ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 8

வானவில் 8

 

 

அன்னையின் அழைப்பில் அரண்டு ஓடியது மகனின் மோக தாபம்!!

 

 

அதிலும் அவளின் இந்த அரைக்குறை ஆடையே அவனின் தாபத்திற்கு காரணம் என்று மனம் முரண்டு பிடித்தது. அவளை அப்படி உடையில்.. நிலையில்.. வைத்தவனே இவன்தான் என்று மறந்து போனான் வசதியாக!!

 

 

அவனின் இந்த அதிரடிக்கு பயந்து பம்மி கதவோடு ஒன்றி நின்றிருந்தாள் பெண்.. கண்களை இறுக்க மூடி!! தேகமோ வெடவெடத்தது.

 

 

நடுங்கும் இதழ்கள் அவனை அழைக்க.. மெல்ல அவளை நோக்கி முன்னேறியவனை தடுத்தது அவன் அன்னையின் பிரத்யேக அழைப்பு!!

 

 

நான்கு நாள்கள் கழித்து அன்னையுடன் பேசுகிறான் இப்போது. அவரும் இவனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இவன்தான் அன்று அன்னை கேட்ட விதத்திலேயே லேசாக கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறான்.

 

 

 அதற்கு அவரே “தம்பி.. உங்களை சந்தேகப்பட்டு அம்மா கேட்கவே இல்லை. அந்த பிள்ளையை யாரும் ஏதும் உங்கள் பெயரை கெடுப்பதற்காக அனுப்பி வைத்திருப்பார்களோனு எனக்கு ஒரு சந்தேகம் உண்டு!! அதை கேட்கத்தான்.. அதை சொல்லத்தான்.. வந்து வாய் தவறி போய்டுச்சு போல.. வரவர உங்களுக்கு ரொம்ப கோபம் வருது தம்பி!! அம்மாவிடம் கதைக்கவே இல்ல நீங்க..  நான்கு நாட்கள் ஆகிவிட்டது!!” என்று அவர் குரல் தழுதழுக்க வாய்ஸ் மெசேஜ் போட்டு விட அதற்கு பிறகுதான் இவன் மலை இறங்கினான். கூடவே ஒரு குற்ற உணர்வு!!

 

 

அப்படியும் சுமூகமாக முன்ன மாதிரி பேச முடியவில்லை!! காரணம் அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது அவன் செய்த செயல்!! அது தகாத செயல் என்று அவன் அன்னையின் கண்ணோட்டத்தில் புரிந்தது. ஆனால் இப்படி செய்தவர்களை சும்மா விட முடியாதே!!

 

 

அதிலும் தொழில் கையிலெடுத்த இந்த நான்கு ஆண்டுகளில் வராத ஒரு அவப்பெயரை.. வெறும் நான்கு மாத சென்னை வாசத்தில் வரவைத்து விட்டவளை சும்மா விடுவதா? என்ன!! என்ற எண்ணம் தான் இவனுக்கு.

 

 

இப்படியாக தனது மனதோடு  போராடி ஒருவழியாக அவ்வப்போது அன்னை பேசும் போது தவிர்த்து வந்தவன் இன்று தான் பேசியிருக்கிறான்.

 

 

எப்பொழுதும் சென்னையில் இருந்து வந்தால் வீட்டில் தங்குபவன் இன்று வந்ததே நேராக இங்கே அவனது கெஸ்ட் ஹவுஸுக்கு தான்.

 

 

இதை அன்னை அறியவில்லை அவர் வழக்கம் போல் போன் செய்து மகன் சென்னையில் இருப்பதாக நினைத்து பேசினார்.

 

 

“தம்பி சீக்கிரம் வந்துவிடுங்கோ.. உங்களண்ட ஃபியான்சி வந்திருக்கா.. உங்களைப் பார்ப்பதற்காக” என்ற சந்தோஷத்தோடு கூறினார். மகனின் திருமணம் என்றால் அம்மாவுக்கு சந்தோஷம் தானே..

