ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 3

வானவில் 3

 

 

அத்துமீறி அறைக்குள் நுழைந்தவளை ஆக்கிரமித்திருந்தான் ஆணவன்!!

 

இதழ்களினாலும்.. பற்களினாலும் சற்றே வன்மையாக!!

 

நொடி பொழுது.. நொடி பொழுதில் தோன்றிய கோபம் மட்டுமே காரணம். அது என்ன.. கோபம் கொண்டால் இப்படித்தான் வன்முறையில் இறங்க வேண்டுமா? அது என்னவோ.. காலம் காலமாக இந்த ஆண்மகன்களுக்கு பெண்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் இதுதான் வழிமுறையாக இருக்கிறது. ஆனால் அந்த தண்டித்தலுக்கு பின்னே இருப்பது என்ன? அவர்களின் ஆண்‌ என்ற திமிரா?? இல்லை பெண்‌ மீது கொண்ட மோகமா?? 

 

ஏதோ ஒன்று.. எவ்வளவு மனவலிகளை சுலபமாக தாண்டிச் செல்லும் பெண்கள் இந்த உடலை யாரேனும் சற்று தீண்டினால் கூட புழுவாய் கூட்டுக்குள் சுருண்டு விடுகின்றனர்.

 

ஆனால் அப்படியெல்லாம் நம் நாயகியை நாம் எதிர்பார்க்க முடியாது!! 

 

ஒரு கணம்.. ஒரே கணம் தான் அதிர்ந்து விழித்தாள் அவள்!! அவள் மெல்லிய செவ்விதழ்களை அவன் கண்டிக்கிறேன்.. கண்டிக்கிறேன் என்று கொய்ததை!! அடுத்த கணம் அவனது இருக்குமோ இல்லையோ என்று இருந்த தாடி அடர்ந்த அவன் கன்னங்களை இறுக்கமாகப் பற்றி தனது இதழ்களை போராடி விடுவித்தவள்.. மூக்கு விடைக்க அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“நீயும்தான் என்னை தப்பு தப்பா பேசுன.. என்னை தண்டிக்க நீ யாரு? என்ன லிப்ஸ்ல கடிச்சி வைச்சல.. இருடா!!” என்றவள் அவன் என்ன என்று‌ உணரும் முன்… அவனது கீழ் இதழ்களுக்கு நன்றாக தண்டனை கொடுத்தாள், தன் இதழ்களுக்குள் அதக்கி.. கடித்து.. மென்று தின்று!!

 

இப்படியொரு திருப்பத்தை நம் கியூபிட் கூட எதிர்பார்க்கவில்லை!!

 

வழக்கமாக தான் அம்பு விட்டால், அதற்குப்பின் நாயகன் நாயகியிடம் காதலோ.. மோகமோ கொண்டு இதழ் ஒற்றுவான். அதற்குப்பின் இருவருக்குள்ளும் ஒரு மின்சாரத் தாக்குதல் நடக்கும்.. அதன் மூலமே சின்ன சின்னதாக சிலிர்ப்பு உண்டாகி.. அது சலனமாக மாறி.. ஈர்ப்பு உருவாகி இருவரும் இணைவார்கள்!!

 

இதுதானே டா நியாயம்? இப்படி தானே டா காலம் காலமாய் நடந்து வந்தது?? இப்போது என்ன நடக்கிறது? என்று புரியாமல் தன் கையில் வைத்திருந்த அம்பினால் தலையை சொரிந்து கொண்டே.. மேலிருந்து இவர்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கியூபிட்!!

 

பாவம் கியூபிட்!! இன்னும் 90’ஸ்லேயே இருக்கிறது போல.. 

 

இருவர் உதடுகளும் பொருந்திக் கொண்டன விருப்பம் இல்லாமலே… அவள் மூக்கு அவன் மூக்கை முட்டி மோதி நெருக்கியது சற்றே வம்படியாக.. அவள் மூச்சு காற்று அவன் மூக்கில் நேரடியாக மோதி அவனது சுவாசத்தில் கலந்தது.

