ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 12

அத்தியாயம் 12

 

“ஷா லா லா ஷா லா லா

ரெட்டை வால் வெண்ணிலா

என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா..” என்றவாறே பாடிக் கொண்டு படியில் இறங்கி வந்த விளானி, சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த மாம்பழ மில்க்ஷேக்கை எடுத்து குடித்துக் கொண்டே,

“செ செ செ செவ்வந்தி

என் தோழி சாமந்தி

வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி” என்று பாடியபடி நடனமாடிக் கொண்டே வந்தவள், உணவு மேஜையின் மீது ஏறி, 

“கொட்டும் அருவி வி வி

என்னை தழுவி வி வி

அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ?” என்று குதிக்க, நாற்காலியில் வைத்த கால் வழுக்கி, கீழே விழுக இருந்தவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஹர்ஷவர்தன். இவரது கண்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள, அப்பொழுது தான் இறங்கி வந்த நகுலனின் கண்களில் இக்காட்சி விழ, தன் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை கண்டான். பின்னர் சத்தமாக,

 

“ச்சே.. ச்சே.. ஹர்ஷாவாவது விளானியை கட்டிப்பிடிச்சுட்டு நிற்குறதாவது, நீ இன்னும் கனவுலேயே இருக்க” என்றுவன் தன் பின்னந்தலையில் அடித்தவாறு, தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, மாடியேறி செல்ல, நகுலனின் அசைவில் உயிர் பெற்ற இருவரும் சட்டென விலகி நின்ற, அதே நேரத்தில் ஹர்ஷவர்தனின் கைபேசி சிணுங்கியது. அதனை காதில் எடுத்து வைத்தவாறே, அங்கிருந்து செல்ல முயன்றவன், திரும்பி விளானியை பார்த்து,

 

“கை காலை உடைச்சுக்காத.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் போகணும்.. ரெடியாயிரு.. உன்னைய கொண்டு போய், காலேஜ்ல விட்டுட்டு நான் ஆஃபிஸ் போகணும்..” என்று கூறி விட்டு, தன் கையேசியில் யாருடனோ பேசியவாறு, தனதறைக்குள் நுழைந்து கொண்டவனை இமைக்காமல் பார்த்தாள் விளானி. வாயில் அழைப்பு மணி ஓசையில் தன்னிலை அடைந்தவள், கதவை சென்று திறக்க, அவள் முன்னே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்றிருந்தார். விளானியை சிறிதும் சட்டை செய்யாது, வீட்டிற்குள் நுழைந்தவர், நேரே சமையலறைக்குள் சென்றார். தன் கையில் வைத்திருந்த பைபில் இருந்து, காய்கறிகளை உணவு மேஜையில் கடை பரப்பியவர், வேக வேகமாக சமைக்க ஆரம்பித்தார். வாசனை பிடித்தவாறே சமையலறைக்குள் நுழைந்த விளானி,

 

“நீங்க யாரு? எப்போ இருந்து இங்க இருக்கீங்க?” என்று கேட்க, வாணலியில் காய்கறிகளை வதக்கியவாறே,

 

“நான் வள்ளி..  இந்த வீட்டுல சமையக்காரியா வேலை செய்யுறேன்.. இப்ப கொஞ்ச நாளாக தான் இந்த வீட்டுக்கு வந்துட்டுருக்கேன்.. ஆமா.. நீ யாரு? இங்க இருக்குற பசங்களுக்கு பெண் வாசனையே.. ஆகாதே? நீ எப்படி உள்ள வந்த?” என்று விளானியை பேச விடாது, அடுக்கடுக்காக கேள்வி கேட்டவளை புன்னகையோடு பார்த்த விளானி, 

 

“நான் விளானி.. இந்த ஹர்ஷவர்தன் இல்ல.. ஹர்ஷவர்தன்.. அவன் என்னனைய ஏமாத்திட்டு ஓடி வந்துட்டான்.. அவனைத் தேடி தான் நான் வந்துருக்கேன்..” என்ற விளானிக்கு சற்று முன் குடித்த மில்க்ஷேக் வாந்தி வருவது போல் ஓங்கரித்து கொண்டு வர, தன் வாயை மூடிக் கொண்டு, தனதறையை நோக்கி ஓடியவள், ஓ.. ஓ.. ஓவென வாந்தியெடுப்பதை கதவோடு 

காது வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த, வள்ளியின் காதில் நன்றாகவே விழுந்தது. இதுவரை அவர்களை பற்றி எந்த ஒரு கிசுகிசுப்பான தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று சோகத்தில் இருந்த வள்ளிக்கு, விளானியின் வருகையும் வாந்தியும் ஒரு விருந்து சாப்பிட்ட திருப்தியை கொடுக்க, வேக வேகமாக தனது வேலைகளை முடித்து கொண்டு, பக்கத்து வீட்டிற்கு சென்றாள். 

 

“லீலா.. லீலா.. இங்க வாயேன்..”

 

“என்ன வள்ளி? இன்னைக்கு சீக்கிரம் வேலையை முடிச்சுட்ட போல?”

 

“ஆமா..”