 

 

விதுஷா பதிராஜா.. விநாயக் சித்தப்பா மகள் கோதமியின் நாத்தனார் தான் இவள். 

 

 

பெண் எடுக்கும் போது அவர்களுக்கு தங்கள் பெண்ணை இந்த வீட்டில் இருக்கும் இரு ஆண்களில் யாருக்காவது ஒருவருக்கு கொடுத்த விட வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அதிலும் மேற்படிப்பு படிக்கும் தம்பியை விட தொழிலை கையில் எடுத்து ஆளுமையுடன் நடத்தும் அண்ணனும் அவனது ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்ஸம் லுக்கும் விதுஷாவை கவர்ந்து இழுக்க.. தம்பியை பார்ப்பதை விடுத்து அண்ணனையே தன் வசீகர பார்வையால் வசீகரிக்க முயன்றாள்.

 

 

என்னதான் பெண்களை மதிப்புடனும் மரியாதையுடனும் பார்க்க வேண்டுமென்று அவன் கண்களுக்கு கண்ணாடி சாருமதி போட்டுவிட்டு இருந்தாலும், பதின்ம வயதில் இருந்து இப்போது இளமையின் துடிப்பில் ஒரு ஆண்மகனாக இருப்பவன் அங்கே இங்கே தொழில் துறை பார்ட்டிலோ பிற விஷேசங்களிலோ பார்க்கும் பெண்கள் மீது ஒரு சுவாரசியம் ஏற்படத் தான் செய்யும். அது இப்போது வந்தது அல்ல.. ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து ஆணுக்கு பெண் மீதும்.. பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்பட்ட இயற்கை ஈர்ப்பு!! இயற்கையின் நியதி அதை மாற்ற முடியுமா??

 

 

அதேபோல் தன்னையே குறுகுறுத்து பார்க்கும் விதுஷாவையும் காணாதது போல கண்டான். ஆனால் அவள் நெருங்கி நெருங்கி வர இவன் விலகி விலகிச் சென்றான். காரணம் அவனது அன்னை சாருமதி!! ஏற்கனவே கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் எல்லாம் ஒட்டி ஒட்டாமல் உறவாடினார்கள்.

 

 

ஆனால் சாருமதியின் இயற்கையான அழகும் சாந்தமான முகமும் எல்லோரிடமும் அன்பாகப் பழகும் குணமும் யாரையும் முகம் திருப்ப வைக்காது.

 

 

நாளை வீட்டுக்கு மருமகளாக வரும் பெண் முதலில் என் அன்னையை மதிக்க வேண்டும். சித்தியை போலவோ அவரது குடும்பத்தினர் போலவோ முகம் திருப்பிக் கொண்டு நின்றால் அது நன்றாக இருக்காது. வாழும் ஒரு வாழ்க்கையையும் வீணாக்க விரும்பவில்லை விநாயக்!! அதனால் முதலில் அவள் குணத்தை அறிய ஆராய முற்பட்டான்.

 

 

பார்த்த இரண்டு நாட்களிலேயே அவ்வளவாக பிடித்தம் இல்லாமல் போனது. இவனை மட்டும்தான் கண்களாலேயே விழுங்கிக் கொண்டு இருந்தவள் மறந்தும் அவன் அன்னையிடம் பேசவே இல்லை. மகனை கரெக்ட் செய்வதற்காக இரண்டு வார்த்தைகள் அவள் பேசி இருந்திருக்கலாம்.. ஆனால் பிறந்ததிலிருந்து பணத்திலும் புகழிலும் சற்று பெருமையோடு வளர்க்கப்பட்டவளுக்கு தானாக யாரிடம் தணிந்து போகும் குணம் கிடையாது.

 

 

அப்படி பிடித்தமானவர்களை தன் சொல்லுக்கு ஜால்ரா அடிப்பவர்களிடம் மட்டுமே இணக்கமாக பேசுவாள். மற்றவர்களிடம் முகத்தில் அடித்தார் போன்று பேசிவிடுவாள். இரண்டே நாளிலேயே அவளது நீல சாயம் வெளுத்து விட.. ‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’ என்று ஒதுங்கி கொள்ள முயன்றான்.

