ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 15

வானவில் 15 

 

 

மறுநாள் காலை.. அன்று வெளியே சுற்ற போகாமல் கையில் ஒரு லேப்டாப்போடு ஹாலிலேயே அமர்ந்துவிட்டான விநாயக். அவ்வப்போது நரசிம்மர் வல்லபர் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்த முகத்தோடு பதில் கொடுத்தாலும் கண்களில் ஒரு தேடல்!!

 

 

எங்கேயாவது தன்னவள் காண கிடைக்க மாட்டாளா? என்று!! நேற்று கொஞ்சம் அதிகப்படியாக நடந்துவிட்டோமோ? என்று மனதில் கேள்வி எழுந்தாலும்.. “சேச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. என்ன இருந்தாலும் என்‌ மெனிக்கா தானே.. எனக்கில்லாத உரிமையா?”  என்று அவனுக்கு அவனே சமாதானப் படுத்திக் கொண்டான்.

 

 

காலையில் வழக்கம் போல் மற்ற ஆண்கள் வெளியில் சென்றிருக்க.. தாத்தாக்களுக்கு நீராகாரம் கொண்டு வந்து கொடுத்தவள், இவனுக்கும் டீயை அருகிலுள்ள டீபாயில் வைத்து விட்டு சென்றாள். அவள் வந்தது முதல் டீப்பாயில் வைக்கும் வரை லேப்டாப்பை பார்ப்பதுபோல அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

 

ஒரு சின்ன யாசகம்.. 

மெல்லிய மன்னிப்பு..

குறும்பு புன்னகை..

யாரும் அறியாத ஒரு முத்தம்!!

 

 

செய்திட்டான் விநாயக்!!

பெண்ணை சமாதானப்படுத்தும் யுக்தி!!

அவன் கண்களும் முகமும் பரிதவிக்க..  அவளோ அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தால் தானே.. 

 

 

“சரி விட்டு பிடிப்போம்.. ரொம்பவும் படுத்தி விட்டோமே நேற்று” என்று நேற்றைய அவர்கள் நெருக்கத்தில்  மனதுக்குள் சிரித்துக் கொண்டவனின் முகத்தில் அழகிய வெட்கம் படர்ந்தது.

 

 

அதைக் கண்டு கொண்ட நரசிம்மர் “என்ன தம்பி?? என்ன பார்க்குறாப்புல முகம் இப்படி நாணனுது?” என்று நேரடியாக கேட்டே விட..

 

 

குடித்துக்கொண்டிருந்த டீ சற்று புரையேறி விட்டது அவனுக்கு.

 

 

‘ஐயையோ.. வயசானாலும் இவருக்கு கண்பார்வை அதிகம் போல!!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், ‘என்ன சொல்லி சமாளிப்பது?’ என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கையில் வல்லபர் உதவிக்கு வந்தார்.

 

 

“தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகல சரி.. கல்யாணத்துக்கு வெளியே பொண்ணு யாரும் இருக்காங்களா?? அங்கிருந்து ஏதும் செய்தி வந்திருக்கோ.. அத பார்த்து தான் இப்படி வெக்கப்படுறாப்புல போல” என்று குசும்புடன் கேட்க..

 

 

அவர்கள் குடித்துவிட்டு வைத்து டீ  கோப்பைகளை எடுக்க வந்த வர்ணாவுக்கு இது காதில் விழ.. ‘அப்படியா?’ என்ற பார்வையை விநாயக் மீது செலுத்த..

 

 

“ஆமாங்க தாத்தா!!” என்று கூறியவன் பார்வை மொத்தமும் கொத்தித் தின்றது என்னவோ பெண்ணைத் தான்!!

 

 

அவன் பார்வையின் பேதத்தைப் படிக்க தெரியாது அவளோ ‘அப்போ ஏற்கனவே ஒரு சேனல் உங்க ஊர்ல ஓடிட்டு இருக்கு.. இங்கே வந்து   என்கிட்ட புதுக்கணக்கு நீ ரெடி பண்றியா? இருடி வரேன் உனக்கு!!’ என்றவள் அவனுக்கான அன்றைய தண்டனையை நிறைவேற்ற சித்தமானாள்.

 

 

என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? அவள் என்று யோசித்துக் கொண்டிருக்க..

 

 

காலை சாப்பாடு அங்கே தடபுடலாக ரெடி ஆகிக் கொண்டிருக்க அதை பார்த்தவளுக்கு.. சட்டென்று அதில் உனக்கு ஏதாவது கலந்துவிட ஐடியா தோன்ற.. ஆனால் எல்லோரும் முன்னிலையில் அதை செய்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று புரிந்து தனியாக அவளது திட்டத்தை செயல்படுத்த எண்ணியிருந்தாள்.

