வானவில் 9
“இந்த விநாயக்கை எந்த பானம் போட்டு காதலில் விழ வைக்கலாம், பயப்புள்ள வெறும் மோகம்.. தாபம்னு பினாத்திக் கிட்டு இருக்கான்” என்று புலம்பியவாறு தன் கையிலிருந்த அம்புகளை எல்லாம் வெகு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தது நம் கியூபிட்!!
ஹாய் காதல் தேவதையே!! வேறு யார் நான் தான்!!
யாரிடம்?? அட நம்ம கியூபிட் கிட்ட தான் பா!
அதுவோ சுற்றி முற்றிப் பார்த்து விட்டு கையில் வைத்திருந்த அம்பால் தன்னை காண்பித்து என்னையா? என்றது.
நானும் ஆமாம் என்று தலையாட்ட..
மகிழ்ச்சி மத்தாப்புகள் அதன் முகத்தில்!! ஆனால் அடுத்த கணமே முகம் வாட்டமாக… ஏன் கியூபிட். முகம் டல்லடிக்குது?
அடிக்காம என்ன செய்யும்.. ஹீரோனு ஒருத்தனை போட்டு வைச்சிருக்கியே.. அவன் எந்த பானத்துக்கும் ஆப்புட மாட்டேங்குறான்.
என்ன??!! அதிர்ச்சியோடு நான்!
ஆஹான். உனக்கு தெரியாதுல அவன் பத்தி.. கோபம் மூட்டாம ஓடிப்போ ஜியா! ஆத்திரத்தில் கியூபிட்.
கூல்!! கூல்!! காதல் தேவதை.. காண்டு தேவதையா மாற கூடாது. உலகம் தாங்காது!
ஆமாமில்ல… இவனுகளுக்கு வர வர லவ் லஸ்ட் வித்தியாசம் தெரியல.. நானும் இல்லைன்னா இந்த உலகம் என்னாகிறது? மேலும் இரு இறக்கைகள் முளைத்து மேகத்தில் மிதந்தது கியூபிட்!
ஆமா.. ஆமா.. நம்ம ஹூரோ அதான் விநாயக்.. நல்லா ரொமானாஸ் எல்லாம் பண்றானே..
வெறும் மோகம் தாபம் மட்டும் போதுமா?
போதாதா??
ம்ஹீம்…லவ் இல்லாத போதே இப்படி பண்ணி பெடலெடுக்கிறானே?? லவ்வும் வந்தால்..
ஆமாம்… வந்தால்.. கண்கள் மின்ன ஆவலோடு நான்!!
களை கட்டும் காதல் திருவிழா… அதனால.. இந்த பயபுள்ளைக்குனு ஒரு புது பானம் தயார் பண்ணி வைச்சிருக்கேன்!!
வாவ்!! அப்படி என்ன பானமோ??
“கன்னாபின்னா.. காதலாகி!!” அது தான் அந்த பானத்தின் பெயர்! எப்படி??
செம.. சூப்பரு..
நீ நகரு..
இந்தா விடுறேன் பாரு..
என்று கையில் தங்கத்தில் மின்னிய அந்த அம்பை விட்டது.
அம்பே.. அம்பே..
என் அம்பே.. எங்கோ தூரத்தில் பாடுவது கேட்டது!
“சோ.. ஸ்வீட் டேஸ்ட் டி!!” அவள் வாயோரம் தன் வாயை வைத்துக் கொண்டு முனகினான். அவளின் மூச்சுக் காற்றில் இருந்த சூடு அவன் முகத்தில் உணர.. அவனின் கைகள் இன்னும் அவளின் முதுகுப் புறங்களை மென்மையாகத் தடவிக் கொண்டிருந்தன.
அவள் பேசும் நிலையில் இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். முழித்து இருந்தால் விட்டு ஓடியே சென்றிருப்பாள் இந்நேரம்!! அவள் முதுகுப் பரப்பை தடவியவனின் கைகள் கீழே இறங்கி அவளின் இல்லையென்ற இடுப்பை தொட்ட.. அம்மிணிக்கு கூச்சம் நெட்டி தள்ள, தூக்கத்திலே அவள் நெளிந்தாள்.
அவனின் கைகள் மெல்லிடையில் உறவாட..
அவன் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்குவதும் பின்பு விலகுவதுமாய் இருக்க..