 

கொஞ்சம் கொஞ்சமாய் அச்சிறு பெண்ணின் ஆளுகைக்கு உட்பட்டு கொண்டிருந்தான்‌ விநாயக்!! அவளின் சூடான மூச்சுக் காற்று..

பின்னங்கழுத்தின் இறுகிய பிடி.. அவள் இடையோடு உருவாடிக் கொண்டிருக்கும் அவன் விரல்கள் இப்படியாக அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்தாள் பெண்ணவள்!!

 

என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்று அடுத்த நிமிடம் அவனை தள்ளியவள்..

 

“சுய கௌரவம்.. மானம்.. கற்பு.. எல்லாம் இரண்டு பேருக்குமே பொது தான். இண்டர்வியூக்கு வந்த பொண்ணு கிட்ட இப்படிதான் நடந்துக் கொள்வியா?? நீ எல்லாம் என்ன சேனல் வச்சு நடத்துறியோ? அங்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா இல்லையானு தெரியல.. இதுல நீ ஒரு பெரிய பருப்பு வேற..” என்று பொரிந்தவள்,

வேகமாக அங்கே டீப்பாயில் இருந்த தனது சட்ஃபீகெட் அடங்கிய ஃபைலை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டாள். அதே வேகத்தோடு அந்த

லிப்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே சில நேரம் நின்றாள்.

 

என்ன நடந்தது என்று அவளுக்கு புரியவில்லை..

 

உள்ள போனோம்.. 

வந்து மோதினான்..

திட்டினான்..

கிஸ் பண்ணிட்டான்..

அப்புறம் நாம அவனை.. அச்சோ.. ஆண்டவா!! 

 

“ஆத்திரத்தில் உனக்கு அறிவு வேலை செய்ய மாட்டேங்குது வர்ணா.. அவன் தான் அப்படி செஞ்சா.. திருப்பி அவனை போலவே நீயும் கிஸ்ஸடிச்சு வச்சிருக்கே!!” என்று அவளது மனம் அவளை கடிந்து கொள்ள..

 

அவளைப் போன்றே அறிவாளியான அவள் அறிவும் “நீயேன் அதை கிஸ் பண்ணினேனு எடுத்துகிற? அவன் என்ன கடிச்சான் திரும்ப அவனை நான் கடிச்சு வைச்சிட்டேன். யாராவது நம்மள அடிச்சா திருப்பி அடிக்கிறதுல அதே மாதிரிதான் இதுவும்!!” என்றது அவளது மானங்கெட்ட அறிவு!!

 

லிப்டை விட்டு இறங்கியவன் ரெஸ்ட் ரூம் சென்று தனது உதட்டை பார்த்தாள். அங்கே அவன் வன்மையிலும் இவளுடைய போட்டியிலும் ஏற்கனவே சிவந்த உதடுகள் இன்னும் சிவந்து அங்காங்கே இரத்தம் கட்டியிருந்தது.

 

“இதோடு எப்படி அவள போய் பார்ப்பேன்? இண்டர்வியூக்கு எப்படி போவேன்?” என்று யோசித்தவள் மடமடவென்று தன் ஹேண்ட் பேக்கிலிருந்து லிப்ஸ்டிக் எடுதது அந்த தடயங்களை மறைத்தாள். மீண்டும் தலைவாரி சிறிது மேக்கப் செய்து கொண்டவளுக்கு அப்போது தான் ஷால் ஞாபகமே வந்தது.

 

“ஐயையோ ஷாலை கேட்டா என்ன சொல்லுறது? இதையெல்லாம் மறைச்ச மாதிரி அதை மறைக்க முடியாதே?? எவ்வளவோ சமாளிச்சுட்டோம் இதை சமாளிக்க மாட்டமா?” என்று இவள் லாபி போக அங்கே தோழி சென்றாளே என்ன பண்ணினாளோ.. ஒரு வேளை சொதப்பிட்டாலோ என்னவோ என்று அவஸ்தையுடன் அமர்ந்திருந்தாள் சூர்யா.

 

இவள் அவளை நெருங்கவும் அதே சமயம் முகேஷ் போன் செய்யவும் சரியாக இருந்தது.