 

 

விநாயகன் குறுகுறு பார்வை அவளை தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவள் திரும்பி அவனை பார்க்கவில்லை. சற்று நேரம் முன் வேறொரு பெண்ணை பற்றி பேசியவுடன் தன்னை முறைத்தவளை பார்த்தவனுக்கு கொஞ்சம் மனதுக்குள் இன்பமாகத்தான் இருந்தது.

 

 

‘அவளுக்கும் என் மீது ஒரு இது இருக்கு! அதான் வேற ஒரு பொண்ணை சொல்லும்போது பொறாமை கொண்டு என்னை கோபத்தில் எரிக்கிறாள்!’ என்று நினைத்துக்கொண்டான். 

 

 

‘இதையே நாம கண்டினியு பண்ணுவோம்?’ என்று அவன் எண்ணி..  நரசிம்மரிடமும் வல்லபரிடமும் “அந்தப் பொண்ணு அப்படி!! அவ்வளவு அழகு!! அவ்வளவு பொறுமை!! அத்தனை குணவதி!! என்று எக்ஸ்ட்ரா பிட் போட காதில் வாங்கினாலும் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை வர்ணா!!

 

 

காலை வேளை உணவின்போது அனைவரும் ஆஜராக ஆண்கள் இவனிடம் இன்றைய வேலையை விசாரித்தபடி இருக்க.. அப்பொழுது “எனக்கு கொஞ்சம் சூட் பண்ணனும் அதுக்கு வர்ணா ஹெல்ப் வேணும் அங்கிள்!” என்று தரணியை பார்த்து கேட்டான்.

 

 

“எப்போ எங்கன்னு சொல்லுங்க? பாப்பாவையும் உங்க உதவிக்கு ஆட்களையும் அனுப்பி வைக்கிறேன்” என்றான் தரணி விகல்பம் இல்லாது.

 

 

“ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும் அங்கிள். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தகவல் சேர்த்து ஒரு ஃபாம் ரெடி பண்ணி இருக்கேன்” என்றான்.

 

 

“ஓகே விநாயக்.. நீங்க ரெடி பண்ணிட்டு இன்பார்ம் பண்ணுங்க நாங்களும் யாராவது ஃப்ரீயா இருக்க முடியுமான்னு பார்க்கிறோம்” என்றான் சர்வா. 

 

 

‘அப்பவும் இவனுங்க தனியா விட மாட்டாங்களா?’ என்று எண்ணம் தோன்ற சரி என்று வெளியே தலையை ஆட்டி வைத்தான்.

 

 

ஆண்கள் எல்லாம் வேலைக்கு கிளம்பி சென்றுவிட.. சர்வாவும் தன் ப்ராஜெக்ட் விசயமாக வெளியே சென்றிருந்தான்.

 

 

இவன் நேற்றுப் பார்த்த பெரியவர்கள் கொடுத்த விவரங்களை எல்லாம் சேர்த்து வைத்தவன் கூடவே அங்கிருந்த தனது சேனல் வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

நண்பகல் வேளையில் அவனது அறை கதவு தட்ட பட.. வேலையில் முழுகி இருந்தவன் கண்களை விலக்காமல் “எஸ்.. கம்மின்!!” என்று கணீர் குரலில் பதில் கொடுக்க..

 

 

கதவை திறந்து வந்த வர்ணாவின் கையில் நண்டு சூப் இருந்தது சுடசுட!! அவன் கேள்வியோடு பார்த்தான்.

 

 

“தர்ஷினி அம்மா தான் கொடுத்துவிட்டார்கள்!” என்றாள் அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு..

 

 

“உன்னை எல்லாம் நம்ப மாட்டேன் டி இராட்சசி.. அன்னைக்கு இப்படி தான் காஃபி எடுத்துட்டு வந்து அது நிறைய காரத்தை போட்டு வைத்திருந்த.. இன்னிக்கு இதுல என்ன கலந்து கொண்டு வந்து இருக்கே?” என்று லேப்டாப்பில் இருந்து விலகி இருக்கையை அவள் புறம் திருப்பிக் கொண்டு தோரணையாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

 

 

அவளுமே அந்த எண்ணத்தில் தான் முதலில் இருந்தாள். மிளகுத்தூளை போடும்போது கொஞ்சம் மிளகாய் தூளை கலந்து போட்டு விடுவோம் என்று!!