அவன் கற்றை மீசை அவளது கன்னத்தில் கோலமிட..
அவளின் சூடான மூச்சுக் கூட அவனது தேகத்தை தகிக்க வைக்க..
ஒரு நிமிட தயக்கத்துக்கு பின் உதடுகள் மீண்டும் அவளின் இதழ்களை கொத்தித் திண்ணத் துவங்கின !!
“ஹ்ஹாஆஆ.” என்று பதறி எழுந்து அமர்ந்தாள்.
“ம்ப்ச் ஏன்டி?” என்று கோபம் கொண்டான் அவள் விலகலில்..
“நேரங்கெட்ட நேரத்தில் வந்து இப்படியா ஒரு பச்சை பிள்ளையை பயமுறுத்துவீங்க.” என்று அவனிடம் இருந்து விலகி உதடுகளை தேய்த்துக் கொள்ள.. அவன் கைகளோ இப்போது ஆக்டோபஸ் போல அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டது.
“இந்த நேரத்துல நான் வராமல் வேறு யார் வருவார்?” இப்போது பேச்சில் ஒரு உரிமை தொணித்தது விநாயக்.
“ம்க்கும்.. அதானே!!” என்று அவள் உதடு சுழித்தாள்.
சுழித்த உதடுகளை இரு விரல்களால் பிடித்து இழுத்தவன் “இந்த உதடு ரொம்ப பேசுது.. அப்புறம் ரொம்ப கஷ்டப்படும்” என்றான்.
“ம்ம்ம்.. என்னை விடுங்க.. ம்ம்… விடுங்க… வலிக்குது.” என்று அவள் கெஞ்சிய பிறகே விட்டான்.
மீண்டும் அவளின் கழுத்தில் முகம் புதைத்து.. முத்தமிட்டு.. மெல்ல மெல்ல முன்னேறி அவள் இதழ்களை அடைந்து விரிந்து நின்ற இதழ்களை கவ்வி கொண்டான்.
கண்கள் சொருக.. அரைக் கண் திறந்து அவளைப் பார்த்தான் விநாயக்.
தாப போதை ஏறிய அவன் விழிகள் அவளிடம் எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்பது போலிருந்தது. அவனுக்கு தோன்றிய உணர்வு அவளுக்கு இன்னும் தோன்றவில்லை அல்லவா? அதிலும் பயத்தில் அவள் கண்களை மூடியிருக்க அவன் கண்கள் சொன்ன செய்தியை அவள் கண்கள் படிக்கவில்லை..
அவளின் மூச்சுக் காற்றை முகர்ந்தவனுக்கு இன்னும் உணர்ச்சி ஊற்றுக்கள் உள்ளுக்குள்!!
இள வெப்பமான அவளின் மூச்சுக் காற்றில் அவன் தேகத்தில் பரவி.. சுவாசத்தில் கலந்து… அவன் ரத்தம் கொதிக்க.. இதயம் துடிக்க.. நரம்புகள் புடைக்க.. எல்லாம் அவளை ஆட்கொள்ளவே துடித்து அடங்கியது.
இவை அனைத்தும் நம் கியூபிட்டின் பானத்தால் அவனின் உடலில் நடந்த ரசாயன மாற்றங்கள்.
அது காதல் என்பதை அவன் அறியவில்லை!! அவள் மீது கொண்ட காமம் என்றே நினைத்து இருந்தான்!!
பார்க்கும் அனைத்து பெண்களிடமும் எல்லாம் தோன்றினால் அது காமம்!! தனக்கான பெண்ணிடம் மட்டுமே தோன்றும் உணர்வே காதல்!! அதிலும் அவனின் காதலோடு கூடிய காமத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவள் பிரிந்து சென்றால் புரிந்து கொள்வானோ??!!
இருக்கும்.. இருக்கும்.. இவன் காதலை உணர்த்த அந்த கியூபிட் தன் வெள்ளி அம்பை பயன்படுத்தினாலும் பயன்படுத்தும்!!
தங்கம் காதலர்களை சேர்க்குமாம்!!
வெள்ளி காதலர்களை பிரிக்குமாம்!!
