வானவில் 16
அன்பு.. நாம் அன்பு கொண்ட அனைவருக்கும் கொடுக்கலாம். அது ஸ்வாசிதம்!!
ஆனால் நேசம்.. நேசம் கொண்டவரிடம் மட்டுமே கொடுக்க முடியும். அது ஜீவிதம்!!
வர்ணா ‘அத்தான்’ என்று அன்பு கொண்டு பேசுவதும்.. அசிதன் ‘வண்ணக்கிளி.. மச்சக்கன்னி’ என்று விதவித பெயர்களில் அவளை அழைத்தாலும்.. அதில் விஞ்சியிருந்தது பாசம் தான்!! ஆனால் நேசம் கொண்ட விநாயக் கண்களுக்கு இவையாவும் புரியவில்லை. அவர்களின் சொந்தம் உறவு கொடுத்த நெருக்கமும் உரிமையும் விளங்கவில்லை!!
சிறுவயதிலிருந்து இவனுக்கு இம்மாதிரி அத்தை பிள்ளைகளோ அல்லது மாமன் மகள்களோ விளையாண்டு கொண்டது கிடையாது. இருக்கும் சித்தப்பா பிள்ளைகளிடமே நெருங்கி பழகியது கிடையாது. பின் எவ்வாறு ஒன்று விட்ட.. இரண்டு விட்ட சொந்தங்களோடு பழகுவான்?
ஆனால் இவர்களின் இந்த வாழ்க்கை முறை வந்தது முதல் அவ்வளவு பிடித்தது அவனுக்கு. இவர்கள் ஒவ்வொரிடமும் இருக்கும் அன்யோன்யமும்.. நெருக்கமும்.. பாசமும் மற்றவர் மீது கொண்ட அன்பும் நம்பிக்கையும் அப்படி பிடித்தது!! அன்னையிடம் கூறி கூறி சிலாகித்துக் கொண்டிருப்பான் அவ்வப்போது!!
வர்ணா மீது அவன் அண்ணன்கள் காட்டிய பாசத்தை பார்த்தவனுக்கு சற்றே லேசாக பொறாமை தலைதூக்கும். ஆனாலும் அண்ணன்கள் தானே என்று மிக கஷ்டப்பட்டு பொறுத்து போய் விடுவான். ஆனால் இன்று அசிதன் காட்டிய அதீத அன்பும் உரிமையும் அவனுக்கு எரிமலையில் அமர்ந்து இருந்த உணர்வு!!
கூடவே இவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவனை ‘அத்தான்.. அத்தான்’ என்று அழைப்பது. இன்னும் இன்னும் நவ துவாரங்களிலும் புகை வந்து கொண்டிருந்தது விநாயக்கிற்கு.
காலை உணவு முடிந்தவுடன் அனைவரும் இன்று வேலைக்கு போகாமல் வீடு வந்திருக்கும் செல்ல மருமகனின் குசலம் விசாரித்துக் கொண்டிருக்க.. ஒரு வினாடி தன்னோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தான் விநாயக். பின்பு தன் தலையில் தானே குட்டிக்கொண்டவன்..
“டேய்.. அவன் இந்த வீட்டு உறவுக்கார மாப்பிள்ளை டா!! நீ தான் உரிமையான மாப்பிள்ளை!! அவனோடு உன்னையே நீ ஒப்பிட்டு பார்ப்பாயா?” என்று நினைத்தாலும் மனதில் சட்டென்று ஒருவன் எம்பி பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அசிதனை!!
பின் அனைவரிடமும் ஒரு தலையாட்டலோடு வழக்கம்போல கண்ணப்பனை அழைத்துக்கொண்டு இவன் ஊர்சுற்ற புறப்பட்டு விட.. அங்கே அசிதனை தாங்கி தடுக்கிலிட்ட குடும்பம்.. ஒரு வழியாக அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
வழக்கமாக இவன் வந்தால் தங்கும் அறைக்கு சென்ற அசிதன் படுத்து உறங்கிவிட.. ஆனால் கையில் மினி கேமராவோடு அந்த ஊரை பற்றி தெரிந்து கொண்டிருந்தவனின் கவனம் அவ்வப்போது சிதறிக் கொண்டிருந்தது.
இன்றைய தேதிப்படி அருகில் உள்ள வேறு ஒரு ஊருக்கு தான் சென்றிருக்க வேண்டும். அங்கு சென்று வரவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பிடிக்கும். ஆனால் விநாயக் அங்கே வேண்டாம் என்று விட்டான். மிக அருகில் அதுவும் அரை மணி நேரத்துக்கு மேலாகாத ஒரு ஊருக்கு சென்று தான் விவரங்களை சேகரித்தான்.