 

 

‘வேண்டாம்.. வேண்டாம்.. அன்னைக்கு செய்தது மாதிரி இழுத்து வச்சு நம் உதட்டையே புண்ணாக்குவான்.. அவனை டேமேஜ் செய்யப் போகி நம்மை தான் திரும்ப அவன் டேமேஜ் செய்கிறான்” என்ற நல்ல எண்ணத்தில் அவளுக்கு போடாம வந்திருக்க.. 

 

 

இன்று அவன் அதை சுட்டி காட்டி கேட்க.. ஏற்கனவே எதுவும் செய்ய முடியாத கோபத்தில் இருந்தவள், இவன் கேட்கவும் இன்னும் கோபம் வர வேகமாக அவன் அருகே டங்கு டங்கு நடந்து வந்தவள் கையில் இருந்த தட்டை அருகில் வைத்து..

“உங்களை வைச்சு செய்ய காரம் போட்ட காபி தவிர இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு மிஸ்டர் விநாயக்!!” என்று கோபத்தோடு மொழிந்தாள்.

 

 

“ஆஹான்..!!” என்ற பார்வையோடு அவன் பார்த்திருக்க.. 

 

 

“குடிச்சா குடிங்க.. இல்லைன்னா போங்க. எனக்கென்ன வந்துச்சு!” என்றவள் திரும்ப, அவளது கையை பற்றி தடுத்தவன், “காலையிலிருந்து ஒரே வேலை மெனிக்கா!! ரொம்ப டயர்டா இருக்கு. இப்ப எனக்கு நீ கொடுக்கும் இந்த காரமான சூப்பைக் குடிக்க முடியாது. அதனால் ஒழுங்கா எல்லாத்தையும் நீயே குடிச்சிடு” என்றான்.

 

 

“நான் ஏன் குடிக்கனும்? நான் குடிக்க மாட்டேன். உங்களுக்கு வேணும்னா நீங்களே குடிங்க” என்றவள் போவதில்லையே அவசரம் காட்டி கையை விடுவித்துக் கொள்ள போராட..

 

 

“நீ இப்படி அவசரமா சொல்லிட்டு ஓடும்போது தான் எனக்கு இன்னுமே சந்தேகமாக இருக்கு டி என் ராட்சசி!!” என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து ஒரு ஸ்பூன் சூப்பை எடுத்து அவள் வாயில் வலுக்கட்டாயமாக திணித்தான்.

 

 

உண்மையில் எப்பொழுதும் வாசவி தான் சூப் செய்வார். அதுவும் பிள்ளைகளுக்கு என்றால் இன்னும் பார்த்து பார்த்து தான்!! இன்றும் அப்படியே இருக்க.. அவளோ விரும்பியே அதை குடிக்க.. “ம்ம்ம் சூப்பர்‌ சூப்!!” என்றாள் நாக்கை சப்புக் கொட்டி.. உதட்டில் சிந்தியிருந்த  ஒன்றிரண்டு துளிகளையும் நாக்கால் நக்கியப்படி..

 

 

“உண்மையிலேயே நீ ஒன்னும் இதுல கலக்கலையா?  இல்ல நீ பொய் சொல்றியா?” என்று யோசனையாக அவளை பார்த்து கேட்க.. அவளோ நான் கலக்கவில்லை என்று விதமாக தலையசைத்தாள்.

 

 

 

“மத்த விஷயத்தில் வேணா ரிஸ்க் எடுக்குறது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சாப்பிட்டுல எனக்கு ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு.. வாயை திறடி” என்று அவள் தாடையை பிடித்து கொண்டு மொத்த சூப்பையும் அவள் வாய்க்குள் கொட்ட.. அவள் விழித்துக்கொண்டு குட்டி ஆஞ்சிநேயரை போல் வாய்க்குள் சூப்பை வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள். 

 

 

“வாவ்.. வாவ்.. என்ன ஒரு அழகிய அவதாரம்!! அழகிய காட்சி” என்று அவளை சீண்ட அவளோ கோபத்தில் வாயில் சூப்பை வைத்துக் கொண்டே அவனைப் பார்க்க.. அதை அப்படியே தன் போனில் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டான்.

 

 

“சரித்திரம் முக்கியம் அமைச்சரே!!” என்று சிரித்துக்கொண்டே..

 

 

அவள் அதை முழுங்கி விட்டு அவனை திட்ட வாய்திறக்க திரும்பவும் பவுலில் இருந்த சூப் அவள் வாய்க்கு இடம் மாறியது.

இதையும் நமக்கே கொடுத்து விட்டானே என்று சந்தோசத்தோடு அவள் விழுங்க நினைக்கும் முன்..