அவளை தன் மீது அள்ளிப்போட்டுக்கொண்டு அணைத்தவாறே விட்ட தூக்கத்தை.. அவன் வீட்டில் வராத தூக்கத்தை.. தூங்கினான். வர்ணாவுக்குத்தான் இம்சையாக இருந்தது அவன் மேல் படுத்திருப்பது.. அவனின் ஆழ்ந்த சுவாசம் அவன் தூங்கி விட்டதை உணர்த்த மெல்ல அவன் மேலிருந்து இறங்கி சற்று தள்ளி படுக்க முயல.. அவனோ தன் மலைப்பாம்பு கையால் அவளை இழுத்து தன் அருகே அணைத்தவாறு தூங்கினான்.
“இதெல்லாமா டா பழி வாங்குற படலத்தில் வரும்? என்னதான் பழி வாங்குவதாக இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்!! நிம்மதியா தூங்க கூட விட மாட்டேங்கிறான்.. இம்சை புடிச்சவன்!! இந்த அனகோண்டாவிடமிருந்து நான் எப்படி தப்பித்துப் போக?” என்று புலம்பியவாறே தூங்கினாள்.
இவனின் ஸ்பரிசங்கள் அவளுக்குள் இதுவரை எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வருங்காலத்தில் கொண்டு வருமேயானால்.. அவளால் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியுமா??
பாவம் கியூபிட்க்கு நிறைய வேலை இருக்கிறது போல.. யாரு பெத்த பிள்ளையோ!!
மறுநாள் காலை அவன் போன் விடாமல் அடித்ததை கூட அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை. நல்ல நாளிலேயே இவள் தில்லைநாயகம்.. இன்றோ அவனுக்கு கொடுத்து உறங்கினாள்.
ஒரு வழியாக கண் விழித்தவன் தன் அருகில் உறங்கும் மெல்லியாளை சற்று நேரம் உற்று நோக்கினான். இதுவரை அவள் மீது கோபம் கோபம் மட்டுமே!! இன்று.. இக்கணம்.. சற்றே அதை ஒதுக்கி வைத்து விட்டு பார்க்க.. அவளின் அழகு சற்றே அவனை கிறங்க வைத்தது. மெல்லிய பிறை நுதலில் முத்தமிட்டு விலகிவன் வழக்கம் போல உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு வரவும், இவள் எழுந்து அமர்ந்திருக்கும் சரியாக இருக்க வா என்று அவளை அழைக்க.. அவள் மறுக்க மறுக்க அள்ளிக் கொண்டு நீச்சல் குளத்தில் விழுந்தான்.
அன்றைக்கு போல ஏதும் செய்து விடுவானோ என்று இவள் பயப்பட “சும்மா உட்கார்ந்து தூங்கி கிட்டே இருக்க இல்ல.. அதுக்கு தான் ஸ்விம்மிங்!! ஜஸ்ட் ஹாப் ன அவர் பண்ணு.. ஓகே” தன்னிடம் கோபம் காட்டாமல் நார்மலாக பேசும் இந்த அந்நியன் யார் என்று தீவிர சிந்தனையில் வர்ணா..
அப்போது மட்டுமல்ல அதன் பிறகு அவளோடு சேர்ந்து காலை உணவு உண்டவன், அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வர.. இதுவரை அசோகவனம் சீதையாக சோகமாக இருந்தவள்.. பிருந்தாவன ராதையாக அந்த தோட்டத்தில் துள்ளி குதித்தாள். அவள் ரசிக்க ருசிக்க என்று நிறைய இயற்கை காட்சிகளும் பழ வகைகளும் இருக்க..
தான் அவனிடம் சிறை இருக்கிறோம் என்பதை மறந்து அந்த நேரத்தை சந்தோஷமாக கழித்தாள். அதன்பின் மதியம் போல வீட்டுக்கு அழைத்து வந்தவன் அவளை விட்டுவிட்டு வெளியே சென்று விட்டான். எங்கே சென்றான் எல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் அந்த வீடு முழுவதும் தோட்டத்திலும் அவளுக்கு உலா வர அனுமதி கிடைக்க.. அதுவே போதும் என்று மதிய உணவு முடித்து அங்குள்ள தோட்டத்தை எல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாலை போல திரும்பி வந்தவன் அவளை அழைத்துக் கொண்டு சற்று தூரத்தில் உள்ள கடற்கரைக்கு வந்தான் இலகுவான உடை அணிந்து..
