அத்தியாயம் 11
“என்னடா.. இப்படி முடிய சொல் சொதன்னு வைச்சுருக்க.. துவட்டலையா? சளி பிடிச்சுக்கப் போகுது..” என்ற அர்ஜுன், ஹாசினி கையில் வைத்திருந்த துண்டை வாங்கி, அவளது தலையை துவட்டினான். துவட்டும் போதே, அவளது தோளிலும் கழுத்திலும் கன்றி போயிருந்த காயங்களை பார்த்தவன்,
“டாடி ரூம்ல.. டேபிளுக்கு கீழே ஒரு ஆயின்மெண்ட் இருக்கும்.. அதை எடுத்துட்டு வா..” என்று கூறியவாறே முடியில் இருக்கும் நீரை துடைத்து காய் வைத்தவன், அவளை தனது அறைக்கு அனுப்ப, அவளும் அவன் சொன்ன ஆயின்மெண்ட்டை எடுத்து வந்தாள்.
“உன்னோட ரூம்க்கு போ.. எங்கல்லாம் காயமிருக்கோ.. அங்கல்லாம் போட்டுட்டு வா..”
“டாடி?”
“நான் உன்னோட டாடி மட்டுமில்ல.. டாக்டரும் கூட.. போ டா.. போ.. அப்புறம் புறையோடிட போகுது.. போ..” என்றவளது அறைக்குள் அனுப்ப, கண்ணில் தேங்கிய நீருடன் தனது அறைக்குள் சென்றாள் ஹாசினி.
“எங்க ஹாசி? சாப்பாடு டேபிள் மேல எடுத்து வைச்சுருக்கேன்..”
“சரி நான் பார்த்துக்குறேன்.. நீ ஸ்கூலுக்கு கிளம்பு.. ஈவினிங் வந்து அவக்கிட்ட பேசுக்கோ..”
“அதில்லங்க..”
“நான் பார்த்துக்குறேன்.. நீ கவலைபடாம போயிட்டு வா..” என்ற அர்ஜுன், வாடி போன முகத்துடன் நின்றிருந்த மலர்கொடியின் இடையோடு கையிட்டு, தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளது நெற்றியோடு தன் நெற்றியை வைத்து, மூக்கோடு மூக்கு உரசி, இதழோடு இதழ் சேர்த்தான்.
“பயப்படாத.. நம்ம பொண்ணு ஒண்ணும் சின்னப்புள்ளயில்ல.. அவளோட கையை விட்டுடு.. இன்னமும் அவளை உன் கைக்குள்ள வைச்சுக்கணும்னு நினைக்காத.. சில சமயம், நாம விலகித்தான் நிற்கணும்.. புருஷன் பொண்டாட்டி சண்டை காலைல ஆரம்பிச்சு சாயங்காலத்துக்குள்ள முடிஞ்சுரும்.. அப்படி முடியலைன்னா நாம தலையிடுவோம்.. அதையும் நான் பார்த்துக்குறேன்.. என்னைய மீறி நம்ம புள்ளைங்கள யாராலும் காயப்படுத்த முடியாது.. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?”
“உங்களை நம்பாம யாரை நம்புவேன்?”
“இப்படி முகத்தை வைச்சுக்காத.. அப்புறம் நீ ஸ்கூல் போன மாதிரி தான்..” என்றவன் அவளது காதோரம், தன் மீசையை வைத்து உரச, அம்பதிலும் உடல் சிலிர்த்தாள் மலர்கொடி.
“ரொம்ப தான்.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு.. சீக்கிரமே பேரனோ பேத்தியோ எடுக்க போறோம்.. இப்படி பிள்ளையில்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடாதீங்க..”
“என்னைய கிழவன்னா சொன்ன? இன்னைக்கு நைட் இருக்குடி உனக்கு கச்சேரி.. நான் கிழவனா? யூத்தானான்னு நீயே புரிஞ்சுக்குவ.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சுனா என்ன? பேரன் பேத்தி வந்தாத்தான் என்ன? எனக்கு நீ தான் பொண்டாட்டி.. உனக்கு நான் தான் புருஷன்.. உன் மேல நான் வைச்சுருக்குற ஆசையோ.. காதலோ.. பாசமோ என்னைக்கும் மாறாது.. ஒருவேளை உனக்கு முன்னாடி நான் செத்துப்போனாலும், உன்னையும் கூடவே கூட்டிட்டு போயிடுவேன்.. மரணம் கூட உன்னைய என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது..”
