அத்தியாயம் 13
“ஹாய்.. நான் அர்ச்சன..”
“ஓ.. நான் விளானி..”
“நீ காலேஜ்கு புதுசா?”
“ஆமா.. நீ?”
“நானும் தான்.. என்னோட டாடி சர்கிள் இன்ஸ்பெக்டர்.. அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும்.. அவர்கூடவே நாங்களும் ஊர் ஊரா சுத்தணும்..”
“ஓ!”
“ஆமா.. நீ ஏன் ஃபைனல் இயர் ஜாய்ன் பண்ணிருக்க? உங்க டாடிக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சா?”
“இல்ல.. இங்கப்பாரு?”
“என்னது காலியா? உனக்கு மேரேஜாகிடுச்சா?”
“ம்ம்.. ஒரே ஒரு தடவை தான் ஆகிருக்கு..”
“ரொம்ப கவலையா சொல்ற?”
“ஆமா.. படிக்குறப்போ மேரேஜாச்சுனா.. அது எவ்வளவு பெரிய ஸ்பீட் பிரேக்கர் தெரியுமா?”
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்..”
“ஆமா.. உன் ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு?”
“கேம் விளையாடுறாரு..”
“வாட்? கேம் விளையாடுறாரா?”
“ஆமா.. அதுவும் அவருக்கு தினமும் புதுசு புதுசா விளையாடணும்..”
“உன் ஹஸ்பெண்ட் என்ன பைத்தியமா? இன்னும் சின்னப்புள்ள மாதக் கேம் விளையாடிட்டு இருக்காரு.. உன் பேரேண்ட்ஸ்கு இது தெரியுமா? தெரியாதா?”
“தெரியும்.. அதான் நீயும் அவன்கூட போய் சேர்ந்து விளையாடுன்னு.. என்னையும் அவன்கூடவே அனுப்பி வைச்சுட்டாங்க..”
“நிஜமாவா?! ஆனா.. உன் லுக்கை பார்த்தா.. அப்படி உன்னைய கட்டாயப்படுத்துன மாதிரி தெரியலையே?! ஏய்.. என்னைய வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே?!”
“அய்யோ.. பாஸ்.. உங்கக்கிட்ட போய் விளையாட்டு வேணா.. இந்த க்ளாஸ் எடுக்க வர்ற ப்ரொபசர் மேல சத்தியமா.. நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..”
“நீ இவ்வளவு சொல்றதுனால உன்னைய நம்புறேன்.. பாவம் நீ.. ஒரு கேம் விளையாடுற சின்ன பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.. இந்த நாட்டுல பொண்ணுங்களுக்கு சுதந்திரமே இல்ல..”
“ஆமா.. ஆமா.. இல்ல.. இல்ல..”
“ஹேய்.. என்ன சாப்பிடுற? இது ஆகாஷ் க்ளாஸ்.. நீ இப்படி எல்லாம் பண்ண.. என்னைய பிரின்சிக்கிட்ட போட்டு கொடுத்துடுவாரு..”
“ப்ச்.. வறுத்த கடலை சாப்பியுறது ஒரு குத்தமா? அதுவும் ப்ரொபசர் இன்னும் வரவேயில்ல..”
“ப்ச்.. அவர் ஒன்னும் ப்ரொபசர் இல்ல.. இந்த காலேஜ் சேர்மனோட பையன். போன வாரம் தான் யூ எஸ்ல இருந்து வந்துருக்காரு.. பார்க்க அவ்வளவு ஹேண்ட்ஸமா இருப்பாரு.. தெரியுமா? அவர் வர்றதுனால தான் நம்ம க்ளாஸ் இன்னைக்கு நிறைஞ்சு வழியுது..”
“பார்த்தாலே தெரியுது.. ஒரு பக்கம் வழியுது.. வாயை துடைச்சுக்கோ..”
“நீ வேணா பாரு.. அவர் வந்ததும் நீயும் ப்ளாட்டாகிடுவ..”
“நானா? அவரை பார்த்தா? வாய்பில்ல ராஜா.. சரி அதை விடு.. நீ எத்தனை நாளா காலேஜ் வந்துட்டுருக்க?”
“ஒரு மாசத்துக்கு முன்னாடி தானே காலேஜ் திறந்தாங்க? அன்னைல இருந்து நான் வந்துட்டுருக்கேன்.. நீ தான் பொறுப்பேயில்லாம, லேட்டா வந்து சேர்ந்துருக்க..”
