ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 13, 14

வானவில் 13

 

 

புள்ளினங்களின் இனிய‌ இன்னிசையில் ஆரம்பமானது அழகிய விடியல்..

அதற்கு ஏற்றாற் போல் ஆநிரைகளும் தங்கள் கழுத்து மணி ஓசையிலும்.. அம்மாமா.. என்ற விளிப்பிலும் சுருதி சேர்த்தது!!

 

அவற்றை அனுபவித்தபடி மெல்ல துயில் கலைந்து எழுந்தான் விநாயக்!! நேற்று இரவு தன்னவளை சீண்டி தீண்டி சில்மிஷம் பண்ணிய அந்த குறும்பு சிரிப்பு இன்னும் அவன் முகத்தில் மிஞ்சியிருக்க.. அத்துணை நிம்மதி அவன் வதனத்திலும் மனதிலும்!!

 

அவன் நினைவும் முழுவதும் ஒரு மாதத்துக்குப் பின் நோக்கி சென்றது.

 

“நீ அந்த பெண்ணை காதலிக்கிறாயா புத்ர??” என்று தந்தையின் ஆழ்ந்த கேள்வி அவனுள் இருந்த பல முடிச்சுகளை விடுவித்து.. தளைகளைத் தடைத்தெறிந்து.. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றும் புள்ளி நட்சத்திரங்களாக மின்னிய அனைத்தும் ஒன்று சேர்ந்து முழு நிலவாக காட்சியளிக்க.. அதில் மிளிர்ந்தாள் வர்ணா!!

 

“ஆம்!! ஆமா.. அவளை நான் காதலிக்கிறேன்!! என் காதல் அவள் தான்!!” என்று காதலை உணர்ந்த தருணம்!!

 

அவளை ஆட்டிவைக்க என்று இவன் அவளை தூக்கி வந்தால்.. அந்த சேட்டைக்காரி தான் இவனை ஆட்டி வைத்திருந்தாள் தன் அழகாலும்..சேட்டையாலும்.. ஸ்பரிசத்தாலும்!! அவன் மனதை கொள்ளை கொண்டிருந்த கொள்ளைக்காரி!!

 

தன்னை தவறுதலாக புனைந்து எழுதியவளை தவறுதலாக சித்தரிப்பதற்காக இங்கே அழைத்து வந்திருந்தவன் அவனை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக.. 

அவளது நெருக்கத்திலும்..

தேக ஸ்பரிசத்திலும்..

பெண்மை வாசத்திலும்..

தன்னை தொலைத்து அவளை நிறைத்துக் கொண்டிருந்தான் உணர்விலும் உள்ளத்திலும்!!

 

அன்னையிடம் செய்துகொண்டிருந்த சத்தியத்தை மீறக் கூடாது என்று எவ்வளவோ கட்டுப்படுத்தியும் சில நேரங்களில் அவளின் அருகாமை அவனுக்கு ஏக்கத்தையும் தாக்கத்தையும் தாபத்தையும் ஏற்படுத்தியது!!

 

அவள் மீது உண்டான உணர்விற்கு பெயர் சூட்ட அவன் விரும்பவில்லை அவளையே தன்னுள் சூட்டிக் கொள்ள விரும்பினான்!!

 

அவள் தான் வேண்டும்!!

அவள் மட்டுமே வேண்டும் என்று இதயத்தின் சிறு முழுதாய் ஆரம்பித்த ஓசை மெல்ல மெல்ல புயல் காற்றில் ஓங்கார ஓசையாக மாறி அவன் மனதை ஆட்டுவித்தது!!

 

முதல் முறை அவளை முத்தமிட்ட போதே அவளை விட்டு பிரிய முடியவில்லை விநாயக்கால்.. அவளிடம் மட்டும் பெருகும் அந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று தடுமாறினான்!! அதற்காக பெண்கள் இல்லாத தேசத்தில் இருந்து வந்தவன் இல்லையே?? தொழில்முறை பார்ட்டிகள் விசேஷங்கள் விழாக்கள் என்று பல பெண்களுடன் கலந்து சிறு சிறு தொடுதலுடன் கூடிய பேச்சும்.. அவ்வப்போது சிறு அணைப்பும் சகஜமே!! அப்பொதெல்லாம் எழாத தாபமும்.. மோகமும்.. இவளிடம் கரைபுரண்டு ஓடி வர காரணம் என்ன என்று தனக்குள் ஆராய்ந்தவனுக்கு.. தந்தை சொன்ன அந்த காதல்!!

ஆம்!! காதல் தான்!! 

 

காதலில் மட்டுமே இது சாத்தியம்!! காதல் கொண்ட பெண்ணால் மட்டும்தான் தன் உணர்வுகளை தட்டி எழுப்ப முடியும்!! மெல்ல மெல்ல பல முடிச்சுகள் அவிழ்ந்து அவள்தான்.. அவள் தான் என்னவள்!! என்று புரிய மனம் விகசிக்க.. இதழ்கள் விரித்து புன்னகை செய்து கொண்டவன் வெட்கப் புன்னகையோடு அன்னை தந்தையை பார்த்துவிட்டு அவள் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

பார்வையாலேயே தன் மகனின் மாற்றத்தை காண்பித்தார் சாருமதி கணவனிடம்!!

 

அவ்வறையின் மெத்தை குளியலறை அவள் பயன்படுத்திய பொருட்கள் என்று ஒவ்வொரு இடமாக அவளது வாசத்தை தேடித்தேடி முகர்ந்து அதை தன் சுவாசத்துக்குள் கலந்து கண்களை மூடி சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

மீண்டும் ஹாலுக்கு வந்தவனிடம் அன்னை பேசவே இல்லை அமைதியாக பார்த்தவாறு அமர்ந்து இருந்தார். தந்தை தான் அவனிடம் பேசினர் “என்ன புத்ர.. அது காதல் தானே?? உணர்ந்து கொண்டாய் தானே??” என்று கேட்க மொத்த மகிழ்ச்சியும் முகத்தில் காட்டி மத்தாப்பு சிரிப்போடு ஆம் என்று தலையசைத்தான்!!

 

ஆனால் உன் காதலின் ஆழத்தை பார்க்க வேண்டுமே என்று கேட்க இவன் புரியாமல் விழிக்க அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டார்.

 

“காரண காரியங்களைத் தெரிந்து வருவது காதல் அல்ல!!” என்று பதிலில் ஒரு மெச்சுதல் பார்வை சாருமதியிடம்!! 

 

ஆனால் அது மட்டுமே போதாதே?? அவனது காதலின் வலிமையையும் தெரிந்து கொள்ள வேண்டுமே!!

 

அவளோ அம்மா போல இந்த நாட்டை சேர்ந்தவள் அல்ல அவளோடு நீ வாழும் போது ஒவ்வொரு விஷயத்திலும் நீ மாற வேண்டி இருக்கும் அல்லது அவளை மாற்ற உன்னை அறியாமலேயே நீ முயல் வாய் சில பேருக்கு அந்த மாற்றங்கள் முதலில் இருந்தாலும் காலம் செல்ல செல்ல அந்த மாற்றமே ஒருவித கசப்பை கொடுக்கும்.. 

 

“இல்லப்பா.. காதல் எல்லா கசப்பையும் போக்கும்!!” என்றான் அவசரத்தோடு விநாயக்.

 

“அப்படி இருந்தால் சந்தோஷம் தான்!!” என்று கணவன் முகத்தை பார்த்தே பதிலளித்தார் சாருமதி. அம்மாவின் இந்த தவிர்ப்பு அவனுக்கு தவிப்பாக இருந்தது. எதையும் இப்பொழுது பேச முடியாமல் அமைதியாகவே இருந்தான்.