 

“உனக்கென்ன கட்டப்பிரம்மச்சாரிங்க இருக்குற வீட்டுல வேலை கிடைச்சுருக்கு.. எனக்கு பார்த்தியா? கூட்டு குடும்பமாக இருக்குற இடமா‌ பார்த்து தான் வேலை கிடைச்சுருக்கு..”

 

“என்னமோ ரொம்ப சலிச்சுக்குற? அவங்க உனக்கும் உன் குடும்பத்துக்கும் எவ்வளவோ பண்றாங்க? ஆனா, நீ அவங்களை பத்தி பேசயே குறை பேசிட்டு அலையுற?”

 

“இப்ப எதுக்கு என் கதையெல்லாம் பேசுற? உனக்கு என்ன கதை கிடைச்சது? முதல்ல அதை சொல்லு..”

 

“ப்ச்.. பாரேன்.. சொல்ல வந்ததையே மறந்துட்டேன்.. அந்த பசங்கல்ல ஒரு பையன்.. ஒரு பொண்ணை கெடுத்துட்டானாம்.. அந்த பொண்ணு இப்போ முழுகாம இருக்குதாம்.. எப்படியோ அவனைத் தேடி வந்திருக்கு..” 

 

“அட பாவமே? அப்படியா சங்கதி? எந்த பையனை நம்பி மோசம் போனாளாம்? இப்ப எல்லாம் பசங்களை விட பொண்ணுங்க தான்.. தப்பு பண்ணிட்டுருக்காங்க..”

 

“ப்ச்.. எப்பவும் மூஞ்சியை இவ்வளோ தூரத்துக்கு தூக்கி வைச்சிட்டு, சிவப்பா.. ஹைட்ரா.. பார்க்க சினிமா நடிகர் மாதிரி இருப்பானே? அவன் தான்..”

 

“யாரு? ஹர்ஷவர்தன் தம்பியைப் பத்தியா சொல்ற?”

 

“ஆமா..”

 

“அந்த பையன் எந்த பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டானே? அந்த தம்பியா? நம்பவே முடியல..”

 

“ப்ச்.. நான் என்ன பொய்யா சொல்றேன்? அந்த பொண்ணு தங்கமான பொண்ணுப்பா.. காலைல என் கண்ணு முன்னாடி எப்படி வாந்தி எடுத்துச்சு.. தெரியுமா?” 

 

“ஹூம்.. ப நம் தான்.. அடுத்தவங்க கதை நமக்கெதுக்கு வள்ளி? சரி.. சரி.. நேரமாச்சு..‌ அந்த ஆறாம் நம்பர் வீட்டு பொம்பள, லேட்டா போன மானக்கேடா பேசும்.. நான் வாரேன்..”

 

“க்கும்.. எனக்கும் தான் வேலையிருக்கு.. நானும் கிளம்புறேன்.. இன்னும் வசந்திகிட்ட.. வேலம்மாக்கிட்ட எல்லாம் சொல்லணும்.. நான் வாரேன்” என்ற வள்ளி, அப்பகுதியில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஹர்ஷவர்தனை பற்றிய வதந்திகளை பரப்பி விட, இவை எதுவும் தெரியாத விளானியோ, ஹர்ஷவர்தனுடன் காலேஜ்கு கிளம்பினாள். 

 

“ஏய் நில்லு.. நீ காலேஜ்கு தானே போற?”

 

“ஏன்? பார்த்தா எப்படி தெரியுது?”

 

“ம்ம்.. சாமக்கூத்தாடி மாதிரி எதுக்குடி இவ்வளவு மேக்கப்?” என்ற ஹர்ஷவர்தன், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிஸ்ஷு பேப்பரினால் அவளது முகத்தை துடைத்து விட, 

 

“போச்சு.. போச்சு.. ஒரு மணி நேரமா நான் போட்ட மேக்கப் எல்லாம் போச்சு.” என்று அவள் கண்ணை கசக்க, அவ்வழியாக வாக்கிங் சென்று கொண்டிருந்த மூத்த தம்பதியினரோ, அவர்களை நோக்கி வந்தனர். 

 

“வாயும் வயிறுமா இருக்குற பொண்ணை ஏன்பா அழவிடுற? பொண்ணுங்க பாவம் பொல்லாதது..” என்று பெண்மணி கூற,

 

“அவளை கல்யாணம் பண்ணி, சந்தோஷமா வைச்சுக்கப்பா.. பொறுப்பை தட்டி கழிக்காத.. ஏதோ.. நீ எங்க பேரன் வயசுல இருக்குறதால, சொல்லணும்னு தோணுச்சு..” என்று அவரது கணவர் கூற,

 

“எங்க மகளிர் சங்கம் மூலமாக ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல கல்யாணம் ஏற்பாடு பண்ணட்டுமா?” என்ற பெண்மணியை உறைந்து போய் பார்த்திருந்தான் ஹர்ஷவர்தன். அவன் நிற்கும் கோலத்தை பார்த்து, வாயிற்குள் சிரித்துக் கொண்ட ஹாசினியோ,

 