இடையிடையே வழக்கமாக அவன் கேட்கும் கேள்விகளும் விளக்கங்களும் இன்று மிஸ்ஸிங்!!
மணி பதினொன்றுக்கும் மேல் ஆயிடுச்சு அவ கொண்டுபோய் இவனுக்கும் சூப்பு கொடுத்து இருப்பாளா? இல்லை பார்த்து பார்த்து கவனிப்பாளா?? என்று ஒரே கெஸ்ஸிங்!!
நேரம்தான் விரையம் ஆனதே தவிர விவரமான விவரங்கள் எதையும் இவன் அன்று சேகரிக்கவே இல்லை!!
கண்ணப்பன் இவனை ஒரு மாதிரியாக பார்த்தான்.பின்பு வாய்விட்டு கேட்டும் விட்டான் “ஏனுங்க தம்பி.. எதுவும் மேலுக்கு முடியலைங்களையா? வேனா நாம திரும்ப வீட்டுக்கு போய் விடுவோங்களா?” என்று!!
இத்தனை நாளாய் அவனை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். சுறுசுறுப்போடு வளைய வருபவன், ஆர்வத்தோடு அத்தனை கேள்வி கேட்பவன்.. இன்று அவ்வப்போது ஏதோ யோசனையின் பிடியில் இருப்பதும் பின்பு அவர்கள் சொன்னதுக்கு இவன் கேட்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். எதிரே பார்த்திருந்த கண்ணப்பன் கேட்டே விட.. முதலில் ‘இல்லையில்லை.. நல்லா தான் இருக்கேன்!’ என்று சொல்ல நினைத்தவன், இதை சாக்காக கொண்டே வீட்டிற்கு சென்று விடலாம் என்று எண்ணி “ஆமாம் கொஞ்சம் தலை வலிக்குது வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான்.
“என்னங்க தம்பி.. இதுக்கு போய் என் கிட்ட எல்லாம் அனுமதி கேக்குறீக.. உடம்பு முடியல வீட்டுக்கு வாடான்னு சொன்னா வந்துடப் போறேன்” என்றவன் ஓடி சென்று வண்டியை எடுக்க அதில் அமர்ந்து கொண்டான் விநாயக்.
இவன் வந்து நேரம் சரியாக மதிய உணவு நேரம் பெரும்பாலும் மில்லுக்கு வயலுக்கு சென்றவர்களுக்கு சாப்பாடு அங்கே சென்று விடும்!! சில நேரங்களில் வீட்டுக்கு வருவதும் உண்டு.. இன்று தாய்மாமன்கள் மருமகன் விஜயத்தில் வீட்டிற்கு வந்திருக்க மச்சான்கள் எல்லாம் வேலையில் தான் இருந்தார்கள்.
மதிய உணவு நடந்து கொண்டிருந்தது தடபுடலாக!! ஏற்கனவே இரண்டு முறை தரணியும் துஷ்யந்த்னும் விநாயக்கு அழைத்து மதிய உணவுக்கு அழைத்துவிட்டார்கள். இவன் வந்து கொண்டிருக்கிறேன் என்றதோடு வைத்து விட்டான்.
சொந்தங்கள் அனைவரும் சந்தோசத்தோடு பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்த பார்த்ததும் முதலில் அங்கு செல்ல விருப்பமில்லை. ஆனாலும் வர்ணா அவனை தோரணையாக பார்த்துக் கொண்டே அசிதனுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்க..
“இருடி வரேன்!!” என்றவன் அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டான். அப்போதுதான் அசிதன் விநாயக் பற்றி மாமன்களிடம் விசாரிக்க.. அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை கூற அசிதன் ஆச்சரிய பார்வையோடு “அவ்வளவு பெரிய சேனல் ஓனர்.. மல்டி மில்லினியர்.. இண்டுஸ்றியலிஸ்ட்.. இப்படி ஒரு கிராமத்தில் வந்து ஒரு ஷார்ட் பிலிம்க்காக இருக்கிறது என்னால நம்பவே முடியல??!!” என்றான் வரவழைத்த ஆச்சரிய பாவனையோடு.
அதில் ‘நீ இந்த விஷயத்துக்காக தான் இங்கே வந்தாயா?’ என்று கேள்வியும்.. ‘உன்னை நான் நம்பவில்லை!’ என்று பாவனையும் இருந்ததை கண்டு கொண்டான் விநாயக்!!