“என்ன பேச்சு பேசுறீங்க? மரணம்.. அது இதுன்னு.. இப்படி பேசாதீங்க.. தப்பு.. தப்பு.. வாயில போடுங்க..” என்ற மலர்கொடியின் இதழ்களோடு அழுத்தமாக தனது இதழ்களை புதைத்துக் கொண்டார் அர்ஜுன். இளமையில் வரும் காதலை விட, முதுமையில் இருக்கும் காதல் மழைசரல் போன்றது. கணவன் மனைவி வாழ்வானது உடலோடு ஒட்டி இருக்கும் உடை போன்றதல்ல.. உடலுக்குள் இருக்கும் உயிரும் போனாலும், நம்மை சுற்றி இருக்கும் ஆன்மா போன்றது. புரிதல் என்ற ஒன்று வந்து விட்டால், திருமண வாழ்வு ஒரு வரம். அந்த புரிதல் இல்லாதவற்களுக்கு திருமண வாழ்வு எப்போதும் ஒரு சாபம் தான். நம் வாழ்வை வரமாக மாற்றுவதும், சாபமாக மாற்றுவதும் நம் மனதில் தான் இருக்கிறது. தனது அறையை விட்டு வெளியே வந்த ஹாசினியின் கண்ணில், தன் தாய் தந்தையரின் அன்யோன்யம் பட, அவர்களை நினைத்து, தன் மனதுக்குள் பெருமைபட்டு கொண்டாள்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே” என்ற மகாகவியின் பாடல் தானாக அவளது மனதில் உதிக்க, தன் பெற்றோரை நோக்கி நடந்து வந்தாள் ஹாசினி.
“என்னம்மா இன்னுமா ஸ்கூலுக்கு கிளம்பல?” என்ற ஹாசினியின் குரலில் தன் கணவரிடம் இருந்து விலகினார் மலர்கொடி. சிவந்த முகத்தை வேறுபக்கம் திருப்பி, மறைத்துக் கொண்டவர், ஹாலில் மேஜையில் இருந்த தனது தோள்பையை எடுத்துக் கொண்டு, ஓடாத குறையாக அங்கிருந்து வெளியேற,
“மலர்.. சீக்கிரம் வந்துரு.. அகில் கீழ காரெடுத்து ரெடியா இருக்கான்..” என்ற அர்ஜுனின் குரலுக்கு, “ம்ம்ம்..” என்று தலையசை மட்டும் பதிலாக கொடுத்த மலர்கொடி, விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடினார்.
“அம்மா.. எப்படி வெட்கபடுறாங்க பாருங்க டாடி.. இத்தனை வயசுக்கு அப்புறமும் இவ்வளவு அழகா வெட்கப்படுறாங்க..”
“வெட்கப்படுறதுக்கு எதுக்குடா வயசெல்லாம்? மனசுக்கு பிடிச்ச வங்க கூட இருந்தா.. அறுபதிலயும் ஆசை வரும்.. வெட்கமும் வரும்.. நீ வா.. டாடி உனக்கு புடிச்ச பூரி உருளைக்கிழங்கு பண்ணிருக்கேன்.. சூடு ஆருறதுக்குள்ள சாப்பிடு..” என்ற அர்ஜுன், தன் மகளுக்கு தன் கையால் உணவை பறிமாற, ஹரிஷான்தின் நினைவு மனதில் தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
“ம்ம்.. ஹரி இந்நேரம் எழுந்துருச்சு.. ஆஃபிஸ் போயிப்பான்ல?” என்ற அர்ஜுனின் குரலில் புரையேற, அவளது தலையை மெல்ல தட்டிவிட்டவன், குடிக்க தண்ணீர் எடுத்து கொடுக்க, அதை வாங்கி குடித்தவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான் அர்ஜுன்.