 

“சரி புத்ர.. கடந்த ஒரு வாரமாக அந்த பொண்ணோடு இருந்திருக்கிறாய்.. இது ஏன் ஒரு இன்ஃபாக்ஸூவேஷனா இருக்க கூடாது?” என்று கேட்டார் விஜய்.

 

“இல்லை.. அப்படியெல்லாம் இல்லை!!” என்று தட்டுத்தடுமாறினான் அவன்.

 

“அப்போ நிரூபித்துக் காட்டு!!” என்றார் விஜய். 

 

“எப்படி?? சொல்லுங்க எப்படி??” என்று அத்தனை அவசரம் தன் காதலை புரிய வைத்துவிட வேண்டுமென்று!!

 

“கண்ணிலிருந்து மறைந்தால் கருத்திலிருந்து மறையும் என்று சொல்வார்களே.. அது போல.. கொஞ்ச நாள் நீ சிங்கப்பூருக்கு சென்று இருந்துவிட்டு வா.. அதுக்கப்புறமும் அவள்தான் உன்னவள் என்று உனக்குள் திடமாக இருந்தால் நாம மேற்கொண்டு பார்க்கலாம்” என்றார்.

 

“எவ்வளவு நாள்? எவ்வளவு நாள் இருக்கனும்?” என்று அதே அவசரத்தோடு மகன்.

 

அவசரம்!! இந்த அவசரம் தான் சாருமதியை வேதனை கொள்ளச் செய்தது. இந்த கால பிள்ளைகள் காதலில் விழுவது அவசரம் என்றால்.. அதைவிட பிரிவது இன்னும் அவசரமாக செயல்படுத்துகிறார்கள். கொஞ்சமும் புரிந்துகொள்ள தன்மையும் சகிப்புத்தன்மையும் இல்லவே இல்லை!! தான் என்ற ஈகோ இருவருக்கிடையே நல்ல பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுகிறது. ஒரு கட்டத்தில் அது விஷத்தை கக்கும் போது இந்த காதல் அங்கே காணாமல் போகிறது!! மகனின் காதலின் ஆழத்தையும் வலிமையையும் தெரிந்து கொள்ள விரும்பியே.. கணவனை விட்டு பேச செய்து அவனை நாடு கடத்தினார்!!

 

“சரி!!” என்றவன் அன்றிரவே அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தான்.

 

ஒரு மாதம்.. வேலை நேரத்தில் வெள்ளைகாரனாக இருந்தாலும்.. மற்ற நேரங்களில் 

ஏதோவொரு அசௌகரியமான சௌகரியம்!!

இப்போதே தணிக்க வேண்டுமென்ற தாகம்!! அவனுள் தோன்றி அவனை இம்சித்துக் கொண்டிருந்தது. தனிமையில் அவளது நினைவுகளோடு வாழ்ந்து விடலாம் என்று நினைத்து வந்தவனுக்கு தனிமையே கொடுமையானது!!

 

இத்தனை ஆண்டுகளில் இல்லாத ஒரு வெறுமையை உணர்ந்தான் இந்த தனிமையில்!!

தனிமையில் எங்கிருந்து இனிமை காண முடியும்??

தன்னவளோடு தனித்திருக்கும் நேரத்தில் அல்லவா முடியும்!!

 

வெறுமையாக ஓடிய ஒரு மாதத்தை விரட்டி விட்டு வந்தவனுக்கு அடுத்த டாஸ்க் வைத்துக்கொண்டு காத்திருந்தார் சாருமதி!! அதுவும் கணவனின் வாயிலாக.. 

 

அப்படி என்னவாக இருக்கும்??

 

அன்று காலை அவனுக்கு காபி கொண்டு கொடுக்க சொல்லி மேனகா கொடுக்க அன்னை அறியாமல் காபியில் ஒரு ஸ்பூன் குழம்பு தூளை கலந்து மிக பவ்யமாக எடுத்துக்கொண்டு விநாயக்கிடம் கொடுத்தாள்.

 

காலையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தவன் கண் முன்னே காபியோடு தரிசனம் தேவதை தரிசனம்!!

 

“ஆஹா.. என்ன ஒரு தரிசனம்!!” என்று சிரிப்போடவே காபியை கையில் எடுத்தவன், அதை பருகாமல் கண்களால் அவளைப் பருகிக் கொண்டிருந்தான்.

 

‘குடித்து தொலைடா அதுக்கப்புறம் இருக்கு உனக்கு?’ என்று மனதில் நினைத்ததை முகத்தில் காட்டாமல் அமைதியாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

அவள் முறைப்பை ரசித்தபடி சட்டென்று காபியை ஒரு உறி உறிஞ்சி இழுத்தான்‌. அவ்வளவுதான் காரம் சுள்ளென்று மூளையைத் தாக்க.. உள்ளே சென்ற காபியோ அவன் வயிற்றை தாக்க.. “அடியே.. இராட்சசி!!” என்று கூறியபடியே அவளை பார்த்து கத்தினான் காரத்தில்!!

 

அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!!

“அப்பவே சொன்னேன்ல ஓடிப் போய்டுங்கனு.. இனி ஒவ்வொரு நாளும் இம்மாதிரி ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தான் உங்களுக்கு நடக்கும்!!” என்றாள் வர்ணா!!

 

“ஏய்.. உன்னை…” என்று கையை உயர்த்தியவனின் ருத்ரம் கண்டு 

அஞ்சின அவளது அஞ்சன விழிகள்.

 

கடும் கோபத்தில் தன் எதிரே நிற்பவனை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள் வர்ணா.

 

வலது கையை விசிறி போல வாயின் அருகே வீசிக்கொண்டு இடதுகையால் அவளைப் பற்றி இழுத்து தன் அருகே நிறுத்திக் கொண்டான்.

 

‘அடப்பாவி!! அடப்பாவி!! என்ன செய்கிறான்? கதவு வேற திறந்து இருக்கிறதே? இப்படி இடையோடு இறுக்கி பிடித்து நிற்கிறானே?? யாராவது பார்த்தால் அவ்வளவு தான்!!’ என்று சிறுத்தையிடம் சிக்கிய சிறு மானை போல பயத்தில் தவித்தாள்.

 

“ஏய் எரியுது டி.. எரியுது டி!” என்று மீண்டும் மீண்டும் அவன் கத்திக் கொண்டிருக்க அவனின் இறுகிய பிடி இன்னும் இறுகி கொண்டிருந்தது.

 

“கத்தி தொலையாதிங்க.. இப்படி இரண்டு பேரையும்.. யாராவது பார்த்து.. அதுலயும் நீங்க கத்துவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க??” என்று பதறினாள். 

 

“அய்ய்யோ.. எரியுதே.. எரியுதே!!” என்று மீண்டும் கத்தினான் விநாயக் வேண்டுமென்றே.

 

சட்டென்று தன் இதழ்களை குவித்து உஃப் உஃப் என்று அவன் வாய் அருகே அவள் ஊத.. சட்டென்று குளிர்ந்த அவளது ஊதலில் உயிர் உருக நின்றான்.

 

“சரியாகிடுச்சா.. இல்ல இன்னும் எரியுதா?” என்று தவறு செய்த பிள்ளை மன்னிப்பு கேட்பது போல் விழி உயர்த்தி பரிதவிப்போடு அவள் கேட்க..

 

எங்கே ஆம் என்று சொன்னால் பிரிந்து சென்று விடுவாளோ என்று பயந்து இல்லை என்று வேகவேகமாக தலையாட்டியவன் மீண்டும் ஆஸ் ஊஸ் என்றான்.

 

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சத்தம் போடாதிங்க!!” என்று இவள் கெஞ்ச..

