணும்ல.. அதான் ப்யூட்டி கேமரா வாங்குனேன்.. அப்ப தானே என்னோட ஃபேன்ஸ் எல்லாம் நிறைய லைக்ஸ் போடுவாங்க..” என்றவள் கூறிய மறுநிமிடம், அவள் கையில் இருந்த கேமராவை அவன் பிடுங்க, 

 

“கொடு.. கொடுடா.. லைட் ஹவுஸ்.. கொடுடா..” என்றவள் குதித்துக் கொண்டிருக்க,

 

“முடிஞ்சா பிடுங்குடி பார்ப்போம்..” என்றவனின் சட்டை காலரை பிடித்து, தன்னை நோக்கி இழுத்தவள், அவனது கன்னத்தில் நச்சென்று முத்தமிட, கண்கள் விரிய அதிர்ச்சியில் உறைந்தவனின் கைகள் தானாக, கேமராவில் இருக்கும் பட்டனில் பட, அழகாக அக்காட்சியை உள்வாங்கியது அவன் கையில் வைத்திருக்கும் கேமரா. அவன் அசந்திருக்கும் நேரத்தில் அவனிடம் இருந்து கேமராவை பறித்தவள்,

 

“பார்த்தியா.. உன்கிட்ட இருந்து எவ்வளவு ஈசியா பிடிங்கிட்டேன்னு.. எப்படி என்னோட ராஜதந்திரம்?” என்று சிரித்துக் கொண்டே காரில் ஏற, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல், அவளோடு காரில் ஏறியவனின் கைகள் தன்னிச்சையாக அதனை இயக்கத் தொடங்கியது.”எப்பா.. இவக்கிட்ட இருந்து விலகியே இருக்கணும்..” என்று மனதுக்குள் புலம்பியவனை பார்த்த விதி அழகாய் சிரித்தது. விலகியிருக்கவா இவர்களை ஒன்றிணைத்தது? நடந்த அனைத்தும், தற்செயலாக அந்தப் பக்கம் வந்த, ப்ரியாவின் கண்ணில் பட்டு விட, அவள் கண்ணில் பொறாமை தெரிந்தது. பத்து வருடங்களாக, அவனுக்காக அவள் காத்துக் கொண்டிருக்க, நேற்று வந்த விளானிக்கு அவன் சொந்தமாகுவதை அவளால் தாங்கி கொள்ள இயலவில்லை. அவளுக்கென்ன தெரியும்? காதல் என்பது ஒரு தீ பொறி போன்றது.. அது எப்போது யாருக்குள் உதிக்கும் என்று யாருக்கும் தெரியாதே..

8 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top