“ப்ச்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கேன்மா..” என்ற விளானி ரஜினிகாந்த்தை போன்று தலை சிலுப்பி ஸ்டைல் செய்தவாறே,
“ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.. கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா..” என்று பாட தொடங்க, வகுப்பில் சலசலப்பு வரத் தொடங்கியிருந்தது. அனைவரும் எழுந்து ஆசிரியருக்கு வணக்கம் வைக்க, தானும் எழுந்தவளின் முகத்தில் ஈயாடவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள். அதுவும் ஒரு நிமிடம் தான். அதன் பின் அவள் கண்களில் அலட்சியம் தோன்றியது. அனைவருக்கும் அமர்ந்ததும், கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த விளானி, அவனது கண்ணில் பட, இப்போது அதிர்ச்சியாவது அவனது முறையானது. சட்டென தன்னை சமாளித்துக் கொண்டவன், பாடத்தை நடத்தத் தொடங்க, தன் பேக்கில் வைத்திருந்த லாலிபாப்பை எடுத்து வாயில் வைத்திருந்தவளின் ஞாபகம் கடந்த காலத்திற்கு சென்றது.
பெங்களூரில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, விளானியின் நெருங்கிய தோழியின் அண்ணனாக அறிமுகமானான் ஆகாஷ். காலப்போக்கில் அவன் மீது அவளுக்கு ஆர்வம் வரவே, அதனை காதல் என்று எண்ணியவள், அதனை அவனிடம் கூற, அவனும் அவளை காதலிப்பதாக கூறி, அவளை தனது காதலியாக ஏற்றுக்கொண்டான். ஒருநாள் எதிர்பாராத விதமாக விளானியின் சொந்தக்காரர் மூலமாக, மலர்கொடியின் வாழ்க்கையைப் பற்றி ஆகாஷ் அறிய நேர்ந்தது. விளானி அர்ஜுனிற்கு பிறந்த மகள் இல்லையென்றும், அவளை திருமணம் செய்து கொண்டால், அவனுக்கு சொத்து கிடைக்காதென்றும் அறிந்தவன், திடீரென ஒருநாள் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல், அவளே வாழ்க்கையில் இருந்து மறைந்து போனான். அவளை தேடி அலைந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனது ஃபோன் எண்ணின் மூலமாகவோ, வலைத்தளத்தின் மூலமாகவோ, அவனை தொடர்பு கொள்ள முயன்று, தோற்றவள், அவனது வீடு தேடி செல்ல, வாயிற் காவலர், அவளை உள்ளேயே விடவில்லை. மகளின் மனக்காயங்களை உணர்ந்த அர்ஜுன், மெல்ல அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தான். அவளை பழைய விளானியாக அவன் பட்டபாடு, ஒரு தந்தையாக அவன் மட்டுமே அறிவான். ஹாசினியையும் விளானியையும் தன் மகளாகத் தான் பார்க்கிறான். என்றுமே அர்ஜுன் அவர்களை தன்னிடம் இருந்து, பிரித்து பார்த்ததில்லை. அர்ஜுன் அளித்த தைரியத்தினால், ஒரு நொடி தயங்கியவளின் மனம், அடுத்த நிமிடமே அவனை ஏளானமாக திமிராக பார்க்கத் தொடங்கியது. அதன் காரணமாக அவனை தான் அறியாதது போல் காட்டிக் கொண்டாள் விளானி.
“அர்ச்சு..”
“ம்ம்ம்..”
“க்ளாஸ்.. ரொம்ப போர் அடிக்குதுல?”
“என்னது.. இவர் க்ளாஸ் உனக்கு போர் அடிக்குதா? என்னைய விட்டா நாள் பூரா பார்த்துட்டே இருப்பேன்..”
“நீ வேணா பார்த்துட்டே இரு.. நான் கிளம்புறேன்..”
“ஹேய் எங்க போற? எப்படி போவ?”