“என்னதான் தொழில்.. பணம்.. அந்தஸ்து இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் அவர்களுக்கு என்று ஒரு லட்சியம் இருக்கும்! இருக்கணும்!! அதே மாதிரி தான் இது எனக்கும்!! கூடவே எவ்வளவு நாள்தான் தொழில்.. பணம்னு.. ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சின்ன பிரேக் எடுத்துகிட்ட மாதிரி.. ரிலாக்ஸ் ஆகி மீண்டும் அடுத்த ஓட்டத்தை ஆரவாரத்தோடு ஓடலாம்!!” என்று இலகுவாக கூறி கண்ணடித்தவனை அசிதன் மெச்சுதலாக பார்த்தான்.
“உங்க லட்சியம் என்னவோ?” என்றான் அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டு..
பதிலுக்கு அவனை பார்த்தவன் வர்ணாவை பற்றியிருந்தான் பார்வையால் அல்ல பாதங்களால்!!
ஏற்கனவே தன்னை நோண்டி நோண்டி கேள்வி கேட்கும் அசிதன் முன்னே இலவச படம் காட்டா விருப்பாமல் வர்ணாவை பார்க்கவில்லை என்றாலும், எதிரே அமர்ந்திருந்தவளின் பாதத்தை தன் இரு பாதங்களுக்குள் சிறை பிடித்தான்.
“அதைத்தானே பற்றி இருக்கிறேன்!!” என்றான் இவனும் குறும்போடு!!
“என்னத்த பற்றி இருக்கிறீங்க? ஒன்னும் புரியலையே?” என்று மீண்டும் அதே கேள்வி கேட்க..
“என் லட்சியத்தை தான் பற்றி இருக்கிறேனு சொன்னேன் பாஸ்!!” என்றவன் கட்டை விரல் கொண்டு அவள் பாதங்களில் இப்போது கோலமிட்டு கொண்டிருந்தான்.
அவளுக்கோ அவஸ்தையாக கூச்சமாக இருந்தது. நெளிந்து நெளிந்து அவள் அமர்ந்திருக்க.. அதை பார்த்து மேனகா வந்து ஒரு கொட்டு கொட்டி “இப்படித்தான் சாப்பாட்டை வச்சிகிட்டு இருப்பியா? மத்ததெல்லாம் உள்ள போயிடுச்சு.. இதிலெல்லாம் உள்ள தள்ளு!!” என்று திட்டிவிட்டு சென்றார் தந்தைமார்களின் முறைப்பை கண்டு கொள்ளாமல்..
அப்போது “லெக் பீஸ் செம.. சூப்பர் ஆன்ட்டி” என்று மேனாகாவை பார்த்து கூறி, தன் கையில் இருந்த லெக் பீஸை சுவைத்தவாறு கால் விரல்களால் அவளது தந்த கால்களை வருடிக்கொண்டிருந்தான் விநாயக்.
சாப்பிட முடியாமல் அவஸ்தையோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எழ முயற்சி செய்தாள். இவன் விட்டு விடுவானோ என்ற நம்பிக்கையில் எழுந்து இருக்க முயல.. அப்பொழுதும் இறுக்க பற்றிக்கொண்டு இவன் மற்றவர்களோடு பேசிக்கொண்டே உணவை உண்டு கொண்டிருந்தான்.
வேறுவழியின்றி கொஞ்சம் கொஞ்சமாக இவள் எல்லா உணவையும் சாப்பிட்டு முடித்து எழாமல் அமர்ந்திருக்க.. “வேண்டும்ன்னா கேட்க வேண்டியதுதானே பாப்பா?? ஏய் சுஜி காலியான வைக்க மாட்டியா?? பாப்பா சாப்பிடு.. பாப்பாக்கு வை சுஜி!” என்று ரிஷி கூற..
மீண்டும் அன்னையர்களால்.. தந்தையின் கட்டளைக்கு இணங்க மீண்டும் நிரம்பியது வர்ணாவின் தலைவாழை இலை.. அவளோ ங்ஙேன்று பார்த்திருந்தாள்.
“அட ஆண்டவா!! இப்பதானே ஃபுல்லா சாப்பிட்டேன். இப்போ மறுபடியும் சாப்பிடுன்னா எப்படி சாப்பிட??” என்று நினைத்தவள் தடுக்க தடுக்க “அப்புறம் ஏன் சாப்பிட இடத்தில் உட்கார்ந்து இருக்கே.. எழுந்திருக்க வேண்டியது தானே!!” என்ற கேள்வியோடு மேனகா வர..