 

“எரியுது டி.. ராட்சசி!!” என்றவன் அவள் இதழ்களை தன் இதழ்களால் உரசி உரசி செல்ல.. ஒரு மாதத்திற்குப் பின்னான அவளின் ஸ்பரிசம் கொடுத்த நெருக்கத்திலும் அதன் கிறக்கத்திலும் தன்னை தொலைத்தான் ஆணவன். சட்டென்று அவனிடமிருந்து திமிறி விடுப்பட்டவள்..

 

“ஏய்.. என்ன செய்றிங்க? இது என்ன உங்க ஊருனு நினைச்சிங்களா? நீங்க என்ன செஞ்சாலும் கேட்க ஆள் இல்லாம போறதுக்கு? இது தேனி!! அதுவும் நீங்க இருக்கிறது யார் வீட்டுல தெரியுமா? பாண்டி பிரதர்ஸ் வீட்டில.. எனக்கிட்ட நீங்க இப்படி நடக்குறது என் அண்ணன்களுக்கு தெரிஞ்சது? அவ்வளவுதான் வெட்டி போட்டுடுவாங்க.. அவங்க காதலுக்கு தான் காவல்காரவுக!! இந்த மாதிரி கண்ட கருமத்துக்கு எல்லாம் இல்லை!!” என்று அனலாய் அவள் தகித்தாள்.

 

அவள் அனல் பேச்சுக்கும் அதற்கு மாறாக கண்களில் கண்ட தவிப்புக்கும் காரணம் புரியாமல் முதலில் குழம்பியவன் அதன்பின் புரிந்து கொண்டவன் உதட்டிலோ குறும்பு புன்னகை!!

 

இதழோரத்தில் மீசைக்கு அடியில் தவழும் குறும்பு புன்னகையோடு அவளை நெருங்க.. இவளோ அவன் நெருக்கத்தை தவிர்க்க பின்னடைய..

சட்டென்று அவளது கையை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி தன் அருகே இழுத்தன் மீண்டும் இடையோடு இளைப்பாற விட்டான் கைகளை..

 

“என் மச்சானுங்களை எனக்கு யாருன்னு தெரிய வைக்கிறது இருக்கட்டும்! மொதல்ல உனக்கு தெரியுமா நான் யாருன்னு?” என்றவள் துரு துருவென அலைபாய்ந்த விழிகளை பார்த்து இவன் கேட்க..

 

அவனின் நெருக்கத்திலும்.. அவன் பேச்சு கொடுத்த உறுதியிலும்.. என்ன தெரியும் இவனுக்கு என்று உள்ளே அவளின் தடுமாற்றத்தின் காரண காரியங்களை கண்டு விதிர்விதிர்த்து போய் அவனிடம் இருந்து விடுபடவே முயன்றாள்.

 

மனதில் எழுந்த படபடப்பை அடக்கியபடி “எதுவும் எனக்கு தெரிய வேண்டாம்! முதலில் என்னை விடுங்க!!” என்று அவனை தவிர்க்க பார்த்தவளின் பார்வைகளை கவ்விக்கொண்டது விநாயக்கின் ஆழ்ந்த பார்வை!!

 

“அப்படியெல்லாம் விட முடியாது மெனிக்கா..” என்று குழைந்து வந்தது அவனது வார்த்தைகள்..

 

“தெரியலைனா என்ன? இப்போ தெரிஞ்சுக்கோ!! இல்லன்னா தெரிய வைப்பான் இந்த விநாயக்!!” என்றவனின் இதழ்கள் நொடி நேரம் கூட தாமதிக்காமல் அவளது இதழ்களில் கவிபாடியது. கவிஞனாய்.. ரசிகனாய்.. வித்தகனாய்.. காதலனாய்!!

 

அவன் மனதின் ஒட்டுமொத்த காதலையும் ஒற்றை முத்தத்தில் மொத்தமாக காட்டிக் கொண்டிருந்தான். அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களையும் அந்த ஒற்றை முத்தத்தால் தட்டி எழுப்பிக் கொண்டிருந்த அந்த உணர்வுகளை கண்டு விதிர்விதிர்த்து போனாள் வர்ணா!!

 

அவள் முகத்தை திருப்பிக் கொள்ள முயல.. அவளது ஈர உதடுகளை இம்முறை அழுந்த கவ்விக் கொண்டன அவனது இதழ்கள்!!

 

அவளால் சுத்தமாக முனகக் கூட முடியவில்லை. அவள் உடல் துவண்டு விட்டது. கண்களை இறுக மூடிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

 

சித்தம் கலங்க..

ஒரு முத்தம்!!

ஒற்றே ஒரு முத்தம்!!

போதுமா என்ன??

 

ம்ஹீம்.. போதாதே!!

 

“மெனிக்கா!?” என்று மென்மையிலும் மென்மையாக அழைக்க..

 

மையிட்ட விழிகள் சிறகென விரிய.. அதில் விரும்பி சிறைப்பட்டான் கோமகன்!!

 

அது சிறகுகள் அல்ல சிலந்தி வலை.. அதினுள் விழுந்து எழ முடியாமல் 

மூழ்க ஆரம்பித்தான் அவன்!!

 

தன்னை விட்டு விலகி விடுவாளோ இல்லையா என்ற பரிதவிப்பு அனைத்தையும் முடித்து வைத்தான் அவள் இதழ் அணைப்பில்!!

 

இந்த நெருக்கமும்..

அவன் ஸ்பரிசமும்..

அது கொடுத்த கிறக்கமும்.. தாங்கமுடியாமல் தன்னிலை இழந்து துவண்டு விழப்போனவளை பின்பக்கமாக இரு கைகள் கொடுத்து இன்னும் இறுக்கி கொண்டவன், இதழ்களை மெல்ல மெல்ல பிரித்து அவள் நெற்றியில் இப்போது அழுத்தமாக ஒற்றி எடுத்தான்.

 

“மெனிக்கா..” என்றவனை அவள் விழிகள் கேள்வியாய் பார்க்க..

 

“கண்ணம்மா..!!” என்றான் காதல் கசிந்துருக!!

 

அவன் வார்த்தைகளில் குழைந்த காதல் அவன் கண்களிலும் வழிந்தது!!

 

“இப்படியே உன்னை நித்தமும் வைத்துக்கொள்ள தான் ஆசையடி பெண்ணே!!” என்று கவிபாடினான் காவியத் தலைவனாக!!

 

“என்னது?? என்னை வைச்சிக்க போறிங்களா?? எடு அந்த வீச்ச அருவாள?” தான் ஒரு யூனிக் பீஸ் என்று அவள் நிருபிக்க..

 

“அடியேய்.. கொஞ்சம் கவித்துவமாக என் காதலை சொல்ல விடுறியாடி ராட்சசி!! ராட்சசி!! ஒரு மாசமா என் மனசு தவிக்கிற தவிப்பு தெரியுமாடி? துடிக்கிற துடிப்பை தெரியுமா?! எல்லாம் மெனிகா.. மெனிகா..” அவள் புரியாமல் பார்க்க நெற்றியோடு நெற்றி முட்டியவன் “நீதானடி வர்ணா.. வர்ணா.. என்று தான் வர்ண ஜாலங்களையும் காட்டுது என் இதயம்!! எப்போ முளைத்தது இந்த காதல்? என்னுள் எப்பொழுது வேர்விட்டு பரவியது? எதுவுமே தெரியல!! ஆனால் நீ பிரிந்த போது அதை இன்னும் நன்றாகவே உணர்ந்தேன்!!

என் காதலை.. மட்டுமல்ல.. உன் காதலையும் தான்!!” என்று அவள் விழிகளோடு விழிகள் கலந்து கூறியவனின் கடைசி வார்த்தைகளை கேட்டவள் ஒரு தள்ளாக அவனைத் தள்ளி..