“உனக்கு என்ன நடந்துச்சுன்னு நான் கேட்கமாட்டேன்.. ஆனா, அது உன்னோட சம்மதத்தோட தான் நடந்துச்சா?” என்று தீர்க்கமாக கேட்டவனுக்கு,
“ம்ம்ம்..” என்று தலை குனிந்தவாறு தலையாட்டியவளின் எதிரே அமர்ந்த அர்ஜுன், தன் கைபேசியை எடுத்துக் கொண்டு,
“சரிடா.. நீ ரெஸ்ட் எடு.. டாடி ஒரு வேலையா வெளியே போயிட்டு வந்துடுறேன்..” என்று கூறிவிட்டு வெளியே செல்ல, உணவு மேஜையில் இருந்து எழுந்தவள் ஜன்னல் ஓரமாக போய் நின்று கொண்டாள்.
“அமிர்தன்.. ம்ம்.. நான் தான்.. உன்கூட பேசணும்.. கொஞ்சம் வெளியே வர்றியா?” என்ற அர்ஜுனின் முகமும் குரலும் இறுகி போயிருந்தது.
“என்னடா நினைச்சுட்டுருக்கான் உன் பையன்.. இப்படித்தான் பொண்டாட்டிய பார்த்துப்பானா? என் பொண்ணை இந்த நிலைமைல, என்னால பார்க்க முடியலடா.. அவளை எப்படி வளர்த்தேன் தெரியுமா? என் வீட்டு இளவரசிடா அவ.. அவளை ராணியா வைச்சுருக்க வேணாம்.. ராணி மாதிரி நடத்திருக்கலாமே? அப்படி என்னடா உன் பையனுக்கு அலட்சியம்? ஊருக்கு வந்தவ.. நல்லபடியா வந்தாளா? சாப்பிட்டாளா? தூங்குனாளா? உடம்புக்கு நல்லாருக்கா? ஃபோன் பண்ண வேணாம்.. ஒரு மெஸேஜ் போட்டுருக்கலாமே? என் பொண்ணு.. போனும் கையுமா இருக்காடா.. இதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற? நீ தானே அவ ஹரியை கல்யாணம் பண்ணிக்க காரணம்?”
“அர்ஜுன்.. கூல்.. கூல்.. எதுக்கு இப்படி புலம்புற? சின்னஞ்சிறுசுங்க.. கொஞ்சம் முன்ன பின்ன அப்படித்தான் இருப்பாங்க.. நீ ஏன் கவலைப்படுற?”
“ஏன் கவலைபடுறேன்னா கேட்குற? என் பொண்ணை நீ வந்து பார்த்துருக்கணும்.. அப்ப நீ இப்படி பேசிட்டுருக்கமாட்ட.. அவ உடம்பு பூரா காயம்.. அவ எங்கக்கிட்ட ஒண்ணுமே சொல்லலை.. இருந்தாலும் ஒரு டாக்டரா.. அப்பனா.. எனக்கு தெரியாது? எதுனால அந்த காயம் வந்துருக்கும்னு?”
“சரி.. சரி.. கோபப்படாத.. நான் ஹரியை இங்க வர சொல்லிருக்கேன்.. இந்நேரம் கிளம்பியிருப்பான்.. அவன் வந்ததும், நான் பேசிக்குறேன்..”
“என்னன்னு பேசுவ? என் மருமக உடம்புல காயம் எப்படி வந்துச்சுன்னா?”
“ஏன் டா.. எனக்கென்ன அறிவில்லன்னு நினைச்சியா? யாராவது இப்படி பேசுவாங்களா?”
“நீயும் உன் மகனும் ஒரு டைப்பான ஆளுங்களாச்சே.. யாருக்கு தெரியும்? இப்படி பேசமாட்டீங்கன்னு..”
“சரி.. கோபப்படாம வாடா..” என்ற அமிர்தன், தனது ஆஃபிஸில் இருந்து, அர்ஜுனை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல, தனது புது கம்பெனிக்கு சென்று கொண்டிருந்த ஹரிஷான்த்தோ அமிர்தனின் அழைப்பிற்கிணங்க, பெங்களூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான்.
“அம்மா.. என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?”
“என் பொண்ணு கல்யாணம் பண்ணி முதல் தடவை வீட்டுக்கு வந்துருக்கா.. அவளை விட்டுட்டு நான் எப்படி ஸ்கூல்ல இருப்பேன்? மதியம் ஏதாவது சாப்பிட்டியா?”
“டாடி.. எனக்காக சிக்கன் பிரியாணி செஞ்சு வைச்சுட்டு தான் வெளிய போயிருக்காங்க..”
“உனக்காக அவர் ப்ரெண்ட் கிட்ட சண்டை போட போயிருப்பாரு..”
