கள்ளூறும்.. 2
“எதே மருமக புள்ளையா? அடேய்.. அவளே இன்னும் சின்ன புள்ள மாதிரி தான்டா இருக்கா..!!” என்று அதிர்ந்தவள், மீண்டும் தம்பியின் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுத்தாள்.
அவனோ கன்னத்தை தடவிக் கொண்டவன், இம்முறை அக்காவை முறைக்கவில்லை. தலையைக் குனிந்துக் கொண்டான். தான் செய்த தப்பின் விளைவாய்..!! ரிதன்யாவின் அடியில் அதர்வாவின் கையை இறுகப் பற்றி அவன் முதுகில் முகத்தை பதித்திருந்த அப்பெண்ணின் உடலோ நடுக்கத்தில் வெடவெடத்தது!!
“இவரின் அக்காவே இவ்வளவு கோபம் படுகிறார் என்றால்….” அடுத்து யோசிக்கவே அவ்வளவு பயந்தாள் அந்த பாவை!
ரிதன்யா தம்பியை அடித்து விட்டாலும் அடுத்து என்ன செய்வதென்று என்று நெற்றியை தட்டி தட்டி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதர்வா மெல்ல “அக்கா…” என்று அழைக்க..
“நொக்கா.. போடா..” என்று எகிறிக் கொண்டு வந்தாள். இப்போது வெளிப்படையாக அந்த பெண்ணின் உடலில் நடுக்கத்தை கண்டவள், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள..
அதர்வா அக்காவின் கையை பற்றி ப்ளீஸ் என்று கண்களால் கெஞ்சினான்.
“என்ன பண்ணி வெச்சி இருக்க தெரியுமா ஆது நீ? நல்ல வேளை அவளுக்கு 18 வயசு. இல்ல நீ போகஸ் சட்டத்துல உள்ள போய் இருப்ப.. எரும எரும..” என்று தன் கையை பற்றியிருந்த அவனின் கைகளில் பட்டு பட்டு என்று போட்டாள்.
“நீ என்னை என்ன வேணா திட்டு அடி ரிது.. ப்ளீஸ் அவ பாவம். அது.. அது.. எங்களையும் அறியாமல் நடந்த ஒன்று” என்றதும்,
“எனக்கு வாயில நல்லா வந்துரும் டா! என் வாயை புடுங்காத டா! நீ எல்லாம் ஒரு டாக்டர்?? தப்ப கூட சரியா பண்ண தெரியாமல் தப்பு தப்பா செஞ்சு வைச்சிருக்க.. யூ இடியட்..!” என்று திட்டிய ரிதன்யா ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு மறு கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டே அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தாள். அவளால் சட்டென்று எந்த முடிவுக்கும் வரவில்லை.
தம்பி திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொள்கின்றான் என்று தெரிந்ததும், ‘சரி பேசி கொஞ்ச நாள் பிரிந்திருக்க சொல்லுவோம். அந்த பொண்ணை.. இவள் அறிந்த வரையில் வெளியூரிலிருந்து இங்கே வந்து பயிலும் மாணவி. அதனால் வேற வீடு எடுத்து தோழிகளோடு தன் பார்வையில் தங்க வைப்போம்’ என்று பலவாறு ரிதன்யா கணக்குகளை போட்டுக் கொண்டு வர..
இங்கே அவள் தம்பியோ அவள் கணக்கை தப்பாக்கி இவன் ஒரு புது கணக்கு சொல்றானே? அதுவும் அப்பெண்ணின் நாள் கணக்கு..!!
அப்பப்பா.. இதற்கே இப்படியா? இன்னும் இருக்கே இறைவனின் கணக்கு?
“இங்க வா..” என்று அந்த பெண்ணை அருகில் அழைத்தாள்.
“அதர்வாவுக்கே இரண்டு அடி விழுந்ததே… அப்போ நமக்கு..” இரு கைகளாலும் கன்னத்தை பற்றிக் கொண்டாள் அப்பாவை.
“அடிக்கலாம் மாட்டேன் கிட்ட வா..” என்றாள்.
பெண்ணும் பயந்து அதர்வாவை பார்த்தாள். அவன் கண்கள் இமைகளை மூடி திறந்து போ என்பது போல தலையாட்ட..
“அவன் சொன்னாதான் வருவீங்களோ மேடம்?” என்று இவள் கையை கட்டிக் கொண்டு அவளை கூர்மையாக பார்க்க இன்னும் வெவெடத்துப் போனாள் சின்ன பெண்.