“இப்படி தான்..” என்ன விளானி, மேஜையின் மீது ஏறி நின்று கொண்டு,
“அய்யோ.. பாம்பு.. பாம்பு.. பாம்பு..” என்று கத்த,
“என்னது பாம்பா?” என்ற அர்ச்சனாவும் அவளோடு சேர்ந்து எறி நிற்க, இருவரையும் கண்ட மொத்த வகுப்பும் மேஜையில் ஏறி நின்று,
“எங்க பாம்பு? எங்க பாம்பு?” என்றவாறே மேஜையின் அடியில் பாம்பினை தேட,
“இங்க தான்.. இப்ப தான்.. இவ்வளோ பெரிய பாம்பு.. சரசரன்னு போச்சு.. ம்ஹும்.. நான் இங்க இருக்கமாட்டேன்பா.. எனக்கு பயமாயிருக்கு.. நான் வெளியே போறேன்..” என்ற விளானி மேஜையில் இருந்து குதித்து இறங்கி, வேகமாக வெளியே ஓடி விட, அவளைத் தொடர்ந்து அனைவரும் வெளியே ஓடி வரவே, வகுப்பறைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் மூலமாக விளானி கூறியது பொய்யென்று கண்டு பிடித்த கல்லூரி முதல்வர், அவளை அழைத்து,
“வந்து ஒரு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள உன்னோட வால் தனத்தை காட்டிட்ட.. நாளைக்கு வரும் போது உன்னோட ஹஸ்பெண்ட்டோட தான் வரணும்.. அதுவரைக்கும் நீ க்ளாஸ்கு போகக்கூடாது..” என்று கூற, அதே அறையில் அமர்ந்திருந்த ஆகாஷின் கண்களோ, அதிர்ச்சியில் விரிந்தன. கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை போல் தலையாட்டிய விளானி, அவ்வறையை விட்டு வெளியே வந்ததும் தன் பையில் இருந்து லாலி பாப்பை எடுத்து வாயில் வைத்தவாறே சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தாள். எந்த ஒரு பொருளும் நமக்கு சொந்தமில்லை என்று வரும்போது தான் அதனுடைய மதிப்பும் மரியாதையும் புரியும். விளானி தன்னை சுற்றி வரும் போது, அவளை விட்டு பிரிவது அவனுக்கு எளிதாக இருந்தது. ஆனால், இப்போது அவள் தனக்கு சொந்தமாக வாய்ப்பில்லை எனும் போது, அவளை சுற்றியே அவனது கண்கள் வட்டமடித்தன. அவனது பார்வையை உணர்ந்தும் சிறிதும் மதிக்காது அங்கிருந்து அவள் செல்ல, அவளை பின்தொடர்ந்து சென்றான் ஆகாஷ். கல்லூரி வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த விளானியின் கையைப் பிடித்து தடுத்த ஆகாஷ்,
“உனக்கு கல்யாணமாகிடுச்சா?” என்று கேட்க, அவனது கையை உதறியவள்,
“மேம்.. சொன்னது காதுல விழுகலையா? விழுகலைன்னா திரும்ப அவங்கக்கிட்டயே போய் கேட்குறது தானே?” என்று அலட்சியமாக பதிலளித்தவள், மேலே நகர முயற்சிக்க, அவளது வழியை மறித்தவாறு நின்று கொண்டவன்,
“உனக்கு மேரேஜ் பண்ணணும்னு சொல்லும் போது, என் ஞாபகம் கொஞ்சம் கூட வரலையா?” என்று கேட்க,
“எதுக்கு வரணும்? சொல்லாம கொள்ளாம ஓடுனவங்க ஞாபகம் எப்படி வரும்?” என்றவள் அவனது கையில் இருந்து தன் கையை விலக்கிக் கொள்ள முயற்சிக்க,
“என் மனசுல இன்னமும் நீ தான் இருக்க.. என்னால உன்னைய மறக்க முடியல..” என்றவனின் கையை உதறியவள்,
“ஆக்டிங் ரொம்ப நல்லாருக்கு.. உங்க டேலண்ட்டுக்கு சினிமால நடிச்சா.. நூறு நாள் ஓடும்.. உங்களுக்கு ப்ரைட் ஃபியூச்சர் இருக்கு..” என்று முன்னேறி செல்ல, அவளை மீண்டும் வழிமறித்தான் ஆகாஷ். இம்முறை அவனை பொறுமையின்றி பார்த்தாள் விளானி.