 

 

அதே நேரம் அவன் தொழிலிலும் அப்பொழுது கால் ஊன்றிருக்க.. மொத்தமாக அவனது உழைப்பையும் நேரத்தையும் அங்கே போட வேண்டிய தருணம். அதனால் இவளை நினைவிலிருந்து மறந்தே போனான். அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகளில் எப்பவாது தலையை காட்டுபவள், இவனை பார்த்து விட்டால் கண்களாலேயே விழுங்கி விடுவது போலவே அவனது ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருப்பாள். அது ஒருவித  அசௌகர்யகமாக இருக்கும் அவனுக்கு.

 

 

இது எல்லாவற்றையும் விட சித்தி அந்த பெண்ணிடம் அவ்வபோது தன்னை காட்டி கூறுவதும்.. இவளும் சிரிப்புடனே தலையாட்டுவதும்.. இவனுக்கு புரியாதா என்ன??

 

 

தொழிலில் எத்தனை நபர்களை நித்தம் நித்தம் பார்க்கிறான். அவரது குணங்களை படித்துக் கொண்டிருக்கிறான். சிறுவயதில் இருந்து சித்தியின் குணத்தை தெரியாதா என்ன? இதை பார்த்தவுடன் முற்றிலுமாக அவளிடம் இருந்து ஒதுங்க தொடங்கினான்.

 

 

பிரேமாவதிக்கும் தன் பெண்ணின் நாத்தனாரை இங்கே மருமகளாக வந்தால், பெண் அங்கு கௌரவமாக வாழ்வாள். கூடவே சாருமதியை இவள் மதிக்கவே மாட்டாள் என்று கணக்கு போட்டு காரியத்தில் இறங்கினார். ஆனால் அக்காரியம் இவ்வீரியனிடம் பலிக்காது என்று அவருக்கு தெரியவில்லை.

 

 

கடந்த இரண்டு ஆண்டாக அவளது தொல்லைகள் இல்லாமல் இருந்தது. மேற்படிப்பு என்று இவள் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறாள் என்று கேள்வியுற்றவன் சற்று ஆசுவாச நிம்மதியோடு குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டான்.

 

 

அவ்வப்போது அன்னையின் பேச்சில் அவள் பெயர் அடிபடும் போது, அதனை தவிர்த்து விடுவான். அது அன்னைக்கு புரிந்ததோ இல்லையோ அவனை பெற்றவருக்கு நன்றாக புரிந்தது.

 

 

அதனால் எப்பொழுதாவது தங்கை மனைவி இந்த பேச்சை எடுக்கும் போது “எதுவாயிருந்தாலும் விநாயக் விருப்பம் தான் முக்கியம். அதே சமயம் என் மகனை இந்த பெண்ணை திருமணம் செய்து கொள் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன்!” என்று அழுத்தம் திருத்தமாக அவர் கூறிவிட்டார்.

 

 

ஆனால் சாருமதி தன் கையை பிசைந்து கொண்டே “நீங்க சொன்னீங்கன்னா பையன் கேட்பான் தானே?” என்றார். 

 

 

சாருமதியின் முகத்தில் தெரிந்த அந்த பரிதவிப்பும் கலக்கமும் பயத்தையும் பார்த்து நெற்றி சுருங்க அவரை பார்த்து, “இத்தனை வருடத்தில் நீ என்னோடு சந்தோசமாக வாழ்கிறாள் தானே சாருமா?” என்று கேட்டார்.

 

 

சாருமதி ,பதறி போய் “என்னங்க இப்படி கேக்கறீங்க??” என்று விட்டால் அழுது விடுவதுபோல் கணவனை பார்க்க..

 

 

“அப்போ அதே சந்தோசத்துடன் நம் மகன் வாழ வேண்டாமா?” என்று அவரை கூர்ந்து பார்த்து கேட்க..