 

“நோ.. நோ.. என்னது என் காதலா?? உங்களுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சா என்ன? என்னை கடத்திட்டு போய் பத்து நாள் அடச்சு வைத்திருந்திங்க.. இல்லாத அத்தனை கொடுமை பண்ணி இருக்கிங்க.. இதுல உங்க மேல் எனக்கு காதல்?? உங்களுக்கே கொஞ்சம் காமெடியா தெரியல?” என்றவள்.. இங்க பாருங்க எங்க அண்ணன்கள் எல்லாம் காதலுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்தாலும் பார்ப்பானுங்க.. இப்படி களவாணித்தனம் பண்ணா கழுமரத்தில் ஏற்றிடுவானுங்க..

நேத்தே அந்த பஞ்சாயத்துக்கு தான் போய்டு வந்தாக.. ஒழுங்கா ஊர பாக்க ஓடிப் போயிடுங்க!!” என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் ஓடியே சென்றாள்.

 

“எப்படி.. எப்படி.. எல்லாமோ ப்ரொபோஸ் பண்ணலாம்னு நான் நினைத்திருந்தேன்.. என்னை போய் இப்படி பண்ண வச்சுட்டாளே!! சரியான ராட்சசி தான்டி நீனு!! ஆனால் இந்த ராட்சசிக்கு ஏத்த ராட்சசன் நான் தான் வர்ணா!! உன்னை என் காதலை ஏத்துக்க வைக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு!! என் மச்சானுங்களை வச்சே உன்னை என் வழி வர வைக்கிறேன்னா இல்லையான்னு மட்டும் பாரு டி!!” என்று தன் மீசைய முறுக்கியவன் குளிக்க சென்றான்.

 

குளித்து வந்தவன் தன் பெட்டியிலிருந்து வேஷ்டி ஒன்று எடுத்தான். இந்த ஊருக்கு வரும்பொழுது ஒரு டஜன் வேஷ்டியையும் வாங்கி கொண்டு வந்து விட்டான். ஆழ்ந்த நீல நிறத்தில் சட்டையும் வேட்டியும் அணிந்து மேலே ஒற்றை பட்டன் கழட்டி விட்டு சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு மாடியிலிருந்து இறங்கியவனை தான் ஆவென்று வாயை திறந்து பார்த்தாள்.. தாத்தாவிற்கு காலையில் நியூஸ் பேப்பர் வாசித்து காட்டிக்கொண்டிருந்த வர்ணா..

 

“என்ன ராசாத்தி பாதியில நிப்பாட்டிட்ட..” என்று வல்லபர் கேட்க “அது ஒன்னும் இல்ல தாத்தா..” என்று அவர் அருகில் இருந்து எழுந்தவள் நகர்ந்து கொள்ள.. அருகில் இருந்த நரசிம்மர் விநாயக்கை பார்த்தவுடன் தான் மரியாதை நிமித்தமாக பேத்தி எழுந்து கொள்கிறாள் என்று புரிந்து “சரி ஆத்தா.. நீ போய் உள்ள வேலையை பாரு. தம்பி கூட நாங்க பேசிகிட்டு இருக்கோம்” என்று அனுப்பி வைத்தார்.

 

அவனை வேட்டி சட்டையில் பார்த்தவுடன் ஒருவித மரியாதை வந்து அமர்ந்து கொண்டது நரசிம்மர் முகத்தில். இதையெல்லாம் எதிர்ப்பார்க்காமலா இப்படி வந்து கெட்டப்பை சேஞ்ச் பண்ணிட்டு இருப்பான்.

 

மரியாதை நிமித்தம் இரண்டு தாத்தாக்களுடன் அவன் உரையாடிக் கொண்டு இருந்தாலும் கண்கள் என்னமோ துலாவி அவளை தான் தேடிக் கொண்டிருந்தது.

 

“யாரை தம்பி தேடுறீக?” என்று கேட்ட நரசிம்மரை பார்த்து ‘பெருசு ரொம்ப உசாரு!’ என்று நினைத்தவன் “ஒன்னும் இல்ல தாத்தா காலையிலிருந்து யாரையும் காணோமே!!” என்று அவன் இழுக்க..

 

“எல்லாம் விடிய காலையிலேயே வயலுக்கு போயிடுவானுக.. இந்நேரம் வந்து குளிச்சு சாப்பிட்டு அவங்கவங்க தொழில் பார்க்க போய்விடுவானுக!” என்று வல்லபர் விளக்க..

 

“ஓ!! அப்ப நான் என் ரூம்ல வெயிட் பண்றேன் தாத்தா!” என்று எழுந்தவன், சட்டென்று நின்று “இல்லை.. வீட்டை சுத்தி நிறைய மரம் இருக்கே.. அதை கொஞ்சம் பார்த்துட்டு இருக்கேன்” என்று வெளியேறினான்.

 

அப்போதுதான் அவனது வெடக் கோழி மரங்கள் பக்கம் போவதை பார்த்திருந்தான் ஜன்னல் வழியே…

 

காலையில் நடந்த நிகழ்வுகளை எண்ணியபடியே அவள் மெல்ல தாவணியை விரல்களில் சுற்றுவதும் கழட்டுவதுமாய் மெதுவாக நடந்து கொண்டிருக்க..

 

அவன் இயல்பாக நடப்பதைப் போல நடந்தவன், சட்டென அவளை அணைத்து மரத்திற்கு பின்னே இழுத்து சென்றான். அவள் அதை உணர்ந்து நகரும் முன் அவள் உதட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தான். அவன் முத்தமிட்டது ஜில்லென்று இருந்தது. அவன் உதட்டு ஈரம் அவளுக்கு நெஞ்சுக் குழி வரை இனிப்பதை போலிருந்தது.

 

“ம்ம்ம்.. நல்ல வாசணையா இருக்கடி! குளிச்சிட்டு பூ எல்லாம் வைச்சுட்டு சும்மா கமகமனு மணக்கறடி என்‌ மெனிக்கா !!”

 

”யோவ்.. என்னையா பண்ற? நானே ரொம்ப கஷ்டப்பட்டு மேக்கப் எல்லாம் பண்ணியிருக்கேன். எல்லாத்தையும் கலைச்சு விட்டறாதே.. தள்ளி போ.. யாராவது பார்த்தா அவ்வளோ தான்” என்று சுற்று முற்றும் பார்வையை ஓட்டினாள்.

 

அவளின் கழுத்தில் முகம் புதைத்து ஆழமாக வாசம் பிடித்து.. அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்து.. அவள் காது மடலில் மீசை உரச முத்தமிட்டான். அவளோ அவனது சில்மிஷத்தில் அதிர.. இவ்வளவு நேரமும் அடங்கியிருநத அவனது காதல் சட்டென மீண்டும் வெடித்துக் கிளம்பியது. அவளை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டு..

 

“ஏன் மெனிக்கா.. இந்த ஊர்ல இந்த மாதிரி ஜோடிகளை பார்த்தா உடனே பஞ்சாயத்துல நிறுத்தி கல்யாணம் பண்ணி வைச்சிருவாங்களாமே?? அப்படியா??” என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க..

 

“அங்க பாரு உங்க அண்ணனுங்கள ஒருத்தன் வரான்.. மச்சான் முன்னாடி முறையா பர்பாமென்ஸ் பண்ணி பஞ்சாயத்துக்கு ரெடி பண்ண வேண்டியது தான்!!” என்றவனை படபடக்கும் விழிகளுடன் பார்த்தாள். அவளின் செவ்விதழ்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன பயத்தில்.

 

பயத்தில் நடுங்கிய அவளது உதடுகளுக்கு ஆதரவு அளித்தான் தன் உதடுகளால்.. அவளது உதடுகளை கவ்வி உறிஞ்சினான் அழுத்தமாக ஆழமாக..

 

அதேநேரம் சர்வானந்த் அந்த மரங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.