 

“இன்னைக்கு காலையில சார வந்து பாக்க முடியாது அங்க ஹோட்டல்ல.. அவருக்கு இம்போர்ட்டண்ட் மீட்டிங் சொல்லிட்டு இங்கே ஸ்டூடியோ வந்துட்டாரு. நீங்க இங்க வந்து அவரை பார்க்கலாம் சூர்யா.. சாரி பார் தே இன்கன்வெனியன்ஸ்” என்று கூறினான்.

 

“என்னது?? அவர் இங்கே இல்லையா?? முதலிலே அதை சொல்லி இருக்கலாம் தானே முகேஷ்.. பாவம் இவ போய் ஏமாந்து திரும்பி வந்துட்டா” என்று நண்பியின் சோகமான முகத்தை வைத்து அவளாக கற்பனை செய்துகொண்டாள் சூர்யா. 

 

“அப்போ நாம பார்த்து அவனில்லையா? அப்போ இவன் யாரு??” யோசித்துக் 

கொண்டாள் வர்ணா.

 

அதன் பின் இருவரும் அங்கிருந்து முகேஷ் சொன்ன அந்த ஸ்டுடியோவுக்கு சென்றனர்.

 

“ஹே வர்ணா.. ஷால் போட்டுட்டு வந்த எங்க அது??” என்று சூர்யா கேட்க..

 

“என்ன கனவு கண்டியா நீனு? நான் எப்போ ஷால் போட்டுட்டு வந்தேன்? இதுக்கு தான் ஷாலே கிடையாதே.. குர்தி மாடல் தானே!” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தவள் சூர்யாவின் பக்கம் திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்ப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டாள் வர்ணா..

 

சூர்யாவுக்கோ எப்படியாவது இவள் அந்த வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற டென்ஷனில் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

 

புயல் அடித்தது ஓய்ந்தது போல நின்றிருந்தான் விநாயக்!!

 

சிறு புயல் அவனை அடித்து வீழ்த்தி சென்றிருந்தது.

 

இப்படி ஒரு பெண்ணை அதுவும் தான் செய்ததற்கு திருப்பி அவள் செய்ததை எண்ணி கூட பார்க்க முடியவில்லை அவனால். அவன் செய்ததே மட்டரகமான செயல் என்று அவனது மனசாட்சி உறுத்த.. அதற்கு பதில் என்று அவள் செய்ததை நினைக்க கோபத்தோடு தேய்த்தான் உதடுகளை.. இதழ்கள் எரிந்தது அவளின் உபயத்தால்!!

 

பிசாசு!! ராட்சசி!! என்று திட்டிக்கொண்டே கண்ணாடி முன் நின்று தன் இதழ்களை தான் பார்த்தான். கடித்து வைத்ததால் சிவந்த அவன் உதடு மேலும் சிவந்து இரண்டு மூன்று பற்தடங்களும் இரத்தம் கட்டிய தடங்களும் இருந்தது.

 

“இப்படி பண்ணி விட்டாளே!! கிராதகி!!” என்று இன்னும் பெரும் கோபம் தான் அவனுக்கு.

 

தான் செய்ததை தான் தனக்கு அவள் திருப்பி செய்திருக்கிறாள் என்று புரிய மறுத்தது இந்த தொழிலதிபருக்கு!! காரணம் தான் என்ற அகந்தையும்.. தொழிலை கட்டி ஆளும் கர்வமும்!!

 

“நான் அப்படி செய்தா.. அவள் எனக்கு திருப்பி செய்துவிடுவாளா?? இருக்குடி ஒரு நாள் உனக்கு!!” என்று வன்மத்தோடு உதட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்தடுத்து போன்கால் வந்துகொண்டே இருந்தது ரபின் மற்றும் ஆபீஸில் இருந்து.

 

‘இன்னைக்கு எவ்வளவு பெரிய மீட்டிங் இருக்கு. இப்படி பண்ணி வச்சுட்டாளே!’ என்று மீண்டும் தன் உதட்டை பார்த்தவன், இதை எப்படி மறைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை..  