கடற்கரை பார்த்திருக்கிறாள் தான். அதில் நண்பர்களோடு கூடி கும்மாளம் அடித்து இருக்கிறாள் தான்.. ஆனால் அவற்றையெல்லாம் விட இந்த கடற்கரை அவ்வளவு அழகாகவும் சுத்தமாகவும் இருக்க கேள்வியோடு அவனை பார்த்தாள்.
“இந்த பீச் நமக்கு மட்டுமானது!! வெளியில் யாரும் வர மாட்டாங்க.. அதனால தான் சுத்தமா இருக்கு” என்று அவள் விழி மொழி படித்தவன் பதில் கூற,
“ஓஓ…” என்று உதட்டை அவள் மீன் குஞ்சு போல குவிக்க பாய்ந்து சென்று பசக் என்று அதில் ஒரு முத்தம் வைக்க தோன்றியது இந்த காதல் புரியாத காதலனுக்கு!!
ஏன் இந்த மாற்றம் அவனிடம்? புரியவில்லை அவளுக்கு!! ஆனாலும் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்டு அந்த இயற்கையோடும் அவனின் இறுகிய அணைப்போடும் வாழப் பழகிக்கொண்டாள்.
இரவு உணவின் போது எப்போதும் கொடுத்ததை சாப்பிடுபவள் இப்போது அது வேண்டும்.. இது வேண்டும்.. என்று விரும்பி கேட்க ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான் விநாயக்.
“புரியுது.. புரியுது.. உங்க பார்வைக்கான அர்த்தம் புரியுது!! என்னடா இவளை கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்.. இவ பாட்டுக்கு டான்ஸ் ஆடுற.. ஓடுறா.. பாடுறா.. குதிக்கிறா.. மரத்துக்கு மரம் தவ்வுறா.. கடற்கரையில் விளையாடுறா..” சாப்பாட்டு நொறுக்கி உள்ள தள்ளியப்படி “இப்படி எல்லாம் தானே நினைக்கிறீங்க??” என்று கேட்க அவன் அமைதியாக அவளை தான் பார்த்திருந்தான்.
“இங்கிலீஷ்ல ஒரு பொன்மொழி இருக்காம்.. அதாவது இஃப் யூ நாட் ஸ்டாப் த ரேப்…. ஜஸ்ட் எஞ்சாய் இட்!! அப்படின்னா அர்த்தம் உங்களுக்கு சொல்ல வேண்டாம். புரியும் தானே!! அது போல தான் இதுவும்.. என்னால இங்க இருந்து தப்பித்து போக முடியாது. அதுக்காக வீம்பு பிடித்து சண்டை போட்டு சாப்பிடாமல் இருந்து நான் ஏன் என்னை வருத்திக் கொள்ளனும்?? அதுதான் என்னால் தடுக்க முடியவில்லை ரசிக்க கற்றுக் கொண்டு விட்டேன்!!” என்று தோளைக் குலுக்கியவள் அந்த பெண்மணியை பார்த்து “மம்மீ.. நல்லா தோசையை மெத்து மெத்துனு சுட்டு.. அதன் மேலே 4 டீஸ்பூன் வெண்ணெயை ஊற்றி.. அதில் வெங்காயத்தை கனமழையா போட்டு.. அதன் மீது மென்மழையா கேரட் போட்டு.. இட்லி பொடியை சாரல் மழை போல போட்டு.. இரண்டு ஸ்பூன் தாராளமாக நெய் விட்டு..” என்று வடிவேல் பாணியில் இவள் தனக்கு தேவையானதை கூறிக் கொண்டே செல்ல.. தலையாட்டி சிரித்துக் கொண்டவன், அதை அவளிடம் மறைத்துக் கொண்டே தன் உணவினை உண்டு முடித்தான் விநாயக்!!
இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் சென்றது காலையில் அவளோடு உண்பவன், பின்பு இலங்கையில் இருக்கும் அவனது அலுவலகத்துக்கு செல்வதும்.. மாலைபோல் வருவதும்.. அவளோடு கடற்கரையில் உலாவுவதும்.. என்பதுமாக அவனது நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் வேளையில், அவனது மனமே அவனை இடித்துரைக்க ஆரம்பித்தது!!