ஆமாம் என்று தலையை ஆட்டினார் சாருமதி.

 

 

“அதனால இந்த பேச்சை நீ எடுக்காதே சாருமா.. அவனுக்கு பிடித்து இருந்தால் அவனே வந்து நம்மிடம் சொல்லுவான்! என் மகன் என்னை போல!!” என்று மீசையை முறுக்கி கொண்டவரை பார்த்தவருக்கு காதல் பொங்க, அதைக் கண்டு கொண்ட அவரது காதல் கணவரும் “சாருமா!!” என்று மெதுவாக அவரது கன்னத்தில் முத்தம் வைக்க.. கணவனின் புஜத்தில் தன் நாணம் கலந்த முகத்தை மறைத்துக் கொண்டார், இளமையில் மட்டுமல்ல முதுமையில் காதல் அழகானதே!!

 

 

அதன்பின்பு அவர் அப்பேச்சை எடுக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது மகனிடம் கூறிக் கொண்டே இருப்பார் “என்ன இருந்தாலும் அந்த பொண்ணு நம் சொந்தம் தானே?? அவரைக் கட்டிக் கொண்டால் நல்லதுதானே!!” என்று இதற்கு பின்னால் இருந்து இந்த நெருப்பை தணியாது விசிறி விடுபவர் பிரேமாவதி தான்.

 

 

“இங்கே தொழில் பார்ட்டிகள் அதிகம்.. உன் பையன் அதில் யாரையாவது பார்த்து லவ்வுறேனு கூட்டிட்டு வர போறான். இந்த குடும்பம் ரொம்ப ரொம்ப பாரம்பரியம்!! ஏற்கனவே உன்னால ஒரு கருப்பு புள்ளி இதில்.. இன்னும் வேற வேணுமா?” என்று வார்த்தைகளால் திராவிடத்தை வீசுபவரை கலங்கிய விழிகளோடு பார்ப்பார் சாருமதி.

 

 

ஒற்றை வார்த்தை இல்லை இல்லை ஒரே ஒரு பார்வை.. “நான் விஜயரணசிங்க மனைவி!!” என்ற அர்த்தத்தோடு பார்த்து இருந்தால் அவர் எப்போதோ அடங்கிப் போய் இருப்பார். நம் சாருமதிக்கு தான் அது வரவே இல்லையே.. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் பிரேமாவதி.

 

 

“அதனால இந்த விதுசா பொண்ணையே நம்ம விநாயகர்க்கு பார்த்து முடிச்சிடலாம். கூடவே என் பொண்ணோட நாத்தனார் வேறு.. இவளை மறுத்தா அங்கு அவளுக்கு ஏதாவது கஷ்டம் கொடுப்பாங்க.. அது உன் பையனால என் பொண்ணுக்கு கஷ்டம் வரனுமா?” என்று பாசத்தை பகடைக்காயாக உருட்ட, அதில் விழுந்துபோன சாருமதி மகனிடம் நச்சரிக்க ஆரம்பித்தார். பிரேமாவதிக்கு தெரியும்.. சாருமதி கரைத்தால் கண்டிப்பாக இந்த கல் கரையும் என்று!!

 

 

ஆனால் இடையில் புகுந்த கியூபிட்  தன் அம்பினால் அவன் மீது காதல் பானம் செலுத்த.. இந்த திருப்பத்தை பிரேமாவதி மட்டுமல்ல சாருமதியும் எதிர்பார்க்கவில்லை!!

 

 

அதனால் விதுஷா பற்றி குறிப்பிடும்போது உன் பியான்சி என்று தான் குறிப்பிடுவார் சாருமதி. மகன் முறைத்து விட்டு அமைதியாக கடந்து விடுவான். இன்றும் அதுபோலத்தான்…

 

 

கூடவே வைபவ்விற்கு மூன்றாம் ஆண்டு பிறந்தநாள் விழா. அதுவும் தங்கள் வீட்டில் தான் கொண்டாட வேண்டும் என்று அன்னை அவசரப்படுத்த தலையை கோதிக்கொண்டு அவன் கீழே வர்ணாவைத் தேடி சென்றான்.