‘எழுந்து போக முடியாமத்தேன் என் காலை பிடிச்சு வச்சிருக்கானே’ என்று நொந்து கொண்டவள் அவனிடம் கண்களால் கெஞ்சி விட சொல்ல.. அவனோ கண்டுகொள்ளாது தனது தீண்டலை தொடர, அனைவரும் சாப்பிட்டு இருந்தாலும் இவர்கள் இருவரும் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்குள் அன்னைமார்களும் ஒருவராக அமர்ந்தனர் உணவுக்காக.. ஒரு வழியாக அவன் சாப்பிட்டு முடித்ததும் தான் சிறை செய்திருந்த அவள் பாதங்களை விடுவித்தான்.
‘அப்பாடி.. விட்டான்டா!’ என்ற வர்ணா தன் அறைக்கு ஓடியே விட்டாள். அதன் பின் மாலை வரை அவள் வெளியே வரவே இல்லை.
இவனும் தன் வேலையில் கொஞ்சம் பிஸியாகி விட ஒரு எட்டு மணி போல் விநாயக் கீழே வந்தான். வர்ணா மட்டும் தான் அதி முக்கியமாக ஏதோ ஒரு சேனலை பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் வழக்கம் போல அவளை பார்த்தவண்ணம் எதிரில் அமர.. அதே சமயம் வெளியே சென்றிருந்த அசிதன் வந்தவன், வர்ணா டிவி பார்ப்பதை பார்த்து அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.
“என்ன வண்ணக்கிளி வர்ணா.. என்ன பாக்குற? நீ என்னமோ பெரிய சேனல வொர்க் பண்றனு உன்ன உங்க அய்த்த ஆகா ஓகோனு சொன்னாங்க.. நீ என்னமோ சீரியல் பார்த்துகிட்டு இருக்கே?” என்று நக்கல் அடித்தான்.
“அதையேன் கேட்கிற அத்தான்.. என் சேனல் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு.. எவனோ ஒரு படுபாவி அந்த சேனலை வாங்கி இப்போ ஒண்ணுமே இல்லாம ஆகிட்டான். விளங்காதவன்.. நாசமா போறவன். எனக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்” என்று வாங்கியது விநாயக் தான் என்று தெரியாமலேயே திட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன வண்ணக்கிளி சாபம் எல்லாம் கொடுக்கிற?” என்று அசிதன் விளையாட்டாக கேட்க..
“இதுவரை நான் எங்க அத்தான் சபிச்சேன்? அந்த பொச கெட்ட பயலை திட்டினேன். ஆனா இப்ப கொடுக்க போறேன் பாருங்க அந்த சேனல வாங்குனவனுக்கு.. அவனுக்கு கல்யாணமே ஆக கூடாது.. அப்படியே கல்யாணம் ஆனாலும் ஃபர்ஸ்ட் நைட் நடக்காம குறைஞ்சது ஆறு மாசமாவது கன்னி கழியாமலேயே சுத்தணும்.. அப்படியே பஸ்ட் நைட் நடந்தாலும் முக்கியமான நேரத்தில் கரண்டு போய்டணும்.. ஃபேனும் ஏசியும் இல்லாம புழுங்கி புழுங்கி அவன் சாகணும்.. அப்புறம் எங்கிருந்து நைட் ஆசையெல்லாம் வரும்? வரவே கூடாது அவனுக்கு!! ஏங்கி ஏங்கி வாடட்டும்!!” என்று இவள் சபித்துக் கொண்டிருக்க..
“அடிப்பாவி!! கிராதகி!! ராட்சசி!! உனக்கும் சேர்த்து தாண்டி சாபம் கொடுத்துக்கிற??” என்று வாயில் கையை வைத்து அதிர்ச்சியாக பார்த்திருந்தான் விநாயக்.
அசிதனுக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்த சிரித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் விநாயக்கையும் ஓரப் பார்வையாக பார்த்தவன் இன்னும் வெடித்து சிரித்தான்.
“மச்சக்கன்னி.. அவன்தான்.. சேனல் வாங்குனவன் பெரிய ஆளா இருப்பானே.. அவன் வீட்டில் யுபிஎஸ் ஜென்டரேட்டர் எல்லாம் இருக்காதா? என்று அசிதன் சந்தேகம் கேட்க..