“என்ன மேன் செஞ்சுகிட்டு இருக்க நீ?? அந்தப் பெண் மேலே கோபப்பட்டு பழிவாங்குறேன் கூட்டிட்டு வந்த.. பழிவாங்கும் அந்த பொண்ணுகிட்ட அத்து மீறின.. இப்போ கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருந்தவளை வேண்டாம்னு ராத்திரியோட ராத்திரி வந்து அவ கூட படுத்துயிருக்க.. ஏதோ ஒரு லவ்வர் போல கட்டுன பொண்டாட்டிய போலவும் அவளோடு தான் சாப்பிடுற..பீச்சுக்கு போற.. ஒன்னா படுத்து தூங்குற.. இது நல்லதுக்கு இல்லையே!!” என்றது!!
ஒருவேளை கியூபிட்டின் பானம் எக்ஸ்பயரி ஆயிடுச்சோ!!
“ஏன் அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதா?? இருப்பேனே!! இருந்து காட்டுகிறேன்!!” என்று மனதுக்கு பதிலளித்தவன் முதல் இரண்டு நாட்கள் அங்கு செல்லாமல் இலங்கை வீட்டிலேயே இருந்தான். அப்படியும் இரவானால் தோட்டத்திலும் அவனது அறை இருக்கும் தளத்திலும் விடியவிடிய உலா போக.. இது சரிவராது என்று நினைத்தவன், அடுத்த வாரம் மீண்டும் சென்னைக்கு பறந்து விட்டான்.
அங்கேயும் முட்ட முட்ட வேலைப்பார்த்து கூடவே ஆதித்க்கு சில கட்டங்களை கட்டி.. தன்னை வேலையில் மூழ்கடித்தவனை வெறுமை சூழ.. குளிர் நிலவாய் கண்கள் மூடுகையில் அவளது முகம் முன்னே வந்து நின்றது.
“அவளை பழிவாங்க வேண்டுமென அழைத்து வந்து எனக்கு நானே ஆப்பு வைச்சுக்கிட்டேன் போலவே?? அவளை மறக்கவும் முடியாமல்.. ஏற்கவும் முடியாமல் தவிக்கிறேன்!!” என்று புலம்பித் தவித்தான் மீண்டும் அவனது கெஸ்ட் ஹவுஸூக்கே பயணப்பட்டான்.
ஒரு வாரம் அவன் வரவில்லை என்ற போதிலும் தன்னை அவன் எங்கிருந்தோ கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று அறியாமல்.. இவள் தன் போலவே இருந்தாள். எப்போதும் போல சோக பதுமையாய் அந்த பால்கனியிடம் தஞ்சமும் கொண்டாள் மாலை நேரத்தில்!!
எப்பொழுது மாலை நேரம் அவள் அப்படி இருப்பதை பார்க்க பிடிக்காமல் கடற்கரைக்கு அழைத்துச் சென்று விடுவான். இப்போது விநாயக் இல்லை.. எதையும் பகிர்ந்து கொள்ள தோழியும் இல்லை.. நலன்களை கேட்கக் குடும்பமில்லை.. என்னதான் அனைத்து வசதிகளும் அங்கே இருந்தும் வெறுமை அவளை சூழ்ந்து தாக்கியது. அது மொத்தமும் விநாயக் மீது வெறுப்பாகவும் கோபமாகவும் மாறியது.
அன்று இரவு தூக்கம் வராமல் தோட்டத்துக்கு சென்றவளை தடுத்தார் இவளை பார்த்துக் கொள்ளும் அந்த பெண்மணி.. இரவு நேரத்தில் வேண்டாம் என்று!!
சரி என்று மொட்டை மாடியில் நீச்சல் குளத்திற்கு அருகே நடைபயின்று கொண்டிருந்தாள். நடந்து நடந்து உடல் சோர்வு கொள்ள.. நீள் இருக்கையில், கண்களை மூடி எப்போதடா இந்த கூட்டிலிருந்து சிறகை விரித்துப் பறப்போம் என்று மனம் கணக்க படுத்திருந்தாள்.
அப்போது அவள் அருகே அவனின் வாசம்.. கண்கள் திறக்காமலேயே அவன் தான் என்று உணர்ந்துகொண்டவள் அசையாமல் படுத்திருக்க.. இப்பொழுது வாசத்தோடு கூடிய அவன் பிரத்யேக ஸ்பரிசத்தோடு அவன் வசமானாள்!!