 

 

வழக்கம்போல அந்த பால்கனியில் அவள் தஞ்சம் கொள்ள தன் குளியல் முடித்து வந்தவன், அந்த சோக பதுமையின் சோக தோற்றம் கூட ஒரு அழகியலாய் அவன் மனதில் பதிய… தலையை உலுக்கிக் கொண்டவன், அவளருகே சென்று “பசிக்குது சாப்பிட வா!!” என்று அழைக்க வெறுமையான கண்களோடு அவனை பார்த்தாள்.

 

 

“இந்த மாதிரி லுக் எல்லாம் என்கிட்ட விடாத.. லுக் விடுறதனால எதுவும் மாற போறது இல்லனு உனக்கு தெரியும்! திரும்பவும் இப்படி பண்ணிட்டு இருக்காத.. நீ இங்க இருக்கிற நாள்ல முகத்தை கொஞ்சம் தூக்கி வைத்து விட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினால்.. இருக்கும் நாள் அதிகரிக்குமே தவிர குறையாது!! அதனை மனசுல வச்சிட்டு சாதாரணமாக நடந்துக்க!!” என்று அவன் முன்னே நடந்தான்.

 

 

“எதை? எதை? சாதாரணமாக எடுத்துக் கொள்வது? நீங்கள் என்னை தொடுவதையா?? முத்தம் கொடுப்பதையா?? இல்லை மொத்தத்தையும் களவாட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக என்னை அணுகுவதையா? எதை சாதாரணமாக எடுக்க?” என்று அத்தனை சீற்றம் பெண்ணிடம்.

 

 

புருவங்கள் முடிச்சு விழ அவளை திரும்பிப் பார்த்தவன், “நீதான சொன்ன.. எழுதுன.. இதுதான் என்னோட கேரக்டர்!! இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணையும்.. அதுவும் என்னிடம் வேலை கேட்டு வரும் பெண்களை எல்லாம் நான் படுக்கையில் தள்ளி பாய்ந்து விடுவதாக.. அப்புறம் வேறு என்ன நல்லதை நீ என்னிடம் எதிர்பார்க்க முடியும்? சொல்லு!!” என்று அவன் தோளை குலுக்கிக் கொண்டு முன்னே சென்று விட்டான்.

 

 

“அது நான் இல்ல டா.. மடையா!!” என்று அவனைப் பிடித்து வைத்து கன்னம் கன்னமாக அறைய வேண்டுமென்று எண்ணம் பெண்ணிடம் பிரவாகம் எடுத்தது. ஆனால் “இந்த முட்டாள் முரட்டு பீஸூக்கு அறிவே வரமாட்டேங்குது.. என்னதான் தொழில் நடத்துறானோ தெரியலை? கொஞ்சமும் புரிந்துக் கொள்கிறான் இல்லை!!” என்று அவள் சத்தமாக பேச.‌

 

 

 “எச்சூஸ்மீ.. நீங்க மனசுல பேசுறேனு நினைச்சுகிட்டு சத்தமா பேசுறீங்க..” என்று அவள் அருகே கேட்ட குரலில் திடுக்கிட்டவளுக்கு அவள் எதிரே தான் நெருக்கமாக நின்று கொண்டிருந்தான் விநாயக்.

 

 

அவளின் சுவாசமும் ஸ்பரிசமும் இன்னும் வேண்டும் என்பதாய் அவளருகே அவன் நெருங்க.. அவளோ பயந்து பின்னால் நகர.. ‘காலையிலேயே ரொம்ப படுத்தி விட்டோம்! இப்போது வேண்டாம்!’ என்று மிக நல்ல முடிவை எடுத்தவன் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான்.