“ஆமாம் இல்ல அத்தான்.. ஆனா பாருங்க.. என்னோட சாபம் பலிக்க அன்னைக்கு அது எல்லாமே ரிப்பேரா போயிடணும்!!” என்று மீண்டும் அவள் சபித்துக் கொள்ள..
இன்னும் சிரிப்பு பீறிட்டது அசிதனுக்கு. “நீ ஒரு யூனிட் பீஸ்!! உன் சாபம் எல்லாம் வேற லெவல்ல இருக்கு மச்சக்கன்னி.. பாரு வந்த கெஸ்ட் நீ கொடுத்த சாபத்தை பார்த்து பயந்து போய்ட்டார்” என்று கூற.. திரும்பி இவள் விநாயக்கை பார்க்க அவனும் அவளைத்தான் ஒரு மார்க்கமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
‘ஐயையோ டிவி பாக்குற மும்மரத்துல இவன் இருக்கறதை பாக்கவே இல்லையே.. அவனுக்கு நேரா என்னென்ன பேசி வைச்சி இருக்கோம்’ என்று தானாக ஒரு வெட்கம் முகிழ.. அசிதனுக்குப் பின்னால் அவள் முகத்தை மறைத்துக் கொள்ள..
“அய்யோ அத்தான்.. போச்சு போச்சு நீ சொல்லக் கூடாதா அவரு இருக்காருன்னு?” என்று அவள் சிணுங்க..
“ஏண்டி என் பின்னால மறையுற?” என்று அவன் தள்ள முயல.. மீண்டும் மீண்டும் அவள் மறைய முற்பட “அத்தான்.. அத்தான்” என்று அத்தனை அத்தான் போட்டாள் இவள்..
“ஏன் வண்ணக்கிளி.. அத்தான் தவிர வேற சொல்லி கூப்பிட மாட்டியா நீ? எங்க அம்மா தான் எப்ப பாத்தாலும் மாமா மாமானு எங்க அப்பாவ கூப்பிடுறாங்க.. நீயும் அதையே சொல்றியே? அழகா பாவானு கூப்பிடு டி!!” என்று தெலுங்குக்காரன் குறைபட..
“போ.. போ.. அதெல்லாம் முடியாது! உங்க ஊர்ல தான் உனக்கு நிறைய பொண்ணுங்க பாவா பாவானு சுத்திவராளுங்க தானே.. நானும் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. நீங்க ஸ்பெஷல் இல்லையா? அதனால் அத்தானு தான் கூப்பிடுவேன். அத்தைமகன் அத்தான்தானே?” என்று அழுத்தமாகக் கூறியவள் விநாயக்கை கவனிக்கத் தவறவில்லை.
அவன் முகம் கொள்ளா கடுப்போடு அவர்கள் இருவரின் உரிமையையும் அந்யோனியத்தையும் கண்டு அமர்ந்திருந்தான் அனலாக!!
அதன்பின் ஆண்கள் ஒவ்வொருவராக அன்று சீக்கிரம் வந்துவிட.. இன்னும் ஆட்டம் பாட்டம் பேச்சு என்று களை கட்டியது. கூடவே விநாயக்கையும் அவ்வபோது இழுத்து கொண்டார்கள் பாண்டி பிரதர்ஸ்.
வெளியில் சிரித்த முகமாக இருந்தாலும் உள்ளுக்குள் வர்ணாவின் அத்தானில் அவன் கொதித்துக் கொண்டு தான் இருந்தான். அன்று இரவு முழுக்க அவனுக்கு தூக்கமே இல்லை.
“எப்படி? எப்படி அவள் அவனை அத்தான் என்கலாம்? ஸ்பெஷலாமா அவன்? அப்போ நான்?? என் முன்னே எப்படி சொல்லலாம்? அது எப்படி சொல்லலாம்?” என்று மீண்டும் மீண்டும் அந்த மேஜையை தட்டி தட்டி ஒரு வழியாக்கிருந்தான் அதனை!!
காலையிலேயே அசிதனோடு அவர்கள் குல தெய்வம் அய்யனார் கோயிலுக்கு செல்ல என்று இவள் புறப்பட வீட்டை இரண்டு படுத்திக் கொண்டிருந்தாள்.
அழகு கொஞ்ச அசத்தல் புயலாக அங்குமிங்கும் வளைய வந்தவளைத் தான் பார்வையால் மேய்ந்தான் விநாயக்.