தன் முன் நிற்கும் அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள் ரிதன்யா.
மாம்பழக் கலரில் அழகிய நீள நயனங்களோடு.. மருளும் கருவிழிகள் இங்கும் அங்கும் ஓட.. நீண்ட கருங்குதல் அவள் இடுப்பு வரை காற்றில்லாட.. அதில் இருபக்கமும் வழியும் குண்டு மல்லியோடு.. மெல்லிய வெண்பட்டில் அப்ஸரஸாய் இருந்தாள்.
அவளைப் பார்த்து யாருமே சொல்லிவிடுவார்கள் அவள் கேரளத்து பைங்கிளி என்று..!!
“உன் பேர் என்ன?”
“ஆஹ்.. எண்ட பேரு ரோஷிணியானு”
“தமிழ் தெரியாதா?”
“எனக்கு தமிழ் மனசிலாகும். பட்சே சம்சாரிக்கில்லா.. ம்ம்ம் பேச கஷ்டம்” என்றாள் பயந்து பயந்து.
“ஓகே.. ரோஷிணி.. தமிழ் பேசினாலும் பரவால்ல உனக்கு புரியுது தானே.. அது போதும்.! இப்ப நான் சொல்றத கவனமா கேளு நிஜமாவே இவனை பிடித்து தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்றதும் அவள் முகத்தில் அதுவரை இருந்த பயம் மெல்ல விலகி.. ஒரு நாணம் வந்து ஒட்டிக்கொள்ள அது இன்னும் அவளது நிறத்தை மெருகூட்ட இன்னும் பேரழகியாய் தெரிந்தாள் ரோஷினி.
‘அவன பிடிக்குமானு தானே கேட்டேன்? அதுக்கு எதுக்கு மூஞ்சில பெயிண்ட் அடிச்ச மாதிரி இவ்ளோ வெட்கம் இவளுக்கு? என்ன கரும காதலோ?’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,
“வாயைத் திறந்து சொல்லுமா! இப்படி நீ கால் விரலில கோலம் போடுற பாரதிராஜா ஹீரோயின் மாதிரி பண்ணா யாருக்கும் புரியாது! இங்கே பேச்சு மட்டும் தான் வேணும் அது எந்த லாங்குவேஜ் இருந்தாலும் பரவால்ல.. புரியுதா?” என்று வக்கீல் தோரணையில் அவள் பேச.. இவள் தலையை புரிந்தது என்று ஆட்டிக் கொண்டாள்.
சட்டென்று அதர்வா அக்காவின் அருகில் சென்றவன் “ஏண்டி ரிது உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? புடிக்காமலையா அவ இப்போ பிரக்னண்டா இருக்கா?” என்று மென் குரலில் கேட்டாலும் அப்பட்டமாக அது ரோஷினியின் காதில் விழுந்தது.
“நான் உன்கிட்ட கேட்டனா? அவ கிட்ட தானே கேட்கிறேன்? நீ கொஞ்ச நேரம் வாய மூடு!” என்று சுட்டு விரலை உதட்டில் வைத்து காட்டியவள் ரோஷினியின் புறம் திரும்பி “நீ சொல்லு” என்றாள்.
“மனசலாயி.. சேச்சி..”
“என்ன மனசலாயி?” என்று கிண்டலாக கேட்டாள் ரிதன்யா.
“நீங்க சொன்னது எனக்கு அண்டர்ஸ்டாண்ட் ஆச்சு” என்று திக்கி திணறி தமிழையும் ஆங்கிலத்தையும் குளறி அவள் பேச..
தலையை உலுக்கி கொண்ட ரிதன்யா “பெட்டர் உன்னிடம் இங்கிலீஷ்ல பேசுறது” என்றதும் அவளும் வேகவேகமாக தலையாட்டினாள்.
“ஆனால் எங்க அம்மா எல்லாம் தமிழ்ல தான் பேசுவாங்க..” என்றதும் ரோஷினியின் அழகு முகம் சோர்ந்து போய் பயத்தை வெளிப்படையாக காட்டியது.
அம்மாவைப் பற்றி பேச்சு எடுத்ததும்தான் இந்த கல்யாணத்தை கண்டிப்பாக கிருத்திகா ஒத்துக் கொள்ளவே மாட்டார். அதுவும் இந்நிலையில்..