 

“அடேய்!! கிரதகா.. உன்னை காதல் பண்ண சொன்னா.. எனக்கு காரியம் பண்ணிடுவ போலவே!! அவன் வேற இந்த பக்கமாகவே வந்துகிட்டு இருக்கானே.. அய்யோ.. அய்யோ.. ஒளிய கூட இடமில்லையே!” என்று புலம்பிய கியூபிட் அமர்ந்திருந்த கிளையின் இலைகளுக்கு பின்னே மறைந்து கொண்டது.

 

 

வானவில் வளரும்…

 

வானவில் 14

 

 

 

“உங்க அண்ணன்கள்ள ஒரு பீஸ் இந்த பக்கம் தான் வருது மெனிக்கா..” என்று சொல்லிக்கொண்டே அவளை தன் கை சிறையில் சிறைப்படுத்தினான் மரத்திற்கு பின்னே.. பொய் சொல்கிறானா என்று அவளும் லேசாக எட்டிப்பார்க்க.. அதேசமயம் சர்வானந்த் வந்து கொண்டிருந்தான் இந்த மரங்கள் உள்ள பக்கமாக..

 

 

“அச்சச்சோ சர்வாணா..” மத்தவங்களை விட இவன் கூர்மை சற்று அதிகமே அதிலும் வர்ணா விஷயம் என்றால்.. செம ஷார்ப்!! பின்னே ரிஷியின் பிள்ளை எப்படி இருப்பான்?? தங்கை மீது கொள்ளை அன்பு.. ஆனால் கண்மூடித்தனமாக இருக்காது.

 

 

அவள் பயத்தில் நடுங்க.. உதடுகள் துடிக்க.. கைகள் வெடவெடக்க.. நின்றிருந்தாள்.

 

 

இவள் காதலிக்கிறாள் என்றால் அவள் அண்ணன்கள் வர்ணா காதலிப்பவன்,

நல்லவன்.. நாணயமானவன்.. 

தங்கையை உண்மையாக காதலிக்கிறான் என்றால் தடாபுடலாக கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள் தான்!!

 

 

ஆனால்.. இவளுக்கு அந்த கருமம் புடிச்ச காதல் தான் வரவேயில்லையே.. பின் எங்கிருந்து சொல்ல?? ஆனால் இந்நிலையில் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் மனது கஷ்டப்படும். “எங்களிடம் சொல்லி இருக்கலாம் தானே ப்ரியாமா?” என்று தவறாக இவர்கள் இருவரும் இருக்கும் நிலையை புரிந்துக் கொண்டு வருத்தம் மேவிட அண்ணன்கள் கேட்டால்.. இவளுக்கு அந்த வருத்தம் வலியாய் இவள் இதயத்தை தாக்கும்.

 

 

“இந்த பக்கி வேற பத்து பக்கத்திற்கு நான் உங்க தங்ககையை லவ் செய்கிறேன் என்று பக்கம் பக்கமாக பேசும்” விருப்பமே இல்லாத  வாழ்க்கையில் நுழைய அவளுக்கு விருப்பமே இல்லை!!

 

 

அதிலும் இவள் என்ன செய்தாள் என்று தீர விசாரிக்காமல் அவன் தண்டனை கொடுத்தது பெண் மனதால் இன்னும் ஏற்க முடியவில்லை!! அவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தால் என்ன? காதலிக்காக தாஜ் மஹாலே கட்டும் சாஜஹானாக இருந்தாலுமே.. அங்கே முன் இருப்பது பெண்ணின் மனதும்!! அம்மனதின் விருப்பமும் மட்டுமே!!

 

 

மனதின் எண்ணங்கள் தட்டுதாடுமாறி பயணிக்க.. அதில் அவள் உதடுகள் பயத்தில் துடிக்க..

அவள் முகத்தை திருப்பி துடிக்கும் அவளது ஈர உதடுகளை தன் உதடுகளால் கவ்வி ஆற்றுப்படுத்தினான் விநாயக்.

அவளால் சுத்தமாக முனகக் கூட முடியவில்லை. அவள் இளம் உடல் இவனின் அதிரடியில் துவள.. கண்களை இறுக மூடிக்கொண்டாள். 

இரண்டு கைகளாலும் அவளின் நடுங்கும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். 

 

 

அதேசமயம் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தான் சர்வா. என்னதான் மனதில் கொண்ட காதலால் இவன் உரிமை எடுத்துக் கொண்டாலும், அண்ணன்கள் முன்னிலையில் இவர்களின் இந்த அன்னியோன்னியம் நல்லதுக்கு இல்லை என்று விநாயக் மனது நினைத்தது. ஆனாலும் உடனே அவளை விட்டு பிரிய முடியாத நிலை!! கொஞ்சம் அசைந்தாலும் அந்த அசைவை சர்வா கண்டு பிடித்து விடுவானோ? என்று எண்ணியவன் அவளையும் அசையவிடாது இன்னும் ஆழ புதைத்துக்கொண்டிருந்தான் தன் இதழ்களை அவளின் இதழ்களுக்குள்.

 

 

இவர்கள் நிற்கும் மரத்துப் பக்கம் வேறு வந்து கொண்டாருந்தான்.

வர்ணாவின் இதயமோ திக் திக் என்று வேகமாக அடித்துக் கொள்ள.. அவளுக்கு குறையாது பதட்டம் தான் விநாயக்கும்.

 

 

தைரியமாக சொல்லிவிடுவான் இவள் என் காதல்!! அது கொடுத்த உரிமை என்று!! ஆனால் அது தன் காதலுக்கும் காதலிக்கும் பெருமை வாய்க்காது என்று எண்ணியே அமைதியாக இருந்தான்.

 

 

 

இவர்கள் பக்கம் இன்னும் சர்வா நெருங்கி விட.. “சர்வா…” திடீரென்று கேட்ட குரலில்.. சர்வா மட்டுமல்ல வர்ணாவின் விழிகளும் இன்னும் விரிந்தது பயத்தில்!! விநாயக்கிற்கு  அவர்கள் நிலை சற்று கவலை கொடுத்தது. சர்வா திரும்பி குரல் வந்த திசையை பார்க்க..  கையசைத்து தனா கூப்பிட.. இவனும் திரும்பி சென்றுவிட்டான்.

அண்ணன் செல்வது இவளுக்குத் தெரிய, அவனது இதழ்களிலிருந்து தன் இதழ்களை பிரித்து கொண்டவள், ஒற்றை விரலால் பத்திரம் காட்டி தன் தாவணி முந்தானையால் தன் உதட்டை அழுந்த துடைத்துக்கொண்டு வீட்டின் கொல்லைப் பக்கம் ஓடி சென்று மறைந்தாள்.

 

 

அவள் காட்டிய பத்திரத்தில் புன்னகை புரிந்த வண்ணம் “வர்ணா.. வர்ணா.. கொல்றியேடி!!” சிகையை அழுந்த கோதிக் கொண்டவன், தன்னை நிலைப்படுத்தி கொண்டு வீட்டுக்குள் வர.. இப்போது ஈஸ்வர் பிரதர்ஸ் பாண்டி ப்ரதர்ஸ் அனைவரும் வந்திருக்க காலை உணவு களை கட்டியது.

 

 

“நான் இந்த ஊரை கொஞ்சம் சுத்தி பார்க்கனும் சர்வா.. எனக்கு யாராவது ஹெல்ப் பண்றீங்களா? கூடவே இன்னொரு உதவியும் தேவை! என் காரை வைத்துக்கொண்டு இங்கு சுற்ற முடியாது. அதனால் அவ்வப்போது வெளியில் சென்றுவர எனக்கு ஒரு பைக்கும் வேணும். இங்கே ஷோரூம் எங்க இருக்கு? என்னை யாரும் கூட்டிட்டு போறீங்களா? புதுசா வண்டி வாங்கிக்கிறேன்!” என்று அவன் கூற..