அசிதன் முதலில் சென்று வண்டி எடுக்க.. பின்னே தழைய தழைய புடவை கட்டிக் கொண்டு.. இரு பக்கமும் மல்லி சரம் தவழ.. அஞ்சனமிட்ட கண்களோடு.. அப்சரஸாய் வந்த அணங்கிவளை மெய் மறந்து சுற்றம் மறந்து பார்த்திருந்தான்.
இவள் “போனை மறந்துட்டேன் அத்தான்.. அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்க எடுத்துட்டு வரேன்..” என்று தனது அறைக்கு உள்ளே ஓடினாள்.
அவளை உள்ளே போக விட்டு.. சில நொடிகள் கழித்து விநாயக்கும் அவள் பின்னால் போனான். உள்ளே போனவள் தனது போன் எங்கே என்று இங்கும் அங்கும் தேடினாள். ஏற்கனவே ரூம் அவள் கழட்டி போட்ட ஆடைகள்.. கலைத்து போட்ட சாமான்கள் என அலங்கோலமாக இருக்க.. அதில் எங்கே என்று போனை தேடுவாள்.
அவள் பின்னால் போன விநாயக் வெகு இயல்பாக அவளைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்தான். அவள் அதிர்ந்து திமிறி விலக..
“விடுங்க.. ஏற்கனவே சொல்லி இருக்கேன் என்னை தொடாதீங்க என்று” என்று அவள் கோபமாய்..
”என்ன பண்றாங்க உன்னை இப்போ?” என்று அவன் தாபமாய்..
“விட போறிங்களா.. இல்லை சத்தம் போட்டு எல்லோரையும் அழைக்கவா?”
”கூப்பிடேன்???” அவளை இறுக்காமல் அணைத்தான். அவளின் பிடறியில் மூக்கை உரசி.. மென்மையாக முத்தம் கொடுத்தான்.
”விடுங்க விநாயக்” லேசாக நகர்ந்து நெளிந்தாள்.
”விடுறேன்.. பட் எனக்காக நீ ஒன்னு செய்யணும்? டீலா?” என்றான்.
“முடியாது.. என்ன பண்ணுவீங்க?” வீம்பாய் இவள்!!
அவன் கைகள் மெல்ல அவளை இறுக்கின. அவள் நெளிந்து திமிறி விடுபட முனைய. அவளை பின்னாலிருந்து அணைத்தவன், அவள் கையில் மூடியிருந்த மல்லிகையை வாசம் பிடித்தான்.
அவளது கூந்தல் வாசத்தை ஆழமாக முகர்ந்தவாறு.. அவளது பிடறியில் அவன் உதடுகளைப் பதித்து மீசையால் உரசினான்.
அத்தனை அவளை திருப்பி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “என்னை மசினானு கூப்பிட வேணும்?” என்றான்.
அவனது உஷ்ண மூச்சுக் காற்று அவளது தொண்டையை வருடியது. அவள் மூக்கால் மூச்சுவிடச் சிரமப்பட்டு.. வாய் வழியாக சுவாசத்தை வெளியேற்றினாள்.
“என்னது மசக்கையா?” என்று அவள் அதிர்ந்து கேட்க..
“நீ இவ்வளவு ஆசையா கேட்கும்போது அதை கொடுக்க எனக்கும் ஆவலாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்ய? இப்போது முடியாதே!!” என்று போலியாக வருத்தப்பட்டவன் “நீ முதல்ல மசினானு கூப்பிடு டி.. அடுத்தது மசக்கை ஆகலாம்” என்று உதடு மடித்து நின்றவன் தோள்கள் சிரிப்பில் குலுங்கியது.
அவள் வாயை பிளந்து பார்க்க “இப்படிப் பார்க்கும்போது இன்னும் என்னென்னமோ செய்ய தோணுது” என்று அவள் லிப் கிளாஸில் மின்னிய உதடுகளை இரு விரல்களால் பிடித்து மெலிதாக தன் உதட்டில் ஒற்றி எடுத்தவன்..
“மசினானா.. மச்சானு அர்த்தம்!!” என்றான் உரிமையோடு.
அதே நேரம் சென்றவள் இன்னும் காணவில்லையே என்று வேகமாக வர்ணாவின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான் அசிதன்.
“வர்ரே வா.. மச்சானா? நீ நடத்து டா.. நடத்து டா விநாயக். ஆனா அவளை தேடி அசிதன் ஆன் தி வே.. முடிஞ்சா தப்பிச்சிக்கோ மாப்பி!!” என்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டது கியூபிட்!!
வானவில் வளரும்..
Very nice epi sis
LnpaQHFMOWNoU
👌👌👌👌👌👌👌👌👌