இதுவரை பிள்ளை என்று பாசம் கொடுத்தவரின் அந்த ஒரு முகத்தையும் கண்டிப்பான ஒரு முகத்தையுமே பார்த்திருந்த அதர்வாவுக்கு.. அதுவும் தவறு செய்தால் பத்திரகாளி ஆகிவிடும் அந்த கிருத்திகாவின் முகத்தை எப்படி எதிர்கொள்ள போகிறானோ என்று ஒரு புறம் அக்காவாக சற்று கவலை கொண்டாலும், மறுபுறம் சிரித்துக் கொண்டாள் ரிதன்யா.
அது வழக்கமாக சிம்பிலிங்க்குள் இருக்கும் சிம்பிலிங் மேனியா..!!
“மாட்டனடா மொவனே… இதுவரை பிள்ளைனா பாசம் பொண்ணுன்னா வேஷம்னு இருந்த கிருத்திகா. இப்போ உனக்கு விஷம் வைக்க போறத நான் ஆசை தீர பார்க்க போறேண்டா..!!”
என்று..!
உடன்பிறப்புகளில் ஒருவர் அடி வாங்கினால் மற்றவர் சிரிப்பதும் அடுத்தவர் திட்டு வாங்கினால் மற்றவருக்கு சந்தோசமாக இருப்பதும் உடன்பிறப்புக்குள் சகஜம் தானே…
“நீ இப்போ காலேஜ் ஹாஸ்டல்ல வெக்கட் பண்ணிட்டு நான் சொல்ற இடத்துல வந்து தங்கு.. எல்லாம் நல்லா வசதியாகவும் பாதுகாப்பாகவும் தான் இருக்கும்” என்றதும் திரு திருவென்று விழித்த ரோஷினி அதர்வாவை பார்த்தாள்.
“எம்மா கேரளத்து மைனாவே எல்லாத்துக்கும் அவன் மூஞ்சி மூஞ்சிய பார்க்காதே.. எதா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லு. உனக்கு தமிழ் தான் வராது இங்கிலீஷ் வரும் தானே?” என்று ரிதன்யா கேட்க..
வேகமாக தலையாட்டிய ரோஷினி “அது.. நான் இப்போ ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணல.. வெளியில வீடு எடுத்து தான் தங்கி இருக்கிறேன்” என்றாள் ஆங்கிலத்தில்.
“ஓஓ… என்று யோசித்த ரிதன்யாவுக்கு அனைத்தும் புரிந்துவிட…
ஓஓஓஓ என்று இழுத்து தம்பியை முறைத்தாள். அவனோ அசட்டு சிரிப்போடு தலையை திருப்பிக் கொண்டான்.
“ஆனாலும் இனி அங்கே இருக்க வேண்டாம்..” என்றவள் தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்தோடு உடனடியாக தங்கள் வீடு இருக்கும் அருகிலேயே வீடு வாடகைக்கு பார்க்க சொன்னாள். அதுவரை அவளை அவளது கிளைன்ட் ஒருத்தரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மகன் மகள் எல்லாம் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விட வயதான தம்பதிகள் மட்டுமே வீடியோ காலில் பேரன் பேத்திகளை கொஞ்சிக் கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஒரு பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை வாதாடி ஜெயித்து கொடுத்தது ரிதன்யா தான். அதன் மூலம் அவ்வப்போது அவர்களை மாதம் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வருவாள் தனியாக இருக்கிறார்கள் என்று..!!
‘அவர்களிடம் பேசி பேயிங்கெஸ்ட்டாக ஒரு ரெண்டு மாசத்துக்கு மட்டும் தங்க வச்சுக்கணும்’ என்று முடிவெடுத்தவள்,
ரோஷினியின் தோழியை விட்டு அவள் அப்பார்ட்மெண்டில் உள்ள முக்கியமான அவளது உடைகள் லேப்டாப் புக்ஸ் எல்லாத்தையும் எடுத்துவர செய்து கோயில் வளாகத்திலேயே வாங்கிக் கொண்டாள். இருவரோடும் அந்த முதிய தம்பதியர் வீட்டிற்கு சென்றாள்.
“கர்னல் சார்.. இவ என் தம்பி வொய்ஃப்..! கொஞ்சம் பர்சனல் இஸ்ஷூஸ்.. கொஞ்ச நாள் இவ உங்க வீட்டுல பேயிங் கெஸ்ட்டா தங்கிக்கட்டுமா? ப்ளீஸ்..”
“தம்பி வொய்ஃபா???? உனக்கே இன்னும் கல்யாணம் ஆகலையே..?? உன் தம்பி ஹவுஸ்சர்ஜன் என்று தானே சொன்னே?” என்று கர்னலும் அவர் மனைவியும் அதிர்ந்தனர்.