 

மீட்டிங் என்று ஃபுல் சூட்டில் தயாரானான். ஜெல் தடவிய சிகையை வாரிக்கொண்டே இருந்தவனது கண்கள் என்னமோ நிலைகுத்தி நின்றது அவன் உதட்டின் ஓரத்தில் இருந்த அந்தப் பற்தடத்தில்தான்!

 

“ராட்சசி!! வேம்பயர்!!” என்று திட்டிக் கொண்டே கிளம்பியவன் தன் அறையை விட்டு வெளியே வந்தவுடன் மாஸ்க் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டான்.

 

எப்பொழுதும் பஞ்சுவால்டி.. டிக்னிட்டி.. என்று ஆயிரம் கிளாஸ் எடுப்பவன், இன்று மீட்டிங்கு தாமதமாகவே வந்து இருந்தான். அதுவும் அவனின் மாஸ்க் பார்த்துவிட்டு ரபின் பதறியப்படி சென்றான் அவனருகில். “சார் என்னாச்சு எதுவும் ஹெல்த் இஷ்ஷூவா?” என்று அதிர்ந்து கேட்க..

 

“ஆமாம் கொஞ்சம் கோல்ட் அண்ட் காஃப்!! சோ.. இன்னைக்கு ஃபுல்லா மாஸ்கோட தான். அதுதான் எனக்கும் ஷேப்.. மத்தவங்களுக்கும் ஷேப்!” என்று அவனது பதிலை.. அப்படியே அங்கே வந்து மைக் பிடித்த கணவான்களுக்கும் மீட்டிங் ஒளிபரப்பிக் கொண்டிருந்த அவர்களது சேனலுக்குமே அவன் தெரிவித்தான்.

 

“வணக்கம் மக்களே!! விவிஆர் சேனல் தனது அடுத்த தடத்தை மிக அழுத்தமாகவே பதிக்கிறது. டிவி சேனல்ஸில் அடுத்தடுத்த மைல்கல்!! பாடல் படம் நகைச்சுவை விளையாட்டு செய்திகள் என்று விரிவடைகிறது நம் விவிஆர்!! அதனுடைய லாஞ்சிங் மீட்டிங் தான் இது…” என்று ஒரு தொகுப்பாளினி பேச, அதற்கு அடுத்து இருந்தனர் விநாயக் முக்கிய பிரமுகர்களும் செய்தி தொடர்பாளர் அமைச்சரும்.

 

அமைச்சரே வந்து அந்த சேனல்களை தொடங்கி வைத்தார் அப்படி ஒரு பிரம்மாண்டமான மீட்டிங்!! அவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க.. இப்படி தன்னை முகத்தை காட்டாமல் வைத்து விட்டாளே.. “யூ டெவில்!! டாமிட்!!” என்று மனதுக்குள் சரமாரியாக வைதுக் கொண்டிருந்தான் அவளை.

 

இங்கு லைவாக போன நிகழ்ச்சிகளை இன்டர்வியூக்காக போன இடத்தில் அமர்ந்து தனது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா!!

 

 அவளுக்கு விநாயக்கை அந்த அளவு ஞாபகத்தில் இல்லை. முதல் முறை பார்க்கும்போது எதோ வெளிநாட்டவன் என்றிருந்து விட.. அந்த நிகழ்ச்சியையே இவள் மறந்து போய் இருந்தாள். இரண்டாம் முறை பார்த்த போது கோபம் மட்டுமே இருந்தது அவளுக்கு. அவனை உற்று நோக்கும் எண்ணமும் இல்லை. இப்பொழுது முக கவசம் அணிந்து இருந்தவனை பார்த்து அருகில் இருந்த தோழியிடம் “இவங்க பெரிய சேனல் தெரியுமா சூரி? இந்த சேனலில் மட்டும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா??? அப்பா எப்படி இருக்கும் தெரியுமா? என்ன பண்றது.. நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே.. இந்த சேனல் ஆரம்பித்து ஒரு மாதம் மட்டும் தான் ஆகுது. அதுக்குள்ள டிஆர்பி எங்கையோ ஏறிட்டு!!” என்று குசுகுசுவென்று அந்த சேனலை பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.