 

 

“எதுக்கு புதுசா எல்லாம்? நம்ம வீட்டிலேயே நாலஞ்சு வண்டி நிக்குது. எது புடிச்சிருக்கோ அதை எடுத்துட்டு போங்க தம்பி” என்று தரணி கூற அவன் யோசனையாய் மற்றவர்களை பார்க்க..

 

“எங்க தரணி பா பேச்சுக்கு எதிர்ப் பேச்சு நாங்க மட்டும் இல்ல மத்த அப்பாக்களுமே பேச மாட்டாங்க!! அதனால உங்களுக்கு விரும்பிய வண்டி நீங்க எடுத்துக்கலாம். ஆனா உங்க கூட யார் அனுப்புறது தான் எங்களுக்கு தெரியல? எல்லோருக்குமே வேலை இருக்கு” என்று யோசித்தவர்கள் இப்போதைக்கு கண்ணப்பன் என்று வேலையாளை அவனோடு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

 

 

“என்னது வேலைக்காரனா?” என்று என்று விழித்தவனை பார்த்த வர்ணாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது. ஆனாலும் உதடு கடித்து அதனை மறைத்தாள். 

 

 

‘என்னை அனுப்புவார்கள் என்று தானே எதிர்பார்த்திங்க? அப்படியெல்லாம் வீட்டு பொண்ணை அனுப்பிடுவாங்களா என்ன?’ விழி மொழியில் அவனிடம் கெத்தாய் கேட்க..

 

 

சிரிப்பை உதடு மறைத்தாலும் கண்கள் அவள் மனதை அப்படியே காட்டிவிட அதனைக் கண்டு கொண்டான் விநாயக்.

 

 

‘ஆனால் முதல் நாளே வேலையாள் வேண்டாம். உங்க வீட்டுப் பெண்தான் வேண்டும். அவளை என்னோடு அனுப்பி வையுங்க என்றா கூறமுடியும்?’ என்று யோசித்தவன் அதன்பின் வர்ணாவிடம் ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்தி விட்டே கண்ணப்பனோடு சென்றான். 

 

 

“இருடி.. கூடிய சீக்கரம்‌ உங்க அண்ணன்கள் வாயாலேயே ‘ப்ரியாவை கூட்டிப் போங்கனு சொல்ல வைக்கிறேன்!’ என்று பதில் பார்வை பார்த்து விட்டு சென்றான். 

 

 

அன்றைய நாள் முழுவதும் சுற்றினர். மேம்போக்காக மட்டுமல்ல நிஜமாலுமே விநாயக்கிற்கு டைரக்ஷனில் ஈடுபாடு அதிகம். ஆனால் தொழிலை கையில் எடுத்தபின், தொழில் பின்னாடி ஓட மட்டும் தான் அவனுக்கு நேரம் இருக்க.. அவனது ஃபேஷனான டைரக்ஷனில் ஈடுபட முடியவில்லை. அதற்கு இப்பொழுது சந்தர்ப்பம் வாய்த்திருக்க.. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்ணப்பனிடம் நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டான் அவ்வூரை பற்றி!!

 

 

கண்ணப்பனுக்குத் தெரியாத விஷயங்களுக்கு ஊரிலுள்ள பழைய மூதாட்டிகள் வயதானவர்களிடம் கூட்டி சென்றான். மெல்லமெல்ல அவர்களிடம் பேசி சில பல விஷயங்களை நோட் செய்து கொண்டான்.

 

 

மதிய உணவிற்கு அவர்களது தென்னந்தோப்புக்கு வந்து விடுங்கள் என தரணி சொல்லிவிட.. மதிய உணவை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் கண்ணப்பனோடு தன் வேலையை ஆரம்பித்தவன், மாலை போல தான் வீடு வந்து சேர்ந்தான். தன்னோடு இவ்வளவு தூரம் சுற்றிய கண்ணப்பனுக்கு தாராளமாக பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

 

 

சோர்ந்த முகத்தோடு வந்தவனை சுஜி வரவேற்று “என்னங்க தம்பி ஒரே நாளில் இப்படி சோர்ந்து போயிட்டீக? உங்களுக்கு பழக்கமில்லாத வேல இல்ல. கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு செய்யுங்க. காலையில சுத்தினா மதியம் போல உட்கார்ந்து மத்த வேலைய பாருங்களேன். காலையில மத்த வேலையை பார்த்தா மதியம் போல சுத்துங்க. இப்படி ஒரேதிரியா சுத்தினா உடம்பு என்னத்துக்கு ஆகும்? இது  புது இடம்.. புது சூழ்நிலை..” என்று அக்கறையாய் கேட்ட சுஜிதாவின் முகத்தில் சாருமதி தெரிய “சரிங்க ஆன்ட்டி!” என்று தலையாட்டிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

 

 

இன்னும் வீட்டு ஆண்கள் யாரும் வரவில்லை. எப்படியும் அவர்கள் வருவதற்கு நேரம் சென்று விடும் என்பதால் இவனுக்கு சிற்றுண்டியும் சுட சுட இஞ்சி டீயும் கொடுத்துவிட்டார் சுஜிதா வழக்கம்போல வர்ணாவிடம்.

 

 

அறைக் கதவைத் தட்டிவிட்டு இவள் உள்ளே நுழைய எங்கேயுமே விநாயக்கை காணவில்லை. சட்டென்று கதவு சாத்தப்படும் சத்தத்தில் அவள் திரும்பி பார்க்க.. கதவை சாத்தியவன் ஒற்றைக் கண்ணடித்தவாறே போனில் அன்னையோடு பேசிக்கொண்டே வந்தான்.

 

 

அவள் முறைத்துக் கொண்டே கையிலிருந்த சிற்றுண்டியை டீயையும் அவனிடம் காட்ட.. ‘ஒரு நிமிஷம்!’ என்றவன் வாகாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களால் முன்னால் காட்ட.. ‘சரி அங்கே கொண்டு வந்து வைக்க சொல்கிறான் போல..’ என்று இவள் நம்பி அருகே செல்ல..

 

 

பிடித்து இழுத்து அவளை தன்  மடியில் உட்கார வைத்துக் கொண்டான். அவள் திமிறி விடுபட முயல.. “ஏற்கனவே செம டயர்ட்ல.. பசியில வந்து இருக்கேன் டி. இருக்குற ஸ்னாக்ஸையும் டீயையும் கொட்டிடாதடி.. ஒரு பத்து நிமிஷம் இரு அம்மா கிட்ட பேசிட்டு வரேன்” என்றான் அவள் காது மடலில் இதழ்கள் உரசியவாறு..

 

 

அவள் சூடியிருந்த ஜாதி மல்லியின் வாசத்தை பிடித்தபடியே தன் அன்னையுடன் பேசினான் விநாயக். 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பேசாமல் இருந்தவர், இப்போது தான் அங்கு என்ன நடக்கிறது? அவர்கள் வீட்டில் எப்படி எல்லாம் இவனை கவனித்துக் கொள்கிறார்கள்? இவன் ஒழுங்காக நடந்து கொள்கிறானா? என்று ஒரே விசாரணை.. கூடவே அவன் சென்ற வேலையைப் பற்றியும் அவர் கேட்க இவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 

அவன் பேசியப்படியே அவள் கூந்தலை முன் பக்கம் தள்ளி வெண்ணிற முதுகில் மீசையால் கோலமிட.. வர்ணாவுக்கு கூச்சத்திலும் அவன் நெருக்கத்திலும் ஸ்பரிசத்திலும் அவஸ்தையோடு அமர்ந்திருந்தாள். சட்டென்று எழ முடியாதபடி அவள் மடியில் சுஜி கொடுத்தனுப்பிய டீயும் சிற்றுண்டியும் இருந்தது.