“இங்கப்பாருங்க சார்.. என்னோட ஹஸ்பெண்ட் வந்தாருன்னா, இப்படி நின்று பேசிட்டுருக்க மாட்டாரு.. அவர் ரொம்ப கோபக்காரர்..” என்று விளானி கூறியதும்,
“ஆமா.. ரொம்ப கோபக்காரர்..” என்றபடியே அவளை நோக்கி வந்தான் ஹர்ஷவர்தன். அவனை பார்த்ததும் விளானியின் கண்கள் மின்ன, இதனை கண்ட ஆகாஷிற்கு வயிறு எரிந்தது. அவர்களை நோக்கி வந்த ஹர்ஷவர்தன்,
விளானியின் தோளில் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, அவர்களை பொறாமையுடன் பார்த்திருந்தான் ஆகாஷ். காரில் ஏறியதும், ஹர்ஷவர்தனை பார்த்து,
“எங்க பிரின்சிக்கு உன்னைய ரொம்ப பிடிச்சுருக்காம்.. அதனால நாளைக்கு காலைல உன்னைய காலேஜ்கு வந்து, அவங்களை பார்க்க சொன்னாங்க..” என்றவளின் முகத்தை தன் புறம் திருப்பியவன்,
“என்ன பண்ண?” என்று கேட்க,
“நான் ஒன்னுமே பண்ணலப்பா.. நான் ரொம்ப நல்லப்புள்ள..” என்று முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு கூறியவளை, சந்தேகமாக பார்த்தவன்,
“நான் நம்பமாட்டேன்.. நீ இவ்வளவு பவ்யமா இருக்கேனா.. கண்டிப்பா ஏதாவது பெருசா பண்ணிருப்ப.. நான் வாரமாட்டேன்பா.. உன் போதைக்கு நான் ஊறுகாயா?” என்றவனின் முன்னே, காலையில் அப்பெண்மணி கொடுத்த விசிட்டிங் கார்டை ஆட்டியவள்,
“வாயும் வயிறுமா இருக்குற பொண்ணை காலேஜ் அனுப்பாம, வீட்டு வேலை செய்ய வைச்சு கொடுமை படுத்துற.. இந்த குழந்தை என்னது இல்லன்னு.. துண்டு போட்டு தாண்டுறன்னு.. ஊரை கூட்டி சொல்லுவேன்..” என்ற மறுநிமிடம், அவளது கையை பின்னால் மடக்கி, அவளை தன் நெஞ்சோடு இறுக்கியவன், அவளது உதடோடு உதடு உரச,
“பொதுவா.. எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.. இப்படியே வெறுப்பேத்துன? நிஜமாவே என் புள்ளையை சுமக்குற மாதிரி பண்ணிடுவேன்.. அப்புறம் அந்த குழந்தை என்னது தான்னு.. ஊர்பூரா தம்பட்டம் அடிச்சு.. போஸ்டர் ஒட்டி சொல்லுவேன்..” என்று கூற, உயிர் இருந்தும் அசையாத சிலையாய் அமர்ந்திருந்தாள் விளானி. அவளது மனம் படபடவென ஏனோ அடித்துக் கொண்டது.. அவன் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கை, அவனது தொடுகையால் குறுகுறுத்தது. அவனது உதடு தனது உதட்டை வரும் போது, அவனது நாசியில் இருந்து வந்த பாக்கும் புதினாவும் கலந்த வாசனை, அவளது உதட்டில் உறைந்து போயிருப்பதை போல் உணர்ந்தாள். இயல்பாகவே சிவந்திருக்கும் இதழை மேலும் கடித்து கொண்டவளை பார்த்தவன், மனதுக்குள் சிரித்தவாறே, அவளது இதழை வருடி, அவளது வெண்பற்களில் இருந்து அதற்கு விடுதலை அளித்தான்.
“அதை ஏன் போட்டு இந்த பாடு படுத்துற? அதுக்கு வாய் இருந்தா அழுதுடும்.. கொஞ்சமாவது அதுக்கு ரெஸ்ட் கொடு..” என்றவாறே காரை எடுக்க,
“நீ முதல்ல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு.. என்னைய பார்த்துட்டே ஓட்டி, வண்டியை கொண்டு போயி, ஏதாவது பள்ளத்துல பார்க் பண்ணிடாத..” என்றவள் கூற,
“இந்த வாய் மட்டும் இல்லன்னா.. உன்னைய நாய் தூக்கிட்டு போயிடும்..” என்றவன் திருப்பி அவளுக்கு பதிலளிக்க,
“அதான் நீ தூக்கிட்டு வந்துட்டியே.. எங்க ஊர்ல சும்மாவா சொன்னாங்க.. குரங்கு கைல பூமாலைன்னு.. போயும் போயும் உன்கிட்ட போய்.. என்னைய தூக்கி கொடுத்துட்டாங்க பாரு.. அவங்களை சொல்லணும்..” என்றவளை முறைத்தவன்,
“ஏது நீ பூமாலை.. நான் குரங்கா.. நீ தலைகீழ நின்றாலும் நாளைக்கு நான் உன்கூட காலேஜ்கு வரமாட்டேன்.. நீ என்ன பண்ணுவியோ? பண்ணிக்கோ..”என்று கூறி, பாதையில் கவனம் வைக்க, அவனையே முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் விளானி. பாவம், நாளைக்கு நடக்க போவதை தெரிந்திருந்தால், இன்று அவளிடம் வம்பிழுந்திருக்கமாட்டானோ?
Wowwwwww veryyyyyyy niceeeeeeeee epii ❤️❤️❤️❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy
👌👌👌👌👌👌
Nice
PYXVoReALd
WTsCpSlU
Supero super sis 💞