ரிதன்யா அருகில் இருக்கும் தம்பியை முறைத்து பார்க்க.. அவனோ அசட்டு சிரிப்பு சிரித்தான் அவர்களைப் பார்த்து.. அவர்களுக்கு எதுவோ புரிந்தது போல விஷமமாக சிரித்துக் கொண்டனர்.
“அதுக்கென ரிதுமா.. தாராளமா தங்கிக்கட்டும்..! நாங்க ரெண்டு பேரும் தனியா தான் இருக்கோம். எங்களுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்” என்றார் கர்னல். அவரது மனைவியும் ஒப்புதல் கூற.. ரோஷினியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு.. பிரிய மனமில்லாமல் வந்தான் அதர்வா.
“ரிது அவங்க ரோஷிய நல்லா பாத்துப்பாங்க தானே? எந்த பிரச்சனையும் வராது இல்ல..? அவ ரொம்ப பயந்த சுபாவி.. அந்த கர்னல பார்த்தா ரொம்ப கரடுமுரடா இருக்காரு.. கஷ்டமா பேசிட மாட்டாருல்ல?? அவ.. அவ.. ப்ரக்னெண்ட்டா வேற இருக்கா??” மூச்சு விடாமல் பேசும் தம்பியை முறைத்துப் பார்த்தாள் ரிதன்யா.
கையில் வைத்திருக்கும் ஹேண்ட்பேக்காலேயே தம்பியின் முதுகில் ஒன்று போட்டவள் “உன்னை எல்லாம்… இந்த தாய்கிழவி கிருத்திகாவ சொல்லணும்… நானே கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஐடியா பண்ணி அங்க கொண்டு போய் தங்க வச்சு இருக்கேன். நீ என்னடான்னா ரொம்ப பேசுற? வேணும்னா அழைசிக்கிட்டு போய் உன் ஹிட்லர் அம்மா முன்னாடி போய் நில்லு பார்ப்போம்? அந்த தைரியம் உனக்கு இருக்கான்னு பார்க்கிறேன்?” என்று சரியான பாயிண்ட் பிடித்து ரிதன்யா கேட்க..
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் செல்ல அக்கா இல்ல.. அப்படி எல்லாம் சொல்லாதடி..! அம்மா முன்னால தைரியமா இதெல்லாம் பேச முடியாது டி..! அக்காவான உன் தார்மீக கடமை என்னை காப்பாற்றுவதே..!”
“அடிங்க.. எரும.. போடா.. இவன் புள்ள பெக்க நான் ஹெல்ப் பண்ணனுமாம். சத்தியமா சொல்றேன் டா.. முரட்டு சிங்கிள் என் சாபம் எல்லாம் என்னோட சும்மா விடாது..!!” என்று சாபமிட்டபடி செல்லும் அக்கா பின்னாடியே கெஞ்சிக் கொண்டு ஓடினான் அதர்வா.
“அவ பாவம் டி.. தனியாக தெரியாதவங்க கூட எப்படி இருப்பா? அதனால தான் ஒரு இதுல அப்படி கேட்டுட்டேன்..!” என்று அக்காவை சமாதானப்படுத்தினான்.
“போடாங்க… போய் பொழப்ப பாரு” என்றப்படி அவள் தன் சீனியரை பார்க்க சென்று விட்டாள்.
பாதியில் சென்றதால் சீனியரோ அவளிடம் முறைத்துக் கொண்டு நிற்க..
“அட விடுங்க சீனியர்.. ரொம்ப பாசமா பார்க்காதிங்க.. நானே எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன் தெரியுமா? நீங்களும் முறைச்சா அப்பாவி நான் எங்க போவேன்?” என்று அவரை தாஜா செய்து, வழக்கின் விவரங்களை கேட்டவள், அதற்கு தனக்கு தெரிந்த பாயிண்ட்டுகளை அள்ளி விட,
“இதுக்கு தான் உன் அப்பவே கேஸ் டிஸ்கஸ்னல இருக்க சொன்னேன்.. உன்னை மாதிரி ஷார்ப்பா யாரு இருக்கா? நீ பாதியில விட்டுட்டு போற..!” என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
“என் நிலைமையை சொல்லி நீங்க பேசுறீங்க பாருங்க சீனியர்.. அங்க நிக்குறிங்க நீங்க..” என்று இவளும் அலுத்துகொள்ள..