 

 

 

மீண்டும் மீண்டும் யோசனையோடு அங்கு சுற்றிக் கொண்டிருந்தான். என்னதான் இருந்தாலும் மனதில் இருந்த ஒரு குற்ற உணர்வு அவனை அன்னையை உடனே பார்க்க தடை செய்தது. ஆனால் எப்படியும் போய்தான் ஆகவேண்டும் என்று மதியம் போல அந்தப் பெண்மணியை வர வைத்தான். இவன் இங்க வந்தவுடன் அவர்களை அனுப்பி விட்டான்.

 

 

அவர் வந்த பிறகு அவளை பார்த்துக்க சொல்லிவிட்டு இவன் தங்கள் வீட்டுக்கு செல்லும் போது மாலையாகி விட்டிருந்தது. வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது அவர்களின் பேரன் பிறந்த நாளை கொண்டாட..

 

 

வழக்கமாக இந்நிகழ்ச்சி கோதமி அவளின் புகுந்த வீட்டில் நடக்க வேண்டியது. ஆனால் ஏன் இங்கே நடக்கிறது என்று காரணம் புரியாதவனா அவன்? இன்று ஏதோ வளைத்து போட திட்டம் போடுகிறார்கள் என்று உணர்ந்தவன் “உஷார் விநாயக்!! உஷார்!!” என்று தனக்குள் கூறிக்கொண்டே அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் மெல்லத் தன் அறைக்கு நழுவிக் கொண்டான்.

 

 

அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வந்தவனை தான் விழிகள் விரிய கண்கள் சொருக பார்த்துக்கொண்டிருந்தாள் விதுஷா பதிராஜா!! விட்டால் அவனை இன்றே தனதாக்கிக் கொள்வாள் போல.. அப்படி ஒரு கிறக்கம் அவள் கண்களில்!!

 

 

அனைவரிடம் புன்னகை முகமாக ஓரிரு வார்த்தைகள் பேசியவன் அதன் பிறகு விழா ஆரம்பிக்க, விதுஷா விநாயக் அருகே வந்து ஒட்டி நின்றாள். இவன் விலகி விலகி போனான். அவளும் இன்னும் நெருங்கி வர நெற்றிக்கண் திறக்க போகும் மகனை, சாருமதி கண்களால் அனைவரையும் காட்டி “கோபமாக பேசி விடாதே தம்பி!!” என்று இறைஞ்சினார்.

 

 

கேக் வெட்டி முடித்தவுடன் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை ஆரம்பித்தார் சுகத்தின் தந்தை..

 

 

“நம்ம விநாயக் தம்பிக்கு தான் முப்பது வயசு ஆகப்போகுதே.. இன்னும் எதுவும் நீங்க புரோபோசல் பார்க்கலையா?” என்று அழகாக கோடு போட்டு கொடுத்தார்.

 

 

“எதுக்கு வெளியில் பார்த்துக்கொண்டு?? சொந்தத்திலேயே ஆள் இருக்கே!!” என்று பூடகமாக பேசி கோட்டில் ரோடு போட தயாரானார் பிரேமாவதி. விஜயரணசிங்க அவரை பார்த்து முறைத்து விட்டு தம்பியைப் பார்க்க..

 

 

“சொந்தத்துல பொண்ணு இருந்தா மட்டும் போதுமா? அது அவனுக்கு பிடிக்க வேண்டாமா?” என்று அண்ணனின் பார்வை படித்து அவர் பேச..

 

 

“ஏன் பெரியவர்கள் பார்த்து வைத்தால் வேண்டாம்னு சொல்ல போறாரா? அதுவும் அவங்க அம்மாவுக்கு பிடித்த பெண் என்றால் மறுப்பு இருக்குமா என்ன?” என்று சாருமதியையும் இதில் கோர்த்துவிட்டார் பிரேமாவதி புத்திசாலித்தனமாக..

 

 

“என் அம்மாவுக்கு எனக்கு எப்படிப்பட்ட ரசனையோடு உடைய பெண் வேண்டும் என்பது நல்லா தெரியும்!! அதனால் மகனின் ரசனைக்கு ஏற்ற.. எனக்கு பிடித்த பெண்ணை தான் பார்ப்பார் என் அம்மா!! என்ன அம்மா?” என்று அன்னையை பார்க்க..