 

 

வர்ணாவுக்குள் ஏதோ செய்தது அவன் இதழ் நெருக்கமும்.. மூச்சுக்காற்றும்.. அவன் கை அவள் இடுப்பை வளைத்து மெதுவாக தடவிக் கொண்டே.. சிற்றுண்டியை சுட்டிக்காட்டி “ஊட்டி விடு!!” என்றான் விழியால்..

 

 

அவளோ அவனை முறைத்து பார்த்து “முடியாது!!” என்று தலையசைக்க.. அப்போது இருவரின் கன்னங்களும் உரசிக் கொண்டன!!

 

 

விநாயக் மடியில் ஒருத்தி உட்கார்ந்திருக்க.. அவளை சீண்டியப்படி அன்னையிடம் பேச பேச.. அவள் அசைய.. அசைய.. அங்கங்கள் அவனோடு உரச.. உரச.. மோகம் கிளர்ந்து விட்டது அவனுள். வர்ணாவை கொஞ்சம் இறுக்கி அணைத்தவன்..அவள் நெளியக் கூட அனுமதிக்கவில்லை. அன்னையுடன் பேசிக் கொண்டே வர்ணாவின் கன்னத்தை தன் கன்னத்தால் தேய்த்தான். அவளுக்கு அவன் செயல் பயத்தையும் கோபத்தையும் ஒருங்கே கூட்டியது. அவன் வேண்டுமென்றே தன் அன்னையிடம் ரொம்ப மும்மரமாக பேசினான். அவ்வப்போது முத்தம் கொடுத்தான்.. கொஞ்சினான்.. சீண்டினான்.. தீண்டினான்.. இதழ்களால் வர்ணாவை.

 

 

வர்ணாவுக்கு உடல் விறைக்க ஆரம்பித்து விட்டது. உடம்பில் உஷ்ணம் படர.. அவளது கண்கள் லேசாக கிறங்க ஆரம்பித்தது. அவளது பெண்மையை கிளர்ச்சியடைச் செய்தான். அவளது உடலை தழுவிய அவன் கையைப் பிடித்து தடுத்து விரல்களைக் கோர்த்து பிண்ணிக் கொண்டாள்.

 

 

போனில் அன்னைக்கு சமாதானப்படுத்தி கொஞ்சியப்படி முத்தம் கொடுக்கும் அதே நேரத்தில் அவன் உதடுகள் வர்ணாவின் கன்னத்திலும்.. காது மடலிலும்.. பின் முதுகிலும்.. மென்மையா முத்தமிட ஆரம்பித்தது. அந்த முத்தத்தில் அவள் சிலிர்த்தாள். அவன் விரல்களை பிண்ணி நெறித்தாள். அவன் ஒரு நாவை அவள் காதுக்குள் விட்டு.. சுழற்றினான். வருடினான். அவள் கூச்சத்துடன் நெளிய.. அவளது கால்களை தன் கால்களால் பிண்ணி கொண்டான். 

 

 

வர்ணாவின் உடம்பு மெல்ல மெல்ல இறுக்கம் தளர்ந்தது. அவள் உடல் பஞ்சு போலாகி.. பூமியை விட்டு உயர்ந்து எங்கோ மிதப்பதை போல உணர ஆரம்பித்தாள். அவளுக்கும் மோக உணர்ச்சி உண்டு.  தாப உணர்ச்சியும் உண்டு!! இதற்கு முன் அவனிடத்தில் இதனை உணர்ந்திருக்கிறாள். அதனால் தான் அன்றிரவு அவள் அழுது வடிந்தது. எப்படி அவனிடம் தான் கிறங்கலாம்? அவன் கையில் உருகலாம்? என்று!! 

 

 

ஆனால் இப்படி மடியில் உட்கார்ந்து உணர்ந்ததில்லை!!

இப்போது அவன் கை தன்னை அணைத்திருக்கும் மோக உணர்ச்சி கிளர்ந்து.. கிறுகிறுக்கும் இந்த கிறக்கத்தை அவள் உணர்ந்ததில்லை!!

அவளுக்கு கிறக்கம் முதல்முறை!! ஆனால் மிகவும் பிடித்திருந்தது. 

கிறுக்கு பிடிக்க வைத்தது இந்த கிறக்கம்!!

 

 

 

அதை விட அவன் தன் அன்னையைக் கொஞ்சுவதும்.. சமாதானப்படுத்துவதும்.. போனில் முத்தம் கொடுப்பதும் அவளுக்கு அவன் அன்னையின் மீதான அன்பை புரிய வைத்தது. அவன் தன் அன்னையைக் கொஞ்சுவது போல தன்னைத்தான் கொஞ்சுகிறான் என நினைத்தபோது.. உடம்பு சிலிர்த்து.. ஒரு நடுக்கம் பரவியது!!

 

 

அவனது கொஞ்சல் தொடர்ந்தபடி இருக்க.. அவன் உதடுகளும் நாக்கும் வர்ணாவின் கன்னத்தில் ஈரமாகப் பதிந்து கோலமிட்டுக் கொண்டிருந்தது. அவள் பிண்ணியிருந்த அவன் கை விரல்கள் மெதுவாக நகர்ந்து அவளது நாபியில் வருடியது.

 

 

அவள் கிளர்ந்து சிலிர்த்தாள். அவளுள்  உஷ்ணம் தகிப்பது போல ஒரு உணர்ச்சி தீ பரவ.. அவள் தொண்டையில் எதுவோ அடைத்தது!! மெல்ல மெல்ல உயர்ந்து வந்த அவன் விரல்கள் அவளது மென்மையின் மென்மையை  பக்க வாட்டை வருட.. அவன் விரலை இறுக்கிப் பிடித்தாள். அவனுக்கு வலிப்பதை போல நெறித்தாள்!!

 

 

முதலில் தடுத்தவளை அவன் கட்டாயப்படுத்தவில்லை. சிறிது நேரம் விட்டு அவன் மீண்டும் அவள் மென்மையை லேசாக வருடியபோது அவளால் தடுக்க முடியவில்லை. கைகள் அவன் வசம் இருந்ததே!! அவன் விரல் அவளது மென்மையின் மென்மைகளை ஆராய.. அவள் உடம்பில் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்தாள். சட் சட்டென விறைத்தாள். ஒரு பக்கம் எழுந்து ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் அவளை நகர விடாமல் செய்தது அவனது இறுக்கிய அணைப்பு!!

 

 

விநாயக் பேசாமல் எதிர் பக்கத்தில்  இருந்து அவன் அன்னை பேசியபோது.. ம்ம் கொட்டிக் கொண்டே..  வர்ணாவின் முகத்தை மெதுவாக தன் பக்கம் திருப்பினான். மோகம் பொங்கும் கண்களுடன் ஆவலாக அவளைப் பார்க்க.. அந்த கண்கள் அவளை எனன்வோ செய்ய.. அவளின் சிவந்த ஆரஞ்சு சுளை இதழில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அவள் அசையக் கூட இல்லை. அப்படியே அவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

 

 

அன்னையிடம் ”ம்ம்.. ம்ம்.. ” என்று பேசிக் கொண்டே ஒரு சின்ன கேப்பில் வர்ணாவின் கீழ் உதட்டைக் கவ்வி உறிஞ்சினான். சர்ரென ஒரு உறிஞ்சு.. அவளது இதயத்தையே உறிஞ்சி எடுப்பதைப் போலிருந்தது. அவள் கண்கள் சொருக… அடுத்த நொடியே அவளது உதட்டை விட்டு அன்னையுடன் பேசினான்!! சற்றுமுன் நடந்தது கனவா நினைவா என்று புரியாமல் பேந்த பேந்த முழித்து இருந்தாள் வர்ணா!!