அந்த கேஸ் ஃபைலை அவரிடம் கொடுத்தவர், “இதை ப்ரோசீட் பண்ணி எனக்கு டீடெயில்ஸ் கொடு” என்றார்.
வழக்குகளை பார்த்து பகுத்து ஆராய்ந்து விவாதித்து தன் கருத்துகளை பகிர அவளுக்கு ஏக இஷ்டம்..!
நாட்கள் வழக்தமாக சென்றது.. ரிதன்யாவும் தன்னுடைய வேலைகளை பார்ப்பது, தினமும் ஒரு முறை கர்னல் வீட்டுக்கு காலையிலோ மாலையிலோ நேரம் கிடைக்கும் போது சென்று ரோஷினியை பார்த்து வந்தாள்.
ஒரு நாள் இரவு தம்பி ரோஷினியோடு பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் ஃபோனை சட்டென்று பிடுங்க அந்த புறம் ஏதோ விசும்பிக் கொண்டிருந்தாள் ரோஷினி.
“ஏய் அழமூஞ்சி எதுக்கு அழுகிற?” என்று திடீரென்று கேட்ட ரிதன்யாவின் குரலில் “சேச்சீ…” என்று அவள் அதிர..
“சும்மாதான் பிராங்க் பண்ணுனேன் கொஞ்ச நேரம் உன் புருஷன் கிட்ட பேசணும். அப்புறம் விடிய விடிய இரண்டு பேரும் கடலை போடுங்க” என்று ஃபோனை அணைத்தாள்.
“ஆமா கல்யாணம்தான் முடிஞ்சிருச்சுல.. லீகலா ரிஜிஸ்டர் பண்ணியாச்சில? அப்புறம் எதுக்குடா இன்னும் பயந்துகிட்டு அவள தனியா வைக்கணும்?” என்று கேட்டவளுக்கு
ரோஷினியின் பின்புலம் தெரியவில்லை.
“அவளை காலேஜுக்கு திரும்பவும் போக சொல்லு படிப்பு முக்கியம்” என்றாள்.
“அவ அண்ணனை பத்தி உனக்கு தெரியாது அக்கா… காலேஜ் போனா பிரக்னண்டா இருக்கிறது எப்படியாவது தெரிஞ்சு போச்சுன்னா அபோட் பண்ண கூட தயங்க மாட்டார். அதுக்கு தான் என்ன பண்றதுனே தெரியல.. அத சொல்லித்தான் நான் அவளும் அழுதுட்டு இருக்கா” என்றான் அதர்வா சோகமாக..
“இந்த அறிவு எல்லாம் முன்னவே இருந்து இருக்கணும்..!” என்று சாடியவள், சற்றே யோசித்தவாறு “அதுக்குனு நாலு மாசம் எப்படிடா அவளை வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? அவ காலேஜுக்கு வரலைன்னு தெரிஞ்சா அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ண மாட்டாங்களா? எப்படியும் விஷயம் அவ அண்ணா காதுக்கு போகும் தானே…?”
“அவருக்காக விஷயம் தெரியும்போது தெரியட்டும் ரிது..! அதை எவ்வளவு தூரம் தாமதப்படுத்த முடியுமோ? அவ்வளவு தூரம் தாமதப்படுத்த தான் நானும் நினைக்கிறேன். காலேஜ்ல அவளுக்கு சிக்கன் பாக்ஸ் போட்டு இருக்குனு சொல்லி இருக்கேன்”
“வாட்?? சிக்கன் பாக்ஸா???” அதிர்ந்தாள் ரிதன்யா.
“எஸ்.. அதனால ரெஸ்ட்ல இருக்கான்னு சொல்லி வச்சிருக்கேன். அட்டென்ஸ் கூட தெரிஞ்ச ப்ரொபஸர் வச்சு சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான் தம்பி கூலாக..!
“நீயெல்லாம் கிரிமினல் லாயர் ஆக வேண்டியவன் டா தம்பி.. தப்பி தவறி மெடிசன் படிக்கிற..” என்று அவன் தலையில் எக்கி தட்டியவள், “எதா இருந்தாலும் பார்த்து செய் எவ்வளவு சீக்கிரமா அவ வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றியோ அவ்வளவு நல்லது ஆது.. நீயே பிரச்சனையே பெருசு பண்ணிடாதே..! என்று எச்சரித்து சென்றாள் ரிதன்யா.