 

 

சாருமதி தன் கணவனை தான் பார்த்தார். அவர் கண்களை மூடி நானிருக்கிறேன் என்று தைரியம் கூற.. ஒரு‌ மிடுக்கு வந்து தானாய் அமர்ந்தது சாருமதி முகத்தில்!!

 

 

அன்னை தந்தை பார்வை பாஷையை மகன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். முதன் முறையாக.. அவர்களை தாண்டி.. இது போல் நாமும் வாழ வேண்டும் என்று மனதில் தோன்றியது விநாயக்கிற்கு!!

 

 

“என்ன இருந்தாலும் சொந்தம் போல வெளியே எடுத்தா வருமா?” என்று மீண்டும் ஆரம்பித்தார் கோதமி மாமனார். எப்படியாவது அவர்கள் வாயாலேயே தன் மகளை பெண் கேட்க வைக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்பு!!

 

 

“நாளைக்கு என் மகன்ட கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை என்றால் எந்த சொந்தமும் வராது. என் மகனின் சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கையை விட எந்த சொந்தமும் பெரிதில்லை எனக்கு!!” என்று நிமிர்வாக வாழ்க்கையில் முதன் முறையாக பேசிய அன்னையை விநாயக் அதிசயமாக பார்க்க.. சாருமதி தன் விழியால் தன்னவரிடம் எப்படி என்று கேட்க..

 

 

புருவத்தை உயர்த்தி மெச்சுதல் காட்டிய கணவன், உதடு குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்பினார்.. யாரும் பார்த்தால் என்ன? என்‌ மனைவி!! நான் கொடுப்பேன் என்று!!

 

 

கொண்டவன் துணையிருந்தால் கூரை மீதேறி கூவலாம்னு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்!! 

 

 

அதே நேரம், விருப்பமில்லாத தன் மகனை அந்த அலங்கார பொம்மையிடம் மாட்டி விட மனதில்லை. நேசத்தோடு அன்பையும் காதலையும் ஊட்டி அவ்வப்போது மோக தாபத்தோடு அரங்கேறும் தாம்பத்தியமே இனிக்கும்!! என்று வாழ்ந்து பார்த்தவர், இன்னும் அந்த காதலில் கரைந்து கொண்டிருப்பவர் எப்படி ஒத்துக் கொள்வார்.

 

“எப்படிமா ஒரு நாளில் மாறினீர்கள்?” என்று மகன் அதிசயித்து கேட்க..

 

 

“நேற்று இரவு நான் பார்த்த வைத்தியம் அப்படி புத்ர.. உங்க அம்மாவை பிடித்திருந்த பைத்தியம் போய்டுச்சு பறந்து!!” என்று சிரித்த கணவனின் பிரத்யேக பார்வை சொன்ன சேதியில் முகம் செங்காந்தளாய் சிவந்தது சாருமதிக்கு!!

 

 

விநாயக்கை வளைக்க முடியா வருத்தத்தில் இருந்த பதிராஜா குடும்பம் அன்று இரவு அங்கேயே தங்கியது.

 

 

இரவு உறக்கம் கொள்ள முடியாது தவித்தான் விநாயக்!!

 

 

ஃபோனின் வழியே அவளை பார்க்க.. அவளோ இவன் இல்லாததால் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

 

“நீ மட்டும் நிம்மதியாக எப்படி தூங்கலாம்?” என்று நிம்மதியற்று படுக்கையில் புரண்டவன், பாவையவளின் அருகாமையை தேடி தவித்து போனான்.

 

 

இப்பொழுது அவளை தேடி செல்ல முடியாது!! தாய்க்கும் தந்தைக்கும் என்ன பதில் சொல்வது என்று தூக்கம் வராமல் தவித்தவன், இறங்கி தோட்டத்தில் உலா போக.. 