“என்னம்மா சொல்றீங்க?”
“ஃபோன் பண்ணி கேட்டுப்பாரு.. உங்கப்பா எங்க இருக்காருன்னு தெரிஞ்சுடும்..” என்று மலர்கொடி, சமையலறைக்குள் நுழைய, தனது கைபேசியை எடுத்து, அர்ஜுனிற்கு அழைக்க, அமிர்தன் இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும், அவளிடம் கூற, தன் தாயே நோக்கி சென்றாள் ஹாசினி.
“வாவ்.. மம்மி.. எப்படி டாடி.. அங்கிள் வீட்டுக்கு தான் போயிப்பாங்கன்னு.. அவ்வளவு உறுதியாக சொன்னீங்க?”
“அவரை பத்தி எனக்கு தெரியாதா? இந்தா.. காஃபி.. வா.. அப்படி போய் உட்கார்ந்து பேசுவோம்..” என்றவாறே இருவரும் பால்கனியில் சென்று அமர்ந்து கொள்ள, தன் முகத்தை பார்த்தவாறே,
“ஏன் மம்மி டாடி ஏதாவது தப்பு பண்ணிட்டா.. நீங்க அவரை மன்னிச்சுருவீங்களா?” என்று ஹாசினி கேட்க,
“அது அவர் செய்யுற தப்பை பொறுத்து இருக்கு..” என்றார் மலர்கொடி.
“அப்படின்னா?”
“அப்படின்னா.. மன்னிக்கக்கூடிய தப்புக்கு தண்டனையோட மன்னிப்பும் இருக்கு..”
“எதெல்லாம் மன்னிக்கக்கூடிய தப்பு?”
“அது.. அவங்கவங்க மனசை பொருத்து..”
“புரியல மம்மி?!”
“ப்ச்.. இப்போ ஒருத்தரை நாம் மனசார ஏத்துக்கிட்டோம்னா.. அவங்களோட குறை எதுவும் நம்ம கண்ணுக்கு தெரியாது..”
“நிஜமா?”
“உதாரணத்திற்கு.. உங்கப்பாவையே எடுத்துக்கோ.. அவரோட குணத்துக்கும் அழகுக்கும் பணத்துக்கும் என்னைய மாதிரி பொண்ணை, ரெண்டு குழந்தைங்களோட ஏன் கல்யாணம் பண்ணணும்? அவர் என் மேல வைச்ச பாசம்.. அன்பு.. என்னோட மனசு மாறும்னு தானே நம்பல.. ஆனா, அவர் நம்புனாரு.. என்னோட மனசு மாறும் வரைக்கும் காத்திருந்தாரு.. அவர் மனசை எத்தனை தடவை நான் நோகடிச்சுருப்பேன் தெரியுமா? ஆனா, ஒரு தடவை கூட என்னைய விட்டு விலகுனதே இல்ல..”
“நானும் அவரை விட்டு விலகலை மம்மி..”
“நான் நீ விலகிட்டேன்னு சொல்லவேயில்லயே.. நரகமா இருந்த என்னோட வாழ்க்கையை உன் அப்பா சொர்க்கமா மாத்துனாரு.. ஆனா, அவருக்கு ரொம்ப பொறுமை அதிகம்.. அவரை மாதிரி நீயும் பொறுமையாயிருன்னு நான் சொல்ல வரலை.. ஹரியோட இடத்தில இருந்து யோசிச்சு பாரு.. காமினிய கல்யாணம் பண்ணிக்க இருந்தவனை, ஏமாத்தி அவன் கையால தாலி வாங்கிக்கிட்ட.. ஹர்ஷுவையும் உன் திட்டத்திற்கு கூட சேர்த்துக்கிட்ட.. காமினிக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயத்தை நீ ஹரிக்கிட்ட சொல்லி, இந்த கல்யாணத்தை தடுத்திருக்கலாமே? ஏன் அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு பொய் சொன்ன? நீ சொன்னது பொய்னு தெரிஞ்சுருந்தும், நாங்க எல்லோரும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணோம்.. ஏன்? நாங்க எல்லோரும் உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்தோம்.. ஆனா, ஹரியோட உணர்வை மதிக்கவேயில்லயே?! நீ என்ன நினைச்ச? உன் கழுத்துல.. உதட்டுல.. தோள்ல.. இருக்குற காயத்தை நாங்க பார்க்கலைன்னா? இல்ல அதுக்கு என்ன அர்த்தம்னு எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா? உன்னோட