ஆனால் அக்காவின் எச்சரிப்பை விட மனைவியின் அண்ணன் ஏதேனும் தங்கள் மகவுக்கு தீங்கிழைத்து விடுவானோ என்று பெரும் அச்சம் கொண்டது தந்தையாகிய அதர்வாவின் மனது.
ஆனால் ரிதன்யா அறியாததது.. இன்னும் ஒரு வாரத்தில் ரோஷினிக்கும் அவள் அண்ணாவிற்கும் ஒரே நாளில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. அதனால் தான் இந்த திடீர் கல்யாணம்.. ரோஷிணியின் பாதுகாப்பு எல்லாம்..!
கண்களெல்லாம் திகுதிகுவென்று எரிந்தது..!
உடம்போ பல நாட்கள் இடைவிடாது உழைத்து போல வலித்தது..!
கைகளோ எதிலோ பலமாக மாட்டிக்கொண்டது போல இறுகியது..!
கால்களோ அசைக்கவே முடியாதப்படி எதனிலோ பிணைந்திருந்தது..!
என்னாயிற்று எனக்கு??? என்று அவள் கடினப்பட்டு கண்களை திறக்க…
அவளுக்கு எதிரே ஆஜானுபாகுவான உடலமைப்போடு நின்றிருந்தான் ஒருவன்..!!
மெல்ல சிப்பி இமைகள் திறக்க.. இருட்டில் இருந்து கண்கள் வெளிச்சத்திற்கு பழக்கப்பட்டு பார்க்க..
எதிரே இருந்த உருவம் இப்போது கண்களுக்கு நன்றாய் புலப்படுவதாய்..!
புத்திக்கு நன்கு உரைப்பதாய்..!
யாரு??? யாரிவன்? என் அறையில்..??
என்றவளின் எண்ணங்களுக்கு பதிலாய் வந்து விழுந்தன அவனது கூர் வார்த்தைகள்..!!
“நீ என்னிலுண்டு..!” என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் அவளுக்கு புலப்படவில்லை.. அவளது வக்கீல் அறிவுக்கு புரியவில்லை..!
“நான் எப்படி உன்னில் இருக்க முடியும்? நான் என்னில் தானே இருக்க முடியும்?” என்று அரைகுறையாக உளறினாள்.
“நின்னுக்கு வட்டானு ( நீ பைத்தியம்.!)” என்று மீண்டும் நக்கலாய் வார்த்தைகள் வந்து அவளை தாக்க..
“டேய் தேக்கு மரம் மாதிரி உடம்பு வெச்சிருந்தா பத்தாது.. அதுல கொஞ்சமாவது மூளைய வைச்சிருக்கணும். நாம பேசுறது எதிரே உள்ளங்களுக்கு புரியுதானு யோசிக்கணும்?” என்றாள்.
“புரியலன்னா.. இனி கத்துக்க..!” என்று சுந்தர தமிழில் அடுத்து வந்து வார்த்தைகள் விழ..
“நான் ஏண்டா உன் லாங்குவேஜ் கத்துக்கணும்?” என்று உளறலாக கேட்டாள் அவள்.
“காரணம்.. இப்போல் இத்தானு நிங்களோட ஸ்தலமும்.. வீடும்..” அழுத்தமாய் வந்து விழுந்தன அடுத்து அடுத்து வார்த்தைகள்.
“ஆஹான்..??” புரியாமல் அவள்..!
“ஏன்னா எனக்கு நடக்க வேண்டிய நிச்சயதார்த்தம் உன் தம்பியால் நின்னு போச்சு, என் தங்கச்சிய கட்டிக்கிட்டு.. சோ யூ ஹேவ் டூ பே ஃபார் தட்..!” என்று அவளின் தாடையை அழுத்தமாக பற்றியப்படி அந்த தேக்குமர தேகக்காரன் கூற…
“வாட்..?? நோஓஓ..!” என்று அதிர்ந்தா
ள் ரிதன்யா..!
“யெஸ்… யூ ஹேவ் டூ..” என்று அதிகாரமாக மொழிந்தான் அவன்..!!
அவன்… தாரக் மகாதேவ் வர்மா..!
ரோஷினி வர்மாவின் அண்ணன்… நம் மனம் கவர வரும் கள்வன்..!!
கள்ளூறும்….
Very interesting next epi fasta podungaaa 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pls
cialis generic online
Very interesting nice
WJCqEyjrhZOPlu
levitra online pharmacy
nDQhYtPCzBjemZxL
gyIxWqzRwDFuTEa
Interesting sis
arDYmROBkIbxVN
rKIwpNADUjkg
PjvoDqfCLQpaXy