“பாருங்க ஆண்டி.. என்னைய மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு அடம்பிடிக்குறான்.. நாளைக்கு என் குழந்தைக்கு அப்பான்னு நான் யார் பேரை கொடுக்க முடியும்?” என்று விசும்பலானாள். அவள் அருகில் வந்த பெண்மணியோ,

 

“நீ அழதமா.. இவன் எப்படி உன் கழுத்துல தாலி கட்டாம போறான்னு.. நானும் பார்க்குறேன்.. தட்டி கேட்க ஆளில்லன்னு நினைக்கிறானா? நீ மட்டும் எங்க லேடிஸ் கிளப்ல வந்து ஒரு கம்ப்ளைண்ட் கொடு.. மீதியெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்..” என்று விளானியை சமாதானப்படுத்த,

 

“இல்ல.. ஆண்டி.. என்னோட டாடி மம்மி இன்னும் கொஞ்ச நாள்ல வந்துடுவாங்க.. அதுக்கப்புறம் மேரேஜ் பண்றேன்னு சொல்றான்.. என்ன இருந்தாலும் அவனோட பேரெண்ட்ஸ் எங்க கல்யாணத்தை பார்க்கணும் இல்லையா? அதான் அவங்களுக்காக வெயிட் பண்றேன்..” என்றவள்‌ ஓரக்கண்ணால் ஹர்ஷவர்தனை பார்த்து கண்ணடிக்க, கோபத்தில் தன் இரு கைகளையும் மடக்கி, பல்லை கடித்து கொண்டு நின்றிருந்தான் ஹர்ஷவர்தன். 

 

“இதான் என்னோட ஃபோன் நம்பர்.. எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு.. இவன் ஏதாவது சேட்டை பண்ணான்னு வைச்சுக்கோ, ஆண்டின்னு ஒரு போன் பண்ணு.. மொத்த லேடீஸ் கிளப்போட இங்க வந்து நிற்குறேன்.. நீ பயப்படாத..” என்ற பெண்மணி அக்கறையோடு தன் கைபேசி எண் அடங்கிய விசிட்டிங் கார்டை அவள் கையில் கொடுத்துவிட்டு நடை பயணத்தை தொடங்க,

 

“இப்ப மட்டும் நீ கார்ல் ஏறல? நடந்தே காலேஜ்கு போ..” என்றவன் வேகமாக காரில் ஏறி, அதனை ஸ்டார்ட் செய்ய, வேகமாக காருக்குள் ஏறினாள் விளானி. காலேஜ் வந்ததும் அவளை இறக்கிவிட்டவன், அவளது கையை பிடித்து, இழுத்துக் கொண்டே கல்லூரி முதல்வரின் அறைக்குள் விரைந்தான். 

 

“அடடே ஹர்ஷு.. வாப்பா.. வா.. உன் பாட்டி.. உங்களை பத்தி நிறைய சொல்லிருக்காங்க.. உட்காருங்க.. அப்புறம் அப்பா எப்படி இருக்காரு? என்ன விளா? எப்படி இருக்க? அம்மா எப்படி இருக்கா?”

 

“எல்லோரும் நல்லாருக்காங்க மேம்.. அப்புறம் மலர் ஆண்டி.. உங்கக்கிட்ட ஒண்ணு சொல்ல சொன்னாங்க..”

 

“என்னதுப்பா?”

 

“விளா கொஞ்சம் துருதுருப்பானவ.. சேட்டை அதிகம்.. இவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்க சொன்னாங்க.. காலேஜ் பைனல் இயர் தான்.. எங்க கம்பெனில தான் ப்ராஜெக்ட் பண்ணப் போறா.. ஆனா, அது வரைக்கும் இவளை பார்த்துக்க சொல்ல சொன்னாங்க..” என்ற ஹர்ஷவர்தன், விளானியை அக்கல்லூரியில் சேர்த்து விட்டு, அங்கிருந்து கிளம்ப, அவனை கொலைவெறியோடு பார்த்தாள் விளானி. ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அவளை பின் தொடரும் படியாக, வேலையாள் ஒருவரை மியமித்திருந்தார் கல்லூரி முதல்வர். தன் நெருங்கிய தோழியின் பேத்தியல்லவா?! அவரது அக்கறையை இவ்வாறாக காட்ட, கல்லூரியை கட்டடிக்க முடியாத கோபத்தில், ஹர்ஷவர்தனை தன் வாயிற்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் விளானி. அவள் கூறிய பொய்யை நினைத்து, அவனுக்கு அவள் மேல் கோபம் ஏதும் வராதது, அவனுக்கு விந்தையை அளித்தது. அவனது மனதுக்குள் அழையா விருந்தாளியாக, எப்போதோ உள்ளே நுழைந்து சப்பரமாக விளானி அமர்ந்துவிட்டாள் என்பதை அவன் எப்போது உணர்வானோ? விளையாட்டாக என்றாலும், ஒருவனை மனதார விரும்பாமல், ஒரு பெண் இவ்வளவு பெரிய பொய்யை ஏற்கமாட்டாள், என்பதை அவள் எப்போது உணர்வாளோ? 

7 thoughts on “என் மோகத் தீயே குளிராதே 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top