சம்மதத்தோட நடந்துச்சான்னு நான் கேட்கமாட்டேன்.. ஹரியோட அம்மாவா.. நான் கேட்குறேன்.. இது அன்னைக்கு நடந்துச்சுன்னு தானே அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட? இப்போ மட்டும் எதுக்கு உனக்கு கோபம் வருது? கல்யாணம் ஒன்னும் சின்ன பிள்ளைங்க விளையாட்டு கிடையாது.. உனக்கு பிடிக்கும் போது தாலியை கழட்டி மாட்டுறதுக்கு.. முடிஞ்ச வரைக்கும் காத்திரு.. ஒருநாள் அவனே உன்னை புரிஞ்சுக்குவான்.. அவன் மன்னிக்குற மாதிரி தப்பு பண்ணிருக்கானா? இல்லையான்னு உன் மனசை நீயே கேளு.. உன் மேலயும் தப்பிருக்கு.. ஹரி மேலயும் தப்பிருக்கு.. யார் மேல அதிகமா தப்பிருக்குன்னு பார்க்குறதை விட்டுட்டு, உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையை வாழு.. யாருக்காகவும் வாழாத.. உனக்காக.. உன்னோட காதலுக்காக வாழு.. நான் உன்னைய நேசிக்குறேன்.. நீயும் என்னைய நேசிக்கணும்.. அப்படின்னு சொல்ற காதல் சுயநல காதல்.. நான் உன்னைய நேசிக்குறேன்.. நீ என்னைய நேசிக்கலைன்னாலும் பரவாயில்ல.. அப்படின்னு யோசிச்சு பாரு.. வாழ்க்கை சுமையா தெரியாது.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. நீ எந்த முடிவெடுத்தாலும் உன் அப்பாவும் நானும் உன்கூடவே இருப்போம்.. சரி.. மழை வர்ற மாதிரி இருக்கு.. நான் மொட்டை மாடியில காயப்போட்டுருக்குற துணியை எடுத்துட்டு வந்துடுறேன்.. “ என்றவாறே மலர்கொடி அங்கிருந்து செல்ல, ஹாசினியின் கைபேசி சிணுங்கியது.
“சொல்லுங்க அங்கிள்..”
“கொஞ்சம் நம்ம வீட்டுக்கு வர்றியாடா?”
“டாடி?”
“இங்க தான் இருக்கான்.. நீயும் வர்றியா?”
“ம்ம்ம்.. வர்றேன் அங்கிள்..” என்ற ஹாசினி, அமிர்தனின் வீட்டை நோக்கிச் செல்ல, அதே சமயம் ஹரிஷான்த்தும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். வீட்டிற்குள் ஹாசினி நுழையும் போதே,
“நானா அவளை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேன்? நீங்களா தான் அவளை என் தலைல கட்டி வைச்சீங்க.. அவளை பார்த்தாலே, கோபம் கோபமா வருது.. அவளா தானே சொல்லாம கொள்ளாம வந்தா.. அவளாவே திரும்ப வரட்டும்.. நான் அவளை என் கூட கூட்டிட்டு போக முடியாது..” என்று ஹரிஷான்த்தின் குரல் ஓங்கி ஒலிக்க,
“அமிர்தா.. இதெல்லாம் சரியில்ல.. உன் பையன் என் பொண்ணை பத்தி என்ன நினைச்சுட்டுருக்கான்? ஏதோ சின்னப்புள்ள பொம்மையை வைச்சு விளையாடும் மாதிரி விளையாடுறான்..” என்று அர்ஜுனின் குரல் உரத்து கேட்க,
“அங்கிள்.. ப்ளீஸ்.. நீங்க இதுல தலையிடாதீங்க.. உங்க மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு.. ஆனா, அதுக்காகலாம் ஹாசினி கூட சேர்ந்து வாழ முடியாது.. என் இயர் கழிச்சு, மியூச்சுவல் டிவோர்ஸ் பண்ண போறோம்.. என்னால அவ வாழ்க்கை கெடாது.. எப்படி அவளை என்கூட அனுப்பி வைச்சீங்களோ? அதே மாதிரி அவளை திருப்பி கொடுத்துடுவேன்..” என்ற ஹரிஷான்த்தை கோபமாக பார்த்து முறைத்த அர்ஜுன்,