 

 

கிட்டதட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் அவன் அன்னையுடன் கொஞ்சி விட்டு முத்தத்துடன் பை சொன்னான். காலை கட் பண்ண அடுத்த நொடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்த வர்ணாவின் உதடுகளைப் பாய்ந்து கவ்விக் கொண்டான். அவளது உதடுகள் முழுவதுமாக அவன் வாய்க்குள் செல்ல.. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை சட்டென இறுக்கிப் பிடித்து தள்ளினாள். அந்த நொடியில்.. அவளது உடலில்  ஏதோ உஷ்ணம் பரவி பொங்கியது. அது கொடுத்த சுகம்.. அவள் இன்றுவரை உணராத ஒன்று !! 

 

 

அவளைக் கிறக்கத்தில் தள்ளி.. 

அவனது நெருக்கத்தில் அள்ளி..

அவன் மடியிலேயே துவளச் செய்தான். இதே நிலை நீடித்தால் என்னவாகி இருக்குமோ?

 

 

 அவள் கையிலிருந்த சிற்றுண்டியும் டீயும் கீழே விழுந்து உருண்டு ஓடி சத்தம் எழுப்ப.. அந்த சத்தத்தில் அவர்கள் மோக லயம் அறுபட.. நிதர்சனம் புரிய.. அவனை விட்டு பிரிந்து எழுந்து நின்றாள் கோபத்தை கண்களில் தேக்கி!!

 

 

“லவ்வு ஒர்க் அவுட் ஆகலைனு லஸ்டை கைல எடுக்குறீங்களா விநாயக் சார்!!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அவள் கேட்க..

 

 

“லவ்வு ஒருத்தி கிட்ட.. லஸ்ட் ஒருத்தி கிட்ட காட்டினா தாண்டி தப்பு!! இரண்டுமே ஒருத்தி.. என் ஒருத்தி கிட்ட தானே காண்பிக்கிறேன் என் மேல தப்பே இல்லை!!”

 

 

“காதலும் காமமும் ஒன்று கிடையாது!!” என்று இவள் கத்த..

 

 

“காதலோடு கூடிய காமம் தப்பில்லை.. காதல் இல்லா காமம் தான் மிருகம்!!” என்றான் இவனும் அவளுக்கு சளைக்காத பார்வையோடு!!

 

 

“உங்களுக்கு என் மேல் இருக்கிற காதல் வெறும் லஸ்ட்!! லவ் இல்லவே இல்லை!!” என்று கூறியவள் அங்கிருந்து ஓடியே விட்டாள்.

 

 

“வாட்!! லஸ்ட்டா??  எவனாவது வெறும் லஸ்ட்குக்காக இவ்வளவு தூரம் தேடி வருவானா டி!!” என்று கோபத்தில் கத்தியவன் கீழே கிடந்த பாத்திரத்தை ஓங்கி உதைத்தான்.

 

 

அவன் மனதின் காதலை சொன்னதிலிருந்து இவளது மனம் அதனை இரவு முழுவதும் உரு போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவனின் அன்பையும் காதலையும் முழுமையாக பெண் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி? எப்படி அவ்வளவும் செய்துவிட்டு இவன் காதல் என்று இப்போ முன்னால் வந்து நின்றால்.. நான் அனைத்தையும் மறந்து துறந்து இவன் பின்னால் சென்று விட வேண்டுமா?? என்று தலை தூக்கியது வீம்பு கொண்ட மனது.

 

 

அது எப்படி? எப்படி இவன் என்னை  கொண்டு வந்து சிறை வைப்பான்? இவனைப் பழி தீர்க்க என்னை பயன்படுத்துவான்? இப்பொழுது இவன் மனது மாறி என்னை காதலிக்கிறான் என்றால் இவனது கைகளில் விழுந்து விட வேண்டுமா? இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? நான் என்ன விளையாட்டு பொம்மையா? இவன் வைத்து விளையாட? இல்லை இது எல்லாம் திரும்பவும் ஒரு நாடகமா? அவன் அத்தனை பேருக்கும் மத்தியில் பட்ட அவமானத்தை எனக்கு திருப்பிக் கொடுப்பதற்கு திரும்பவும் விளையாடுகிறானா? என்று புரியவில்லை அவளுக்கு..

 

 

அதனுடன் விநாயக் பத்தி நன்றாகத் அவளுக்கு தெரியும். அவள் ப்ளாக்கில் எழுதும் போது விசாரித்த விலையில் தவறான நடவடிக்கைகளோ.. ஆண் என்ற ஆணவத்திலோ.. பணக்காரன் என்ற பின்னணியிலோ.. எந்த வகையிலும் இவன் அத்துமீறியதே கிடையாது

என்று இவனின் ஆயிரம் நல்ல விஷயங்களை அறிவு பட்டியல் போட்டாலும்.. ஆயினும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனது வாதிட்டது!!

 

 

தன் மனதைப் பற்றிய தெளிவை விட.. அவள் மீதான காதலை அவன் இன்னும் ஆழமாக உணர வேண்டும் என்று பெண் மனம் விரும்பியது. 

காமம்.. மோகம் தாண்டிய காதலாக வேண்டும் என்று மனம் முரண்டியது! 

தன் மீது கொண்ட காதலுக்காக எந்த எல்லைக்கும் அவன் செல்வானாமாம் என்று அவன் காதலை கேலி செய்தது.

 

 

காதலை எதிர்ப்பவர்களோ இல்லை காதல் வேண்டாம் என்ற சொல்லும் குடும்பத்திலோ பிறக்கவில்லை. ஊரறிய அரங்கேறிய சௌமினி அத்தையின் காதலையும் பார்த்திருக்கிறாள்..‌ ஊருக்கு உறவுக்கு தெரியாமல் அரங்கேறிய அவளது ரிஷி அப்பா சுஜி மா காதலையும் அறிந்திருக்கிறாள். பின்னே எதுதான் அவளை தடுக்கிறது என்றால்.. அது விநாயக்!!

ஆம்!! விநாயக்!!

 

 

அந்த விநாயக்.. விவிஆர் சேனலின் சொந்தகாரன்.. பல தொழில்களில் கட்டியாளும் சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசு.. இந்த கர்வத்தில் தானே அவன் என்னை அப்படி சிறை எடுத்தது. இதை முற்று முதலாக வெறுக்கிறேன்!! அவனையும் இந்த அடையாளத்தை நான் வெறுக்கிறேன்!! என்று தனக்குள் அழுத்தமாக உரைத்துக் கொண்டவளுக்கு அதன் பின்னே தூக்கம் வந்தது.

 

 

அவளுக்காக அவன் தேடிவந்தது வர்ணாவுக்கு பிடித்து இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவனிடம் செல்ல இன்னும் தடுக்கிறது!! அதனால் காதலை காமத்தோடு போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாள். இவள் மனதிலும் அவன் இல்லையென்றால் அவனது கொடுதல் தீயை போல தகித்திருக்கும். இப்படி உருக வைக்காது!!

 

 

அவள் மனம்  எதிர்பார்ப்பது என்ன?

நம்பிக்கை அது!! 

மன்னவன் தரும் நம்பிக்கை அது!! 

 

 

“அவனுக்கு அம்பை விட்டதுக்கு பதில் இவளுக்கு விட்டு இருக்கலாம் போலையே.. உனக்கு அம்பு எல்லாம் இல்ல.. வேற.. வேற விஷயத்தை இறக்குறேன் இரு!!” என்று தூங்கும் வர்ணாவை பார்த்து கூறியது கியூபிட்!!

 

 

அடுத்த இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கினான் அசிதன் பிரசாத்!!

 

 

அவள் அத்தை சௌமினியின் புதல்வன்!!

விஷ்ணு ப்ரசாத்தின் மூத்த வாரிசு!!

 

 

வானவில் வளரும்.. 

 

 

5 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 13, 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top