 

 

பவுலை கீழே வைத்தவன் அடுத்து அவளது இரு கன்னங்களையும் தாங்கி இதழ்கள் வழியே மொத்த சூப்பையும் தன் வாய்க்கு கடத்தி இருந்தவன் ரசித்து ருசித்து குடித்தான் சூப்பை சற்று நிதானமாகவே!! இதழ்களை விலக்காமலே..

 

 

அவள் இதழ்களிலிருந்து அவன் இதழ்கள் விலக.. அவள் அதிர்ச்சியோடு அவனை வாயை பிளந்து பார்க்க..  அந்த கேப்பில் மீதமிருந்த சூப்பையும் அவள் வாயில் ஊற்றி இவன் பருக.. அவள் எச்சில் அமிர்த்தோடு அந்த சூப் தேவாமிர்தமாக இருக்க.. கிறங்கி முயங்கி அவள் இதழ்களிலே இணைந்து கிடந்தன அவன் இதழ்கள்!!

 

 

அவளின் முழு உதடுகளையும் நிறுத்தி நிதானமாக முழுதாக சுவைத்து பின் உதடுகளை விடுவித்தான். முகத்தை விலக்கி  அவளைப் பார்த்தான். பிரியா மூடிய கண்களை திறந்து  அவனைப் பார்த்தாள்..  அவளின் கூர் மூக்கின் முனையை அவன் மூக்கு  உரசிக் கொண்டிருந்தது. அவள் மூச்சு காற்றும் அவன் மூச்சு காற்றும் நேருக்கு நேராக மோதி ஒன்றோடு  ஒன்று கலந்தது.

 

 

அவன் செய்ததில் அவள் கண்கள் கலங்கி கண்களில் இருந்து கண்ணீர் அவளது இதழ்களில் பட்டு தெறிக்க.. அதையும்தான் இதழ் கொண்டு துடைத்தவன் “ஏன் மெனிக்கா?” என்றான் மென்மையிலும் மென்மையாக..

 

 

“அப்பவே சொன்னேன்ல உங்களுக்கு என்மீது லவ் எல்லாம் இல்லை.. வெறும் லஸ்ட் தான்!! அதான் என்னை இப்படி நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கீங்க.. ஒரு அளவுக்கு மேல் தான் என்னாலும் பொறுமை காக்க முடியும்!! இன்னொரு முறை என்னை அத்துமீறி நீங்க தீண்டினால்.. அதுக்கப்புறம் எல்லா விஷயத்தையும் எங்கள் வீட்டாரிடம் நான் கண்டிப்பாக ஒப்பித்து விடுவேன்.. அதன்பின் உங்கள் உயிருக்கு கூட உத்திரவாதம் கிடையாது” என்று கோபத்தில் முகம் சிவந்து ஜொலிக்க..  கண்களில் அத்தனை ஆத்திரத்தோடு கூறியவளை பார்த்தவனுக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க.. மீண்டும் தன் மூக்கினால் அவள் நுனி மூக்கை உரசியவன்.. “சொல்லேன் மெனிக்கா.. எனக்கும் ரொம்ப போரிங்கா இருக்கு. எப்படி எல்லோரும் என்னை தாங்குவது!! யாராவது ஒருத்தர் ரெண்டு பேரு என் கிட்ட சண்டை போட்டா.. வாவ்..வாவ்.. அத்தனை சுவாரஸ்யமாக வாழ்க்கை போகும். ஒரு போட்டியே இல்லாம இருக்கு இப்போ? இப்படி எல்லாம் இருந்தால் வாழ்க்கை நல்லாவே இருக்காது” என்று அவன் அவளது மெல்லிடையை ஒரு இறுக்கு இறுக்கி தூக்கி நிறுத்தியவன் “வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. ஆண்ட்டிங்க தேடுவாங்க கீழே போ!” என்றான் பொறுப்பானவனாக.

 

 

‘அடப்பாவி இவ்வளவு நேரம் இழுத்து வச்சு எல்லா வேலையும் செஞ்சுட்டு இப்ப ஆண்ட்டி தேடுவாங்கனு அனுப்பியா வைக்கிற? நீ எல்லாம் என்ன மேக் டா!!” என்று புலம்பியவள், “இருடி வைக்கிறேன் உனக்கு ஆப்பு!!” என்றவள் கண்கள் மின்ன அவனிடமிருந்து வேகமாக கீழே இறங்கிச் சென்றாள்.

 

 

“ஏதோ ப்ளான் பண்றா போலையே?” என்று இவன் யோசிக்க “பண்ணட்டும்!! பண்ணட்டும்!! நமக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேண்டாமா?” என்றவன் மீண்டும் தன் லேப்டேப்புக்குள் தலையை திணிக்க..