“என் பொண்ணு என்ன கடையில விற்குற பொருளா? வாங்கி பத்திரமா வைச்சிருந்து, திருப்பி கொடுக்க, நீ விளையாடுறதுக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் கிடைச்சுதா?” என்று சீற,
“அர்ஜுன் நீ கோபப்படாத அவன் ஏதோ புரியாம பேசுறான்..” என்ற அமிர்தன், ஹரிஷான்த்தை பார்த்து,
“இப்ப சொல்றேன்.. நல்லா கேட்டுக்க.. ஹாசினி தான் என் மருமக.. இதை எந்த கொம்பனும் மாத்த முடியாது. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. நடக்குறதே வேற.. இங்கப்பாரு ஹரி.. எந்த பொண்ணு கூட சேர்ந்து வாழ முடியாதுன்னு நீ சொல்றியோ? அந்த பொண்ணுக்காக ஒரு நாள் நாய் மாதிரி ரோட்டுல அலைவ டா.. அவளுக்காக நீ எங்கக்கிட்ட கெஞ்சுவ.. பார்த்துட்டே இரு..” என்ற கூற,
“என்ன சாபமா? பழிக்குதா இல்லையான்னு பார்க்கலாம் டாட்..” என்ற ஹரிஷான்த்தை பார்த்தவாறே அங்கு வந்தாள் ஹாசினி. அவனருகில் வந்த ஹாசினி,
“ஐம் சாரி ஹரி.. உன்னைய காமினியோட வலைல இருந்து காப்பாத்தணும்னு நினைச்சு தான் அவ்வளவு பெரிய பொய் சொன்னேன்.. என்னைய கட்டாயப்படுத்தி, என் கூட வாழ வைக்கமாட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு, நீ சொன்ன மாதிரி மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்ல டிவோர்ஸ் வாங்கிக்குவோம்.. நான் அதுக்கு சம்மதிக்கிறேன்.. நீ கவலைப்படாத.. உன்கிட்ட சொல்லாம இங்க வந்தது தப்பு தான்.. ஐம் சாரி..” என்று கூற, தன் மகளின் கண்களை தீர்க்கமாக பார்த்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.
“என்னம்மா நீ.. அவன் தான் கோபத்துல இப்படி எல்லாம் பேசுறான்னா? நீயும் அவனுக்கு ஏத்த மாதிரி ஜால்ரா அடிக்குற?” என்று அமிர்தன் கூற,
“இல்ல.. அங்கிள்.. பரவாயில்ல.. இதெல்லாம் உங்களுக்கு ஒரு நாள் தெரிஞ்சு தானே ஆகணும்..” என்று அமிர்தனுக்கு பதிலளித்த ஹாசினி, தன் தந்தையின் புறம் திரும்பி கண்களால் கெஞ்ச, அதனை புறந்தள்ளிய அர்ஜுன்,
“என் பொண்ணு அப்படி ஒண்ணும் உன் மகன் கூட வாழ வேணாம்..” என்று அமிர்தனிடம் கூறியவாறு, ஹாசினியின் கையைப் பிடித்து,
“நீ வா டா பேபி.. டாடி இருக்கேன்டா உனக்கு..” என்று கூறி இழுக்க, அசையாது நின்றாள் ஹாசினி.
“ஹாசி?” என்று அதிர்ச்சியாக பார்த்தபடி உறைந்து நின்றிருந்தான் அர்ஜுன். அவனது கையை தன் கையில் இருந்து விடுவித்துக் கொண்ட ஹாசினி,
“டாடி.. இது என்னோட பிரச்சினை.. நானே பார்த்துக்குறேன்.. நீங்க இதுக்காக எல்லாம் ஸ்ட்ரெஸாகதீங்க.. என்னைய என் வழில போக விடுங்க ப்ளீஸ்.. எங்க விஷயத்துல யாரும் தலையிடாதீங்க..” என்று கூற, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, அங்கிருந்து வெளியேறி சென்றான் அர்ஜுன். ஹாசினி எடுத்த முடிவு தவறா? சரியா? என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்..
levitra pharmacy order
KjyDHCNvshunI
Intresting epiiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nice
sBbwGkLOZeHCWIYx
ThUiPjXxQMdZBYKF