 

அவள் கையில் இருந்து போனை வெடுக்கென்று பிடுங்கி சூர்யா “கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? இவங்க அவங்களோட காம்படீட்டர் சேனல்!! இங்க வேலை தேடி வந்து, அவங்க சேனலை பத்தி பேசிகிட்டு இருக்க.. அதுக்கு பதில் இந்த சேனலின் டீடைல்ஸ் எல்லாம் பார்த்து இருக்கலாம் தானே? அங்க ப்ராஜக்ட் ஹெட் ஏதாவது கேள்வி கேட்டா டான் டானு பதில் சொல்லலாம் தானே!!” என்று அங்கலாய்த்தாள் சூர்யா.

 

“அதெல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன் சூரி டியர்.. நான் தூங்குவதில் மட்டும்தான் கொஞ்சம் லேசி.. மத்தபடி இந்த டீடைல்ஸ் எல்லாம் அம்மணிக்கு அப்படியே பிங்கர் டிப்ஸ்ல இருக்கும் தெரியுமா? இவங்க எப்ப சேனல் ஆரம்பிச்சாங்க.. அப்போதிருந்த  பெரிய ஷோ எது?? இவங்களோட டிஆர்பி அதிகமுள்ள ப்ரோக்ராம் எதெது? எல்லாம் எனக்கு தெரியும். யூ டோண்ட் வொர்ரி!” என்று பேசிக்கொண்டிருந்த தோழியிடம் “ஏதோ கொஞ்சம் அறிவு இருந்தா சரி!! எப்படியாவது இந்த வாய்ப்பை பிடித்து மேலே வந்திடு தெய்வமே.. இதுக்கு மேல உனக்காக வேலை தேட எனக்கு சக்தியில்லை தெய்வமே!!” என்று கையை உயர்த்தி மன்றாடினாள் சூரியா.

 

“கேட்ட வரம் அளித்தோம் மங்கையே!! கவலை கொள்ளாதே!!” என்று வர்ணா சிரிக்க.. இப்படியாக நேர்காணலுக்கு இவள் அழைக்கும் வரை இருவரும் கதைத்துக் கொண்டிருந்தனர்.

 

அங்கே இன்டர்வியூக்கு அழைக்கப்பட்டவளுக்கு மூன்று சுற்றுகள் வைத்து அதற்கு பின் இவள் தேர்வாகி விட்டாள் என்று கூற முதலில் நம்பவே முடியாமல் சந்தோசத்தில் திளைத்தாள் வர்ணா.

 

“ஆதி சேனலில் எனக்கு வேலை கிடைச்சிருச்சு டோய்!! இனி நானும் ப்ரோகிராம் பண்ணுவேன் டோய்!!” என்று துள்ளி குதித்து ஹாஸ்டல் முழுவதும் ரகளை செய்து கொண்டிருந்த தோழியை கண்களில் சிரிப்போடு பார்த்து இருந்தாள் சூர்யா.

 

அந்த சந்தோசத்தில் காலையில் நடந்த விஷயங்கள் கூட காத தூரத்திற்கு சென்று விட்டது. இப்படியாக சென்றிருந்தால் நான் நன்றாகத்தானே இருக்கும். ஆனால் கியூபிட் வேறு திட்டம் போட..

 

ஒரு ரியால்டி ஷோ செய்வதற்காக சென்ற வர்ணா விநாயக்கின் பிடியில்..

 

அவளின் கன்னங்களுடன் சேர்ந்து மூக்கு நுனி கூட சிவந்து கோபத்தில் தகிக்க… அவளின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான்.. அவள் கண்களைப் பார்த்தவனை நீர் நிரம்பிய விழிகளுடன் அவளும் அவனைப் பார்த்தாள். நிச்சயமாக அதில் வலி மட்டும் இல்லை. அவளுக்கு அதையும் தாண்டி ஆத்திரமும் கோபமும் தெரிந்தது!!

 

ஆனால் என்ன செய்து என்ன பயன்?? அவள் இருப்பது இப்போது இலங்கையில் அல்லவா??

வானவில் வளரும்..

7 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top