 

 

என்டர்டைன்மென்ட் என்று நினைத்திருந்தவன் வாழ்கையை குழப்ப எண்டர் ஆகியிருந்தான் விஷ்ணு பிரசாத் சௌடாம்பிகையின் மூத்த புதல்வன் அசிதன் பிரசாத்!!

 

 

அடுத்தநாள் பகல் பொழுது காலை வேளையில் அனைவரும் தங்கள் உணவில் கவனமாக இருக்க.. “ஹாய் அத்தைஸ்.. மாமாஸ்.. மச்சான்ஸ்..” என்று வந்து ஆர்ப்பாட்டமாக குதித்தான் அசிதன்!!

 

 

என்னதான் மகன் வயிற்றுப் பிள்ளைகள் இருந்தாலும் மகள் வயிற்றுப் பிள்ளைகள் மீது ஒரு தனி விசேஷமான பாசம் அன்பு இந்த தாத்தா பாட்டிக்கு!! அதுவும் அக்குடும்பத்தின் தவ புதல்வியான சௌமினியின் மகன் என்றால் கொள்ளை பிரியம் தாத்தா பாட்டிகள் முதல் மாமா அத்தைகள் வரை!!

 

 

சர்வாவை விட பத்து மாதங்களே மூத்தவன்.. துஷ்யா தனாவை விட இரண்டு வயது இளையவன்.. பெரும்பாலும் மச்சான்களை அனைவரையும்  வா போ என்று தான் அழைப்பான் அசிதன்.

 

 

அனைவருமே அவனின் இந்த திடீர் வரவை முகத்தில் பொங்கும் சந்தோஷத்தோடு அவனை வரவேற்றனர். 

 

 

“நீயும் சாப்பிட உட்காரு அசிதா” என்று சுஜிதா சொல்ல “இருங்க அத்தை!!” என்றவன் வந்து தாத்தா பாட்டிகளிடடம் ஆசிர்வாதம் வாங்கி.. மாமன்களிடம் நலம் விசாரித்து.. மச்சான்களிடம் ஹாய் சொல்லி.. அத்தைகளிடம் ஷேமம் விசாரித்து.. அதன் பின்னே சாப்பாடு மேசையில் அமர்ந்தான்.

 

 

“ஆமா.. எங்கே என் மச்சகன்னியைக் காணும்?” என்று கண்ணடித்துக் குறும்பு மின்ன கேட்டவனை பார்த்த நம் நாயகன் விநாயக்கு புசுபுசு என்று வந்தது காதிலும் மூக்கிலும் புகை!!

 

 

“உங்களுக்காக தான் ஸ்பெஷல் இடியாப்பம் பாயா செஞ்சு எடுத்துட்டு   வந்து கொண்டே இருக்கிறேன் அத்தான்!!” என்று கிள்ளை மொழியில் மிழற்றியவாறு வந்தாள் கைகள் பாத்திரங்களோடு வர்ணா!!

 

 

“வா.. வா.. வண்ணக்கிளி என் மாமன் பெத்த மச்சக்கன்னி!!” என்று அழைத்தவனை வெறுப்போடு விநாயக் நோக்கினான் என்றால்.. தன்னவளை கண்களாலேயே சுட்டு எரித்தான்.

 

 

தடபுடலாக காலை உணவோடு அவனுக்கு மாற்றி மாற்றி அனைவரும் கவனிக்க.. அதிலும் விநாயக்கை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே “அத்தான் இதை வைத்துக் கொள்ளுங்கோ.. அத்தான் இதை சாப்பிட்டு பாருங்க” என்று அவனை அவள் உபசரித்த உபசரிப்பில் குடும்பமே அவர்களை ஆவலாக பார்க்க..  இவன் ஒருத்தன் மட்டுமே அனலாக பொசுக்கினான்!!

 

 

அதன் பின் அன்றைய இரவில் தனிமையில் மாடிப்படி வளைவில் மாட்டிக்கொண்டவளை இரு கைகளால் சிறை செய்தவன் தன்னை மச்சான் என்று அழைக்க சொல்லி வம்பு செய்து கொண்டிருந்தான்.

 

 

இவர்களின் நெருக்கத்தை பார்த்து.. “அடேய்.. மொத்த பீஸூம் கீழ தான்டா இருக்கானுங்க. அதுல ஒத்த பீஸ் பார்த்தா கூட.. அவ்வளோ தான்!!”

என்று அவனின் சில்மிஷ சீண்டலை ரசித்தப்படி கூறியது கியூபிட்!!

 

 

வானவில் வளரும்..

3 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top