அவன் மீதிருந்த அந்த பயம் கலந்த வெறுப்பு அவளை விரைக்க செய்ய.. கண்களில் கோபத்துடன் அவனை பார்த்தாள்.
அவனோ மோகத்துடன் அவளை பார்த்து மெல்ல அவள் முகத்தை நெருங்க.. தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் வர்ணா.
அவனோ அசராமல் அவள் முகத்தை விடுத்து, குனிந்து அவள் சுடி டாப்ஸை விலக்க, அவன் கையை பற்றி தடுத்தாள் பயத்துடன்!!
அதற்கெல்லாம் அசறுபவனா அவன்? அவனது ஒற்றைக் கையால் அவளது தடுக்க வந்த கைகளை பற்றி.. வயிற்றில் முகம் பதித்தான்!!
சட்டென்று அவன் தலையை அவள் வயிற்றில் இருந்து தள்ள.. தள்ள.. இன்னும் இன்னும் பொதிந்தான். “ஒரு கிஸ்ஸோட விடலாம்ன்னு நினைச்சேன்.. ம்ஹூம் இப்போ பாரு” என்றவன், தன் இதழ்களினால் அங்கே அழுத்தமாக முத்தங்கள் இட்டான்.
நச்சென்று சத்தத்தோடு அவன் இடும் ஒவ்வொரு முத்தங்களும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஏதோ உணர்வுகளை வெளிப்படுத்த.. அதன் சுகம் தாளாமல் அவள் கைகள் அவன் கேசத்திற்குள் நுழைந்து இறுகி பிடிக்க.. அவன் அதரங்களோ முத்த ஊர்வலத்தை அவள் வயிறு முழுவதும் நடத்தி கொண்டிருந்தது. அதன் மென்மையும் வளவளப்பும் அவனுக்கு போதை ஏற்ற.. மது அருந்திய வண்டென அங்கேயே மயங்கி கடந்தான் விநாயக்!!
மென் மொட்டாக இருந்த நாபி சுழி சுழலுக்குள் அவன் சிக்கிக் கொள்ள.. தன் நாவாலும் உதடுகளாலும் அவற்றை அளவெடுக்க.. அவளோ உணர்ச்சி மிகுதியால் அவன் முடிகளை பிய்த்து எறிந்தாள். அதற்கும் அவன் சிறிதும் அசைந்தானில்லை.. ஒரு வாரமாக அவளின் ஸ்பரிசத்திற்காக ஏங்கியவன், இன்று கிடைத்த வாய்ப்பை சிறிதும் தவறவிடாமல் மொத்தமாக கொள்ளை கொள்ள தொடங்கினான் இந்த காதலில்லா காதலன்!!
மெல்ல முகம் உயர்த்தி பார்க்க.. அவனின் ஈர முத்தங்களால் அவள் ஆழி வயிறு மின்ன..
மீள முடியா அந்த ஆழியில் விழுந்து அதரங்களை தவிர்த்து நாவினால் முத்தெடுக்க.. வர்ணா புதுவித உணர்ச்சி பிரவாகத்தில் பொங்க.. மேலும் அவனின் இந்த காதல் லீலைகளை தாங்க மாட்டாமல், விநாயக் முடியை இறுகப் பற்றிக் அவனை மேலிழுத்தாள். பிடித்த இனிப்பை சாப்பிடும் பிள்ளையை பாதியில் இழுத்த கதையானது!!
மீண்டும் அவன் குனிய.. அவள் இழுக்க.. அப்படியே இரண்டு பேரும் உருண்டு புரண்டு நீள் இருக்கையிலிருந்து தட்டுத் தடுமாறி கீழே விழுந்தனர். அவள் கீழே விழாமல் தடுக்க முயன்றவனையும் சேர்த்து உருட்டி அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்தாள்.
நீச்சல் குளத்தின் நடுவே எழிலோவியமாய் அவள்!!
பார்க்கவே மூச்சு முட்ட..
மூட்டிய மூச்சினை சீராக்க அவளது இதழ்கள் வழி இதயத்துக்கு அனுப்பிக் தொண்டாருந்தான் சுவாசத்தை!!
கியூபிட்டே வெட்கம் கொண்டு கண்களை மூடி கொண்டது!!
அதே நேரம்.. வர்ணாவின் இருப்பு தெரிய வந்தது விதுஷாவிற்கு!!
வானவில் வளரும்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super sis 💞