 

 

அங்கே முழு வெண்மதியும் துணையின்றி வான வீதியில் உலா போக.. அதையே பார்த்து நின்று கொண்டிருந்தான் விநாயக்!! அப்போது அவன் புஜத்தை ஒரு வளைகரம் பற்ற.. அந்த ஸ்பரிசம்.. அவள் ஸ்பரிசம் இல்லை என்று உணர்ந்தவன், சட்டென்று தட்டி விட்டு நகர்ந்து நின்று கொண்டான். அது பெருத்த அவமானமாக போனது விதுஷாவிற்கு.

 

 

“ஏன்.. என்னை பிடிக்கவில்லை வினய்!!” என்று கொஞ்சும் குரலில் அவன் அருகில் நெருங்க முயன்றவளை தள்ளி நிறுத்தியவன், “எல்லோருக்கும் எல்லோரையும் பிடிப்பதில்லை விதுஷா!!” என்றான் அந்த முழுமதியை பார்த்துக் கொண்டு..

 

 

“ஏன்?? ஏன்?? நான் அழகில்லையா? எனக்கு படிப்பில்லையா?? வசதி இல்லையா?? ஏன் என்னை பிடிக்கவில்லை? ஏன்‌னு எனக்கு காரணம் தெரியனும்!!” என்று மீண்டும் அவனை அணைக்க  சென்றவளிடம் இருந்து சற்றே இரண்டடி பின்னால் குதித்தான்.

 

 

“தட்ஸ் யுவர் லிமிட்.. அதை கிராஸ் பண்ண!!” என்று விரலை உயர்த்தி கண்களால் கனலை நிறுத்திக் கர்ஜித்தவனை பார்த்து கொஞ்சம் அரண்டு தான் போனாள் விதுஷா.

 

 

பார்க்கப் பக்கா ஸ்மார்ட்டாக இருக்கிறான். அம்மாவும் அவ்வளவு பெரிய தெளிவு கிடையாது. இவனை திருமணம் செய்து கொண்டால் இந்த வீட்டை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளலாம். கூடவே அவங்க பெண்ணை தன் அண்ணன் கல்யாணம் செய்து இருப்பதால் அதற்கு பயந்து இவர்கள் என்னிடம் அடங்கித்தான் போக வேண்டும். அதை காரணம் காட்டியே இவர்களை ஆட்டி வைக்கலாம் என்று இவள் போட்ட திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கினான்.

 

 

ஆனாலும் கடைசியாக தன் இளமையையும் செழுமையையும் ஆயுதமாக எடுத்து அவனை நெருங்கி இதழில் முத்தமிட முனைகையில், நடுங்கும் இதழ்களோடு தன் இதழ் சேர்ந்த, அந்த மென்மை.. அந்த ஸ்பரிசம்.. அந்த தேனமிர்தம் ஞாபகம் வர.. அவளை ஒரே தள்ளாக தள்ளியவன், பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்பதையெல்லாம் மறந்து அந்த இரவு அவளை காண விரைந்து சென்றான்.

 

 

காரை விரட்டிக் கொண்டு சென்றவன் வேகமாக வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தான் தான் வைத்து இருந்த சாவியினால்.. விதுஷா தொட்டது அவனுக்கு வெறியானது. முதலில் முகத்தை அதுவும் உதட்டை நன்றாக கழுவியவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அணைத்தவாறு படுத்தான்.

 

 

அவளது கழுத்தின் ஓரம்… கழுத்

து.. மார்பு எல்லாம் கண்டபடி முத்தமிட்டான். பயந்து அலறி எழுந்தவள் அவனையே  இறுக்கியதில் அவனது முகம் அவளது இதழில் அழுத்தமாக புதைந்து கொண்டது!!  மீள விருப்பமின்றி!!

 

 

தன் பானம் சரியாக வேலை செய்ததா என்ற புரியாமல் கியூபிட்!!

 

 

வானவில் வளரும்…

8 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top